அத்யாயம் -2
யமுனா அந்த இடத்திற்குப் போன பிறகுதான் தெரிந்தது. அது ஒரு உள்ளாடை விளம்பரம். ஒரு வருடம். மேக்கப் என்ற பெயரில் எங்கெங்கோ ஏதேதோ நடந்தது. முதலில் எல்லாம் நெருப்பில் நிற்பது போல இருந்தாலும் பிறகு வந்த நாட்களில் அதுவே பழகி விட்டது. முதலில் முகம் காட்ட மாட்டோம் என்றார்கள். பிறகு அதையும் மாற்றிக் கொண்டார்கள். சரியானபடி பேச ஆளில்லை. பண வசதி கிடையாது. கேட்பார் இல்லாத ஏழைகளுக்கு வேறு என்னதான் வழி? சகிப்புத் தன்மை. அதுவும் எத்தனை நாட்கள் தான் சகித்து கொள்ள முடியும்?
இதில் வந்த பெரிய உபாயம் இவளின் அளவுகள் மாறி இருந்தது.
"கைய கழுத்துலேர்ந்து கீழ கொண்டு வாம்மா . இப்படி இல்ல." இப்படி சொல்லி கொடுப்பது என்ற பெயரில் அவர்களின் கைகள் தான் எல்லா இடங்களையும் தீண்டிப் பார்க்கும். எதிர்த்துப் பேச தைரியம் இல்லாதவள் அமைதியாக பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருப்பாள்.
அழகிய நகப் பூச்சு பால் வண்ண மேனிக்கு இன்னும் சிகப்பு நிறம் கலந்த மேக்கப் , கொண்டவனுக்காக செய்துக் கொள்ளும் அலங்காரம் இல்லாமல், கண்ணாடி பார்த்து உதட்டுச் சாயம் பூசும்போது மனதின் வேதனைகளுக்கும் சேர்த்தே மேக்கப் செய்து மறைத்துக் கொள்ள வேண்டும்.
"நீ அப்படியே நேரா வந்து உன்னோட நைட்டிய அவிழ்த்து இந்த உள்ளாடையை காட்டணும் . "செய்வாள் . உள்ளாடை விளம்பரம் என்ற பெயரில் இவள் உடல் முழுவதும் கேமெரா வலம் வரும். கேமரா மேன் கண்கள் கூடவே வரும்.
இந்த வயதில் அவளின் உணர்ச்சிகளைத் தூண்டி ஏழ்மையை காட்டி ருசி பார்க்க அலைந்த கழுகுகள் மத்தியில் அவள் தினம் தினம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறாள் .
இப்போது சொல்ல முடியுமா ? சற்றே நிமிர்ந்தேன். தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி.
இன்னொரு விஷயமும் இருக்கிறது. இது அவளுக்கு மட்டுமில்லை .எதிர்த்து பேச தைரியம் இல்லை என்று சொல்வதை விட அடுத்து என்ன நடந்து விடுமோ என்ற பயம் கூட பலருக்கு காரணம்.
"அம்மா ! பஸ்சுல வேணாம்மா. ரொம்ப கூட்டமா இருக்கும். யார் யாரோ வந்து மேல இடிக்காரங்கம்மா . "அன்னையிடம் கூட வாய் விட்டு சொல்ல முடியாத அசிங்கம் எல்லாம் நடந்துக் கொண்டு தானே இருக்கிறது. நம்மில் எத்தனை பேர் தைரியமாக வெளியில் சொல் கிறோம் அல்லது தைரியமாக வெளியில் சொல்லி விட முடிகிறது?
"நீ ஏன் மேல காட்டற? குர்தி போட்டா ஷால் போடாக் கூடாதா ? ஏன் சேப் தெரியுது?"இப்படித் தானே பலரும் நம்மை கேள்வி கேட்கிறார்கள் !
"எவனாவது எங்கையாவது கை வைச்சா கூட அமைதியா பையை முன்னாடி வச்சு மறைச்சுக்கோ. இன்னிக்கு நாம போலீசு அது இதுன்னு தைரியமா போயிட்டு ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் அதுக்கு அப்புறமா நாம தைரியமா நடமாட முடியுமா? இவனாவது ஒருத்தன். இவன் ஆளுங்களை கூட்டிட்டு வந்தா?"
ஒருவன் ஒருப் பெண்ணை பாலியல் வன்முறை செய்வது என்பது கூட முடிந்து விட்டது போலும் . இப்போது ட்ரெண்டிங் சிலர் சேர்ந்து செய்வது தான். சாதாரணமாக தெருவில் நடக்கக் கூட பயப்படும் அளவிற்கு தான் இப்போது காலம் இருக்கிறது. இந்த லட்சணத்தில் இவளைப் போன்ற பெண்கள் எப்படி தைரியமாக பேச முடியும்? பேசினால் அடுத்த வேளை சோறு ?
