வரம் 10
ஒரு கணத்தில் நடந்துவிட்ட அந்த நிகழ்வில் அனைவரும் உறைந்து போய் நிற்க, “இதுவும் நல்லதுக்கு தான். அந்த உறவே இல்லன்னு ஆனதுக்குப் பிறகு அதோட அடையாளம் மட்டும் எதுக்கு மிச்சமா.” என்ற நவநீதன் மன நிறைவோடு கையில் இருந்த துவாரகாவின் பதினோறு பவுன் தாலிக்கொடியை தன் வீட்டு வாசலில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டான்.
மகனின் முகத்தில் வந்து போன உணர்வுகளைப் பார்த்து இறங்கிய கோபம் மீண்டும் ஏற, தன் பிடியில் நின்ற துவாரகாவை ஓங்கி அறைந்தார் அஞ்சனை. குழந்தையின் இழப்பில் உண்டான இரத்த இழப்பு, நவநீதன் செய்த துரோகத்தினால் உண்டான மனவலி, ஊர் மக்கள் பேசிய பேச்சினால் ஏற்பட்ட தீராத ரணம் என அனைத்திலும் பாதிக்கப்பட்டு காற்றுக்கே தள்ளாடிக்கொண்டிருந்தவள் இந்த அடியில் மொத்தமாக விழுந்தாள்.
“அம்மா என்ன காரியம் பண்றீங்க, அவ நிலைமை தெரிஞ்சும் நீங்க இப்படிப் பண்ணலாமா?” கோபமாகக் கேட்டபடி அவளை எழுப்பி தன்னோடு ஒட்டி நிற்க வைத்தான் நவநீதன்.
“எனக்கு இருக்கிற கோபத்துக்கு அவளை அடிச்சே கொன்னாலும் கொன்னுடுவேன். அதனால் தான் சொல்றேன். அவளைக் கூட்டிக்கிட்டு எங்கேயாவது கண்காணாத தூரம் போயிடு.
இந்த ஊர், இந்த வீட்டு மனுஷங்க, அவங்களோட மரியாதை, உன் மேல் உயிரையே வைச்சிருந்த அம்மான்னு எல்லோரையும் மறக்க வைச்சது இவ தானே. இனி இவ மட்டும் தான் உனக்கு. நாங்க செத்தாலும் எங்களைத் தேடி இங்க வராத.” அழுத்தமாகச் சொன்னார் அஞ்சனை.
“உங்க கோபத்தைப் பார்த்து நானும் கோச்சுக்கிட்டு இங்க இருந்து கிளம்புறதுக்கு எனக்கு அஞ்சு நிமிஷம் போதும். ஆனா வெளியே அனுப்பிட்டீங்களேன்னு எனக்கும், வெளியே போகச்சொல்லிட்டேமேங்கிற வருத்தம் உங்களுக்கும் கடைசி வரைக்கும் போகாது.
கொஞ்ச நாள் போன பிறகு உறவை ஒன்னு சேர்க்க நினைச்சாலும் இந்த வருத்தம் மனசோட ஒரு ஓரத்தில் அப்படியே தான் இருக்கும். இப்ப சூழ்நிலை கஷ்டமா இருக்கு, எனக்குப் புரியுது. ஆனா இது இப்படியே தொடராதுன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.
நான் காட்டிக்காம இருக்கலாம். ஆனா என்னால் உங்க எல்லோரையும் விட்டு ஒருநாள் கூட இருக்க முடியாது. அதனால் யார் என்ன சொன்னாலும் நான் இந்த வீட்டை விட்டுப் போக மாட்டேன்.”
“நானும், இவளும் கிணத்தடியில் இருக்கும் பழைய வீட்டில் இருந்துக்கிறோம். அங்க இருந்து எங்க வாழ்க்கையைப் பார்த்துக்கிறோம். உங்களுக்கு எப்ப எங்களை இந்த வீட்டுக்குள்ள கூப்பிடத் தோணுதோ அப்ப கூப்பிடுங்க. இல்ல கடைசி வரைக்கும் உங்களுக்கு கோபம் போகாதுன்னா கூட எங்களுக்கு அந்த ஓட்டுவீடு போதும். அங்க இருந்தே நான் உங்களைப் பார்த்துப்பேன்.” என்றுவிட்டு துவாரகாவின் கரத்தை முன்பை விட கெட்டியாகப் பிடித்தபடி அவர்களுடைய பழைய வீட்டை நோக்கி நடந்தான் நவநீதன்.
