• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 26

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 26

சேராமல் போனால்
வாழாமல் போவேன் உன்னை
காணமால் போனால் காணாமல்
போவேன் நீ பார்க்காமல் போனால்
பாழாகி போவேனே நான்
பெண் பூவே

அவன் அவளை மணிமுத்தாறு அருவிக்கு அழைத்துச் சென்றிருந்தான். அன்று வீக்டே என்பதால் கூட்டம் சற்று குறைவாக, ஆட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருந்தனர்.
அங்கே குளிப்பதற்க்கு வரவில்லை என்று அவள் முன்பே அவனிடம் சொல்லிவிட்டாள். இருவரும் அருகருகில் வந்தபோது, ஒரு பாறையில் அவளது காலை வழுக்க, சட்டென்று அவன் அவளது இடையைப் பற்றிப் பிடித்து நிறுத்தினான்.

அவளும் தடுமாறி அவனைப் பற்றிக்கொள்ள, இருவரது விழிகளும் ஒன்றையொன்று சந்தித்துக்கொண்டன. உணர்வுகள் ஆர்ப்பரிக்க, அவளது இடையைப் பற்றிய அவன் விரல்களில் அழுத்தம் கூட, அவனது நெருக்கத்தில் அவள் நெகிழத் தொடங்கினாள்.

சில நொடிகளில் தான் சுதாரித்தவள், அவனை விட்டுப் பட்டென்று விலகினாள்.

அவளது வேகத்தில் “மது, பார்த்து விழுந்திடாதே,” என்று பதறினான்.

அவனை , அவள் அப்பட்டமாக முறைத்தாள்.

“இப்ப எதுக்கு கோபம்?” என்றான் அவன்.

“பின்ன கோபப்படாமல் உங்களை கொஞ்சணுமா?” என்றாள் இன்னும் முறைத்து.

அவள் சொன்னதை மனதில் எண்ணியவன், விழிகளில் குறும்பு கூத்தாட,
“கொஞ்சு… கொஞ்சினாலும் தப்பில்லை,” என்றான்.

“யூ… யூ…” என்று கோபத்தில் முகம் சிவக்க , “எப்படா சான்ஸ் கிடைக்கும்னு இருப்பீங்க போல!” என்றாள் குத்தலாக.

“ஆமாம் டி, அப்படித்தான் இருக்கேன். ஒரு சான்ஸ் குடுன்னுதானே கேக்குறேன்,” என்றவன் குரலில் இருந்த கனிவு அவளை வளைக்க பார்க்க .

“ஏன், ஒருமுறை தந்து நான் பட்டது எல்லாம் போதாதா?” என்றாள்.

இன்னொருமுறை கூட தரலாம் “இந்த ஒரு முறை மட்டும்… ப்ளீஸ்,” என்றவன் கண்களால் கெஞ்சினான்.

அவனை இப்படி பார்க்கவும் அவளுக்கு பிடிக்கவில்லை. தன்னிடமே அவன் இப்படி கெஞ்சுவதா? அவளது மனமே அவளுக்கும் அவனுக்கும் ஒருசேர வாதாடியது.

அவள் ஏதும் சொல்லாமல் அவனை பார்த்து நின்றாள்.

உனக்கு தெரியுமா? தேவதைகளுக்கு மன்னிக்க மட்டுமே தெரியும், . நீயும் என் தேவதைதான் என்றவனை, என்ன செய்யலாம் ?என்று பார்த்து நின்றாள்.

“அவளது பார்வையில் என்ன… என்ன பார்வை இது?” என்றான் அவன் அடக்கப்பட்ட புன்னகையுடன்.

“என்ன பார்வை? ஒண்ணும் இல்லையே,” என்றாள் பார்வையை வேறுபுறம் திருப்பி.

அவளை ஒரு மென்முறுவலுடன் பார்த்தவன்,
“சரி மது, நீ வெயிட் பண்ணு. நான் அருவியில் குளிக்கணும்,” என்று சொன்னவன் தனது டி-ஷர்ட்டை கழற்றி அவளிடம் கொடுக்க, அவள் வாங்காமல் பார்த்தாள்.

