அத்தியாயம் - 1
மங்கல நாதஸ்வரத்தின் இனிய இசை அந்த திருமண மண்டபம் முழுவதும் அலைபோல் பரவி எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ராகமும் அங்கே இருந்தவர்களின் மனதை நெகிழச் செய்ய, விழா முழுவதும் ஒரு புனிதமான பரவசம் நிரம்பியிருந்தது.
மேடையின் இருபுறமும் அலங்கரிக்கப்பட்ட மல்லிகை, ரோஜா மலர்களின் மணம் காற்றில் கலந்திட, உறவினர்களின் மகிழ்ச்சியான சிரிப்புகளும், குழந்தைகளின் சின்ன சின்ன ஓட்டங்களும் அந்த தருணத்திற்கு இன்னும் உயிரூட்டின.
ஐயர் உரக்க உரைத்த "கெட்டி மேளம்... கெட்டி மேளம்..." என்ற குரலை தொடர்ந்து மணமகனின் கையில் மங்கல நாணை எடுத்து கொடுக்க, சிறிது நடுக்கத்துடன் வாங்கி கொண்ட கௌதம் அந்த மங்கல நாணை பவித்ராவின் கழுத்தில் அணிவித்தான். தலைகுனிந்து அந்த தாலியை ஏற்றுக் கொண்ட பவித்ராவின் இதயமோ ஒரு கணம் நின்று துடித்தது.
இந்த சடங்குகள் அவளுக்குப் புதிதல்ல. ஆனால், முதல் முறை இருந்த அறியாமையும் ஆசையும் இப்போது அவளுக்கு இல்லை. அதற்குப் பதிலாக இனம் புரியாத ஒரு பயமும், நடுக்கமும் மட்டுமே எஞ்சியிருந்தது, அவனுக்குள்ளும் தாலி கட்டிய நேரம் ஒரு சிறு பதட்டம் இருந்தது உண்மையே,..
தனது உடைந்த வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை இணைக்க முயன்றுக் கொண்டிருந்தான்.
ஆம்... இப்போது நடைபெறுவது சாதாரண திருமணம் இல்லை.
இது அவர்களின் மறுமணம்.
இருவருக்கும் இரண்டாவது வாழ்க்கையின் தொடக்கம்.
உடைந்த இரு இதயங்களை இணைத்து, அதில் ஒரு புதிய நம்பிக்கையை விதைக்கத் துடித்தனர் அவர்களின் உறவினர்கள்.
சுற்றியிருந்த இரு குடும்பத்தாருடைய முகங்களிலும் ஒரு நிம்மதி. 'இப்போதாவது எங்கள் பிள்ளைகளின் வாழ்வில் ஒளி வீசுமா?' என்ற ஏக்கம் அவர்களின் கண்களில் தெரிந்தது.
சடங்குகள் முடிந்து இருவரும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள,.. 'எந்த குறையும் இல்லாமல் நீடூழி வாழ வேண்டும்' என்ற வாழ்த்துக்கள் அவர்கள் மீது பொழியப்பட்டது.
பவித்ராவிற்கு இப்போது வயது வெறும் இருபத்தியொன்று தான். ஆனால், அவள் அனுபவித்த வலிகளோ ஆயுள் முழுமைக்கும் போதுமானது. பதினேழு வயதிலேயே நல்ல மாப்பிளை, வசதியான வாழ்க்கை என்ற ஆசையில் கிஷோருக்கு அவளை மணம் முடித்துக் கொடுத்தனர்.
நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் தாய் லலிதா, தந்தை மாணிகத்திற்கு அன்பு மகளாகவும், அண்ணன் தருணேஷிற்க்கு செல்லத் தங்கையாகவும் வளர்ந்தவளுக்கு, கிஷோரின் மூலம் கிடைத்தது ஒரு நரக வாழ்க்கையை, அந்த கொடியவன் கையில் சிக்கி அவள் வாழ்வே சின்னாபின்னமானது.
