• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு காதல் கனா காண்போம் - 14

STN - 91

New member
நாளிதழ்கள் வழி பல்வேறு எழுத்தாளர்களின் எழுச்சியான எழுத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அச்சுப்பதிப்பகம் அது.

அச்சுப்பதிப்பகங்கள் எதுவும் இயங்க கூடாது என்று ஆங்கிலேயர்கள் அனைத்தையும் பூட்டி வைத்திருக்கின்றனர்.

ஆனால் அந்த நள்ளிரவில், ஒருவன் மட்டும் தீவிரமாக அந்த வாரம் வெளிவர வேண்டிய நாளிதழ்களை அச்சுட்டு கொண்டிருந்தான்.

அவன் தான் அழகுவேலின் பத்திரிகை துறை நண்பன்
கண்ணப்பன். யாஸ்மின் எழுத்துக்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பத்திரிக்கை துறை போராளி.

இத்தனை நாட்கள் யாஸ்மின் எழுதிய கட்டுரைகளிலேயே, தற்போது இறுதியாக அவள் எழுதிக் கொடுத்த கட்டுரை தான் மிகவும் எழுச்சியாக அவனுக்கு தோன்றியது.

தற்போது போராட்டங்களும், எழுச்சிகளும், புரட்சிகளும் நாட்டில் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், இது போன்ற கட்டுரைகள், ‘உறங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்திய மனதையும் தட்டி எழுப்பும்’ என்று அந்த கட்டுரையை படித்த கண்ணப்பனுக்கு தெளிவாகவே புரிந்தது.

அதனால் தான், ‘ஊருக்குள் யாரும் அச்சிட கூடாது’ என்று கூறியும் திருட்டுத்தனமாக அந்த நள்ளிரவு நேரம் தன் பதிப்பகத்தை திறந்து இதழ்களை அச்சிட்டு கொண்டிருந்தான்.

சரியாக அந்த நேரம், யாரோ அவன் பதிப்பகத்தின் பின்புற கதவைத் திறந்து உள்ளே வருவதைப் போன்று சத்தம் கேட்டது.

‘எங்கு காவல் துறையினரோ, அல்லது ஆங்கிலேயர்களோ வந்து விட்டார்களோ?’ என்று ஒரு நொடி கண்ணப்பனுக்கு உயிரே நின்றுவிட்டது.

அதன் பின் தான் அந்த மழை இரவில், தலைக்கு ஒரு கோணி பையை போர்த்திக் கொண்டு உள்ளே வந்திருப்பது, அழகுவேல் என்பதை கவனித்தான் கண்ணப்பன்.

“ஏலேய்! அறிவு கெட்ட பயலே. நானே இங்க திருட்டுத்தனமா உயிர கையில புடிச்சுகிட்டு, சத்தம் வராமல் வேலைய பாத்துட்டு இருக்கேன். இந்நேரம் இப்படி வந்து நிக்கிற?” என்று அழகுவேலை திட்டினான் கண்ணப்பன்.

“மன்னிச்சிடு மாப்ள. நீ எப்படியும் தனியா இருப்பேன்னு தோணுச்சு. அதான் வந்தேன். அத விடு உன்ன பிடிக்க வர போலீஸ்காரங்க இப்படி பின் வழியாவா வருவாங்க?” என்று பதிலுக்கு கூறினான் அழுகுவேல்.

“அது சரி. நீ சொல்றதும் நியாயம் தான். ஆனா இந்த நேரத்துல எனக்கு எத பத்தியும் யோசிக்க தோணல. எனா நான் பண்ற காரியம் அப்பேற்பட்டது.

நீ கொண்டு வந்து தருவியே, அந்த பொண்ணோட கட்டுரைகள். இத்தனை நாள் எழுதினதிலேயே இந்த தடவை அந்த பொண்ணு எழுதி இருக்கிறது ரொம்ப நல்லா இருக்கு.

இது மட்டும் வெள்ளைக்காரனுங்க பார்த்தானுங்கனு வை கூண்டோடு கைலாசம் போக வேண்டியது தான்.

எப்படியாவது இந்த காகிதத்தை எல்லாம் அச்சடிச்சு போட்ல ஏத்தி விட்டுட்டா போதும், நாளைக்கு காலைல தமிழ்நாடு முழுக்க ஒரு பெரிய கலவரமே வெடிக்கும்.” என்று கூறினான் கண்ணப்பன்.

“என்னடா சொல்ற? சும்மாவே இந்த கட்டுரைய எல்லாம் யார் எழுதுறாங்கன்னு ஊர் முழுக்க சல்லட போட்டு சலிச்சிட்டு இருக்காங்க.

நானே அந்த பொண்ணுக்கு எந்த ஆபத்தும் வந்துற கூடாதுன்னு ஒவ்வொரு நிமிஷமும் உயிரை கைல புடிச்சுகிட்டு இருக்கேன்.

