• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 38

ரோசி கஜன்

Administrator
Staff member
கண்ணிமைப்பொழுதுதான், அந்த அறைக்குள்ளிருந்தாள், இலக்கியா. ஒரு கை அறைக்கதவைச் சாத்த மறுகையால் அவள் வாய் பொத்தப்பட்டிருந்தது. அதுவும் கணப்பொழுதில்!

சற்றிலும் எதிர்பாராது நடந்துவிட்ட நிகழ்வில் கணம் செயலிழந்து விட்டாளவள். மறுகணமோ, அடிவயிற்றிலிருந்து வீரிட்டெழுந்த அவலக்குரல் அதேவேகத்தில் அடங்கியுமிருந்தது.

அறையில் இருட்டாகவிருந்தாலும்...

வாயைப்போத்தியிருந்த கரத்தைத் தன்னிரு கரங்களாலும் விலக்க முனைந்தபடியே முழங்கையால் விட்டாள் ஒரு இடி!

"டோய்ய்ய்...ஏன்டி!" பட்டென்று கரத்தை விலக்கிக்கொண்டு தன்விலாவைப் பிடித்தபடி நெளிந்தான், வேந்தன்.

"மென்டலா நீங்க?" சுவரைத் தடவி மின்விசையைத்தட்டிவிட்டவள் நெருப்புப் பார்வை பார்த்தாள். அவன் முகத்திலோ, நேசமும் குறும்பும் பலத்த போட்டியில்!

"நீ...நீ...கொஞ்சமும் எதிர்பார்க்கேல்ல எல்லா! சந்தோசப்படுவ எண்டு பார்த்தா இந்த இடி இடிக்கிறயப்பா!" சீண்டினான்.

நொடிகளேயென்றாலும் இதயத்தின் ஓட்டத்தை நிறுத்தப் பார்த்தானே! இதற்குள் பெரிய சாதனை செய்த வகையில் இளிப்பு!

"உங்களுக்கு இதெல்லாம் விளையாட்டா என்ன?" விழிகள் கலங்க அவன் நெஞ்சில் இடித்தவள் கரமிரண்டையும் இறுகப்பற்றி அருகில் இழுத்திருந்தவன் பார்வை, இமைக்காது அவள் விழிகளில் தங்கிற்று!

சளைக்காது பார்க்க முயன்றாளவள். கணம் கூடத் தாங்கவில்லை, தவிப்போடு மெல்ல அப்பால் விலகிற்று. அவன் அன்புச் செய்கையும் ஏகாந்தமும் மென்மயக்கம் தூவத்தொடங்கிற்று!

அவன் உதடுகள் முறுவலைப் பூசிக்கொண்டன.

"போயிட்டு வாறன் எண்டு சொல்லத் தேடினா ஓடிப் போய் ஒளிஞ்சிட்ட என்ன? அப்பிடியே விட்டுட்டுப் போவனா என்ன? எப்பிடி என்ர ஐடியா!" அவன் குரலில் பட்டென்று கலைந்தவள், "மண்ணாங்கட்டி! இதெல்லாம் விளையாட்டா வேந்தன்? இப்ப மாறன் சித்தப்பா குளிக்க வருவார், ஐயோ!" பதற்றத்தோடு நகர முயன்றவளை அப்படியே இழுத்து இறுக அணைத்துக் கொண்டானவன்.

சில நொடிகளுக்குமுன் விலகிச் செல்ல முயன்ற அவளுள்ளமோ, அவள் மீதான நேசத்தை சுவாசிக்கும் அவன் நெஞ்சில் சாய்ந்தடங்கிவிடேனென்றது. சற்றுமுன் வரை தந்தை, அம்மம்மா சித்தப்பாமாரென்று எவ்வளவோ தவித்த உள்ளம், அவனருகில், அவனிருகிறானென்ற துணிவில் அமைதியாகிற்று!

மௌனத்தின் ஆட்சியில் அவ்விடத்தில் நேச மூச்சு மட்டுமே சுதந்திரத்தோடு வலம் வந்தது.

