• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

NTYU - 21

STN - 90

New member
தேடல் 21

IMG_20260507_173240.jpg


செந்தாழினி மூலம் ஷிவநந்தன் இறந்தது, தீரன் பாறையாய் இறுகி நிற்பதை அறிந்து கொண்டதிலிருந்து நிலா மனம் தாங்கவியலாத வேதனையில் வெந்தது..அனைத்தையும் தனக்குள் மறைத்து தன் குடும்பத்தை காக்க தேறி வந்திருந்தாள்.

தீரனின் இல்லத்தில் ஷிவநந்தனோடு மொத்த மகிழ்ச்சியும் தொலைந்திருந்தது. மகளின் புறகணிப்பில் நிலா விருந்தகத்தில் தன்னை புகுத்தி கொண்டார் மரகதம். நித்தம் நண்பனின் நினைவில் ஒரு வார்த்தை பேசாது எங்கோ வெறித்து பார்த்தபடி இருக்கும் மகனை எப்படி தேற்றுவது என கமலா கலங்க நிலா தன்னால் முடிந்தவரை அவனிடம் பேசி, கொஞ்சி, அதட்டி, கெஞ்சி என என்ன செய்தும் ஊண் உறக்கம் மறந்து உணர்வுகள் மரத்து தேங்கி நிற்பவனை சிறிதும் அசைக்க முடியவில்லை.

நாட்கள் வேகமாய் நகர அன்று மாடி தோட்டத்திற்க்கென செடிகள் வாங்க நர்சரி வந்திருந்தாள் நிலா. செடிகள் வாங்கிமுடித்து ஒரு கப் காபியுடன் ஓய்வாக அமர்நதிருக்க..

“ஹாய் நிலன்யா..” என்ற குரலில் திரும்பி பார்க்க..மான்யா சிரித்தபடி அருகில் வந்தாள். பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு மான்யா..

“நீங்க என்னை விட சின்ன பொண்ணாயிருந்தாலும் எல்லாத்தையும் கடந்து வந்து உங்களுக்கு னு ஒரு ஐடன்டிட்டி உருவாக்கினது இன்ஸ்பையரிங்.. ஆனா உங்களுக்கு எல்லாமா இருந்த மாமா..? அவர் ப்யூச்சர்..?
….

ப்ரச்சினைகளுக்கான தீர்வை நாம தான் கண்டுபிடிக்கனும் நிலா..உளவியல் ரீதியா அதிகம் பாதிப்புக்குள்ளானவங்களை சட்டுனு மீட்டு கொண்டு வர முடியாது...உங்கள போல அவரும் கடந்து வரணும்..உங்க வளர்ச்சியில அவருக்கு தாங்க முடியாத பெருமை இருந்திருக்கு எப்பவுமே..அவருக்கு பிடிச்சதை செய்ங்க..தனியா விடாதீங்க..மனசு விட்டு அழுதுட்டாருனா நார்மலாகலாம்..யோசிங்க அன்ட் டேக் கேர் நிலா..”எனக்கூறி கிளம்பினாள். மீண்டும் மீண்டும் மான்யா கூறியதை அசை போட்டபடி வீட்டிற்கு திரும்பினாள் நிலா.

அன்று வழக்கம் போல தன் அலுவலில் ஈடுபட்டிருந்த நிலன்யாவிற்கு கமலாவிடமிருந்து அழைப்பு வர..

“சொல்லுங்கத்தை..

நிலா..தீரன் அங்க வந்திருக்கானா..?

இல்லையே..மாடில பாத்தீங்களா..?

வீட்டை நாலு தடவை சுத்தி சுத்தி வந்துட்டேன்..எங்க போனான் னு தெரியலயே..” என நடுங்கும் குரலில் கூறிய கமலாவிடம்..

“அத்தை..பயப்படாதீங்க..இங்க தான் எங்கேயாவது இருக்கும்..நான் பாத்துக்குறேன்..” என போனை வைத்தவள் அவன் நண்பர்களை வரிசையாக தொடர்பு கொண்டு விசாரிக்க எங்குமே தீரன் வரவில்லை என்றதும் மனதில் திகில் பரவியது.

