வரம் 16
சொல்லாமல் கொள்ளாமல் மாதங்கி வந்து நிற்பார் என்று துவாரகா முதற்கொண்டு அங்கிருந்த யாருமே எதிர்பார்த்து இருக்கவில்லை. முன்பே தெரிந்திருந்தால் துவாரகாவை எதையும் சொல்லவிடாத படி அதட்டி உருட்டி வைத்திருப்பார்கள். இப்போது என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தபடி நிற்க, சென்ற முறை பார்த்ததற்கு நேர் எதிராக, பாதி இளைத்துப் போய் கருத்து நின்ற மகளின் தோற்றம் என்னவோ போல் இருந்தது மாதங்கிக்கு.
முன்பு மாதங்கி வருகிறார் என்று தெரிந்தால் துவாரகாவை கட்டாயப்படுத்தி அழகுநிலையம் அழைத்துச் சென்று அவளுக்குத் தேவையான எல்லாம் செய்து மணப்பெண்ணைப் போல் அழைத்து வந்து, எங்கள் வீட்டில் உங்கள் பெண் ராணியைப் போல் வாழ்கிறாள் என்று பெருமைபாடுவான் மாயவன். தாயின் நிம்மதிக்காக துவாரகாவும் அந்த பொய்யை உண்மை போல தத்ரூபமாக நடித்துக்கொடுப்பாள். இன்று எல்லாம் சொதப்பி மாமியார் வீட்டில் மகளின் உண்மை சுயரூபம் தாய்க்கு தெரிய வந்திருந்தது.
“என்னடி துவாரகா கோலம் இது?” மாதங்கி தவிப்போடு கேட்க, “அண்ணி மாசமா இருக்காங்க அத்தை. அதனால் வீட்டு வேலை எல்லாம் துவாரகா தனியா செய்யவேண்டியதாப் போச்சு. அதனால் தான் ஆள் கொஞ்சம் இளைச்சுப் போயிட்டா.” என்று சமாளிக்கப்பார்த்தான் மாயவன்.
“பெரியவளால் வேலை செய்ய முடியாதுன்னா என் பொண்ணுக்கு ஒத்தாசையா வேலைக்காரங்க வைக்க வேண்டியது தானே தம்பி. ஒத்தை ஆளா இவ்வளவு பெரிய வீட்டை என் பொண்ணு எப்படி நிர்வாகம் பண்ணுவா? என்வீட்டில் இருந்தவரை இவ்வளவு பெரிய வேலை எல்லாம் செய்தது இல்ல என் பொண்ணு.” பிள்ளைப் பாசத்தில் மாதங்கி பேச,
“என்னத்தை பேச்சு இதெல்லாம். கல்யாணம் பண்ணி வந்தா பிறந்த வீட்டில் இருந்த சொகுசை எதிர்பார்க்க முடியுமா? எல்லா வீட்டிலும் பொண்ணுங்க இதே வேலையை தானே பார்க்கிறாங்க.” பத்மன் கடுப்பாகப் பேச, “அப்படிப் பார்த்தா, கர்ப்பமா இருக்கிற எந்தப் பொண்ணும் வேலையே செய்தது இல்லையா?” திருப்பிக் கேட்டார் மாதங்கி.
“என்னத்தை குடும்பத்துக்குள்ள குழப்பம் பண்ண நினைக்கிறீங்களா? கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகுது. உங்க பொண்ணுக்கு தான் ஒன்னும் இல்ல. எங்க அண்ணி மாசமா இருக்காங்கன்னா அவங்களுக்கு செஞ்சு கொடுக்க கசக்குதா இவளுக்கு. நாளைக்கே இவளுக்கு ஒன்னுன்னா எங்க அண்ணி தான் பார்க்கணும்.
உங்க பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியாது. என் பொண்டாட்டி எப்படி இருக்கணும் னு நான் நினைக்கிறேனோ அப்படித்தான் அவ இருந்தாகணும், இருப்பா.” அதிகாரமாய் சொன்னான் மாயவன். அதற்கு முன்னர் அத்தை என்கிற வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லாதவனின் திமிர்பேச்சு மாதங்கியை வாயடைத்து போகச் செய்தது.
