VIN-16
அதிகாலைநேரக் குளிர் அள்ளித்தந்த சோர்வினால், அந்த தனியார் வைத்தியசாலை நுழைவாயிலருகே உட்கார்ந்திருந்த வாட்ச்மேன் அங்கிள், கண்கள் சொருக தூங்கிவழிவதும் ஏதேனும் சத்தம் கேட்டால், மெல்ல விழித்துப் பார்ப்பதுமாக இருக்க, அவசர சிகிச்சைப்பிரிவின் நைட் டியூட்டி தாதியர்கள் முழுவிழிப்புடனேயே பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
எமர்ஜென்சி வார்டிற்கு வெளியே சுவற்றோடு ஒட்டியவாறு போடப்பட்டிருந்த காத்திருப்பு நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த ஒரு சிலரும் தூங்கிப்போயிருக்க ஓரநாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த அமுதாவுக்குத்தான் கண்ணீர் நின்ற பாடில்லை.
நேற்றையதினம் என்றைக்குமே இல்லாது, இரவு தன்னுடன் வந்துறங்குமாறு ஷோபனா கேட்டதும்,
"என்ன இது புதுசா கிடக்கு? பேய்ப்படம் எதுவும் பார்த்து நல்லாப் பயந்துட்டியோ?" என மகளிடம் சிரிப்புடன் வினவினார் அமுதா. அதற்கவளிடம் எந்த எதிர்வினையும் இல்லாமல் போகவே 'சரி' என்று அவளோடே தூங்கியிருந்தார்.
நள்ளிரவு தாண்டிய நேரத்தில் ஏதோ வித்தியாசமான சப்தம் கேட்பது போலிருக்கவும் விழித்துக் கொண்டவர் பார்த்தது, வியர்த்துப் போயிருந்த முகத்துடன், மூச்சுக்குத் தவித்தபடி நெஞ்சுப்பகுதியைப் பிடித்தவாறு வலியில் துடித்துக் கொண்டிருந்த ஷோபாவைத்தான்.
செய்வதறியாது பதறி, ஓடிச்சென்று கணவரை எழுப்பி, ஷோபாவை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்க்கும்வரை அவள் அழுத அழுகையும், பட்ட வேதனையும்... நினைத்துப் பார்த்தவரிடமிருந்து மெல்லிய விசும்பல் ஒன்று வெளிப்பட்டது. சேலைத் தலைப்பால் முகத்தை துடைத்தபடி கணவர் எங்கேயென்று பார்த்தார்.
கசங்கிப் போன சட்டையும், கலங்கிப் போயிருந்த முகமாக, ஓரிடத்தில் இருப்புக் கொள்ளாது, வெறிச்சோடிக்கிடந்த கோரிடாரில் நடைபயின்று கொண்டிருந்தார் நேசன். தன் செல்லமகளின் அழுகுரல் இன்னுமே கேட்பது போலொரு பிரம்மை.'நெஞ்சுக்குள்ள நோவுதப்பா' என்றழுதாளே.. ஹார்ட் அட்டாக்கோ? மூச்சுக்குத் தவித்தாளே... சுவாசம் சம்பந்தமான ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ? இவ்வாறு எண்ணங்களும் அவருடன் சேர்ந்து எங்கெங்கோ பயணித்தன.
வார்ட் கதவைத்திறந்து, டாக்டர் வெளியே வருவது தெரியவும் அவரிடம் விரைந்தனர் நேசனும் அமுதாவும்.
"டொக்டர்???"
"இப்போது ஓகே. கொஞ்சம் காம் ஆயிட்டாங்க உங்க டோட்டர்.."உடைந்த தமிழில் கூறினார் அவர்.
கேட்டதும் இருவர் முகத்திலும் நிம்மதியின் சாயல்.
"ஹார்ட்ல ஏதும்..."நேசன் மெதுவாக தொடங்கவும்,
"No No No... ECG, Blood Pressure எல்லாமே நோர்மல். It's a.. Panic Attack."
"...."
"பயப்பட வேண்டாம். அது ஓவர் ஸ்ட்ரஸ்னால வர்றதுதான்."