“பிடி. நீதான் இருக்க. சோ நீதான் பிடிக்கணும்,” என்றவன் ஜீன்ஸ் மட்டும் அணிந்து அருவியை நோக்கி நடந்தான்.

அவன் போவதையே பார்த்தவள் மனதோ, அவனது செய்கையில் தாளம் தப்பித் துடித்தது. என்ன உரிமையில் இவன் இப்படியெல்லாம் செய்கிறான்?

அவனது டி-ஷர்டை பற்றியிருந்த விரல்களில் குறுகுறுப்பு கூடியது. அதனை அழுந்தப் பற்றினாள்.

அவன் அருவியில் குளிக்க சென்றவனையே அவள் விழி அகலாமல் பார்த்து நீக்க , அவளது பார்வை தொடர்ந்து அவனையே துளைப்பதை உணர்ந்தவனும் அவளை பார்த\த்து புருவம் உயர்த்தி என்ன? என்றான் ஒரு தடுமாற்றத்துடன் அவள் பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள்.,

அவளது தடுமாற்றத்தை உணர்ந்தவன் விழிகளில் கள்ள சிரிப்பு.

அருவியில் குளித்துக்கொண்டிருந்தவன் சட்டென்று அருகில் இருந்த குளம் போன்ற இடத்தில் நீருக்குள் பாய்ந்தான். பாய்ந்தவன் நீருக்குள் போவதும் திரும்ப வெளியே வருவதுமாக இருந்தான்.

அவளும் அவனது செயலையே விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இருமுறை அவ்வாறு வந்தவன் மூன்றாம் முறை சென்ற போது வெகுநேரம் ஆகியும் திரும்பி வெளியே வரவில்லை.

மதுமதிக்கு பதட்டமானது.

எங்கே சென்றான்? ஏதாவது நீருக்குள் மூச்சடக்கி பயிற்சி செய்கிறானோ என்று எண்ணி அங்கேயே விடாமல் பார்த்தாள்.

அவன் அரைமணிநேரம் ஆகியும் வெளியே வரவில்லை என்றதும் பதட்டம் கூடியது.

“வசீ! வசீ!” என்று சத்தமாக அழைத்தாள்.

இவர்கள் இருந்த பக்கம் மக்கள் நடமாட்டமும் குறைவாக இருந்தது.

அங்கிருந்து சற்று தள்ளி வந்தும் சத்தமிட்டு பார்த்தவள், என்ன செய்வது என்று தெரியாமல் உயிர் பதற நின்றாள்.

என்ன செய்ய என்று தெரியாமல் … வசீ… வசீ… என்று மனது அரற்றியது.

“வசீ, எங்க இருக்கீங்க?” என்று சத்தமிட்டாள்.

அவள் பதட்டமாக அங்குமிங்கும் ஓட, அவளை பின்னால் இருந்து தோள் தொட்டு “மது…” என்று அவன் அழைக்க,

திரும்பியவள் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.

“எங்க போனீங்க?” என்று அவனது நெஞ்சில் சாய்ந்து கதறியவளை, தன் மார்போடு சேர்த்தணைத்தவன்,

“மது, இங்க பாரு,” என்று முகத்தைப் பற்றிக் அவளை அவனை பார்க்க வைத்தான்.

“ஆர் யு ஓகே?” என்றான்.

“ஆம்…” என்று தலையசைத்தவள் சிரிக்க முயன்றவள்; உதடுகள் நடுங்கின.

“நான் ரொம்ப பயந்திட்டேன்…” என்றாள் மெதுவாக.

அவன் மெதுவாக அவளது தலையை வருடிவிட்டான்.

சில நொடிகள் இருவரும் அமைதியாக நின்றனர்.

“நான் எங்கையும் போகல… எனக்கு ஒன்னும் ஆகலை… ஓகேவா?” என்றவன்,
“நான் அங்க உள்நீச்சல் அடிச்சிட்டு அப்படியே கொஞ்ச தூரம் போய்ட்டேன். அங்கேயிருந்து கரையேறி நடந்து வரேன். அதுக்குள்ள நீ…” என்றவன் அவளது கலக்கத்தில் அவனுக்குள் குற்ற உணர்ச்சி எழுந்தது.