ஒருவேளை ஷிவநந்தன் உயிர் நீத்த அருவிக்கரைக்கு சென்றிருப்பானோ என நினைத்து மின்னல் வேகத்தில் தன் காரை கிளப்பியிருந்தாள் நிலா.

இருபது நிமிடங்களில் அருவியை நெருங்கியவள் தன் மாமனை கிருஷிகாவோடு பார்த்தபிறகே மூச்சு வந்தது அவளுக்கு. விரைந்து அவனை நெருங்கும் முன்னரே சற்று தள்ளி கை கட்டியபடி அவனை பார்வையில் துளைக்கும் செந்தாழினியை கண்டு சட்டென நின்றாள் நிலா. திரும்பி பார்த்த செந்தா நிலா அருகில் வந்து..

“கிரு ப்ரண்ட் பர்த்டே பார்ட்டிக்கு போயிட்டு இந்த வழியா வரும் போது இவர் பைக் பாத்து உடனே வந்தோம்..வந்ததிலிருந்து அவ மட்டுமே பேசிட்டிருக்கா..இப்போதைக்கு அவரை விட்டு வரமாட்டா..பொங்கல் லீவ் தான்..நாளைக்கு அவரை கொண்டு வந்து விட சொல்லுங்க..நான் கிளம்புறேன்..இருட்டாக போகுது..நீங்களும் கிளம்பிடுங்க..” என அவளை தாண்டி செல்பவளை நிலா..

“அக்கா..நீங்க மனசு வச்சா மாமாவை பழையபடி மாத்த முடியும்..” என கேட்க புன்னகையுடன் கடந்து சென்றாள் செந்தாழினி.

வண்டியில் செல்கையில் தீரனை முதன் முதலில் சந்தித்த நிகழ்வு நினைவில் வந்தது அவன் யாழிக்கு. அன்று கண்ணில் கனிவுமாய் உதட்டோர குறுஞ்சிரிப்பில் எதிரிலிருப்பவரை கவர்ந்திழுக்கும் தோற்றத்துடன் தனக்கு தேவையான தகவலை பெற்று உபரியாக தன் ஆசையையும் உரிமையுடன் அவளுள் கடத்தி சென்றானே..? இப்போது ஷிவநந்தன் மறைவுக்கு பின் வெறும் காற்றை உண்டு வாழ்பவன் போல எலும்பும் தோலுமாய் உடல் மெலிந்து ஜீவனற்ற விழிகளுடன் சுயபராமரிப்பின்றி கசங்கிய ஆடையில் அவனை பார்ப்பதற்கே பாவமாக இருந்தது.

அவ்வப்போது தீரனை பற்றி அவள் காதில் விழுந்ததை நினைத்து உள்ளுக்குள் வருந்தினாலும் தனக்குள்ள உரிமையை தன் கடந்தகால வாழ்க்கை குறிப்பாக கமலாவின் எண்ணமறிந்து தள்ளியே இருந்தாள். அன்று பார்த்தது மீண்டும் இன்று தான் காண்கிறாள் தன் தலைவனை. மகளதிகாரம் தந்தையிடம் சிறு மாயங்கள் புரிய மீதி தெளிய வைக்க வேப்பிலையோடு காத்திருக்கிறாளே தீரனின் மாயக்காரி.

மறுநாள் கிருவை செந்தா வீட்டு வாசலில் விட்டவன் மெல்ல தன் இறுக்கத்திலிருந்து வெளி வர தொடங்கினான். நிலுவையில் உள்ள தன் வேலைகளை ஒவ்வொன்றாக கவனிக்க தொடங்கி தன் கைக்குள் வைத்து வளர்த்த சிறு பொன்வண்டின் குடும்பச்சுமையை முழுதும் தன் பொறுப்பிலெடுத்துக்கொண்டவன் தன்னுள் நிறைந்திருக்கும் நண்பனுக்காக, அவன் விருப்பத்திற்கிணங்க தன் உயிரானவர்களுக்கு தன்னையே அர்பணித்துக்கொண்டான் தீரன்.