"என்ன *** டா? என்னத்த ஊட்டி வளக்கறாங்களோ ? இது பல இடங்களிலும் யமுனாவின் காதில் விழும்படியே பேசப்படும் பேச்சுக்கள்.இது மட்டுமா? இன்னும் மனதில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொச்சையான வார்த்தைகள். இதற்கு ஒரு தீர்வு இருக்கிறதா ?
வெளியில் இருந்த உடல் கணம் தான் பிழைப்புக்குத் தேவை. அதற்கு உள்ளே கிடந்து தவிக்கும் மனம் அவள் மனம்? அது இன்னும் விரியாத பூ மொட்டு . என்றாவது ஒரு இதயத்தின் கணம் தாங்காது வெடித்து விடும் என்று நம்பிக் கொண்டு தங்கைக்காக உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள். எப்படியாவது இன்னும் சில வருடங்கள். பல்லைக் கடித்துக் கொண்டு தங்கையை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட்டால் போதும். சிறிய அன்னைக்கும் ஒரு வழி கிடைத்து விடும். தனக்கும் இந்த காண்ட்ராக்ட் தொல்லை முடிந்து விடும். பிறகு வேறு ஏதாவது வேலை செய்ய வேண்டும். பூ கட்டி விற்கலாம். தெரு பெருக்கலாம் . ஏதாவது ஒரு வேலை. இது வேண்டாம். மனம் அவ்வபோது என்னத்தான் செய்கிறது. விரக்தியின் விளிம்பில் நின்று மட்டும் என்ன நடந்து விடும்?
இவளின் தியாகம் அங்கீகரிக்கப்படும் நாள் விரைவில் வரும்.
அவள் பிறந்த நாள் அன்று அத்தனை அழகாய் இருந்தாள். பார்க்கும் எந்த ஆணையும் மட்டுமில்லை பெண்களையும் மயக்கும் அழகுதான். இருந்தும் அவள் நிலை அறிந்த பலப் பெண்கள் பரிதாப்படுவதற்குப் பதில் காரிதான் துப்புவார்கள். அதிலும் இளைஞர்களைப் பெற்ற அம்மாக்கள் போடும் சீனுக்கு அளவே இருக்காது. எல்லாம் மீறி தனக்கு என்று அவளால் கடைக்குச் சென்று உள்ளாடைகள் வாங்கக் கூட முடியவில்லை. அவள் உருவம் போட்டது அவளுக்கே காட்டி ஒரு வித நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள். அதன் அர்த்தம் தான் என்ன? என்று அவளுக்குப் புரிந்ததே இல்லை. பெண்கள் இப்படி என்றால் ஆண்கள் கேட்கவே வேண்டாம். அந்தப் படத்தைப் பார்ப்பதும் அவளின் மேலழகைப் பார்ப்பதும் நிச்சயம் கண்ணாலேயே கற்பழிப்பது தான்.
அவள் உருவத்தை பார்த்த பல ஆண்கள் நேரடியாகவே இன்னிக்கு நான் ப்ரீ தான். வரியா கேப்பார்கள். கீழ் கையில் இருந்து தோள் வரை கை படர்ந்து வரும். இல்லையென்றால் தோளில் இருந்து கீழே.
அவர்கள் தான் கேவலமானவர்கள் என்ற புரிதல் அவளுக்கு இன்னும் வரவில்லை. கம்பளி பூச்சி போல அவர்களின் கைகள் படரும்போது தான் பிணமாக இருந்திருக்கலாம். உயிராவது இருந்திருக்காது .,இந்த உணர்வும் இருந்திருக்காது என்றுத் தோன்றும் .
இது வரை தனக்கு பிறந்த நாள் என்பதை கூட அவளுடைய நினைவுகள் மறக்கடித்து விடும். இந்த வருடம் நினைவுக்கு வந்து விட்டது.
இப்படிப் பட்ட பார்வையை பார்த்துப் பார்த்து மனதளவில் மறித்து விட்டவளுக்கு அவனின் சிறு புன்னகையுடன் கலந்த கண்ணியமான பார்வை மிகவும் பிடித்திருந்ததோ?
முன்பு எல்லாம் தனக்கு என்று ஒரு வாழக்கை அமையும். தன்னுடைய உடலும் கற்பும் தன் கணவனுக்கு மட்டுமே என்று காப்பாற்றிக் கொண்டு வாழ்ந்தவளுக்கு பின் வந்த நாளில் அந்த ஆசை இருந்த வடு கூட இல்லாமல் போனது. இப்போது மட்டும் என்ன புதுசா?
பாறையின் இடுக்கில் வேர் விட்ட செடியா?
அவளுக்கும் காதல் வந்து விட்டது. கண்டதும் காதல் .
