வெளிநாடு சென்று இருந்த வித்யாசாகர் மீண்டும் இந்தியா வந்துவிட்டான். பெங்களூரு செலவே விருப்பம் இல்லை. அவனது உள்ளுணர்வு சாகம்பரி சென்னையில் தான் இருக்கிறாள் என்று உறுதியாக சொல்லியது. சென்னை செல்லலாம் என்று யோசித்தவன் முதலில் பெங்களூரு சென்று கொஞ்சம் முடிக்கவேண்டிய வேலைகளை முடித்துவிட்டு ,நீண்ட நாட்களுக்கு தங்குவதற்கு இங்கே சென்னை வரலாம் என்று முடிவெடுத்து மீண்டும் பெங்களூருவுக்கு சென்று விட்டான்.
சாகம்பரிக்கும் கூட ஒருமுறையாவது அவரை பார்க்கமுடிந்தால் நன்றாக இருக்குமே.பார்த்தே வருடக் கணக்கில் ஆகிவிட்டதே என்ற எண்ணம்தான். அவர் இருக்கும் இடம் தெரியும்.தேவைப்பட்டால் சுந்தரிடம் சொன்னால் போதும்.எப்படியாவது இவள் அவரை தொலைவில் இருந்தே பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யவும் கூடும் என்று தோன்றவாரம்பித்திருந்தது. இருவரின் எண்ண அலைகளும் ஒரே அலைவரிசையில் பயணிக்க,காலமோ இன்னமும் இவர்கள் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கவில்லை போலும்.
பெங்களூருவுக்கு சென்ற வித்யாசாகரை வேலைகள் ஆக்டொபஸ் போல சுற்றி பிடித்தது. மூச்சு விடவும் பொழுதுகள் இல்லை.போதாத குறைக்கு இவன் பங்குதாரராக இருக்கும் பேக்டரி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் அங்கு செல்ல வேண்டிய நிர்பந்தம்.
நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்ததில் ஒரு கட்டத்தில் சலிப்புதான் வந்தது.இவ்வளவு தொழில்கள்,பல நிறுவனங்களில் பங்குகள்,பெரிய அளவுக்கு பணம், நினைத்ததை நடத்தி வைக்கும் அளவுக்கு பலம் ,அரசியல் பலம், என்று தேவையானது எல்லாமே இருக்கிறது. இவனது பாதுகாப்புக்கு என்று செலவழிக்கும் பணமே வருடத்தில் முப்பது லகரங்கள். எதற்கு இவையெல்லாம் என்று புரியாமலே தவித்தான். மனம் ஒருநிலையில் இல்லை.
வாழ்வில் ஒரு சலிப்பு ஏற்பட தொடங்கியிருந்தது. நாற்பது வயது நெருங்குகிறது. வீட்டில் இருக்கும் தனது தம்பி தங்கைகள் எல்லோரும் தத்தம் குடும்பத்துடன் இருக்கும் பொழுது தான் மட்டும் தனியே இருப்பது மனதில் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தி இருந்தது.
இப்போதெல்லாம் வீட்டில் இவனை திருமணம் செய்து கொள்ள கேட்பதை விட்டுவிட்டார்கள். அவர்கள் அன்று கடைசியாக பேசும்பொழுது குழந்தை என்று ஏதோ சொன்னது இப்போது மனதில் ஆழமான ஒரு சந்தேகத்தை கொடுத்தது.ஒருவேளை அதற்க்காகதான் அவள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டாளோ என்று தோன்றவே அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாதவனாக தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.
சுந்தரை மீண்டும் கேட்கலாம் என்று தோன்றவே அவனுக்கு அழைத்தான் வித்யாசாகர். முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்ற சுந்தர்,"சொல்லுங்க வித்யாசாகர் சார்.ஏற்கனவே நா டூர் போயிருந்த சமயம் கூப்பிட்டு இருந்தீங்க.திரும்பவும் கூப்பிடலாம்னு பார்த்தேன்.அப்புறம் தான் தெரிஞ்சுது நீங்க வியாபார விஷயமா அப்ராட் போய் இருந்தீங்கன்னு "என்றான்.