"அவவ எப்ப வீட்டுக்கு கூட்டிப் போகலாம் ??" அமுதா கேட்க,
"இப்ப தூங்குறாங்க. ஒரு டூ த்ரீ அவர்ஸ் அப்சர்வேஷன்ல வச்சி பாத்திட்டுத்தான் அனுப்புவம். நீங்க இப்ப போய் பாக்கலாம்" என்றவர் தலையசைப்புடன் சென்றிருந்தார்.
****************
அந்த அறையின் கண்ணாடி ஜன்னல்கள் கனமான திரைச்சீலைகளால் மூடப்பட்டிருந்தன. வெளியே வெளுத்து விடிந்திருப்பது உள்ளே இருந்தவர்களுக்குத் தெரியவாய்ப்பில்லை.
கட்டிலுக்கு அருகிலிருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தான் வருண். பார்வை நேரே எதிர்ச்சுவரில் நிலைகுத்தி நின்றது. கைகளை வயிற்றுக்குக் குறுக்கே கட்டியிருந்தவன், வலது முழங்காலுக்கு சற்றுக்கீழான பகுதியினால், பிளாஸ்டிக் நாற்காலியின்-காலை மெல்லத் தட்டிக்கொண்டிருந்தான்.
சில நிமிடங்களில் அந்தத் தட்டுதல் நின்றதோடு, அவன் பார்வை இப்போது மெத்தையில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தவளிடம் திரும்பியது.
அரைமணி நேரத்திற்கு முன்பே வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்திருந்தான். ஷோபனா அப்போதும் தூக்கத்தில் இருந்ததால் பார்த்துவிட்டு, சிறிது நேரத்திற்கெல்லாம் வைத்தியரை சந்திக்க சென்றிருந்தான்.
அவனை விசாரித்துவிட்டு, "Newly Married???" என்று ஏதோ அதிசயத்தைக் கண்டது போல, கேள்வி கலந்த ஆச்சரியத்தோடு, பார்த்தாரே ஒரு பார்வை...
பெருமூச்சோடு நெற்றிப்பொட்டை அழுத்தி விட்டான் வருண்.
அதுவும் சரிதானே!!
ஷோபனாவின் ஒட்டிப் போயிருந்த கன்னச்சதைகளும், வீங்கியிருந்த கண் இரைப்பைகளும், கண்ணைச் சுற்றியிருந்த கருவளையங்களும் சமீபத்தில் திருமணமான ஓர் பெண்ணின் பூரிப்பைக்காட்டும் அடையாளங்கள் அல்லவே!
"...எதையோ நெனச்சு ரொம்ப குழம்பியிருக்காங்க. அவங்க ஒழுங்கா தூங்கியே எயிட் நயின் டேய்ஸ் இருக்கலாம். Excessive stress triggered her panic..."அவர் சொன்னதும் அதிர்ச்சியில், உடனே எதையும் யோசிக்க முடியவில்லை.
ஆனால் இப்போது, அவளின் அதிகப்படியான மனஉளைச்சல் எதனாலென, ஓரளவு ஊகித்திருந்தவனுக்கு உண்மையில் பெரும் ஏமாற்றமே. அவளிடமிருந்து இதை நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு கோபமாய் வந்தது!!
"ஊஃப்" என்று மூச்சை வெளியிட்டவன், அவளைப் பார்த்தான். பத்து நாட்கள் முன்னே பார்த்தவள் இல்லை. எதற்கோ கடுமையாய் முயன்று, முடிவில் முடியாமல் ஓய்ந்துபோன தோற்றத்திலிருக்கும் வேறொருத்தி.
வீதியில் திடீரென விபத்துக்குள்ளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவனிடம் ஓடிச்சென்று, உதவிக்கரம் நீட்டாமல் 'நீ என்னைக்காச்சும் ட்ராஃபிக் ரூல்ஸ் ஃபாலோ பண்ணிருக்கியா?, யாராச்சும் இவ்வளவு ஸ்பீடா ஓட்டுவானா? இந்த ரோட்ல கொஞ்சம்பாத்துக் கவனமாத்தானே ஓட்டனும்!...' இப்படியாக பாடமெடுப்பதும், குறைப்படுவதும், முறையிடுவதும் தவறல்லவா? மனிதநேயமுள்ளவன், காப்பாற்றக் கைகொடுப்பதல்லவா முதன்மை. அப்படியிருக்க, மனதில் நேயமுள்ளவன்???