திடீரென்று வந்த எண்ணத்தில் முதல் நாளிரவுதான் அறை கிடைக்குமாவென்று விசாரித்திருந்தான், வேந்தன். அது அவர்கள் அறைக்குப் பக்கத்திலேயே கிடைத்தது, நிச்சயம் எதிர்பாராதது. அவனதிஸ்ட்டமே!

இவள், அஜியோடு அவர்கள் அறைக்குச் செல்கையிலேயே இலேசாகத் திறந்திருந்த கதவால் நோட்டம் விட்டபடித்தானிருந்தான். குளிக்கச் செல்லும் போது இழுத்துவிடுவோம் என்று ஆயத்தமாக நிற்க ரதி வந்து குறுக்கிட்டுவிட்டார்.

"வேந்தன்" நீண்டதாக உணர்த்திய மௌனத்தை முதலில் கலைத்தது அவள்தான்.

"ம்ம்"

"நான் போகோணும், மாறன் சித்தப்பா குளிக்க வருவார் வேந்தன்." விலக முயன்றாள்.

"வரட்டும்" அவனணைப்பு இளகேன் என்றது. முகம் தேடிக் குனிந்தான்.

“அடிதான் வாங்குவீங்க...விடுங்கோ!" திமிறியவள் விழிகளோ வேறு கதை சொல்லிட்டு! அவன் உதடுகளில் முறுவல் விரிந்தது.

"முடியவே முடியாது!" பிடிவாதமாக மறுத்தவனை என்ன செய்வதாம்.

"இப்ப நான் உங்களோடு நிக்கிறப் பார்த்தா என்ன எண்டாலும் வீட்டாக்கள் தாங்க மாட்டினம் வேந்தன். அதும் அப்பம்மா! ஐயோ விடுங்க!" ஒரே உதறலில் விலகியிருந்தாள்.
 
Last edited:

ரோசி கஜன்

Administrator
Staff member
"உங்களில எல்லாருக்கும் சரியான விருப்பம் வேந்தன்." கீழே விழுந்திருந்த அறை திறக்கும் அட்டையை எடுக்கக் குனிந்தவள் நிமிர்ந்த போது மீண்டும் அவன் பிடிக்குள்.

"அப்ப எனக்குப் பதில் சொல்லிப்போட்டுப் போ! நீ மட்டும் முதலே சொல்லி இருக்க நான் இந்த வேலையே செய்திருக்க மாட்டன் தெரியுமா? சொல்லு!" கைவளைக்குள் நிறுத்தி வைத்துக் கேட்டவனை முறைத்தாளவள்.

"எவ்வளவு ஆசையா ரெண்டு கிழமையா கேக்குறன் அசையிறளா பாருங்கவன்." முணுமுணுத்தான்.

அவள் இதழ்கள் முறுவலில் விரிந்தன. அவன் பார்வை அங்கு குவிந்தது. கரங்கள் இப்போது அவள் முகத்தைப் பற்றிக்கொண்டன. அவன் விரல்ளைச் சீண்டிய ஈரக் கூந்தல் கற்றைகளுக்குப் போட்டியாக கன்னமிரண்டும் வெம்மையை உணர்த்தி அவனுக்கே சவால்விட்டன. இமைக்கமறந்த விழிகள் அவனைக் கட்டியிழுக்க அவள் முகம் நோக்கி நகர்ந்தது இவன் முகம்!

"வேந்...தன்..." தடுமாறியள் குரலெல்லாம் அவனுக்கு கேட்கவில்லை. விழிகளில் மையம் கொண்டிருந்த பார்வை அவளுதடுகளை நாடியதுதான் மிச்சம்!

"டோய் உங்கள..." அவன் முகத்தை எட்ட நிறுத்தியது, அவள் கரம். வலக்கரத்தின் ஐந்து விரல்களால் அவன் முகத்தை மூட முடியவில்லையென்றாலும் அழுந்தப் பதிந்திருந்தன. விரல்களிடுகுகளால் அவள் முகத்தைத் தொட்டது, அவன் பார்வை. அவள் சின்னச் செய்கையும் அவனை அதிகமாகவே இரசிக்க வைக்கின்றதே! சிரிக்கிறான் என்றது உள்ளங்கையைப் ஸ்பரித்த அவனுதடுகள்.

"எல்லாம் வாயால சொன்னால்தான் உங்களுக்கு விளங்கும் என்ன?" முறைத்தாள், இலக்கியா.

