ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முரளி அருகே சென்ற அபிராமியிடம், “என்ன பண்ற அபி?” என்றார் அதிகாலையே குளித்து விட்டு வந்த மங்கை.
“நேரமாச்சு ம்மா, பால் கறக்க ஆள் வந்துட்டாங்க தோட்டத்துக்கு போகணுமே! அதான் அண்ணனை எழுப்ப போனேன்..”
“பிள்ளை இன்னைக்கு தான் அசந்து தூங்கறான், எழுப்ப வேண்டாம் அவனா எந்திரிக்கட்டும்..” என்றவர், “நீ போய் வாசல் தெளிச்சு கோலம் போடு..” என்றவர் தலை சீவி நெற்றி வகுட்டில் குங்குமமிட்டு வெளியில் வந்தார்.
கிட்டதட்ட ஒரு ஏக்கரில் அமைந்திருந்த அவர்களுடைய வீட்டின் பக்கவாட்டில் இருந்த மாட்டு தொழுவத்திற்கு செல்ல அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் கட்டப்பட்டு இருந்தன.
“ம்மா பால் கறக்க ஆளுங்க வந்துட்டாங்க..” என்று அவர்கள் வீட்டை பாதுகாக்கும் ரங்கன் வந்து சொல்லவும், “அனுப்பு ரங்கா..” என்றவர் விளக்கை போட்டு விட்டு மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்ய தொடங்கினார்.
பதினைந்துக்கும் மேற்பட்ட பால் கறப்பவர்கள் அங்கே வர அவர்களை தொடர்ந்து தொழுவத்தை சுத்தம் செய்பவர்கள் வந்து சேர்ந்தனர்.
அவர்களிடம் பொறுப்பை கொடுத்து விட்டு நோட்டை எடுத்து வந்த மங்கை அன்றைய பால் விபரங்களை குறித்து அவர்களின் அந்த மாத சம்பளத்தை கொடுத்தார்.
தேவமங்கையின் திருமணத்தின் போதே அவருக்கான நகைகள், சீர் செனத்தி மட்டுமல்லாது மூன்று ஏக்கர் நஞ்சை ஐந்து ஏக்கர் புஞ்சை நிலங்களையும் கொடுத்திருந்தார் பார்த்தசாரதி.
முதலில் வேற்று ஜாதிக்காரருடனான தங்கையின் காதலுக்கு அவர் முழு சம்மதம் அளித்ததை ஒருபுறம் எதிர்த்தாலும் மறுபுறம் ஊரும் உறவும் அதிசயமாக பார்த்தது என்றால் திருமணத்தின் போது மங்கைக்கு அவர் செய்த சீரை கண்டு முற்றிலுமாக வாயடைத்து போயினர்..
“இப்போவே இம்புட்டு சொத்தை கொடுத்தா நாளைக்கு ஆடி சீர், வளைகாப்பு, தாய் மாமன் சீருக்கு என்ன பண்ணுவ? ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு உறவுகள் சொன்ன போதும் சமரசம் செய்து கொள்ளாதவர் அதன் பிறகு தங்கையின் வளைக்காப்பு, பிள்ளை பேறு என்று எதிலுமே குறை வைக்கவில்லை.
அப்படி தேவமங்கைக்கு கொடுக்கப்பட்ட வயல், தென்னந்தோப்பு, மாந்தோப்பு, மல்லிகை தோட்டம் உட்பட அனைத்தையும் பராமரிப்பது முரளி தான். அதனால் காலையிலேயே ஒருமுறை தோட்டத்திற்கு சென்று வருபவனுக்கான வேலைகள் இங்கே காத்திருக்கும்.
பொதுவாகவே பால் கணக்கு மங்கையுடையது தான். பால் கறப்பவர்கள், பண்ணை தொழிலாளர்களின் சம்பளம் மாடுகளின் தீவனம், மருத்துவ செலவுகளை அவர் தான் பார்த்து கொள்வார்.
பண்ணையை தொடர்ந்து உரிய இடைவெளியுடன் நெய், வெண்ணை, தயிர் மற்றும் இனிப்புகள் என்று சிறிய அளவில் பால் பொருட்கள் தயாரிக்கப்படும் மூன்று உற்பத்தி மையங்கள் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது.
அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பே அங்குள்ள வேலைகள் பரபரப்பாக தொடங்கிவிடும். பண்ணையில் இருந்து கொண்டு வரப்படும் புதிய பால் பெரிய எஃகு கேன்களில் நிரப்பப்பட்டு உற்பத்தி மையத்திற்கு கொண்டு செல்லப்படும்.
அங்கு முதலில் பால் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு பெரிய அடுப்புகளில் காய்ச்சப்படும். காய்ச்சப்பட்ட பால் தனித்தனி பிரிவுகளுக்கு அனுப்பப்படும். ஒரு பகுதியில் தயிர் தயாரிக்க பால் சரியான வெப்பநிலையில் வைத்து பதப்படுத்தப்படும்.
மற்றொரு பகுதியில் வெண்ணை தயாரிக்க பெரிய இயந்திரங்களில் பால் கடையப்படும். அதிலிருந்து கிடைக்கும் வெண்ணை மெதுவாக உருக்கப்பட்டு மணம் கமழும் நெய்யாக மாற்றப்படும்.
இன்னொரு பகுதியில் பால்கோவா, பால் ஹல்வா, பால் இனிப்புகள் போன்றவை தயாரிக்கப்படும். அத்தனையும் பெண்களை கொண்டு தான்!
ஷிப்ட் முறையில் பெண்கள் வேலை செய்வார்கள். அனைத்து இடங்களிலும் சிசிடிவி பொருத்தி இருந்தான்.
தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல் அவர்களின் தேவைகளை கவனித்து அதற்கு ஏற்றார் போல செயல் படுவான்.
முரளிதரனின் பண்ணையில் வேலை செய்வது என்பது பெண்கள் தாயின் கருவறையில் இருக்கும் அளவிற்கு பாதுகாப்பான இடம் என்று ஊரே சொல்லும்.
தங்கள் வீட்டு பெண்களை தைரியமாக அங்கே வேலைக்கு அனுப்புவார்கள். ஒன்று இரண்டு பணிகளை தவிர்த்து மற்றவைக்கு பெரிதான படிப்பு தேவையில்லை.
டிரைவர்கள், பால் கறப்பவர்கள், பாதுகாப்பு ஆட்கள் தவிர்த்து அனைவருமே பெண்கள் தான் என்பதால் சுதந்திரமாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
அன்னை மட்டுமல்ல தங்கையையும் தொழிலில் பழக்கியவன் இரண்டு தொழிற்சாலையின் கணக்கு வழக்கெல்லாம் அபிராமியின் பொறுப்பில் கொடுத்து இருந்தான்.
இத்தனை பெரிய பண்ணை ஓரிரு நாளில் உருவானது கிடையாது. நன்கு படிக்க கூடிய முரளி சூழ்நிலை காரணமாக பத்தாம் வகுப்பின் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டானே தவிர்த்து அவனுக்கான தொழிலை தேர்ந்தெடுத்து அயராத உழைப்பினால் இன்று மிகப்பெரிய மாட்டுப் பண்ணை உரிமையாளனாக மட்டுமல்ல தொழில் முனைவனாகவும் இருக்கிறான்.
அவன் பண்ணையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.
பண்ணையிலிருந்து கொண்டு வரப்பட்ட பால் பதமாக காய்ச்சபடுவதை கவனித்து கொண்டு இருந்த மங்கை இரண்டு இடங்களையும் இணைக்கும் பாதையில் வழக்கம் போல வெள்ளை வேட்டி சட்டையில் வந்து கொண்டிருந்த மகனை கண்டு
“எந்திரிச்சுட்டியா முரளி” என்று புன்னகைத்தார்.
“நேரமாகிடுச்சு ம்மா ஆனா நீங்க எழுப்ப வேண்டான்னு சொல்லிட்டீங்களாமே?!”
