என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 27
தான் புறப்படும்போது அகிலன் பிரச்சனை பண்ண கூடும் என நினைத்த சௌமி, புறப்பட வேண்டிய நேரத்தை விட சற்று முன்னர் கிளம்ப வேண்டும் என எண்ணி, முகம் கழுவி உடை மாற்றி தயாரானாள்.
அவளையே அவதானித்துக் கொண்டிருந்த அகிலனுக்கு, அவள் தன் பேச்சைக் கேட்கவில்லை என்பதில் கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
அறையில் இருந்து வெளியே வந்தவள், “சாப்பிட வாங்கோ” என அவனை அழைத்தாள்.
இறுகிய முகத்துடன் இருந்தவன், அவளை நிமிர்ந்து பார்த்த போது விழிகள் இரண்டும் சிவந்திருந்தன, அதைப் பார்த்தவளுக்கு கை,கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.
“சாப்பிட வாங்கோ…” என்றாள் மீண்டும், பயத்துடன்.
“எனக்கு வேண்டாம்” என கடுகடுத்தவனுக்கு அவள் மீது மிகுந்த ஆவேசம்.
“பசிக்கேக்க சாப்பிடுங்கோ…” என்றவளுக்கும் சாப்பிடும் மனநிலை இல்லை. உணவை மூடி பக்குவமாக வைத்து விட்டு, பயணப்பையை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
“நான் இவ்வளவு சொல்லியும் நீ போகத்தான் போறாய்.. என்ன…?” என சீறினான்.
அவள், அவனைப் பார்த்தாள். அவளின் அந்த திமிரான பார்வை அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை, ஆக்ரோஷம் எழ, சோபாவில் இருந்து எழுந்தவன், அவளின் பையை பறித்து எறிந்தவன் “ஏன் போறாய் எண்டாவது சொல்லிப் போட்டு போ…, எனக்கு ரீசன் தெரிய வேணும்” என கர்ஜித்தான்.
அவனின் முகம் கறுத்து, தாடை இறுகி, விழிகள் இரண்டும் அனலைக் கக்கியவாறு இருந்த நிலை உண்மையில் அவளுக்கு அச்சத்தை ஏற்படுத்த “எனக்கு இஞ்ச இருக்க பயமா இருக்கு.., நான் போகணும், என்னை விடுங்கோ... ப்ளீஸ்..” என கெஞ்சினாள்.
என்னுடன் எத்தனை இடங்களுக்கு எந்தவித பயமும் இல்லாமல், மிகுந்த ஆர்வத்துடன் தனியாக வந்தவளுக்கு, இப்ப என்னைப் பார்க்க பயமா இருக்குதாம் என குத்தலாக நினைத்தவன் “ஏன்..? என்ன பயம்…, நான் என்ன செய்திடுவன் உன்னை…?” என அவளைப் பார்த்து சினத்துடன் கேட்டான்.
“......” அவளுக்கு என்ன சொல்வது என்பது புரியவில்லை, அவனின் கோபத்தில் அவள் வெலவெலத்துப் போய் நின்றாள்.
“இவ்வளவு நாளும் என்னோட தானே இருந்தனீ…, அப்ப இல்லாத பயம் இப்ப என்ன திடீரெண்டு…?” என்றவன் தொடர்ந்து “அப்பிடி நான் என்ன செய்திடுவன் உன்னை…?, உனக்குப் பிடிக்காத எதுவும் இஞ்ச நடக்கேல்ல…” என அவளைப் பார்த்தவனின் குரலில் எரிச்சல் அதிகமாக இருந்தது.
அவனின் அந்த இறுதி வார்த்தைகளில் அவள் தாளமுடியாத அதிர்ச்சிக்கு உள்ளானாள்! இவன் இப்பிடி எல்லாம் கதைப்பானா…?, இதற்கு மேலும் இவன் என்னை அவமானப்படுத்த முடியாது… என எண்ணி வெகுண்டவளுக்கு, உடல் முழுவதும் அசூசையாக இருந்தது. அவன் மீது கண்மண் தெரியாத கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது. அவளின் தன்மானம் சீண்டப்பட்டாதாக உணர்ந்தவள் மனம் சுக்குநூறாக உடைந்து விட்டது, அவன் மேல் வைத்திருக்கும் நேசம் கூட இல்லாமல் போய்விட போகிறது என எண்ணி வருந்தினாள். அவனைப் பார்க்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு மேலும் ஒரு நிமிடம் கூட அங்கு இருக்க அவளுக்கு விரும்பவில்லை.