'..எல்லாரையும் அப்படிப் பிடிக்கும். ஏன் உங்களையும் தான்..' உள்ளே ஓர் குரல் - அவனுக்குப் பிடித்தமான வார்த்தைகள் காதுக்குள் ஒலிப்பது போலிருக்க, வருண் தலையைப் பலமாய் உலுக்கிக் கொண்டான்.
நாற்காலியை இன்னும் சற்று முன்னே தள்ளிப்போட்டு அமர்ந்தவன், அவள் விரல்களை மென்மையாக பற்றிக்கொண்டான்.
'நாம சந்திச்ச ஒவ்வொரு முறையும் நல்லாத்தானே நடந்தனிங்க...'
இந்த சந்திப்பும், இனியும் நிகழப்போகும் எந்த சந்திப்பும் விதிவிலக்கல்ல என அவளுக்கு உணர்த்தமுயலும் பற்றுதல் அது.
***************************
தாதி ஒருவர் வந்து திரைச்சீலைகளை ஒதுக்கிவிட்டு ஜன்னல்களையும் திறந்துவிட மெல்லிய சாரலும் காலை வெய்யிலின் மஞ்சளும் அறைக்குள் புகுந்து கொண்டதில், ஷோபனாவின் முகத்தில் வெளிச்சம் விழ, முதலில் இமைகளை இறுக்கமூடி துலக்கம் காண்பித்தவள், மெல்ல மெல்ல விழிகளைத் திறந்து கொண்டாள்.
"Hii..!!"
புருவம் உயர்த்தி புன்னகைமுகமாக, மென்குரலில் கணவன் ஹாய் சொன்ன அழகில் சொக்கித்தான் போனாள்.
அவள் நாசியில் கொஞ்சம்கொஞ்சமாக அந்த அறையிலிருந்த மருந்துப்பொருட்களின் வாசனையோடு, தரையை (Mop)மாப்பிடுவதற்காக பயன்படுத்திய தொற்றுநீக்கியின் மணமும் சேரத் துவங்கியதும்தான் அவள் எங்கேயிருக்கிறாள்?, நேற்று என்னவெல்லாம் நிகழ்ந்தது? என ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன.
உடனே, வருணிடம் இருந்து விரல்களைப் பிரித்துக் கொண்டாள்.
அதற்குள் அவள் எழுந்த விடயமறிந்து அமுதாவும் நேசனும் அறைக்குள் வந்திருந்தனர். அதன்பின் சில நிமிடங்களுக்கு அங்கே, மிக ஆரோக்கியமான முக்கோணக்காதல் ஒன்றின் அழகான அன்புப்பரிமாற்றத்தைப் பார்க்கமுடிந்தது.
சிறிது நேரம்கழித்து வைத்தியர் உள்நுழைந்தார். ஷோபனாவுக்கு மீண்டும் சில செக்கப்கள்... எல்லாம் சாதாரணமாக இருப்பதால் வீட்டுக்குக் கூட்டிச் செல்லலாம் என்ற டாக்டர்,
வருணை மாத்திரம் அழைத்து,
"Mr.Varun she's stable now. But, for full recovery, ஒரு சைக்கியாட்ரிஸ்ட்ட, உங்கட வைஃப கட்டாயம் கூட்டிப்போக வேணும்." என்று கூற, சரி என்பதாக தலையசைத்தான்.
"I'll refer you to our consultant here itself. அது ப்ரொசஸ ஈஸியாக்கும்."
"தேங்க் யூ டொக்டர்."
டொக்டர் அறையைவிட்டு வெளியேறி இருந்தார். இவர்களும் செல்வதற்கு ஆயத்தமாயினர்.
அதுவரையிலும் அங்கிருந்த வருணின் கண்களை சந்திக்கவேயில்லை அவள். தமிழ்நேசனும், ஷோபனா அவனைத் தவிர்ப்பதைக் கண்டும்காணாதது போல நின்றிருந்தார்.
