நேர்மையாய் பேச்சுவார்த்தைகள் நடத்தி, உண்ணாவிரதங்கள் இருந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது ஒரு பக்கம்.
‘இவர்களுக்கெல்லாம் வெறும் பேச்சு வார்த்தை சரிபட்டு வராது. அவர்கள் வழியிலேயே சென்று சுட்டு தள்ளினால் தான் நம் நாட்டை விட்டு செல்வார்கள்’ என்று ராணுவம் அமைத்து சண்டையிடும் மற்றொரு பக்கம்.
இப்படி பல்வேறு அணிகளாக இந்தியர்கள், வெள்ளையர்களை எதிர்த்து போராடி வந்த போராட்டம் ஒரு வழியாக ‘பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா’ கம்பெனியின் தலைமையை எட்டியது.
எப்படியோ, அவசர அவசரமாக கூட்டம் கூட்டப்பட்டு இறுதியாக, “நாங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குகிறோம். இந்தியாவில் இருக்கும் ஆங்கிலேயர்கள் உடனடியாக கப்பல்களில் இங்கிலாந்து திரும்பி வரவேண்டும்.” என்று பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி தன் அதிகாரப்பூர்வமான ஆணையை வெளியிட்டது.
மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தும், இந்தியாவில் உள்ள பொருட்களையும் பொக்கிஷங்களையும், அடுத்த பல ஆண்டுகளுக்கு இவர்களை வளரவே விடக்கூடாது என்ற நோக்கில் செல்வதற்கு முன் பல்வேறு சதி வேலைகளை செய்தது ஆங்கிலேய அரசு.
பல நூற்றாண்டுகளாக தமிழர்களின் உயிர் மூச்சாக போற்றி பாதுகாத்த பல்வேறு நூல்கள் புத்தகங்கள் செய்யுள்கள் நிறைந்த நூலகங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன, எதிர்கால சந்ததிகளுக்கு நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற ஞானம் சென்று கிடைக்கக்கூடாது என்று.
பல்வேறு மருத்துவ குணமுள்ள செடிகளும் மலைகளும் தீக்குரையாகி பொசுங்கியது.
கப்பல்களில் செல்லும் முன் கோவில்களில் இருந்த சிலைகள், பொன் பொருள் பொக்கிஷங்கள், அவர்களுக்கு அடிமையாக வேலை செய்ய சிறுவர் சிறுமிகள் என்று அனைத்தையும் கடத்திக் கொண்டு தங்கள் நாட்டிற்கு செல்லும் முயற்சியில் தீவிரமாக இருந்தனர் ஆங்கிலேயர்கள்.
இங்கு அதே போல் தன் தலைமையிடம் இருந்து ‘இங்கிருந்து புறப்படுங்கள்.’ என்று வந்த ஆணையின் பேரில் இறுதியாக ஒரு முறை நெடுவையல் கிராமத்திற்கு வந்தான் டேவிட் விக்டர்.
அங்கிருந்து உதவியாளர்களுக்கு, “இந்த ஊர்ல இருக்க எல்லா வீட்டையும் தீ வச்சு கொளுத்துங்க.
கைக்கு என்ன எல்லாம் கிடைக்குதோ அதை அத்தனையும் நம்ம கப்பல்ல ஏத்துங்க.” என்று உத்தரவிட்டான்.
அப்புறம் இந்த ஊர்ல இருக்க சின்ன பசங்க எல்லாத்தையும் கடத்திக் கொண்டு போகணும். இந்த நாட்டோட ரத்தம் நமக்கு அடிமையாக மட்டும் தான் இருக்கணும்.” என்று கூறினான்.
அவன் சொல்படி கேட்டு மீதமிருந்த வெள்ளையர்களும் அங்கிருந்து குழந்தைகள், பொருட்கள் பொக்கிஷங்கள் என்று அனைத்தையும் களவாட தொடங்கினர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நெடுவயல் கிராமத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் புறப்படுவதற்கு முன் அந்த கிராமத்தை முடிந்த மட்டும் சூறையாட வேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கினர்.
