VIN-22
இப்போது அடிபட்ட இடத்தில் ஓரளவுக்கு வலி குறைந்திருந்தது.
மெல்ல எழுந்தவன் காலை ஊன்றத் தடுமாறினான். ஷோபனாவின் உதவியோடு நடந்து அறைக்குள் சென்றான்.
குளித்து உடைமாற்றி வந்தவன், கட்டிலில் அமர்ந்திருந்தவளிடம் சென்று "சோ?" என்று புருவம் உயர்த்த,
அவளுமே "சோ...?" என்றாள் தலையாட்டி.
"டைம் ஃபோர் ஸ்டெப் வன், அப்படித்தானே?"
அவளுக்கு உண்மையாகவே ஒன்றும் புரியவில்லை. அவனைக் குழப்பமாக பார்த்தாள்.
"அதுக்குள்ள மறந்தாச்சா?? டேய் பை டேய்.. ஸ்டெப்.." மெல்ல நினைவூட்டினான்.
இப்போது புரிந்தது.
அவள் கன்னக்கதுப்புக்களில் குப்பென்று செம்மை .
உதடுகளில் நெளிந்த குறுஞ்சிரிப்போடு அதை ரசித்திருந்தவன் மெல்ல அவளருகில் வந்தமரவும் உடனே, "உங்களுக்கு தான் கால்ல அடிபட்டு இருக்கே.. நம்ம ஏன் ஸ்டெப் வன்ன நாளைக்குத் தள்ளிப் போடக் கூடாது??" முகத்தில் எதுவும் காட்டாமல் அப்பாவியாய் வினவினாள்.
"அப்ப, அது உனக்கு தெரியாதா ஷோபா?"
"என்னது?!!"
"Don't wait until tomorrow to begin. Start today. Start now. Procrastination delays the process.." படுசீரியசாய் அவன் சொல்லியதில் ஒருநொடி அவனை உற்றுப் பார்த்த ஷோபனா,
பற்கள் நெறிபட கண்களைச் சுருக்கி முறைத்தாள்.
"எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறீங்க?"
"யம்மா தாயே..." என்று இரு கைகளையும் கூப்பியவன், "நா.. எந்த முடிச்சும் போடல. நீ வேணுமென்டா நைட் ஃபுல்லா கதையளக்குற மூட்ல இருக்கலாம். நான் ரொம்ப டயர்டா இருக்கேன். ஆளவிடு. குட் நைட்.." என்றுவிட்டு உடனே எழுந்து கொள்ள, அவன் கையைப் பிடித்து தடுத்தவள், "எனக்கு ஓகே.." என்றாள் மெல்லிய குரலில் முகம் தாழ்த்தி.
வணுக்குக்குத்தான் ஒரு மாதிரியாய் போனது. குறும்பும் கேலியும் கலந்திருந்த முகம் சட்டென மென்மையடைய,
"ஹேய்.!!"
என்று அவளருகே மீண்டும் அமர்ந்தவன், "உனக்கு விருப்பமில்லா..."
"எனக்கு விருப்பம் தான்." ஷோபனாவிடமிருந்து உடன் பதில் வந்தது.
" அதெல்லாம்.. முதல்ல அப்படி .. வேணாம் என்டுதான் சொல்லுவம்..." ஓரக்கண்ணால் அவன் முகம் பார்த்தபடி முணுமுணுத்தாள்.
"ஓஹ்!?"
"ஹ்ம்ம்.." வெட்கம் கலந்த அழகிய ஒப்புதலில் அவளை மெல்ல நெருங்கி கன்னங்களில் உதடுகள் ஒற்றி எடுத்தவனுக்கும் வெட்கமாகிவிட்டது போல. விலகியவன் உடனே எழுந்துநின்று தலையை அழுந்தக் கோதிக்கொண்டு மறுபக்கமாய் வந்து படுத்துக் கொண்டான்.
சில நொடிகள் அமைதியில் கழிந்தன.
"ஷோபா..?"
"ஓம்.."
"தூங்கல்லையா?"
"தூங்கத்தான் போறன்..."என்றுவிட்டு அதுவரை இருந்த தயக்கஉணர்வை உதறியவள், கணவனின் கைவளைவில் இயல்பாய் புகுந்துகொண்டு தோளில் தலைசாய்த்துக் கண்கள் மூடினாள்.
இதை எதிர்பார்க்காதவன், உதடுகளில் அரும்பிய மந்தகாசப் புன்னகையோடு அவள்புறம் சற்றுசரிந்து உச்சியில் இதழ் பதித்து "குட் நைட்" என்றான் மென்மையாக .