எல்லோரும் அறையை விட்டு வெளியேறினர். அமுதா கைத்தாங்கலாக மகளை அழைத்துச்செல்ல, நேசன் அவர்களுடனேயே சேர்ந்து நடந்தார். பின்னே இரண்டடி இடைவெளியில் வருண்.
************************
வீட்டுக்கு வந்ததும் ஷோபனா குளித்து முடித்தபின், அறையில் வைத்து அவளுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தார் அமுதா.
வெளியே தோட்டத்தில், ஃபோனில் சம்பத் சேரிடம் அவசரவிடுமுறை கோரிக்கொண்டு நின்றான் வருண்.
அவன் பேசிமுடிக்கவும், அமுதா வெளியே வரவும் சரியாக இருந்தது.
சும்மா படுத்திருந்த ஷோபனா, அறைக்குள் வருண் நுழையவும், தூங்குவது போல கண்களை மூடிக்கொண்டாள்.
அவளருகில் சென்றமர்ந்தவன்,
"ஷோபா உன்ட தலையில நிக்கிற கரப்பான்பூச்சிய நானே தட்டி விடுறன், அதுவரைக்கும் அசையாத.." என்று சொல்லவும்,
அவள் தடாரென எழுந்தமர்ந்து தலையை இரு கைகளாலும் அவசரமாகத் தடவித்தடவிப் பார்த்தாள்.
கைகளைக் கட்டியபடி வருண் தன்னையே உற்றுப்பார்ப்பது தெரிந்தது; அவனது பொய்யை நம்பி சிக்கிக்கொண்டதும் புரிந்தது.
மெல்ல அவன் முகம் பார்த்தாள்.
இதற்கெனவே காத்திருந்தது போல "ஷோபா..! What i...s eating you? எனட்ட சொல்லக் கூடாதா?" கவலை நிரம்பிய முகத்தோடு வருண் கேட்டதும், அவளின் கண்கள் கலங்கிவிட்டன.
அவன் கையொன்று தன்முகம் நோக்கி உயர்வதைக்கண்டு, சட்டென்று தலையைப் பின்னே இழுத்துக்கொண்டவள்,
"அது, தலையிடி கூடிப்போய் கொஞ்சநாளா இரவில படுக்க ஏலாமப்போ..." அவனின் முறைத்த பார்வையில் இடையில் நிறுத்தியிருந்தாள்.
" இன்னும் எவ்ளோநாள் தனியா கஷ்டப்படப் போறாய்..என்னென்டு சொல்லேன்" கனிவாய்க் கேட்டான்.
"தயவுசெஞ்சி என்னக் கொஞ்சம் படுக்க விடுங்களேன்." என கெஞ்சுவதைப்போல் கேட்டவள், மறுபக்கம் திரும்பிப் படுத்தும் கொண்டாள்.
கண்களை மூடியிருந்தவளுக்கு கதவடைபடும் சப்தம் கேட்டது. வருண் எங்கோ சென்றிருந்தான். அதன்பிறகும் அவள் எங்கே தூங்கினாள்...
*********************
வருண் மீண்டும் அங்கே வரும்போது, பொழுது சாய்ந்திருந்தது. அறைக்குள் நுழைந்து அவன் கதவை சாற்றியதும், கதவு தட்டப்பட்டது. அவன் திறக்க, ஷோபனாவும் யாரெனப் பார்த்து நின்றாள். உள்ளே நுழைந்தது தமிழ்நேசன்.
" வாங்கப்பா.." என ஷோபா அழைக்க,
"இருங்க மாமா" என கதிரையை எடுத்துப் போட்டான் அவன்.
" இல்ல இருக்கட்டும். கல்யாணம்கட்டி ரெண்டு கிழமை தானே ஆகுது? அப்படியென்ன பிள்ள ஸ்ட்ரெஸ் உனக்கு?" அவர் ஷோபனாவிடம் நேரடியாகவே கேட்டதில்
"இல்லப்பா, அது..." தடுமாறினாள் அவள்.
