தீஞ்சுவை மலர்
அத்யாயம் -1
அந்த கிருஷ்ணர் கோவிலில் இறைவனை தரிசித்து விட்டு அவர்கள் கொடுத்த சந்தனம், குங்குமம் பூ ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தான் ஆரிவ். அப்போதுதான் ஆங்காங்கே மற்றவர்கள் கொட்டி வைத்திருந்த குங்குமம் எல்லாம் ஒரு பெண் சுத்தம் செய்து வைத்திருந்தாள். மீண்டும் அங்கே கொட்ட மனம் வரவில்லை. குங்குமம் சிறிது மீதம் இருந்தது அதை அங்கே இருந்த கிண்ணத்தில் கொட்டினான். பூவை என்ன செய்வது? பிராகாரம் சுற்றும் போது அவளே கண்ணில் பட்டாள். அவள் கையில் திணித்து விட்டு நகர்ந்து கொண்டான். லேசான புன்முறுவல் அவன் முகத்தில் இருந்தது. ஏனோ அவளால் அவனை தவறாக நினைக்க முடியவில்லை. அமைதியாக தலையில் சொருகிக் கொண்டு வெளில்யில் வந்தாள் . அவனும்தான்.
செருப்பு வைக்கும் இடத்தில் கொடுக்க அவனிடம் சில்லறை இல்லை.
"நான் கொடுக்கட்டுமா?"
அவளேதான் . அவன் கண்களை பார்த்து கேட்டாள்.
பரவாயில்லை. வேண்டாம் என்று எல்லாம் அவன் சொல்லவில்லை. சரி என்று விட்டான். ஒரு பெண் மனதில் அமர வெகு சுலபமான வழி, தைரியம்தான். கண்ணைப் பார்த்து பேசும் தைரியம். அதை எல்லாம் அவன் அப்போது யோசிக்கவில்லை.
அவன் ஒரு மருத்துவன். இங்கே மருத்துவம் படித்து பிறகு வெளிநாட்டுக்கு சென்று படித்து விட்டு இப்போது அவசர மனநல மருத்துவனாக சில மருத்துவமனைகளில் வேலை செய்கிறான். அதைத் தவிரவும் சில கல்லூரிகளில் விசிட்டிங் ப்ரொபஸராகவும் சில நாட்கள் சென்று விட்டு வருவான். யாருக்காக இத்தனை ஓட்டம்? எங்கு ஓடினாலும் யாரிடமிருந்து அவன் தப்பிக்க நினைக்கிறானோ அது எளிதில் நடந்து விடுமா?
அவசரமாக புல்லட்டில் ஏறிச் சென்றவனை ஆச்சர்யமாக அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். இதுவரை யாரும் அவளை நின்று திரும்பி பார்க்காமல் எந்த ஆணும் சென்றதில்லை. அவள் அழகுதான் காரணமா?
ஏனோ இவன் தன்னை திரும்பி பார்க்க மாட்டானா என்று மனம் ஏங்கியது. இல்லை என்று அவன் தான் எப்போதோ கிளம்பி போய் விட்டானே! ஏக்கம் பெரு மூச்சாக வந்தது. அவள் பார்த்த போது தான் அவன் பார்க்கவில்லையே தவிர அவன் கொடுத்த பூவை அவள் தலையில் சொருகியபோது அந்த நீண்ட பின்னல் போட்ட குட்டி ஆட்டத்தை தான் அவன் பார்த்து ரசித்துவிட்டானே.
இவர்களின் அடுத்த சந்திப்பு எப்படிப்பட்டதாக இருக்கும்?
தன்னைப் பார்க்காத முதல் ஆண் என்பதா ? அல்லது அவனின் வசீகரமானத் தோற்றமா ?
அவன் தான் எப்போதோ கிளம்பிப் போய் விட்டானே! ஏக்கம் பெரு மூச்சாக வந்தது. அவள் பார்த்த போது தான் அவன் பார்க்கவில்லையே தவிர அவன் கொடுத்த பூவை அவள் தலையில் சொருகியபோது அந்த நீண்ட பின்னல் போட்ட குட்டி ஆட்டத்தை தான் அவன் பார்த்து ரசித்துவிட்டானே.
வேகமாக வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்தவனுக்கு ஏனோ கண்கள் தன்னையும் அறியாமல் அவளின் புறம் திரும்பியது
சிரிக்கும் விழிகளா? உதட்டில் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகையா?
எதுவோ ஒன்னு . பார்த்தா சரி .