“நவநீ, அந்த வீடு ரொம்ப நாளா ஆள் புழங்காம இருக்கு. நிறைய இடத்தில் உடைஞ்சு வேற இருக்கும். அங்க எப்படி டா தங்குவ. இராத்திரி நேரம் எலியும், பூனையும், பாம்பும் வந்து போகும். வேண்டாம் டா. அப்பா சொல்றதைக் கேளு. வீட்டுக்குள்ள வா.” தனக்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் மகனின் முதுகைப் பார்த்தவண்ணம் சொன்னார் கண்ணப்பன்.
“அம்மாவா என்னை வீட்டுக்குள்ள கூப்பிடாம நாங்க வரமாட்டோம். நீங்க நிம்மதியா போய் உங்க வேலையைப் பாருங்க. நாங்க நல்லா இருப்போம்.” தந்தையைப் பாராமலே பதில் சொன்ன நவநீதன் அவர்கள் வீட்டு காம்பவுண்டிற்குள் இருக்கும் அந்த பழைய ஓட்டு வீட்டின் முன்னால் வந்து நின்றான்.
அது தான் கண்ணகியம்மாளும், காத்தவராயனும் வாழ்ந்த வீடு. கண்ணப்பன் பிறந்ததும் பிள்ளைகளின் சௌகர்யத்திற்காக பக்கத்திலேயே பெரிய வீடு கட்டி குடிபுகுந்திருந்தாலும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம் அப்படியே இருக்கட்டும் என்று விட்டு வைத்திருந்தார்.
கிணற்றடியில் இருந்த கல்லின் மீது துவாரகாவை அமரவைத்துவிட்டு, நண்பனுக்கு அழைத்து உதவிக்கு கூப்பிட்ட நவநீதன் கிணற்றில் இருந்து நீர் இரைத்து பெரிய பாத்திரங்களில் நிறைக்க ஆரம்பித்தான்.
யாருக்கு வந்த விருந்தோ என்று இருள் சூளும் வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் துவாரகா. அவளைப் பார்த்தும் பார்க்காமல் தன் வேலையில் கவனமாக இருந்தான் நவநீதன். சற்று நேரத்தில் பரணி வந்துவிட ஆண்கள் இருவருமாக இணைந்து வீட்டை ஆட்கள் தங்குவதற்கு ஏற்ப உருமாற்ற ஆரம்பித்தனர்.
இரண்டு மணி நேரத்தில் ஓரளவு வீட்டை தயார் செய்தவர்கள் துவாரகா பக்கம் வர, அவள் இருந்த நிலையில் கொஞ்சமும் மாற்றம் இல்லை. நண்பனை அவளுக்கு காவல் வைத்துவிட்டு வெளியே சென்ற நவநீதன், அவளுக்கு இரண்டு நைட்டி, இரண்டு செட் சுடிதார், உள்ளாடைகள் என பார்த்து பார்த்து வாங்கினான். இரவு உணவையும், அவள் போட்டுக்கொள்ள வேண்டிய மாத்திரைகளையும் தேவையான மற்ற பொருள்களையும் வாங்கியவன் ஒருமுறைக்கு பலமுறை வேறு எதுவும் தேவைப்படுமா என்று யோசித்துப் பார்த்த பின்னால் தான் வீடு வந்தான்.
அவன் கொடுத்தவற்றை வாங்க மறுத்து துவாரகா கோபப்பார்வை பார்க்க, “வாழ்க்கை முழுக்க உன்கூட தான் வரப்போறேன். அதனால் சாப்பிட்டு தெம்பா முறைச்சுப்பாரு. இரண்டு நாளா எல்லாம் நல்லபடியா நடந்து முடியுமாங்கிற பயம், தவிப்பு, படபடப்பு, இன்னைக்கு காலையில் இருந்து அலைந்த அலைச்சல் எல்லாம் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ணிடுச்சு. சாப்பிட்டு நிம்மதியா தூங்கணும்.” என்றபடி வேகமாக உணவைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தான் நவநீதன்.