“எனக்கொண்ணுமே பிரச்சின இல்ல. சொல்லாமல் இந்த அறையை விட்டுப் போக மாட்ட நீ!” சொன்னவன், அவள் உள்ளங்கையில் பட்டுபட்டென்று முத்தமிட்டான்.

விசுக்கென்று கரத்தை விலக்கியவள் முகம் செம்மையடித்தது. அதேவேகத்தில், "லவ் யூ லவ் யூ லவ்யூ! போதுமா இன்னும் வேணுமா?" கேட்டபடி அவனை இறுகக் கட்டிக்கொண்டாள். மீண்டும் நெஞ்சில் வந்து அணைந்தவளை வளைத்துக்கொண்டே அவள் தலையில் முகம் பதித்தவன், "இதைச் சொல்ல என்னபோட்டு என்ன பாடு படுத்திட்ட என்ன?" கிசுகிசுத்தான். கடைக்கண்ணால் பார்த்தவள் அவன் மனக்கட்டுப்பாட்டுக்கு வேட்டு வைப்பாள் போலிருந்தது!

இருவருக்குமே சோதனை வையாது, “இலக்கியா இன்னும் குளிச்சிட்டு வரேல்லையா?" ஏகாந்தத்தைத் கலைத்தது, மாறனின் குரல்.

"இல்லப்போல...இப்ப வந்திருவா." ஆரூரன்.

"என்ர அம்மாளே நான் இண்டைக்குத் துலைஞ்சன்!" கன்னத்தில் மென்மையாகப் பதிந்த அவன் முகத்தை விலத்திவிட்டுத் துள்ளி விலகி கதவோரம் ஓடியவள், மின்னலாகத் திரும்பி வந்து அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டுவிட்டு, "நாளன்றைக்கு எப்ப வருவீங்க எண்டு பார்த்துக்கொண்டு இருப்பன். ஃபோன்ல கதைப்பம்." சொன்னவேகத்தில் கதவைத் திறந்து அப்படியும் இப்படியும் பார்த்துவிட்டு ஒரே பாய்ச்சலில் வெளியேறியிருந்தாள்.

பட்டென்று அவள் விலகிச் சென்றுவிட்டதை ஏற்கமுடியாது அப்படியே அசையாது நின்றிருந்தான், அவன். சிறு சிணுக்கம் தான், மற்றும்படி அகம் நிறைவாகவுணர்ந்தது. மனதுக்கு மிகப் பிடித்தவகையில் துணையமைவது போன்றதொரு வரம் வேறேதும் உண்டா என்ன! அவனுக்குத் தன்னுள் இப்படியொரு காதலன் இருப்பதே இந்த இரண்டு கிழமைகளாகத்தான் தெரியும். அறிமுகம் செய்து வைத்தவளே அவள் தான்.

முகத்தில் முறுவல் வந்தமர்ந்துக்கொள்ள, தலைகோதிக்கொண்டே தன் முத்துக்குப்பையை எடுத்துக்கொண்டு நகர்ந்தவன் கதவை இலேசாகத் திறந்து யாரும் இல்லையென்று ஊர்ஜிதம் செய்தபின் விடு விடுவென்று வெளியேறினான்.

இரண்டெட்டில் தம்மறை வாசலில் சென்று நின்றுவிட்டே திரும்பிப் பார்த்தாள், இலக்கியா. வேந்தனின் தலை தெரியவில்லை. முகத்தை நிறைத்திருந்த மலர்வை எப்படிக் கட்டுபடுத்துவது? மிகையாவே தடுமாறிப்போனவள் அப்படியே நின்றுவிட்டாள். இப்படியே உள்ளே போனால் 'என்ன நடந்தது?' என்ற கேள்வி நிச்சயம்!

"இலக்கி இப்ப குளிச்சிருப்பா எண்டு நினைக்கிறன். எதுக்கும்...அஜி நீரும் வாறீரோ, நானும் குளிச்சிட்டு வாறன்." மாறனின் குரல் கதவோரமாகக் கேட்கவும் தான் சட்டென்று சுதாகரித்திருந்தாள். அதேவேகத்தில், தலை மீண்டுமொருதடவை பின்னால் திரும்பிற்று! 'இப்ப மட்டும் வேந்தனை ஏதும் கண்டா!' மனதுள் பதற்றமும்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
மறுநொடி, கதவைத் திறந்து உள்ளிட்டு விட்டாள்.