கோவில்கள் தொடங்கி நூற்பாலைகள் வரை அனைத்து பொருட்களும் சூறையாடப்பட்டது.
வீடுகள் எரிக்கப்பட்டு, கலவரங்கள் வெடித்ததில் மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஆங்காங்கே சிதறி ஓடினர்.
இதில் யாஸ்மின் காலையில் அழைத்து சென்றதில் இருந்தே தவித்திருந்த குடும்பத்தினரும் தற்போது வீட்டை இழந்து வீதியில் நின்றுனர்.
தடியடி நடத்தி அங்கிருந்து சிறுவர்களை கடத்தி சென்ற ஆங்கிலேயர்களுக்கு தன் அன்னையின் செயலுக்குள் மறைந்து அச்சத்துடன் நடக்கும் கலவரத்தை பார்த்திருந்த மரியமும் கண்ணில் பட்டாள்.
அவளைக் கண்ட ஆங்கிலேயன் வேகமாக அருகில் வந்து மரியமின் கையைப் பிடித்து இழுக்க, “டேய் என் பிள்ளையை விடு டா.” என்று மரியம்மை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கதறினார் பாத்திமா.
அவரை ஒரே தள்ளில் தள்ளிவிட்டவனவோ மரியமின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று விட்டான்.
“அம்மா….அம்மா என்னை காப்பாத்துங்க.” என்று அழுதபடியே மரியம் சென்று மறைவதைக் கண்டு காதரும் பாத்திமாவும் துடிதுடித்து போயினர்.
இரண்டு மகள்களையும் காக்க இல்லாத தந்தையாக அந்த ஆங்கிலேயனின் பின்னாலேயே ஓடினார் காதர்.
அவர்களோ மரியமை வண்டியில் இழுத்துக் கொண்டு வேகமாக சென்றுவிட்டனர்.
“ஐயோ என் புள்ள. யாராவது காப்பாத்துங்களேன்…” என்று வீதியில் கிடந்து பாத்திமா அழுத அழுகை அந்த இடத்தையே உலுக்கியது.
நெடுவயல் கிராமத்திலிருந்து கடத்தப்பட்ட சிறுமிகளும், சிறுவர்களும் அந்த ராட்சத ஆங்கிலேய கப்பல்களில் ஏற்றப்பட்டனர்.
தப்பிக்க வழி தெரியாமல் ஆங்கிலேயர்களிடம் சிக்கி இருந்த அந்த குழந்தைகள் யாவரும் அழுது கொண்டே அமர்ந்திருந்தினர்.
அதில் ஒருவளாக மரியமும் சுற்றி முற்றி பார்த்து அச்சத்துடன் கண்களில் கண்ணீர் வைத்திருந்தாள்.
அப்போது அந்தக் கப்பலின் கீழ் இருக்கும் அறையில் இன்னும் சில சிறுவர்களை அழைத்து வந்து ஒருவன் தள்ளிவிட்டு சென்றான்.
அவன் சென்ற திசையை உன்னித்து கவனித்த மரியம், வேகமாக அவன் வந்த வழியே சென்று பார்த்தாள்.
கப்பல் இன்னும் புறப்படாமல் கரையிலேயே நின்றிருப்பதை உணர்ந்தவள் அங்கு ஏதேனும் ‘தப்பிக்க வழி இருக்கிறதா?’ என்று தீவிரமாக பார்த்தாள்.
