• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இமைக்க மறந்தேன் உயிரே 12

Stn49

Member
தன்னருகே வித்யாசாகர் அமர்ந்திருப்பதை ஒருவித போதையுடன் அனுபவித்தாள் சாகம்பரி. அது வித்யாசாகருக்கும் நன்றாகவே புரிந்தது. போதும் இந்த கண்ணமூச்சி என்ற முடிவில் தான் அவளை சந்திக்கவேண்டும் என்று சொன்னதே! அவருக்கு பேச்சை ஆரம்பிக்க தயக்கமாக இருந்தது. இருந்தாலும் சில விளக்கங்கள் அவளுக்கு தான் தந்தாக வேண்டிய கட்டாயம்.அது தெரியாமல் அவளை அடுத்த கட்டத்துக்கு செல்ல அழைத்தால் அவளும் தான் எபடி வருவாள்?

ஏற்கனவே தானாக வந்தவளை தொலைத்து விட்டு இந்த நான்கே முக்கால் வருஷமாக அவர் படும்பாடு. அவரது அந்த பிடிவாதம் மட்டும் இல்லையென்றால் இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்காது.திருமணம் செய்து கொண்டு இன்னம் இரண்டு இல்லைகளாவது இருந்திருக்கும்.எல்லாவற்றையும் தனக்குத்தானே ஸெல்ப் ஆப்பு வைத்து கொண்டவர் சாஃஷாத் இப்போது இங்கே அமைதியாக அமர்ந்திருக்கும் நம் வித்யாசாகர் தான்.

என்ன அலைகளுக்குள் அவர் மூழ்கி இருக்க அங்கே வெயிட்டர் ஆர்டர் எடுக்க வந்தார். அவரிடம் சாகம்பரிக்கு பிடித்த உணவுகளாக ஆர்டர் செய்தவரை கண்டவளுக்கு,"இன்னமும் எனக்கு என்னென்ன பிடிக்கும்னு இவர் மறக்கல. அப்படின்னா இவர் இன்னமும் இன்னொரு வாழ்க்கை தேடிக்கலையா? வேற யார்கூடவும் லிவ் இன் ? என்று மனம் கேட்ட கேள்வியை உள்ளுக்குள் முழுங்கிக் கொண்டாள் .

அவரிடம் நேராக கேட்கும் தைரியம் இல்லை!


சில நிமிஷன்களின் அமைதி இருவரையும் கட்டிப்போட்டது.எதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்..எப்படி? என்றெல்லாம் தயக்கம். பேச வேண்டும் என்று அழைத்தவருக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டது.எதிரில் அமர்ந்திருந்தவளுக்கோ,"இவர் எவ்ளோ மீட்டிங்ஸ் அனாயாசமா அட்டென்ட் செஞ்சிருப்பாரு, ஓர்கனைஸ் செஞ்சிருப்பாரு!இவரை விட பல வருஷம் சின்னவளான,நல்லா பழகியவளான என்னிடம் பேச என்ன தயக்கம் வேண்டி கிடக்கு?"என்று மனதில் அவரை பற்றி நொடிப்பை வெளிக்காட்டாமல் அமர்ந்திருக்கிறாள் சாகம்பரி.

அவர்கள் ஆர்டர் செய்த உணவு பதார்த்தங்கள் அவர்கள் டேபிளுக்கு வர ,வைட்டரை ஒரு தலையசைப்புடன் அனுப்பி விட்டு இவள் புறமாக திரும்பினார்.அதற்குள் பெண் இருவருக்குமான உணவை அவரவர் தட்டில் பரிமாறியிருந்தாள் . அதைக் கண்டவருக்குள் ஒரு மெச்சுதல்.இருவரும் உணவில் சிறிது நேரத்தை கழித்தவர்களில் முதலில் ஆரம்பித்தவர் வித்யாதரன் தான்."வெல்.. ,நாம நம்மோட வாழ்க்கை பற்றி கொஞ்சம் பேசி சில முடிவுகளை எடுக்கணும்னு நா நினைக்கிறேன். எஸ் அஃப்கோர்ஸ் பேசவும் விஷயங்கள் இருக்கு." சொல்லிவிட்டு மீண்டும் வாயில் உணவை வைத்துக் கொண்டார்.

