வரம் 17
மாதங்கிக்கு மனது படபடவென அடித்துக்கொண்டிருந்தது. மகளைத் தானே புதைகுழியில் தள்ளிவிட்டுவிட்டோமே என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவர் என்ன நினைத்தாரோ நவநீதனுக்கு அழைத்து, “மாயவனைப் பத்தி நான் விசாரிக்க சொன்ன இடத்தில் எல்லாம் விசாரிச்சியா தம்பி.” சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
“அந்த நேரம் நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன் அத்தை. அதனால் என்னோட ப்ரண்டு தான் அவனைப் பத்தி விசாரிச்சான். ஆனா முழுசா விசாரிச்சுட்டான். எல்லோரும் நல்லபடியா தான் சொன்னாங்களாம். ஆனா இத்தனை நாள் கழிச்சு எதுக்காக அத்தை இப்ப இதைப் பத்தி கேட்கிறீங்க.” சாதாரணமாகக் கேட்டான் நவநீதன்.
மனது விட்டுப்போன நிலையில், “என்னை அத்தையாவும், அவளை உன் சொந்தமாவும் நினைச்சிருந்தா இப்படி அவளோட எதிர்காலத்தை யாரோ ஒருத்தரை நம்பி ஒப்படைச்சு இருப்பியா தம்பி. அவளை விட, அவளோட கல்யாணத்தை விட உனக்கு பெரிய வேலை இருந்திருக்குன்னா என் பொண்ணு உன் சொந்தமாவே தெரியல இல்ல.” கரகரத்த குரலில் கேட்க, “அத்தை என்ன பேசுறீங்க நீங்க?” கோபமாய் கேட்டான் நவநீதன்.
“உன்னோட மெத்தனத்தால் இன்னைக்கு என் பொண்ணு நரகத்துக்குள்ள விழுந்து கிடக்கிறா தெரியுமா? கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுத்த மாதிரின்னு சொல்லுவாங்க. நான் அருமை பெருமையா பொண்ணை வளர்த்து கொஞ்சம் கொஞ்சமா கொல்லுற இரத்தக்காட்டேரிகிட்ட இல்ல கொடுத்துட்டேன்.
எப்படி அவளை அந்த அரக்கன்கிட்ட இருந்து காப்பாத்த போறேன். அவளோட எதிர்காலத்துக்கு என்ன செய்யப்போறேன். என்னை மாதிரியே என்னோட பொண்ணும் வாழ்க்கையைத் தொலைச்சுட்டு நிக்கிறாளே.” என தன் போக்கில் புலம்பிய மாதங்கி எப்போது அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்தார், எப்போது நடக்கத்துவங்கினார், எப்போது கனரக வாகனங்கள் வந்து செல்லும் சாலையில் பயணப்பட்டார் என தெரியாமல் வந்திருக்க, வேகமாக வந்த கார் ஒன்றினால் தாக்கப்பட்டு நெடுந்தொலைவு தரையில் இழுட்டு இரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த அடியோடு மரணகாயங்களோடு விழுந்தார்.
அழைப்பின் எதிர்பக்கம் இருந்த நவநீதனுக்கு விபத்து நடந்த சத்தம் கேட்க பதறிப்போய் தாய்க்கு அழைத்து அத்தை சென்ற இடத்தை விசாரித்து மாயவன் இல்லம் நோக்கி விரைந்து சென்றான். வீட்டை நெருங்கும் முன்னரே சாலையில் பெருகிக் கிடந்த காய்ந்த இரத்தத்தைப் பார்த்து அது தன் அத்தையின் இரத்தம் எனப் புரிந்துகொண்டு அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்து அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு விரைந்தான்.
மாதங்கி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயிர் பிழைப்பது கடினம் என்று சொல்லிவிட நவநீதனுக்கு மூச்சடைத்துப் போனது. அவன் காட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவனுக்கு அவனின் அத்தையும், அத்தை மகளும் மிகவும் பிரியத்துக்குரியவர்கள்.
கனத்த மனதோடு வீட்டிற்கு தகவல் கொடுத்தவன் மாயவனுக்கும் தகவல் கொடுக்க, “இதோ வரேன் தம்பி.” என்றவன் அடுத்த இரண்டு நாட்கள் கடந்த பின்னாலும் வரவில்லை துவாரகாவையும் அனுப்பி வைக்கவில்லை. இவர்கள் அனைவரும் மாற்றி மாற்றி அழைத்துப் பார்க்க ஸ்சுவிட்ச் ஆப் என்றுதான் வந்தது.