இப்படித் தான், தன் கண்ணுக்கு முன்னால் ஒருமாதிரியும், கண்ணுக்குப் பின்னால் ஒருமாதிரியும் நடக்கிறதா? இந்த ஒரு விஷயம் தான் இப்படியா? இல்லை எல்லா விஷயமும் அப்படித்தானா என்பதாய் மகளைப் பார்த்தார் மாதங்கி.
தாய் இங்கே இருந்தால் இன்னும் பெரிய பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது என்று புரிந்த துவாரகா, “அவங்க சொல்ற மாதிரி கொஞ்ச நாளா வேலை அதிகம் மா. அதனால் தான் உடம்பு இளைச்சுப் போச்சு. வேற ஒன்னும் இல்லை.” என்றாள்.
“உடம்பு இழைச்சதுக்கு காரணம் சொல்லிட்ட சரி. முகத்தில் இருந்த களை காணாமல் போனதுக்கு என்ன காரணம் சொல்லப் போற.” என்க, பதில் சொல்ல முடியாமல் நின்றாள் துவாரகா.
“பத்மன், நாம நாலு பேரும் எங்க வீட்டுக்கு போறதா இருந்தது தானே. ஆன்ட்டி எப்ப கிளம்புறாங்கன்னு கேட்டு சொல்லுங்க. நான் கேப் சொல்லணும்.” என்று சுற்றி வளைத்து மாதங்கியை கிளம்பும் படி சுரேகா சொல்ல, என்னவோ சரியில்லை என்கிற நினைப்போடு, “என்கூட, நம்ம வீட்டுக்கு வரியா துவாரகா. உனக்குப் பிடிச்சது எல்லாத்தையும் அம்மா செஞ்சு தரேன். நாலு நாள் இருந்துட்டு வருவ.” அன்பாய் அழைத்தார்.
நெடுநாட்ககளுக்குப் பிறகு உண்மையான அன்பை உணர்ந்த காரணத்தால் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது துவாரகாவிற்கு. தாயைக் கட்டிக்கொண்டு, “என்னை உங்களோட மொத்தமா கூட்டிட்டு போயிடுங்க.” என்று துக்கம் தீரும் வரை வெடித்து அழ ஆசையாக இருந்தது. அதை நிறைவேற்ற நினைத்து ஒரு அடி தாயை நோக்கி எடுத்தும் வைத்துவிட்டாள் தான்.
ஆனால் திடீர் என அவள் அருகே வந்த மாயவன் அவள் தோளில் கையைப் போட்டு அழுத்தி வலி உண்டாக்கி, “என் பொண்டாட்டி இல்லாம இந்த வீட்டில் ஒன்னுமே ஓடாது அத்தை. அவளை இங்க இருந்து கூட்டிட்டு போறது எல்லாம் நடக்காத காரியம். பேசாம ஒன்னு பண்ணுங்க. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு, நீங்க வேண்ணா நாலு நாள் இங்க தங்கி இருந்து உங்க பொண்ணைப் பார்த்துக்கோங்க.” என்க, தாய் இந்த வீட்டிலா, நடந்ததையும், நடந்துகொண்டிருப்பதையும் தெரிந்துகொண்டால் அந்த இடத்திலேயே தாயின் உயிர் போய்விடுமே எனப் பதறிய துவாரகா விரைவில் மாயவனோடு தாத்தா வீடு வருவதாக சொல்லி தாயை அனுப்பி வைத்தாள்.