அவனது வார்த்தைகளை உள் வாங்கியவனுக்கு புரிந்தது. சுந்தருக்கு தன்னிடம் பேசுவதற்கு பெரியதாக இஷ்டம் இல்லை என்று. அது உண்மைதான்.ஏதாவது தொழில் சம்மந்தமான விஷயமாக இருந்திருந்தால் நிச்சயம் தனது அப்பாவை தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.தன்னை அழைத்து பேசவேண்டும் என்று யோசித்தது நிச்சயம் தோழி சாகம்பரி விஷயமாகத்தான் .அவளது விருப்பமின்மையில் அவளை பற்றி வித்யாசாகரிடம் சொல்லுவதற்கு சுந்தருக்கு விருப்பம் இல்லை. இதை வித்யாசாகரும் புரிந்து கொண்டான்.ஆனாலும், அப்படியே விட்டுவிட முடியாதே!
"சுந்தர், உங்க பிரண்ட் சாகம்பரிய பற்றிய விபரங்கள் வேணுமே!லைக் அவ இப்போ எங்கே இருக்கா...என்ன பண்ணுறா...எல்லாத்தையும் விட முக்கியமா அவளுக்கு...ப்ச் ,எங்களுக்கு குழந்தை இருக்கா?"
இதை கேட்பதற்குள் வித்யாசாகர் அவமானத்தில் குறுகித்தான் போனான்.எனக்கு குழந்தை இருக்கிறதா என்று யாரோ ஒரு மூன்றாம் மனிதனிடம் கேட்பதை அவமானமாக உணர்ந்தான்.
சற்று நேரம் அமைதியாக இருந்த சுந்தருக்குள் ஏதோ ஒரு பொறி. "எதுக்கு கேக்கறீங்க வித்யா சார். அவ உங்கள ரொம்பவே லவ் பண்ணா.நா ஆனமட்டும் தடுத்து பார்த்தேன்.புத்தி சொன்னேன்.இதெல்லாம் நம்ம கல்ச்சருக்கு சரி படாது.வேணாம்னு சொன்னேன். அவ கேக்கல. என்னோட காதல் சரியானது. அவரை தவிர வேறே வாழ்க்கை இல்லன்னு உளறினா. இன்னமும் சொன்னேனே. அவரோட ஸ்டேட்டஸ் வேறே. நீ அவரோட பாசிங் கலௌட்டா இருக்கலாம்.லைஃப்பா இருக்க முடியாதுன்னு சொல்லி பார்த்தேன். கேட்டா தானே. "
"இப்போ அவ எங்கே இருக்கா சுந்தர். ஐ வான சீ ஹெர். சென்னைல தான் இருக்காளா...அதையாவது சொல்லுங்க சுந்தர்.ப்ளீஸ்."வித்யாசாகரின் குரல் கொஞ்சம் இறங்கித்தான் ஒலித்தது.அதை சுந்தர் கவனிக்கவும் தவறவில்லை.
"சார்,ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.அவளுக்கு உங்கள திரும்ப பார்க்க இஷ்டம் இல்ல. உங்ககிட்டேந்து தள்ளி இருக்க விரும்புறா. தன்னோட வாழ்க்கையை நிம்மதியா கழிக்க ஆசைப்படுறா.அவளை திரும்ப பார்த்தீங்கன்னா நிச்சயம் இந்த ஜென்மத்துல கல்யாணமே செஞ்சுக்க மாட்டா.ஏற்கனவே அவளோட வீட்டுல அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுக்க போராடுறாங்க.இவதான் முடியாதுன்னு நிக்கிறா. "
வித்யாசாகரின் மனதுக்குள் சாரல் வீசியது. அவள் என்னை இன்னமும் மறக்கவில்லை,வெறுக்கவில்லை.அதோடு இன்னமும் வேறு திருமணம் ஆகவில்லை.அவள் சென்னையில் தான் இருக்கிறாள். தனது மனதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் சுந்தரிடம் பேசினான் வித்யாசாகர்.
" ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்க சுந்தர் அவ இப்போது சென்னையில் அவளோட குடும்பத்தோட தான் இருக்காளா..அவங்க அவளை விடல இல்ல.. ரொம்பவே ஆர்தடாக்ஸ் பேமிலின்னு சொன்னா. அதனால தான் கேக்குறேன்."