அவளின் மென்மையான காதல் மனதை தான் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது புரியாமல் “சௌமி....” என பற்களை கடித்தான்.
“....” அவனுக்கு பதிலளிக்க அவளுக்கு துளியும் விருப்பமில்லை.
“உன்னைத்தானே கேக்கிறன் சௌமி… , வாயைத்திறவன்…” என கோபத்துடன் அதட்டினான்.
“அடிக்கிறீங்க…, தள்ளி விடுறீங்க…, என்னவோ எல்லாம் கதைக்கிறீங்க…” என கண்ணீருடன் அவனின் அராஜகங்களை ஆத்திரத்துடன் அடுக்கினாள்.
அவளின் விழி நீர் அவனின் மனதை நெருட “நீ தானே எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இப்படி செய்ய வைக்கிறாய்…” என அவளை குற்றம் சாட்டினான்.
“நான் என்ன செய்தனான்….?” என்றவள் தொடர்ந்து, “ஆத்திரம் வந்தால் என்ன வேணுமெண்டாலும் செய்யலாமா..? என்ன வேணும் எண்டாலும் கதைக்கலாமா…?” என கேட்டாள் கோபத்துடன்.
தன்னை சற்று நிதான படுத்தி அவளின் அந்த பயத்தையும், தான் ஆத்திரத்தில் என்ன கதைக்கிறான் எனத் தெரியாமல் வார்த்தைகளை விட்டதையும் புரிந்து கொண்டவன் “ஓகே…, சொறி ஆத்திரத்தில் ஏதோ செய்திட்டன்…, இனி அடிக்க மாட்டன்.. நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்கவும் மாட்டுது…, ப்ளீஸ் என்னை நம்பு” என தன்னால் இயன்ற அளவு இறங்கி வந்தான்.
எல்லாவற்றையும் செய்துவிட்டு, வார்த்தைகளையும் கொட்டி விட்டு மன்னிப்பு கேட்டால், எல்லாம் சரியாகிவிடுமா… என சினத்துடன் எண்ணியவள், மௌனமாக நின்றாள்.
“என்னோட கோவிச்சுக் கொண்டோ அல்லது நீ சொல்றபடி எனக்கு பயந்து கொண்டோ நீ கிளம்பி போறதுக்கு உன்ர வீடு ஒண்டும் ,பக்கத்துல இல்லை… அதோடு நீ போறது எனக்கு பிடிக்கவே இல்லை…, நான் இவ்வளவு சொன்ன பிறகும் அதை மீறி, வீம்புக்கு நீ போறது எண்டால் உன்ர விருப்பம்…, ஆனால் அதுக்குப் பின்னால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கும் நான் பொறுப்பில்ல…” என அவளை வெகுவாக எச்சரித்தான் கடும் சினத்துடன்.
அவள், அவனை நிமிர்ந்து பாராமல், தனது பிரயாண பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
அவள் சென்றதும் சோபாவில் ‘தொப்பென’ அமர்ந்தவனுக்கு, தான் இவ்வளவு சொல்லியும் அதை மதிக்காமல் போய்விட்டாள் என்பதில் அவனின் ஆண் என்ற அகம்பாவம் பலத்த அடி வாங்கியது.
கடந்த ஒரு வருடமாக அவள் தன்னை வெகுவாக ஆட்டிப் படைக்கிறாள் என்பதில் அவள் மீது கடும் சீற்றம் உண்டாகியது, சோபாவின் கைப்பிடியில் ஓங்கி குத்தினான். அவள் கிளம்பி சென்றதில் அவள் மீது அளவுக்கதிகமான ஆவேசம் உண்டாகியது. மனதில் பெரும் சோர்வு ஏற்பட்டு, மனம் மிகவும் வலித்தது. திருமண வாழ்க்கை இவ்வளவு சிக்கல்களும் சோதனைகளும் நிறைந்து இருக்கும் என கொஞ்சம் கூட அவன் நினைத்திருக்கவில்லை.