“மகளின் உடைந்த செல்போன் இன்னும் சரி செய்யப்படாமல் இருப்பது, அவளைத் தனியாக தன்னோடு தன் இல்லம் அனுப்பாமல் இருப்பது, குறைந்தபட்சம் அவளை தன்னோடு தனியே பேச அனுமதிக்காதது, தான் பார்க்காத நேரம் அந்தத் திருட்டுக்கொட்டுகள் மூன்றும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் பார்வை, எல்லாவற்றையும் விட பத்மன் மகளைப் பார்க்கும் பார்வை என எதுவுமே அந்த வீட்டில் சரியில்லை என்பதைப் புரிந்துகொண்ட மாதங்கி, உடனடியாக தமையனிடம் சொல்லி நவநீதன் உதவியோடு என்ன ஏது என்று விசாரிக்க வேண்டும் என தன்னோடு சொல்லிக்கொண்டு அந்த வீடு இருந்த பாதையை கடக்கும் போது அதீத பதற்றத்தில் படபடவென வரவே நிழலாகப் பார்த்து அமர்ந்துகொண்டார். சில பல நிமிடங்கள் கடந்திருந்தது.
தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் தன் மகளைப் போலவே பரிதாபமான தோற்றத்தில் நின்றுகொண்டிருந்த பெண்ணைப் பார்த்ததும் பரிதாபம் கொண்ட மாதங்கி அவளை நோக்கி செல்லப் பார்க்கையில் வேகவேகமாக அவ்விடம் வந்திருந்தான் மாயவன்.
மகளின் கணவனுக்கு இன்னொரு பொண்ணோடு என்ன வேலை. தெரிந்தவளாக இருந்தால் வீட்டிற்கு அழைத்துச் சென்று பேசி இருக்கலாமே என்கிற சிந்தனையோடு மறைவாக அவர்கள் பேசுவது கேட்கும் தொலைவில் வந்து நின்றுகொண்டார்.
“யாரைக் கேட்டு என் வீடு இருக்கும் தெருவுக்கு வந்த?” எடுத்ததுமே கோபமாக தான் பேசினான் மாயவன்.
“இன்னும் இரண்டு நாளில் எப்படியாவது நீ கேட்ட பத்து இலட்சத்தை கொடுத்திடுறேன்னு தானே சொன்னேன். அப்புறம் எதுக்காக வீடியோவை என்னோட அம்மாவுக்கு அனுப்பின. அதைப் பார்த்துட்டு அவங்க தற்கொலை முயற்சி பண்ணி இப்ப வாழ்வா சாவான்னு இருக்காங்க தெரியுமா? உன்னை நம்பி காதலிச்ச பாவத்துக்கு இன்னும் எத்தனை சித்திரவதைகளைத் தான் நான் அனுபவிக்கணும். என்னைப் பார்த்தா பாவமா இல்லையா?” என்றவளின் வார்த்தையில் சிலையைப் போல் நின்றுவிட்டார் மாதங்கி.
“நீ பணம் தர லேட் ஆனா என்ன நடக்கும் னு உனக்கு ஒரு டெமோ காட்ட நினைச்சேன். அதனால் தான் உன்னோடஅம்மாவுக்கு மட்டும் அனுப்பினேன். இன்னும் ஒரு வாரத்தில் நான் கேட்ட பணம் வந்தாகணும். இல்ல யார்யாருக்கு அனுப்புவேன்னு எனக்கே தெரியாது.” குரூரமாகப் பேசினான்.
“நீயெல்லாம் மனுஷனே இல்லை. உன்னையும் நம்பி பொண்ணு கொடுத்திருக்காங்க பார் ஒருத்தங்க அவங்களைச் சொல்லணும். நானாச்சும் விட்டில் பூச்சி. விளக்கு வெளிச்சத்தில் ஈர்க்கப்பட்டு தானா வந்து நெருப்பில் விழுந்தேன்.
ஆனா உன் பொண்டாட்டியை அவளைப் பெத்தவங்களே கையை காலைக் கட்டி தீக்குளிக்குள் தூக்கிப் போட்டு இருக்காங்க. பெண் பாவம் பொல்லாதது மாயவா. என்னோட பாவம் உன்னைப் பிடிக்குதோ இல்லையோ உன் பொண்டாட்டியோட பாவம் உன்னைக் கண்டிப்பா பிடிக்கும் பார்.” அவன் சட்டையைப் பிடித்துக்கொண்டு பேச, மாதங்கியின் உயிர் அவர் வசம் இல்லை.
