அத்தியாயம் 22
ஸ்ரீதர் திண்டுக்கல் வந்து சேர்ந்து, வீட்டினுள் நுழைய, ஹாலில் கமலமும் பத்மினியும் கன்னத்தில் கையை வைத்து அமர்ந்திருந்தனர்.
உள்ளே வந்த ஸ்ரீதரை பார்த்து எழுந்து நின்றனர். “என்னாச்சு ஸ்ரீ?…” என்று கமலம் கேட்க
“ஒன்னும் இல்லமா.. அவ எங்க?.. என்ன சொன்னா?…” என்று கேட்க
“அவ எங்க பேசினா.. ஒன்னுமே சொல்லாம, என் புருஷன் கூட சண்ட போட்டுட்டு வந்துட்டேன்னு சொல்லி, உன் அறையில போய் கதவ அடைச்சுகிட்டா.. நாங்க எவ்வளவு கேட்டும் கதவ திறக்கல…” என்று பத்மினி சொல்ல
“சரி, நான் பாத்துக்குறேன்.. நீங்க ரெண்டு பேரும் என்கூட கிளம்பறதுக்கு ரெடியாகுங்க…” என்று சொல்ல
“கமலம் என்னடா திடீர்னு கிளம்புங்கன்னு சொன்னா எப்படி?…” என்று கேட்க
“அதெல்லாம் நான் ஐங்கரன் கிட்ட சொல்லிட்டேன், வீடு வாடகைக்கு விடுறதுக்கு பாத்தாச்சு.. மற்ற விஷயம் அவனே பாத்துப்பான்.. நீங்க நான் சொல்றத கேளுங்க, நான் முன்னாடி கூப்பிட்டப்போ நீங்க வந்திருந்தா, இவ இப்ப இங்க கோவிச்சுட்டு கிளம்பி வந்திருக்க மாட்டா…” என்று சொன்னவன்
இரண்டு இரண்டு படிகளாக தாவி, மாடியில் தனது அறைக்கு சென்று, பூட்டிருந்த கதவை தட்டி “அடியே சிங்காரி!.. கதவ திறடி…” என்று அழைக்க
அந்தப் பக்கம் இருந்து பதில் வரவில்லை. “அடியே இப்ப நீ கதவ திறக்கிறயா இல்ல நான் ஒடச்சிட்டு வரட்டுமா?…” என்று கேட்க
“கதவ திறக்க முடியாது.. உடைச்சிட்டு உள்ள வந்தீங்கன்னா இங்க இருந்து ஜன்னலால கீழ குதிச்சிடுவேன்…” என்று உள்ளே இருந்து காயத்ரி சொல்ல
அவளின் பதிலில் பல்லை கடித்தான் ஸ்ரீதர். கதவை திறக்க மாட்டேன் என்பதற்காக இல்லை ஜன்னலின் வழியாக குதித்து விடுவேன் என்பதற்காக.
“நல்ல முடிவு தான்.. குதிச்சிடு.. சண்ட போட்டுட்டு அம்மா வீட்டுக்கு ஓடி வந்த உன் கால உடைக்கணும்னு தான் வந்தேன்.. நீயே மேல இருந்து குதிச்சிட்டனா காலோட சேத்து குதர்க்கமா யோசிக்குற மண்டயும் உடஞ்சிடும்…” என்று சொல்ல
மாமனின் பதிலில் கோபமாக கதவை திறக்க வந்தவள், கடைசி நிமிடத்தில் சுதாரித்துக் கொண்டு கதவின் அருகே நின்று “உனக்கு சந்தோஷமா தான் இருக்கும்.. இங்க இருந்து குதிச்சு எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்னால எந்த அவஸ்தையும் பட வேண்டிய அவசியம் இல்லல…” என்று சொல்ல
கதவில் ஓங்கி அடித்தவன் “உள்ள வந்தேன் பல்ல தட்டி கைல தந்துடுவேன் ராஸ்கல்!.. என்ன பேச்சுடி பேசுற.. நான் சொன்ன அவஸ்தை வேற, நீ புரிஞ்சுகிட்ட அவஸ்தை வேற, கதவ தொற தெளிவா எல்லாத்தையும் சொல்றேன்…” என்று சொல்ல
“என்கிட்ட நீ எதுவும் சொல்லத் தேவையில்ல.. போய் உன் திக் ஃப்ரெண்ட் மாளவிகா கிட்டேயே சொல்லு.. இல்ல இல்ல மாளுஊஊ.. இப்போ அவ கிட்ட மட்டும் தானே சார் குழஞ்சு குழஞ்சு பேசுறீங்க.. ம்ஹூம்!…” என்று நொடித்துக் கொள்ள
