VIN - 3
ஷோபனாவையும் உள்ளடக்கியதாக, புலனத்தில் புதிய குழுவொன்றை உருவாக்கியிருந்தனர் அவளின் பள்ளித்தோழிகள். குழுவிற்கு ‘Jonathan's Wedding’ என்பதாக பெயரிட்டிருந்தார்கள்.
ஜோ திருமணம் செய்யப்போகும் பெண்ணின் பெயர் மோனிஷா. இருவரும் ஒரே யுனி. படிக்கும் போதே முதலில் காதலை சொல்லிவிட்டவளுக்கு கடந்தவருடம்தான் ஓகே சொல்லி இருந்தானாம். கல்யாணம் முடிந்து அடுத்தநாளே மலேசியாவுக்கு ஃப்ளைட்டாம். அங்கே தான் இனி வசிப்பிடமாம்.அவளின் வேலையென்ன, அவனுக்கு என்ன சம்பளம்...
இப்படியாக, தமக்கு தெரிந்தவற்றை மெசேஜ்களில் கொட்டிக் கொண்டிருந்தார்கள் தோழிகள்.
சரியாகத் தெரியாதவற்றையும் தான்...
இதுதவிர, எத்தனை மணிக்கு போவது, யார் யார் என்ன அன்பளிப்பு கொடுப்பது, ஜோடியாக வருவதா அல்லது தனியாக வருவதா, தூரவிருந்து வருபவர்கள் எங்கே/ யார்வீட்டில் தங்குவது..
போன்ற பல சந்தேகங்கள் கேட்கப்பட்டவாறும், தீர்க்கப்பட்டவாறும் இருந்தன.
க்ரூப்பில் வந்துவிழுந்த மெசேஜ்களை சிரத்தையின்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷோபனா. கண்ணீர்வடிப்பதை எப்போதோ நிறுத்தியிருந்தன விழிகள். கண்ணீர்த் துளிகளின் ஈரம் காய்ந்துபோயிருந்த கன்னத்தில், தலைமுடியின் ஓரிரண்டு இழைகள் ஒட்டியிருந்தன.
நீண்ட நேரம் அழுதிருந்த காரணத்தால் தலை வலிக்கத் தொடங்கியது பெண்ணுக்கு. போனைத் தூக்கிப்போட்டுவிட்டு கைகளால் தலையைத் தாங்கிக் கொண்டாள். மேல்நெற்றியில் IODEX தேய்த்துவிட்டால், மட்டுமே சற்று மட்டுப்படும். அதை எடுப்பதற்காய் ஹேண்ட்பேக்கினுள் கையைவிட்டுத் தேடியவளுக்கு தட்டுப்பட்டது, அந்த சோக்லேட்.
அது இன்று 'ஜோ'வுக்கு கொடுப்பதற்காக வாங்கியது.
‘ ஜோ வரவில்லை என்றாலென்ன. இன்று கஃபே வந்திருந்தானே, ஏதோ... அருணோ..? வருணோ..?
நண்பன் மீதான அளப்பரிய அன்பிற்கு சன்மானமாக, அவனுக்கு கொடுத்திருக்க வேண்டும். அதனுடன் சேர்த்து, அவன் கருத்தூசிகளின் முடிவிலே சத்தமாய் ஒரு விசிலும் அடித்திருக்க வேண்டும். அவனும் என்னதான் செய்வான். நண்பனுக்காக பேசியிருந்தான். ’
என நினைத்தவள் விரக்தியாக சிரித்துக் கொண்டாள்.
அவள் வாழ்வில் 'ஜோ' பற்றிய எண்ணங்களின்றி கடந்த நாட்களும் உண்டு. சில பொழுதுகளில் அவனை முழுதாய் மறந்துவிட்டதாக கூட நம்பியிருக்கிறாள்.
எப்போதாவது எதிர்கொள்ள நேரிடும் ஒரு சாதாரண புன்னகை, யாரோ பேசும் ஓர் வார்த்தை, எங்கோ கேட்கும் ஒரு பாடல் - அதுவே போதும் - அவன் குரல், அவன் முகம், அவன் புன்னகை, அவன் மௌனம்... எல்லாம் ஒரே நொடியில் உருப்பெற்று, உயிர்பெற்று அவள் முன்னால், அவனை நிறுத்திவிடும். அந்த நொடிகளில் என்னதடுத்தும் தன்னைமீறி, மனம் அவனைத்தான் நாடும்.
அவனுக்கு அழைத்துப் பேசுவது - பிழையெனத் தெரிந்து உள்ளுக்குள்ளே உச்சுக்கொட்டிக் கொண்டாலும், அந்த ஒருசில நிமிடங்கள், (காதல்)நீர் வற்றிப்போன பாலையிலே மழையெனப் பெய்யும். அவளது முன்னொரு நாளின் முடிவுகளை மறந்திட செய்யும்.
தவறுக்கும், மறதிக்கும் இடையில் அவள் தடுமாறித் தவித்த, கணங்களின் கனங்களை அவளையன்றி யாரறிவர்?
'ஜோ அவளிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்..' என அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. நாளை மறுநாள் திருமணம். இன்னும் கூட எதுவுமே.. சொல்லவில்லை.