“போடி கல்யாணத்துக்கு முன்னாடியே கட்டில் வரை வந்த பத்தினியோட சாபம் எல்லாம் பலிக்காது. என் பொண்டாட்டி என்னை விட்டு போறது எல்லாம் கனவில் கூட நடக்காது. இல்லன்னா என் அண்ணன் கூட கட்டாயப்படுத்தி அவளை ஒன்னா இருக்க வைச்ச அடுத்த நாளே போய் இருக்க மாட்டாளா?” எனக் கேட்டு,நேரடியாக மாதங்கியின் நெஞ்சத்தில் இடியை இறக்கினான்.
“ச்சீ…” நந்தினி என்கிற அந்தப்பெண் முகத்தைச் சுளிக்க, “என்னடி, ரொம்பப் பண்ற? ஒழுங்கா பணத்தைக் கொடுத்துட்டு போறியா? இல்ல உன்னையும் அண்ணன்கிட்ட கொடுக்கவா?” எனக் கேட்டு இளக்காரமாக மாயவன் சிரிக்க, “என் குலசாமிக்கு சக்தின்னு ஒன்னு இருந்துச்சுன்னா இந்த உலகத்தில் யாருக்குமே கிடைக்காத தண்டனை உனக்குக் கிடைக்கும் டா.” என்றுவிட்டு சத்தம் இல்லாமல் அழத்துவங்கினாள்.
“உன் குலசாமிக்கு அத்தனை சக்தி இருந்தா உனக்கு சீக்கிரம் பணத்தைக் கொடுத்து என்கிட்ட இருந்து தப்பிக்க வைக்க சொல்லு.” இளக்காரமாக சொல்லிவிட்டு அங்கிருந்து தன் வீடு நோக்கி நடந்தான் மாயவன். அவனுக்கு தன் மாமியார் கிளம்பி சில நிமிடங்கள் மட்டுமே கடந்திருந்த நிலையில் அவரின் சொந்த யோசனையில் தன் வீட்டிற்கு அருகிலேயே தேங்கி நின்றிருப்பார், தன் பேச்சை எல்லாம் கேட்டு இருப்பார் என்கிற எந்த விதமான சந்தேகமும் வராமல் போனது தான் அவன் அகங்காரத்திற்கு கிடைத்த முதல் அடி.
மாயவன் சென்ற திசையைப் பார்த்தவண்ணம் பலவித கெட்ட வார்த்தைகளால் அவனை அர்ச்சித்துக்கொண்டிருந்த நந்தினி தன் தோள் மேல் யாரோ கை வைக்கவும் பதறிப்போய் திரும்ப அங்கே மாதங்கி நின்றிருந்தார்.
“நீ பேசிக்கிட்டு இருந்தது எல்லாம் உண்மையா மா?” என்க, எதற்கு என்று புரியாமல் போனாலும் ஆமாம் என்று தலையாட்டினாள் சின்னவள்.
உயிரே போவது போல் மார்பில் அழுத்தமான வலி ஒன்று வர, அப்படியே தரையில் விழப்பார்த்தார் மாதங்கி. நந்தினி அவரைப் பிடித்து நிழலான இடத்தில் அமர வைத்து தன் கைப்பையில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினாள்.
“மாயவன் ரொம்பக் கெட்டவனா மா. வீடியோ அது இதுன்னு சொன்னியே அதெல்லாம் என்னம்மா.” நீ சொல்லப் போகும் பதிலில் தான் என் உயிரே இருக்கிறது என்பது போல் பார்த்தவரைப் பார்க்க நந்தினிக்கு இரக்கம் சுரந்தது.