“அடியே இது தான் பிரச்சனையா.. உன் பொறாமைக்கு ஒரு அளவில்ல.. நீ என் பொண்டாட்டி டி.. அவ என் ஃப்ரெண்ட், அது மட்டும் இல்ல உனக்காக மேக்ஓவர் பண்றதுக்கு கத்துக்கிட்ட போது தான் அவ கூட க்ளோஸ் ஆனேன்.. அவளுக்கே தெரியும் நான் உன் மேல எந்த அளவுக்கு காதல் வச்சிருக்கேன்னு.. அவகிட்ட இந்த கொஞ்ச நாளா க்ளோசா பேசுறேன் தான் ஆனா அது உனக்கு தெரிய கூடாதுன்னு மறைக்கல.. உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு மறச்சேன்…” என்று சொல்ல
“இது என்ன புது கத?…” என்று அவளும் கேட்க
“கதவ திறடி…” என்று அவன் கொஞ்ச
“அதெல்லாம் முடியாது முதல்ல விசயத்த சொல்லு?…” என்று கராராக கேட்க
“ஐங்கரனுக்கும் மாளுவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு ஒரு ஐடியா.. பாவம் இந்த ஆறு வருஷமா என் இடத்துல இருந்து என்னோட கடமை எல்லாத்தையும் அவன் தான் பண்ணுனான்.. அவனுக்காக நான் ஏதாவது பண்ணனும்ல.. நம்ம கல்யாணத்தப்போ வீடியோ கால்ல கல்யாணத்த ஐங்கரன் தான் மாளவிகாவுக்கு காட்டிட்டு இருந்தான்.. அப்பவே ரெண்டு பேருக்கும் கொஞ்சம் பழக்கம்.. ஐங்கரனுக்கும் மாளுவ புடிச்சிருக்கு, என் கிட்ட அவள பத்தின டீடைல்ஸ் கேட்டான்.. ஆனா வேற எதுவும் சொல்லல, நானா அவன் மனச புரிஞ்சுகிட்டு சரி நம்ம நண்பன் ஆசைப்பட்டத நிறைவேத்தி கொடுக்கலாம்னு மாளு கிட்ட பேசுனேன்.. அவளுக்கும் புடிச்சிருக்கு ஆனா இங்கேயே வந்து செட்டில் ஆகணுமே, அவளோட எதிர்காலமே சென்னைல தான்னு நினைச்சுட்டா.. அதனால கல்யாணம் பண்ணிக்கிட்டு புகுந்த வீட்டுக்கு இங்க வந்தாலும் அவளோடு கெரியருக்கு எந்த பாதிப்பும் வராது, ஐங்கரன் ஃபுல் சப்போர்ட் பண்ணுவான், அது மட்டும் இல்லாம இங்க ஒரு பிரான்ச் ஆரம்பிச்சு உன்ன பாத்துக்க சொல்லி சொல்றேன்னு சொல்லி அவள கன்வின்ஸ் பண்ணினேன்.. அதுக்கு தான் அத்தன நாளாச்சு.. இத உன்கிட்ட சொன்னா, நீ உடனே உன் பிரெண்ட் அமுதினி கிட்ட சொல்லுவ.. அவ ஐங்கரன் கிட்ட உண்மைய சொல்லிடுவா.. அவனுக்கு சர்ப்ரைஸா மாளு ஓகே சொன்னதும் சொல்லலாம்னு இருந்தேன்.. அதுதான் உன்கிட்டையும் சொல்லல.. போதுமா…” என்று ஸ்ரீதர் கேட்க
“என்கிட்ட சொல்லாதன்னு சொன்னா நான் சொல்லாம இருக்க போறேன்.. அத விட்டுட்டு நான் அமுதினி கிட்ட சொல்லிடுவேன் என்றதெல்லாம் உனக்கு ஒரு சாக்கு.. உன் கூட பேசணும்னா உன் ஆஃபீஸ்ல வேலை செய்யணும் போல.. ஆறு வருஷம் முன்னாடி வரைக்கும் என் மாமனுக்கு நான் மட்டும்தான் எல்லாமே.. இப்போ என்னையவே மறந்துட்டு வேலை வேலைன்னு சுத்துற அளவுக்கு ஆயிடுச்சி.. பிறகு நான் எதுக்காக அங்க.. நான் எங்கேயும் வரல.. போ போய் உன் வேலையவே கல்யாணம் பண்ணிக்கிட்டு அதுகூடவே குடும்பம் நடத்து.. என்ன கல்யாணமே பண்ணியிருக்க கூடாதுன்னு சொன்னல…” என்று காயத்ரி மூக்கை உறிஞ்ச
