“உன் கண்ணுல நாட்டுக்காக போராட்டம் வெறி மட்டுமில்ல, உயிர் மேல இருக்க பயமும் எனக்கு உன்னை முதல் தடவை பார்க்கும்போது நல்லா தெரிஞ்சது.
நீ எந்த அளவு உணர்ச்சியத்துல முன்னேறி போறேங்குறத பாக்குறதுக்காக தான் உனக்கு எங்க இயக்கத்தில் இடம் கொடுத்தேன்.
பரவால்ல நீ எப்பவோ இதெல்லாம் முடியாதுன்னு கிளம்பி போயிடுவேன்னு தான் நானும் எதிர்பார்த்தேன்.
ஆனா இத்தனை நாள் தாக்குப்புடிச்சு ஓட்டிட்ட. இதுல ஒரு நாள் கூட நீ கடமைக்கேனு போரடி நான் பார்த்ததே இல்லை.
உனக்குள்ள இருக்க இந்த சுதந்திர வெறி, உண்மையில ரொம்ப ஆச்சரியப்படுத்துச்சு.
இந்த இயக்கத்தில் எதுக்காக வாழ்க்கையில் எந்த குறிக்கோளுமே இல்லாதவங்களை மட்டும் அது இளைஞர்களா சேர்த்துக்கணும் தெரியுமா?
இளசுல இருக்கு தைரியமும் வீரமும் விவேகமும் காலம் போனா திரும்ப வராது. எந்த குறிக்கோளுமே இல்லாதவன் அவன் உயிர் போவதை பற்றியோ அவனுக்காக யாராவது காத்திருப்பாங்கன்னு பத்தியும் கவலைப்பட மாட்டான்.
அப்படிப்பட்டவங்க தான் எங்க இயக்கத்துக்கு தேவைப்பட்டாங்க. இப்ப இந்திய ராணுவத்துக்காக தேவைப்படுறாங்க.
இத்தனை நாளும் நீ இந்த இயக்கத்தில உன்னோட உண்மைகளை மறைச்சு ஒரு நேர்மையான போராளியா இருந்திருக்கலாம்.
ஆனா இதே மனசோட உன்னால ராணுவத்தில் சேர்ந்து போராட முடியாது.
எதுக்கு நிக்கிறவன் உன் பின்னாடி நிக்கிற போராளிகள் மேல கைய வைக்க போறானா, நெஞ்ச நிமித்துக்கிட்டு முன்னாடி வந்து குண்ட வாங்குறவன் தான் ஒரு உண்மையான போராளி.
உன் லட்சியம் தான் முக்கியம்னு நீ உறுதியா முடிவு பண்ணி இருந்த நான் இன்னைக்கு இப்படி குழம்பி போய் நின்னிருக்க மாட்ட.
உன்னோட லட்சியம் நீ இருந்தாலும் இல்லாட்டியும் இனி நிறைவேற போறது உறுதி. நீ ஒருத்தன் மட்டும் தான் நாட்ட காப்பாத்தணும்னு எந்த அவசியமும் இல்லை.
தூங்கிட்டு இருந்த ஒவ்வொரு இந்தியனும் வெளியே வந்துட்டான். நம்ம கையில நாட்டை தந்துக்கிட்டு போறது தவிர அவங்களுக்கு வேற வழியில்லை.
நீ போ உனக்காக காத்திருக்க அந்த பொண்ணோட நம்பிக்கையை கெடுக்காத.” என்று கூறினான்.
இளங்கோவனுக்கு தற்போது தான் வாழ்வில் ஏதோ ஒரு தெளிவான அறிவுரை கிடைத்தது போல் இருந்தது.