“வேலை என்னைக்கும் இருந்துட்டு தான் இருக்கும், ஆனா சரியான தூக்கம் இல்லாம போனா அன்னைக்கு நாளே ஓடாது முரளி, அதான் நீயா முழிக்கிற வரை காத்திருக்க சொன்னேன். சரி இன்னைக்கு பால் கொஞ்சம் அதிகமா இருக்கு என்ன பண்ணலாம்?…” என்றிட மூவருக்குமான காஃபியோடு அங்கே வந்தாள் அபிராமி.
“எல்லாருக்கும் கொடுத்துட்டியா அபி?”
“ஆச்சு ண்ணா” என்றவளிடம் “அபி இன்னைக்கு பால்கோவா பேட்ச் அதிகமா போட சொல்லு கடைல எக்செஸ்ஸா கொடுக்க சொல்லி கேட்டு இருந்தாங்க…”
“சரி ண்ணா..” என்றவளிடம் அன்று செய்ய வேண்டிய பணிகளை சொன்னவன் தோட்டத்திற்கு கிளம்பி விட்டான்.
“சொல்லுங்க..”
“தம்பி மாப்பிள்ளை வீட்டார் இன்னைக்கு சாயந்திரம் வருவதா சொல்லி இருந்தேன் இல்லைங்களா?”
“ஆமா..”
“ஏதோ அவசர வேலையா சொந்த ஊருக்கு கிளம்ப வேண்டியதா இருக்கிறதால காலையிலேயே பாப்பாவை பார்த்துட்டு கிளம்பலாம்னு சொல்லிட்டாங்க..”
“இப்படி திடீர்னு சொன்னா எப்படி?...” என்றவன் மாலை பெண் பார்க்க வருவதால் அதற்கு ஏற்ப இன்றைய நாளை திட்டமிட்டிருந்தான்.
“ஊருல இருந்து வர எவ்ளோ நாள் ஆகும்னு தெரியாதாம். அதோடு முதல்முறை பெண் பார்ப்பது தடை படுவதை அவங்க விரும்பலை. ஒன்பது மணிக்கு நல்ல நேரம். நீங்க வீட்ல இருப்பீங்களா கூட்டிட்டு வரலாமா? வசதி படுமா?” என்றார்.
“சரி கூட்டிட்டு வாங்க…” என்றவன் வீட்டிற்கு கிளம்பினான்.
அதேநேரம் காலை உணவை முடித்து கொண்டு பார்த்தசாரதி தன் ஃபேக்டரிக்கு கிளம்ப “ம்மா நானும் கிளம்பறேன்..” என்றாள் ராகவி.
“எங்கே டா?”
“அத்தை வீட்டுக்கு..”
“அங்கேயா? உன் அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிட போகுது ராகவி..”
“யாருடி இவ?! என்னைக்கு இருந்தாலும் என் பேத்தி போக வேண்டிய இடம் தானே?! இப்போ போனா என்ன?” என்று பேத்திக்கு வரிந்து கட்டி கொண்டு வந்தார் சுந்தரவல்லி.
“இல்லை அத்தை அவருக்கு தெரிஞ்சா..”
“தெரியாத மாதிரி பார்த்துக்கிறேன் ம்மா.. ஒருவேளை தெரிஞ்சாலும் அது எனக்கு பெனிஃபிட் தான்!!” என்றவள் தன் ஸ்கூட்டியை கிளப்பி கொண்டு நேரே முரளிதரன் வீட்டிற்கு சென்றாள்.
பண்ணைக்கு அவள் சென்று சேர்ந்த போது மங்கை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார்.
வீட்டினுள் நுழைந்தவளை கவனிக்காமல் அவள் மீது மோதியவரை பிடித்து, “என்ன அத்தை, எதுக்கு இவ்ளோ வேகம்? மெல்ல! மெல்ல!” என்றாள் புன்னகையோடு.
“ராகவி நீயா?! எப்போடி வந்த? எப்படி இருக்க?” என்றவருக்கு மருமகளை கண்டு அத்தனை மகிழ்ச்சி.
“நானே தான்! நீங்க ஏன் இவ்ளோ அவசரமா ஓடிட்டு இருக்கீங்க, என்ன விஷயம்?” என்றதும் மகளை பெண் பார்க்க வருவதை சொல்ல, “வாவ்!!” என்று ஆர்பரித்தாள்.
