உறைநீர்..!! - 13
மாயன் அருகே செல்லவும் முதல் பார்வையிலேயே சீதாவுக்கு அவன் எப்படிப்பட்ட ஆள் என்று தெரிந்து போனது..
தங்கையிடம் அதை சொன்னால் எப்படியும் அவள் பிடிவாதம் இன்னும் அதிகமாகும் என்று உணர்ந்தவள்
"நான் உங்களோட கொஞ்சம் பேசணும்.. தனியா பேசணும்.. இது என் தங்கச்சியோட வாழ்க்கை.. அவ்வளவு சீக்கிரம் என்னால முடிவெடுக்க முடியாது.. உங்களை பத்தி எனக்கு எல்லா விஷயமும் தெரியணும்.." என்று அவள் சொல்ல மாயனோ அவள் பேசியது காதில் விழாதது போல பார்வையால் அவளைத்தான் அளந்து கொண்டிருந்தான்..
"அந்த சின்ன குட்டியை விட இவ ரொம்ப அழகா இருக்காளே.. நல்லா தளதளன்னு தக்காளிப் பழம் மாதிரி இருக்கா.. இவளை தொழில்ல புடிச்சு போட்டா இன்னும் நிறைய காசு பார்க்கலாமே.. புடிச்சு போட்டுருவோம்.."
இப்படித்தான் எண்ணிக் கொண்டிருந்தான் அவன்.. அவளுக்கோ அவனின் விரசம் கலந்த பார்வையில் மேனிப் பற்றி எரிவது போல் இருந்தது.. அவனை எரித்து விடும் அனல் பார்வையோடு "என்ன.. கேட்டது காதுல விழலையா?" என்று அவள் பல்லை கடித்துக் கொண்டு கேட்க
"ம்ம்.. விழுந்துச்சு.. இவ்வளோ ஸ்வீட்டான வாய்ஸ்ல பேசும்போது கேட்காம இருக்குமா என்ன?" என்றவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தாள் சீதா.. அந்த நேரம் ஒரு பெரிய கல்லை எடுத்து அவன் தலையில் போட்டு கொன்று விடலாமா என்று தோன்றியது அவளுக்கு..
அவள் என்ன நினைக்கிறாள் என்பதை சரியாய் புரிந்து கொண்டவன் தன் நாடியை கையால் நீவியப்படி 'இவளை வழிக்கு கொண்டு வர ரொம்ப கஷ்டப்படனும் போலையே.. ஆனா வழிக்கு வந்துட்டா பண மழை தான்..' என்று எண்ணியவன்
"ம்ம்.. தனியா பேசலாம்.." என்றான்.
பூமாவின் பக்கம் திரும்பி "பூமு குட்டி.. நீ இந்த காட்டுக்கு வெளியில போய் காத்துகிட்டு இரு.. நான் பேசிட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன்.. இன்னைக்கு நம்ம போறோம்.. யார் என்ன சொன்னாலும் உன்னை கை விடமாட்டேன்.."
அவன் உறுதியாய் சொல்ல அதை கேட்டு இதழ் விரித்த பூமா சீதாவை பார்த்து தோளில் இடித்துக் கொண்டு திரும்பி அந்த சவுக்கு தோப்புக்கு வெளியே வந்து நின்று கொண்டாள்..
இப்போது சீதாவை பார்த்தவன் "சொல்லு.. என்ன பேசணும் என்கிட்ட..? நீ பேசறதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.." என்று சீதாவை மேலிருந்து கீழ் வரை விரசமாக கண்களால் அளந்தவன் "உன் தங்கச்சியை விட நீ ரொம்ப டக்கரு ஃபிகரா இருக்க.. பேசாம அவளை இப்படியே கழட்டி விட்டுடறேன்.. என்னோட நீ வரியா? உன்னை மகாராணி மாதிரி வாழ வைக்கிறேன்.." என்றான் அசிங்கமாக இளித்த படி..