இதுல இந்த கட்டுரைனால, அளவுக்கு பிரச்சினை வரும்னா அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆபத்தாகிட போகுது டா.” என்று யாஸ்மினை நினைத்து பயந்து போய் கூறினான் அழகுவேல்.

“அதெல்லாம் அந்த பொண்ணோட அடையாளம் கடைசி வரைக்கும் வெளிய வராது. அந்த பொண்ணு கொண்டு வர துண்டு காகிதத்த மொத்தமா திருத்தம் பார்த்து அச்சடிக்கிறது நான் தானே. அப்படியே புடிச்சாலும் என்ன தான் புடிப்பானுங்க.

இளங்கோ எனக்கும் நண்பன் தான். நான் போய் அந்த பொண்ண காட்டி தருவேனா?” என்று கூறினான் கண்ணப்பன்.

இளங்கோவனை பற்றி அழகுவேலுடம் பேசிக் கொண்டிருக்கும் போது தான், கண்ணப்பனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவன் அனுப்பி இருந்த கடிதம் நினைவிற்கு வந்தது.

“டேய் அழகு. இளங்கோ இந்த கடிதாசியை அனுப்பி இருக்கான். ரெண்டு நாளைக்கு முன்னாடியே அனுப்பிருக்கான். இந்தா பிரிச்சு படி.” என்று கடிதத்தை அழகுவேலின் கையில் கொடுத்தான் கண்ணப்பன்.

“அவன் அந்த புள்ளைக்கு எதுவும் எழுதி இருப்பான் டா. நான் இத கொண்டு போய் அது தங்கச்சி கிட்ட கொடுத்திடறேன்.” என்று மடித்து தன் சட்டைக்குள் வைக்கப் போனவன தடுத்த கண்ணப்பன், “அந்த கடிதாசிக்கு மேல உன் பேர் தான எழுதி இருக்கு?

உனக்கு தான் எழுதி இருக்கணும்னு நினைக்கிறேன். பிரிச்சி படி.” என்று கூறிய படி தன் அச்சிடும் வேலையை தொடர்ந்தான் கண்ணப்பன்.

அங்கிருந்து ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு அந்த கடிதத்தை பிரித்து படித்தான் அழகுவேல்.

அந்த கடிதத்தில், இளங்கோவன் தன் ராணுவத்தில் சேரப்போவதையும், திரும்பி அவன் வருவதை சந்தேகமாக குறிப்பிட்டிருப்பதையும் யாஸ்மினுக்கு தன் இறுதி செய்தியை கடத்தி விடுமாறு எழுதி இருப்பதை படித்து அழகுவேலுக்கு மூச்சு முட்டியது.

அவன் கண்கள் கலங்க, அந்த கடிதத்தை திரும்பத் திரும்ப படித்தான். எத்தனை முறை படித்தாலும் அதில் உள்ள செய்தி மாறிவிடப் போகிறதா என்ன?

இளங்கோவனின் அந்த லட்சிய வெறியின் மீது அழகுவேலுக்கு கோபம் கோபமாக வந்தது. யாஸ்மின் படும் கொடுமைகளை அருகில் இருந்து பார்ப்பவன் என்றேனும் ஒரு நாள் இளங்கோவன் வருவான் அவளை காப்பாற்றுவான் என்று நம்பி இருந்தான் அல்லவா.

அழகுவேல் மட்டுமா நம்பிருந்தான்? யாஸ்மினும் தானே அவன் ஒற்றை வருகைக்காக தவம் கிடக்கிறாள்.

‘அப்படிப்பட்ட பெண்ணை விடுத்து இவனுக்கு நாடு எந்த விதத்தில் உசத்தி ஆகிவிட்டது? இவனின் வாழ்வையும் காதலையும் விட போராட்ட வெறி முத்தி போய்விட்டதா?’ என்றெல்லாம் ஏதேதோ சிந்தனைகள் அழகுவேலுக்கு.

அவன் இப்படி ஸ்தம்பித்து போய் அமர்ந்திருப்பதை கண்ட கண்ணப்பன்,
“என்ன ஆச்சு டா?” என்று கேட்க, “இது.. இது… இதுல“ என்று வார்த்தை வராமல் தவிர்த்தானே ஒழிய அழகுவேலால் எதுவும் பேச முடியவில்லை.

அவன் நிலையைக் கண்டு குழம்பிப் போனவனாய் அழகுவேலின் கைகளில் இருந்து கடிதத்தை வாங்கி படித்துப் பார்த்தான் கண்ணப்பன்.