“இப்போ தான் முரளி விஷயத்தை சொன்னான் அதுதான் கையும் ஓடலை காலும் ஓடலை..”
“எதுக்கு அத்தை இவ்ளோ டென்ஷன்.. முதல்ல நீங்க உட்காருங்க..” என்று அவரை அமர்த்தி சூடான பாலை கொண்டு வந்து கொடுத்து,
“பால் குடிங்க அதுக்குள்ளே நான் ஏற்பாட்டை பார்க்கிறேன்..” என்றவள் பண்ணையில் வேலையில் இருந்த சிலரை அழைத்து,
“அக்கா வீட்டு எதிரில் இருக்கிற கேன், மற்ற சாமானை எல்லாம் எடுத்துட்டு போய் பண்ணையில வைங்க..” என்று ஆளுக்கு ஒரு வேலையாக ஒதுக்கி கொடுத்தவள்,
“இப்போ போய் மாப்பிள்ளை வீட்டாருக்கு தேவையான பஜ்ஜி, சொஜ்ஜி ரெடி பண்ணுங்க கமலா அக்காவும், அம்பிகா அக்காவும் வேலை முடிச்சுட்டாங்க அவங்களை துணைக்கு வச்சுக்கோங்க..”
“சாயந்திரம் வருவதா தான் சொன்னாங்க ராகவி ஆனா திடீர்னு காலையில வரோம்னு சொல்லிட்டாங்க.. என்ன பண்ண எப்படி ஆரம்பிக்கனு தவிச்சு போயிருந்தேன் நல்ல வேலையா நீ வந்துட்ட..” என்றவருக்கு குறுகிய நேரத்தில் நேர்த்தியாக திட்டமிட்டு செயல்படுத்தும் மருமகளை கண்டு பெருமிதம்.
“என்ன மங்கைக்கா காலையில இருந்து இங்கேயே இருக்கோம் ஆனா அபியை பொண்ணு பார்க்க வர விஷயத்தை எங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லவே இல்லை..” என்றபடி அவருக்கு உதவினர்.
“அபி என்ன பண்றான்னு தெரியலையே.. அவளுக்கு தாவணி தான் கட்ட தெரியும்..” என்ற மங்கையிடம், “ப்ச் நான் தான் இருக்கேனே, அபியை நான் ரெடி பண்றேன் நீங்க போய் ஏற்பாட்டை பாருங்க..” என்றவள் அபிராமியை தயார் செய்ய தொடங்கினாள்.
அபிராமியை அழகாக தயார் செய்து முடித்த அதே நேரம் வீடும் வாசலும் ஜொலிக்க சமையலறையில் இருந்து வந்த பால்கோவா, கேசரி, பஜ்ஜி, வடை மணத்தால் வீடே கமகமத்தது.
மாப்பிள்ளை வீட்டார் வருவதற்கு இன்னும் நேரமிருக்க ஹாலில் இருந்த நாற்காலிகளை மாற்றி வைத்தபடி, “மாமூ எங்க அத்தை. ஆளையே காணோம்” என்றாள்.
“தேங்காய் லோட் அனுப்ப தோப்புல ஆளுங்க வந்துட்டாங்க அதுதான் ஒரு எட்டு பார்த்துட்டு வரேன்னு போயிருக்கான்..” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அங்கு வந்த முரளி,
“வேலையை விட்டுட்டு வந்துட்டியா ராகா?” என்றான்.
“தன்மானத்தை இழந்து அப்படி ஒரு வேலை தேவையா? விட்டுட்டு வா நான் கம்பெனி வச்சு கொடுக்குறேன்னு நீ தானே மாமூ சொன்ன?!”
“....”
அதனால தான் விட்டுட்டு வந்தேன். ஆனா புதுசா நீ எதையும் தொடங்க தேவையில்லை மாமூ. நம்மோட கம்பெனியிலயே செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு.. அதை பார்க்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.. ஸோ இனி தினமும் காலை ஏழு டூ மாலை ஏழு இங்க தான் எனக்கு வேலை” என்றதில் அதிர்ந்து போனார் தேவமங்கை.