வீட்டிற்கு சென்று பார்த்தால் வீடு பூட்டி இருந்தது. மாதங்கிக்கு விபத்து நடந்ததைப் பற்றி கேள்விப்பட்டதும் பத்மன் யோசனையின் பேரில் அனைவரும் சுரேகாவின் பிறந்தவீட்டிற்கு பயணப்பட்டிருந்தார்கள். துவாரகாவுக்கு மட்டும் இன்னும் விஷயம் தெரியப்படுத்தப்படாமல் இருந்தது.
இப்போது அவள் இருக்கும் மனநிலையில் தன் பிறந்த வீட்டு சொந்தங்களைப் பார்த்துவிட்டால் தங்கள் கையை விட்டு சென்றுவிட வாய்ப்பு அதிகம். அதைஅனுமதிக்கக் கூடாது என்பதற்காக தான் இந்த திடீர் பயண ஏற்பாடு.
மாதங்கிக்கு விபத்து நடந்த இடத்தைக் கடந்து போகையில் சாலையில் சிந்திக்கிடந்த இரத்தத்தைப் பார்த்து அந்த இரத்தத்துக்கு உரியவர் யாராக இருந்தாலும் அவர் பிழைத்துக்கொள்ள வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டாள் துவாரகா. அது அவள் சொந்த இரத்தம் என்று தெரிந்திருந்தால் அந்த நேரமே தன் அருகில் இருக்கும் அரக்கர்கள் இருவரையும் கொன்று போட்டு கிளம்பி இருப்பாள்.
அவள் உடலின் வலுவை தன்னை அவள் அறைந்ததிலே கண்டுகொடிருந்தான் மாயவன். மனபலம் இன்றி உடல்பலம் சாத்தியம் இல்லை. மனபலம் கொண்டவர்களை வெகுகாலத்திற்கு இன்னொருவரின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது. இப்போது குழப்பத்திலும், பயத்திலும், நடந்ததை தடுக்க முடியாத அருவருப்பிலும் அமைதியாக இருக்கிறாள். ஆனால் என்று இது எல்லாவற்றையும் தாண்டி அடுத்து என்ன என்று யோசிக்கிறாளோ அன்று அவள் தங்களை விட்டு செல்லத் தான் வாய்ப்புகள் அதிகம். அதற்கு அனுமதிக்கக்கூடாது. அவள் எப்போதும் தங்கள் காலடியிலே இருக்க வேண்டும். அதற்கு அவளைத் தன் குழந்தைக்கு தாயாக்க வேண்டும். குறைந்தபட்சம் அது வரைக்குமாவது அவளுக்கும் அவள் பிறந்த வீட்டு சொந்தங்களும் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் அந்த கயவர்களின் ஏற்பாடாக இருந்தது.
இரண்டு நாட்கள் ஆறு நாட்களாகியது, தன் சொந்தங்களை கடைசி முறையாக பார்க்க நினைத்தாரோ இல்லை தன் மனதிற்குள் அழுத்திக்கொண்டிருக்கும் விஷயங்களை யாரிடமாவது கொட்டிவிடத் தீர்மானித்து இருந்தாரோ என்னவோ கடைசி முறையாக கண்களைத் திறந்தார் மாதங்கி.
காத்தவராயன், கண்ணப்பன், அஞ்சனை, நவநீதன் நால்வரும் சுற்றி நிற்க மாதங்கியின் கண்கள் அங்கு இல்லாத மகளைத் தான் தேடியது. “துவாரகா இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தா. இப்ப தான் உங்களுக்கு மாத்து துணி எடுக்க போய் இருக்கா.” என நாத்தனாரின் மனம் நோகக் கூடாது என்பதற்காக பொய் சொன்னார் அஞ்சனை.
காத்தவராயன் மகள் அருகேயே அமர்ந்திருந்தார். அவருக்கு மகள் மீது எப்போதும் தனிக்கரிசனை உண்டு. பெரும்பாலான நேரங்கள் அதை வெளிக்காட்டிக்கொண்டதில்லை அவ்வளவு தான்.
நவநீதன் கல்யாணம் பார்க்கணும், துவாரகாவுக்கு சீமந்தம் குழந்தைப்பேறுன்னு பார்க்கணும் என வரிசையாய் சுபநிகழ்வுகளை அடுக்கி தங்கைக்கு உயிர்வாழும் ஆசையை தூண்டிவிட்டுக்கொண்டிருந்தார் கண்ணப்பன். மாதங்கியின் மனம் அந்த நேரத்தில் என்ன நினைத்ததோ நவநீதனை இமைவெட்டாமல் பார்த்தவர் சில நொடிகளில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தார். அவர் தன்னிடம் என்னவோ சொல்ல நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டவன், “இன்னைக்கு நைட் அத்தையோட துணைக்கு நான் இருக்கேன். நீங்க வீட்டுக்கு போயிட்டு வாங்க.” என்றான்.