மகள் வாழாவெட்டியாக இருந்தாலும் பரவாயில்லை, எங்களுடனேயே நிம்மதியாக இருக்கட்டும் என்று துணிந்து முடிவெடுத்து அவளை அவனிடமிருந்து மீட்டனர் அவளது குடும்பத்தினர், ஒரு வருடப் போராட்டத்திற்குப் பின் விவாகரத்தும் கிடைத்த நிலையில் தன் பெற்றோர் இன்னொரு திருமணத்தை பற்றி பேசிய போது, மீண்டும் ஒரு திருமணமா என்று அலறியவள், குடும்பத்தின் கண்ணீருக்காகவும் வற்புறுத்தலுக்காகவும் கௌதமை மணக்கச் சம்மதத்தையும் தெரிவித்தாள்.
பவித்ராவிற்குப் பயம் என்றால், கௌதமிற்கு அது ஆறாத வடு. அவனது முதல் மனைவி கௌசல்யா, அவளுக்கு பிடித்தவனுடன் ஓடிப்போனது ஒரு ஆண்மகனாக அவனுக்குப் பெரும் அவமானம். பெண்களையே வெறுத்து ஒதுக்கிய அவனும் தன் குடும்பத்திற்காக தான் இத்திருமணத்திற்கு சம்மதித்தான்.
அவனது தந்தை மறைந்த பிறகு, தாய் ஜானகியும் தமக்கை சரண்யாவும் தான் அவனது உலகம். சரண்யா, கௌதமை விட பத்து வயது மூத்தவள். அவனுக்கு அவள் அக்கா மட்டுமல்ல, இன்னொரு தாய் போன்றவள். அவளது கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் பெரும்பாலும் அவள் தாய் வீட்டிலேயே தங்கி இருப்பாள், அவளது கணவனுக்கு உறவுகள் யாரும் இல்லாததால் கௌதமின் குடும்பத்தையே தன் குடும்பமாகப் பார்ப்பவன்.
கௌதம் வசதியிலும் குறைந்தவன் கிடையாது. 'கௌதம் குரூப்ஸ் ஆப் கம்பெனி' என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் உரிமையாளன். அவனது வீடு ஒரு மாளிகை போல வீற்றிருக்கும். மாப்பிள்ளை மிகப் பெரிய வசதி படைத்தவர் என்று தெரிந்த கணம் பவித்ராவிற்கு பயம் இன்னும் அதிகமானது.
'மீண்டும் ஒரு பணக்கார வாழ்க்கை தன்னை சீரழித்து விடுமோ' என்ற பயம் அவளை துளைக்க, அவளின் அண்ணன் தருணேஷ் அவளுக்கு தைரியம் கொடுத்தான்.
"வசதியானவங்களா இருந்தாலும் அவங்க தங்கமான மனசு உடையவங்க பவி, நான் கௌதம் சாரோட கம்பெனியில தான் வேலை பார்க்கிறேன், அவர் உனக்கு கண்டிப்பா நல்ல கணவனா இருப்பாரு, இந்த தடவை என்னை நீ முழுசா நம்பலாம்" என்ற அண்ணனின் வார்த்தைகளுக்காகவும் அவள் கழுத்தை நீட்டினாள்.
மண்டபத்தின் ஒரு சிறிய அறையில் தன் குடும்பத்தினர் புடைசூழ நின்றிருந்தாள் பவித்ரா. இன்னும் சில நிமிடங்களில் அந்த வீட்டின் மகள் என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு, கௌதமின் மனைவி என்ற புதிய அடையாளத்தோடு அவன் வீட்டினுள் நுழைய போகிறாள்,..
பவித்ராவின் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்த அவளது தந்தை மாணிக்கமும், தாய் லலிதாவும் அவளது கைகளைப் பற்றி தைரியம் சொல்லிக் கொண்டிருந்தனர். அண்ணன் தருணேஷோ அவளது தோளை மென்மையாகத் தட்டி, "பயப்படாத பவி... எல்லாம் நல்லதா நடக்கும்," என்று ஆறுதல் கூறினான்.