"முதலாவது, நீங்க ஆளுக்காள் கதைக்கிறல்ல போலருக்கே.. தம்பியால ஏதும் பிரச்சனையா ஷோபா? அப்பாட்ட பயப்படாம சொல்லு பிள்ள"
"ஐயோ அப்பா! அதெல்லாம் ஒன்டுமே இல்ல. அப்பிடிப் பிழையா ஏதும் நினைச்சிடாதீங்க. அவர் எவ்வளவு நல்லமென்டு எனக்குத்தான் தெரியும்." சொல்லி முடிக்கையில் அவள் குரல் தழுதழுத்துப் போனது.
அவள் பதிலில், இறுகிப்போன முகத்துடன் நின்றிருந்த வருணிடமும் ஒரு தளர்வு.
"ஓகே ஓகேமா. நீ கொஞ்சம் ரிலாக்ஸாகு.."என்று கட்டிலில் அவளை இருத்தியவர், வருணிடம் வந்தார்.
"நான் இதுவரைக்கும் ஷோபாக்கு ஒரு அடி அடிச்சதில்ல. சத்தம் போட்டு ஏசினாலே அத நினைச்சு நாலு நாளைக்கு அழுற பிள்ள அது. சின்னதா ஏதும் பிழைகள் விட்டா கொஞ்சம் அனுசரிச்சிப் போங்க தம்பி."
அவர் வருத்தம் நிரம்பிய குரலில் கேட்க, சரி என்பதாக தலையசைத்தான் வருண்.
"ஒரு அப்பாவா, நான் இப்படியும் யோசிக்கத்தானே வேணும். தப்பா கதைச்சிருந்தா மன்னிச்சிக்கொள்ளுங்க வருண்."
"இல்ல மாமா. எனக்கு விளங்குது."
"சரி தம்பி. நான் வாறன்" என்று அவர் வெளியேறி இருந்தார்.
அவர் சென்றதும், ஷோபா உடனே அவனருகில் வந்து, "சொரி வருண்" என்க, அவன் அவளைக் கண்டு கொள்ளாமல் தன்பேகைத் திறந்து எதையோ தேடிக்கொண்டு நின்றான்.
"கதைக்க மாட்டீங்களா?"
அவனிடமிருந்து பூச்சிய எதிர்வினையே.
"எந்த தகப்பனா இருந்தாலும், இப்படி கேக்கத்தானே செய்வாங்க..." அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.
"வாவ்! ஷோபனா மேடமுக்கு இதெல்லாம் நல்லாத் தெரியுதே.. உங்கட அப்பா வந்து, எனட்ட என்னவும் கேட்கலாம். இதே.. உங்கள்ட்ட நான் கேட்டா, அது பிழ. நீங்க வாயத்திறக்கவும் மாட்டீங்க. அப்படித்தானே??" அவன் கேட்டதில் உடனே அவளின் முகம் சுருங்கிப்போனது. எதுவும் சொல்லாது கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள்.
நான்கு நிமிடங்கள் கழிந்திருக்கும்.
ஐந்து.
இப்போது ஆறு...
மெல்ல வந்து அவளருகே அமர்ந்து கொண்டவன்,
"சாப்பிட்டியா?" என கேட்க,
"ம்ம்."
"டேப்லெட் போட்டாச்சா?"
"ம்ம்"
"நீங்க சாப்பிட்டீங்களா என்டு கேட்க மாட்டியா?"
வருண் கேட்க, நிமிர்ந்து அவன்முகம் பார்த்தவளின் கண்கள் கலங்கின.
"நான் உங்களுக்குப் பொருத்தமே இல்ல. நீங்களாவது கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் தானே."
"ஏனோ...?"
"நீங்க நல்ல, நேர்மையான ஆள். ஒருவிஷயம் வேணாமென்டா அதவிட்டு முழுசா வெளிவரத் தெரியாத முட்டாள்தான் நான். அதேசமயம் நீங்க என்ன கீழாப்பாத்துட்டீங்க என்டாலும் தாங்கேலாது என்னால." குரல் கமறக்கூறியவள் குனிந்து கொண்டாள்.