“அடியே! அப்படி இல்லடி.. நான் வேற ஒரு புது ப்ராஜெக்ட் பண்றேன்.. அது முடியவும் கல்யாணம் பண்ணலாம்னு தான் இருந்தேன்.. ஆனா அது வரைக்கும் உன்ன பாக்காம இருக்க முடியாதுனு தான் பாக்க வந்தேன்.. ஆனா அக்கா உடனே கல்யாணம்னு சொல்ல எனக்கும் நீ உடனே வேணும்னு தோணுச்சு.. அதான் கல்யாணத்துக்கு பிறகு இரவு பகலா வேலை செஞ்சு ப்ராஜெக்ட்ட முடிச்சிடலாம்னு முடிவுக்கு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அதான் சென்னைக்கு போகும் போது உனக்கு துணைக்கு அம்மாவையும் அக்காவையும் கூப்பிட்டேன்.. அவங்களும் வரல உன்ன வீட்டுல தனியா விட்டுட்டு வேலைய கவனிக்க நான் எவ்வளவு அவஸ்தபட்டேன் தெரியுமா.. அத தான்டி சொன்னேன்.. எனக்கும் காலையில பத்து மணிக்கு ஆஃபிஸ் போய், சாயந்தரம் அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்து, உன்ன கொஞ்சிட்டே இருக்கணும்னு ஆச தான்டி.. அதுக்கு தான் இத்தன நாளா எல்லா வேலைகளையும் பாத்தேன்.. இன்னும் ரெண்டு நாள் டைம் குடுடி, பழய படி உன் மாமன் உன்ன மட்டுமே சுத்தி வாரேன் …” என்று சொல்ல
“நான் ஒன்னும் நீ வேலையே பாக்காம என்ன மட்டுமே சுத்தி வரணும்னு சொல்லல.. ஆனா உன் உடம்ப கெடுத்துக்கிட்டு, எதுக்கு இப்படி உன்ன வருத்தி வேலையனும்.. நீ எனக்காகன்னு சொன்னாலும் எனக்கு உன்ன தவிர வேற எதுவும் முக்கியம் இல்லன்னு உனக்கு தெரியாதா?.. நீ பாட்டுக்கு வீடு வாங்கி தார, நான் சொன்னதெல்லாம் செய்றதுக்கு வேலையாள் வைக்கிற.. இந்த சொகுசு எல்லாம் எனக்கு தேவையில்ல, எனக்கு தேவ என் மாமா மட்டும் தான்…” என்று தழுதழுத்த குரலில் சொல்ல
“காயூ குட்டி!.. எனக்கு தெரியும்டி.. ஆனா எனக்கு அதெல்லாம் பழகிடுச்சு.. நீயே யோசிச்சு பாரு.. கடந்த மூணு வருஷத்துல இந்த இடத்துக்கு வாரதுக்கு இப்படி தான் உழைச்சேன்.. அதனால எனக்கு கஷ்டமா தெரியல.. நாளையில இருந்து கண்டிப்பா பிஸ்னஸ் பிஸ்னஸ்னு ஓட மாட்டேன்.. நம்புடி…” என்று சொல்ல
கதவின் தாளை திறந்து விட்டவள், கதவை திறக்காமல் அப்படியே சென்று கண்ணாடி மேஜையின் முன்பு நிற்க,
காயத்ரி கதவின் தாளை திறக்கும் சத்தம் கேட்க, அவளாக கதவை திறப்பாள் என்று பார்த்திருந்த ஸ்ரீதர் சில நொடிகளில் கதவில் கையை வைக்க அதுவாகவே திறந்து கொண்டது. உள்ளே வந்து கதவை சாற்றியவன்,
மஞ்சள் நிற சுடிதாரில் இன்னமும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கும் அவன் பிரியசகியின் பின் சென்று, இறுக்கி அணைத்தவன் “இன்னும் என்னடி பொண்டாட்டி மாமன் மேல கோபம்…” என்று அவள் காதுமடலை நாவலினால் தீண்டி கேட்க
உடலை நெளித்து அவனை விலக்க முயன்றவாறு “இங்க இருக்குற வரைக்கும் தான் இந்த கொஞ்சல் எல்லாம்.. அங்க எனக்கு எத்தன லிப் கிஸ் குடுத்திருப்ப.. என்ன தேடவே இல்ல நீ.. நானும் என் மாமன் பெரிய வீரன் சூரன்னு என்னென்னவோ நினைச்சிருந்தேன்…” என்று சடவாக சொல்ல
அவளை திருப்பி அவள் மெல்லிடையில் கை வைத்து தூக்கி, கண்ணாடி மேஜையில் அமர வைத்துவன், அவளின் வழுவழுப்பான தொடையை பிடித்து இழுத்து, தன் இடையுடன் நெருக்கிக் கொண்டு, நொடியும் தாமதிக்காது தேன் இதழ்களை கவ்வி இழுத்து சுவைக்க ஆரம்பித்து விட்டான்.