“டேய் என்னடா இது? இவன் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கான்? அந்த புள்ள இவன் நினைப்பிலேயே வாழ்ந்துகிட்டு இருக்கு. பைத்தியக்காரன் மாதிரி விதி சேர்க்கும்.இன்னொரு ஜென்மம் இருந்தா சேர்ந்து வாழலாம்னு எழுதி வச்சிருக்கான்.” என்று ஆதங்கமாய் கேட்டான் கண்ணப்பன்.

“எனக்கு எதுவுமே புரியலடா. அந்த பிள்ளைக்கு நான் இப்ப என்ன பதில் சொல்லுவேன்?

எதோ ராணுவத்தில போய் சேர போறேன்னு சொல்லிருக்கான்.” என்று கலக்கமாக கூறினான் அழகுவேல்.

இவர்கள் இங்கு இளங்கோவன் அனுப்பிய கடிதத்தை குறித்து பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த அச்சுப் பதிப்பகத்தின் வரிசையாக வந்து நிற்கும் வண்டி சத்தங்கள் கேட்டது.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அழகுவேலும் கண்ணப்பனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“டேய் நம்மள கண்டுபிடிக்க தான் வந்து இருக்காங்க போல. இப்ப என்ன டா பண்றது?” என்று அழகுவேல் பதறினான்.

‘என்ன செய்வது?’ என்று யோசித்த கண்ணப்பனுக்கு சட்டென்று ஒரு திட்டம் மனதில் உதித்தது.

அதுவரை பதிப்பித்திருந்த நாளிதழ்களை வேகமாக கட்டி, மழையில் நனையாதவாறு கோணிப்பையை கொண்டு சுருட்டியவன், அதை அழகுவேலின் கையில் ஒப்படைத்தான்.

“இங்க பாருடா. இங்கிருந்து எப்படியாவது தப்பிச்சு ஓடிப்போயிரு. இந்த வார இதழ்கள் எல்லாத்தையும் ராவு கடலில இருந்து புறப்படுற கப்பல்ல ஏத்தணும்.

அவங்க இதை காலையில எல்லா ஊருக்கும் கொண்டு போய் சேர்த்திடுவாங்க. கப்பல்ல ஏத்திட்டா அதுக்கப்புறம் பயப்பட வேண்டியதில்லை. இது மட்டும் கொண்டு போய் சேர்த்திடு.” என்று கூறினான் கண்ணப்பன்.

“டேய் உன்ன விட்டுட்டு எப்படி டா போறது? நீ வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தப்பிச்சு போயிடலாம்.” என்று அழைத்தான் அழகுவேல்.

“டேய் அழகு. சொன்ன புரிஞ்சுக்கோ.
இப்ப என் உயிர விட இந்த காகிதத்தில் இருக்க வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம்.

இத எப்படியாவது கொண்டு போய் எல்லா மக்கள் கையிலயும் சேர்த்து ஆகணும்.

என் உயிரே போனாலும் நிச்சயம் இந்த எழுத்துக்கு பின்னாடி இருக்கிறது அந்த பொண்ணு தானு நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்.

சீக்கிரம் இங்க இருந்து போ டா.” என்று விரட்டினான் கண்ணப்பன்.

அங்கிருந்த ரகசிய வழியின் மூலம் அந்த நாளிதழ்களை பத்திரமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினான் அழகுவேல்.

மறுபடியும் பூட்டிக் கிடந்த முன் கதவை உடைத்துக் கொண்டு காவல்துறையினர் அந்த பதிப்பகத்தினுள் வந்தனர்.

வேகமாக தப்பியோட முயன்ற கண்ணப்பனை துரத்தி பிடித்தவர்கள் அவனை மண்டியிட வைத்து, கைது செய்தனர்.

அங்கு அவன் பாதியில சீட்டுக் கொண்டிருந்த காகிதத்தில் ஒன்றை எடுத்து படித்துப் பார்த்தவர்கள், ‘அந்தக் கட்டுரைகளை இத்தனை நாளும் பதிப்பித்து வந்தது இவன் தான்.’ என்று உறுதி செய்தனர்.

பதிப்பகங்களில் அச்சிடக் கூடாது என்று போட்டிருக்கும் தடையை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டதற்காக கண்ணப்பனை சரமாரியாக தாக்கினார்கள்.

“டேய் மரியாதையா சொல்லு இந்த கட்டுரைகள் எல்லாத்தையும் உனக்கு எழுதி கொடுக்கிறது யாரு?” இன்று அவன் முகத்திலேயே அறைந்து கேட்டனர்.

“இதெல்லாம் எழுதுறது நான் தான். இந்த எழுத்து மூலமா மக்கள போராட்டத்திற்கு தூண்டுறதும் நான் தான்.” என்று அவர்கள் முன்பு பலியை ஏற்றுக்கொண்டான் கண்ணப்பன்.