கண்களைத் திறவாமல் அவளும் "குட் நைட்.." என்றாள் அதே மந்தகாசப் புன்னகையோடே.
இதம் தொலைத்து அலைந்திருந்த இதயத்திற்கு, சாய்ந்து இளைப்பாற ஒரு நிரந்தரநிழல் கிடைத்த நிம்மதியில், தூக்கம் அவளைத் தேடி தானாகவே வந்தது. அன்றிரவு தூக்க மாத்திரைகளின் தேவைப்பாடு இருக்கவில்லை.
*******************
அடுத்த நாள்.
காலை முதலே சமையலறையில் தடபுடலாக இருந்தது.
பெருந்தன்மையாய் ஒருவர் தானாகவே முன்வந்து உதவியாளர் வேடத்தை ஏற்றுக் கொண்டிருந்ததால், மற்றவர்தான் சமையல் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
காய்கறி நறுக்குவது, தேவையான பொருட்களை எடுத்துக் கொடுப்பது, பயன்படுத்திய பாத்திரங்களை ஒழுங்குபடுத்துவது, இடையிடையே சமைத்துக் கொண்டிருப்பவனுக்கு ஜூஸ் கலந்து நீட்டுவது என்று எடுபிடி உதவியாளர் ஷோபனாவின் வேலைப்பட்டியல் நீண்டுகொண்டே போனது.
மதிய உணவு முடிந்ததும், அந்தச் சின்னச் சின்ன வேலைகள் கொடுத்த களைப்போ, இல்லை கணவனின் கைப்பக்குவத்தில் தயாரான இறால் பிரியாணி கொடுத்த மயக்கமோ தெரியவில்லை...
ஷோபனா கட்டிலில் சாய்ந்த சில நிமிடங்களிலேயே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.
வருணும் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு எழுந்தவன், மாலைத் தேநீருக்குப் பிறகு, கண்டிக்குப் புறப்படத் தயாரானான்.
கிளம்பும் முன்,
"ஸ்டெப் டூ..."
என்று மிக முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டவன்,
அவளது இதழ்களில் மென்மையான ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு,
மனம் நிறைந்த புன்னகையோடு விடைபெற்றிருந்தான்.
*************
"................."
ஷோபனாவை பேசவிட்டு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் டாக்டர் மதிவதனி.
அவ்வப்போது சில குறிப்புகளை எழுதிக்கொண்டவர், இறுதியில் பேனாவை மூடிவைத்து நிமிர்ந்து அவளைப் பார்த்தார்.
"ஓகே...." என்று சிறிது இடைவெளி விட்டவர், புன்னகையுடன் தொடர்ந்தார்.
"முன்ன உங்கட மனசு ஒரு wild monkey மாதிரி இருந்துச்சு."
"டாக்டர்!!" என்று சிரித்தாள் அவள்.
"இல்ல. அதாவது... ஒரு பிரான்ச்லருந்து இன்னொரு பிரான்ச்க்கு டக்டக்கென்டு தாவிட்டே இருக்கும்- அதை சொன்னன். இப்ப... அந்த monkeyக்கு கொஞ்சம் டிசிப்ளின் வந்திருக்கு."
"அப்போ இப்ப monkey இல்லையா?" குறும்பாக கேட்டாள்.
"இப்பவும் தான். ஆனா கொஞ்சம் ட்ரெயினிங் எடுத்த மங்கி."
அவர் சொல்ல இருவரும் சேர்ந்து சிரித்தனர்.
அந்தச் சிரிப்பு அடங்கியதும் மதிவதனியின் குரல் மென்மையானது.
"சீரியஸ்லி... குட் ஜாப் ஷோபனா." என்றார் மனப்பூர்வமாக.
அவள் அமைதியாய் புன்னகைத்தாள்.
இடையே சில கேள்விகளும், சில புன்னகைகளுமாக அவர்களின் உரையாடல் இன்னும் கொஞ்ச நேரம் நீண்டது.
"ஓகே. இன்டைக்கு இவ்வளவுதான். So.. இனி ID சஜஷன் பார்த்து...?" கேட்க வந்ததை முழுதாக முடிக்காமல் ஷோபனாவின் முகத்தை உற்றுநோக்கி கேள்வியாக நிறுத்தினார்.
ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டே
" ID என்ன டாக்டர்... பெரிய ID... ஆளே வந்து நிண்டாலும், அசால்ட்டா கடந்து போவம் நாங்க" என்றாள் ஷோபனா கண்களில் மிதப்புடன்.
"அதுதான் வேணும்." பாராட்டுதலாய் தலையசைத்து விடை கொடுத்தார் .