அவனின் அழுத்ததை குறைக்க… களைப்பை போக்க… தவிப்பை உணர்த்த… தன் ஏக்கத்தை கடத்த… என்று அழமான நீண்ட முத்தம்.
இளையவளின் இதழ் பிளந்து, நாவு கொண்டு தேன் தேடி, திகட்ட திகட்ட தித்திக்கும் சூடான முத்தம்…
நேரம் செல்ல செல்ல அவள் விட்டு வந்த கோபத்தின் பிரதிபலிப்பாக வன் முத்தமாக மாறியது. பெண்ணவளும் தன் கால்களினால் அவனை சுற்றி வளைத்து கட்டிக் கொண்டவள், அவன் சிகைக்குள் விரல்களை நுழைத்து, அவனை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தாள்.
ஆனாலும் பயன் இல்லை. கடித்து இழுத்து, அவளின் இளஞ்சிவப்பு இதழ்களை செக்க சிவந்த நிறமாக மாற்றி விட்டே விலகினான்.
“இந்த அவஸ்தைய தான்டி சொன்னேன்.. உன் உதட்டுல புதைஞ்சு போனா என்னால மீண்டு வரவே முடியாது.. முழுசா நீ வேணும்னு தோணும்.. மொத்தமா உன்ன எடுத்துக்க ஆரம்பிச்சா எனக்கு ஒரு இரவு முழுக்க நீ வேணும்.. பிறகு எப்படி ஆஃபீஸ் போய் வேலைய பாப்பேன்.. அதனாலதான் விலகியே இருந்தேன்.. ஆனா எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா.. காதலிச்சு ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட பொண்டாட்டிய பக்கத்துல வச்சுட்டு உணர்ச்சிகள கட்டுப்படுத்தி கண்ட்ரோலா இருக்கிறது நரக அவஸ்தடி.. அதத்தான் சொன்னேன்.. ஆனா நீ என்ன புரிஞ்சுகிட்ட.. எப்படி எப்படி நீ வீரன் சூரன்னு என்னமோ நினைக்க நான் எதுவுமே நடத்தலையா.. வாடி உன் இடுப்ப உடைச்சு நாலு நாளைக்கு எந்திரிக்க முடியாத அளவுக்கு பண்றேன்…” என்றவன் அவளை அப்படியே தூக்கி தன்னிடையில் அமர்த்தி கொண்டு, அறையை விட்டு வெளியேற
“ஐயோ மாமா! என்ன பண்ற?.. யாராச்சும் பாக்க போறாங்க…” என்று காயத்ரி பதற
“ரொம்ப பதறாதடி.. தூரத்துல இருந்து யாராவது பாத்தாங்கன்னா யாரோ குட்டி பாப்பாவ தூக்கிட்டு போறதா தான் நினைப்பாங்க.. கொஞ்சமாச்சு நீ வளர்ந்திருக்கலாம்…” என்று சொன்னவன் அவளை இறக்கி விடவே இல்லை.
அப்படியே தூக்கிச் சென்று காரின் முன் சீட்டில் அமர்த்தி கொண்டவன், “அம்மா! அக்கா! ரெடியா…” என்று உள்ளே பார்த்து குரல் கொடுக்க
அவர்களும் எடுக்க வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு, வெளியே வந்து காரின் பின் சீட்டில் ஏறிக்கொண்டனர்.
அதேநேரம் ஐங்கரனும் அங்கு வந்து சேர, வீட்டை பூட்டி சாவியை எடுத்தவன், அவனிடம் கொடுத்து “நான் சொன்னபடி ஸ்கூலுக்கு வெளியூர்ல இருந்து வேலைக்கு வரவங்கள இங்க தங்க வச்சுட்டு.. மத்த வேலைகளையும் முடிச்சிட்டு நைட்டுக்கே நீயும் சென்னைக்கு புறப்பட்டு வந்திடு.. நாளைக்கு முக்கியமான பிளான் இருக்கு தெரியும்ல…” என்று கேட்க
“தெரியும்டா.. எல்லாத்தையும் முடிச்சிட்டு நான் வந்துடுறேன்.. நீ கெளம்பு…” என்று சொல்லி ஐங்கரன் சாவியை வாங்கிக் கொள்ள,
அவன் தோளில் தட்டியவன் “உனக்காகத்தான் காத்துட்டு இருப்பேன் வந்துடு…” என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டான்.