“சாரி டாம்மா… உன்னை ரொம்ப பயப்படுத்திட்டேனா?” என்றான் கனிவான குரலில்.

“ஆம்…” என்றவள், இப்போதுதான் உணர்ந்தாள் அவனுடன் இவ்வளவு நெருக்கமாக அவனது வெற்று மார்பில் சாய்ந்து நின்றிருப்பதை.

சட்டென விலகி நின்றாள்.

அவளுக்கு அவனை நேராகப் பார்க்கவே முடியவில்லை.

அவனை வேண்டாம் வேண்டாம் என்று சொன்னதென்ன, இப்போது இவ்வாறு அணைத்து நின்றதென்ன!

அவளது தடுமாற்றத்தை உணர்ந்தவன், அவளை இயல்பாக்க,
“மது, என்னோட டி-ஷர்ட் குடு. என்று அதனை அவளிடமிருந்து வாங்கி அணிந்து கொண்டே போலாமா?” என்றான்.

அவளும் ஆம் என்று தலையசைக்க, இருவரும் கார் இருக்கும் இடம் நோக்கி நடந்தனர்.

இருவருக்குள்ளும் பேரமைதி.

அவன் அமைதியாக காரை செலுத்த, அவளும் அமைதியாகவே வந்தாள்.

அடுத்த நாள் மித்ரன்–பிரியா திருமணம்.

மணமக்கள் இருவரும் மேடையில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு அருகில் இவர்கள் இருவரும்.

வசீகரன் பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக நிற்க, பார்த்தவள் பார்த்தபடி அசையாமல் நின்றவள் விழிகளில் அவ்வளவு ரசனை.அவளது பார்வை அவனை அவனது நெற்றியில் இருந்து அங்குலம் அங்குலமாக ரசித்து அவனது மீசைக்கடியில் புன்னகையை தாங்கி நிற்க்கும் அவன் இதழ்களில் படிய அவளுக்கு மூச்சடைத்தது.

ச்ச .. என்ன நாம இப்படி ஆயிட்டோம்.மது வேண்டாம் இவனை பார்க்காதே .. அவன் உனக்கு வேண்டாம்.. என்று மீண்டும் மீண்டும் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

அவளது பார்வையை உணர்ந்தவன்,மெஜந்தா வண்ண கரையிட்ட ரஸ்ட் ஆரஞ்சு வண்ண பட்டில் தேவதையென இருந்தவளது ரசனைமிக்க விழிகளில் விழுந்து மூழ்கத் துடித்தவனோ, அவளை மயக்கும் புன்னகையுடன் பார்க்க, அவளோ தனது பார்வையை மாற்றினாள்.

அவ்வப்போது இருவரின் விழிகளும் மற்றவரை தழுவி நின்றன.

அப்போது பிரீத்தியின் மகள் அதிதி ஓமகுண்டத்திலிருந்து வந்த புகையின் நெடி தாங்காமல் அழத் தொடங்கினாள்.

அங்கே அவளை பிரீத்தியால் சமாளிக்க முடியாமல் போக,
“வாடா குட்டி…” என்று மதுமதி அவளை தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள்.

வெளியே வந்ததும் குழந்தை சற்று அழுகையை நிறுத்தியது.

அவள் போவதை பார்த்த வசீகரனும் அவள் பின்னோடு வந்தான்.

அதற்குள் மதுமதியிடம் குழந்தை, “சித்தி… அங்க… அங்க…” என்று விளையாட்டு பொருள்கள் விற்பனை செய்யும் கடையை காட்டி, உதடு பிதுக்கி மீண்டும் ஒரு அழுகைக்கு அடிபோட்டாள்.

“பட்டு குட்டி, இங்க பாருங்க. சித்தி நீங்க கேட்டதை வாங்கித் தருவேணாம். அப்ப பட்டுக்குட்டி என்ன பண்ணுவாளாம்?”

“என்ன பண்ணுவாம் சித்தி?” என்று தன் மழலைக் குரலில் கொஞ்சி கொஞ்சி கேட்டாள்.