வித்யாசாகர் எதற்கு கேட்கிறான் என்று புரியாமல் சுந்தரோ,"அவ நல்லா இருக்கா சார்.இதுக்குமேல எனக்கு அவளை பற்றி உங்ககிட்ட பேச இஷ்டம் இல்லை என்றுவிட்டான். தனக்குத் தேவையான தகவல் கிடைத்த சந்தோஷத்தில் அழைப்பை துண்டித்தான் வித்யாசாகர்.
அவள் இன்னமும் சென்னையில் தான் இருக்கிறாள்.அதுவும் அவள் என்னிடம் சொல்லிவிட்டு வந்தது போல தனது குடும்பத்துடன் தான் இருக்கிறாள் என்பது அவனுக்கு ஆறுதல் தான்.அவளை அவள் வீட்டில் ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்று எத்தனை முறை வேண்டியிருக்கிறான். ஏற்கனவே அவளுக்கு அவளது பெற்றவர்கள் மாப்பிள்ளை பார்ப்பதாக சுந்தர் சொல்லி இருந்ததில் அவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டவன் அதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்வதற்காகத் தான் .இப்போது சமாதானம் அடைந்தவனாக தனது வேலைகளை கொஞ்சம் நிம்மதியாக கவனிக்கத் தொடங்கினான் வித்யாசாகர்.
சாகம்பரிக்கு அன்று காலையிலிருந்தே மனதில் ஏதோ நெருக்கமாக தோன்றி கொண்டே இருந்தது. வேலை தளத்தில் காலை விரைவாக சென்றாகவேண்டிய கட்டாயம் . மொத்தம் இருபது அடுக்குகளை கொண்ட ஹோட்டல் அது. இவள் பார்ப்பது ஆறாம் மற்றும் ஏழாம் தளம். இன்று கொஞ்சம் வேலை அதிகமாகி விட்டது. காலை ஆறு மணிக்கு ஹோட்டலில் யூனிபோர்ம் புடவையை நேர்த்தியாக உடுத்தி,அதற்கு தோதாக முத்து கழுத்தணியும்,காதணியும் அணிந்து கொண்டு லிப் க்ளாஸ் போட்டுகொண்டு தயாராகி வந்தவளை அவளது அம்மா வித்யாசமாக பார்த்தார்.
"என்ன இன்னிக்கு இவ்ளோ சீக்கிரம் தயாராகிட்டே. சீக்கிரம் போகணும்னா ஏழு மணிக்கு கிளம்பினா போதாதா?ஸ்ரீ தயா எழுந்தா உன்னை கேட்டு அழுவா "என்று பேசிய வாக்கிலேயே மகளுக்கு காபியை வார்த்துக் கொடுத்தார் அவளது அம்மா.
அம்மா சொல்வது சரிதான்.தயா அவள் தூங்கி எழுந்துகொள்ளும் பொழுது அருகில் இவள் இல்லாவிட்டால் அழுது ஊரையே கூடிவிடுவாள். ஆனால் இன்று அதையெல்லாம் பார்க்க முடியாதே. கொஞ்சம் தாமதம் ஆனாலும் போதகாரமாகி விடுமே! என்று மனதுள் நொந்து கொண்டவளாக அவசர கதியில் காபியை உள்ளே இறக்கினாள்.
அரை தூக்கத்தில் புரண்டு கொண்டிருந்த ஸ்ரீதயாவின் நெற்றியில் முத்தமிட்டவள்,"தயாகுட்டி,அம்மாவுக்கு இன்னிக்கு சீக்கிரம் ஹோட்டலுக்கு போகணும். நீ சமத்தா கிளம்பி ஸ்கூல் போறியா?" என்றாள்.
அம்மாவின் குரல் புரிந்தவளாக தயா "ஓகே ம்மா..என்றுவிட்டு சாகம்பரியின் கழுத்தில் கையிட்டு இழுத்து அவளது கன்னத்தில் ஒரு எச்சில் முத்தம் வைத்தது மேக்கப்பில் இருந்த அவளது முகத்தின் செயற்கை வாசனை பிடிக்காமல் மூக்கை துருத்திக்கொண்டு மீண்டும் தூக்கத்தை தொடர்ந்த ஸ்ரீதயா சாகம்பரிக்கு வித்யாசாகரை நினைவு படுத்தியது.
ஹோட்டலில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த உடனே முதல் வேலையாக முகத்தை மேக்கப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது வித்யாசாகரின் எழுத படாத கட்டளை. "இயற்கையாகவே நீ நல்ல அழகுதான் சாகரி. கம்மியா மேக்கப் போடு.ஸ்கின் ப்ரோப்லேம் வந்தா என்னடி பண்ணுவே?" என்று இவளது காது மடல்களை மீசையால் உரசியவாறே அவர் சொல்லும் பொழுது உலகமே இவளுக்கு உறைந்து நின்றது போல இருக்கும். கெமிக்கல் வாசனையே அவருக்கு ஆகாது.மகளும் இப்பதியே பிறந்திருக்கிறாள் எண்டு நினைத்து சிரித்துக்கொண்டாள்.
அம்மா சொன்னபடிக்கே கிளம்புவதற்கு மணி ஏழை நெருங்கி விட்டது.மகளின் அருகே சென்றால் நேரமாவது ஒன்றாவது என்று நினைத்தவாறே தனது ஹீல்ஸ் ஷூவில் காலை நுழைத்தாள்.அவளது இரு சக்கர வாகனம் கேட்டை விட்டு தாண்டியதை பார்த்த பெற்றவளுக்கு பெருமூச்சு எழுந்தது.
ஹோட்டலில் வேலை இவளை நெட்டி வாங்கியது. இவள் உள்ளே நுழையும் பொழுதே அன்று ரூமிலிருந்து காலி செய்தவர்களின் லிஸ்ட் வந்து விட்டது. அதை செக் செய்துவிட்டு அந்தந்த அறைகளுக்கு சென்று செக் லிஸ்ட் சரி பார்த்தவள் ஹவுஸ் கீப்பிங் ஆட்களை வர சொல்லி அவர்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை வரிசையாக சொல்லிவிட்டு , மற்ற அறைகளின் தேவைகளை கவனிக்க சென்றாள்.
இங்கே வருபவர்கள் எல்லோரும் சமூகத்தில் உயர்மட்டத்தில் இருப்பவர்கள்.கொஞ்சம் எங்காவது அவர்கள் அறையில் தூசியை பார்த்துவிட்டால் கூட பிரச்சனை பெரியதாகிவிடும். இவள் பார்க்கும் இரண்டு தளங்களிலும் இவளுக்கென்று மேற்பார்வை பார்க்கவென்று கொடுக்கப் பட்டிருப்பது முப்பது அறைகள். தினமும் செய்யும் வேலைகள் தான் என்றாலும் இன்று இன்னமும் கொஞ்சம் அதிகமாக இருந்ததாக உணர்ந்தாள் சாகம்பரி. ஹை ஹீல்ஸ் போட்டுகொண்டு ஒவ்வொரு அறைக்கும் அலையும் பொழுது இடுப்பு கடுத்தது.
உட்காருவதற்கு கூட ஐந்து நிமிஷங்கள் தொடர்ச்சியாக கிடைக்கவில்லை. முகத்தில் கொஞ்சமும் சோர்வின் சாயல் தெரியக்கூடாது எண்டு கவனமாக இருந்தாள். அறைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட போர்வை தலையணை உறைகளை எண்ணிக்கை சரி பார்த்து துவைக்க அனுப்பிவைத்தவள் ஹவுஸ் கீப்பிங் ஆட்களிடம் இன்னமும் சில வேலைகளை சொல்லி செய்ய வைத்தாள்.
காலையிலிருந்து நின்றுகொண்டே இருந்தது கால் முட்டி வலியில் மடக்குவது போல உணர்ந்தாள்.மணி இப்போதுதான் மதியம் ஒன்று என்றது.இன்னமும் மாலை ஐந்து மணி வரை சமாளித்தாக வேண்டுமே!

Author: Stn49
Article Title: இமைக்க மறந்தேன் உயிரே 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.