அவ்வளவுதான்.. சுறுசுறுவென கோபம் தலைக்கு ஏறியது சீதாவுக்கு.. அவன் முகத்திலேயே காரி உமிழ்ந்தவள் "சீய்.. பொறுக்கி.. உன்னை பார்த்த உடனே நீ யாருன்னு எனக்கு தெரிஞ்சிருச்சு டா.. இப்பவே என் தங்கச்சி கிட்ட உன்னோட உண்மையான சுயரூபத்தை பத்தி சொல்லி ஊர்க்காரங்களை வர வச்சு உன்னை போலீஸ்ல புடிச்சு கொடுக்கல.. என் பேரு சீதா இல்லை.." என்று திரும்பியவளின் கையைப் பிடித்தவன் அப்படியே துள்ளத்துவள அவளை தூக்கி தன் காருக்குள் போட்டு கதவை பூட்டினான்..
அவள் "விடுடா.." என்று அவனை அடித்து வெளியே வர முயல அவளின் அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டானே தவிர அவளை கிஞ்சிற்றும் அங்கிருந்து நகர விடவில்லை.. அப்படியே காருக்குள் இருந்த டிரைவரிடம் "டேய் மாரி.. வண்டியை எடுடா.." என்றவன் காரை அந்த சவுக்கு தோப்பிலிருந்து பூமா நின்று கொண்டிருந்த பக்கத்திற்கு எதிர் பக்கமாக விடச்சொல்லி வெளியே போயிருந்தான்..
கிட்டத்தட்ட அரை மணி நேரம் காத்திருந்த பூமா அதன் பிறகு பொறுமை இல்லாமல் மறுபடியும் அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு வர அங்கே சீதாவையும் மாயனையும் காணாமல் திடுக்கிட்டாள்.. எங்க போனாங்க என்று யோசித்தவளுக்கோ சீதாவை பற்றிய தப்பான எண்ணங்களே மனதில் தோன்றியது..
"அடிப்பாவி.. நான் விரும்புறவன் பணக்காரன்னு தெரிஞ்ச உடனே அவனோட நீ போயிட்டியா? நீ எல்லாம் நல்லா இருப்பியா.. நாசமா போயிருவ.. என் வாழ்க்கையை தட்டி பறிச்சல்ல..? உன்னை சும்மாவே விடமாட்டேன்.. இனி நீ இந்த ஊரிலே காலே எடுத்து வைக்க முடியாத படி பண்றேன் பாரு.." என்று சீதாவை கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டியவள் நேராக வீட்டிற்கு ஓடினாள்.
வீட்டிற்கு போய் அப்படியே கதையை திருப்பி போட்டு சொன்னாள் அவள்..
சீதா யாரோ ஒரு பணக்காரனை விரும்பியதாகவும் அவனோடு ஓடிப் போக நடுராத்திரியில் மூட்டை முடிச்சோடு கிளம்பியதாகவும் அப்போது அவளிடம் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி இருப்பதால் அப்படி செய்ய வேண்டாம் என்று தான் அறிவுரை சொன்னதாகவும் அவள் கேட்காமல் போகவும் அவளுடன் கூட போய் அந்த ஆளோடு பேசப் போக அவளோ இவளை ஏமாற்றிவிட்டு மாயனோடு ஓடிப் போய் விட்டாள் என்று வாய் கூசாமல் பொய் கதையை அள்ளி விட்டாள் அவள்..
அவள் சொன்ன கதையை கேட்டு துடித்து போனார் அவர்களுடைய தந்தை.. "ஐயோ நிச்சயம் பண்ண மாப்பிள்ளைக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? ஜெகந்நாதன் தங்கமான புள்ள.. அந்த புள்ளையை ஏமாத்திட்டு எவனோ ஒருத்தன் கூட ஓடி போறதுக்கு இவளுக்கு எப்படி மனசு வந்தது? இதைப் பத்தி அவ இதுவரைக்கும் எதுவுமே சொல்லலையே.." என்று புலம்பியவர் அடுத்த நாள் மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டார்..
