• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

26. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

STN - 72

New member
Staff member
உறை நீர் - 26

சுனிதா "அது எப்படி? பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்ப மொத்த பழியையும் ரியா மேலே போட்டு தப்பிச்சுக்குவீங்களா? எல்லா வேலையும் முடிச்சிட்டு இப்ப ரியா தான் காரணம்னு சொன்னா நாங்க நம்பணுமா?" என்று வேண்டுமென்றே கேட்க

"இல்ல.. இங்க எந்த தப்பும் நடக்கல.. எனக்குத் தெரியும்.. அந்த ரியா தான் எதையோ செஞ்சு" என்றவனை சுனிதா ஒரு மார்க்கமாக பார்த்த பார்வையில் அவன் மூளையில் திடீரென பொறி தட்டியது .

"ஹேய் சுனிதா.. உன் வேல தானே இதெல்லாம்?" என்று கேட்க

"ஹப்பா.. வாத்திக்கு ஒருவழியா பல்பு எரிஞ்சிருச்சு.." என்று அரசியிடம் ரகசியமாய் சொல்லி சிரித்த சுனிதா "என்னது.. நானா? என் வேலையா? என்ன சொல்றீங்க? நான் என்ன பண்ணேன்?" என்று ஏதோ ஒன்றுமே தெரியாதவள் போல பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு பேச

"இல்ல.. இப்படி நீ மூஞ்ச வெச்சுக்கறதிலேயே தெரியுது.. கன்ஃபார்ம்டா இது உன் வேல தான்.. என்னை பழிவாங்குறதுக்காக நீங்க எல்லாம் சேர்ந்து நாடகம் நடத்துறீங்களா?" என்று அவன் பல்லை கடித்துக் கொண்டே சீற அர்த்தமாய் அவனை ஒரு பார்வை பார்த்தாள் சுனிதா..

"எப்படி எப்படி? உங்களை ஏமாத்தி சூர்யா ரூம்க்கு கூட்டிட்டு வந்து நாங்க தப்பு பண்ண வச்சுட்டோம்.. இல்ல..?"

சுனிதா கேட்கவும் "ஆமா.. பின்ன.. போயும் போயும் இவளோட வந்து இப்படி எல்லாம்.. சீ.. ஒரு நாளும் நானா இப்படி ஒரு தப்பு பண்ண வாய்ப்பே இல்லை" என்க

"ஐயா.. உத்தமரே.. நீங்க தப்பே பண்ண மாட்டீங்க.. ஆறடி ஆம்பள உங்களை ஒருத்தர் கடத்திட்டு வந்து ரூம்ல வச்சு ரேப் பண்ணிடுவாங்க.. ஆனா சூர்யாவும் நவ்யாவும் அவங்களுக்கு நாலு தடிமாடுங்க சேர்ந்து இதையே தான் செஞ்சாங்கன்னு சொன்னா ஒத்துக்க மாட்டீங்க இல்ல.. அவங்க மட்டும் அழகை காட்டி சம்பாதிக்கிறாங்க.. இல்ல..? இப்ப புரியுதா சூர்யாவுக்கும் நவ்யாவுக்கும் என்ன நடந்திருக்கும்ன்னு.. இல்ல இப்பவும் ஒத்துக்க மாட்டீங்களா?"

சுனிதா நச்சென்று பேச அழகன் பேச்சற்று தான் போனான்..

"கவலைப்படாதீங்க.. உங்களுக்கும் சூர்யா பொண்ணால எந்த தப்பும் நடக்கல.. நைட்டு ஃபுல்லா தூக்க மயக்கத்துல தான் இருந்தீங்க.. தனித்தனியா தான் படுத்துக்கிட்டு இருந்தீங்க.. விடியறதுக்கு கொஞ்சம் முன்னாடி நாலு மணிக்கா தான் இப்படி ஒரு செட்அப் பண்ணி வச்சோம்.. ஆனா அப்படியே உங்களை தப்பு பண்ண வச்சிருந்தாலும் மேக்சிமம் வெறும் மயக்க மருந்து கொடுத்து இல்ல குடிக்க வச்சு செய்ய வச்சிருப்போம்.. அவ்வளவுதான்.. ஆனா நவிக்கும் சூர்யாவுக்கும் என்ன நடந்துச்சுன்னு தெரியுமா.. இப்பயாவது உங்களுக்கு சொன்னா புரியுமா..?"