ஆனால், மற்ற உறவினர்களின் அறிவுரைகள் தான் அவளுக்குள் ஒரு விதமான நெருடலை ஏற்படுத்தின. அவளது பெரியம்மாவும், சித்தியும் அவளை நெருங்கி.. "பவித்ரா, நடந்ததை பத்தியே நினைச்சுட்டு இருக்காத. பழைய நினைப்புங்க எதையும் மனசுல வச்சுக்காம, அவரோட நல்லபடியா வாழ ஆரம்பி," என்றனர்.
பெரியம்மாவின் மகளோ அவளது காதோரம் குனிந்து, "ஆரம்பத்துல கொஞ்சம் சங்கடமாகவும், பதட்டமாகவும் தான் இருக்கும், ஆனா அதெல்லாம் மாப்பிளை கூட நீ தனியா இருக்கிறப்போ காணாம போயிடும், அதனால எதையும் யோசிக்காம பார்த்து நடந்துக்கோ," என்று திருமண வாழ்வின் யதார்த்தத்தைச் சொல்ல, பவித்ராவின் இதயம் ஒரு கணம் அதிர்ந்தது.
'தனியா இருக்கிற நேரம்...' இந்த வார்த்தை தான் அவளுக்குப் பெரும் பயத்தைத் தந்தது. கிஷோருடன் தனியாக இருந்த அந்த நரகக் கணங்கள் நிழலாடி அவளை அச்சுறுத்தின, இருபத்தியோரு வயதுப் பெண்ணிற்குரிய துள்ளல் அவளிடம் இல்லை, மாறாக, ஒரு முதிர்ந்த பெண்ணின் மௌனமே அவளிடம் எஞ்சியிருந்தது.
அவர்கள் பேச பேச அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தொண்டை அடைத்தது. ஆனாலும், தன் குடும்பத்தினர் முன்னால் அழுதால் அவர்கள் மீண்டும் உடைந்து போவார்கள் என்று தெரிந்தே, அந்தக் கண்ணீரைத் தொண்டைக்குள்ளேயே விழுங்கியவள், அவர்கள் சொன்ன எதற்கும் பதில் பேசத் தோன்றாமல், மெல்லத் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
அறையின் கதவு தட்டப்படும் சத்தம் பவித்ராவின் இதயத் துடிப்பை ஒரு கணம் அதிகரிக்கச் செய்தது. "மாப்பிள்ளை கிளம்பத் தயாரா இருக்காரு, பொண்ணைக் கூட்டிட்டு வாங்க!" என்ற குரல் கேட்டதும், அதுவரை அவளுக்குள் இருந்த சிறு பிடிமானமும் நழுவுவது போல் இருந்தது. ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டவள், கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு பாரமான பாதங்களுடன் எழுந்தாள்...
உறவினர்கள் சூழ மண்டபத்தின் வாசலுக்கு அழைத்து வரப்பட, அங்கே கௌதம் கம்பீரமாக அதே சமயம் ஒருவித மௌனத்துடன் காத்திருந்தான். அவனது கண்கள் பவித்ராவை ஒருமுறை ஏறிட்டன, அதில் ஆதிக்கமோ, ஆசையோ தெரியவில்லை மாறாக, ஒருவிதமான வெறுமையும் அமைதியும் மட்டுமே இருந்தது.
அலங்கரிக்கப்பட்ட கார் தயாராக நிற்க, பவித்ரா காரில் ஏறுவதற்கு முன்னால் தவிப்புடன் தன் குடும்பத்தினரைத் திரும்பிப் பார்த்தாள். லலிதாவின் கண்களில் கண்ணீர் வழிய, மாணிக்கம் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தார். அண்ணன் தருணேஷ் மட்டும் நம்பிக்கையூட்டும் விதமாக மெலிதாகப் புன்னகைக்க, அந்தப் பார்வை கொடுத்த தைரியத்தில் பவித்ரா காரின் பின் இருக்கையில் ஏறி அமர, அவளைத் தொடர்ந்து கௌதமும் ஏறிக்கொண்டான்.