அவன் ஏதாவது சொல்லியிருக்க, அவள் இன்று சென்றிருக்கப் போவதில்லையே.. யாரோ மூன்றாமவனின் முன்னிலையில் கண்ணீர் வடித்திருக்கவும் மாட்டாள். முட்டாளைப் பார்ப்பதைப் போல், அவளைப் பார்த்தானே ஓர் பார்வை... அதை, அவளால் என்றேனும் மறக்கமுடியுமா..?
''தட்... தட்...''
திடீரென அறைக்கதவு தட்டப்படும் ஓசையில், நினைவுகள் கலைந்து நிகழ்கணத்திற்கு வந்திருந்தாள் ஷோபனா.
அமுதா தான். அம்மம்மாவின் வீடு செல்வதற்கு தயாராகுமாறு சொல்லி சென்றார்.
சட்டென்று எழுந்து ஓடிச்சென்று முகம் கழுவி வந்தவள், கண்ணாடி பார்க்கவும் அழுத தடம் இன்னும் தெரியவே செய்தது. 'யாரும் கேட்டா தலையிடி என்டு சொல்லி சமாளிப்பம்' என்று எண்ணியவள், பவுடரை அள்ளிப் பூசிக்கொண்டாள்.
நீண்ட நேர அழுகையாலும், சிந்தனையாலும் உள்ளம் சற்றுத் தேறியிருக்க, பசி என்றது - காலையிலிருந்து பட்டினிகிடக்கும் வயிறு. ஆறுதலாய் அமர்ந்து சாப்பிடும் மனநிலையெல்லாம் இப்போதைக்கு இல்லை. அந்த சோக்லேட்டைப் பிரித்து சிறுதுண்டை வாயிலிட்டவள், தண்ணீரும் அருந்திக்கொண்டாள்.
தம்பிமாரை நினைத்தவுடனேயே கலங்கியிருந்தவளின் உள்ளே சின்னதாய் உற்சாகம். சித்தி வீட்டில் தான் அம்மம்மா இருக்கிறார். அங்கே போனால், மனநிலை முற்றாக மாறிவிடும்.
மீண்டும் கண்ணாடி முன்னே வந்து நின்று, கன்னங்களை அப்படியும் இப்படியுமாக அசைத்து புன்னகைத்துப் பார்த்தாள். 'இனி அழுறேல்ல...' என மனதில் முடிவெடுத்தவள், ஆழமூச்செடுத்து வெளி விட்டுக்கொண்டாள்.
பின்னர் தனக்குத்தானே சத்தமாக, ''கல்யாணம் தானே... தாராளமா கட்டுங்க ஜோ...'' என்றவள் நிறுத்தி,
சுருதி குறைந்த குரலில்,
''இனியும் என்னடி உனக்கு புதுனமா 'ஜோ' வேண்டிக்கிடக்கு...'' என தலையில் மெல்ல வலிக்கும்படியே தட்டிக் கொண்டவள்,
''தாராளமா கட்டுங்க திருவாளர் ஜோனத்தன் அவர்களே... உங்களையே நினச்சு நினச்சு இங்க யாரும், உருகி போகவோ.. அழுது கரையவோ..போறல்ல''
தன்மானம் சற்று அடிவாங்கிய வருத்தத்தில் தன்னுள்ளே, தாறுமாறாய் உறுதிகள் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள் ஷோபனா .
*****
அமுதாவுக்கு, ஒரு தங்கை மட்டுமே. 'வசந்தா ' என்று பெயர். இப்போது வசந்தாவுடன் தான் அம்மா, தயாளதேவி இருக்கிறார். அவர்களது தந்தை மறைந்து மூன்றாண்டுகள் ஆகின்றன. அமுதா கொழும்பு செல்லும் வரையில், ரவீந்திரன்-தயாளதேவி தம்பதியினர் அங்கே அவர் வீட்டில் இருந்தனர்.
சித்தி வீட்டினுள் நுழைந்த ஷோபனா, அம்மம்மாவை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள். பேத்தியை உச்சி முகர்ந்து,
''அழுதனியா ஷோபா..?'' ஆராய்ச்சியாக கேட்டவரிடம்,
போகிறபோக்கிலே 'இல்லையில்லை' என்பதாக தலையசைத்துவிட்டு, அறையினுள் சென்று தம்பிமாரைத் தேடியவளுக்குப் பின்னால் வந்து நின்று,
''நானும் இந்த வீட்டதான்டியம்மா இருக்கிறன்..'' என குரல் கொடுத்தார் வசந்தா.
அவரைத் திரும்பிப் பார்த்து,
'' ஓ..இங்க நிக்கிறீங்களா? உங்கள தான் தேடிட்டு இருந்தன்.''
அப்பாவியாய் சொன்னவளின் இடக்கன்னத்தை வலிக்காமல் கிள்ளியவர்,
'' உன்ட தொம்பிமார் மாடி ரூம்ல இருக்கானுகள். போய் கூட்டிட்டு வா. Tea குடிப்பம்.''