அவள் தனியே செல்வது வேறு அவனுக்கு மிகுந்த பதட்டத்தை கொடுத்தது. பேருந்து தரிப்பிடத்துக்கு சென்றிருப்பாளா..?, அவளின் நண்பி அங்கு வந்திருப்பாரா…? நல்ல ஆசனம் கிடைத்திருக்குமா…? என ஏகப்பட்ட சிந்தனைகள் அவன் மனதை வெகுவாக வாட்டி வதைத்தது.
மிகுந்த காதலுடன் தன்னை மட்டும் நம்பி வந்தவள், கோவித்துக்கொண்டு வீட்டில் இருந்து கிளம்பும் படியான சூழ்நிலை ஏற்பட்டதில், அவன் மனதில் பெரும்பாரம் உண்டாகியது, அவனால் அங்கே இருக்க முடியவில்லை. கார் திறப்பை எடுத்துக் கொண்டு, வீட்டு கதவைப் பூட்டியவன் பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்றான். அவன் அங்கே சென்றடைந்த போது பேருந்து புறப்பட்டு விட்டது, அவளை காண முடியவில்லை, அவனுக்கு எரிச்சலும் ஏமாற்றமும் நிறைந்து இருந்தது.
.........
சௌமி, ஓர் ஆட்டோவில் பேருந்து தரிப்பிடத்துக்கு வந்த போது, அங்கே அவளின் நண்பியும், அவளின் சகோதரியும் நின்றனர். முகத்தை சாதாரணமாக வைத்து அவர்களிடம் நலன் விசாரித்து,அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் வாடிய முகத்தை காட்டாமல், சமாளித்து பதில் அளித்து முடித்த பின்னர், நண்பியிடம் விடைபெற்றுக்கொண்டு இருவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.
பேருந்தில் ஏறியதன் பின்னர்தான் தனது வருகை பற்றி வீட்டுக்கு சொல்லவில்லை என்பது நினைவில் வந்தது சௌமிக்கு.
வீட்டுக்கு அழைப்பு எடுத்து சொல்லியதும் அவர்கள் ஏன் வாறாய்…?தனியாகவா வாறாய்..? ஏதும் பிரச்சினையா..? என ஆயிரம் கவலைகளை வெளிப்படுத்தினர். அவர்களை சமாளித்து, பதில் கூறி வைப்பதற்குள் அவள் களைத்து விட்டாள்.
சற்று நேரம் நண்பியின் சகோதரியுடன் கதைத்துவிட்டு, இருக்கையில் தலை சாய்த்து கண்களை மூடினாள். முதல் நாள் மாலையில் இருந்து, தற்போது வரையில் நடந்த அனைத்தும் அப்படியே நினைவில் வந்து கண்ணோரங்கள் கசிந்தன.
இப்படி அவனுடன் முரண்பட்டு கொண்டு தான் ஊருக்கு கிளம்ப வேண்டியிருக்கும் என்று அவள் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. அவனைத் திருமணம் செய்யும் போது, அவன் தன் மீது வெறுப்பை காட்டினாலும் தனது காதலால் அவனைத் தன் பக்கம் சாய வைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவளுக்கு இருந்தது.
இவ்வளவு நாளும் தன்னிடம் ஒதுக்கம் காண்பித்துவிட்டு, தன்னை அடித்ததற்கு அவன் காட்டிய சமாதான கொடியில் தானும் வீழ்ந்து விட்டதில் அவள் மிகுந்த வெட்கப்பட்டாள். தனது வாழ்க்கை தன்னை சமாதானப்படுத்துவதற்காக அல்லது பரிதாபம் பார்த்து ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக நினைத்து மனம் குமுறினாள். அகிலனும் அளவில்லாத காதலுடன் தன்னை நாட வேண்டும் என எதிர்பார்த்து இருந்தாள், அது நடக்கவில்லை என்பதில் அவள் மனம் குமுறியது. குடும்ப வாழ்க்கை காதலால் மட்டும் கட்டி எழுப்பப்பட வேண்டும் வெறும் இரக்கத்தினால் அல்ல என்பது அவளின் எண்ணம்! இவ்வாறு பலவித சிந்தனைகளுடனும் உணர்வுகளுடனும் தனக்குள் போராடிக்கொண்டு இருந்தவள் இறுதியில் உறங்கி விட்டாள்.
................