மருத்துவமனையில் இரவு நேரத்தில் ஒருவர் தான் தங்க முடியும் என்பதால் சரியென்று ஏற்றுக்கொண்டனர் அனைவரும். மீண்டும் மாதங்கி கண்விழிப்பதற்காக காத்திருந்தான் நவநீதன். மாதங்கியும் கண்விழித்தார். முன்பை விடவும் பலகீனமாக இருந்தார். எமன் கண்ணுக்குத் தெரிந்தார். பூமியில் தன் நேரம் முடிந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டார். மகளை நினைத்து கண்ணீர் வந்தது.
அதைத் துடைத்து விட்டு, “உங்க மனசுக்குள்ள கிடந்து என்ன அத்தை அழுத்துது. என்கிட்ட சொல்லுங்க. எதுவா இருந்தாலும் நான் சரிபண்றேன்.” உத்தரவாதம் கொடுக்க, உடலில் சிறிது கூட பலம் இல்லாத அந்த நிலையில் கூட ஐவி மாட்டப்பட்டிருந்த தன் கரத்தை மிகவும் சிரமப்பட்டு அவனை நோக்கி நீட்டினார்.
“என்ன அத்தை.” என்றவண்ணம் நீட்டிய கரங்களை நவநீதன் பிடிக்க, “என் பொண்ணைக் காப்பாத்து நவநீ. அந்த அரக்கங்க கிட்ட மாட்டிக்கிட்டு என் பொண்ணு ரொம்ப கஷ்டப்படுறா. அவளைக் காப்பாத்தி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடு. என்னை மாதிரி என் பொண்ணு வாழ்க்கையும் ஆகக் கூடாது.” என்றார்.
“அவளுக்கு அந்த வீட்டில் என்ன கஷ்டம் னு தெரியாது. ஆனா அவளுக்கு துணையா நானும், நம்ம குடும்பமும் இருக்கு. கஷ்டப்பட்டு அவ ஒன்னும் அங்க வாழ வேண்டிய அவசியம் இல்லை. நாங்க அவளைப் பார்த்துப்போம்.” என்க, “அவளை நம்ம வீட்டு ஆளுங்ககிட்ட ஒப்படைச்சிடாத நவநீ. என் வாழ்க்கையை வீணாக்கின மாதிரி அவ வாழ்க்கையையும் வீணாக்கிடுவாங்க.” திக்கித்திணறி பேசினார்.
“என்னத்தை சொல்றீங்க?” என்றவனுக்கு இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை.
“எல்லோரும் சொல்ற மாதிரி நான் யார்கிட்டையோ ஏமாந்து போகல நவநீ. என் அப்பா உன் தாத்தா சொன்னவரை தான் கல்யாணம் பண்ணேன். அவரோட தான் வாழ்ந்தேன். துவாரகா முறை தவறி பிறந்தவ கிடையாது. அவளுக்கும் அப்பா இருக்கார். அதுவும் இந்த ஊரிலேயே. இந்த உண்மைகள் வெளியே தெரிய விடாம பண்ணி, எனக்கு கெட்டுப்போனவங்கிய பெயரையும் என் பொண்ணுக்கு அப்பா பேர் தெரியாதவங்கிற பேரையும் வாங்கிக்கொடுத்தது இருக்கார் உங்க தாத்தா.
அப்பாவுக்காகன்னு இதுநாள் வரை அமைதியா இருந்துட்டேன். எப்ப என்னோட அமைதி என் பொண்ணு வாழ்க்கையையே பாதிச்சிடுச்சுன்னு புரிஞ்சதோ இதுக்குமேல அமைதியா இருக்கிறதில் அர்த்தம் இல்லை.” என்றவர் தன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை சொல்ல ஆரம்பித்தார்.
காத்தவராயனுக்கு உடன்பிறந்தவர்கள் என்று யாரும் கிடையாது. சித்தப்பா மகள் மலர்கொடியின் மீது அதீத அன்பு கொண்டிருந்தார். உடன்பிறந்த தங்கை இருந்தால் கூட இத்தனை அன்பு வைத்திருப்பாரா என்று ஊரார் சந்தேகப்படும் அளவிற்கு இருந்தது காத்தவராயன் மற்றும் மலர்க்கொடியின் உறவு.
