கொட்டேஜ் சென்று வந்த பின், சிலநாட்களில் புறப்படும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது, அந்த ‘சாலைப்பயணம்’. ஒரே வரியில் சொல்வதென்றால் ‘ட்ரொண்டோ டு சான்ஸ்பிரான்ஸிஸ்கோ’, இரு கிழமைகளில்.
தொலைக்காட்சித்தொடர்கள், யூ டூயுப் வீடியோஸ், அது போதாதென்று இலக்கியாவின் நெருங்கிய பள்ளித்தோழியின் பயண அனுபவங்கள் என ஒவ்வொன்றும், இவர்களுள்ளும் மிகையான ‘சாலைப் பயணம்’ பற்றிய தாகத்தை, அது பற்றிய ஆழமான கற்பனையை உருவாக்கியிருந்தது.
'கவின் சின்னப்பிள்ள, சமாளிக்கிறது எப்பிடி?' என்றதெல்லாம் ஒன்றுமேயில்லை என்றார்கள் இளையவர்கள், 'அவன நாங்களே பார்த்துக்கொள்ளுவம் கவலைப்பட வேணாம்!' என்ற உறுதியோடு.
முதலில், அவரவர் அவரவர் கார்களில் செல்வதாகத்தான் திட்டமிட்டார்கள். சுதர்சன் மற்றும் அவர் ரெண்டாவது தம்பி சிவா, அவர் மனைவி ராஜி என, வேலையில் விடுமுறை எடுப்பதில் இழுபறி வரவே, "எதுக்கும் எல்லாரும் ஒண்டா காரோ வானோ பிடிச்சே போயிருவம்." என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள்.
சான்ஸ்பிரான்சிஸ்கோவில், எல்லாருமே கலந்துகொள்ளவேண்டிய நெருங்கிய உறவொன்றில் திருமணமும் இருப்பது கூடுதல் நன்மையளித்தது.
"ரெண்டு கிழமைகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஹோட்டலில் தங்கிக்கொண்டு வாகனத்தில இருந்து பயணம் செய்ய என்னால ஏலாது பிள்ளைகள். நீங்க எண்டா காடு மலை பாராம நடந்து திரிய ஓட எண்டு இருக்கலாம். நான் வந்தா எல்லாத்துக்கும் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்க வேணும். அதெல்லாம் சரிவராது குஞ்சுகள். கலியாணத்துக்கு முதல் ஃபிளைட்டில வாறனே. நீங்க சந்தோசமாகப் போயிட்டு வாங்கோ! திரும்பி வரேக்க எல்லாரும் ஒண்டா ஃபிளைட்ல வருவம்." என்றிருந்தார், மலர்.
சிறியவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், மூட்டு நோ, முதுகு நோவென்று சொல்பவரை வற்புறுத்தவும் இயலவில்லை.
சுதர்சன், சிவா மற்றும் ராஜியும் மலரோடு கல்யாணத்துக்கு வருவதாகக் கூறிவிட்டார்கள். மிகுதி ஐந்து பெரியவர்களும் ஆறு இளையவர்களுமாக வலு ஆரவாரத்தோடு பயண ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
அன்று காலையில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரத்திற்குப் புறப்படுவதாக முடிவு செய்திருந்தார்கள். முதல் நாளிரவு தங்குவது நயாகராவில், அமெரிக்கா பக்கத்தில்.
"அம்மா அங்க வாகனம் வந்திட்டாம்; இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள்ள இங்க வருவீனமாம்." தொலைபேசியில் வந்த செய்தியைச் சொல்லிவிட்டுத் தன்னறைக்குள் புகுந்து கொண்டாள், கவி.
"இண்டைக்கு எல்லாம் சமைச்சி இருக்கு மாமி. நாளையில இருந்து உங்களுக்கு ஏலுமானதச்(இயன்றதைச்) செய்து கொள்ளுங்கோ!" என்றபடி வந்தார், இலக்கியாவின் அன்னை.
"நீங்க அதப் பற்றியெல்லாம் யோசியாமல் உங்கட பயண அலுவலப் பாருங்கவன். நீ போய் வெளிக்கிடன், அங்க கார் வந்திட்டாம்."
"இந்தா பத்து நிமிசத்தில வெளிக்கிட்டிருவன் மாமி." அவர் உள்ளே செல்கையில், தன் பயணப்பெட்டியைக் கொண்டு வந்து வைத்துவிட்டு, "நான் ரெடி அம்மா. உங்களுக்கு ஏதாவது உதவி செய்யோணுமா?" என்றபடி வந்தாள் இலக்கியா.
"கொண்டு போற பாக்ஸ் எல்லாம் முன்னுக்கு ஒரே இடத்தில எடுத்து வச்சு விடம்மா! பிறகு அதை மறந்திட்டம் இதை மறந்திட்டம் எண்டு நிக்காமல்." என்றபடி சென்றவர், "பார் மறந்திட்டன், பேஸ்மெண்ட்டுக்க மரபெட்டிக்க பேப்பர் கப்ஸ், பிளேட்ஸ் எல்லாம் இருக்கு... பார்த்து எடுத்து வையன் தேவைப்படும் தானே?" என்றபடி செல்ல, ஓடிப் போய் எடுத்து வந்தவள், எல்லாம் சரியாகவுள்ளதா என்று பார்த்துப் பார்த்து முன் வராண்டாவில் கொண்டு போய் வைத்தாள்.