வீட்டுக்கு வந்த அகிலனுக்கு வீடு வெறிச்சோடியது போல் இருந்தது, சாப்பிடவும் பிடிக்கவில்லை. அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தினான், அவள் அழைப்பை ஏற்கவில்லை. திரும்ப திரும்ப அழைத்து பார்த்தான், அவள் ஏற்கவில்லை. ‘பஸ்ஸில் ஏறி விட்டாயா…?’ எனக் கேட்டு ஒரு தகவல் அனுப்பினான். அதற்கும் பதில் இல்லை. அவளின் அந்த ஆணவமான செயலில், கொஞ்சம் தணிந்திருந்த ஆத்திரம், மீண்டும் உச்சத்திற்கு ஏறியது அவனுக்கு.
அவளின் அந்த உதாசீனத்தில், அவள் மீது உண்டான அதீத போபத்துடன் அறைக்குள் வந்து படுத்தவனுக்கு உறக்கமும் வரவில்லை. பகல் முழுவதும் இருந்த உல்லாசமான மனநிலை வடிந்து, மிகுந்த எரிச்சலில் இருந்தான். தான் தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று தன்னிடம் வந்தவள், தன்னை விட்டு சென்றதில் அவன் மனம் பலமாக அடி வாங்கியது. அவளுக்கு இவ்வளவு கர்வமும் வீம்பும் இருக்க கூடாது என்று நினைத்தான். அவளைப் பற்றிய சிந்தனைகள் தான் மனதில் சுழன்று கொண்டிருந்தது. அவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை, திரும்பி திரும்பி படுத்தான் தூக்கம் வரவில்லை. எழுந்து சௌமியின் அறைக்குச் சென்று அவளின் கட்டிலில் படுத்தான். அவளின் வாசத்தை நுகர கூடியதாக இருந்தது. ஏதோ அவள் அங்கு தான் இருக்கிறாள் என்ற மாயையை தோற்று விக்க அவன் சற்று நேரத்தில் உறங்கிவிட்டான். ஆழ்ந்த உறக்கம் இல்லை, அடிக்கொருதரம் விழிப்பு வந்தது.
காலையில் தூங்கி எழுந்தவுடன் முதல் வேலையாக ‘அவள் அங்கு போய் சேர்ந்து விட்டாளா’ என அறிவதற்காக, அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தினான். அவள் இப்போதும் ஏற்கவில்லை. அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. ‘தனித்து புறப்பட்டவள் ஒரு பிரச்சனையும் இல்லாமல் போய் சேர்ந்து விட்டாளா…?, அவள் அங்கு வருவது அவள் வீட்டினருக்கு தெரியுமா..?, நேற்று இருந்த மனநிலையில் அவளிடம் அதை கேட்க மறந்து விட்டேனே…’ போன்ற பல வித நினைப்பில் பதட்டத்துடன் இருந்தவனுக்கு, அவளின் இந்த புறக்கணிப்பும் பெருத்த அவமானத்தை ஏற்படுத்த ஆத்திரத்துடன் கைப்பேசியை கட்டிலில் தூக்கி வீசிவிட்டு குளியலறைக்குச் சென்றான்.
அவசர அவசரமாக தனது காலைக்கடன்களை முடித்து விட்டு வெளியே வந்தவனுக்கு பசித்து. தேநீர் தயாரித்து அருந்தினான். மனம் முழுவதும் சௌமி ஒரு பிரச்சனையும் இல்லாமல் போய் சேர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தான். அவள் தன் மீதுள்ள கோபத்தில் தான் அழைப்பை ஏற்கவில்லை என்பது புரிந்தாலும், போக்குவரத்தில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டிருக்குமோ அதனால் தான் அழைப்பை ஏற்கவில்லையோ…, கதைக்க விருப்பம் இல்லாவிட்டால் ‘வந்து சேர்ந்துவிட்டேன்’ என்று தகவல் தன்னும் அனுப்பி இருப்பாள் தானே என்ற நினைப்பில் அவனுக்கு பயம் ஏற்பட்டது. ‘சௌமி போய் சேர்ந்து விட்டாயா..?’ எனக்கேட்டு தகவல் அனுப்பினான். பதிலுக்காக சற்று நேரம் காத்திருந்தான், அவனுக்கு பொறுமை போய் கொண்டிருந்தது.
