• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் உயிரினில் கலந்தேன் கரைந்தேனே

உயிர் 1
கோவை மாநகரில் ஒரு பிரபல திருமண மண்டபத்தின் வாசலில்
ஶ்ரீ ராம் வெட்ஸ் தூரிகா என திருமணப் பெயர் பலகை இடம் பெற்று இருந்தது...மண்டபத்தின் வாசலில் கட்டப்பட்டிருக்கும் பச்சை வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் அதிகாலைப் பனியில் நனைந்து புதுப்பொலிவுடன் காணப்பட்டன..
மண்டபத்திற்குள் நுழைந்ததும் காதுகளை நிறைப்பது அந்த நாதஸ்வர மற்றும் தவில் இசை ஒரு வித பாசிட்டிவ் வைப்ரேஷனை பரப்பிக் கொண்டு இருந்தது..
இளம் வயது பிள்ளைகள் தங்கள் இஷ்டத்துக்கு செல்ஃபிகலை எடுத்துக் கொண்டு இருந்தார்கள்..
அமர்ந்திருந்த உறவினர்கள் ஏதேதோ பேசி வளவளத்துக் கொண்டு இருந்தார்கள்..
மேடையில் ஐயரோ ஒரு பெண்ணை இத செய்யுங்க , அதை எடுங்கோ, தீபம் ஏத்துங்கோ என்று வேலை ஏவிக் கொண்டே அவருடைய வேலையைச் செய்து கொண்டிருந்தார்..
அவளும் முகம் சுளிக்காமல் எல்லாம் செய்ய அப்போது அவள் முன்னே காஃபி கப் ஒன்று நீட்டப்பட, நிமிர்ந்து பார்த்தாள்.. அவளுடைய கணவன் தான் இருந்தான்..
அவன் கதிர்நயனன்..அவன் மனைவி ஆதிரை.இவர் தான் கல்யாணப் பொண்ணு தூரிகாவோட தாய்மாமா ...அதாவது தூரிகா அம்மாவோட தம்பி..
வேர்க்குது டி, இதை குடிச்சிட்டு வேலை செய் என்றான் கதிர்நயணன்

ஐயரே என்‌பொண்டாட்டிய ரொம்ப வேலை வாங்காதிங்க அவளுக்கு எப்படி வேர்க்குது பாருங்க என்று அவரிடம் வம்பு வளர்த்துக் கொண்டே அவருக்கும் காஃபியை நீட்டினான்..

வைஃப் மேல அவ்ளோ லவ் ஆஹ்..
சரி சரி ஷேமமா இருங்கோ என்றார்..

இருக்காதா டீப் லவ் ஐயரே என்றான்..

உங்க குடும்பத்தில உன் கல்யாணம் மட்டும் தான் நான் பண்ணி வைக்கல.
மத்தபடி உங்க பங்காளி வீட்டுல எல்லாருக்கும் நான் தான் செய்து வெச்சேன் என்றார்..

வருத்தமா இருந்தா சொல்லுங்க, இப்பவே எங்களுக்கும் இன்னொரு தடவை கல்யாணம் பண்ணி வைங்க என்றான்...

அப்போ எனக்கு டபுள் பேமெண்ட் ஆஹ்.. எனக்கு சந்தோஷம் தான் சிறப்பா நடத்தி வைக்கறேன் என்று அவர் மந்திரம் ஓதும் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்..

என்ன டி மறுபடியும் ஓகே வா ..
ம்ம் உங்க அம்மா நம்மளைத் தான் முறைச்சி பார்ப்பாங்க! நான் போறேன் என்றவளின் கையைப் பிடித்து இழுத்தான்..
தன் மீசையை வருடியபடி

இன்னைக்கு நீ அழகாகத் தான் டி இருக்க என்றான் கண்ணடித்து..

இப்ப நீங்க சொன்னதுக்கு நான் வெட்கப் படணுமா? அதுக்கெல்லாம் டைம் இல்லைங்க என்று சிணுங்கினாள்..

போங்க போயி வந்தவங்கல பாருங்க..
என் வேலைய டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்றாள் மென் சிரிப்புடன்..

அழகா இருக்கியே அதனால தான் கேட்டேன் ? இன்னொரு தடவை தாலி கட்டலாமா? என்றான்..
அவனைப் பார்த்து முறைத்தாள்..
வேண்டானா போடி என்று மீசையை நீவிக் கொண்டே மெல்லிய குரலில் பேச,
அடேய் அப்பா இந்த ரொமேன்ஸ் எல்லாம் இப்படி பப்ளிக் ஆஹ் பண்ணக் கூடாது என்றார் தாம்பூலத்தில் பூக்களை அடுக்கி வைத்துக் கொண்டு...
ஐயோ ! உங்களோட என்னால முடியல என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டு சென்றாள்..
இரண்டொரு நிமிடங்கள் அவளையே பார்த்துக் கொண்டு நிற்க; அவள் வேண்டுமென்றே பார்பதை தவிர்க்க;
இரு டி தனியா மாட்டுவ அப்ப பாத்துக்கிறேன் என்று உணவு தயாராகும் இடத்துக்கு சென்று விட்டான்..

கதிர்நயணன், ஆதிரை காலேஜ் படிக்கும் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, வீட்டிற்கு தெரியாமல் திருமணமும் செய்து கொண்டார்கள்..

கதிர் கோவையை சேர்ந்தவன்,ஆதிரை திருநெல்வேலியை சேர்ந்தவள்..

பெரிய பிரச்சினை வர வேண்டியது, ஆனால் இரு வீட்டாரும் இவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்கள்..
இவர்கள் காதலுக்கு பரிசாக ஆரவ் என்று ஒரு மகன் இருக்கிறான்.. திருமணமாகி 3ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த செல்ல மகன்..

கதிர் , ஆதிரை ய பத்தி சொல்றதால அவங்க ஹீரோ, ஹீரோயின் இல்லைங்க.. அவங்க ரெடி ஆகிட்டு இருக்காங்க..
இவங்க க்யூட் பேர்.. ஆனா ரெடி ஆகிட்டு இருக்க ரெண்டு பேரும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை வந்துட்டே இருக்கும்..
ஃபர்ஸ்ட் மாப்பிள்ளை வீட்டை பாத்துட்டு வரலாம்.. ஏன்னா பொண்ணுங்க மேக்கப் போட்டு ரெடியாக லேட் ஆகும்ங்க ..

மாப்பிள்ளையின் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார் ஶ்ரீ ராமின் அம்மா..
ஶ்ரீ ராம் அப்பா ராகவன் ஒரு லாயர், அம்மா கீதா ராணி..
உள்ளே வந்து பார்த்தவர் அதிர்ந்து போய் தலையில் அடித்துக் கொண்டார்..
ஒரே நிறத்தில் வேஷ்டி சட்டை அணிந்து இருந்த ஶ்ரீ ராமின் நண்பர்கள் தான் செண்ட் எடுத்து மாறி மாறி இங்க பூசு அங்க பூசு என்ற மாடுலேஷனில் அடித்து கொண்டு இருந்தார்கள்...
டேய் முகூர்த்த நேரம் நெருங்கிட்டு இருக்கு ‌‌ஶ்ரீ எங்க டா என்று புலம்ப..
அவன் பாத் ரூம்ல இருக்கான்,
அம்மா, மண்டபத்துக்கு அழகா பொண்ணுங்க எல்லாம் வருவாங்க நாங்களும் கண்ணுக்கு லட்சணமா இருக்கணும் தான என்றான் பிரசாத் ஶ்ரீ யின் நண்பர்களில் ஒருவன்..

அடேய் முதல்ல அவனுக்கு ஆகட்டும்.. அப்புறம் ஒரு ஒருத்தருக்கா பண்ணிக்கலாம் என்று கூறிவிட்டு, பாத்ரூம் கதவை தட்டி டேய் சீக்கிரம் வாடா நேரம் ஆச்சு என்று கூற..
இதோ வரேன் மா , நீங்க போங்க என்றான்...
டேய் பசங்களா அவனை சீக்கிரம் தயாராகச் சொல்லுங்க, நான் வந்தவங்களை வரவேற்கப் போறேன்..
தம்பி சீக்கிரம் வா இல்லைன்னா உங்க அப்பா கிட்ட பேச்சு வாங்க முடியாது என்று பாத்ரூமில் இருக்கும் ஶ்ரீ ராமிடம் கத்தி விட்டுச் சென்றார்.. அவர் சென்று விட்டார்...
குளித்து விட்டு வந்து மெல்லமாகத் தயரானவன், முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் இருந்தான்..
ஏதும் பிரச்சனையா டல்லா இருக்க என்றான் ஒருவன்..
அவனுக்கு என்ன பிரச்சினை, பள்ளிக்கூடத்தில சண்டை போட்டு இருந்தாங்க .இப்ப என்னமோ கல்யாணம் பண்ணிக்கறாங்க என்று கிண்டலாக பேச..
அதெல்லாம் ஒன்னும் இல்லை டா கொஞ்சம் டென்ஷன் என்றான் ஶ்ரீ..
சரி டா மாப்ள..
ஏன்டா அவ உன் அத்தை பொண்ணுனு எங்க கிட்ட கூட சொல்லல..
அவளும் தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கல...உன் கூட சேர்ந்து அவள எப்படி வம்பு இழுத்து வெச்சிருக்கோம் என்றான் இன்னொருவன்...
அது ஒன்னும் இல்லை உங்களுக்கு தெரிஞ்சா கிண்டல் பண்ணுவீங்க, அதான் மறைச்சிட்டேன் என்றான்..
(இவங்க எல்லாரும் ஸ்கூல் ல ஒண்ணா படிச்சவங்க, அதும் தூரிகா இவங்களோட ஜூனியர்)
ரெண்டு பேருக்கும் ஒத்து வராது டா அதனால் தான் டா எப்போதும் சண்டை வந்துட்டே இருக்கும் என்றான் ஶ்ரீ பழைய ஞாபகத்துடன்...
அப்போ எப்படி டா மேரேஜ்க்கு ஓகே சொன்னீங்க என்று ஒருவன் கேட்க, அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான் ஶ்ரீ...
மனசுக்குள் அழுத்தம் யாரிடமும் சொல்ல முடியாமல் பல வருடங்களாக தவித்துக் கொண்டு இருக்கிறான்.. அவன் மனதுக்கு மட்டுமே தெரியும் ஏன் அவளை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டான் என்று...
அப்போது பிரசாத் ஶ்ரீயை அழைக்க ..
என்ன டா வேணும் என்றான் ..
அது ஒன்னும் இல்லை டா தூரிகா கூட ஒரு பொண்ணு இருப்பா தானே ; பேரு கூட இனியா ..
ஆமா இப்ப அவளுக்கு என்ன என்று ஶ்ரீ கேட்க?
அது ஒன்னும் இல்லை டா.. ஸ்கூல் படிக்கும் போதே எனக்கு அவ மேல கொஞ்சம் க்ரஸ் என்றான் நெளிந்து கொண்டே,முகத்தில் வழிந்த புன்னகையை அடக்க முடியாமல்..
அவ அப்பா ஒரு ரிடையர்ட் மிலிட்டரி மேன் தெரியுமா? எப்போமே ஒரு குட்டி துப்பாக்கி இருக்கும் அவர் கிட்ட என்றான் ஶ்ரீ.
ஆஹ் என்று பிரசாத் வாயைப் பிளக்க..
என்ன டா இனிமேலும் இனியாவ பார்க்க மாட்ட தான .. அப்படியே பார்த்தாலும் அவர் சுட்டுறுவார் என்று நண்பர்கள் கேலி செய்து கொண்டு இருந்தார்கள்...
ஶ்ரீ ராம் முகத்தில் திருமணக் கலையே இல்லை.. அவன் நிலைமை அவளை விட்டு விலக்கி வைக்க முடியாமலும், எப்படி அவளோடு சேர்ந்து வாழப் போகிறேன் என்று யோசனையே ஓடியது..
அடுத்து எபில கல்யாணப் பொண்ணு ரூம்ல என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் ..
 
Top Bottom