"அவருக்கு எப்படி புரியும்? பார்த்தவுடனே அவங்க இப்படி இவங்க இப்படி இவங்க இவ்வளவு கேவலமானவங்க அவங்க அவ்வளவு மோசமானவங்கன்னு ஜட்ஜ் பண்றவருக்கு எப்பவுமே புரியாது.. முதல்ல முன்ன நிக்கிறவங்க யாரு.. என்னன்னு யோசிக்காம பேசுறவரு கிட்ட போய் நியாயம் பேசிகிட்டு இருக்கீங்க..?"என்றாள் சூர்யா..

அழகன் பக்கம் திரும்பியவள் "ஒவ்வொரு முறையும் நாங்க பணம் சம்பாதிக்கிறதுக்காக இந்த தொழிலை விரும்பி பண்றோம்னு சொல்றீங்களே எத்தனை முறை நான் அந்த இடத்திலிருந்து தப்பிச்சு வர முயற்சி பண்ணி இருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா? எவ்வளவு அடி வாங்கி இருக்கோம்? எவ்வளவு காயப்பட்டு இருக்கோம்னு உங்களுக்கு எங்க புரியும்? நான் வீக்கானவன்னு நினைக்கிறீங்களா? உங்களை அசைய முடியாம ஒரு இடத்தில இழுத்து பிடிச்சு நிறுத்தி வச்சவ நான்.. அதுல புரியல நான் எவ்ளோ ஸ்ட்ராங்க்னு.. ஆனா அங்க ஒவ்வொரு முறையும் நாலு பேர் சேர்ந்து என்னை மாதிரி ஒரு பொண்ணு மேல பாய்ஞ்சு அராஜகம் பண்ணி இருக்காங்க.. அதை எல்லாம் எதிர்த்து போராடி தோத்து போய் தான் நாங்க இந்த இடத்துலே நின்னுட்டு இருக்கோம்.. நவி அந்த விடுதிக்கு வரதுக்கு ரெண்டு வாரம் முன்னாடி தான் நான் அங்க வந்தேன்.. எனக்கு அப்பா இல்ல.. காலேஜ் என்ட்ரன்ஸ் எழுதிட்டு அம்மாவோட ஊருக்கு ட்ரெயின்ல திரும்பிக்கிட்டு இருந்தேன்.. என்னை கடத்திட்டு வந்துட்டாங்க.. எனக்கு நடக்கிற கொடுமையை பார்த்து நவ்யாவோட அம்மா என்னை எப்படியாவது அங்கிருந்து வெளிய அனுப்ப ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருந்தாங்க.. ஆனா அதுக்குள்ள அவங்களுக்கு அடிபட்டு எப்படி ஹாஸ்பிடலுக்கு போனாங்கன்னு கூட எனக்கு தெரியாது.. நாங்க அங்க இருந்த இத்தனை நாள்ல எவ்வளவு போராட்டத்தை ஃபேஸ் பண்ணி இருக்கோம்னு எங்களுக்கு தான் தெரியும்.."

அவள் பேச பேச கண் கலங்க மௌனமாய் நின்றிருந்தாள் நவ்யா.. அவள் கையை இறுக்கமாய் பற்றி கொண்டான் தமிழ்..

அதற்கு மேல் அழகனால் எதுவுமே பேச முடியவில்லை.. அங்கிருந்து வேக வேகமாய் கதவை திறந்து கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்.. அதன் பிறகு அண்ணனுடைய திருமணத்தை பார்க்க கூட நிற்கவில்லை அவன்.. மண்டபத்தை விட்டு வெளியேறி இருந்தான்.. அவன் என்ன நினைப்பில் அந்த இடத்தை விட்டு வெளியேறினான் என்று அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை.. ஆயினும் அங்கு நடந்த சம்பவத்தில் அவனுக்கு ஓரளவுக்காவது தெளிவு பிறந்து இருக்க வேண்டும் என்றே எல்லோருக்கும் தோன்றியது..

திருமண ஏற்பாடுகள் மறுபடியும் பழைய படி தொடர்ந்து இருந்தன..

நிச்சயதார்த்தம் முடிந்து திருமண சடங்குகள் நடந்தேறின.. ஆயிரம் பேர் அந்த மண்டபத்தில் நிறைந்து இருக்க நவ்யா கழுத்தில் அவர்கள் எல்லோர் முன்னிலையிலும் மாங்கல்யத்தை பூட்டி அவள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து தன்னவளாக்கிக் கொண்டான் தமிழ்..