“நீங்க தான் அந்த கேடுகெட்ட பிறவிக்கு பொண்ணைக் கொடுத்ததா? ஏன் மா அந்தப் பொண்ணு நீங்க பெத்த பொண்ணு தானே. இல்ல குப்பைத்தொட்டியில் இருந்து எடுத்து வளர்த்தீங்களா? பொண்ணு கொடுக்கிறதுக்கு முன்னாடி மாப்பிள்ளை எப்படிப்பட்டவன் என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டீங்களா?” கோபமாகக் கேட்க,
“விசாரிச்சேனே மா. ஒரு இடம் விடாம அவனை நல்லவன்னு தானே சொன்னாங்க.” மாதங்கி பரிதாபமாய் சொல்ல, “என்னத்த சொன்னாங்க. எல்லாரையும் சரிகட்டி வைச்சிருப்பான் அந்த பொறுக்கி. என்கிட்ட கேட்டு இருந்தா அவன் வண்டவாளம் எல்லாத்தையும் தண்டவாளத்தில் ஏத்தி இருப்பேன். அவன் ஒரு கடைஞ்செடுத்த பொறுக்கி மா. ஒரு நாளின் இருபத்திநாலு மணி நேரத்தில் இருபது மணி நேரம் தப்பான எண்ணங்களோட தான் இருப்பான்.
அவனை நல்லவன்னு நினைச்சு காதலிச்சு, அவன் பேச்சில் மயங்கி அவனுக்கு இடம் கொடுத்து, அதனாலேயே அவன் என்னை விட்டுப் போயிடக்கூடாதுன்னு அவன் கேட்ட மாதிரியெல்லாம் வளைஞ்சு கொடுத்து மொத்தமா அவன்கிட்ட ஏமாந்து போனவ நான்.
உங்க பொண்ணுக்கும் அவனுக்கும் கல்யாணம் நடந்த நேரத்தில் தான் அவனோட உண்மை சுயரூபத்தை எனக்குக் காட்டினான். ஒவ்வொரு முறையும் என்னை வீடியோ எடுத்து வைச்சிருந்திருக்கான் பொறுக்கி நாய். நான் அமைதியா போகலன்னா அந்த வீடியோவை பரப்பிவிட்டுடுவேன்னு பயம் காட்டினான். அதனால் அமைதியா போயிட்டேன். இத்தனை மாசம் கழிச்சு அந்த வீடியோ காட்டி மிரட்டி பத்து இலட்ச ரூபா பணம் கேட்கிறான். கந்துவட்டிக்கு வாங்கித்தான் கொடுக்கணும் போல.”
“மாயவனோட ஒரு பொண்ணு வாழவே முடியாதும்மா. ஒரு பொண்ணா உங்க பொண்ணோட நல்லதுக்காக சொல்றேன். அவங்களை உங்ககிட்ட கொண்டு வந்திடுங்க. அந்த பொறுக்கியோட இருந்தா அவன் என்ன வேண்ணா பண்ணுவான். அவன் சொன்னதை முழுசா கேட்டு இரு,ந்தீங்கன்னா இந்த உண்மை உங்களுக்கே புரியும். அவனுக்கும் அவன் அண்ணிக்குமே தப்பான தொர்பு இருக்கு.” என்று நிறுத்த ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார் மாதங்கி.
“இதையெல்லாம் உங்களுக்கு நான் தான் சொன்னேன்னு சொல்லாதீங்க மா. அப்புறம் எனக்கு பெரிய பிரச்சனையாகிடும். அவன் ஒரு நாகப்பாம்பு. அவனோட பாதையில் இருந்து விலகிப்போறது தான் நமக்கு நல்லது.
நீங்க தனியா போனா அவன்கிட்ட எந்த வேலையும் ஆகாது. உங்க வீட்டு ஆம்பிளைங்ககிட்ட பேசி அவங்களோட போய் பாதுகாப்பா உங்க பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்திடுங்க.” என்றுவிட்டு நந்தினி நடக்க ஆரம்பிக்க, பிரம்மை பிடித்தது போல் நெடுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தார் மாதங்கி.