ஆங்கிலேயர்களின் கப்பல் கட்டுமானத்தில் உருவான அந்த ராட்சசன் கப்பலில், ஒருவேளை மழை வந்தால் கப்பலில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருப்பதற்காக கப்பலின் கீழ் மட்டத்தில் நீர் வெளியில் செல்வதற்காக ஓட்டைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
முட்டை விழிகளை உருட்டி அந்த ஓட்டைகளை ஆராய்ந்து பார்த்த மரியம், ஊட்டியில் தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பியை தட்டிவிட்டாள் அது பொத்தினே நீரில் சென்று விழும் சத்தம் அவள் செவிகளில் கேட்டது.
இதுதான் இங்கிருந்து தப்புவதற்கு ஒரே வழி என்று நினைத்த மரியம் அந்த ஓட்டை வழியே நீரில் குதிக்க முடிவெடுத்தாள்.
இயல்பிலேயே ஒல்லியான உடல்வாகைக் கொண்ட மரியம், அந்த ஓட்டையில் சிக்காமல் தப்பி விடுவாள்.
ஆனால் அவள் நேரம் அவள் செவிகளில் மீண்டும் அந்த ஆங்கிலேயர்கள் அவர்களை அடைத்து வைத்திருந்த இடத்திற்கு வரும் சத்தம் கேட்டது.
வேகமாக எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த ஓட்டை வழியே உடலை புகுத்தி வெளியில் குதித்தாள் மரியம்.
கப்பல் கரையில் இருந்து சற்று தூரத்தில் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் நீரில் குதித்த மரியம் எப்படியோ நீச்சல் அடித்து கரை வந்து சேர்ந்தாள்.
அந்த இருட்டில் அப்படி ஒரு உருவம் தப்பி செல்வது அவசர அவசரமாக புறப்பட்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் கண்ணில் பிடிப்படாமல் போனது.
நனைந்த உடலுடன் நடுங்கியபடி எங்கு செல்வது தன் தாய் தந்தை எங்கே உள்ளனர் என்று ஒன்றும் புரியாமல் அழுதபடி ஒரு பழைய கப்பலின் கீழ் நின்றிருந்தாள் மரியம்.
பத்து வயது சிறுமி அவள் விட்டால் இந்நேரம் கப்பல் ஏற்றி இங்கிலாந்து அழைத்து செல்லப்பட்டிருப்பாள்.
சுற்றி முற்றி கண்களால் யாரையும் காணாமல் துளவியபடி நின்றிருந்த மரியம்மின் தோளில் அழுத்தமாக ஒரு கரம் பதிந்தது.
உடனே பதறி அடித்து திரும்பி பார்த்தாள் மரியம். அவளை குழப்பமாக கண்டு நின்றிருந்த இளங்கோவனை கண்டதும், இத்தனை நேரம் தேக்கி வைத்திருந்த அவள் கண்ணீர் யாவும் உடைபடுத்து வேகமாக அவனை சென்று கட்டிக்கொண்டாள்.
“ஏய் என்னாச்சும்மா? நீ எப்படி இங்க வந்த? உன் அம்மா அப்பா எங்க? இப்படி தனியா இந்நேரம் இங்க நிக்கிற?” என்று கேட்டான் இளங்கோவன்.
தீரேந்திரன் கூறியதும் அவன் அடுத்து போராட வேண்டிய அவன் காதலை தேடி வந்தவனுக்கு, அவன் லட்சியமான விடுதலை கிடைத்து விட்டது என்பது மட்டும் நெடுவலை அடையும் முன்பே செய்தியாய் வந்தது.
இனி இந்த ஆங்கிலேயர்களின் அடிமைத்தனம் எதுவும் இங்கு நடக்காது என்று நம்பிக்கையுடன் ஒரு சிறிய படகில் வந்து இறங்கிய இளங்கோவன், அந்த இருளில் ஏதோ ஒரு சிறிய உருவம் நின்றிருப்பதை கண்டான்.
“யாரது இந்நேரத்துல இங்க நிற்கிறது?” என்று நினைத்தபடி அருகே வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, அது யாஸ்மின் தங்கை மரியம் என்று.