"அப்பாடா ஒரு வழியா வந்திட்டீரா! சரி, நான் போய்க் குளிச்சிப்போட்டு வாறன்." மாறன் வெளியேற, "வரவாப்பா வேணும்?" அஜி.

"இல்ல, நீர் இரும்." வெளியேறினான், அவன்.

உள்ளே மொத்தக் குடும்பமும் குழுமிருந்தது. அவர்களை நிமிர்ந்து நோக்கவே மிகவும் தயங்கினாள், இலக்கியா. கையில் குளியலறைப்பை இருந்திருக்க அதை வைக்கும் சாட்டில் குளியலறைக்குள் சென்றிருக்கலாமே!

அதற்குள், "இலக்கிக்கா உனக்கொரு விசயம் தெரியுமே!" சந்தோசக் கூவலோடு எழுந்தோடி வந்த ஆரூரன், “முதல் கையைத் தாங்கோ ஒரு சந்தோசமான செய்தி!" அவள் கரமிரண்டையும் பற்றிக் குலுக்கினான்.

“என்ன ஆரூரன்?" கேட்டவள் பார்வை அங்கிருந்தோரை அவசரமாகத் தொட்டு வந்தது. எல்லோர் முகங்களும் எக்கச்சக்க மலர்வில்!

"வேந்தன் ணா இனி நம்மில ஒருத்தர்." அவன் சொல்ல இவள் இதயம் படீர் படீரென்று அடித்துகொண்டது. 'அதுக்குள்ள இங்க எடுத்துச் சொல்லிபோட்டாரோ!' இப்படித்தான் எண்ணினாள். சின்னதான தயக்கத்தோடு பெரியவர்கள் பக்கம் நகர்ந்தது, அவள் பார்வை. அவர்களோ, ஆருரனே சொல்லட்டும் என்ற பாவனையில் முறுவலோடு அமர்ந்திருந்தார்கள்.

"வேந்தண்ணாவ சும்மா நீங்க ரெண்டு வார்த்த கடிச்சாலே ஒராளுக்கு ஏன் அவ்வளவு கோவம் வந்தது எண்டு நினைக்கிறீங்க? எல்லாம் பொசெஸ்சிவ்னஸ் செய்த வேலை! இருந்தாலும், கூட வளர்ந்த நம்மள விட அவர் பெரியாளாகிட்டார் என்ன?" இலக்கியாவுக்குச் சொல்லத் தொடங்கி, பின்னால், தாயோடு அணைந்தபடியிருந்த பெரிய தமக்கையில் முடித்தான், ஆரூரன்.

கேட்டிருந்த இலக்கியாவோ முழுதாகக் குழம்பி நின்றாள். 'இதில் கவிக்கா எங்க வந்தா?' முதலில் இப்படி எண்ணிய உள்ளம் சகோதரனின் வார்த்தைகளை கிரகித்துக்கொண்டதும் துடிப்பை மறந்து நின்றிட்டு!

"நம்மட கவிக்காக்கு வேந்தன்ணாவப் பிடிச்சிருக்காம். கிரிஃபத் ஒபிஸ்ர்வேட்டரி போன அண்டு இரவே பெரியமாமாட்டத் தன்ர விருப்பத்தச் சொல்லிப் போட்டவாம். அதுக்கு முதலே வேந்தண்ணாட அம்மாவையள் எடுத்துப் பெரியப்பாட்ட கவிக்காவ தங்களுக்குப் பிடிச்சிருக்கு எண்டு கேட்டுக் கலியாணப் பேச்சுப் போயிருக்கு! நாளாண்டைக்கு முறைப்படி ரெண்டு குடும்பங்களும் சந்திக்கிறதாம். வேந்தன் அண்ணாக்கு அவேட அம்மா சர்ப்ரைஸ் குடுக்க கவிக்காவப் பேசி முற்றாக்கினதச் சொல்லேல்லையாம்." படபடவென்று கொட்டினான்.