மனது நிறைந்த ஒரு இலகுவுடன் அறையை விட்டு வெளியேறினாள் ஷோபனா.
வருண் கடைசியாக கண்டிக்குச் சென்று, இரு வாரங்கள் கழித்து மீண்டும் வந்திருந்தான். அவர்கள் பல மாதங்களாக உழைத்துக்கொண்டிருந்த பெரிய மால் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தது. வேலை முடிந்த மறுநாளே ஒரு நாள் விடுப்புக் கேட்டவனுக்கு, அது உடனடியாகக் கிடைத்துவிட்டது.
அதன் பயனாகத்தான் இப்போது, மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த காரின் மீது சாய்ந்து நின்றபடி மனைவிக்காகக் காத்திருந்தான்.
கண்களில் கூலர்ஸ். கைகளை நெஞ்சுக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு நின்றிருந்தவனிடம் வழக்கத்தை விட அதிகமான ஸ்டைல் ஒட்டிக்கிடந்தது.
அவனைக் கண்டமாத்திரத்தில் ஷோபனாவின் நடை தன்னிச்சையாக மெதுவானது.
காணொளி அழைப்பில் தினமும் பார்க்கும் முகம்தான்.
காலையிலும் பார்த்திருந்தாள்.
ஆனால் சில தருணங்களில், சில மனிதர்கள் புதிதாகத் தெரிந்துவிடுகிறார்கள்.
இப்போதும் அப்படித்தான்.
தனக்காகக் காத்திருப்பவனைப் பார்க்கையில், இதயம் நிறைய ஏதோ மென்மையான உணர்வு பரவியது.
வழக்கத்தைவிட இன்னும் வசீகரனாகத் தெரிந்தான் வருண்.
இதழ்களில் பூத்த புன்னகையோடு கணவனை ரகசியமாய் ரசித்தபடியே அன்னநடையிட்டு வந்தாள்.
இருவரும் காரில் ஏறிக்கொண்டனர்.
"யாழி அக்கா வெளிக்கிட்டாச்சாமா?" சீட் பெல்டை மாட்டிக்கொண்டே ஷோபனா கேட்டாள்.
"ஹ்ம்ம்... யாழிய போக சொல்லிட்டேன். நாங்க போய் அபியக்கூட்டிட்டு, அப்டியே கடையில சாப்பாட எடுத்துட்டு போனமென்டா சரி." காரை ரிவர்ஸ் எடுத்தபடியே பதில் சொன்னான்.
சனிக்கிழமை- என்பதால், எல்லோருமாக சேர்ந்து சின்ன பிக்னிக் செல்வதாக திட்டம்.
"எங்க... அபி என்டவர் வரமாட்டன் என்டு புதுனம் பிடிக்கிறேரோ தெரியாது...?" என்றாள் ஷோபனா பெருமூச்சுடன்.
"பாசமலர்கள சேர்த்து வைக்குறத்துக்காகத்தான் இந்த பிக்னிக் பிளானே. அதெல்லாம் நான் கூப்பிட்டா வருவான்." அலட்டலின்றி பதில் அளித்தான் வருண்.
"போய் கூப்பிட்டு பாருங்க. வராட்டி, நான் வாழ்க்கையிலயும் கதைக்க மாட்டேன் என்டு சொல்லுங்க."
"ஷோபனா! என்ன கத இது...?" மென்மையாய் கடிந்தான்.
"பின்ன என்ன வருண்? அபி என்னோட கதச்சே கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கும் மேல ஆகிட்டு. நான் கேட்டாக்கூட ஒழுங்கா பதில் சொல்லுறதில்ல. இதுதான் என்டு எனட்ட சொல்றதுக்கென்ன அவருக்கு?"
என்றாள் ஆற்றாமையாய்.
அவளது குரலில் இருந்த ஆதங்கம் வருணுக்குப் புரிந்தது.
"ஒரு டீச்சரா உனக்குத் தெரியாததா? டீனேஜர்ஸ் என்டா.. கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க. எல்லாம் சொல்லுவான் என்டு எதிர்பாக்கேலாது. நாமளும் பொறுமையா நிதானமாத்தான் விசாரிக்கணும்"
"தோ... வந்துட்டார் கருத்தூசி அடிக்கிறதுக்கு." என்று சலிப்பாய் முணுமுணுத்தவள், சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
அவளது குழந்தைத்தனமான புலம்பலில் வருணின் உதடுகளில் சிரிப்பு அரும்பியது.
அதன் பின் எதுவும் பேசாது காரை செலுத்தினான்.