============================================
தமிழ் நாட்டின் மையப் பகுதி சென்னை., அதன் மையப் பகுதியில் இயங்கும் ஒரு பெண்கள் கல்லூரி. சென்னைல எல்லாமே மையப் பகுதிதான். அது ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்கள் சொல்வார்கள் . நான் சொல்வது அது போல அல்ல. மையப் பகுதி என்றால் மா(மை)யமேதான். பென்ஸ் கார்கள் சிக்னலில் காத்துக் கிடக்கும். நீ எண்ணிக்கையில் குறைவுதான். எங்களை பாரு. பீ எம் ட பில் யூ கூடவே வந்து நிற்கும். நீங்க எல்லாரும் எவ்ளோ இருந்தா என்ன நான் தான் மாஸ்! ரோல்ஸ் ராய்ஸ் இன்னும் பெயர் தெரிந்த தெரியாத பல கார்கள், வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பைக்குகள் என் விலையே கார் விட ஜாஸ்தி! என்று சொல்லிக் கொண்டு வந்து நிற்கும். பலரும் அங்கே இடம் வாங்க நீ நான் என்று போட்டி போட்டாலும் சரி, மனம் நிறைய ஆசை இருந்தாலும் சரி ஒன்றும் நடக்காது. அரசியல் வாதிகளின் ஆசிர்வாதமும் அன்னை மகாலஷ்மியின் ஆசிர்வாதமும் இருந்தால் மட்டுமே அங்கே காலடி எடுத்து வைக்க முடியும். அல்லது கோடி கோடியாக பணம் வாங்கும் நடிகராகி இருந்தாலும் சாத்தியமே.
அந்த இடத்தைப் பற்றி சொல்லியாகிவிட்டது. இடம், வாகனங்கள் இவற்றைப் பற்றி சொன்னால் போதுமா? மனித உயிர்களுக்கு மதிப்பில்லையா? இருக்கே! வந்து பாருங்க. கலர் கலரா பொண்ணுங்க அப்பா! அடுக்கு மாடி கட்டிடங்களில் வேலை செய்யும் மாடர்ன் மங்கைகள் லூஸ் ஹர் விட்டு அழுத்தமான உதட்டு சாயம் பூசி நிற்கும் அழகை விட அவர்களின் தன்னம்பிக்கையும் ஆளை மயக்கும் நுனி நாக்கு ஆங்கிலமும் ப்ரமாதம்தான். மற்றது எல்லாம் சரிதான். இருப்பினும் அந்த ஷர்டில் முதல் பட்டன் காலருக்குக் கீழ் போடாமல் இருப்பதன் ரகசியம் என்ன என்று எனக்குத் தான் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் அப்படியே ஆன் பெண் வேறுபாடு இல்லாமல் பல ஓட்டைகளை சுமந்துக் கொண்டிருக்கும் பேண்டின் ரகசியமும் தான். கல்லூரி என்று சொல்லி விட்டேன். அப்படி என்றால் இளைஞர்கள் இல்லாமலா? பெண்களுக்கு மட்டும்தான் அங்கே அனுமதி அப்படி என்றால் ஆண்கள்? வெளியில் கேட் வரை நின்று சைட் அடிக்கலாம். ஸீன் போடலாம் அவ்வளவுதான். அதற்கு மேல்? சாமர்த்தியம் இருந்தால் கரக்ட் செய்துக் கொள்ளலாம். அது அவரவர் சாமர்த்தியம்.
"கண் முன்னே எத்தனை நிலவு காலையிலே" வரிகள் உங்கள் நினைவுக்கு நிச்சயம் வர வேண்டும் . இல்லை என்றால் நீங்கள் எல்லாம் மனிதர்களே அல்ல.
இந்த வரிகள் எல்லாம் நம் நாயகனுக்குப் பொருந்தாது. ஆனால்,
" ராத்திரியில் கனவுக்குக் காரணம் பெண்தான். ரகசியமாய் பார்க்கத் தோன்றும் அவள் முகம் தான்."
இந்த வரிகள் வேண்டுமானால் நாயகனுக்காக எழுதப் பட்டிருக்கலாம்.
==========================================================================
இதோ தினம் போல அவளும்தான் கோவிலுக்கு வந்துக் கொண்டிருக்கிறாள். ஏனோ கண்களும் மனமும் தன்னையும் அறியாமல் அவனைத் தேடுகிறது. தனக்கு என்ன தகுதி இருக்கிறது? தன் நிலைக்கு அவனைப் போன்ற அழகான கம்பீரமான ஆணை நினைப்பதும் தவறுதான். சில சமயம் மூளை சொல்கிறது. மனமும் கண்களும் தான் அதை கேட்கவே மாட்டேன் என்கிறதே? இருபதுகளில் இருக்கும் பெண்ணிடம் இது தவறு என்று சொல்லி விட முடியுமா?
இதோ அதோ என்று வயதும் இருபது ஒன்று ஆகி விட்டது. இன்று பிறந்த நாள் . அவர் வருவாரா? மனம் தேடியது. அவன் வர மாட்டான். ஆனால் அவனை பார்த்து விடுவாள் . எப்படி?
அவள் யமுனா. அழகானவள். மிக அழகானவள். நீங்கள் நினைப்பது போல எல்லாம் இல்ல. பேரழகி. நீண்ட கூந்தல். கிறங்கடிக்கும் கண்கள். தேனூறும் இதழ்கள். மாம்பழக் கன்னங்கள். அழகிய கழுத்து அதற்கு கீழே?
"சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி."
பொதுவாக இந்த வர்ணனைகள் எனக்குப் பிடிப்பதில்லை .