கார் மெல்ல நகரத் தொடங்கிட, அவனது குடும்பத்தினர்கள், மற்றொரு காரில் புறப்பட்டனர்.
கார் நகரத் தொடங்கிய நொடியிலிருந்தே, காருக்குள் ஒரு கனத்த அமைதி நிலவியது. கௌதம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, பவித்ரா அவனிடமிருந்து முடிந்தவரை விலகி, காரின் கதவோடு ஒட்டி அமர்ந்திருந்தாள். அவள் பார்வை ஜன்னவிற்க்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கும் மரங்களையும் கட்டடங்களையும் வெறித்துக் கொண்டிருந்தாலும், அவளது கவனம் முழுவதும் உள்ளுக்குள் நிலவிய அந்தப் பெரும் பதட்டத்திலேயே இருந்தது.
அவள் வெளியே வேடிக்கை பார்ப்பதாக கௌதமிற்குத் தோன்றினாலும், அவளது உடல்மொழி வேறு எதையோ சொன்னது, தற்செயலாக அவன் அவள் பக்கம் திரும்பியபோது தான் மடியில் வைக்கப்பட்டிருந்த பவித்ராவின் கரங்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருப்பதை கவனித்தான், அதை கண்டு அவனுக்கு பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது, தருணேஷ் அவனிடம் அவளை பற்றிய அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்லியிருந்தான், அந்த கணம் அவன் சொன்னவைகள் தான் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது,..
சற்று நேரத்தில், ஒரு பிரம்மாண்டமான இரும்பு வாயிலைக் கடந்து கார் உள்ளே நுழைந்தது. அந்த மாளிகையின் முகப்பில் கார் வந்து நின்ற கணம் பவித்ராவின் இதயம் இன்னும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. கௌதமின் தாய் ஜானகியும், அக்கா சரண்யாவும் மற்றும் அத்தை வாசுகியும் ஏற்கனவே அங்கு வந்து வரவேற்பிற்காகக் காத்திருந்தனர்.
கௌதம் காரை விட்டு இறங்கிய பின்பும், அவள் சில நொடிகள் அப்படியே உறைந்து அமர்ந்திருந்தாள், அவளது கண்கள் அந்த மாளிகையின் உயரத்தையும், அங்கே வரிசையாக நின்றிருந்த மனிதர்களையும் மிரட்சியுடன் பார்த்தன.
அவள் இறங்காததை கண்டு சரண்யா தான் காரின் அருகே வந்து, மென்மையான புன்னகையுடன் கதவைத் திறந்துவிட்டு.. "வாம்மா பவித்ரா..." என்றாள். அந்த ஒரு வார்த்தையில் இருந்த கனிவு, பவித்ராவின் நடுக்கத்தை ஒரு நொடி நிறுத்தியது.
லலிதா சொன்னது போல இது சாதாரண வீடு போல் அல்லாமல் ஒரு கோட்டை போலத் தான் இருந்தது அவளுக்கு.
ஆரத்தி எடுத்து அவர்கள் இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றவர்வள் பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்ற வைத்தனர், விளக்கேற்றிய போது, அதன் ஒளி பவித்ராவின் முகத்தில் பட்டுப் பிரகாசித்தாலும் அவளது மனதிற்குள் இருக்கும் இருள் மட்டும் இன்னும் விலகவில்லை.
அதன் பின் "அக்கா, எனக்கு ரொம்ப டையர்ட்டா இருக்கு. நான் ரூம்க்குப் போய் ரெப்ரஷ் ஆகுறேன்,"என்று தமக்கையிடம் கூறிவிட்டு கௌதம் அறைக்கு விரைந்து விட, அவனை தடுக்க தோன்றாமல், பவித்ராவை அழைத்து ஹாலுக்கு வந்தனர் அனைவரும்.