“எப்படி மச்சான் உங்களால் எந்த விதக் கவலையும் இல்லாம சாப்பிட முடியுது.” துவாரகா கேட்க, வேகவேகமாக சாப்பிட்டுக்கொண்டிருந்த அவன் கரங்கள் ஒரு சில நொடிகள் நின்றது. ஆனால் அடுத்த நொடி முன்பை விட வேகமாக சாப்பிட்டவன், சாப்பிட்டு முடிக்கும் வரை ஒரு வார்த்தை பேசவில்லை. அவன் பேசுவான், பதில் சொல்வான், காரணம் சொல்வான் என்று அவனையே பார்த்துக்கொண்டிருந்த துவாரகாவிற்கு கோபம் தான் வந்தது.
சாப்பிட்டு முடித்தவன், “என்னை முறைக்கவும், திட்டவும், நடக்கப்போறதை தாங்கவும், கொஞ்ச நாள் கழிச்சு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு என்கூட வாழவும் உன் உடம்பில் தெம்பு வேணும். அதுக்காகவாச்சும் சாப்பிடு.” என்றபடி அவள் சாப்பாட்டை பிரித்து ஊட்டி விட முனைந்தான். பிடிவாதமாக மறுத்து அமர்ந்திருந்தாள் துவாரகா.
“நேத்து இந்நேரத்துக்கு நான் ஊட்டி விட்ட சாப்பாடு இனிச்சது. இப்ப கசக்குதோ.” சிரித்தபடி அவன் கேட்க, “உலகம் நேத்தே நின்னு இருக்கலாம் னு தோணுது மச்சான். ஒரு நாளில் என்னோட மொத்த குடும்பத்தையும் இழந்து, ஊர் உலகத்துகிட்ட கெட்ட பேர் வாங்கி, என் வாழ்க்கையில் நான் கற்பனை கூட செய்து பார்த்திடாத படி உங்க நிழல் என்னைப் பயமுறுத்தும் நிலைக்கு வந்துட்டேன்.” விசும்பினாள்.
“நடந்ததையே நினைச்சு வருத்தப்படுறதால் எதுவும் மாறும் னா சொல்லு. நானும் உன்கூட உட்கார்ந்து வருத்தப்படுறேன்.” என்றவனை முறைத்தாள் துவாரகா.
“அவன் சாதாரணமா நடந்துக்கிறதால் அவனுக்கு வருத்தம் இல்லன்னு நினைக்காத துவாரகா. எனக்கு அவனை நல்லாத் தெரியும். நடந்ததில் ரொம்ப நொருங்கிப் போய் இருக்கான். அவனை நீ பார்த்துக்கலன்னாலும் பரவாயில்லை, அவனை உன்னைப் பார்த்துக்க விடு. இப்படியெல்லாம் நடக்கணும் னு விதி இருந்திருக்கு போல. வேற என்ன சொல்றது.” பரணி சப்போர்டிற்கு வர,
“நடந்தது விதி இல்லண்ணா. மச்சானோட சதி. அந்த சகுனி சதிச்செயல் நடத்தி ஒரு குலத்தையே அழிச்சான்னா அதுக்கு நிறைய காரணம் இருந்தது. ஆனா என்னை இப்படி ஒரு இழிநிலைக்கு ஆளாக்கினதுக்கு இவர்கிட்ட என்ன காரணம் இருக்குன்னு தான் எனக்குத் தெரியல.” வருத்தமாய் சொன்னாள் துவாரகா.
“வேற என்ன எல்லாம் உன் மேல் இருக்கும் ஆசை தான்.” என்று கண்ணடித்தான் நவநீதன். துவாரகா அவனை முறைக்க, சிரித்தபடி அவளுக்கு உணவூட்டினான்.
வேண்டாம் என்று சொல்வதற்காக அவள் வாயைத் திறக்கும் போதெல்லாம் இன்னும் அதிகமாக உணவை அள்ளி வைத்தான். அருகே மண் தரையில் துப்ப போக, “நான் தான் இளக்காரமா போயிட்டேன்னு நினைச்சேன். ஆனா சாப்பாடு கூட இளக்காரமா போயிடுச்சா துவா.” கரகரப்பான குரலில் கேட்க, அதன்பிறகு எந்தப் பிரச்சனையும் செய்யாமல் சாப்பிட்டாள் துவாரகா.