"அது, நாம கஃபேல சந்திக்கும்போது நீ யாரோ.. எனக்கு தெரிஞ்சத வச்சு, அப்ப உன்ன ஜட்ஜ் பண்ணிட்டேன். இப்பவும் அப்படியா?"
அவன் கேட்க நிமிர்ந்து பார்த்தவள், அவன் போனில் மெசேஜ் வந்த ஒலி கேட்கவும்,
"ஐயோ! உங்கட வேலையெல்லாம் அரகுறையா விட்டுப்போட்டு ஓடி வந்தனிங்க போல. என்னால உங்களுக்கும் தேவையில்லாத தலைவலி" உள்ளங்கைகளில் தலையைத்தாங்கி, குனிந்து கொண்டவளின் கண்கள் உடைப்பெடுக்கத் தொடங்கின.
"ஹேய்! இது என்ன, நான்தான் வேணுமென்டு என்ன ஆசப்பட்டுக்கட்டின வைஃப்கு என்னவுமென்டா நான் ஓடிவரணும் தானே. எனக்கு என்னவுமென்டா நீயும் ஓடிவரணும். அதவிட்டுட்டு இப்படி அழுது அழுது தனியா கஷ்டப்படக்கூடாது. என்ன என்டாலும்... அது என்னவா இருந்தாலும் எனட்ட ஷேர் பண்ணு ஷோபா. எல்லா பிரச்சனைக்குமே சொல்யூஷன் இருக்குத்தானே."
இல்லை என்பதாக தலையாட்டியவள்,
"ஸ்லீப்பிங் டேப்லெட் இல்லாம ஒரு நிம்மதியான தூக்கம். உங்களோட தூங்கேக்க பழைய விஷயங்கள ஞாபகப்படுத்தி பயமுறுத்தாத மாதிரியான ஒரு கனவு. இது சொல்யூஷனா கிடைக்குமா??"
அவளை ஒரு நொடி அமைதியாகப் பார்த்துவிட்டு" எனக்கு அப்ப ஒரு 14 வயசு இருக்கும். அந்த வருஷ ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் மீட் - மரத்தன்ல கடைசி நான்தான். என்னவிட சின்ன ஆக்களெல்லாம் முன்னுக்கு. ஃபிரண்ட்ஸ் எல்லாரும் நக்கல் பண்ணி சிரிச்சாங்க. நிறைய நாள் அழுதன். அது நடந்து பன்னென்டு , பதிமூன்டு வருஷம் இருக்குமா? இப்பவும் அந்த ரோட்டால போகாம சுத்தித்தான் போவன். பிறகு, A/L எக்ஸாம் டைம்ல, நேரம்போதாம மெத்ஸ் பேப்பர்ல ஒரு பத்துமார்க்ஸ் கேள்விய ஃபுல்லா செய்யவே இல்லை. ஈஸியான கேள்வி. இப்ப நினைச்சாலும் கஷ்டமா இருக்கும். எனக்கும் மரதன் ஓடுறமாதிரியும் எக்ஸாம் எழுதுற மாதிரியும் அடிக்கடி கனவு வந்துட்டேதான் இருக்கும். உனக்கும் அப்படித்தான்.. நீ அந்தடைம்ல ரொம்ப ஹாப்பியா ஃபீல் பண்ணிருப்ப. So, அந்த மெமரீஸ் ஏதோ ஒரு வழியில திரும்ப வர செய்யுது. அவ்ளோ தானே. இதுக்கு ஏன் ஸ்ட்ரெஸ் ஆகனும்? பெனிக் ஆகனும்?"
அவன் இலகுவாய்க் கேட்டதில் லேசாக சிரித்தவள், "கேக்க நல்லாருக்கு வருண். ஆனா, மரத்தன் ஓடுறது.. எக்ஸாம் எழுதுறது.. இதெல்லாம் யாரும் தப்பா நினைக்கப் போறதில்லையே. உங்களுக்கு எந்த விதமான கில்ட் ஃபீலிங்கோ, ஸ்ட்ரெஸ்ஸோ தேவையில்லையே.. "
"உனக்கும் தேவையில்லை என்டுதானே நான் சொல்றேன். எட்டு வருஷம் இல்லையா? கொஞ்சம் கொஞ்சமாத்தான் வெளியில வர முடியும். எனக்குத்தான் எல்லாம் தெரியுமே.. நான் உன்ன தப்பா நினைக்க போறதில்ல ஷோபனா. அத முதல்ல மனசுல பதிய வை. இப்ப சொல்லு, இந்த விஷயத்துல, என்ன விட வேறயார்ட ஒப்பீனியன் வேணும் உனக்கு?" கேட்ட வருணை, வியந்து பார்த்தாள் அவன் மனைவி.