அவ்வார இறுதியில் தோவாளையின் புகழ்மிக்க செல்வந்தரின் புது மனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வினுயுகன் தன் காரில் கிளம்பியிருந்தான். கிட்டதட்ட தோவாளையை நெருங்கும் வேளை அவன் காரில் பெரும் பழுதாகிவிட கம்பெனிக்கு அழைத்து விஷயத்தை கூறி வேறு காரை அனுப்ப சொன்னான்.

இளபிங்க் நிற ஷெர்வானியில் சாலையோரத்தில் நடந்தபடி தாமதமாகிறதே என பதட்டத்துடன் காத்திருக்கையில் மெக்கானிக் வந்து வண்டியை பார்த்து..

“இன்ஜின் சீஸ் ஆயிருக்கு..டௌ பண்ணி தான் வண்டிய எடுக்கனும்..” என்றதும் தலையில் அடித்துக்கொண்டான் வினு. அவனிடம்..

“உன்க்கிட்ட வண்டியில்லயா..?

இல்ல சார்..லிஃப்ட் கேட்டு வந்தேன்..

சரி..காரை பாத்துக்க..” என சாவியை கொடுத்துவிட்டு தூரத்தில் வரும் காரில் லிஃப்ட் கேட்பதற்காக கட்டை விரலை மடக்கி காட்ட சற்று தள்ளி சென்று கார் நின்றது. மடமடவென அருகில் சென்றவன் கார் கண்ணாடி ஜன்னலில் குனிந்து பார்த்து சட்டென தள்ளி நின்றான்.

இவளா..? இவ காரையா நிறுத்துனேன்..? என யோசிக்கும் முன் இவர்களை நெருங்கிய மெக்கானிக்..

“மேடம்..சாரோட கார் ரிப்பேராயிடுச்சு..கொஞ்சம் தோவாளை வரை ட்ராப் பண்ணிடுறீங்களா..? பேமஸ் ஷோரும் ஓனர் இவரு..

அப்படியா..?” என நக்கலாக கேட்ட நிலன்யாவை கண்டுக்கொண்ட வினு..

“லேட்டானாலும் பரவால்ல..வேற வண்டி ல போய்க்கிறேன்..அவங்கள கிளம்ப சொல்லு..” என்றபடி தன் காரை நோக்கி நடந்தான். நிலாவும் காருடன் கிளம்பி சற்று தள்ளி ஓரமாக நிறுத்தினாள். காரை விட்டு இறங்கி மேலே சாய்ந்தபடி அமைதியாக நின்றுவிட்டாள். ஐந்து, பத்து என நிமிடங்கள் வேகமாக கடக்க சாலையில் தனியாக நிற்கும் இளம்பெண்ணை கலாய்த்தபடி திரிந்த ரோமியோ கூட்டத்தை கண்டு கடுப்பான வினு அவளை நெருங்கினான்.

“தடிமாடு மாதிரி வளர்ந்துருக்கியே அறிவில்ல..?காரை எடு..” என முன்பக்க கதவை திறந்து அமர்ந்து படாரென சாத்தினான். அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமைதியாக காரை எடுத்தாள் நிலா.

அன்று அவளை முழிக்க வைத்ததோடு பார்த்தது..இன்று அடர் ஊதா நிற அஜ்ரக் கெரி புடவை முழுவதும் மாங்காய் டிசைனில் அகலமான பொன் நிற பார்டர் மற்றும் அதே நிற ஜக்கார்ட் ப்ளவுஸ் அணிந்து ஊதா, பொன் நிற ரெய்ன்ட்ராப் கண்ணாடி வளையல்களோடு லாவகமாய் கியரை பிடித்து ஓட்டும் கன்னியின் அருகாமை இவனுள் ஆண்மையை சீண்டி பார்க்க..சிலிர்த்தெழும் உணர்வுகளை முயன்று கட்டுபடுத்திக்கொண்டு மறந்தும் அவள்புறம் பார்வையை திருப்பவில்லை.