அவளுக்குத் தேவையான மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு அவள் அசதியில் உறங்கும் வரை அருகே இருந்து பார்த்துக்கொண்டிருந்த நவநீதன், பரணியிடம் வந்தான்.
“வீட்டில் இருக்கும் ஓட்டை, உடைசல்கள் எல்லாத்தையும் நாளைக்கே சரிபண்ணனும் டா. உன்னோட அண்ணன் கொத்தனார் வேலை செய்யுறவர் தானே. நாளை அவரை இங்க கூட்டிட்டு வா. அந்த வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு கொஞ்சம் சாமான்கள் வாங்கணும். நல்ல வக்கீலாப் பிடிச்சு துவாரகாவோட விவாகரத்து வழக்கை கோர்ட்டில் பதியணும்.” என அடுக்கிக்கொண்டே போக, திடீரென பின்னால் இருந்து தன்னை அணைத்த உருவத்தின் அதிர்வில் பேச்சை நிறுத்தினான் நவநீதன்.
தொடு உணர்வில் வந்தது யார் என்று அறிந்துகொண்டு, “அப்பா” என்கிற மென்மையான அழைப்போடு திரும்பினான். கவலையே கண்டிராத அவரின் முகத்தில் இப்போது உலகத்தின் ஒட்டுமொத்த கவலையும் குடிபெயர்ந்திருக்கக் கண்டு மகனாக வருத்தம் கொண்டான்.
“என்னால் உங்களுக்கு ரொம்பக் கஷ்டம் இல்லப்பா.” கரகரப்பான குரலில் கேட்க, “அழுறியா டா?” ஆச்சர்யமாகக் கேட்டார் கண்ணப்பன்.
மகன் பிறந்த நேரமே கர்ப்பப்பை பலவீனம் காரணமாக அடுத்த குழந்தை தரிக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர் சொல்லிவிட, ஒற்றைக் குருத்தாகிப்போன மகனின் மீது உயிரையே வைத்திருந்தார் கண்ணப்பன். மகனும் தன் மீது அளவுக்கதிகமான அன்பு வைத்திருக்கிறான் என்று நம்பிக்கொண்டிருந்தது அவர் உள்ளம். ஆனால் தற்போது நடந்த செயல்கள் அப்படி இல்லையோ என சந்தேகம் கொள்ள வைத்தது.
தான் மகன் மேல் கொண்டிருக்கும், அன்பையும் நம்பிக்கையையும் அவனுக்கு முழுதாக உணர்த்த தவறி விட்டோமோ. அதனால் தான் மகன் அவன் வாழ்வின் மிக முக்கியமான கட்டத்தில் உதவியோ யோசனையோ கேட்டு தன்னிடம் வரவில்லையோ என தவியாய் தவித்தது அந்த தந்தையின் உள்ளம். தனக்குள்ளே வைத்து மருகிக்கொண்டிருக்காமல் அதை மகனிடம் கேட்கவும் செய்தார்.
“நீங்க பேசுங்க, நான் காலையில் அண்ணனோட வரேன்.” என்றுவிட்டு விடைபெற்றான் பரணி.
“என்னப்பா பேசுறீங்க. உங்கமேல எனக்கு நம்பிக்கை குறையுமா, சூரியன் மேற்கே உதிக்கிறதுக்கு சமம் உங்களோட இந்த நினைப்பு. செய்ய நினைச்ச செயலில் குழப்பமோ, தவிப்போ இருந்தா தானேப்பா யோசனையும், வழிகாட்டுதலும் தேவைப்படும். துவாரகா எனக்கு தான்னு நான் எடுத்த முடிவு கல்வெட்டு மாதிரி உறுதியானது. அதில் இப்பவரை சின்ன சலனம் கூட எனக்கு இல்ல. நான் சாகும் வரை வரவும் வராது.” உறுதியாகச் சொன்னான்.