"நாம வந்திறங்கினதும் அப்பம்மா வேந்தண்ணாவ அப்படிப் பார்த்துத் தடவிக் கதைக்கவே எனக்குக் கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. அது பார்த்தா... கெதியா டும் டும் தான்." அவன் தொடர, இலக்கியாவுக்கோ, அந்த அறையே கிர்ரென்று சுழன்றது. அப்படியே தடாலென்று விழுந்திருப்பாள், கவி ஓடிவந்து கட்டிப்பிடித்திருந்தாள், இறுகவே!
 

ரோசி கஜன்

Administrator
Staff member
"சொறிடி! உன்னில சரியாக் கோவிச்சிட்டன். கோவிக்காத என்ன!" சின்னகுரலில் சொல்லிக்கொண்டே அழவே தொடங்கிவிட்டாள், கவி.

சற்றுமுன் இதமும் நேசமுமாக மலர்ந்திருந்த இலக்கியினுள்ளம் கண்டபடி கசங்கிச் சுருள, விழிகள் ஆறாகச் சொரிந்தன.

"இவையளுக்கு இதுவே வேலை! பயணம் வெளிக்கிட்டா அதை அனுபவிக்காமல் முட்டுப் பட்டிங்க போல!" மலர், பேத்திகளைப் பார்த்துக் கடிந்து கொண்டாலும் அவர் கண்களும் கலங்கிற்று!

"இவள் என்ர தங்கச்சி! நான் சண்டை போடாமல் ஆர் போடுறது என்னடி?" கேட்டுக்கொண்டே அவளை நிமிர்த்தி, பாசத்தோடு விழிகளைத் துடைத்து விட்டாள், கவி.

அஞ்சும் கெட்டு அறிவும் கெட்ட நிலை இலக்கியாவுக்கு. தமக்கையையோ அங்கிருக்கும் யாரையுமே பார்க்க விரும்பவில்லை அவள். அங்கிருந்து எங்காவது கண்காணாது சென்றுவிடவேண்டும் போலிருந்தது. ஆயுளுக்கும் திரும்பாதிருந்திடவேண்டும் போலவும்!

“பயணம் தொடங்கினதில இருந்து மாறி மாறி வேந்தனோட கடி, இனி என்ன வாழ்நாள் முழுதும் கடிபடலாம்.” ரதி நகைப்போடு சொல்ல, “அப்ப வாழ்நாள் முழுதும் அக்காவும் தங்கையும் சிண்டுப்பிடியா எல்லா இருக்கப் போகுது!” சுகுணாவும் சேர்ந்துகொண்டார்..

“நீங்க என்னவும் சொல்லுங்கோ. எங்களுக்கு வேந்தன் அண்ணா எங்களோடவே இருப்பார், எங்களிட சொந்தம் எண்டதில பே சந்தோசம் என்ன இலக்கிக்கா!” அவள் கரம் பற்றியபடி சொன்னான், ஆரூரன்.

“என்ன டி இலக்கி ஒண்ணுமே சொல்லுற இல்ல?” கவி கேட்கவும், பார்வையை மறைந்த விழிநீரைத் துடைத்தபடி, “இல்...லக்கா...நல்ல சந்தோசம். கொங்கிராட்ஸ் கா!” அவளா சொன்னாள்? இறுகிப்போன உள்ளம் கடமைக்காக வார்த்தைகளைத் தள்ளிட்டு!

அதையெல்லாம் யாருமே கவனிக்கவில்லை. தம் வீட்டு மூத்த மகளுக்கு எல்லோருக்கும் பிடித்த வகையில் மாப்பிள்ளை அமைந்த மகிழ்வில் வேந்தன் பற்றியே கதை போய்க்கொண்டிருந்தது.

வாழ்த்துச் சொன்ன தங்கையை மீண்டும் கட்டிப் பிடித்தாள், கவி.

கட்டியணைத்த தமக்கை முதுகில் ஆதரவாகத் தட்டிவிட்டு, “முகம் கழுவிப்போட்டு வாறன் கா!” அருகிலிருந்த குளியலறைக்குள் புகுந்துகொண்டாள், இலக்கியா.