***********
ஷோபனாவின் சித்திவீட்டுக்கு முன்பாக காரை நிறுத்தினான் வருண்.
ஹோலில் வந்து அமர்ந்து கொண்டவள், வருணை அர்த்தம் பொதிந்த பார்வை பார்க்க எழுந்து அபியின் அறைக்குள் சென்றான்.
சித்தியிடம் விஷயத்தை சொல்லி கபிஷை அழைத்துச் செல்வதாக கூறினாள்.
அதற்குள், சென்று இரு நிமிடங்களிலேயே திரும்பியிருந்தான் வருண்.
"என்ன வரமாட்டாராமா?" அருகில் வந்தமர்ந்தவனிடம் கேட்டவளது குரலில் ஏகத்துக்கும் கடுப்பு.
"அங்கப் பாரு." என்று வருண் கண்களை காட்ட, திரும்பிப் பார்த்தாள்.
ஷோபனா வாங்கிக் கொடுத்திருந்த டார்க் ப்ளூ டி-ஷர்ட்டில் தயாராகி, மாடிப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் அபித்ரன்.
தமக்கையைப் பார்த்து குறும்பாக சிரித்துக் கை காட்டியவனை, கோபம் கொப்பளிக்கும் முகத்துடன் முறைத்து விட்டு,
" எப்டி?? முந்தநாளும் இங்க வந்தனான். என்ட முகத்த நிமிர்ந்து கூட பார்க்கல. இன்டைக்கு இந்த இளி இளிக்கிறானே. போய்...ஒரு டூ மினிட்ஸ்ல வந்துட்டீங்களே. அப்படி என்ன சொன்னீங்க?" வருணிடம் கிசுகிசுப்பாக கேட்டாள்.
" தெரியலையே. நான் போய், விஷயத்தை மட்டும்தான் சொன்னன். உடனே ஓம் என்டுட்டான். இன்டைக்கு பின்னேரம் உன்னப்பாக்க வரத்தான் இருந்தவனாம்." என்றான் வருணும் அதே கிசுகிசுப்போடு.
அபி இறங்கி வந்தவன் ஷோபனாவை இடித்துக்கொண்டு அவளருகே ஒட்டி அமர்ந்தான்.
முறைப்போடு அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "அப்புறம் என்ன அபித்ரன், மலையிறங்கின மாதிரி தெரியுது? உங்கட கேர்ள் ஃபிரண்டோடா Pபெட்ச்-அப் ஆகிட்டீங்க போலயே...?" என்றாள் நக்கலாய்.
அதிர்ச்சி அடைவான் என்று பார்த்தால், சின்னதாய் வாய்விட்டு சிரித்தான் அபி.
"ஓஹ்!! அருள் என்டவர் 'சொல்லாதீங்க அக்கா' என்டு எனட்ட கெஞ்சிப்போட்டு, நான் விசாரிச்சென்டு உனட்ட வந்து சொல்லிட்டேர் என?"
அணிந்திருந்த டி ஷர்ட்டினை இழுத்துக்காட்டி "எங்கட செல்ல அக்கா வாங்கித் தந்தது, எப்டி இருக்கு?" சம்பந்தமில்லாமல் வேறு கேள்வி கேட்டான் அபி.
ஷோபனா கன்னம் சுளித்து, "நல்லாவே இல்ல.." என்க,
அதுவரை அவர்களின் சம்பாஷனையைக் கண்டும் காணாததும் போலிருந்த வருண், அவளது தோளில் சின்ன அடி போட்டுவிட்டு, செல்லமாய் முறைத்தான்.
வசந்தியும் அவர்களது மோதலைப் புரியாமல் பார்த்துவிட்டு, "என்னவோ பிரச்சனை என்டு தெரியும்.. அபிக்கு என்னவாம்டி ஷோபா?" என்று கேட்க,
"அதூ... அமெரிக்கா - ஈரான் பிரச்சினையை விட பெருசு. உங்களுக்கு விளங்காது." என்றாள் ஷோபனா.
அவர் சிரித்தபடி தலையசைத்தார்.
"சரி, சரி டைமில்ல." என்று எழுந்த வருண்,
" இரண்டு பேரும் கெதிய சமாதானமாகுங்க. அக்காக்கு கை குடு அபி." என்றும் சொல்ல,அபித்ரனும் கைகளை நீட்டினான்.
ஷோபனாவும் இறங்கி வந்தாள். அவளுக்கும் தம்பி தன்னுடன் பேசியதில் மிகுந்த சந்தோஷமே.