விஷயம் கேள்விப்பட்டு சிவனேசன் தெய்வானை ஜெகந்நாதன் மூவரும் அவரைப் பார்க்க வந்தனர்..
இறக்கும் தருவாயில் இருந்தவர் ஜெகந்நாதனிடம் "என் மூத்த பொண்ணு உங்களை ஏமாத்திட்டு எவனோடயோ ஓடிப்போயிட்டா.. இப்போ என் ரெண்டாவது பொண்ணை அனாதையா விட்டுட்டு நான் போக போறேன்.. இவ வாழ்க்கையும் சீரழிஞ்சு போய்டக் கூடாது.. என் மூத்த பொண்ணு செஞ்ச துரோகத்துக்கு பரிகாரமா உங்களுக்கு இவளையே நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. தயவுசெஞ்சு என் பொண்ணை ஏத்துக்கங்க மாப்ள.."
கரகரத்த குரலில் நா தழுதழுக்க கெஞ்சியவரை மறுத்து பேச முடியவில்லை ஜெகந்நாதனால்.. ஆனால் சம்மதமும் சொல்ல முடியாமல் அவன் யோசித்துக் கொண்டிருக்க சிவநேசனும் தெய்வானையும் அந்த மனிதரின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஜகந்நாதனோடு இரு நாட்கள் பலவிதமாய் பேசி அந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைத்திருந்தார்கள்...
சீதா யாரோ ஒரு பணக்காரனோடு ஓடிப் போய்விட்டாள் என்று கேட்டபோது ஜெகந்நாதனுக்கு அது பேரிடியாய் தான் இருந்தது..
அப்படி இருக்கவே இருக்காது.. இதில் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது என்று ஜகந்நாதன் சொல்ல அதைக் கேட்ட பூமா எங்கே தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று அவர்கள் யாரையும் யோசிக்கக்கூட விடாமல் அன்று நடந்ததாக தன் தந்தையிடம் சொல்லிய கதையை மீண்டும் மீண்டும் சொல்லி சீதா தான் ஜெகந்நாதனுக்கு துரோகம் செய்துவிட்டு வேறு ஒரு பணக்காரனோடு ஓடிப் போய்விட்டாள் என்று சாதித்து அவர்கள் மனதில் எல்லாம் சந்தேகம் இல்லாத அளவுக்கு உருப் போட்டு பதிய வைத்தாள்..
ஆனால் ஜெகந்நாதனுக்கோ அப்போதும் சீதாவை பற்றி அவள் சொன்னதை நம்ப முடியவில்லை.. ஏனென்றால் சீதாவை மூன்று மாதங்களாய் தான் அவனுக்கு தெரியும் என்றாலும் அவளை நன்கு அறிந்திருந்தான் ஜகந்நாதன்.. அவள் தன்னை எவ்வளவு விரும்பினாள் என்று முழுவதுமாய் உணர்ந்து இருந்தான்..
அவர்கள் வாழப் போகும் வாழ்க்கையைப் பற்றி அவளுக்குத்தான் எத்தனை கனவுகள்.. என்னென்ன ஆசைகள்.. அவனோடு இருக்கும் உறவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள அவளின் முழுமூச்சான ஆர்வம்.. அவரின் பிடித்தங்களை கேட்டு கேட்டு அறிந்து கொண்ட விதம்.. அவர் உத்தியோகத்தில் அவரின் நேர்மை.. அவருக்கு இருந்த ஈடுபாடு.. இது எல்லாவற்றுக்குமே சீதா பெரிய விசிறியாகவே மாறி இருந்தாள்.. தன் மனதிற்குள் அவர் நீங்கா இடம் பிடித்ததற்கான காரணங்களாக இவைகளை தான் சொல்லி இருந்தாள் சீதா.. இது எல்லாமே சீதாவின் மீது தவறு இருக்காது என சந்தேகம் இல்லாமல் அவருக்கு எடுத்துச் சொல்லியது..