அவர் சொல்லி முடிப்பதற்கிடையில் கடகடவென படியேறிவள், இடையில் நின்று திரும்பி,
''சித்தி... மறக்காம எனக்கு ஏலக்கா போடுங்கோ...''
என சத்தமாய் கத்திவிட்டு, மீண்டும் படியேறத் தொடங்கியிருந்தாள்.
வசந்தாவுக்கு இரு மகன்கள். அபித்ரன், கபிஷன். அபித்ரனுக்கு பதினாறு வயது. இளையவனுக்கு பன்னிரண்டு.
தம்பிமாரிடம் அவ்வளவு பிரியம். குழந்தைப் பருவத்தில் இருவரையும் நன்றாக தூக்கி இருக்கிறாள். நன்றாக விழுத்தியும் இருக்கிறாள் தான்.
அவர்களும் சிறுவயதிலிருந்தே அக்காவுடன் ஒட்டு அதிகம். நேற்றே வந்து, ஷோபாவை பார்த்திருந்தனர்.
கைப்பேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர் இருவரும். ஷோபா அறைக்குள் நுழையக் காணவும், சின்னவன் - கபிஷன் உடனே ஓடிவந்து ''ஷோபிக்கா..! '' என அவளின் கையைப் பற்றிக்கொண்டான்.
'' ஷோபி, இரு வாரன். இந்தா.. அஞ்சேஅஞ்சி நிமிஷத்தில முடிஞ்சிரும்...'' போனிலிருந்து கண்களை எடுக்காமலேயே கூறிய அபித்ரனை முறைத்துப் பார்த்தவள்,
உடனே,
''கபிஷ், நீ வா. நாங்க போவம்.'' என்று கோபம் போல் வெளியேற,
போனைத் தூக்கிப் போட்டு விட்டு அவர்கள் பின்னே ஓடோடி வந்தவன், அவளின் மற்றைய கையைப் பிடித்துக்கொண்டு
''சொரி ஷோபி..'' என்க,
எதுவும் பேசாமல் முறைத்தே நின்றாள்.
'' வெறும் கேம் தானே ஷோபிக்கா..! நீ இவ்வளோ முறைக்க வேணாம்...'' என்ற அபித்ரனிடம்,
'' அபி.. நீ போன் பாக்குறதோ, கேம் விளையாடுறதோ ஒரு ப்ரொப்ளமில்ல. உனக்கு முக்கியமான ஆக்கள் வந்து நின்டாலும், உடனே எழும்பிவர ஏலாத அளவுக்கு அதுல புதஞ்சி( புதைந்து) போறதுதான் பிரச்சனையே...''
அபித்ரனோ கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு, உடல்மொழியில் பணிவைக்காட்டி , சற்றுக்குனிந்து,
''சரி டீச்சர்ர்ர்... இனி கபிஷன்மாரி உடனே ஓடி வர ட்ரை பண்றேன்.'' என்க,
''தம்பியர் எனட்ட நல்..லா வாங்கிகட்டப் போறேர்... என்னவோ, இப்ப போன வெச்சிட்டு ஓடி வந்ததால தப்பிட்டாய்.'' என்ற ஷோபாவிடம், சீரியஸான குரலில்,
'' அதுசரி.. இப்ப நீதானே வந்தனி, அப்படியென்டா யாரந்த முக்கியமான VIP...?''
நாடியில் சுட்டுவிரலால் தட்டியவாறு வினவியவன் தோரணையில், கபிஷன் வாய்பொத்தி சிரித்தான்.
ஒரேநேரத்தில் இருவரின் செவிச் சோணைகளையும் பிடித்து முறுக்கிவிட்டு,
'' நண்டு சிண்டு எல்லாம் வாயடிக்கத் தொடங்கி... ஷோபா நெலம ரொம்ப மோசமாகிட்டு.''
என விளையாட்டாய் அலுத்துக் கொண்டவளுடன், ஆளுக்கொரு புறமாய் சேர்ந்து நடந்தனர் அண்ணனும்தம்பியும்.
தேநீர் அருந்திவிட்டு, எல்லோரும் சேர்ந்து சற்று நேரம் அரட்டையடித்தனர். சிறிது நேரத்தில் அவரது கடையிலிருந்து வந்த ஷோபாவின் சித்தப்பா-மதியழகனும் குழுவில் இணைந்து கொண்டார். பின் அமுதாவும் நேசனும் அவர்களது வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
IPL மேட்ச் பார்ப்பதற்காய் தொலைக்காட்சியை இயக்கியவர்களிடம் தயவேகாட்டாது, ரிமோட்டைப் பறித்துக்கொண்டார் தயாளதேவி. வேறுவழியின்றி அம்மம்மாவுடன் சேர்ந்து சீரியல்தான் பார்த்தார்கள்.
பேரப்பிள்ளைகள் மூவருக்கும் இரவுணவை ஊட்டிவிட்டு, அவர் தூங்க சென்றதும், இவர்கள் மெட்ச் பார்க்க தொடங்கினர். மெட்ச் முடிந்தும் பேசிக் கொண்டிருந்தவர்கள், நள்ளிரவைத் தாண்டித்தான் தூங்கவே சென்றார்கள்.