மனம் என்பது நுட்பமானது. அது ஆண்களை விட பெண்களுக்கு இன்னும் சற்று அழுத்தமானதும் கூட. கடலின் ஆழம் கண்டுபிடித்து விடலாம். பெண்களின் மனதின் ஆழம் கண்டுபிடிக்க முடியாது ஏதோ வேலை வெட்டி இல்லாதவர்கள் சொல்லி இருக்கலாம். அல்லது வெட்டி நியாயம் பேசும் பலர் இருக்கிறார்களே அவர்கள் யாராவது சொல்லி இருக்கலாம்.
"எங்கிட்ட கொஞ்ச நேரம் உக்காந்து பேசுங்களேன். என்னோட மனசுல ஆயிரம் விஷயங்கள் இருக்கு. உங்ககிட்ட சொல்லணும். ப்ளீஸ்! அன்பு, காதல் கொட்டிக் கொடுக்க காத்திருக்கிறார்கள் பல பெண்கள். புரிந்துக் கொள்ளாத ஆண்கள் என்பது விடவும் தெரிந்துக் கொள்ள விரும்பாத ஆண்கள் தான் பெரும்பாலும். அதில் ஒருவர் யமுனாவின் தந்தை. வேறு சில கதாபாத்திரங்களும் அப்படித் தான் இருக்கும். படிக்கும் போது தெரிந்துக் கொள்ளலாம்.
யமுனாவின் தந்தை சிறு வயதிலிருந்தே பொறுப்பில்லாத்தன்மை கொண்ட சிறந்த அந்த மகன். பிள்ளை பெற்றுக் கொள்ளும் தகுதி இருந்த ஒரேக் காரணத்தால் திருமணம் செய்துக் கொண்டவர் . அளவுக்கு அதிகமான கோபம் கொண்ட மனிதனைக் கல்யாணம் செய்துக் கொண்ட மனைவி விரைவிலேயே இறந்து போனார்.
இவள். அடுத்து ஒரு தங்கை. அதுவும் திருமணம் செய்துக் கொள்ளாமல் மனைவியாக வாழ்ந்தவரது மகள். இவளுக்கு பதினெட்டு வயதானதும் செய்த முதல் வேலையே அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தது தான்.
"நீ என்னை விட வயசுல சின்னவதான். இருந்தாலும் எனக்கு அம்மா ஸ்தானத்துல இப்ப நீதான் இருக்க." கண்ணீரோடு காலில் விழுந்தவரை எப்படி சமாதானப்படுத்துவது என்றுக் கூட தெரியாமல் இருந்தாள் அவள். அவள் தந்தையோ புது மாப்பிள்ளையாக முதலிரவுக்கு தயாராகி நின்றார் அன்றைய இரவில்.
அனாதையாக இருந்து அத்தை வீட்டில் கொடுமைகளை அனுபவித்தவருக்கு அணைத்து ஆறுதல் சொல்லயதில் பிறந்தவள் தான் அடுத்த தங்கை உமா . இரண்டாவதும் பெண்ணாக பிறந்ததில் தந்தைக்கு வருத்தம்தான். மூன்று நான்கு., மகன் பிறக்க ஆசைதான். தனக்கே தாலி இல்லாதபோது அடுத்து அடுத்து எப்படி? தைரியமாக சென்று கரு கலைப்பு செய்துவிட்டு ஆபரேஷன் செய்துக் கொண்டார் சித்தி ரமா . அதற்காக அவர் வாங்கிய அடிகள் பல. இருந்தாலும் அடுத்த பெண்ணைத் தேடித் போகவில்லை தந்தை . கையில் பணம் இல்லாததுக் காரணமாக இருக்கலாம். சித்தி அன்று அதை செய்திருக்காவிட்டால் என்றால் யமுனாவின் நிலை அரங்கேற்ற நாயகி கதை தான். கெட்டதில் நல்லதாக அது ஒரே ஒரு நன்மை நடந்தது.
எங்கும் வேலைக்குச் செல்லாமல் ஊரெங்கும் கடன் வாங்கி வைத்திருந்த தந்தையை சமாளிக்க முடியாத யமுனா , கல்லூரிக்குச் செல்லாமல் வேலைக்குப் போக ஆரம்பித்தாள். பணம் பத்தவில்லை.
எத்தனை எண்ணெய் ஊற்றினாலும் இன்னும் இன்னும் என்று கேட்கும் நெருப்பு போல அவர் வாங்கிய கடனும் வாங்கிக் கொண்டிருக்கும் கடனும் அவர்களை முழுங்கிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராமல் வந்தது ஒரு விளம்பர வாய்ப்பு. ஏற்றுக் கொண்டாள். முதலில் ஆடை விளம்பரம் என்று சொன்னவர்கள் அங்கே அழைத்துச் சென்று தான் அது என்ன மாதிரி விளம்பரம் என்றே சொன்னார்கள். பத்திரத்தில் கையெழுத்து போட்டாகி விட்டது. இனி ஒன்று செய்ய முடியாது.