அவரை யோசனையாக பார்த்தவள், லேசான தலையசைப்புடன் " நமக்குள்ள பேச ஏதும் இருக்கிறதா நா நினைக்கல. ஒண்ணா இருந்தோம்.காதலை ..ச்சட் ..என்னோட காதலை உங்ககிட்டே பகிர்ந்துக்கிட்டேன்.போதும்னு தோணிச்சு.திரும்ப வந்திட்டேன். ரெண்டுபேரும் சேர்ந்து எடுத்த முடிவுதானே இந்த பிரிவு.? இப்போ பேச என்ன இருக்கு?"

அவளது கேள்வியில் இருக்கும் நியாயம் சுட்டாலும்," அது சரி. நாம் சேர்ந்து எடுத்த முடிவு இல்ல. நீயா எடுத்த முடிவு, நானும் சரின்னு சொன்னேன். இன்னமும் சரியாய் சொல்லனும்னா நா வேணாம்னு சொன்னாலும் நீயேதான் என்ன ட்ரிகெர் செஞ்சே. எட்டு மாசம் எல்லாம் நல்லா போச்சு.என்ன காரணம்னு தெரியாது. பிரிஞ்சுரலாம்னு சொன்னே. நீ சொன்ன ரீசனை ஒத்துக்கிட்டேன். என்னோட மனசு என்ன சொல்லுதுன்னு நீ கேட்டியா என்ன?"

அவரது கேள்வியில் திகைத்து விழித்தாள் சாகம்பரி. 'இவளாகத்தான் அவரிடம் முதலில் சென்று பேசினாள் .இவள் கேட்டது,"சார் ,எனக்கு உங்களை ரொம்பவே பிடிச்சிருக்கு. உங்களோட ஒரு வாழ்க்கை வாழ்ந்து பாக்கணும்னு தோணுது. நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா..." என்றுதான். அவள் கேட்கும் பொழுது உண்மையில் அவரது சமூக உயரம் தெரியாது. அவர் தான் வேலை செய்யும் ஹோட்டலின் பங்குதாரர்களின் ஒருவர் என்று மட்டும் தான் நினைத்து கொண்டிருந்தாள்.

கேட்பதற்கு முன் அவள் தனது பெற்றவர்களை,குடும்பத்தை பற்றி யோசித்தது கொஞ்சநேரம் தான். அவள் மனதில் காதலிப்பது ஒரு குற்றமா... காதலித்தவரை மணப்பது தவறா என்றுர் தான் தோன்றியது. அவரை பற்றி இவளுக்கு ஒன்றுமே தெரியாது.தெரிந்து கொள்ளும் எண்ணமும் இல்லை.

அவரோ, "சாரி சாகம்பரி. எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை இல்ல.ஏற்கனவே கல்யாணம் ஆகி மனைவி பிரிஞ்சு தான் காதலிச்சவனை கல்யாணம் செஞ்சிட்டு போயாச்சு. அவளோட சேர்த்து என்னோட கல்யாணம் மீதான நம்பிக்கையும் சேர்ந்து போயாச்சு. சோ.. " என்றார்.

பெண்ணின் முகத்தில் அப்பட்டமாக ஏமாற்றம் தெரியவே வித்யாசாகருக்கு அது என்னவோ போலாகிவிட்டது. "சீ சாகம்பரி.நமக்குள்ள குறைஞ்சது எட்டு வருஷமாவது வித்யாசம் இருக்கும். நா திரும்ப கல்யாணம் செஞ்சுக்க நினைச்சாலும் என்னோட ஏஜுக்கு சூட் ஆகுற மாதிரிதானே பார்ப்பேன். யு ஆர் டூ யங் .ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. இப்போவெல்லாம் யாரும் இவ்ளோ கேப்புல கல்யாணம் செஞ்சுக்க விரும்புறது இல்லை. உனக்கு தகுந்த பையன் நிச்சயம் உன்னோட வாழ்க்கைல வருவான். அதுவரைக்கும் வெயிட் பண்ணு ."