தனக்கும் சீதாவுக்கும் அப்போதே திருமணம் நடந்து விட்டதாய் தான் உணர்ந்து இருந்தார் ஜகந்நாதன்.. நிச்சயத்தின் போது அவள் கைபிடித்து மோதிரம் இட்ட அந்த நொடி காலம் முழுவதும் இவள் ஒருத்தி தான் தனக்கு மனைவி என்று மனதில் தீர்மானம் செய்தவருக்கு அவள் ஒரு பணக்காரனோடு ஓடி விட்டாள் என்ற செய்தி இடியாய் தான் வந்தது..
அத்தனை நாள் மனதிற்குள் சீதாவை தன் மனைவியாய் முடிந்து வைத்திருந்தவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்வது பற்றி யோசிக்க கூட முடியவில்லை.. ஆனால் இறக்கப் போகும் தருவாயில் இருக்கும் ஒரு மனிதர் தன் மகளுக்கு வாழ்வு கொடுக்க சொல்லி கெஞ்சும் போது மறுக்கவும் முடியாது ஏற்கவும் முடியாது தவித்து போனான் ஜெகந்நாதன்..
அவனால் எந்த காலத்திலும் சீதாவை தவறாக நினைக்க முடியாது.. படாடோபமாக அலங்காரம் கூட செய்யாமல் எளிமையாய் இருப்பவள் அவள்.. அப்படிப் பட்டவள் பணத்துக்காகவும் சொகுசான வாழ்க்கைக்காகவும் மனதை மாற்றி இன்னொருவனோடு சென்றிருப்பாள் என்பதை ஏற்கவே முடியவில்லை அவனால்.. சீதாவை தேடச் சொல்லி காவல் துறையில் நம்பிக்கையான தன் நண்பர்களிடம் சொல்லி வைத்திருந்தான்.. ஆனால் சீதாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை... அவளுக்கு என்ன ஆனதோ என கவலையில் மாய்ந்து போனான் அந்த இரு நாட்களில்..
அவளுக்காக காத்திருக்க வேண்டும் என்று தான் நினைத்தான்.. ஆனால் சீதா அப்போது அங்கு இல்லை.. சாமிநாதன் தன் கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தார்.. வேறு வழியின்றி சாமிநாதனிடம் கொடுத்த வாக்கிற்காக பூமாவை திருமணம் செய்து கொண்டான்.. ஆனால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை அவன்.. மனதை மாற்றிக் கொண்டான்.. சீதாவின் நினைவை வலிய அப்புறப்படுத்தினான். முழுவதுமாய் பூமாவின் கணவனாக மட்டுமே மாறி இருந்தான்.
அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்ட போது கூட பூமாவிடம் "உனக்கு கொஞ்சம் டைம் வேணும்னா எடுத்துக்க .. இந்த தாம்பத்திய உறவுக்கு இப்ப அவசரம் இல்லை.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா கிராஜூவலா நம்ப.." என்று அவன் ஆரம்பிக்கும் போதே பூமாவோ வெடுக்கென "ஏன்? அவளை மறக்க முடியலையா? அவ நினைப்பாவே இருக்கீங்களா?" என்று கேட்க அந்தக் கேள்வி தீயாய் சுட்டது அவனை..
"இங்க பாரு.. எப்ப உன் கழுத்தில தாலி கட்டினேனோ அப்பவே நீ தான் என் பொண்டாட்டின்னு மனசுல முடிச்சு வச்சுக்கிட்டேன்.. இனிமே எந்த காரணத்தை கொண்டும் அவ நினைப்பு என் மனசுல வராது.."