மலருக்கு தன் நெருங்கிய நண்பனைத் திருமணம் பேசியதில் ஆரம்பித்து அந்த திருமணத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்தது காத்தவராயன் தான்.
எந்தத் தங்கை நல்லபடியாக வாழ வேண்டும் என்று தினம் தினம் இறைவனிடம் வேண்டிக்கொண்டாரோ, அந்த தங்கை திருமண முகூர்த்தத்திற்கு ஒருமணி நேரம் இருக்கும் போது, வேறு ஒரு ஆடவனை அழைத்துக்கொண்டு வந்து அவரைக் காதலிப்பதாகவும் வாழ்ந்தாலும் செத்தாலும் அவரோடு தான் என்று அழத்துவங்க, தங்கையின் மீது பாசம் கொண்ட அண்ணனால் வேறு யோசிக்க முடியவில்லை.
ஒன்றும் ஒன்றும் ஒன்று என்று தவறான கணக்கு போட்டார். மனதைக் கல்லாக்கிக்கொண்டு தன் நண்பன் மீது பொய்யான பழி சுமத்தி திருமணத்தை நிறுத்திவிட்டு, சித்தப்பாவை சமாதானம் செய்து அதே மேடையில் தங்கைக்கும் அவள் விரும்பியவனுக்கும் திருமணம் செய்து வைத்தார்.
திருமணம் முடித்த சில நாள்களில் நண்பனைத் தனியே சந்தித்து நிலைமையைச் சொல்லி அவரைச் சாந்தப்படுத்தவும் காத்தவராயன் மறக்கவில்லை.
ஒரு வருடம் கழிந்த நிலையில் மலர்க்கொடியின் காதல் கணவன் விபத்தில் இறந்து போக, தங்கையின் வாழ்வுக்காக காத்தவராயன் மறுபடி வந்து நின்றது அதே நண்பனிடம் தான். சில நாள்கள் யோசிப்பதற்கு நேரம் கேட்ட மனிதரும் சம்மதித்து விட, மலர்க்கொடியின் மறுமணம் காத்தவராயனின் நண்பனான சுந்தரத்துடன் நிகழ்ந்தது. அவர்களுக்கு பிறந்த மகன் பைரவன்.
நடுவில் சுந்தரம் மற்றும் காத்தவராயன் இருவருக்கும் நடந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனையின் காரணமாக பல வருடமாக இரு குடும்பங்களுக்கும் நடுவில் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய் இருந்தது.
இருபது வயதான மாதங்கி படித்துக்கொண்டிருந்த அதே கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிய புதிதாக வந்து சேர்ந்திருந்தான் பைரவன். மகளை அழைத்துச் செல்ல வரும் காத்தவராயன் பைரவனை அடையாளம் கண்டு பேச, அவன் மூலமாக மீண்டும் நண்பர்களின் உறவு துளிர்த்தது.
காத்தவராயனுக்கு பைரவனின் நற்பண்பு அதிகம் பிடித்தது. ஒவ்வொரு நாளும் தன்னோடு நின்று பேசிவிட்டுச் செல்லும் மனிதன் தன் அருகே அழகுப் பதுமையாக நின்றுகொண்டிருக்கும் மகளை கண்ணெடுத்தும் பார்க்கவில்லையே. இந்தக் காலத்தில் இப்படியும் ஆண்மகனா என சிலாகித்துப் போனார்.
மகளுக்கு அவனைக் கேட்கலாமா என அவர் யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், முந்திக்கொண்ட சுந்தரம் மகனின் திருமணத்திற்கு வரவேண்டும் என்று பத்திரிக்கை வைத்துவிட்டிருந்தார்.
இது தான் இறைவன் சித்தம் போலும் என ஏற்றுக்கொண்ட காத்தவராயன் மகளோடு சேர்ந்து அந்தத் திருமணத்திற்கு வந்திருந்தார். திருமணம் முடிந்தததும் அங்கிருந்தே மாதங்கி கல்லூரி சுற்றுலா கிளம்புவதாக ஏற்பாடு.
கோவிலுக்கு வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக பைரவனுக்கு பார்த்து வைத்த பெண் ஓடிப்போய் இருக்க, சுந்தரம் மற்றும் அன்புத் தங்கை வேண்டுதலுக்கு இணங்கி மாதங்கியை மணமகளாக அமர வைத்தார் காத்தவராயன். என்ன நடக்கிறது என்பது புரியும் முன்னரே செல்வி மாதங்கி திருமதி பைரவனாக மாறி இருந்தாள்.