“என்னடி சொல்ற? இங்கே வேலை செய்ய போறியா? யாரை கேட்டு இந்த முடிவுக்கு வந்த?”
“என் பண்ணையை பார்க்க நான் யாரை கேட்கணும் த்தை?” என்றவளை நெருங்கிய முரளி,
“ஹே மாட்டு பண்ணையில் உனக்கு என்னடி வேலை? கொஞ்ச நாள் பொறுத்துக்கோ உனக்கான கம்பெனி வேலையை செய்து கொடுக்கிறேன்”
“ப்ச் நம்ம கம்பெனியிலயே எவ்வளவோ வேலை இருக்கு அதை விட்டுட்டு எனக்கு எதுக்கு இன்னொரு கம்பெனி? நான் இங்கே தான் வேலை செய்ய போறேன்..” என்றாள் உறுதியான குரலில்.
“ராகா இது விளையாட்டு விஷயமில்லை. சொன்னா புரிஞ்சுக்கோடி..”
“நான் உனக்கு பொறுமையா சொல்றேன் வைட் பண்ணு மாமூ அதுக்கு முன்னாடி என் மாமியாருக்கு வேப்பிலை அடிச்சுட்டு வரேன்” என்றாள் சிரிப்போடு.
“ஏன்டி எனக்கா வேப்பிலை அடிப்பேன்னு சொல்ற?” என்று ராகவியின் காதை பிடித்து திருகியவர்,
“எதுக்காக திடீர்னு இப்படி ஒரு முடிவு? ஏசி ரூம்ல சொகுசா செய்யற வேலையை விட்டுட்டு வெயில் மழையில இங்கே வேலை செய்யணும்னு உனக்கு என்ன அவசியம் ராசாத்தி?” என்றவரின் வார்த்தையில் கண்டிப்பை விட அண்ணன் மகளுக்கான பாசமும் கரிசனமுமே மேலோங்கி இருந்தது.
“இதோ பாரு த்தை என்னைக்கு இருந்தாலும் இதெல்லாம் நான் பார்க்க வேண்டிய் வேலை தானே?! கல்யாணத்துக்கு பிறகு செய்ய வேண்டியதை முன்னாடியே செய்ய போறேன் இதுல உனக்கு என்ன பிரச்சனை?”
“ப்ச், இத்தனை நாள் அண்ணனுக்கு தெரியாம இங்கே வர போக இருந்ததுல என் சொந்தம் விட்டு போகலைன்னு நிம்மதியா இருந்தேன். ஆனா இப்போ தினமும் நீ இங்கே வருவது தெரிஞ்சா முதலுக்கே மோசமாகிடும் ராசாத்தி புரிஞ்சுக்கோ..” என்றார் கொஞ்சலாக.
“த்தை சும்மா இப்படி கொஞ்சி கெஞ்சி என்னை உன் வழிக்கு கொண்டு வர பார்க்காத. நானும் ஆறு மாசமா வீட்டுக்கு வந்து பொண்ணு கேளுன்னு சொல்லிட்டு இருக்கேன்.. கேட்டியா நீ?”
“இவளை வச்சுகிட்டு எப்படிடி? அபி கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் முரளிக்கு பண்ண முடியும்”
“அதுவரைக்கும் எங்க வீட்ல காத்திருப்பங்களா? இப்போவே உன் அண்ணன் வெளிநாட்டு மாப்பிள்ளையோடு என்னை துரத்தி விட பார்க்கிறாங்க…” என்றவள் கைகளை கட்டிக்கொண்டு இருவரையும் பார்த்திருந்த முரளியிடம்,
“என்ன மாமூ மாமியார் மருமகள் சண்டையை ஜாலியா வேடிக்கை பார்த்துட்டு நிற்கிற? உன் அம்மாவை என்னன்னு கேட்க மாட்டியா?”
