• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு காதல் கனா காண்போம் - 15

STN - 91

New member
பளபளப்பாக, சிறு தூசு கூட அண்டாமல் நெடுவயல் கிராமத்தில் இருந்த அந்த வெள்ளை மாளிகையானது, அதிகாலை நேரம் சூரியனின் கதிர்கள் பட்டு தெறிக்க தங்கமென மின்னியது.

‘அதிக அழகு, ஆபத்தான இடத்தில் தான் இருக்கும்.’ என்ற கூற்றுக்கு ஏற்றது போல், அந்த மாளிகையில் குடியிருப்பவன் தான் மனித மிருகமாயிற்றே.

அதிகாலை நேரம், அந்த வெள்ளை மாளிகையை சுற்றியுள்ள தோட்டத்தில் தன் உயர்ந்த ரக வெறி நாய்களுக்கு தீனி போட்டு, பயிற்சி அளித்துக் கொண்டிருந்தான் டேவிட் விக்டர்.

கரு கருவென இருந்த அந்த நாய்கள் ஒவ்வொன்றும், பிடித்தால் கிலோ கணக்கில் சதையை கவ்வி விட்டு தான் ஆளை விடும் போலும்.

“ஹே மை சாம்ப்ஸ்! கேட்ச்” என்று அந்த நாய்களைப் பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தவனை சுற்றிலும் பாதுகாப்புக்காக வெள்ளையர்கள் சூழ்ந்திருந்தனர்.

போராட்டங்களும், கலவரங்களும் அதிகமாக வெடித்து வரும் சமயங்களில் வெள்ளைக்கார அதிகாரிகளுக்கு ஆபத்து நேரக்கூடும் என்று தான் இந்த ஏற்பாடு. நாடு முழுவதும் இருக்கும் அதிகாரிகளுக்கு ஆங்கிலேய சிறப்பு படை பாதுகாப்பு அளித்திருந்தது.

கைகள் தன் நாய்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாலும் கண்கள் என்னவோ, மேசையில் கிடந்த நாளிதழில் தான் நிலைத்திருந்தது.

நேற்று இரவு கண்ணப்பனால் அச்சிடப்பட்டு, அழகுவேல் கப்பல் ஏற்றி அனுப்பி விடப்பட்ட நாளிதழ்களில் ஒன்று தான் அங்கு குடிகொண்டிருந்தது.

அந்த நேரம் அவன் மாளிகைக்கு கைது செய்யப்பட்ட கண்ணப்பனை அழைத்து வந்தனர் காவல் துறையினர்.

புருவம் சுருக்கி கண்ணப்பனை கண்ட விக்டரோ, ‘என்ன?’ என்பதைப் போல் பார்வையாலேயே கேட்க, டேவிட்டின் உதவியாளன் வாய் திறந்தான்.

“சர். ஊருக்குள்ள எந்த பதிப்பகத்திலும் ஆட்சி செய்யக்கூடாதுன்னு நம்ம போட்டிருந்த தடையை மீறி ராத்திரி நேரம் திருட்டுத்தனமா இவன் அச்சடிச்சிட்டு இருந்தான்.

இவன் பதுப்பிச்ச கட்டுரைகள் எல்லாமே, நீங்க தேடிக்கிட்டு இருந்த அதே கட்டுரைகள் தான். இவன் தான் அது எல்லாத்தையும் எழுதி இருக்கான்.இவன் தான் நாம இத்தனை நாளா தேடிகிட்டு இருக்க ஆள்.” என்று கண்ணப்பனை சாடி கூறினான்.

‘அப்படியா?’ என்பதை போய் நிமிர்ந்து பார்த்த டேவிட், அடி வாங்கியதால் சோர்ந்து போய், நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்த கண்ணப்பனை ஏறிட்டான்.

டேவிட் கை அசைக்க கண்ணப்பனை அவன் அருகில் கொண்டு வந்தனர்.

“இந்த கட்டுரை எல்லாம் எழுதினது நீதான். அப்படித்தானே?” என்று மேசை மீது கிடந்த நாளிதழை குறிப்பிட்டு அவன் ஆங்கிலத்தில் கேட்டான்.