தீரேந்திரன் மேல் அவன் வைத்திருந்த நம்பிக்கையோ, இல்லை அவன் பார்த்து ஆச்சரியப்பட்ட ஒரு போராளியாக அவனின் சொல்லும் எதுவோ ஒன்று இளங்கோவனின் மண்டையில் ஆணி அடித்ததை போல் அவன் பாதையை தெளிவாக புரிய வைத்தது.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மறுபுறம் இங்கு டேவிட்டால் அந்த வெள்ளை மாளிகைக்கு அவன் உதவியாளனால் இழுத்து வரப்பட்டாள் யாஸ்மின்.
உடலை மறைத்து முகத்திற்கு திரையிடாமல் அவள் இதுனால் வரை வெளியில் எங்கும் வந்ததில்லை. ஏன் இளங்கோவனை கூட அப்படி சந்தித்ததில்லை.
இன்று இத்தனை ஆண்களுக்கு மத்தியில் இப்படி வருவதே அவளுக்கு ஏனோ உடல் குறுசியது.
அந்த பிரம்மாண்டமான வரவேற்பறையில், இலவம் பஞ்சுகளால் தெய்க்கப்பட்ட அந்த சொகுசு நாற்காலியில் அமர்ந்து உயர்தர குழம்பியை சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்தான் டேவிட் விக்டர்.
அன்று தன்னை அடித்து அவமானப்படுத்தி எப்படியாவது அந்த எழுத்தாளரை கண்டுபிடித்து வரவேண்டும் என்று கூறிய டேவிட்டுடன் இன்று சென்று தான் கண்டுபிடித்து விட்டதை கூற வேண்டும் என்று ஆர்வமாக வந்தான் டேவிட்டின் உதவியாளன்.
யாஸ்மின் தலைமுடியை கொத்தாக பற்றி எழுத்து வந்தவன், நேராக அவளை டேவிட் காலடியில் சென்று தள்ளிவிட்டான்.
அவன் தள்ளி விட்ட வேகத்தில் நிலை தடுமாறி டேவிட்டின் முன்னால் வைக்கப்பட்டிருந்த மர மேகையில் சென்று இடித்து விழுந்தாள் யாஸ்மின்.
பிடித்த வேகத்தில் அவள் நெற்றியில் சதை கிழிந்து லேசாக குருதி எட்டிப் பார்த்தது.
தன் உதவியாளனை புன்னகைத்தவாறே பார்த்த டேவிட் விக்டர், தன் காலடியில் கிடக்கும் யாஸ்மினின் தாடையை வலிக்க பற்றி அவள் முகத்தை நிமிர்த்தினான்.
பார்த்த நொடி அவன் கண்கள், அப்படியே அவள் முகத்தை கூர்ந்து அளவிட்டது. அழகில் அப்சரஸான யாஸ்மினை கண்டு மயங்காத ஆண்கள் தான் யாரோ.
“ஏஞ்சல்!” என்று அவன் உதடுகள் முணுமுணுக்க, அவனின் பார்வை தன்னில் அத்துமீறுவதைக் கண்டு வேகமாக அவன் பிடியிலிருந்து துள்ளினாள் யாஸ்மின்.
தன் பிடியிலிருந்து தப்பிய புள்ளிமானை ஆர்வமாக பார்த்த டேவிட், “சோ எங்க அரசாங்கத்துக்கு எதிரா மக்களை ஒன்று திரட்டுவதற்கு போராடின அந்த பிரேவ் கேர்ள் நீதானா?” என்று கேட்டான்.
நெஞ்சை மட்டும் அளவு பயம் இருந்தாலும் இதனால் வரை மக்களுக்காக எழுச்சி கட்டுரைகளை எழுதிய யாஸ்மினின் மனம் டேவிட் முன்னால் அடிபணிந்து செல்ல மறுத்தது.
“ஆமா நான் தான் அந்த கவிதைகள் கட்டுரைகள் எல்லாத்தையும் எழுதினேன்.உன்னால என்ன பண்ண முடியும்?” என்று அவளும் குரலை உயர்த்தி கேட்டாள்.
“என்னடி சொன்ன?” என்று அவளை அடிக்க வந்த உதவியாளனை பார்வையாலேயே விளக்கிய டேவிட், யாஸ்மினை மாறாத புன்னகையுடன் ஏறிட்டான்.
“சச் எ போல்ட் கேர்ள். நீ எப்படி இத்தனை நாள் என் கண்ணுல படாம இருந்த? இந்த பிளாக் கலர்ல இருக்க பொண்ணுங்கள பார்த்தா எனக்கு திரும்பி பாக்க கூட தோனாது. பட் ஆர் ப்யூட்டிஃபுல்” என்று அவன் கூறியது யாஸ்மினுக்கு காதலில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதை போல் இருந்தது.
வெளிவர துடித்த கண்ணீரையும் அவன் வார்த்தைகளால் கூசிய மேனியையும் அரும்பாடு பட்டு மறைத்தவள் அவனை ஆக்ரோஷமாக பார்த்து வைத்தாள்.
“வாவ் கோபப்படும் போது முகமெல்லாம் அப்படியே சிவக்குதே.” என்று அவன் எழுந்து யாஸ்மினை நெருங்கினான்.
அவன் ஒவ்வொரு அடி முன்னாள் எடுத்து வைக்க யாஸ்மினும் கீழே அமர்ந்தபடியே பின்னால் நகர்ந்து சென்றாள்.
அந்த மனித மிருகத்திடமிருந்து எவ்வளவு தூரம் தான் அவளாலும் தப்பிக்க முடியும்.
இறுதியில் சுவர் வந்து அவளை தப்ப விடாமல் தடுத்து விட, தன் ஷூ காலை
அழுத்தி நடந்தவன் கீழே குனிந்து யாஸ்மினின் தாடையை மீண்டும் பிடித்தான்.
அவன் தீண்டில் அமிலத்தை ஊற்றி உடலை பொசுக்குவதை போன்று இருந்தது யாஸ்மினுக்கு.
அந்நிறம் என்று பார்த்து அந்த வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருந்த நவீன ரக டெலிபோன் ‘கிரிங் க்ரிங்’ என்று அடிக்க, யாஸ்மினியை விட்டு நகர்ந்து அந்த அழைப்பை ஏற்றான் டேவிட் விக்டர்.
மறுபுறம் என்ன கூறப்பட்டதோ, “எஸ் சர்
ஐ வில் பி தேர், பை திஸ் ஈவினிங். தேங்க்யூ” என “இன்று மாலைக்குள் நான் அங்கு இருப்பேன்” என்று கூறியவன் இணைப்பை துண்டித்தான்.
அழைப்பை துண்டித்து அவன் உதவியாளன் புறம் திரும்பிய டேவிட், “இவள அந்த ரூம்ல லாக் பண்ணுவீங்க. எனக்கு இது கிட்ட தீக்க வேண்டியது கணக்கு பாக்கி இருக்கு. யாரும் அந்த ரூம்குள்ள தேவையில்லாம போகக்கூடாது புரிஞ்சுதா?” என்று கூறியவன் மீண்டும் யாஸ்மின் புறம் வந்தான்.
“ஹே ஏஞ்சல். எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதுவரைக்கும் நீ ரெஸ்ட் எடு. நான் சீக்கிரம் வந்துடுறேன்.” என்று கூறி அவள் கண்ணம் தட்டி விட்டு எழுந்து வேகமாக வெளியில் சென்றான் டேவிட் விக்டர்.
இங்கு டேவிட் கூறியதைப் போன்றே அவன் உதவியாளன் யாஸ்மினை அவன் கைகாட்டி விட்டு சென்ற அறையில் தள்ளி கதவை அடைத்தான்.
வாழ்வே சூனியமானதை போல் அந்த அறைக்குள் கை கால்களை மடக்கிக்கொண்டு அடைப்பட்டு போனாள் யாஸ்மின்.
அவளுக்கு இந்த சிறை ஒன்றும் புதிதல்ல. ஆனால் தற்போது சிறைப்பட்டிருக்கும் இந்த கொடிய இடத்தை நினைத்து தான் அவள் மனம் அஞ்சி நடுங்கியது.
அதிலும் டேவிட் நடத்தையும் அவன் வார்த்தைகளும் தன்னை கண்டு குழைவாய் வைக்கும் முகமும் என்று அவளுக்கு அவனைக் கண்டாலே அருவருப்பாக இருந்தது.
அவன் எந்த நோக்கத்தில் தன்னிடம் பேசிவிட்டு செல்கிறான் என்று ஒரு பெண்ணாய் அவளால் உணர முடியாதா என்ன.
“இளங்கோ நீங்க எங்க இருக்கீங்க? தயவுசெஞ்சு வந்து என்னை இங்கிருந்து கூட்டிட்டு போங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்று மானசீகமாக அவள் மனம் இளங்கோவனை நினைத்து கதறியது.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு பக்கம் அகிம்சை வழியில் மறுபக்கம் ராணுவத்தின் தாக்குதல் என்று மாறி மாறி ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தியர்களின் போராட்டமும் கலவரமும் தன் உச்சகட்ட நிலையை எட்டி இருந்தது.
இதில் சிதிலாக சிதறி கிடந்த நாடு மொத்தமும் ஒன்று திரண்டு ஒரே குறிக்கோளாக வெள்ளையர்களை வீழ்த்த வேண்டும் என்று போராடினார்கள்.
இதோ அந்தப் போராட்டத்தின் எதிரொலியாக, போராட்டத்தில் மக்களை கட்டுப்படுத்த முடியாது தங்கள் அரசாங்கம் கவிழ்ந்து போகும் நிலைக்கு வந்துவிட்டனர் ஆங்கிலேயர்கள்.
அதற்காக மீண்டும் கூட்டப்பட்டது தான் இந்த அவசர கூட்டம். அந்த கூட்டத்திற்காக தான் டேவிட்டும் நெடுவயல் கிராமத்திலிருந்து அவசர அவசரமாக புறப்பட்டு வந்துள்ளான்.
அந்தந்த மாகாணங்களில் இருக்கும் அதிகாரிகளை மொத்தமாய் ஒன்று திரண்டிருந்த, பிரம்மாண்டமான அந்த அறையில் தோல்வியின் ஒளியே வீசியது.
(ஆங்கில உரையாடல் வசதிக்கேற்ப தமிழில்…..)
அங்கு இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்த முதன்மை ஆங்கிலேய அதிகாரி தன் முன் அமர்ந்திருந்த அவர்களை கண்டு பேசத் தொடங்கினார்.
“நம்ம நினைச்சதை விடவே இவங்களோட போராட்டமும் கலவரமும் ரொம்ப தீவிரமா நடந்துட்டிருக்கு.
நம்ம கையில எடுத்த அதே வன்முறையை அவங்களும் கையில் எடுத்து எதிர்த்து நிக்கிறாங்க.
இந்த தாக்குதல்கள சமாளிக்க முடியாமல் நம்ம வீரர்களும் ரொம்ப காயமடைந்துட்டு வராங்க.
இதே நிலமை தொடர்ந்தால் நம்ம இந்த நாட்டை விட்டு மொத்தமா கிளம்பி போற மாதிரி ஆயிடும்.” என்று கூறினார்.
“சீஃப். நீங்க சொல்றது சரி தான். இந்தப் போராட்டக்காரங்கள நம்மளால கட்டுப்படுத்த முடியல. கைது பண்ணி வச்சாலும் திரும்பத் திரும்ப முளைச்சு வந்து கிட்டே இருக்காங்க.
ஒருத்தர் ரெண்டு பேர் தான் நம்ம துப்பாக்கி வச்சு சுட்டு தள்ளலாம். ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு இடங்களையும் ராத்திரி பகல்ன்னு பாக்காம நம்மளை எதிர்த்து நிற்கும் போது ரொம்ப நாளைக்கு நம்மளோட இந்த ஆட்சிய இங்கு நடத்த முடியாது.” என்று ஒரு ஆங்கிலேய அதிகாரி கூறினான்.
“அதுக்காக இத்தனை நாள் நம்ம ஆட்சி செஞ்ச இந்த நாட்டை விட்டுட்டு போயிட முடியுமா? நாகரிகம்னா என்னனு தெரியாது மக்களுக்கு நம்ம ஆட்சி வந்ததுக்கு அப்புறம் தான் ஒரு நாகரிகமான வாழ்க்கைனா என்னன்னே தெரியும்.
இந்த நாட்டு மண்ணுல உலகத்திலேயே எங்கேயும் பார்க்க முடியாது அளவு அதிசய சக்திகள் இருக்கு.
நம்ம போராடி பல நோய்களுக்கு கண்டுபிடிக்கிற மருந்து இங்க ஏதோ ஒரு மலையில் ஏதோ ஒரு செடியை வைத்து குணப்படுத்திடறாங்க.
ஆனா நம்மளோட நாட்டுல அதே மருந்த, நிறைய காசு செலவு செஞ்சு ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிட்டு இருக்கோம்.
இந்த நாட்டை விட்டு போனா நம்ம நாட்டோட வருமானம் பாதியா குறைஞ்சிடும்.” என்று மற்றொரு நாட்டை வைத்து அவன் நாடு மேல் ஏற வேண்டும் என்ற நோக்கில் பேசினான் ஒரு அதிகாரி.
“உண்மை தான் சீஃப். இந்த நாட்டை விட்டு போறதுனால நமக்கு நிறைய நஷ்டம் ஏற்படும். நமக்கு கீழ அடிமைகளா வேலை செய்ய பழகின இவங்க நம்ம விட்டுட்டு போனாலும் திரும்ப முன்னேறி வருவதும் நடக்காத விஷயம்.” என்று கூறினான் டேவிட் விக்டர்.
இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு அதிகாரியாக இந்த நாட்டை விட்டு செல்லவே கூடாது என்று தங்கள் தரப்பு வாதங்களை கூறிக் கொண்டிருந்தனர்.
அனைத்தையும் கேட்டு முடித்த அந்த முதன்மை அதிகாரி, “நம்ம பிரிட்டிஷ் க்ரவுன் கிட்ட இருந்து அறிவிப்பு வந்துச்சுன்னா நம்ம இந்த நாட்டில் இருந்து கிளம்பி தான் ஆகணும்.
இது சர்வதேச அளவில, பெரிய பிரச்சினையா உருமாறதுக்கு முன்னாடி இதை தீர்க்கறது தான் நல்லதுனு நம்ம ஹெட் நினைக்கிறாங்க.
அப்படி ஒருவேளை நம்ம இந்த நாட்டை விட்டு போய் ஆகணும் என்கிற ஒரு சூழ்நிலை வந்தாலும், இவங்கள அடுத்த ஐம்பது வருஷத்துக்கு முன்னேறவே விட முடியாத மாதிரி இவங்க கிட்ட இருக்க எல்லாத்தையும் அழிச்சிட்டு தான் போகணும்.” என்று தன் கொடூர திட்டத்தை கூறினான் அந்த முதன்மை அதிகாரி.
அந்த முதன்மை அதிகாரி கூறுவதை அங்கிருந்து மற்ற அதிகாரிகள் ஒரு கொடூர புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அது சரி அங்கிருக்கும் அனைத்துமே மண்ணையும் மக்களையும் புரிந்து தின்னும் பிணம் தின்னி கழுகுகள் தானே. அனைத்தும் ஒரே போல தானே இருக்கும்.
-கனா 🤎