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது, அவன் கருத்தரங்கிற்கு செல்ல வேண்டும், அங்கு செல்வதற்கான மனநிலை அவனுக்கு கொஞ்சமும் இல்லை, ஆனால் போய்த்தான் ஆக வேண்டும். என்னை இவ்வளவு தூரம் நிலைகுலைய வைத்து, எனது நேரத்தையும் வீணாக்குறாளே…, என்னை எவ்வளவு தூரத்துக்கு சீண்டுகிறாள் என்று பார்ப்போம்! என்ற சிந்தனையில் அவன் தனக்குள் உழன்று கொண்டிருந்தான்.
தனது தாய்க்கு சௌமி கிளம்பிய விஷயத்தை கூறுவோம் என நினைத்தவன் தாய்க்கு அழைப்பினை ஏற்படுத்தி நலன் விசாரித்துவிட்டு , “அம்மா.. சௌமி அங்க வந்திட்டாள்…” என்றான் அவன் சிறு குரலில்.
அவருக்கு எதுவும் விளங்கவில்லை “என்ன…? எங்க வந்திட்டாள்…?” என கேட்டார் அவர்.
தனது தலையை கோதியவன் “நேற்றிரவு சௌமி இஞ்ச இருந்து கிளம்பி அங்க வந்தவள்…” என்றான்.
“ஏன் வந்தவள்…? தனியாவா வந்தவள்…? நேற்று அவள் என்னோட கதைக்கேல்ல.., பிஸியாக்கும் எண்டு நானும் எடுக்கேல்ல.., முந்தநாள் கதைக்கேக்க இஞ்ச வாறதைப்பற்றி ஒண்டும் சொல்லேல்லயே…” என ஆச்சரியத்துடன் அவரிடமிருந்து பல கேள்விகள்.
“திடீரெண்டு தான் வெளிக்கிட்டவள்…”
“ஏனப்பு தனியா விட்டனீ..?, அவளுக்கு தனியா வந்து போய் பழக்கமில்லையே… நீ கூட்டிக்கொண்டு வாறதுக்கு என்ன…?” என ஆதங்கத்துடன் கேட்டார்.
“அவளின்ர ஃப்ரண்டின்ர அக்காவோட சேர்ந்து வந்தவள்..” என்றான்.
“ஒருத்தருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் அப்பிடி அவசரமா இஞ்ச வர வேண்டிய தேவை என்ன…?” என விசாரித்தார்.
“அதை அவளிட்டை தான் கேக்க வேணுமம்மா…” என சிடுசிடுத்தான்.
“அவள் தனியா கிளம்பி வாறளவுக்கு அப்பிடி பிரச்சனை..? என்ன செய்தனீ தம்பி…?” எனக்கேட்டார் மிகுந்த எரிச்சலுடன்.
அவனுக்கு தங்களுக்கு இடையிலான பிரச்சனையை தாயிடம் கூட கூற விரும்பவில்லை.
“அப்படி ஒரு பிரச்சனையும் இல்லை” என சமாளிக்க முயன்றான்.
“அப்ப என்னத்துக்கு அவள் தனியாக கிளம்பி வந்தவள்…” எனக்கேட்டார் கோபத்துடன்.
“அதை அவளிட்டை கேளுங்கோ” என்றவன் அவர் மேலும் எதுவும் கூற இடம் கொடாமல் “நான் செமினாருக்கு போகவேணும்…, பிறகு எடுக்கிறன்…” என்றவன் கைப்பேசியை அணைத்தான்.
இதென்ன காலையில் புது பிரச்சனை என நினைத்த பத்மாவிற்கு தலை இடிக்கும் போலிருந்தது.
.......................