காரில் கபிஷை வருணுக்குப் பக்கத்தில் அமர்த்திவிட்டு, ஷோபனாவும் அபியும் பின்பக்கம் ஏறிக்கொண்டனர்.
"அப்புறம்... உங்கட லவ் ஸ்டோரியையும் கொஞ்சம் சொல்லுங்களேன். கேட்போம்..." என்று மெல்லத் தொடங்கினாள் ஷோபனா.
அபித்ரன் ஒரு நொடி அமைதியாக இருந்தான்.
"அதெல்லாம் இப்ப எதுவும் இல்லக்கா... எல்லாத்தையும் விட்டாச்சு." என்றான் எங்கோ வெறித்துப் பார்த்தபடி. அவனது குரலில் இருந்த சோர்வு, அந்த வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஏதோ சொல்லியது.
"படிக்கிற வயசுல முத்தல் வேலைகளும் பார்த்துக் கொண்டு, ஏதோ வாழ்க்கையையே பார்த்த பெரிய ஆள்ட கணக்குல, ஃபீலிங்கா பதில் சொல்றதப் பார்!" என்று அவனது ஒற்றைக் காதைப் பிடித்துத் திருகினாள்.
"ஆஹ்...!" என்று அலறினான் அபி.
அந்தச் சத்தத்தைக் கேட்டு வருண் பின்னால் திரும்பிப் பார்க்க, உடனே காதை விட்டுவிட்டாள் ஷோபனா.
"உண்மையாவே இப்போ எதுவும் இல்லையென்டா அது நல்ல விஷயம் தான் அபி. ஒரு சின்ன பாதிப்பு எண்டாலும் ஆழமாப் பதியிற வயசு இது. தயவுசெஞ்சி இந்தக் காதல், கத்திரிக்காய் எல்லாம் இப்போதைக்கு, வேண்டவே வேண்டாம். நான் இப்படி அட்வைஸ் பண்ணுவன்னு தெரிஞ்சதாலதான் எனட்ட சொல்லாம இருந்தியோ என்னவோ..." என்று சிரித்தவள், அடுத்த கணமே குரலை மென்மையாக்கினாள்.
"ஆனா, ஒரு அக்காவா சொல்ல வேண்டியதைச் சொல்றது என் கடமை தானே..."
அபித்ரன் மெதுவாகத் தலையசைத்தான்.
"இனிமேல் எந்தப் பிரச்சனையா இருந்தாலும், முகம் காட்டாம ஒளிஞ்சு திரியக்கூடாது. தப்பு செஞ்சா எப்படியாவது திருத்தப் பாக்கணும். தப்பில்லையா, தைரியமா ஃபேஸ் பண்ணப் பாக்கணும். பிழையோ சரியோ, இதானக்கா விஷயமென்டு சொன்னியென்டால் கட்டாயம் நான் ஹெல்ப் பண்ணுவன். சரியாடா? விளங்கிச்சா?"
அவளது குரலில் இருந்த அக்கறை, அபித்ரனின் மனதை எங்கோ தொட்டது.
கண்கள் மெல்லக் கலங்கின.
அடுத்த நொடியே, அவனது விழிகளிலிருந்து இரண்டு துளி கண்ணீர் வழிந்தன.
அதை மறைக்க நினைத்தவன் அவசரமாகத் தலையைச் சரித்து, தோள்பட்டையில் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
அந்த நேரத்தில் கார் மெதுவாக நின்றது.
வருண் பின்னால் திரும்பிப் பார்த்தான்.
"இந்தச் சந்திதானே அபி?"
அபித்ரன் முன்பே தன் அத்தானிடம், அருளையும் தங்களுடன் கூட்டிச் செல்லும்படி கேட்டிருந்தான். அருளின் வீடு இருந்த சந்தியில்தான் கார் நின்றிருந்தது.
வருணின் கேள்விக்குப் பதிலாக,
"ஓம்... ஓம்..." என்று அவசரமாகத் தலையசைத்தவன், ஷோபனாவின் கைப்பேசியை வாங்கி அருளுக்கு அழைத்தான்.
சில நிமிடங்களிலேயே, சந்தியின் உள்ளிருந்து ஓடி வந்தான் அருள்.
அதற்குள் கபிஷ் பின்சீட்டிற்கு இடம் மாறியிருந்தான்.
காரிலிருந்து இறங்கிய ஷோபனா, திருதிருவென முழித்தபடி சங்கடமாகத் தலையைச் சொறிந்துகொண்டு நின்ற அருளைப் பார்த்து, செல்லமாக ஒரு முறைப்புடன் தலையசைத்துவிட்டு சென்றவள், முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
***************

Last edited: