அந்தத் திருமண மண்டபம் முழுவதும் ஆட்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
அங்குள்ள ஆட்கள் அனைவரும் தங்களுக்குள் பரபரப்பாகப் பேசிக் கொண்டு இருப்பது
சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் திருமணத்தைப் பற்றியது தான்!
ஏனெனில், இது மணமகனுக்கு இரண்டாம் திருமணம். ஆனால் மணமகளுக்கோ முதல்
திருமணமாகும்.
அதிலேயும், மணப்பெண்ணான பிரார்த்தனாவின் பரிபூரண சம்மதத்தின் பேரில் தான்
இந்தத் திருமணம் நிகழவிருக்கிறது.
மணப்பெண் அறையில்,
“உனக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம் தானேடா?”என்று தன்னிடம் கேட்ட தாயைப்
புன்னகையுடன் நோக்கி,
“சம்மதம்மா. என் முகத்தைப் பாருங்க! நான் சோகமாக, அழுதுகிட்டா இருக்கேன்?
இல்லைல? எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் தான்!”என்று உறுதியாக
உரைத்தாள் பிரார்த்தனா.
“என்ன தான், அவருக்குக் குழந்தை இல்லைன்னாலும் அவருக்கு ஏற்கனவே கல்யாணம்
ஆகி பொண்டாட்டி செத்துப் போயிட்டாள்ன்னு தெரிஞ்சும் அவரைக் கல்யாணம்
செய்துக்கிறதுக்கு நீ ஏன் விருப்பப்பட்றடி?”என மகளிடம் வினவினார் கோமளா.
“அதான், நான் முன்னாடியே சொன்னேனேம்மா. எனக்கு அவரைப் பிடிச்சிருக்குன்னு.
அது தான் காரணம்”என்றவளிடம்,
“ப்ச்! போடி”என அவளைக் கரித்துக் கொட்டிக் கொண்டே அவளுக்கு உணவை ஊட்டி
முடித்து விட்டுத் தட்டை எடுத்துச் சென்றார்.
அதில் சிரித்துக் கொண்டே தன்னுடைய அலங்காரத்தைக் நிலைக் கண்ணாடியில் பார்க்க
ஆரம்பித்தாள் பிரார்த்தனா.
“உங்கம்மா கேட்கிறதும் நியாயமாகத் தான இருக்கு? நீ ஏன் இப்படி பண்ற?”என்றாள்
அவளது தோழி சம்ஹிதா.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்குக் கல்யாணம்டி! அதுக்கு முன்னாடி என்
மேக்கப்பைக் கண்ணாடியில் பார்க்கக் கூடாதா? என்னக் கொடுமை இது?”என்று
குறும்பாக கூறியவளை முறைத்து விட்டு,
“நான் அதைப் பத்திப் பேசலைன்னு உனக்கு நல்லாவே தெரியும்!”என்று அடிக்குரலில்
சொல்ல,
“ஆமாம். தெரியும். அதே மாதிரி, உன் கேள்விக்கு என் பதில் என்னன்னு உனக்கும்
நல்லாவே தெரியும்! அப்பறம் எதுக்குக் கேட்கிற?”எனத் தன் குறும்புத்தனத்தைக்
கைவிட்டு நிதானமாக மொழிந்தாள்.
“ம்ஹூம்! உங்கிட்ட பேசுறதே வேஸ்ட்!”என்று அவளும் வெளியேறி விட,
தனது இதழ்களில் எப்போதும் தவழும் புன்னகையுடன் தன்னை மணமேடைக்கு
அழைக்கும் வரை காத்திருந்தாள் பிரார்த்தனா.
இதே சமயம் மணமகன் அறையில் இருந்தவனோ, உள்ளம் கொதிக்கத் தான்
அணிந்திருந்த பட்டு வேட்டிச் சட்டையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் சம்யுக்தன்! ஒரு பிரபலமான கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து
கொண்டிருக்கிறான்.
அவனது தந்தையான ஜெயராமும் கணிதப் பேராசிரியராகப் பணியில் இருந்து ஓய்வு
பெற்றவர் தான்!
தனக்கு ஏற்கனவே முதல் திருமணம் நிகழ்ந்து மனைவி இறந்த ஒரு வருடத்திலேயே
தனக்கு இரண்டாவது திருமணம் நடக்கப் போகிறது என்பதை எண்ணுகையில்
சம்யுக்தனுக்குள் ஒரு இனம் புரியாத வலி தோன்றியது!
அவனுடைய முதல் மனைவியான வசுமதியை மிகவும் நேசித்தான் என்றெல்லாம் இல்லை
தான்!
ஆனால் தாங்கள் இருவரும் வாழ்ந்த வாழ்க்கைக்கு மதிப்பளிக்க நினைத்தான்.
ஆனால் அவனது குடும்பமும் சரி, பிரார்த்தனாவின் குடும்பமும் சரி. இந்தத் திருமணத்தை
நடத்துவதில் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.
பிரார்த்தனாவின் குடும்பம் கூடத் தன்னைப் புரிந்து கொள்ளாமல் போகட்டும்!
ஆனால் தன் சொந்தக் குடும்பமே தனது உணர்வுகளை மதிக்கவில்லை என்று நினைத்து
மருகினான் சம்யுக்தன்.
அந்தச் சமயத்தில் அறைக்குள் வந்த அவனது தம்பி பிரதீபனோ,”அண்ணா! ஐயர்
உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னார்”என்க,
அதில் அவனை முறைத்தவனோ எதுவும் பேசாமல் அவனுடன் செல்ல,
அங்கே மணமேடையில் ஐயர் மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்க இவன் வந்ததும்,
மாலையைக் கொடுத்துக் கழுத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லி விட்டுத் தான் சொல்லும்
மந்திரங்களைக் கூறுமாறு அவனுக்கு அறிவுறுத்தினார்.
அதை வேண்டா வெறுப்பாகச் செய்யலானான் சம்யுக்தன்.
அதைப் பார்த்ததும் தான் ஜெயராம் மற்றும் கலாவதிக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
“மாப்பிள்ளை மேடைக்கு வந்துட்டார்”என்ற தன் உறவுக்காரப் பெண்ணின் குரலைக்
கேட்டதும், பிரார்த்தனாவின் முகம் தானாகவே மலர்ந்தது.
தனக்கான அழைப்பிற்காக காத்திருக்க, இங்கே ஒருவனோ முள்ளில் மேல் அமர்ந்து
இருப்பதைப் போல் உடலெங்கும் குத்தியது.
அவனது முகத்தில் இருந்த இறுக்கத்தைக் கவனித்தப் பிரார்த்தனாவின் பெற்றோரோ
பதட்டமானார்கள்.
“என்னங்க இவர் முகமே சரியில்லை? இவருக்கு நேர்மாறாக அங்கே ஒருத்தி
சந்தோஷமாக இருக்கா! நாம வேற நம்மப் பொண்ணையும் கட்டாயப்படுத்தி தான் இந்தக்
கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சிருக்கோம்னு மாப்பிள்ளை கிட்டே பொய் சொல்லி
இருக்கோம்! இதெல்லாம் அவருக்குத் தெரிஞ்சா, அதுக்கப்புறம் இவங்க ரெண்டு பேரும்
எப்படி வாழப் போறாங்களோ தெரியலையே!”என்ற கோமளாவை,
“நாம தான் அவ கிட்ட அவ்ளோ எடுத்துச் சொன்னோமே? இனிமேல் நாம என்னப்
பண்ண முடியும்? அது தான் கொஞ்ச நேரத்தில் கல்யாணமே நடந்து முடியப் போகுதே!
இதுக்கு அப்பறம் அந்த உண்மை அவருக்குத் தெரிஞ்சா என்ன ஆகிடப் போகுது?
எல்லாம் நல்லபட நடக்கும்மா”என்று கூறிச் சமாதானம் செய்தார் சக்திவேல்.
“பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ”என்றவுடன்,
பிரார்த்தனாவின் அறைக்குள் வந்த பெண்களோ,”உன்னை அழைச்சிட்டு வரச்
சொன்னாங்கம்மா”என்றதும்,
“போகலாம்ங்க”என்றவளை அழைத்துச் சென்று மணமகனுக்கு அருகில் உட்காரச் செய்து
விட்டுக் கீழிறங்கினர்.
அவளின் அருகாமையை உணர்ந்த சம்யுக்தனுக்கோ உள்ளமும், உடலும் நெருப்பாகத்
தகித்தது.
ஆனால் பிரார்த்தனாவின் மனதிற்குள்ளோ இனம் புரியாத நிம்மதி உருவானது.
அப்போது அவ்விருவருக்குமான மந்திர உச்சாடனங்கள் முடிய, அனைவரும்
மாங்கல்யத்தை ஆசீர்வதித்து விடவும், அது ஐயரின் கைகளுக்கு வந்து சேர, அவரோ
அதைத் தன் கையில் வைத்துக் கடவுளை வேண்டிக் கொண்டு,”இந்தாங்கோ! இதை
வாங்கி பொண்ணுக் கழுத்தில் கட்டுங்கோ!”என்று சம்யுக்தனிடம் கொடுத்து விட்டு,
“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!”என்க,
தன் கையில் மங்கலநாணை வாங்கி விழிகளால் பிரார்த்தனாவை ஏறிட்டுக் கொண்டே
தான், அவளது கழுத்தில் திருமாங்கல்யத்தைப் பூட்டி அவளது நெற்றியில் குங்குமத்தையும்
வைத்தான்.
அதைக் கண்ட சம்யுக்தனின் பெற்றோருக்கு நிம்மதி வந்தது என்றால், பிரார்த்தனாவின்
பெற்றோருக்கோ மகளின் வாழ்வை நினைத்து வயிற்றைப் பிசைந்தது.
ஆனால் தன்னுடைய கழுத்தில் சரசரத்துக் கொண்டிருந்த தங்கத் தாலியைக் கையில்
ஏந்திப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரார்த்தனா.
அதைக் கவனித்த சம்யுக்தனுக்கோ, அவனது முதல் மனைவியான வசுமதியின் நினைவு
மேலெழும்ப அதில் அவன் முகம் இறுகிப் போனது.
அடுத்தடுத்த சடங்குகள் நிறைவேற்றப்பட அவற்றையும் அதே முக பாவனையில் தான்
செய்து முடித்தான்.
“இவன் முகத்தை இப்படி இறுக்கமா வச்சிட்டு இருக்கான்? பார்க்கிறவங்க என்ன
நினைப்பாங்க?”என்று கணவரிடம் புலம்பினார் கலாவதி.
ஜெயராம்,”நானும் அவனைக் கவனிச்சுட்டுத் தான் இருக்கேன்ம்மா. இப்போ போய்
ஏதாவது சொன்னா அவனுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலைன்றதை நாமளே
எல்லாருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டினா மாதிரி ஆகிடும். அதான் அமைதியாக
இருக்கேன். நீயும் பொறுமையாக இரு. வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம்”என்று கூறி
அவரை அமைதிப்படுத்தினார்.
தங்கள் பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கும் போது கூட, சம்யுக்தன் மற்றும்
பிரார்த்தனாவின் மனநிலையும் வெவ்வேறாக இருந்தது.
சம்யுக்தனின் தம்பியான பிரதீபனுக்குமே தன் தமையனின் மனநிலை புரிந்தது தான்.
ஆனாலும் பந்தியில் சாப்பிட அமர்ந்த போது, பிரார்த்தனா பார்க்காத நேரத்தில்,”உன்
முகத்தைச் சிரிச்சா மாதிரி வைக்கலைன்னாலும் பரவாயில்லை. ஆனால் கோபமா
வச்சுக்காதே! ஏன் உங்கண்ணா மூஞ்சி இப்படி இருக்குன்னுக் கேட்கிறவங்களுக்குப் பதில்
சொல்ல முடியலை!”என்று தமையனிடம் கேட்டுக் கொண்டான் பிரதீபன்.
“ப்ச்! என்னால் நடிக்க முடியலைடா”என்றவனின் நிலை புரிந்தாலும் அதற்காக எல்லாம்
அவனுக்குக் கிடைக்கும் நல்ல வாழ்க்கையைக் கெடுக்க முடியாது என்று உறுதியாக
இருந்ததால் அண்ணனின் கோபத்தையும், ஆற்றாமையையும் பொருட்படுத்தவில்லை.
இந்த திருமணத்திற்கு வசுமதியின் பெற்றோர் வரவில்லை. ஏனெனில், அவர்களால்
தங்கள் மகளின் கணவனுக்கு இரண்டாவது திருமணம் நடப்பது ஏற்றுக் கொள்ள
முடியவில்லை.
அதனால் அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட போதும் வர மறுத்து விட்டனர்.
அதுவும் சேர்த்து சம்யுக்தனுக்குக் குற்ற உணர்வைக் கொடுத்தது.
”சாப்பாட்டைக் கையால் அளையாம அள்ளிச் சாப்பிடுங்க”என்று அவனுக்கு
அறிவுறுத்தினாள் பிரார்த்தனா.
“நான் என்ன செய்யனும்னு நீ சொல்லாத. உன் இலையைப் பார்த்து சாப்பிடு”என்றான்
இறுகிய குரலில்.
“ஓகே”என்றவளோ உணவு உண்பதில் கவனம் செலுத்தினாள்.
அதற்குப் பிறகு, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, அனைவரும் பந்தியில் அமர்ந்து
சாப்பிட்ட பின், இரு வீட்டாரும் வீட்டிற்குச் சென்று ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச்
சென்றனர்.
“பூஜை ரூமில் வந்து விளக்கேத்தும்மா”எனக் கூறிப் பிரார்த்தனாவைப் பூஜையறைக்கு
அழைத்துச் சென்று விளக்கை ஏற்ற வைத்தார்.
பின்னர் இருவருக்கும் பால், பழம் கொடுத்து விட்டு, மற்ற சடங்குகளைச் செய்து
முடித்து,”பிரதீபா! காரை ஸ்டார்ட் பண்ணி வை”என்ற ஜெயராமின் குரலில் தன்
பெற்றோரைத் தவிப்புடன் பார்த்தாள் பிரார்த்தனா.
அப்போது தான், அவளுக்குத் தன் தாய், தந்தையுடன் இனி இருக்க முடியாது என்ற
நிதர்சனம் உறைத்தது.
“அப்பா! அம்மா”என்றவளுக்கு அடுத்த வார்த்தை வரவில்லை.
மகளின் அருகில் சென்று,”இது உன் வாழ்க்கைம்மா. சமர்த்தா வாழ்ந்துக்கோ”என்றார்
சக்திவேல்.
கோமளாவிற்கோ அவளை எண்ணி மனம் பதைத்து விட மகளின் புகுந்த
வீட்டாரிடம்,”எதையும் மனசில் வச்சுக்காம எங்க பொண்ணை நல்லா
பார்த்துக்கோங்க”என்று கைக் கூப்பிக் கேட்டுக் கொண்டார்.
அதில் சுருக்கென்று கோபம் வந்தது சம்யுக்தனுக்கு.
தாங்கள் இவர்களது பெண்ணைக் கொடுமைப்படுத்துவதைப் போல் நடந்து கொள்வதை
அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“ம்ம். சரிங்க”எனத் தலையசைக்க,
“அதெல்லாம் எங்க மருமகளை நாங்க நல்லா பார்த்துப்போம். நீங்க கவலைப்படாமல்
போயிட்டு வாங்க”என்று ஜெயராமும், கலாவதியும் உறுதி அளிக்க,
மறுநாள் குலதெய்வ கோயிலுக்குச் செல்ல வேண்டும் அதனால் காலையில் வருவதாக
கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினர் பிரார்த்தனாவின் பெற்றோர்.
கலாவதி,“ஏங்க! இவங்களுக்கு நைட் சடங்குக்குத் தயார் பண்ணனுமே?”எனத் தயங்க,
“ஆமாம்மா. அதையும் கண்டிப்பாக பண்ணனும் தான். அப்பறம் நம்ம மேலே
தப்பாகிடும்”என்றார் ஜெயராம்.
“சம்யுவை நினைச்சா கலக்குதுங்க?”
அதைக் கேட்டதும் பக்கென்று சிரித்து விட்டனர் அவரும், பிரதீபனும்.
அவர்களை முறைத்த கலாவதியைச் சமாதானம் செய்து,”நாம எல்லா ஏற்பாட்டையும்
செய்வோம்மா. அதை அவன் வேண்டாம்னு சொன்னா, இங்கே இருக்கிற சொந்த,
பந்தங்களைக் காட்டி வாயை அடைச்சிடுவோம்”என்று யோசனை கூறினார் கணவர்.
சம்யுக்தனுக்கு இரண்டாம் திருமணம் என்றாலும் கூட அதில் கலந்து கொள்ள அவனது
உறவினர்கள் யாவரும் வந்திருந்தனர். அதில் சிலர் அவர்கள் வீட்டிலும் தங்கி இருந்தனர்.
அதனால் தான், அவர்களைக் காரணம் காட்டி அனைத்து சடங்குகளையும் சய்யுக்தனின்
பெற்றோரால் செய்து முடிக்க முடிந்தது.
- தொடரும்

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.