‘எப்படியோ நாளிதழ்கள் மக்களுக்கு சென்று சேர்ந்து விட்டது.’ என்று நினைத்து புன்னகைத்த கண்ணப்பனும் டேவிட் கேட்ட கேள்விக்கு, ‘ஆமாம்’ என்று புன்னகைத்த படி தலையாட்டினான்.

எகத்தாளமாய் சிரித்த டேவிட்டோ, தன் உதவியாளனை ஏறிட்டு, “இந்த கட்டுரை எல்லாம் எழுதினது இவன் கிடையாது.

ஆனா அது எல்லாம் மக்களை போய் சேர்ந்ததுக்கு இவன் காரணமா இருக்கலாம்.” என்று கூறியவன் தனக்கு கீழ் அமர்ந்திருக்கும் கண்ணப்பனை காலால் எட்டி உதைத்தான்.

டேவிட் உதைத்ததில் உருண்டு போய் கண்ணப்பன் கீழே விழுந்தவன், அதிர்ச்சியாக நிமிர்ந்து அவனை கண்டான்.

தான் கூறுவதை புரியாமல் பார்த்த அவன் உதவியாளனை கண்ட டேவிட், “இவன எங்க இருந்து புடிச்சிட்டு வந்தீர்களோ, அங்கே போய் தேடுங்க. நம்ம தேடுற கேள்விக்கான பதில் அங்க தான் இருக்கும்.

நிச்சயமா அதையெல்லாம் எழுதினது இவனா இருக்க முடியாது.” என்று அழுத்தமாக கூறி விட்டு எழுந்து சென்று விட்டான்.

அவன் உதவியாளன் தான் அடுத்து கண்ணப்பனின் அச்சு பதிப்பகத்திற்கு சென்று, உள்ளே இருந்த பொருட்களை எல்லாம் தலை கீழாக இழுத்து போட்டு சோதனை செய்தான்.

அங்கு அப்படி ஒன்றும் டேவிட் கூறியதை போல் அவன் கைக்கு தோதாய் கிட்ட வில்லை.

“இங்க ஒன்னும் அந்த ஆள் சொல்ற மாதிரி இல்லயே. இப்ப நம்ம அவன் தான் இதெல்லாம் எழுதினதுன்னு சொன்னாலும் நம்ம சங்க கடிச்சு துப்பிருவான்.

என்ன பண்றது?” என்று சிந்தித்த அவனும் ஒரு இந்தியன் தான்.

பிழைப்பிற்காக டேவிட்டிடம் சேர்ந்தவனுக்கு நாள் போக்கில், ‘இது தங்கள் நாடு’

‘இங்கு அடிமையாக கிடக்கிறோம்’ என்ற எண்ணங்கள் யாவும் மறைந்தே போயிருந்தது. மிருகத்துடன் சேர்ந்து இவனுக்கும் அந்த மிருகத்தின் குணம் ஒட்டிவிட்டது போலும்.

தற்போதும் அந்த பதிப்பகத்தை மொத்தமும் சுற்றி சுற்றி தேடியவனுக்கு, கண்களில் சிக்கியது பரண்மேல் வைத்திருந்த ஒரு இரும்பு பெட்டி.

பலமான இரும்பு பெட்டிக்கு பெரிய பூட்டை போட்டு வைத்திருந்தது அவனுக்கு சந்தேகத்தை கிளப்பி விடவே வேகமாக, ஆட்களை அழைத்து அந்த பெட்டியை திறக்க சொன்னான்.

துப்பாக்கியை வைத்து சுட்டு, பூட்டை திறந்தனர். அந்தப் பெட்டிக்குள் இருந்த அத்தனையும் யாஸ்மின் தன் கைப்பட எழுதிய கட்டுரைகள்.

அவள் அழகுவேல் மூலம் எழுதிக் கொடுக்கும் கட்டுரைகளை, அப்படியே தட்டச்சு செய்து இதழ்களில் பதிப்பிப்பான் கண்ணப்பன்.

அதை யாவையும் எடுத்து பார்த்த டேவிட்டின் உதவியாளனும், “இந்த மாதிரி காகிதங்கள் எல்லாம் பள்ளிக்கூடத்தில மட்டும் தான கிடைக்கும்?

அப்ப நெடுவயல் கிராமத்தோட பள்ளிக்கூடத்துக்கு சம்மந்தமான யாரோ தான் இதெல்லாம் எழுதுறதா?

யாரா இருக்கும்?” என்று சிந்தத்தவன் நேராக அடுத்து சென்றது பள்ளிக்கூடத்திற்கு தான்.

கலவரங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பிள்ளைகள் யாரும் பயில வருவதில்லை.

ஒரு சில ஆசிரியர்கள் மாத்திரம் தான் தினமும் பள்ளிக்கு வந்து செல்வர்.
நேராக அந்த பள்ளிக்கூட கட்டிடத்தினுள் நுழைந்தவன், விறுவிறுவென தலைமை செயலாளர் அறைக்கு சென்றான்.

இவனை கண்டதும் எழுந்த நின்ற தலை ஆசிரியரிடம், “இந்த காகிதத்துல இருக்க எழுத்துக்கள் எல்லாம் யாரோடதுனு தெரியனும்.

இது இங்க பசங்க எழுத பயண்படுத்துற காகிதங்கள் தான?” என்று கேட்க, ‘ஆமாம்’ என்று தலை அசைத்தார்.

“இங்க இருக்க யாரோ தான் இத எழுதிருக்காங்க. கண்டுபிடிச்சு சொல்லுங்க.” என்று கண்டளையிட, தலையை ஆசிரியருக்கு தான் தலை வலியானது.

வேறு வழியில்லாமல், அங்கு இருக்கும் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டு போட்டு புத்தகத்தை எடுத்தார்.

அதில் இருக்கும் ஒவ்வொரு கையெழுத்தோடும், அந்த காகிதத்தில் இருக்கும் கையெழுத்தை ஒப்பிட்டு பார்த்தார்.

அந்த அறையிலேரே காத்து கொண்டிருந்த டேவிட்டின் உதவியாளனும், “சீக்கிரம்” என்று அவசரப்படுத்த, அவரும் வேகமாக பார்த்தார்.

வரிசையாக பார்த்துக் கொண்டே வந்த தலைமை ஆசிரியர் அந்த நோட்டின் இறுதியில் இருந்த ஒரு கையெழுத்தோடு அவன் கொண்டு வந்த கையெழுத்து ஒப்பிட்டு போவதை கண்டு, “இந்த கையெழுத்து, நீங்க கொண்டு வந்திருக்கிறதோட ஒத்துப்போகுதானு கொஞ்சம் பாருங்க.” என்று கூறினார்.

அவனும் வாங்கி பார்க்க, அதே கையெழுத்து, அப்படியே அச்சில் வார்த்ததை போல் இரண்டிலும் ஒன்றாக இருந்தது.

அதை ‘யார் எழுதியது?’ என்று பார்க்க யாஸ்மின் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

“யாரு யாஸ்மின்? இங்க வேலை பாக்குற டீச்சரா?” என்று அந்த உதவியாளன் கேட்க, “இல்லங்க. அந்த பொண்ணு முதல்ல இங்க டீச்சரா வேலை பார்த்துச்சு.

அப்புறம் அவங்க வீட்ல வேலைக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
இப்ப இங்க வேலைக்கு வரதில்ல” என்று கூறினார்.

இதழ்களில் ஒரு வெற்றி புன்னகையை உதிர்த்த அந்த உதவியாளனும் “இந்த பொண்ணு விடு எங்கிருக்கு?” என்று கேட்டான்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

யாஸ்மினின் தாய் பாத்திமாவின் உந்துதலின் பேரில், அவள் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.

விடிந்தால் திருமணம் என்ற நிலையில், டேவிட்டின் உதவியாளனின் வாகனம் யாஸ்மினின் வீட்டின் முன்பு வந்து நின்றது.

பெரும் சத்தத்தை ஏற்படுத்திக்கொண்டு வேகமாக, அந்த தெருவில் வந்து நின்ற மகிழுந்து கண்டு அந்த தெருவின் மக்கள் யாவரும் வெளியில் வந்து எட்டிப் பார்க்க, காதரும் வீட்டில் இருந்து வெளியில் வந்தார்.

“இங்க யாஸ்மின் யாரு?” என்று உரத்த குரலில் அந்த உதவியாளன் கேட்க “என் பொண்ணு தாங்க.” என்று சற்று பயத்துடன் காதர் கூறினார்.

காதரின் பக்கம் திரும்பி அந்த உதவியாளன்,“எங்க உன் பொண்ணு? வெளி வர சொல்லு.” என்று அவன் ஆணையிட, “ஐயா. எதுக்குயா என் பொண்ணு கேக்குறீங்க?” என்று தந்தையாய் அவர் கேட்டார்.

“அடிமை நாயே நான் கூப்பிட்டா உன் பொண்ணு அனுப்ப மாட்டியா? உங்களுக்கெல்லாம் கொழுப்பு கூடிப்போச்சு இல்ல?

இன்னும் எவ்வளவு நாளைக்கு இன்னும் நானும் பார்க்கிறேன். திரும்ப நீங்க எல்லாரும் டேவிட் துரை காலுல விழ தான் போறீங்க. அப்ப உங்கள எல்லாம் பார்த்துக்கிறேன். இப்ப நகரு யா.” என்று காதறை கீழே தள்ளிவிட்டு விறுவிறுவென்று அவர்கள் வீட்டிற்குள் சென்றான் அந்த உதவியாளன்.

உள்ளே பாத்திமாவும் மரியமும் அரண்ட நிலையில் நின்றிருக்க, சுற்றி முற்றி அந்த வீட்டை பார்த்தவன், அங்கிருந்து ஒற்றை அறையின் கதவை காலால் எட்டி உதைத்து திறந்தான்.

உள்ளே சுவற்றை வெறித்து அமர்ந்திருந்த யாஸ்மினை பார்த்து சிரித்தவன், “உன்ன கண்டுபிடிக்கிறதுகுள்ள எங்க கண்ணுல விரலை விட்டு ஆட்டிட்ட இல்ல?” என்று அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவன் கன்னத்தை தடவி கொண்டான்.

யாஸ்மின் பதற்றமாக எழுந்து நிற்க, அவள் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தான் அந்த உதவியாளன்.

“ஐயா தயவு செய்து அவளை விட்ருங்கயா. எங்கயா அவள கூட்டிட்டு போறீங்க?” என்று பாத்திமாவும் அவன் காலில் விழுந்து கதற, பெண்ணென்று பாராமல் அவரை உதைத்து தள்ளிவிட்டு யாஸ்மினை தான் வந்த மகிழுந்தில் ஏற்றி, இழுத்து சென்றான் அந்த உதவியாளன்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மெட்ராஸ் மாகாணத்தின் அந்த பிரம்மாண்ட துறைமுகத்தில் இந்திய ராணுவத்தில் சேருவதற்காக வட இந்தியா பயணிக்க காத்திருந்தது, தீரேந்திரன் தலைமையிலான இயக்க குழு.

இதுனால் வரை தனி ஒரு குழுவாக செயல்பட்டது வேறு. புகை குண்டுகளும் தண்ணீர் குண்டுகளும், மட்டும் தான் அவர்களின் கைகளில் ஆயுதமாக இருக்கும்.

ஆனால் ராணுவம் என்றால் துப்பாக்கி ஏந்த வேண்டும், ராட்சத ஆயுதங்களை கையாள வேண்டும்.

தீரேந்திரன் கொடுத்த கடுமையான பயிற்சி வீரர்களுக்கு ஆயுதங்களை கையாள்வது, அப்படி ஒன்றும் கடினமானதாக காட்டி விடாது என்றாலும் உயிர் சேதம் என்பதை யாராலும் தடுக்க முடியாதே.

ஒரே ஒரு துப்பாக்கி தோட்டா தான். அது இந்திய ராணுவத்தின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்தாலும் சரி, ஆங்கிலேயர்களின் துப்பாக்கில் இருந்து பாய்ந்தாலும் சரி எதிரில் தோட்டாவை துளைக்கும் உடல் மண்ணில் சாயும் என்பது திண்ணம் தானே.

கனத்த இதயத்தோடும், சற்றும் குறையாத நாட்டின் பற்றோடும் அந்தக் கப்பலில் ஏறினான் இளங்கோவன்.

-கனா 🤎
 
Top Bottom