Vikashini Novels
New member
உயிர் 5
தூரிகா , ஶ்ரீ ராமின் வாழ்க்கை தாமரை இலைமேல் தண்ணீர் போலத் தான் ஒட்டாமல் சென்றது..
எப்படியோ சண்டைப் போட்டுக் கொண்டும், மாறி மாறி வெறுப்பேற்றிக் கொண்டு ஒரு மாத வாழ்க்கையை ஓட்டினார்கள்..
இவன் வடக்கு என்றால் அவள் தெற்கில் நிற்பாள்..
ரெண்டும் அடுத்தவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று நிறுப்பித்தார்கள்..
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது தான் கணவன் மனைவி வாழ்க்கை என்ற கணக்கு இவர்களுக்கு இல்லை போலும்..
அவன் டீ கேட்டால் ! நீ கேட்டா நான் அதை செய்யனுமோ என்ற ரீதியில் காஃபியை கொடுப்பாள்..
வீட்டுல சும்மா தான் இருக்க போற என்று கபோர்டில் அடுக்கி இருக்கும் ஆடைகளை கலைத்து விட்டு சென்று விடுவான்..
அடேய் ஒரு நாள் நீ வசமா என்கிட்ட மாட்டுவ பாரு அன்னைக்கு உன்னை வெச்சி செய்யறேன் என்று திட்டித் தீர்ப்பாள்..
அவன் தனக்கு பிடித்த உணவு கேட்டால் வேண்டுமென்றே அவளுக்கு பிடித்ததை செய்வாள் தூரிகா ..
ஏன் டி என்று அவளைப் பார்த்தால் ஐயோ சாரி, நீங்க சொன்னீங்க தானே நான் மறந்துவிட்டேன் என்று சமாளிப்பாக கூறுவாள்...
அன்றொரு நாள், இன்னைக்கு அவனுக்கு பிடித்த உணவை செய்து கொடுக்க , அதை ருசித்து சாப்பிட்டவன்.
எப்படி இருக்கு என்று கேட்டு ஆவலாக அவனைப் பார்க்க ,"இவளை போய் பாராட்டனுமா, வேண்டாம் அப்புறம் ஓவரா சீன் போடுவா என்று நினைத்து",
என்ன இருந்தாலும் என் அம்மா செய்யற மாதிரி வரல டி, சாப்பாடு வேஸ்ட் பண்ண பிடிக்காது அதனால தான் நான் சாப்பிட்டேன் என்று நக்கலாக பார்த்து விட்டு சென்றான்..
அடச்சே நீயும் ஒரு ஆளுன்னு கேட்டேன் பாத்தியா? என்று தலையில் அடித்துக் கொள்வாள்..
வார இறுதியில் ஷாப்பிங் அழைத்துச் சென்றான்..
தூரிகா பின்னால் அமரப் போனாள்..
ஏய் முன்னாடி ஏறு , பெரிய ஜமீன் அம்மா என்று முனுமுனுக்க முன்னாடி அமர்ந்தாள்..
அவன் 90s பாடல்களை ஒலிக்க விட,அது தூரிகவிற்கு பிடிக்கவில்லை..
அனிருத் ப்ளே லிஸ்ட் போட்டு விட்டு அவளும் சேர்ந்து பாடிக் கொண்டே வந்தாள்..
அவளை முறைத்தவன், என்ன கருமம் இது , ஒரே இரைச்சலா இருக்கு என்று அவனுக்கு பிடித்த பாடலை மாற்றினான்..
அவளுக்கு சுருசுருவென கோவம் வர,நீ கேக்குறது எல்லாம் பாட்டா?
இதையெல்லாம் கேட்டா போற வழியில தூங்கிட்டே போய் யாரு மேலயாவது விடனும்?என்று கிண்டல் செய்தாள்..
என்ன கொழுப்பா ?
இது என் கார் , எனக்கு புடிச்ச பாட்டு தான் போடுவேன்; இஷ்டம் இருந்தா கேளு, இல்லைன்னா காதை அடைச்சிட்டு உட்காரு என்று அவன் திட்டிவிட்டான்..
தூரிகாவின் முகம் சுருங்கியது..
இதுக்கு மேல பேசவேண்டாம் என்று அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்தவாறு அமைதியாக இருந்தாள்..
வேடிக்கை பார்க்கும் சுவாரஸ்யத்தில், சப்பணங்கால் போட்டு அமர்ந்து கண்ணாடியை இறக்கி விட்டாள்..
அவன் சும்மா இருப்பானா? என்ன காரணம் கிடைக்கும் சண்டை போடலாம் என்று இருப்பவனுக்கு காரணம் கிடைக்க, மீண்டும் ஆரம்பித்து விட்டான்...
ஏன் டி ஏசி ஆன்ல இருக்கு, எதுக்கு விண்டோவ் ஓப்பன் பண்ற?
அப்புறம் எதுக்கு, இப்படி சீட் மேல கால் வெச்சி இருக்க?
கால்ல இருக்க அழுக்கு பட்டு சீட் அழுக்காயிடும் என்று மிரட்டினான்..
இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது என்று அவளும்,
இங்க பாரு ஶ்ரீ நான் ஒன்னும் முன்னாடி வாரேன்னு சொல்லல, நான் அமைதியா பின்னாடி தான் போனேன், எது செஞ்சாலும், திட்டிட்டே இருந்தா நான் என்ன பண்றது;நான் என்னமோ கார்ல போனதே இல்லாத மாதிரி இத்தனை ரூல்ஸ் சொல்ற, அப்புறம் எதுக்கு உன் கார்ல என்னை கூட்டிட்டு வந்த என்று அவளும் திரும்பி பேச, (கரெக்ட் தான் ஆனா அது என்னமோ தெரியலை உன்னை பார்த்தா திட்டிட்டே இருக்கனும் போல இருக்கு என்று மனதிற்குள் மட்டுமே நினைத்தான்)..
அவளை முறைத்துப் பார்த்தவன், கடை வந்திடுச்சு இறங்கு நான் பார்க் பண்ணிட்டு வரேன் என்று அவளை இறக்கி விட்டு சென்றான்..
பெரிய கார் வெச்சிருக்கான்னு நெனைச்சு, இப்ப கூட என் அப்பா கிட்டயும், கதிர் மாமா கிட்டயும் சொன்னா ரெண்டு கார் வாங்கி அனுப்புவாங்க டா என்று புலம்பிக் கொண்டே சென்றாள்..
வா போகலாம், உனக்கு என்ன வேணுமோ வாங்கிட்டு பில் கவுண்டர் கிட்ட வந்திடு , எனக்கும் கொஞ்சம் வாங்கனும் என்று அவன் தனியாக சென்று விட்டான்..
அவள் அம்மாவுக்கு கால் செய்து என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்று கேட்டு வாங்கி, அவளுக்கு பிடித்த பொருட்கள், சிப்ஸ், சாக்லேட், பிஸ்கட் என நிறைய வாங்கி இருந்தாள்..
பில்லிங் கவுண்டர் அருகில் அவன் நிற்கவும், அவனுடன் இணைந்து கொண்டாள்..
தினமும் அறுசுவை சாப்பாடு செய்ற மாதிரி இத்தனை வாங்கி இருக்க என்றான் நக்கலாக?
பில்போடும் பெண் அவளைப் பார்த்து சிரிக்க, தூரிகாவுக்கு கடுப்பு..
ஆமா,குறை சொல்லிட்டு சாப்பிடறதுக்கு அதுவே போதும் என்று அவனிடம் வம்பு பேச, அவளை முறைத்தான்..
எதுக்கு இவ்வளவு ஸ்நாக்ஸ், பில் அமௌண்ட் அதிகமா வரப்போகுது பாரு என்றான்..
எவ்வளவு வந்தாலும் நான் வாங்குறதுக்கு நானே காசு கொடுக்கிறேன்; உனக்கும் ஒன்னும் கஷ்டம் வேண்டாம் என்று வேறு பக்கம் திரும்பி நின்றாள்..
அவள் காசு கொடுக்கப் போக, பரவால்ல விடு விடு நானே பே பண்ணிட்டேன் என்று ஏதோ போனால் போகட்டும் என்று செய்தது போல சொல்லிக் காட்டினான் ஶ்ரீ ராம்..
பில் போட்டு அனைத்து பொருட்களையும் காரில் வைத்து விட்டு கிளம்பினார்கள்..
இப்பொழுது அவள் பின் இருக்கையில் அமர்ந்து விட்டாள்...
இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ளவில்லை. கார் ஒரு பிரபலமான ரெஸ்டாரண்ட் வாசலில் நின்றது.. அவனுக்கு போன் வர அதை பேசிக்கொண்டே அவளை வரும்படி சைகை காட்ட, அங்கிருந்த பர்ஸை பார்த்தவள்,
அவனுடைய பர்ஸை எடுத்து ஒளித்து வைத்தாள்..
அவர்கள் உள்ளே நுழைந்து, டேபிளில் அமர சர்வர் வந்து மெனு கார்டை நீட்டினார்.
"என்ன வேணும்?" என்று ஸ்ரீ ராம் பெயருக்குக் கேட்டான்.
"எனக்கு ஸ்பைஸியா ஏதாவது வேணும். சிக்கன் ரைஸ் !" என்றாள் தூரிகா.
ஸ்ரீ ராம் சர்வரைப் பார்த்து, "ரெண்டு பேருக்கும் ரெண்டு செட் இட்லி, அப்புறம் காரம் இல்லாத சாம்பார் கொண்டு வாங்க. அவங்களுக்குத் தொண்டை சரி இல்லை, காரம் வேண்டாம்," என்று அவளைப் பார்த்து நக்கலாகக் கண் சிமிட்டினான்.
தூரிகாவுக்கு கோபம் வந்தது. "ஏய்! நான் கேட்டது சிக்கன் ரைஸ் என்றாள் தூரிகா..
எனக்குப் பசிக்குது டி , இட்லி சீக்கிரம் வந்திடும். அதுவும் இல்லாம
இட்லி உடம்புக்கு நல்லது தூரி.. கொழுப்பு இல்லாத ஃபுட் நீ நல்லா சாப்பிடு," என்று அவன் அமைதியாகச் சொல்ல, சர்வர் இட்லியோடு வந்து நின்றார்.
அவள் இட்லியை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டாள்..
அடச்சே எனக்கு பிடிச்சது கூட சாப்பிட முடியல என்று முனுமுனுத்துக்கொண்டே இருந்தாள். பில் வந்தபோது ஸ்ரீ ராம் தன் பர்ஸைத் தேடினான். தூரிகா அவன் பர்ஸை கார் சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்திருந்தது அவனுக்குத் தெரியாது.
"அய்யோ.. பர்ஸ் காணோமே!" என்று அவன் பதற..
என்ன ஆச்சுங்க என்ன தேடறீங்க என்றாள்..
பர்ஸ் கார்ல இருக்குன்னு நினைக்கிறேன் என்றான்..
அப்போ ஆன்லைன் பே பண்ணுங்க என்றாள்..
அது எனக்கு தெரியாதா?
ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு என்றான்..
ஓஹ்ஹ் நீ பர்ஸ் எடுத்து வரலையா ஶ்ரீ என்றாள் ..
சரி வெயிட் பண்ணு டி நான் போய் கார்ல பார்த்துட்டு வரேன் என்றான் ..
சரி சரி பரவால்லங்க ஶ்ரீ நான் பே பண்றேன்; நான் ஒன்னும் உன்னை மாதிரி சாப்பிட செலவு பண்ண கணக்கு பார்க்க மாட்டேன் என்று தூரிகா மெதுவாகத் தன் போனை எடுத்து, ஜீ பே செய்தாள்...
அவனுக்கு பர்ஸ் காணவில்லை என்று பதட்டம்..
வேக வேகமாக காரில் வந்து பார்க்க அவன் பர்ஸ் அங்கே இல்லை என்றதும் அவனுக்கு பதட்டம்..
ஓகே !மறுபடியும் சூப்பர் மார்க்கெட் செல்ல வேண்டும் என்று ஶ்ரீ ராம் யோசிக்க,
தூரிகா அங்கும் இங்கும் தேடுவது போல் பாவனை செய்து விட்டு ,
பர்ஸ் இங்க இருக்கு பாருங்க என்று அவன் சீட் அடியில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்..
அதெப்படி கரெக்டா அங்க இருந்து எடுத்த, அப்போ நீ தான் ஒளிச்சு வெச்சியா என்று அவளை சந்தேகமாக பார்க்க?
ஆத்தாடி கண்டு பிடிச்சிடுவானோ!
சாமாளிச்சிடு டி தூரிகா என்றது மைண்ட் வாய்ஸ்..
உங்க பர்ஸ் எடுத்து வச்சு நான் என்ன பண்றது .. நான் ஒன்னும் எடுக்கல என்று சத்தியம் செய்து அவனை நம்ப வைத்தாள் தூரிகா..
இருந்தாலும் அவளை நம்பாத பார்வை பார்த்து வைத்தான்...
இவ பத்து ரூபாய் கூட என்கிட்ட இருந்து எடுத்து தான் செலவு செய்வா..
அதுவும் இல்லாம இன்னைக்கு என்ன மரியாதையா வேற பேசற அப்போ கண்டிப்பா இவ தான் எடுத்து ஒளிச்சு வச்சு இருக்கா?
அடிப்பாவி இருடி ..
உன்னோட வீக் பாயிண்ட் எனக்கு தெரியும்..
இப்போ சிரி..
ஒரு நாள் இல்லை ஒரு நாள் நல்லா வசமா மாட்டுவ என்று நினைத்தான்...
இந்தச் சின்னஞ்சிறு சண்டைகள் ஒருநாள் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை அறியாமல் அவர்கள் இருந்ததுதான் பாவம். இதனால் அவர்களுக்கு இடையிலான இடைவெளி இன்னும் அதிகமாகப் போகிறது..