எப்படியென்றாலும் கடைகளில் தான் சாப்பாடு. என்றாலுமே கேக் வகைகள், முறுக்கு, பருத்தித்துறை வடை, பக்கோடா இப்படி நொறுக்குத் தீனிகள் தயாரித்தெடுத்திருந்தார்கள்.
"ஏன் பிள்ள, சின்ன ஸ்டவ், கொஞ்சப் பாத்திரங்கள், சாமான்கள் எண்டு கொண்டு போகலாமே! பன்னிரண்டு சீட் உள்ள வாகனமாமே! இடவசதி இருக்கு எண்டான் சுதர்சன்! ரெண்டு கிழமைகளுக்கும் கடைச் சாப்பாடு சாப்பிட்டா நாக்குச் செத்திராதா?" மலரின் ஒரே கவலை இதுதான்.
"அப்பம்மா! எப்பவும் வீட்டல நம்மட சாப்பாடுகளச் செய்து சாப்பிடுறம் தானே? ஒரு ரெண்டு கிழமைகளுக்குச் சரி வித்தியாசம் வித்தியாசமா போற போற இடங்களில என்னென்ன கிடைக்குதோ அதையெல்லாம் ருசி பார்க்க வேண்டியதுதான். அதை விட்டுட்டு, சட்டி பானை எல்லாம் தூக்கிக்கொண்டு போய் சமைச்சுக் கொண்டிருங்களன்...வேற வேலை இல்லையோ! நல்ல காலம் உங்கள இங்க கழட்டிவிட்டது." என்றபடி வந்து பெரியவரின் கன்னத்தை நிமிண்டினாள், கவி.
"ஆரடி ஆரக் கழட்டி விட்டது? இப்பவும் நான் வெளிக்கிட்டு வருவன்; சும்மா இல்ல குக்கர் சாமான்கள் எல்லாம் தூக்கிக்கொண்டு!" பொய்க்கோபம் காட்டி மிரட்டினார், மலர்.
"அய்யோ ஆர் வேணாம் எண்டது? கெதியா எழும்பிப் போய் வெளிக்கிடுங்கோ யங் லேடி!" ஊக்கினாள் இலக்கியா. அவளின் பார்வை மட்டும் கைபேசியில்.
சில நாட்களாக, அதுவும் கொட்டேஜ் போனதிலிருந்து ஆரம்பித்த புதுப் பழக்கமிது! வீடியோ கிளிப் பார்ப்பதுபோல அந்தக் குறிப்பிட்ட வாட்சப்பை ஓபன் பண்ணி வச்சுக்கொண்டு பார்த்திருப்பது. அதுவும் அந்தப் புகைப்படத்தில் இமைத்தட்ட முடியாது அவள் பார்வை ஒட்டிக் கிடக்கும்.
'நான் ஏன் இப்படியானேன்?' என்ற கேள்வி அலைக்கழிந்து திரியாதுமில்லை. இருந்தாலும் அவளால் விடை கண்டும் பிடிக்கவியலவில்லை. அது ஏதோ ஒரு சலனம், ஈர்ப்பு என்றெலாம் ஒதுக்கிவிடவும் முடியவில்லை. கூடாதென்று எண்ணினாலும் வேண்டாமென்று முடிவே எடுத்தாலும் அவன் இலக்கத்தை அப்படியே டெலிட் செய்துவிட கைவிரல் முயன்றாலும் முடியவில்லையே! மீண்டும் மீண்டும் அதைப் பார்ப்பதில் என்ன கண்டாளோ, அவளுக்கு அக்கணங்கள் மிகவுமே பிடித்திருந்தன.
"நீ என்னடி செய்யிற? உத்து உத்து அப்பிடி என்னத்தப் பாத்துச் சிரிக்கிற? எனக்கும் காட்டு!" தங்கையருகில் இடித்துக்கொண்டமர்ந்தாள் கவி.
சட்டென்று கைபேசியை அப்பால் விலக்கி, தமக்கை இனம் கண்டுகொள்ளாமல் மெல்லத் தட்டிவிட்டுவிட்டாள், இலக்கியா.
"அப்பிடி...அதெல்லாம்...ஒண்ணும் இல்ல..." தடுமாறிப்போன தங்கையை வித்தியாசமாகப் பார்த்தாள், தமக்கை.
"இல்ல தங்கா! ஏதோ சரியில்ல. நீ கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருக்கிற - என்ன விசயம்? அக்காட்டச் சரி சொல்லீரு சொல்லிட்டன்!" மிரட்டல் போலிருந்தாலும் அங்கே நட்பு கோலோச்சி நின்றது.
"உண்மையாவே ஒண்டும் இல்ல - பிரெண்ட்ஸ் பிறந்தநாள் பார்ட்டி வீடியோ போட்டிருந்தவையல், அதப் பாத்துக்கொண்டிருந்தனான். வேணுமெண்டா இந்தாப் பாருங்க." தோழிகளின் வாட்சப் குறுப்பிலிருந்த வீடியோவை காட்ட,
"பிள்ள அந்த கொட்டேஜில வள்ளத்தில போய்ப் பயந்திட்டாள். அதில இருந்து ராசாத்திட முகமே மாறிட்டு! என்ர குஞ்சு... இப்பப் போற இடம், அறியாத தெரியாத இடம் கவனமா இருக்க வேணும் சரியோ? சின்னாக்கள பாக்க வேண்டிய நீங்களே லூசுக் கூத்து ஆடுறேல்ல! அது ஒண்டுதான் எனக்குப் பயம்." பேத்தியின் கன்னம் வருடியபடி சொன்னார், மலர்.
மேலும் வாசிக்க....
8(2)

Last edited: