வரம் 23
திருமணம் முடித்து அனைவரும் வெளியே வர, கோவிலை நிறைத்திருந்த ஊர் மக்கள் தீண்டத்தகாதவர்களைப் போல் இவர்களை விட்டு ஒதுங்கி நின்று தங்களுக்குள் கண்டதையும் பேசினர்.
“கலிகாலம் னு சொல்றது சரியா தான் இருக்கு. காசும் பணமும் கொட்டிகொடுத்தா கடவுள் கூட சில கேடு கெட்டவங்களை மன்னிச்சு, ஜோரா கல்யாணம் பண்ணி வைக்கிறார். இந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல.”
“ஒருத்தன் கட்டின தாலியோட வேற ஒருத்தனோட வாழுறது தானே இவளுக்குப் பிடிக்கும். நவநீதன் கையால் தாலி கட்டிக்கிட்டு யாரோட வாழப்போறாளாம்.”
“மஞ்ச தாலியும், காஞ்சிப் பட்டும் ஊருக்குள்ள மரியாதையைக் கொடுத்திடும் னு யாரோ தப்பா சொல்லிக் கொடுத்திருக்காங்க. எப்படி ஜோடிச்சாலும் சூர்ப்பனகை சீதை ஆகிட முடியாது.”
“முதல் கட்டிக்கிட்ட தாலிக்கு இவ எந்த அளவு உண்மையா இருந்தான்னு இந்த ஊருக்கே தெரியும். இந்த தாலி எவ்வளவு நாள் நீடிக்குதுன்னு பார்ப்போம்.”
“கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு வருஷம் ஒன்னா வாழ்ந்து பார்த்து இருக்காங்க இல்ல. எல்லா வகையிலும் ஒருத்தருக்கு இணை இன்னொருத்தர் தான்னு சரியா புரிஞ்சுக்கிட்டு இருந்திருப்பாங்க.”
“பஞ்சாயத்து கொடுத்த ஒரு வருஷ தண்டனை முடிஞ்சதும் திண்ணக்கமா வெளியே வந்திருக்காங்க. இவங்களை நாம சேர்த்துக்கிட்டா அடுத்த தலைமுறை பசங்களுக்கு தப்பான உதாரணம் ஆகிடும். என்னைக்கும் இவங்களை ஏத்துக்க கூடாது.” என்று ஆளாளுக்கு ஒன்று பேச, அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அங்கிருந்த ஒரு தூணில் சாய்ந்து அழத்துவங்கினாள் துவாரகா.
மாலையைக் கழட்டி அருகே நின்றிருந்த பரணியிடம் கொடுத்த நவநீதன் துவாரகா அருகே போய் அவள் தோளில் கை வைக்க, திரும்பி ஆக்ரோஷமாக அவனைப் பார்த்தவள், “பார்த்தீங்களா? எப்படி பேசுறாங்கன்னு பார்த்தீங்களா? இதுதான் நீங்க எனக்கு அமைச்சு கொடுத்த நல்ல வாழ்க்கை. இப்படி ஒரு கல்யாணத்தை நான் உங்ககிட்ட கேட்டேனா? என் நிம்மதி மொத்தத்தையும் பறிச்சுட்டீங்களே.” என்று அவன் மார்பிலே அடித்து அழுதாள் துவாரகா.
அவளைச் சமாளித்து அங்கிருந்து அழைத்துச் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது மற்ற அனைவருக்கும். அழுது அழுது அரற்றியவள் ஒருகட்டத்தில் தன்னையும் அறியாமல் உறங்கிவிட, வெளியே வந்து இடுப்பில் கையை வைத்தவண்ணம் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்த சூரியனை வெறித்த பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் நவநீதன்.
மகனை நெருங்கி அவன் தோளில் கை வைத்தார் அஞ்சனை. “இந்த ஒரு வருஷத்தில் நான் வாங்காத பேச்சா மா. இவ எப்பவாச்சும் தான் வெளியே வரா. நான் தினம்தினம் போறேன். பலரை சந்திக்கிறேன். தினமும் எவனாவது ஒருத்தன் என்னைக் கேலி செய்யாமல் போறது இல்லை. ஒவ்வொன்னுக்கும் நான் இவளை மாதிரி அழுதுகிட்டு இருந்தா சரியாகிடுமா?
மத்த எல்லா விஷயங்களிலும் சரியா இருக்கா. ஆனா இந்த விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு சென்சிட்டிவ்வா இருக்கான்னு தெரியல. நடந்தது அவளோட நல்லதுக்காகன்னு புரிஞ்சிருந்தும் அதை மறந்து கடந்து வராம அதுக்குள்ளேயே உளன்றுக்கிட்டு இருக்கா. இவளை என்ன செய்யுறது.” புலம்பினான்.
“பொண்ணுங்க இயல்பிலேயே மென்மையானவங்க டா. எத்தனை தான் மனதைரியம் பெற்றவங்களா இருந்தாலும் செய்யாத தப்புக்கு பழி சுமக்க முடியாது. துவாரகா சுமக்கிற வலி அதிகத்திலும் அதிகம் டா.
என்ன இருந்தாலும் நீ அன்னைக்கு அப்படி செய்திருக்கக் கூடாது. அது ஒருநாளோட முடியுற காரியம் இல்ல. உங்களோட பசங்க வளர்ந்து பெரியவங்க ஆகுற வரைக்கும் பேசப்படுற விஷயங்கள் அதெல்லாம்.” என்க, தலைமுடியைக் கோதிக்கொடுத்து பெருமூச்சுவிட்டான் நவநீதன்.
எல்லாம் புரிந்ததோ இல்லையோ. தன்னைப் போல் அவள் இல்லை. தன்னால் தாங்கிக்கொள்ளக் கூடிய பேச்சுக்கள், கேலிகிண்டல்களை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது வரை புரிந்துகொண்டான். எப்படியாவது அவளை சரிசெய்ய வேண்டும் என்று மனதிற்குள் சூளுரைத்துக்கொண்டான்.
சில நாட்கள் கடந்திருந்தது. திருமணத்திற்கு முன்பு இருந்த உற்சாகம் கூட துவாரகாவிடம் இல்லை. நவநீதனுக்கு எரிச்சலோடு சேர்த்து, கோபமும் வந்தது. எப்படியெல்லாமோ தன் வாழ்க்கையை நினைத்து வைத்திருந்தான். இப்படி மண்ணைப் போல் செல்வதை நினைத்து கோபம் வந்தது அவனுக்கு. அடுத்தவர்கள் பேசுவதை நினைத்து சோகம் கொண்டால் வாழ்வு முழுக்க சோகத்திலேயே கழிக்க வேண்டியது தான் என்று கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் சென்றான்.
இருவரும் இன்னமும் ஓட்டுவீட்டில் தான் இருந்தார்கள். அவர்களுக்குள் நல்ல பிணைப்பு வர அந்த ஒற்றை அறை வாழ்க்கை அவர்களுக்கு உதவி செய்யும் என்று கண்ணப்பன் சொல்ல அஞ்சனைக்கும் அது தான் சரி என்று தோன்றியது.
அடுத்த சில நாட்களில் கொஞ்சம் தெளிந்திருந்தாள் துவாரகா. நவநீதன் சற்றே சந்தோஷம் கொள்ள, அதற்கு எப்படி அனுமதிப்பேன் என்பது போல சொத்து வழக்கு பிரச்சனையை மொத்தமாக முடித்து வந்திருந்த மாயவன், தன் ஆட்டத்தை ஆரம்பித்திருந்தான்.
ஏமாற்றிய பணத்தை வட்டியோடு சேர்த்து திரும்பக் கொடுப்பதாக சொன்ன பின்னாலும் கூட எதிராளி ஒப்புக்கொள்ளாமல் இருந்ததால் தான் ஒருவருடம் வீணாகிப் போய் இருந்தது. இப்போது எல்லாம் சுமூகமாகி இருக்க விடுதலையாகி இருந்தான் அரக்கன்.
இத்தனை நாட்கள் தான் சிறைக்குள் இருந்ததும் அதற்கு நேர்மாறாக துவாரகா நவநீதனின் மனைவியாக சகல சௌகர்யமாக இருப்பதும் அவனை மிகவும் மோசமாக தூண்டிவிட்டது.
அவர்களைப் பழிவாங்க ஆயிரம் அணுகுண்டுகளை விட மோசமான ஆயுதமான சமூக வலைதளத்தைப் பயன்படுத்த நினைத்தான். தனக்கும் துவாரகாவிற்கும் திருமணம் ஆன புதிதில் எடுத்த புகைப்படத்தையும், இப்போது அவளுக்கும் நவநீதனுக்கும் நடந்த திருமணப் புகைப்படத்தையும் இணைத்து தன் மனைவி தனக்குத் துரோகம் செய்து தன்னை விட்டுவிட்டு அவள் முன்னாள் காதலனுடன் சென்றுவிட்டாள் என்று உருக்கமாகப் பதிவு போட்டிருந்தான். அதைப் பார்த்த பலர் அவனுக்கு ஆதரவாக கருத்துகள் வெளியிட்டு இருக்க, மாயவனுக்கு தைரியம் அதிகமானது.
மேலை நாடுகளில் சோஷியல் மீடியா புல்லிங் மிகவும் அதிகம். இதைத் தடுக்க வேண்டிய காவலர்களே இதற்கு மிகவும் பயம்கொள்கிறார்கள் என்று படித்தபோது அதை நம்பாத மாயவன் கேரளாவில் ஒரு மனிதர் சமூகவலைதளத்தில் தன்னைப் பற்றி தவறாக பரவிய செய்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட விஷயம் கேள்விப்பட்டதும் தான் இதன் தீவிரத்தைப் புரிந்துகொண்டான்.
பயன்படுத்த வேண்டிய விதத்தில் சமூக வலைதளத்தை பயன்படுத்தி நாளும் பொழுதும் அதில் குடியிருப்பவர்களை சற்றே தூண்டிவிட்டால் போதும் அவர்களே துவாரகாவையும் நவநீதனையும் தொடர்ந்து தொந்தரவு செய்து தற்கொலை வரை கொண்டுசென்றுவிடுவார்கள் எனக் கணித்து தன்வேலையை ஆரம்பித்தான்.
இரண்டாவது புகைப்படமாக மனைவி விட்டுச்சென்ற துக்கத்தில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றது போல் பொய்யாய் ஒரு மருத்துவமனை காட்சியை உருவகப்படுத்தினான். முன்பின் பார்த்தே இராத இவனுக்காக பலர் தங்களுடைய அனுதாபங்களை தெரிவிக்க, சிலர் ஆகச்சிறந்த ஆலோசகராக அறிவுரை சொல்ல, இன்னும் சிலரோ இவன் தன்உடலைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்தனர். மாயவனுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்தது. அதனால் இதை அடுத்த கட்டத்திற்குகொண்டு போக நினைத்தான்.
துவாரகா தன்னோடு தன் வீட்டில் இருந்த நேரத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை விடிய விடிய பார்த்தான். அதில் அவனுக்குத் தேவையான காட்சிகளை மட்டும் வெட்டி எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட ஆரம்பித்தான்.
முதல் வீடியோவில், கிச்சனில் வேலை செய்துகொண்டிருந்தாள் துவாரகா. சிரித்தபடி மாயவன் உள்ளே வரும் போதே கைக்கு எட்டிய காய்கறிகள் அனைத்தையும் அவன் மீது தூக்கி எறிந்தவள் அவன் சமாதானம் செய்ய அருகே வந்ததும் அவன் கரத்தைப் பிடித்து பலமாக கடித்து வைத்திருந்தாள்.
அந்த வீடியோவின் கீழே, ‘பெண்களே உங்களுக்கு வேறு ஒருவரைத் தான் பிடித்திருக்கிறது என்றால் தயவுசெய்து இன்னொருவருடன் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாதீர்கள். எதிரில் இருக்கும் ஆணும் உங்களைப் போல் மென்மையான மனம் படைத்தவர்கள் தான்.’ என்று கேப்ஷன் கொடுத்திருந்தான்.
வீடியோ மாயவனே எதிர்பாரா வண்ணம் வைரல் ஆனது. ஆண்கள், பெண்கள், பெரியவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் துவாரகாவை திட்டி வைத்திருந்தார்கள்.
நிஜத்தில் அந்த வீடியோ துவாரகா கனவிலும் எதிர்பாரா துர்சம்பவம் நடந்து முடிந்த அடுத்த நாள் நடந்தது. இதற்கு சற்று முன்னர் தான் பத்மன் வந்து துவாரகாவை மோசமாக வர்ணித்து அவள் மனதைக் காயப்படுத்தி போய் இருந்தான். அண்ணன் வாலாக பின்னாலே தம்பி வந்ததும், எல்லாவற்றுக்கும் இவன் தானே காரணம் என அவன் மீது கோபத்தைக் காட்டி இருந்தாள் துவாரகா. முன்னதை வெட்டி பின்னதை மட்டும் போட்டு தான் ஒரு ஆகச்சிறந்த அப்பாவி என்று காட்டி இருந்தான் மாயவன்.
இரண்டாவது வீடியோவாக நடு ஹாலில் துவாரகா பத்மனை சப்பாத்திக்கட்டையால் அடித்த வீடியோ பதிவிட்டிருந்தான். அதுவும் வைரல் ஆனது. துவாரகாவிற்கு மேலும் கெட்ட பெயரை வாங்கிக்கொடுத்தது.
நிஜத்தில் சப்பாத்தி தேய்த்துக்கொண்டிருந்தவளை தவறாகத் தொட்டதால் காட்டிய எதிர்வினை அது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஹாலில் நிற்க வைத்து மாயவன் துவாரகாவினை பெல்ட்டினால் அடி வெளுத்ததும் பத்மனும் சுரேகாவும் அதை திரைப்படம் போல் பார்த்து ரசித்ததும் துவாரகா மட்டுமே அறிவாள்.
இதெல்லாம் பொது மக்களுக்குப் புரிய வேண்டுமே. தன் சொந்த நிலை என்ன, தான் தன் வீட்டு நபர்களுக்கு நேர்மையாக நடந்துகொள்கிறோமா, வெளியிடத்தில் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையை வீட்டுப் பெண்களுக்கு கொடுக்கிறோமா என எந்த சுயபரிசோதனையும் செய்யாமல், சமூக வலைதளத்தில் காவலனாக, வக்கீலாக, நீதிபதியாக, மருத்துவராக, ஆலோசகராக என பல அவதாரங்கள் எடுப்பார்கள். அப்படியாவனர்களால் துவாரகாவிற்கு மோசமான வசைகள் கிடைத்தது.
மாயவனுக்கு கொண்டாட்டமாகிப் போக, அடுத்தடுத்த வீடியோக்களை மிக வேகமாக வெளியிட்டான். மாயவன் துவாரகாவின் கன்னத்தில் முத்தமிட்டதும் ஒவ்வாமையுடன் ஓடிச்சென்று அவள் முகத்தை கழுவும் வீடியோ மிகவும் வைரலானது. பெண்களுக்கு நடுவில் கூட துவாரகாவிற்கு மிகவும் கெட்ட பெயர் கிடைத்தது.
சுரேகாவை அடித்தது, வீட்டில் பொருட்களைப் போட்டு உடைத்தது. கத்தியின் கூர்மையை பரிசோதிப்பது என பல வீடியோக்களை தவறான கோணத்தில் போட, அத்தி பூத்தாற் போல் சிலர் மாயவனை சந்தேகிக்க ஆரம்பித்தனர்.
“இந்தப் பொண்ணு பிரச்சனை பண்ற காட்சி மட்டும் வருது முன்ன பின்ன உள்ள வீடியோ பார்த்தா தானே என்ன பிரச்சனைன்னு தெளிவா புரியும்.”
“கிச்சன் ஹாலில் சிசிடிவி சரி. எதுக்காக பெட்ரூமுக்குள் சிசிடிவி வைக்கணும்.”
“எனக்கு என்னவோ இதெல்லாம் தப்பா படுது. இந்த வீடியோ பார்க்கும் போலீஸ் யாராவது நேரில் போய் பார்த்து விவாரிச்சா தான் உண்மை தெரியும்.” என்பது போன்ற சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரவும் சுதாரித்த மாயவன், வழியை மாற்றினான். பணத்தை கொட்டிக்கொடுத்து ஏஐ தொழில்நுட்பம் தெரிந்த ஒருவனைப் பிடித்தான்.
துவாரகா, நவநீதன் புகைப்படங்களை அவனிடம் கொடுத்து தான் சொன்னது போல சில வீடியோக்களை தயார் செய்து வாங்கினான். வீட்டில் யாரும் இல்லாத நேரம் நவநீதன் வீட்டிற்கு வருவது போலவும் அவனுக்கு கதவு திறந்து விடும் துவாரகா ஹாலில் வைத்து அவனைக் கட்டியணைப்பது போலவும், முத்தமிடுவது போலவும், ஒன்றாக படுக்கை அறைக்குள் செல்வது போலவும் தத்ரூபமாக வந்திருந்த வீடியோக்களை பார்த்து பார்த்து ரசித்தவன், ஒவ்வொன்றாக அதை பதிவேற்றம் செய்தான். ஆனால் அதிலும் உஷாராக இருந்தான்.