"அப்புறம் எதுக்கு வெயிட் பண்ணனும்? இன்னைக்கே நம்ம வாழ்க்கையை தொடங்கிடலாம்.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. உங்களுக்கு எந்த உறுத்தலும் இல்லாம இருந்தா சரி.."
அவள் அப்படி சொல்லிவிட அன்றே அவர்கள் வாழ்க்கை தொடங்கியது..
சிவநேசனும் ஜெகந்நாதனும் அப்போது ஒரு நடுத்தர வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.. இருவருமே வாழ்க்கையில் அப்போதுதான் முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.. சொந்தமாய் ஒரு சிறிய வீடு இருந்தது.. தெய்வானைக்கு பெற்றோர் கிடையாது.. ஆகையால் திருமணம் முடிந்ததும் தன் தம்பியையும் தன்னுடனேயே கூட்டி வந்து வளர்த்து வந்தாள்..
அந்த அக்காளும் மாமனும் ஜெகநாதருக்கு அன்னை தந்தையாகவே மாறிப் போயிருந்தார்கள்.. அதனால் அவர்கள் எல்லோருமே ஒரே வீட்டில் தான் இருந்தார்கள்.. ஜெகந்நாதன் திருமணத்தின் போது தெய்வானை வயிற்றில் அரசியை சுமந்து கொண்டு இருந்தார்.. தமிழுக்கு மூன்று வயது. அழகனுக்கோ இரண்டு வயது.. தெய்வானை அந்தக் குடும்பத்தை தனியாய் கட்டிக் காத்தார்.. வேலை செய்வதற்கு ஆள் கிடையாது.. எல்லா வேலைகளையும் தெய்வானை தான் பார்த்துக் கொண்டார்.. இப்போது இரண்டு பெண்களாய் அந்த வீட்டில் இருக்க வேலைக்கு ஆள் வைக்கும் எண்ணமே அவர்களுக்கு இல்லாமல் போனது..
பூமாவுக்கோ அந்த வீட்டில் மூச்சே விட முடியவில்லை.. சீதாவை ஏவல் செய்தே பழகியவளாயிற்றே.. இங்கே சீதாவுக்கு பதிலாய் அவளுக்கு கிடைத்த பாவப்பட்ட ஜீவன் தெய்வானை..
"இது என்ன குருவிக்கூடு மாதிரி ஒரு வீடு.. இதுல ஜகஜகன்னு இவ்வளவு கூட்டம்.. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல.. நீங்க தனியா ஒரு வீடு வாங்குங்க.. நாம தனிக் குடுத்தனம் போலாம்" என்று பூமா சொல்ல
ஜெகநாதனோ "இங்க பாரு.. எனக்கு வர்ற சம்பளத்துக்கு வாடகை வீட்டுக்கு தான் போக முடியும்.. அந்த வீடும் இதை விட சின்னதா தான் இருக்கும்.. இன்னும் ஒரு ஒன்னு ரெண்டு வருஷத்துல என் சம்பளம் அதிகமாயிடும்.. அதுக்கப்புறம் நம்ம எல்லாருமே பெரிய வீட்டுக்கு போயிடலாம்.." என்று பூமாவை சமாதானப்படுத்தினான் ஜெகந்நாதன்..
அடுத்த இரு மாதங்களில் பூமா கர்ப்பம் தரிக்க அந்த வருட இறுதியில் சிந்து அவர்களின் செல்ல மகளாய் பிறந்திருந்தாள்..
சிந்து பிறந்து இரண்டு மாதங்களில் சொன்னபடியே ஜெகந்நாதனை அரித்து அரித்து பெரிய வீட்டுக்கு அவனோடு தனி குடித்தனம் போயிருந்தாள் பூமா..
எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.. அவர்கள் வாழ்க்கையில் காளிங்கன் என்ற நச்சு பாம்பு வரும் வரை..
நீர் உறையும்..