பவித்ரா அந்த பிரம்மாண்டமான சோபாவில் சுருங்கிப் போய் அமர்ந்திருந்தாள், தன் மடியில் இருந்த கரங்களை அவளே அறியாமல் பிசைந்து கொண்டிருந்தாள், அந்த வீட்டின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு ஒலியும் அவளுக்குப் புதியதாகவும், சற்றே அச்சமூட்டுவதாகவும் இருந்தது.
அவளது தவிப்பை உணர்ந்த
ஜானகி மெல்ல அவளருகே அமர்ந்து, அவளது நடுங்கும் கரங்களைத் தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டு.. "டென்ஷன் வேண்டாம்மா பவித்ரா... இனி இது தான் உன் வீடு, உன்னோட பிறந்த வீட்ல எப்படிச் சாதாரணமா இருப்பியோ, அதே மாதிரி இங்கயும் இரு. யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க," என்று ஆறுதலாகக் கூறிட, பதில் பேசத் துணிவில்லாமல், மெல்லத் தலையை மட்டும் அசைத்து வைத்தாள் அவள்..
"கொஞ்சம் இந்த ஜூஸைக் குடிமா... காலையில இருந்து விசேஷத்துல நீ சரியா எதுவும் சாப்பிட்டிருக்க மாட்ட," என்று வாசுகி கனிவோடு ஒரு கண்ணாடித் தம்ளரை நீட்டினார். அந்த குரலில் ஒரு அக்கறை இழையோடிட, பவித்ரா தயக்கத்துடனேயே அந்த ஜூஸை வாங்கிக் கொண்டாள்.
"வெட்கப்படாம குடிங்க அக்கா... இங்க அத்தான் இல்ல, நாங்க மட்டும் தான் இருக்கோம்!" என்ற ஒரு துள்ளலான குரல் அந்த அறையின் கனத்த அமைதியைக் கலைத்திட, பவித்ரா திடுக்கிட்டு நிமிர்ந்தாள். கிட்டத்தட்ட அவளை விட ஒன்றிரண்டு சிறு வயதே இருக்கும் ஒரு இளம்பெண், முகமெல்லாம் புன்னகையோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன அப்படிப் பார்க்கிறீங்க? ஓ... நீங்க என்னை முன்னாடி பார்த்ததில்லைல? ஆக்சுவலா நான் இவங்க பொண்ணு," என்று வாசுகியை காண்பித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள் "என் பேரு ஜீவிதா!" என்று அழகாக புன்னகைத்தாள்.
அந்த கணம் அங்கே அமர்ந்திருந்த ஒரு பெரியவர் புன்னகையோடு "அப்படியே நானும் யாருன்னு சொல்லிடுமா ஜீவி," என்று தன் மகளிடம் செல்லமாகக் கூற,.. ஜீவிதா மெல்ல புன்னகைத்து விட்டு... "இவர் தான் என் அப்பா சரவணன், கௌதம் அத்தானுக்கு மாமா... அப்படின்னா உங்களுக்குச் சித்தப்பா முறை வரும், இல்லப்பா?" என்று ஜீவிதா கேட்க, வாஞ்சையுடன் தலையாட்டிய சரவணன், "ஆமாம்மா... இனி நீயும் எங்க குடும்பத்துல ஒரு அங்கம், பழைய கசப்பையெல்லாம் தூரப் போட்டுட்டு, இந்த வீட்டை உன் வீடா நினைச்சு சந்தோஷமா இருக்கனும்" என்றார் சரவணன்.
பவித்ரா அந்த மனிதர்களை ஒவ்வொன்றாகப் பார்த்தாள், இதுவரை அவள் பார்த்த வசதி படைத்தவர்கள் அனைவரும் கர்வத்தோடும், அதிகாரத்தோடும் தான் தெரிவார்கள், ஆனால், இந்தக் குடும்பம் அவளுக்கு ஒரு நந்தவனம் போலத் தெரிந்தது. ஒவ்வொருவரின் பேச்சிலும், செயலிலும் ஒரு உண்மையான அன்பு இருப்பதை அவளால் உணர முடிந்தது.

Attachments
-
853.8 KB Views: 1