நடுநடுவே அவளுக்கு வந்த அழைப்புகளுக்கு சுருக்கமாக பதிலளித்து சாலையில் வரும் மேடு பள்ளங்களில் கவனம் பதித்து சீராக ஓட்டும் தன் நிலவின் சாமார்த்தியத்தை மெச்சியபடி சீட்டை பின்னிழுத்து கண் மூடி சாய்ந்துக்கொண்டான் வினு. காரை செலுத்திக்கொண்டிருப்பவளின் மனமோ தேனில் ஊறவைத்த பஞ்சுமிட்டாய் போல தனக்குள் கரைய தொடங்கியவனை ஏற்பதா வேண்டாமா என ஒரு பட்டிமன்றமே நடத்தி இறுதியில் தன்னவனின் எழில்மிகு பக்கவாட்டான தோற்றத்தில் ஆளுமையில் தொலைந்தே போனாள்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வினு நிலாவின் அலைபேசியின் ஒலியில் கண் விழித்தான். சற்று தொலைவில் செல்வந்தர் வீடு. திரும்பி அவளை பார்க்க..

“சொல்லு மாமா..

எங்க டா இருக்க..?

“வர்ற வழியில யுக..வினுயுகன் கார் ப்ராப்ளம்..பங்ஷனுக்கு போகனும் னு வெயிட் பண்ணிட்டிருந்தவரை ட்ராப் பண்ண வந்திருக்கேன்..நம்ம எக்ஸ் கார்ப்பரேட்டர் வீடு தான்..

பார்றா 4 மோட்டார் ஷோரூம் ஓனருக்கே கார் ப்ராப்ளமா..விளங்கிடும்..ஏன் உன்னை தவிர வேற யாருக்கிட்டயும் கார் இல்லையா..? “ என வெளியில் கேட்ட தீரனின் குரலில் அவளை முறைத்தான் வினு.

“மா…மா..” என நிலா தயங்க தீரன்..

“சரி ட்ராப் பண்ணிட்டல்ல..உடனே அங்கிருந்து கிளம்பு..வரும் போது என்னை தோட்டத்துல பிக்கப் பண்ணிக்கோ..

ம்ம்..” என கூறும் முன் வினு நிலாவிடம் உரத்த குரலில்..

“அஞ்சு நிமிஷம் இங்கேயே வெயிட் பண்ணு..திரும்ப நீ தான் என்னை ட்ராப் பண்ற..உள்ளேயே இரு..வெளிய நிக்காத..சீக்கீரம் வந்துடறேன்..” என்றபடி கார் கதவை திறந்து வெளியேறினான். திரு திரு வென விழித்தபடியிருந்த லயாவின் விழியில் லயம் தப்பினாலும் தன் சொல்லை மீறி போகமாட்டாள் என வேகமாக வீட்டினுள் நுழைந்தான். இங்கு தீரனோ..

“நீ என்ன அவனோட ட்ரைவரா..? ஆர்டரெல்லாம் பலமாயிருக்கு..நான் லைன் லயேஇருக்கேன்..கட் பண்ணாத..

ஏன் மாமா நீ வேற..?

ஏதோ பாஞ்சி பாஞ்சி நம்மள காப்பாத்துனான்..உன்ன முழிக்க வச்சான் பைஃன்..அதுக்கு..?

அவர் வரமாட்டேன் னு தான் சொன்னாரு..நான் தான் கம்பெல் பண்ணி ட்ராப் பண்ணேன்..

ஓ..ஓகே..டைம் என்ன பாரு..எப்ப நீ ரிடர்ன் வந்து என்னை பிக்கப் பண்ணி..அறிவில்லாதவன்..நேர் ல வந்தேன் னு வை..

இன்னும் அரை மணி நேரத்தில வர்றேன்..வெயிட் பண்ணுடா அங்கேயே..” என அவனுக்கு பதிலளித்தபடி வந்த வினு நிலாவிடம்..