“அழாத மா. என்னாச்சு?” என்று அவளை சமாதானம் செய்த கேட்ட இளங்கோவனிடம், “வெள்ளக்காரங்க எங்க வீட்டு எல்லாத்தையும் எரிச்சு அடிச்சு வெளியே துரத்திட்டாங்க.
என்னையும் நிறைய பசங்களையும் கடத்தி அது அங்க நிக்குது பாத்திங்களா பெரிய கப்பல் அதுல ஏத்தி அவங்க நாட்டுக்கு கூட்டிட்டு போக பார்த்தாங்க.
நான் அந்த கப்பலில் இருந்து ஓட்டை வழியா குதிச்சு இங்க வந்துட்டேன்.” என்று விசும்பியபடியே கூறினாள் மரியம்.
அவள் கூறியதை கேட்டதும், கண்கள் சிவந்த இளங்கோவன், “நீ இங்கையே பத்திரமா இரு நான் போய் அந்த குழந்தைகள் எல்லாம் காப்பாத்தி கூட்டிட்டு வரேன்.” என்று மரியமிடம் கூறிவிட்டு அந்த கப்பலை நோக்கி சென்றான்.
முன்பை போல் அல்லாது ராணுவத்தின் பயிற்சி பெற்ற இளங்கோவன் அந்தக் கப்பலில் இருந்த சொற்ப அதிகாரிகளை, சற்று நேரத்தில் வீழ்த்திவிட்டு மரியம் கூறிய இடத்திற்கு சென்றான்.
அங்கு நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
“எல்லாரும் சீக்கிரம் எழுந்து வெளிய வாங்க.” என்று இளங்கோவன் கூற அனைத்து குழந்தைகளும் வேகமாக கப்பலில் இருந்து வெளியேறினர்.
அந்தக் கப்பலில் பிள்ளைகள் திருடி வைத்திருந்த பொருட்களை எல்லாம் பார்த்த இளங்கோவன், இவர்களெல்லாம் என்ன பிறவிகள் என்று நினைத்துக் கொண்டு வேகமாக அந்த சிறுவர்களை அழைத்துக் கொண்டு கரை ஏறினான்.
அவன் அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றி கீழே வந்த போது அவன் அருகே வேகமாக சென்ற மரியம் “மாமா. அக்காவை அந்த வெள்ளைக்காரங்க வந்து இழுத்துட்டு போயிட்டாங்க.” என்று கூறினாள்.
மரியம் கூறியதை கேட்டு அதிர்ந்து போன இளங்கோவன், “என்ன யாஸ்மின கடத்திட்டு போய்ட்டாங்களா?” எதுக்காக என்று ஆக்ரோஷமாக கேட்டான்.
“காலைல அக்காவ நாலு அஞ்சு பேர் வீட்டுக்குள்ள வந்து வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல கேக்காம கூட்டிட்டு போனாங்க.
இப்ப வரைக்கும் அக்கா திரும்ப வரவே இல்ல” என்று இளையவள் கூறியதை கேட்டு இளங்கோவன் தான் அதிகம் பதறிப் போனான்.
டேவிட் விக்டர் எப்பேர்ப்பட்ட குணம் கொண்டவன் என்று நன்றாக அறிந்து வைத்திருந்தவன், வேகமாக அந்த வெள்ளை மாளிகையை நோக்கி சென்றான்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு யாஸ்மின் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையை வந்தடைந்த டேவிட் விட்கர், “ஹாய் ஏஞ்சல். எனக்காக ரொம்ப நேரம் காத்திருந்தியா?” என்று கேட்ட படி அவள் அருகில் வந்தான்.
சாளரத்தின் வழி நின்றிருந்தவள், அவன் தன் அருகில் ஒரு எட்டை எடுத்து வைத்து நெருங்கி வருவதை கண்டு அப்படியே, அங்கிருந்து குதிக்க முயன்றாள்.