நம்ம எம் ஜீ ஆர் கலருல இருக்கறவன் அடர் நீல சட்டைல அட்டகாசமா வந்து நின்னா யாரு தான் மயங்க மாட்டாங்க ? அது மட்டுமா ? நான் படிச்சவன்மா ! காலர் ஏற்றிக் கொள்ள வேண்டாம் தோற்றமே சொல்லி விடும் .. வேறு என்ன வேண்டும் பெண்கள் மயங்க? இள வயதுப் பெண்களே உஷார் உங்கள் மனது பத்திரம் .
அந்தக் கல்லூரியில் வேலையை முடித்து விட்டு அவனவள் வரும் வரை
தன்னுடைய யமஹா பைக்கில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தவன் தன்னவளைப் பார்த்ததும் அவள் உருவத்தை அவள் அழகை அப்படியே உள் வாங்கிக் கொண்டான் . வழக்கம் போல எதுவும் பேசாமல் அவள் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கேட்டைத் தாண்டியதும் தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
அவர்கள் இருவரும் எதுவும் பேசுவதில்லை. ஆனால் அங்கே படிக்கும் சில பெண்களின் குரல் அவள் காதில் விழுந்துக் கொண்டு தான் இருக்கிறது.
"ஹேய் அவரை பாரேன். ஹன்சம்மா இருக்காருல்ல?"
'ஆமாண்டி ! ஒரு நாள் கூட ஷேவ் பண்ணாம இருக்கவே மாட்டாரு போல." இது வேறு ஒரு குரூப்.
வேறு ஒரு நாள் ,
"ஏய் நம்மாளு வந்துட்டார்டி . எந்த டிரஸ் போட்டாலும் செம்மையா இருக்காரே !"
இது வேறு சில பெண்கள்.
"கொஞ்சம் வயசு அதிகமாத் தெரியுது இல்ல?"
"ஏய் சின்ன வயசு பசங்கள விட இந்த மாதிரி ஆளுங்க தாண்டி இன்னும் !" அவர்களின் கேவலமா பேச்சுக்களை நான் தவிர்க்கிறேன். நான் தவிர்த்தாலும் நாயகியின் காதில் விழுந்து தொலைத்து விட்டது. அவனைப் பற்றி அவள் அறியாததா? தன்னை விட எட்டு வருடங்கள் பெரியவனுக்கு வாக்கப்பட்டவளுக்குத் தெரியாதா? அதிலும் அவன்! பள்ளியறையிலும் பாடம் எடுப்பவன் அல்லவா ?
"என்னங்க இன்னிக்கு...." முகம் சிவக்க அவன் முகம் பார்க்கும் மனைவி .
"சரி "
இரவில் ஆசையுடன் அவனை நெருங்குவாள் . எனக்கு ஒரு முத்தம் ... கேட்டு விட்டு வெட்கத்தில் முகம் திரும்புவாள் . அவனின் முத்தங்களுக்கு காது மடலும் கழுத்து வளைவும் காத்துக் கொண்டிருக்க அழகாய் கன்னத்தில் முத்தமிட்டு பிறகு தன் வேலையை தொடங்குவான். ஆரம்பித்தது தெரியாது. முடிந்ததும் தெரியாது .
"என்னங்க எனக்கு இன்னும் ஆரம்பிக்கவே இல்லை ..."
"சீ என்ன இப்படி பேசற? குடும்ப பொண்ணா நீ?"
"என்னோட ஆசையை உங்க கிட்ட தானே சொல்ல முடியும்."
"கண்ட கண்ட சினிமாவை பாக்க வேண்டியது . ராத்திரி என் உயிரை எடுக்க வேண்டியது "
"என்னங்க இப்படி பேசறீங்க "
"இங்க பாரு நான் இதுக்கு மேல பேச தயாரா இல்ல. நான் உன்னை மாதிரி வீட்டுல வெட்டியா வீட்டுல இல்ல. நாளைக்கு கடைக்கு போகணும்." அவ்வளவுதான் . இளமையா இயலாமையா இவள் எத்தனை நாள் ஏங்கி ஏங்கி அழுவாள். கணவன் அருகில் இருந்தும் இளமையின் கொடுமையில் அவள் ஏங்காத நாட்கள் இல்லை. ஆண் மகனின் தீண்டல் தெரியாத வரை பெரியதாக எதுவும் தெரியவில்லை . அவனின் தீண்டல் அறிந்த பிறகு இவன் உன்னவன் என்ற உரிமை வந்து விட்டதோ ? கூடாது. தெளிவாக்கினான் அவன் .
காதல் +கணவன் =குடும்பம் என்று எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு அவன் சொன்னது குடும்பம் =கடமை-காதல் அதாவது அவனின் கடமையில் காதல் காமம் எல்லாம் இல்லவே இல்லை .
தொடரும்....