அதிகாலை ஐந்து மணி அளவில் யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் வந்து இறங்கிய சௌமியை, அங்கே காத்துக் கொண்டு நின்ற சிவநாதன், “வாம்மா..” என அவளின் முகத்தை ஆராய்ந்தவாறு அவளின் பிரயாணப்பையை தூக்கி, வண்டியின் முன் பக்கமாக வைக்க, “அப்பா.. வந்து கன நேரமா…?” எனக் கேட்ட அவள் வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்தாள். அவளின் முகம் ஒளி இழந்து, மலர்ச்சி இல்லாமல் இருந்ததை அவதானித்தவர் எதுவும் தூண்டி துருவி விசாரிக்காமல் பயணத்தைப் பற்றி மட்டும் கேட்டார். பல யோசனைகளுடன் வீட்டு வாசலில் காத்து நின்ற கமலாவும் மகளின் களை இழந்த வதனத்தை கண்டு வேதனைப்பட்டார். அவளிடம் ஏன் திடீரென்று வந்தனீ..?, ஏதும் பிரச்சனையா…? என தாய் சந்தேகத்துடன் விசாரித்தபோது, அவள், அவர் நம்பும் வகையில் மழுப்பலாக பதில் கூறிக் கொண்டிருந்த போது, வண்டியை நிறுத்திவிட்டு வந்த சிவநாதன் மனைவியை முறைத்தார். அவர் சௌமியை அழைத்து வர செல்ல முன்னரே அவளை சங்கடப்படுத்தும் விதத்தில் எதுவும் கதைக்க வேண்டாம் என கூறி தான் சென்றார். ஆனால் கமலாவுக்கு மனது கேட்கவில்லை, அதனால் தான் கணவன் கூறியதையும் மீறி கேட்டார்.
“டீ போட்டாச்சா…?” என மனைவியிடம் கேட்ட சிவநாதன், “சௌமி.. டீ குடியம்மா…” என்றார் மகளிடம்.
“ஓம்…” என கணவரிடம் கூறிய கமலா, மகளிடம் “சௌமி குளிச்சிட்டு வாறீயா…” எனக்கேட்டார்.
“ஓமம்மா…” என்று கூறிவிட்டு தனது அறைக்குள் வந்த சௌமிக்கு தன்னை பெற்றவர்களின் புரிதலில் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.
குளித்து உடைமாற்றி வந்த சௌமிக்கு, கமலா தேநீரை அவளுக்கு பிடித்த விதமாக தயாரித்து வழங்கினார். அவள் அதை அருந்திவிட்டு, “தூங்கப்போறன் அம்மா…” என்று விட்டு தனது அறைக்கு வந்தாள்.
மணி காலை ஆறரை ஆகி விட்டது, அகிலன் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? என அகிலனை பற்றி யோசனை வந்தது அவளுக்கு. அங்கிருந்த போது அவனின் செயல்களாலும் பேச்சுக்களாலும் அவன் மீது, ஆத்திரம் இருந்தது உண்மைதான். இங்கே வந்ததும் அவன் தன் மீது அதீத கோபத்தில் இருப்பான் என்ற நினைவில் வருத்தம் உண்டாகியது அவளுக்கு. அவன் சொன்னதை கேளாமல் வந்துவிட்ட பின்னும் அவளுக்கு அது நிம்மதியைத் தரவில்லை. மாறாக ஒரு வித வலியைத்தான் தந்தது.
கைபேசியை எடுத்து பார்த்த போது, அகிலன் பல தடவை அழைத்திருப்பது தெரிந்தது. பேருந்தில் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக கைப்பேசியின் சத்தத்தை நிறுத்தி வைத்திருந்ததால் அவன் அழைத்தது இவளுக்குத் தெரியவில்லை. நிச்சயம் இதற்குமே ஆத்திரப்படுவான் என நினைத்தவள் அழைப்பை ஏற்படுத்தி கதைக்க விரும்பவில்லை, எனவே தான் வந்து சேர்ந்துவிட்டதாக அவனுக்கு தகவல் மாத்திரம் அனுப்பினாள்.
...............
அகிலன் தாயுடன் கதைத்துவிட்டு கைபேசியை அணைத்து வைக்க, தகவல் வரும் சத்தத்தில் அதை எடுத்து பார்த்த போது, சௌமி தான் தகவல் அனுப்பி இருப்பதை பார்த்தவன், அதை திறந்து பார்த்தான். ‘வந்து சேர்ந்துவிட்டேன்’ என இருந்தது. அவனுக்கு மீண்டும் கோபம் ஏற்பட்டது! பட்டும் படாமலும் மொட்டையாக அனுப்பி இருந்தாள். அவளுக்கு இவ்வளவு கர்வம் இருக்கக்கூடாது என்று நினைத்தவனுக்கு கடும் ஆத்திரம். என்னை இப்படி பாடாய் படுத்துறாளே…, எனது இயல்பை தொலைக்க வைத்துவிட்டாளே…, என்ற நினைப்பில் சினந்தவன் தனது அலுவல்களை கவனிக்க எழுந்து சென்றான்.