சட்டென்று ‘அவள் இப்படி தான் குதிப்பாள்.’ என்று முன்னரே கணித்து வைத்ததைப் போல், வேகமாய் பாய்ந்து அவளை பிடித்து வைத்துக் கொண்டான் டேவிட்.
“சோ சேட். நானே ரொம்ப சோகமா வந்து இருக்கேன். இதுல நீயும் இப்படி தற்கொலை முயற்சி பண்ணா நான் என்ன பண்றது ஏஞ்சல்?
எப்படியும் சாகணும்னு முடிவு பண்ணிட்ட தான? வெட்டியா மண்ணு திங்க போற இந்த உடம்ப கடைசியா எனக்காவது கொடுத்துட்டு செத்துப் போ.” என்று கூறியவன் நொடிப்பொழுதில் யாஸ்மினை பிடித்து இழுத்து அந்த படுக்கையில் தள்ளி இருந்தான்.
இருதி ஆயுதமும் அவளைக் கைவிட்டு விட ‘அவ்வளவு தான். இதற்கு மேல் தன் வாழ்வே முடிந்துவிட்டது’ என்று கண்களில் வைத்த கண்ணீருடன் மெத்தையில் இருந்து நகன்று பின்னே செல்ல முயன்ற யாஸ்மின் காலை பிடித்து தன் அருகில் இழுத்தான் டேவிட்.
அவன் தீண்டல் ஒவ்வொன்றும் அவளுக்கு சாவே மேல் என்ற நினைப்பை தான் கொடுத்தது.
யாஸ்மினை கண்ட நொடியில் இருந்து அவள் மீது ஏதோ தீராத மயக்கத்தில் இருந்த டேவிட்டோ, நாட்டை காலி செய்து கிளம்பும் இறுதி நொடியிலும் அவளை அடைந்துவிட வேண்டும் என்று வந்திருக்கிறான்.
டேவிட் இன் விரல்கள் யாஸ்மின் நெற்றியை தொட்டு அப்படியே கீழ இறங்கி அவள் இதழை அடைந்தது.
பொங்கி வரும் கண்ணீரை அடக்கிக் கொண்டு அவனிடமிருந்து தப்ப முடியாமல் கூண்டு கிளியாய் சிக்கிப் போனாள் யாஸ்மின்.
அவன் யாஸ்மினை உடலால் நெருங்கப் போகும் அந்த நிமிடம், அந்த நிசப்தமான மாளிகையில் திடீரென்று ஒரு பெரும் சத்தம் கேட்டது.
கூட்டம் கூட்டமாக மக்கள் கோஷங்கள் போட்டுக் கொண்டு அந்த மாளிகையை நோக்கி வருவதைப் போல் சத்தம் கேட்க, பிடியில் இருந்த யாஸ்மினை விடுத்து வேகமாக எழுந்து
சற்று முன் யாஸ்மின் நின்றிருந்த அதே சாளரத்தின் வழி வெளியே எட்டிப் பார்த்த டேவிட்டின் கண்கள் விரிந்தது.
எத்தனை காலமும் அவனுக்கு கீழ் அடிமைப்பட்டு கிடந்த மக்கள் யாவரும் அவனுக்கு எதிராக ஒன்று திரண்டு வந்து கொண்டிருந்த காட்சியை கண்டு தான் அவன் அதிர்ந்து போய் நின்று இருந்தான்.
விடுதலை கிடைத்தும் தங்கள் உடைமைகளையும் வீடுகளையும் உடைத்து நாசமாகியவனை அடித்துக் கொள்ளும் வெறியோடு நெடுவயில் கிராமம் மொத்தமும் அந்த வெள்ளை மாளிகையை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த கூட்டத்திற்கு நடுவே இதழோரம் வலியும் குருதியை துடைத்துக் கொண்டு, ஆவேசமாக வந்து கொண்டிருந்தான் இளங்கோவன்.
-கனா 🤎