இவள் காதல் என்று சொன்ன ஒரு வார்த்தையை அவர் கணக்கில் எடுத்து கொள்ளவே இல்லை என்பது அவளுக்கு அன்று வலித்தது. கண்ணில் நீர் கோர்த்தது.அதற்குப் பிறகு அவர் இருக்கும் திசைக்கே செல்வது இல்லை. இவளது பாராமுகத்தில் அவருக்கு ஒருவித தவிப்பு உண்டாகி இருந்தது. தனது இந்த மாற்றத்தை கண்டு வித்யாசாகர் மிரண்டு போனார். உண்மையில் இது அவருக்கு பிடிக்கவில்லை. சிறிய பெண்.மனப்பக்குவம் இல்லாத ஈர்ப்பு என்று ஒதுக்கியது போக,அவரது மனம் முழுவதும் அவளே ஆக்கிரமிப்பு செய்யவும் மீள முடியாமல் தவித்தார்.

பிறகு ஏதோ ஒரு விஷயமாக தன்னை காண வந்தவளின் வதனம் இவரை பாதித்தது. கண்களை சுற்றி கருவளையம் இருந்தது.உடல் கொஞ்சம் மெலிந்து இருந்தது. அவள் தன் மீது காதல் என்று சொன்னதை அன்று அவர் அவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.இன்று அதன் வீரியத்தை உணர்ந்தவர் உள்ளுக்குள் மருகினார்.

அவரே அவளிடம் பேசவும் ஆரம்பித்தார்,"லுக் சாகம்பரி.எனக்கும் உன்னை ரொம்பவே பிடிக்கும்.பட் ,கல்யாணம் செஞ்சுக்குற மன நிலை எனக்கு இல்ல.மனசு விட்டுப் போச்சு. அவமானம் ,வருத்தம்னு நிறைய ஆகிருச்சு. லிவ் இன் ஓகேவான்னு யோசிச்சு பதில் சொல்லு. உனக்கு இந்த பந்தம் வேண்டாம்னு தோணிச்சுன்னா நா உன்னை பிடிச்சு வைக்க மாட்டேன். அண்ட் பேபி போரம் ஆகாம பார்த்துக்கணும். நாளைக்கு உனக்குன்னு ஒரு புது அத்யாயம் ஆரம்பமாகும் பொழுது தடைகள் வேணாமே!

தனது இருக்கைக்கு சென்று தன்னை பற்றியும் பெற்றவர்கள் குடும்பம் பற்றியும் கொஞ்சநேரம் யோசித்தவளுக்கு அவரை விட்டு இருக்க முடியாது எண்டு தீர்மானமாக தெரிந்து விட்டது. கொஞ்ச மாதங்கள் கடந்தால் என்னுடைய் காதலை அவர் புரிந்து கொள்வார் என்று நினைத்து தான் தொடங்கியது அந்த விளையாட்டு. அவர் பேசியவை இன்றும் அவளுக்குள் ஒரு தாக்கத்தை கொடுக்கிறது. யாருக்கும் சொல்லாவிட்டாலும் சுந்தரிடம் இந்த விஷயத்தை அவள் பகிர்ந்து கொண்டபொழுது அவன் அதிர்ந்து போனான்.

" உதை விழும் ஸாகி .விளையாடுறியா? உன்னோட வீட்டுல சொல்லிடுவேன்.மூட்டை முடிச்சை கட்டிட்டு வீடு போய் சேறு.இந்த குப்பை எண்ணம் எல்லாம் போயிரும்"எண்டு கடிந்தவனிடம் தனது காதலை புரியவைக்கவும்,

"இங்கே நீ தனியா இருக்கே ஸாகி . சென்னை போனா உன்னோட பேமிலி கூட இருந்தா சரியாகிடுவே.ப்ளீஸ் புரிஞ்சுக்க டா...அதெல்லாம் சரி உனக்கு என்னை மாதிரி சுமார் மூஞ்சி குமாரு மேலேவெல்லாம் லவ்வு வராதா..."என்றான்.அவன் குரலில் தோழியின் மீதான அக்கறையும், கவலையும் தான் இருந்தது.

" நீதான் சொல்லேன் சுந்தர்,உன்னால என்னை காதலிக்க முடியுமா?" அவளது கேள்வி புரிந்தவனாக 'இல்லை'என்று தலையசைத்து விட்டான். அவனால் எப்போதுமே தோழியை காதலியாக பார்க்க முடியாது.

சுந்தர் சொன்னபடிக்கு ஒரு வாரம் தங்களது வீட்டில் போய் இருந்தும் பார்த்தாள் . அவர் மீதான காதல் நோய் வளர்ந்தது தவிர குறையவில்லை. அவர் மீதான தேடுதலின் தீவிரத்தில் தன்னையே ஆகுதியாக கொடுத்தாள் .அதன் பலன் தான் தயா.

பழைய விஷயங்களில் கொஞ்சநேரம் மூழ்கி இருந்தவளை வித்யாசாகர் தொந்திரவு செய்யவில்லை. மீண்டு வந்தவளின் கண்கள் காண்பித்த வலி!அதில் கரைந்தவராக,"என்னை பார்த்ததே பெரிய பிழை இல்லையா சாகரி? எனக்கு அப்படி இல்லை.என்னோட வரம் நீ. அதை தொலைக்க எனக்கு இஷ்டம் இல்ல." அவர் சொன்னதை உள்வாங்கி புரிந்து கொள்ள அவளுக்கு தாமதம் ஆனது.

நெற்றிப்பொட்டை பிடித்து கொண்டவள்,"தலை ரொம்பவே வலிக்குது வித்யா."என்றாள் .அவளது அந்த ஒற்றை அழைப்பு அவனை உருக்கியது . அதில் இருக்கும் காதல்!


அதற்க்கு பதில் சொல்லும் திராணி அற்றவளாக அவரையே உற்றுப் பார்த்தாள் .அவருக்குள் ஏதோ உடைவது போல இருக்க,இப்போது இவளுக்காக பார்த்தால் இருவரின் வாழ்க்கை இல்லை,மூவரின் வாழ்க்கையும் கேள்விக்கும் கேலிக்கும் ஆளாகும்.அதிலும் பெண் குழந்தை. அவளுக்கு அப்பாவின் பாதுகாப்பும் நிழலும் நிச்சயம் தேவை என்று யோசித்தவர் மறந்தும் குழந்தையை பற்றி ஒரு வார்த்தையுமே கேட்டாரில்லை .

எங்காவது குழந்தையை பற்றி விசாரிக்க போய் ,'குழந்தைக்காகத்தானே இந்த திருமணம் என்று முறுக்கிக் கொண்டால் என்ன செய்வது என்று அவருக்கு. அதில் தவறும் இல்லை. அந்த பிடிவாதத்தில் தானே அவள் வயிற்றுக் குழந்தையுடன் கிளம்பி வந்தது!

வித்யாசாகருக்கு தனக்கான பெண் மீது கோவம்தான். அதைவிட அவள் மீதான காதல் அதிகம். தன் நெஞ்சறிய பொய்யற்க... அவருக்கு மகளை விட அவளை பெற்ற அதன் தாய் மீது தான் ஆசை அதிகம். அவளை வைத்து தான் குழந்தை என்பது புரிந்திருந்தது. அதனாலேயே அவளை எந்தவித காரணம் கொண்டும் விட்டுவிட அவர் தயாராக இல்லை.

"நாம கல்யாணம் செஞ்சுக்கலாம் சாகரி . உன்னை மாதிரி குறைஞ்சது மூணு குழந்தைகளாவது பெத்துக்கணும். ஒரு சந்தோஷமான வாழ்க்கையை உன்னோட வாழணும் .என்னால இதுக்கு மேல உன்னை விட்டு இருக்கவே முடியாது. உன்னை பார்த்த பிறகு வேறே யாரும் என்னோட மனசுலயும் வரல.படுக்கையிலும் தான். புரிஞ்சதுக்கோ ப்ளீஸ்."

அவள் ஆரம்பத்தில் கேட்க நினைத்த கேள்விக்கு இப்போது பதில் கிடைத்து விட்டது. அதில் அவளுக்கு வருத்தமும்,சந்தோஷமும் சரிவிகிதத்தில் கலந்திருக்க ," ம்ஹும்..என்னால சட்டுனு ஒரு முடிவுக்கு வர முடியாது சார். என்னோட காதல் ரொம்ப பழசு. வலியை சுமக்க வச்சது.இப்போ அதோட வலியும் ,வலியில் இருக்கும் சுகமும் பழகிருச்சு. இப்போ கல்யாணம் செஞ்சுகிட்டு ... தோணலியே!"

' வித்யா' என்பது ' சார்' என்று மாறிவிட்டதை கவனித்த வித்யாசாகருக்குள் அவள் விலகி நின்று,தன்னையும் விலக்கி நிறுத்த முனைவது புரிய, அவளிடம் ஏதும் சொல்லவில்லை. அவளும்,"வீட்டுல தேடுவாங்க. நா கிளம்பறேன்.' என்றுவிட்டு தனது பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

அவளுக்காக அவர் பார்த்து பார்த்து ஆர்டர் செய்த பதார்த்தங்கள் அவரை பார்த்து சிரித்தது போல இருந்தது. மனம் முழுவதும் பாரம் கூடியது.அங்கிருந்து நேராக தங்களது அடையாறு பங்களாவுக்கு சென்று விட்டார் . என்னவென்றாலும் ஹோட்டல் வீடாகாதே!


வீட்டுக்கு செல்லும் வழியிலேயே வீட்டின் செக்யூரிட்டிக்கு அழைத்து தான் வருவதாக சொல்லி விட்டான். அதற்க்கு தகுந்தபடிக்கு அவர் இவனது அறையில் ஏசி போட்டு, விளக்குகள் எரியவிட்டு என்று ஏற்பாடுகள் செய்து வைத்து விடுவார். முக்கியமாக கேட் திறக்க வேண்டும்.அந்த நேரத்தில் அவர் கேட் அருகே இல்லாவிட்டால் அவர் வரும் வரை வெளியில் காத்திருக்க முடியாது. நேரம் இப்போதே எட்டு என்றது. இத்தனை நேரத்திற்கு சாகம்பரி வீட்டுக்கு சென்றிருப்பாளா என்று யோசனை ஆக்கிரமிக்க அவளது அலைபேசிக்கு அழைக்கலாம் என்று தனது அலைபேசியை எடுத்துவிட்டவனுக்கு பிறகுதான் ஞாபகம் வந்தது அவளது எண் தன்னிடம் இல்லை என்று. காரின் ஸ்டியரிங்கில் அவன் விட்ட குத்தில் கை வலித்தது.கூடவே மனதும் வலித்தது. அவளது எண்ணை கேட்டு சுந்தருக்கு ஒரு குறும்செய்தி அனுப்பி வைக்க ,அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் அவளது எண் வந்து சேர்ந்தது.

ஏற்கனவே ஒருமுறை சுந்தர் சாகம்பரியின் புதிய எண்ணை அனுப்பி வைத்திருந்தான்.இருந்த வேலை பளுவில் அந்த எண்ணை சேமிக்க மறந்திருத்தான் . சுந்தர் அனுப்பியிருந்த எண்ணை முதல் வேலையாக தனது அலைபேசியில் சேமித்து வைத்துக்கொண்டான்.அதே வேகத்தில் அவளை அழைக்கவும் தவறவில்லை.

பெண் வீடு சேர்நது ஒரு மணிநேரம் ஆகியிருந்தது. போய் குளித்துவிட்டு வந்து மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு தனது செல்ல மகளை மடியில் அமர்த்தி கொஞ்சிக் கொண்டே இன்றைய தினம் நடந்தவைகளை ஸ்ரீதயா சொல்லக் கேட்டுக்கொண்டிருந்தாள் சாகம்பரி. அவளது மனம் அவ்வளவு அமைதியாக இருந்தது.
 

Gowri Karthikeyan

Well-known member
இப்ப ஏன் இவ முறுக்கிக்கறா?????
இவ எப்ப தான் சுற்று புறத்தை உணர்ந்து....அவ பிள்ளைக்கு நாளை என்ன என்பதை தெரிஞ்சிக்க போராளோ????
 
Top Bottom