மனதுக்குள், 'இது போதும் எனக்கு
இது போதுமே...' என்று ஒலிக்க ஆரம்பித்த பாடல்,
"நேத்து..." என்று மீண்டும் அவள் ஏதோ ஆரம்பிக்க தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
ஷோபனா சொல்லத் தயங்கவும், "ஹ்ம்ம்.. சொல்லு ஷோபா, நேத்து..??" வருண் ஊக்கினான்.
"நேத்து காலையில... ஃபேஸ்புக் சஜஷன்ல ஜோ..னத்தன்ட ID காட்டிச்சு. எங்க.. என்னமீறி பேசிடுவனோ என்டு நாள்முழுக்க பயமாவும் பதட்டமாவுமே இருந்தது. அதான் அம்மாவ கூப்பிட்டுப் படுத்தனான். அந்த ஸ்ட்ரெஸ்னால தான்..."
அவள் சொல்லியதை கணவனாக ஏற்க முடியவில்லை அவனால். முகத்தில் எதையும் வெளிக்காட்டாதிருக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் வருண். இதற்கு என்ன பதிலளிப்பது என்றும்கூட அவனுக்குத் தெரியவில்லை.
அந்த நேரம் பார்த்து, அவனது கைபேசியில் அழைப்பு வர அவளிடம், "ஒரு நிமிஷம்.." என்றவன், எழுந்துபோய் பேசிவிட்டு வந்தான்.
"ஷோபா, ஹாஸ்பிடல்ல இருந்துதான் கோல். நாளைக்கு சைக்கியாட்ரிஸ்ட்ட போகணும். நானும்தான் வருவேன். சேர்ந்து போவம். சரியா?"
"ஹ்ம்ம். ஓகே" என்று உடனே தலையசைத்தாள்.
"நீ எல்லாம் சொல்லி முடிஞ்சா? இவ்ளோதானா விஷயம். சப்ப மேட்டர் இதெல்லாம். கொஞ்சநாள் போக எல்லாமே சரியாகும். எதப்பத்தியும் யோசிச்சு கவலப்பட வேணாம்." அவளுக்கு சொல்வதைப்போல தனக்கும் சொல்லிக்கொண்டான் வருண்.
அவள் மெலிதாய்ப் புன்னகைத்தாள்.
"இங்கப்பாரன் ஒரால்ட சிரிப்ப..!" அவன் கேலிசெய்ததில் அவளுக்கு வெட்கமாகிப் போனது.
கதவு தட்டப்படும் ஓசை கேட்கவும்,
"உங்கட அம்மாதான் சாப்பாடு கொண்டு வந்திருக்காங்க போல. மூக்காலயும் அழுது வச்சிருக்காய் என... மூஞ்சப் பாக்கேலாம கிடக்கு. ஓடு, ஓடு. போய் முகத்த நல்லாக் கழுவிட்டு வா..."என்று அவளைக் குளியலறைக்கு அனுப்பிவைத்தான்.
அவள் வெளியே வரும்போது மேசையில் இரவுணவு வைக்கப்பட்டிருந்தது.
கணவனுடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு, டேப்லெட்டின் உபயத்தால் நேரத்துக்கே தூங்கிப்போனாள் ஷோபனா.
இது போதும் எனக்கு...
இது போதுமே...
வேறென்ன வேண்டும்..
நீ போதுமே...
இடைநிறுத்திய பாடலொன்று மீண்டும் கனவிலே ஒலிப்பது போலோர் உணர்வுடனான இதமான தூக்கம்.

Last edited:
Author: ஷாரிகா
Article Title: வழியிலே இதயத்தின் நிழலாய் - 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.