தனக்கு அருகில் மகனை அமர வைத்து, “என்னாச்சு டா? எதுக்காக இத்தனை பெரிய முடிவு. பொய்யா ஒரு ரிப்போர்ட் உருவாக்கி, உன்னோட சேர்த்து அவளுக்கும் தீராத அவப்பெயரை உண்டாக்கினாலும் பரவாயில்லை அந்தக் கல்யாண வாழ்க்கையில் இருந்து விலகிட்டா போதும் னு நினைக்கிற அளவுக்கு அந்த வீடு அவளுக்கு நரகமாவா இருந்தது. அவளை மாயவன்கிட்ட இருந்து விலக்குறதுக்கும், உன்னோட சேர்த்துக்கிறதுக்கும் அப்படி என்னடா அவசரம். என்ன காரணமா இருக்குமோன்னு நினைச்சு நினைச்சு நெஞ்செல்லாம் பதறுது.” வருத்தமாய் சொன்னார் கண்ணப்பன்.
“அவளை அந்த வாழ்க்கையில் இருந்து வெளியே கொண்டு வந்தா போதும் னு நினைச்சிருந்தா, அந்த மாயவனைப் பத்தி தெரிஞ்ச நேரமே அவனைக் கொன்னுட்டு, மொத்தமா அவளை விடுவிச்சு இருப்பேனே. அவ வாழனும் பா. எல்லோரையும் விட ரொம்ப சந்தோஷமா வாழனும். அவளை சந்தோஷமா வாழ வைக்க என்னால் மட்டும் தான் முடியும். அதனால் தான் என்ன நடந்தாலும் பரவாயில்லைன்னு இப்படி பண்ணிட்டேன்.” வெறியோடு ஆரம்பித்து மனவருத்தத்தோடு முடித்தான் நவநீதன்.
“செஞ்சதை நினைச்சு வருத்தப்படுறன்னா அது எத்தனை பெரிய தப்புன்னு உனக்கே புரியுதுன்னு தான் அர்த்தம். அதனால் நானும் அதையே குத்திக்காட்ட விரும்பல. ஆனா அதுக்கான அவசியம் என்னன்னு அப்பாவுக்குத் தெரிஞ்சுக்கணும்.” உறுதியாய் சொன்னார் கண்ணப்பன்.
“நான் நல்லா தூங்கி மூணு மாசம் ஆகுதுப்பா. மாதங்கி அத்தையோட கடைசி நொடி என் கண்ணுக்குள்ளேயே நின்னு என்னைத் தூங்க விடாம பண்ணுது. சாகும் போது அவங்க என்னைப் பார்த்த பார்வை, உன்னை நம்பி கொடுத்த பொறுப்பை சரியா செஞ்சிருந்தா இன்னைக்கு எனக்கும், என் பொண்ணுக்கும் இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமான்னு கேட்ட மாதிரியே இருந்துச்சு. குற்றவுணர்ச்சியில் தவிச்சுக்கிட்டு இருக்கேன் பா. நெஞ்செல்லாம் எரியுது. என்னால் நார்மலா இருக்க முடியலப்பா.” கண்ணீரோடு சொன்னான்.
அவனைத் தோளோடு சாய்த்துக்கொண்டு, “அப்படி துவாரகா வாழ்க்கையில் என்ன தான் நடந்துச்சு?” ஆதங்கம் மற்றும் வருத்தத்தோடு கேட்டார் கண்ணப்பன். அவள் திருமணத்திற்கு தாய் மாமன் சீர் செய்ததோடு சரி, அதன்பிறகு ஒருநாள் கூட நேரில் சென்று அவளைப் பார்த்தது இல்லை. அவள் புகுந்த வீட்டில் நல்லபடியாக வாழ்கிறாளா என அவ்வப்போது தங்கை மாதங்கியிடம் விசாரித்துக்கொள்வார்.
ஆனால், தான் அப்படி அமைதியாக இருந்திருக்கக் கூடாதோ. தகப்பன் இல்லாத பிள்ளைக்கு தாய் மாமன் தானே தகப்பன். அந்த ஸ்தானத்தில் இருந்து அவள் வாழ்வு எப்படி இருக்கிறது என்று நேரில் போய் பார்த்திருக்க வேண்டுமோ என்று இப்போது வருந்தினார்.
“அவளுக்கு நடந்ததை வெளியே சொல்ற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லப்பா. அதோட அதை அடுத்தவங்களுக்கு தெரியப்படுத்தவும் எனக்கு விருப்பம் இல்ல.” என மொத்தமாக மறுத்துவிட்டான் நவநீதன்.
சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு, “என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே டா. உறவில் மருமகளா இருந்தாலும் அவளையும் என் பொண்ணு மாதிரி தானே வளர்த்தேன். வாக்கப்பட்டு போன இடத்தில் அவ கஷ்டப்படுறான்னு எனக்குத் தெரியப்படுத்தி இருந்தா, அவளை அங்க இருந்து கௌரவமா நானே மீட்டுக்கொண்டு வந்திருப்பேனே. அதுக்கு அப்புறம் ஊர் மொத்தத்துக்கும் சொல்லி கௌரவமா உங்க கல்யாணத்தை நானே நடத்தி வைச்சிருப்பேனே.” மனக்குறையோடு கேட்டார்.
“நீங்க குணத்தில் மட்டும் இல்ல வளர்ப்பிலும் ஸ்ரீராமர் தான். உங்களுக்கு உங்க அப்பாவோட வார்த்தை தெய்வவாக்கு. அவர் வார்த்தையில் உங்களுக்கு மாற்றுக்கருத்து வந்தாலும் கடைசியில் அவர் நினைச்சது தான் நடக்கும். துவாரகாவுக்கு அந்த மாயவனோட நடந்த கல்யாணமே அதுக்கு சாட்சி. அன்னைக்கு உங்களால் அவரை மீறி எதுவும் செய்ய முடியாம போன மாதிரி இன்னைக்கும் ஏதாவது பண்ணி அவர் உங்களை கார்னர் பண்ண வாய்ப்பிருக்குன்னு தான் உங்ககிட்ட கூட நான் சொல்லல.
அதோட, உங்களுக்கு இருக்கிற பெருந்தன்மையும், பரந்த மனசும் அம்மாவுக்கும் தாத்தாவுக்கும் கிடையாது. அம்மாவுக்கு துவாரகா மேல அன்பு இருந்தாலும் அவளுக்கு இரண்டாவது கணவனா என்னைப் போக விடமாட்டாங்க. தாத்தாவைப் பத்தி நான் சொல்லித் தெரியவேண்டியது இல்ல. எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சுப் பார்த்து தான் இந்த முடிவுக்கு வந்தேன்.” என்று இலகுவாகத் தோள்களைக் குலுக்கினான்.
“இவ்வளவு யோசிக்கத் தெரிஞ்ச உனக்கு பிரச்சனை பஞ்சாயத்து வரை போனா துவாரகாவோட மனசு என்ன பாடு படும் னு தெரியாமலா இருந்தது.” சற்றே கோபமாகக் கேட்க, “வேற எப்படி அணுகி இருந்தாலும் அந்த மாயவன் நம்ம துவாரகாவை விட்டு இருக்க மாட்டான் அப்பா.
கை உடைஞ்சா அது தாங்க முடியாத வலியைத் தரும் தான். ஆனா அதுக்கு இணையான அறுவைச்சிகிச்சை வலியைத் தாங்கிக்கிட்டா தான் கை பழையபடி சரியாகும் என்கிற நிலை வந்தா அதைத் தானே செய்வோம். அப்படி ஒரு சிகிச்சை முறை தான் நான் துவாரகாவுக்கு செஞ்சது. இப்ப வலிக்கும் தான். ஆனா காலப்போக்கில் எல்லாம் சரியாகும்.” உறுதியாகச் சொன்னான்.
“மாதங்கி துவாரகா வீட்டுக்கு போயிட்டு வந்த நேரம் தான் விபத்துக்கு ஆளாகி ஹாஸ்பிடலில் சாகக்கிடந்தா. கடைசியா நீ தான் அவளோட இருந்த. அந்த நேரம் அவ தான் உன்கிட்ட ஏதோ சொல்லி இருக்கணும்.” கண்ணப்பன் சொல்லிக்கொண்டே போக, பதில் பேசாமல் அமைதியாக நின்று தந்தையின் வார்த்தைகளை ஆமோதித்தான் நவநீதன்.
வாழும் வரை எந்த சந்தோஷத்தையும் பார்க்காமல், சாகும் போதும் துக்கத்தை மட்டுமே கண்ட தங்கையின் நினைவில் கலங்கிய கண்ணப்பனின் மனம் கடந்த காலத்தை நோக்கி பயணப்பட்டது.