“இறங்கு..” எனக்கூற இறங்கி மறுபக்கம் வந்து அமர்ந்தாள். காரை கிளப்பி ரிவர்ஸ் எடுத்தபடி..

“சீட்பெல்ட் உன் மாமனா வந்து போடுவான்..?” என அவளிடம் எகிற இங்கு தீரனோ கோபத்தில் துள்ளிக்கொண்டிருந்தான். மீண்டும் ஓர் பயணம்..காதலை வாய்மொழி சொன்னதில்லை..கண்கள் பேசிய காவியம் பல..இருவருமே உள்ளுக்குள் சிலிர்த்து இத்தருணத்தை பொக்கிஷமாக தங்கள் இதயபேழையில் சேமித்துக்கொண்டனர்.

அங்கோ ஒருவன் சாமியாடிக்கொண்டிருந்தான். பின்னனியில் ஒலித்த மெல்லிசை பாடல்கள் சட்டென காதல் பாட்டுக்களாய் மாற தீரன்..

“ஏய் நிலா..என்ன கன்றாவி ப்ளேலிஸ்ட் இது..மாத்து..” என கத்த அவள் கரத்தை பிடித்த வினு வண்டியை ஓரமாக நிறுத்தி அவள் அலைபேசியை வாங்கி வேண்டுமென்றே மிட்நைட் பாடல்களை ஓடவிட்டு..

“எப்படியும் நாங்க வர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரமாகும்..ஆனா நான் ஓட்டுறதுனால மினிமம் த்ரீ அவர்ஸ் ல அங்கயிருப்போம்..அது வரைக்கும் உன் தோட்டத்துல கல்லக்கா பறிச்சு வறுத்து சாப்பிட்டேயிரு..பை..” என போனை அணைத்து அவளிடம் எறிந்தவன் காரை எடுத்தான்.

மௌனத்தை கெட்டியாக பற்றிக்கொண்ட ஜோடிப்புறாக்களின் பயணம். பாதி தூரம் கடந்ததும் வினு..

“அவனே வரைஞ்சுக்கிட்ட வட்டத்துக்குள்ள இருக்குற உன் மாமனை இப்படி வம்பிழுத்தா தா அவனும் நார்மலாவான்..அதர்வைஸ் நீ என்க்கூட பயப்படாம வரலாம்..” என பாட்டை நிறுத்த கை வைத்து சிரிப்பை மறைத்தபடி வெளியே பார்த்தாள் நிலா. வினு..

“என்ன சிரிப்பு..?” என அதட்டியவனை திரும்பி பாராது..

“நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க னு தெரியும்..” எனக்கூற கடுப்புடன் ஆக்சிலேட்டரை மிதித்து காரை பறக்க விட்டான் வள்ளியின் வேலன்.

தோட்டத்தை நெருங்கும் முன் வினு..

“எந்த சிட்சுவேஷன் லயும் சாகனும் னு இனி நீ நினைக்க கூடாது..இதுவரைக்கும் ஆன சேதம் போதும்..” என்றதும் அவள் முகம் இருண்டது. தூரத்து நிலவை வெறித்தபடி வந்தவளிடம்..

“உன்னை குத்தி காட்டி பேசலை.. கண்ணை தொடைச்சிட்டு நிமிர்ந்து உட்காரு..”என ஆணையிட்டவனை முறைத்தாள் நிலா. இறங்கும் முன்..

“என்னிக்காயிருந்தாலும் என்க்கிட்ட ஒரு நாள் மாட்டுவ..அப்ப தெரிஞ்சுப்ப டி..நான் சரிபட்டு வருவேனாயில்லையா னு..” என அவள் பிபியை எகிறவைத்து காரிலிருந்து இறங்கி தெனாவட்டாக தீரனை முறைத்தவாறு ப்ரணவுடன் கிளம்பினான் வினுயுகன். வினுவையே பார்வையால் அளந்துகொண்டிருந்தவன் உள்ளே மகிழ்ந்து வெளியே விறைப்புடன் காரை எடுத்தான் தீரன்.

தொடரும்.
 
Last edited:
Top Bottom