“பட்டு, இனி நீங்க சமத்தா எதுக்கும் அழாம இருக்கணும், ஓகேவா?” என்று மதுமதி குழந்தையிடம் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டிருந்தாள்.

அவர்கள் இருவரையும் தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தவன் முகத்தில் விரிந்த புன்னகை ஒன்று மலர்ந்தது.

அவர்கள் அருகே வந்தவன், “என்ன குட்டி, சித்தி என்ன சொல்லுறாங்க?” என்றவனிடம்,

“சித்து… சித்து… தூக்கு, தூக்கு…” என்று அவளிடமிருந்து அவனிடம் தாவினாள்.

“என்ன வேணும் அதி குட்டிக்கு?” என்று அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றினான்.

“சித்து… இன்னொக்கா… இன்னொக்கா…” என்று என்று குழந்தை குதூகலமாகச் சொல்ல, அவளை இன்னொரு முறை சுழற்றினான்.

அவளை கீழே இறக்கப் போகும் முன் மதுமதி அவளை வாங்கிக்கொண்டாள்.

அந்தச் சிறிய நொடியில் குழந்தை இடம் மாறியபோது, இருவரது விரல்களும் மெதுவாக உரசியது.

அந்த தொடுதல் எதிர்பாராத ஒரு சிலிர்ப்பை இருவருக்குள்ளும் எழச்செய்தது.

விழிகள் ஒன்றோடொன்று மோதின.

வசீகரன் கண்கள் மின்ன. அவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.

அந்த பார்வையை எதிர்கொண்ட மதுமதிக்கும் அவனிடமிருந்து பார்வையை விலக்க முடியவில்லை.

ஒரு சொல்லாத உணர்வு இருவருக்கும் இடையே மெதுவாக பரவியது.

அந்த நொடியின் அமைதியை உடைக்க, வசீகரன் மெதுவாக குரலைச் செருமி தன்னை நிதானித்துக் கொண்டான்.

“சரி, சொல்லுங்க… குட்டிக்கு என்ன வேணும்?” என்று அதிதியிடம் அவன் கேட்க, அவளும் பார்வையை மாற்றிக்கொண்டாள்.

“சித்து… அங்க… அங்க…” என்று அவனுக்கும் அந்த கடையை காட்டினாள்.

“போலாமா?” என்று அவளைத் தூக்கியவன் மதுமதியைப் பார்த்து, “நீயும் வருகிறாயா?” என்று கேட்க, அவளும் அவனுடன் வந்தாள்.

அவனுக்கு அதுவே பெரும் நம்பிக்கையை அவனுள் விதைத்தது.

மாலை நலுங்கு நடந்துகொண்டிருக்க, மணமக்கள் வீட்டினர் ஆரவாரத்துடன் பாட்டும் ஆட்டமும் என குதூகலித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது பிரீத்தி,
“மது… நீதான் நல்லா பாடுவியே. ஒரு பாட்டு பாடு,” என்று அவளை மேடைக்கு அழைத்தாள்.

“அக்கா வேண்டாம் … என்ன அக்கா நீங்க … நான் பாட்டு பாடியே ரொம்ப நாள் ஆச்சு…” என்று மதுமதி தயங்கினாள்.

“ஏய் பாடு மது… நானும் கேட்டு ரொம்ப நாளாச்சு,” என்று பிரியாவும் சேர்ந்து சொல்ல, அவளால் மறுக்க முடியவில்லை.

மெதுவாக மேடையில் ஏறி நின்றாள்.

பாடத் தொடங்கியவுடன் மண்டபம் முழுவதும் அவளது குரலின் இனிமை பரவியது.

அங்கே நின்ற வசீகரனுக்கோ அந்தக் குரல் நேராக இதயத்துக்குள் இறங்கியது.

அவன் பார்வை முழுவதும் அவள்மேல் தான் இருந்தது.

அவள் பாடும் ஒவ்வொரு வரியிலும்,
அவளது கண்களில் ஒளியும், முகத்தில் மலரும் மென்மையான உணர்வும்—
அவனை மெல்ல மெல்ல கட்டிப்போட்டது.

