ஒரு நிமிடம் தான் கேட்டது உண்மைதானா, சரியாகத்தான் கேட்டோமா என்று அதிர்ந்து நின்றாள் சித்ரா. அவளின் சந்தேகத்தைத் தீர்க்கும் விதமாக, “பின்னே, நீ என் வீட்டுக்கு மருமகளாக வருவதால் எனக்கும் சந்தோசம்தான். நி...
அவள் இல்லாமல், அவள் விளக்கேற்றாமல், அவள் முதல் வியாபாரம் செய்யாமல் அவன் கடையைத் திறக்கப் போகிறானா? சுர்ரென்று கோபம் எந்தளவுக்கு ஏறியதோ, அதைவிட அதிகமாக உள்ளே வலித்தது. உயிரோடு உயிராக, உள்ளத்தோடு உள்ளமா...
அடுத்தநாள் கலையே எழுந்தவள் கடைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த தந்தையிடம் சென்றாள். வெளியே செல்லத் தயாராக, அதுவும் சேலையில் வந்த மகளை ஆச்சர்யமாகப் பார்த்தார் சந்தானம். “என்னமா எங்கே போகப் போகிறாய்...
அந்தி சாயும் வேளையில், வீட்டு முற்றத்திலே ஒரு பக்கமாக இருந்த மாமரத்தின் கீழே போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்திருந்த சித்ரா, இன்னொரு கதிரையில் கால்கள் இரண்டையும் போட்டிருந்தாள். கையில் ரமணிசந்திரனின...
அயர்ந்த உறக்கத்தில் இருந்து கண்விழித்தாள் சித்ரா. இப்படித் தூங்கி எத்தனை நாட்களாயிற்று என்று எண்ணியபடி விழிகளைத் திறந்தவளின் பார்வையில் பட்டான் ரஞ்சன். அங்கிருந்த மேசையின் பின்னால் அமர்ந்திருந்தவன் கை...
ரஞ்சனின் கடைக்கு முன்னால் ஸ்கூட்டியை நிறுத்தும்போதே சித்ராவின் விழிகள் மெலிதாகக் கலங்கின. அவனைக் காணப்போகிறோம் என்று நினைக்கவே உடல் முழுவதும் ஒரு துடிப்பு ஓடியது. அந்தளவுக்கு அவளது உயிரோடு உயிராகக் ...
“போகும் போதும் என் சீவனை வாங்கிவிட்டுத்தான் போகிறாள்.” என்ற ஜீவனும் தன் வேலைகளைப் பார்த்தான். ஆனால் ரஞ்சன் வரவும் இல்லை. சித்ராவின் அழைப்பை ஏற்கவும் இல்லை. வேலைகளை முடித்துக்கொண்டு வந்தவளின் விழிகள் அ...
தங்கள் காதலராம் வண்டுகளின் வரவிற்காய் பனியில் குளித்துவிட்டு உற்சாகமாகக் காத்திருந்தன காலை நேரத்து மலர்கள். அவற்றைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த சித்ராவின் மலர் முகத்தைப் பார்த்துப் பொறாமை கொண்டன...
நேசத்தோடு அவளின் உச்சியில் உதடுகளை ஒற்றி எடுத்தான். அவள் முகத்தை இரு கரங்களினாலும் பற்றி தன் முத்தங்களால் நிறைத்தான். “மாமா எங்களை நம்பித்தானே அனுப்பி வச்சவர். வெளில போவமா?” என்றான் கனிந்த குரலில் அவள...
துளசியின் மணாளன் அவள் கழுத்தில் தாலியை பூட்டி முடித்தான். அர்ச்சதை தூவி எல்லோரும் ஆசிர்வதித்த பின்னர் புகைப்படத்துக்கு நிற்க ஆரம்பித்தனர். ஒரு வயதான அம்மா சிரமப்படவும் அருகில் நின்ற கமலி விரைந்து சென்...