“இவன இழுத்துட்டு போங்க. நேரா கொண்டு போய் டேவிட் ஐயா முன்னாடி நிறுத்தணும்.” என்று கண்ணப்பனை இழுத்துக் கொண்டு காவல்துறையினர் டேவிட் விக்டரை காண சென்றனர்.

முகத்தில் ரத்தம் வடிய, இழுத்துச் செல்லப்பட்ட கண்ணப்பனின் கண்கள் அங்கு பாதையில் அச்சிடப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த கட்டுரைகளின் மீதுதான் நிலைத்திருந்தது.

அவன் மனதில் எப்படியும் யாஸ்மின் இந்த கட்டுரைகள் தமிழகத்தின் ஒவ்வொரு மூலையில் இருக்கும் மக்கள் கைகளுக்கும் சென்று சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை மட்டுமே நிலைத்திருந்தது.

மறுபடியும் இங்கு அடித்து சாய்க்கும் பேய் மழையில் கண்ணப்பன் பதிப்பித்து கொடுத்த அந்த செய்தித்தாள்களை நெஞ்சோடு இறுக்கிப்பிடித்து கொண்டு கடற்கரையை நோக்கி ஓடினான் அழகுவேல்.

அவன் நேரமோ என்னவோ, ரோந்து பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் இரவு நேரம் வீதிகளில் சுற்றி திரிந்தனர்.

அவர்களைக் கண்டதும் வேகமாக புதர்க்குள் சென்று பதுங்கிக் கொண்டான் அழகுவேல்.

வெகு நேரமாக அங்கிருந்து நகராமல் இருந்த ஆங்கிலேயர்களால், அழகுவேலுக்கு எப்படி கடற்கரைக்கு செல்வது என்று ஒன்றும் புரியவில்லை.

புதிருக்குள் அமர்ந்திருந்தவன், பதற்றத்தில் அங்கிருந்த ஒரு குச்சியை மிதித்து விட அதன் சத்தம் கேட்டு சுதாரித்த ஆங்கிலேயர்கள் சுற்றி முற்றி ஒளி விளக்கை அடித்து தேடினர்.

ஆனால் அங்கு யாரும் இல்லாமல் போகவும் ஏதாவது விலங்குகள் சென்றிருக்கும் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்.

அவர்கள் சென்றதும் தான் இழுத்து பிடித்திருந்த மூச்சை சீராக விட்ட அழகுவேல் வேகமாக கடற்கரையை நோக்கி சென்றான்.

நெடுவயல் கடற்கரையில் ஆங்கிலேயர்களின் கப்பல்களை தாண்டி ரகசியமாக பயணிக்கும் ஒரு சிறிய படகு புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது.

அந்தப் படகின் நங்கூரம் கரையில் இருந்து அகற்றப்படுவதை தூரத்திலிருந்து கண்டுகொண்ட அலகுவேல் தலை தெறிக்க ஓடிவந்தான்.

‘தூரத்தில் இருந்து கத்தி படகை நிறுத்த முடியாது. சத்தம் கேட்டு யாரேனும் வர வாய்ப்பு இருக்கிறது.’ என்று நினைத்து ஓடியவன் கால் இடறி மணலில் விழுந்தான்.

எப்போதும் ஒரே மூச்சாய் எப்படியாவது இந்த இதழ்களை படைகில் சென்று சேர்த்து விட வேண்டும் என்று மீண்டும் எழுந்து ஓடினான்.

நங்கூரத்தை எடுத்து கடலில் பாய்வதற்கு தயாராக இருந்த படகிலிருந்த ஒருவனோ, தூரத்தில் இருந்து கையை அசைத்து கொண்டே ஓடி வரும் அழகுவேலை பார்த்து, “ஏலேய்! நிப்பாட்டுங்க. யாரோ நம்மள பாத்து வர மாதிரி தெரியுது.” என்று கூறினான்.

“ஐயோ. என்ன காரணங்களை இருக்க போறாங்க லே.” என்று இன்னொருவன் வேகமாக படகை இயக்க கூற, “இல்ல அவன் நம்ம ஆளு தான்.” என்று கூறியவன் வேகமாக படகில் இருந்து இறங்கி அழகுவேலை நோக்கி சென்றான்.

கையில் சிராய்ப்பு ரத்தக்காயத்தோடு ஓடி வந்த அழகுவேலோ, “அண்ணே! இந்த செய்தித்தாள் எல்லாத்தையும் கொண்டு போய் நம்ம மக்கள் கிட்ட சேர்த்திடுங்க அண்ணே!” என்று கூறினான் அழகுவேல்.

அந்த செய்தித்தாள்களை வாங்கிக் கொண்டவன், மீண்டும் ஏறிக்கொள்ள, படகு புறப்பட்டது.

தன் கண்ணிலிருந்து மறையும் வரை அந்த படகையே கண்டு நின்றிருந்தான் அழகுவேல்.

-கனா 🤎
 
Top Bottom