கிடைக்காத வாழ்வு கிடைத்த சந்தோஷத்தில் திக்கு முக்காடி போயிருந்தாள் நவ்யா.. ஒவ்வொரு சடங்கும் நிகழும் போதும் உணர்ச்சி வசத்தில் கண் கலங்கி உடல் நடுங்கிப் போனது அவளுக்கு.. அருகில் அமர்ந்திருந்த தமிழும் அவள் நடுக்கத்தை உணர்ந்தவன் அவ்வப்போது அவள் கைகளை இறுகப் பிடித்து ஆசுவாசப்படுத்தினான்.. அங்கிருந்த பெரியவர்கள் அத்தனை பேரும் மனமார வாழ்த்த ஓரிரு மனங்கள் மட்டும் வன்மத்தை கொட்டிக் கொண்டிருந்தன..

நாள் முழுவதும் சடங்குகளை எல்லாம் முடித்துவிட்டு வரவேற்பும் நடக்க இருந்தது.. வரவேற்புக்கு முன்னால் மதிய வேளை சிறிது நேரம் நவ்யாவை களைப்பாறச் சொல்ல அவள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அறைக்குள் வந்திருந்தான் தமிழ்..

கட்டிலில் படுத்திருந்தவள் அவனைப் பார்த்ததும் "அத்தான்.." என்று முழு நிறை புன்னகையோடு துள்ளி எழுந்தாள்.. புது மஞ்சள் தாலியோடும் நெற்றி வகிடு நிறைய குங்குமத்தோடும் புதுமணப் பெண்ணாய் மிளிர்ந்தவளை காணக் காண நேசம் பொங்கி வழிந்தது அவளவனின் கண்களில்..

"என்னடா? தூக்கம் வருதா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? ஒரு ஃபைவ் மினிட்ஸ் நான் பேசிட்டு போயிடறேன்.." என்றவனை அப்படியே அள்ளிக் கொள்ளத்தான் தோன்றியது அவளுக்கு..

சிறிதும் அவள் மனம் நோகக் கூடாது என்று எப்படி எல்லாம் பார்த்து பார்த்து பேசுகிறான்.. அவளுக்காக எவ்வளவு யோசிக்கிறான்.. இவனைப் போன்ற ஒருவனை கணவனாய் அடைய இன்னும் எத்தனை கொடுமைகள் அனுபவிக்க வேண்டும் என்றாலும் அனுபவிக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு..

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அத்தான்.. சும்மாதான் படுத்துகிட்டு இருந்தேன்.. சொல்லுங்க.. நீங்க என்கிட்ட பேசறதுக்கு நேரம் காலம் எல்லாம் பார்க்க வேண்டாம்.. அனுமதியும் கேட்க வேண்டாம்..உங்களுக்கு அந்த உரிமை இருக்கு.." என்றாள் அவள்..

"இல்லடா.. கணவன் மனைவியா இருந்தாலும் பர்சனல் ஸ்பேஸ்னு ஒன்னு இருக்கு.. நம்ம பார்ட்னரோட பர்சனல் ஸ்பேஸ்க்கு எப்பவுமே மதிப்பு கொடுக்கணும்.. அதனால இனிமேலும் இப்படித்தான் கேட்பேன்.."

அவன் இப்படி சொன்னதில் சட்டென குறும்பு எட்டிப் பார்த்தது அவளுள். "ஓ.. அப்டியா? அன்னிக்கு என்னை தோள்ல தூக்கி போட்டுட்டு வந்தீங்களே.. அப்ப மட்டும் என்னோட பர்சனல் ஸ்பேஸ் பத்தி யோசிச்சதா தெரியல.."

அவளின் கேள்வியில் சரியாய் சிக்கிக் கொண்டவன் புருவத்தை விரலால் நீவியப்படி தலை சாய்த்து ஒரு மார்க்கமாக புன்னகைக்க அந்த வசீகரிக்கும் புன்னகையில் மயங்கித்தான் போனாள் அவள்.

"அது.. அது.. அப்படித்தான்.." என்று பக்கவாட்டில் திரும்பி கீழ் உதட்டை கடித்து தன் தடுமாற்றத்தை மறைத்தான்..

"என்ன அப்படித்தான்.. இப்படி சிரிச்சு சமாளிக்காதீங்க ..கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.. அன்னைக்கு மட்டும் ஆஃபிஸருக்கு பர்சனல் ஸ்பேஸ் கொடுக்க முடியாம அப்படி என்ன வந்துச்சாம்?"

பதில் வாங்காமல் விடமாட்டேன் என்று அவள் அடம்பிடிக்க வேறு வழியின்றி உண்மையை சொன்னான் போலீஸ்காரன்..