“எதுக்கு?! இல்லை எதுக்குன்னு கேட்கிறேன்?! நீங்க இப்போ அடிச்சுப்பீங்க அடுத்த நிமிஷமே கொஞ்சுவீங்க இடையில ஒருத்தருக்கு சப்போர்ட் பண்ணி நான் கெட்டவன் பேரு வாங்கவா? முடியாது போடி!! நீயாச்சு உன் மாமியாராச்சு என்னை இழுக்காதீங்க” என்றான் புன்னகையோடு.
“அடேயப்பா, எம்புட்டு தெளிவா இருக்க மாமூ நீ!!”
“இல்லைன்னா உங்களை சமாளிக்க முடியாதே அண்ணி” என்று அபிராமி சிரிப்போடு சொல்ல வெளியில் கார் வந்து நிற்கும் சத்தம்.
“மாப்பிள்ளை வீட்டார் வந்துட்டாங்க போல..” என்ற முரளி வாசலுக்கு செல்ல மகளை அறைக்கு அனுப்பிய மங்கை ராகவியோடு வெளியே சென்றார்.
மாப்பிள்ளை, அவர் பெற்றோர், நண்பர்கள் இருவர் வந்திருக்க அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வர மங்கை தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
“உட்காருங்க..” என்று முரளி சொல்ல “இருக்கட்டும்” என்றவர்கள் மங்கை கொடுத்த தண்ணீரை வாங்க மறுத்தனர்.
‘என்ன நடக்கிறது’ என்று யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
“என்னாச்சு ஏன் எல்லாம் நின்னுட்டே இருக்கீங்க உட்காருங்க..” என்றார் தரகரும் சங்கடத்துடன்.
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம், முதல்ல பொண்ணோட அப்பா எங்கம்மா? அவரை வர சொல்லுங்க” என்றார் மணமகனின் தந்தை அழுத்தமாக.
இக்கேள்வியை எதிர்பாராத மங்கை அதிர்வோடு அவர்களை பார்க்க முரளியோ கோபத்தோடு தரகரை பார்த்தான்.
“தம்பி, எனக்கு எதுவும் புரியலை.. இருங்க பேசறேன்” என்றவர், “இப்போ எதுக்குங்க இந்த பேச்சு? அதுதான் பொண்ணுக்கு அப்பா இல்லைன்னு சொன்னேனே..”
“அப்பா இல்லைன்னு சொன்ன ஆனா இந்த அம்மா பூவும் பொட்டுமா இருக்கேய்யா?”
“ஸர் அது..” என்று தடுமாறிய தரகர் உதவிக்காக முரளியை பார்த்தார்.
ஆனால் அவனோ கட்டுக்கடங்காத கோபத்துடன் நின்றிருந்தான்.
“உங்களுக்கு பொண்ணு பிடிச்சதுன்னு சொன்னதால தானே கூட்டிட்டு வந்தேன், இப்போ இந்த பேச்சு அவசியமா?” என்றார் தரகர் குரலை தாழ்த்தி.
“யோவ், என்னய்யா பேசற? கொலைகாரன் மகளை பொண்ணு பார்க்க கூட்டிட்டு வந்துட்டு அவசியமான்னா கேட்கிற?” என்று சீற்றம் கொள்ள தரகர் அவரை சமாதானப்படுத்த முயன்றார்.
அதற்குள் முன்னே வந்த மாப்பிள்ளை, “நாங்க யாருன்னு தெரியும் தானே?! எங்க வசதிக்கும் மரியாதைக்கும் ஏற்ற குடும்பம்னு சொன்னவன் இது கொலைகாரன் குடும்பம்னு சொன்னியாய்யா?” என்று ஆவேசத்தோடு கேட்க அவன் நண்பர்களும் அனாவசியமாக வார்த்தைகளை வீசினர்.
ராகவி தவிப்போடு முரளியை பார்க்க அவள் நினைப்பை பொய்யாக்காமல் வேகமாக மாப்பிள்ளையை நெருங்கிய முரளிதரன் அவனை ஓங்கி அறைந்திருந்தான்.

************
தோட்டத்தில் காய் பறிப்பதை மேற்பார்வையிட்டு கொண்டிருந்த முரளிக்கு தரகரிடம் இருந்து அழைப்பு வந்தது.“சொல்லுங்க..”