வீடியோ பதிவேறிய சில நிமிடங்களில் அதை டெலிட் செய்துவிட்டு, தன் முன்னாள் மனைவியும் அவளின் இந்நாள் கணவனும் தான் பதிவேற்றும் ஆதாரங்களை ஆள் வைத்து தூக்குகிறார்கள் என புகார் வாசித்தான்.
பேய்க்கு போட்டியாக சமூகவலைதளத்தில் இருக்கும் சிலர் அந்த வீடியோக்களை பார்த்திருந்து மற்றவர்களிடம் தகவலாக பரப்ப, மாயவன் நினைத்தது போலவே அவன் துவாரகா மேல் பூசிய சேறு வீடியோவாக இல்லாமல் செய்தியாக பலருக்கு சென்றது.
கணவனுக்கு துரோம் செய்தவர்களுக்கு கருடபுராணத்தில் என்ன மாதிரியான தண்டனைகள் கிடைக்கும் என்பதில் ஆரம்பித்து பல ட்ரால் வீடியோக்களில் துவாரகாவின் முகம் பயன்படுத்தப்பட்டது. விலைமாது என்பதில் ஆரம்பித்து பல மோசமான கெட்ட வார்த்தையால் அவளைப் போட்டு தாளித்து எடுத்தனர் சமூகவலை தளப் போராளிகள்.
அச்சகத்தில் நவநீதனுக்கு வேலையே ஓடவில்லை. அழுத்தம் அதிகமானது. தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என பலர் மாயவன் பதிவேற்றும் வீடியோ லிங்க்குகள், துவாரகாவை பற்றிய அவதூறு வீடியோக்கள் என அனுப்பிக்கொண்டே இருந்தனர். ஒருசிலர் அவனுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்கிற பெயரில், “என்ன சொல்லுங்க தம்பி, நீங்க அவசரப்பட்டு இருக்கக் கூடாது. எனக்கு என்னவோ உங்க மேல தப்பு இருக்காது. அந்த துவாரகா பொண்ணு தான் எதுவும் செய்து உங்களை கைக்குள்ள போட்டு இருக்கும் னு தோணுது. ஒருவேளை அவகிட்ட எசக்குபிசகா நீங்க எதுவும் மாட்டி அதை வைச்சு கார்னர் பண்ணி தான் அவ உங்களைக் கல்யாணம் பண்ணி இருக்கான்னா என்கிட்ட சொல்லுங்க தம்பி, நமக்குத் தெரிஞ்ச ஒருத்தங்க சிங்கப்பெண் அதிரடிப்படையில் இருக்காங்க. அவங்கிட்டசொல்லி ஒரு வழி பண்ணலாம்.” என இலவச அறிவுரை கொடுத்துச்சென்றனர். “போயா யோவ்.” என்று அவரைக் கண்டபடி திட்டி அனுப்பி இருந்தான் நவநீதன்.
நாளுக்கு நாள் இந்த போராட்டங்கள் அதிகமாக இருக்க, அஞ்சனை கண்ணப்பன் கூட இதனால் பாதிக்கப்பட்டனர். தன்னால் தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரும் பாதிக்கப்படுகிறார்களே என துவாரகாவிற்கு கவலையாக இருந்தது. நடக்கும் அனைத்தையும் முடித்துவைக்க ஏதாவது ஒரு வழியை காட்டிக்கொடு என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.
அதே சமயம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நவநீதன், துவாரகா இருவரையும் கொன்று தூக்குகயிற்றில் தொங்கவிடுவதற்காக சிலரை ஏற்பாடு செய்திருந்தான் மாயவன்.
அமாவாசை கும்மிருளில் நவநீதன் துவாரகா இருந்த ஓட்டு வீட்டின் ஓட்டைப் பிரித்து சத்தம் வராமல் ஒவ்வொருவராக குதித்திருந்தனர் ஐவர் கொண்ட அந்த கொலைகார கும்பல்.