"அன்னைக்கு உனக்கு பர்சனல் ஸ்பேஸ் கொடுத்தா எங்க நீ என்னை விட்டு போயிருவியோ.. உன்னை தொலைச்சிடுவேனோன்ற பயத்தில அப்படி அடாவடியா நடந்துக்கிட்டேன்.. இப்ப அப்படி எதுவும் இல்லையே.." என்றவனின் மேல் காதல் இன்னும் இன்னும் பெருகியது அவளுக்கு..

அவள் காதல் பார்வையில் முரட்டு போலீஸூம் அழகாய் கொஞ்சம் வெட்கப்பட்டான்..

ஓரளவுக்கு மீறி அந்தப் பார்வைக்கு பதில் பார்வையை தள்ளி நின்றே தர முடியவில்லை பையனால்.. அருகில் சென்றால் நிச்சயம் அவளை அள்ளிக் கொள்வான் என்று தெரியும்.. அத்தனை கொள்ளை அழகாய் இருந்தாள் அவள்.. அதுவும் அந்நேரம் தனக்கு மட்டுமே உரியவளாய்.. உரிமைப்பட்டவளாய்.. தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியாமல் பேச்சை மாற்றினான் கள்ளன் அவன்.

"சரி.. நான் வந்த விஷயத்தை பேசிடறேன்.. நீ பிளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்க.. அதுல என்ன சப்ஜெக்ட் எடுத்த?"

"ஓ இதை கேட்க தான் வந்தீங்களா?" என்றவளின் குரலில் ஸ்ருதி குறைய புருவம் சுருக்கி பார்த்தவன்

"ஏன் நீ மேல படிக்க வேண்டாமா?" என்று கேட்க

"படிக்கணும் தான்.. ஆனா நீங்க இப்ப பேச வந்தது வேற விஷயமோன்னு நினைச்சேன்.. இந்த வீட்ல இருக்குறவங்கள பத்தி இங்க இருக்குற பழக்க வழக்கங்களை பத்தி ஒருவேளை நீங்க எனக்கு சொல்லி புரிய வைக்க வந்தீங்களோன்னு.."

"ம்ஹூம்.. இல்ல.. யாரை பத்தியும் நான் சொல்ல மாட்டேன்.. நீ அவங்களோட பழகி புரிஞ்சுக்கோ.. சரி இப்ப நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.. பிளஸ் டூ ல என்ன குரூப் எடுத்த.."

"சோஷியாலஜி, ஹிஸ்டரி, பொலிடிகல் சயின்ஸ்.." என்று அவள் சொன்னதும் வியப்பில் ஆழ்ந்து போனான் அவன்..

"ஓ.. குட்.. இன்ட்ரஸ்டிங்.. அப்படின்னா உன்னோட எய்ம் என்னவா இருந்தது.. என்ன ஆகணும்னு நினைச்சே..?"

"என் கனவெல்லாம் ஒரு டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் ஆகணுங்கறதுதான்.. சின்ன வயசுல இருந்து பயந்து பயந்து ஒளிஞ்சு ஒளிஞ்சு வாழற எங்க அம்மாவ பாத்ததுனாலையோ என்னவோ தைரியமா மிடுக்கோட எல்லாரும் மரியாதை கொடுக்குற மாதிரி ஒரு ப்ரொஃபஷன்ல நான் இருக்கணும்னு எனக்குள்ள ஒரு வெறின்னு கூட சொல்லலாம்.. அதுவும் இப்ப எனக்கு நடந்த அவமானங்களை என் தகுதியை அந்த அளவுக்கு உயர்த்திக்கறது மூலமா தான் துடைச்சு அழிச்சுட முடியும்னு உள்ளுக்குள்ள ஒரு உணர்வு.."

"ரொம்ப தெளிவா இருக்கே.. உன்னை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு நவி.. சரி நிஜமாவே நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ.. திரும்ப இன்னும் ஒரு ஒன் ஹார்ல ரிசப்ஷனுக்கு ஒன்னை ரெடி பண்ண ப்யூட்டிஷியன் வந்துருவாங்க.. நல்லா ரெஸ்ட் எடு டா.." என்று அவள் தலை மேல் கையை வைத்து ஆட்டி சொல்ல அவனுடைய பேரன்பில் நெகிழ்ந்து போனாள் அவனுடைய ஆருயிரானவள்..

நீர் உறையும்..
 
Last edited:
Top Bottom