வீணாகத் தங்கையோடு பொருது போட்டுவிட்ட உணர்வு கவியினுள். அதுவும் வேந்தனை முன்னிறுத்தி! வேந்தனின் அன்னைக்குத் தன்னில் விருப்பம் என்று அவளுக்குத் தெரியும் தான். அது கல்யாணம் வரை சென்றதில் இப்போதும் அவளுள் வியப்பே!

‘இது தெரியேக்க வேந்தனுக்கு எப்பிடி இருக்கும்! அறியும் பேராவல் அவளுள்! தன்னுள் அவன் மீதெழுந்த அன்பை அவனிடம் வெளிப்படுத்தியிருந்தாள். அது அவனுக்கும் நன்றாகவே விளங்கியும் தன்னைத் தவிர்த்தானே! இப்போது யோசிக்கையில் வந்த இடத்தில் ஏனென்று யோசித்தானோ என்றிருந்ததில் அவனில் அன்பும் மரியாதையும் அதிகரிக்கவே செய்திட்டு!

‘எது எப்பிடியோ என்ர மனச ஆன்ட்டி உணர்ந்திருக்கிறாரே!’ மகிழ்வோடு எண்ணிகொண்டாள்.

“கவியோடு நாலைஞ்சு தடவைகள் கதைத்தவராம், நல்லாப் பிடிச்சிப்போட்டுதாம். அதுதான் தங்கட மகனுக்குச் செய்யக் கேக்கினம்.” என்றுதான் சுதர்சனம் மலரிடம் சொல்லியிருந்தார். அதையே இவளிடம் சொல்லியிருந்தார்கள்.

“என் மகனும் உங்கட மகள் கவியும் விரும்பீனமாமே, உங்களுக்குத் தெரியுமா?” என்று வேந்தனின் தாய் கேட்க, சுதர்சனுக்கு உண்மையில் அதிர்ச்சிதான். அதற்கு முதல் எச்சந்தர்ப்பத்திலும் வேந்தனைச் சந்தித்ததாக அவருக்கு நினைவில்லை. அப்படியிருக்க, மகள் மட்டும் எப்படி எங்கு சந்தித்திருக்க முடியும்! அப்போ, இந்தப் பயணத்தில் சிலநாட்கள் அறிமுகத்தில் காதலா? அதையும் அவரால் அவ்வளவு இலகுவில் ஏற்க முடியாதிருந்தது. ஆனால், வேந்தனின் குடும்பமும் வேந்தன் பற்றி சகோதரர்கள் நாளாந்தம் வாசிக்கும் நற்சான்றுப்பத்திரமும் அவர் மனதுள் சுணக்கத்தை ஏற்படுத்தவில்லை.

‘மகள் விரும்பினால் செய்து குடுப்பமே!’ முடிவெடுத்தார்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
“லொஸ்வேகசில வினித் வீட்டில வச்சு வினித்திட்ட சொல்லிகொண்டிருந்தத அவன்ர அம்மா கேட்டுச் சொல்லப் போய்த்தான் எனக்கே விசயம் தெரியும். அவையள் நமக்கெல்லாம் சர்பரைஸ் தரப்போகினமாம். அதுக்கு முதல் நாம சர்பரைஸ் குடுப்பம்.” என்று, அவர் தன்னிடம் சொன்னதை சகோதரர்களிடமும் மனைவியிடமும் மாத்திரமே சொல்லியிருந்தார், சுதர்சனம்.

“வேந்தன் அண்ணாவோட எடுத்துக் கதைப்பமோ! ஆவலோடு கேட்டான் ஆரூரன். கவிக்குமே செய்தி கேட்ட கணம் முதல் அந்த எண்ணமே!

“அவேட அம்மா திருப்பி திருப்பிச் சொன்னவா அவாவே சொல்லட்டும்” சுதர்சனம் தான் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

“சரி விடுங்க, ஒரே ஒரு நாள் பொறுப்பமே!” ஆரூரன் சொல்ல, மூலையில் கிடந்த இருக்கையில் சென்றமர்ந்து பயணத்தில் எடுத்த புகைப்படக்களைப் பார்க்கும் சாட்டில் வேந்தனைக் கண்ணாரப் பார்ப்பதில் முனைந்தாள், கவி.
 
Top Bottom