அகநக அகநக முகநகையே
முகநக முகநக முறுநகையே
முறுநக முறுநக தருநகையே
தருநக தருநக வருநனையே
யாரது யாரது புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும் என்மனம் சேர்பது
பாடல் முடிய –

அவள் பாடல் பாடி முடிக்க, “சூப்பர்டி!” என்று பிரியா வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

அவளது விழிகள் வசீகரனைத் தேடின. அவனோ இமைக்க மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

இவள் அவனைப் பார்த்ததும், அவன் இதழ்கள் மெல்ல அவளுக்கே மட்டும் புரியும் வண்ணம் அசைந்தது.

“அருமை, என் தங்கமே…” என்று சொல்லி ஒரு பறக்கும் முத்தத்தை வழங்கி கண்களால் சிரித்தான்.

அவனது செய்கையில் அவளுக்கு பதட்டமாகியது. யாராவது பார்த்துவிடுவார்களோ என்று.

சட்டென்று பிரியாவின் பக்கம் திரும்பியவள், சமாளிக்க அருகில் இருந்த அதிதியைத் தூக்கிக்கொண்டாள்.

மழலையோ, “சூப்பர் சித்தி!” என்று அவளது கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தது.

“அச்சோ… தாங்க்யூ தங்கம்! பட்டுக்கு பாட்டு பிடிச்சுதா?” என்று கேட்டாள்.

“ரொம்ப!” என்று குழந்தை கைகளை பெரிதாக விரித்துக் காட்டியது.

அவளை அணைத்துக் கொண்ட மதுமதி, அவளது கன்னத்தில் பதில் முத்தம் ஒன்றை வழங்கினாள்.

மீண்டும் வசீகரனைப் அவள் பார்க்க, அவன் இன்னும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“எனக்கு இல்லையா… மை ஸ்வீட் டெம்ப்டேஷன்?” என்று மீண்டும் இதழசைத்தான்..

அவள் விழிவிரிந்தாள் , என்ன செய்துகொண்டிருக்கிறான் இவன் என்று.

இதனை பார்த்துக்கொண்டிருந்த மித்ரன், வசீகரனின் அருகில் வந்து,
“என்னடா நடக்குது? இங்க நான் தான்டா மாப்பிள்ளை… ஆனா நீ என்னடா பண்ணிட்டு இருக்க?” என்றான்.

மித்ரனை பார்த்ததும் மதுமதி, “அச்சோ!” என்று பதறி திரும்பிக்கொண்டாள்.

“வந்துட்டானே நந்தி…” என்று மனதில் நினைத்துக் கொண்ட வசீகரன்,
“நான் ஒண்ணும் பண்ணலையேடா அஃப்கோர்ஸ் நீதான் மாப்பிள்ளை… யாரு இல்லைன்னு சொன்னா?” என்றான்.

“பார்த்தா தெரியலையே…” என்றான் மித்ரன் சந்தேகமாக.

“உன்னைப் பார்த்தா மாப்பிள்ளைன்னு உனக்கே தெரியலையா?” என்று வசீகரன் நக்கலாகச் சொன்னான்.

“என்னடா நக்கலா?” என்று மித்ரன் முறைத்தான்.

“என்னடா முறைப்பு? போடா… போய் மாப்பிள்ளையா இலச்சணமா பிரியா பக்கத்தில போய் நில்லு,” என்றான் வசீகரன்.

“உன்கிட்ட பேச வந்தேன் பாரு… என்னை சொல்லணும்,” என்று சொல்லிவிட்டு மித்ரன் அங்கிருந்து நகர்ந்தான்.

திருமணம் முடிந்து, வசீகரனின் அலுவலகத்தில் இருந்து வந்தவர்கள் புறப்பட்டனர்.

வசீகரனும் மதுமதியும் அன்றே அவனது காரில் புறப்பட்டனர்.

இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

மீண்டும் அமைதியான ஒரு கார் பயணம்.

அதிகாலையில் அவர்கள் கோவையை வந்தடைந்தனர்.

ஆனால் அங்கே அவர்கள் வந்தடைந்தபோது…

அவர்கள் இருவரும் எதிர்பாராத பல திருப்பங்கள் அவர்களுக்காக காத்திருந்தது.
 
Top Bottom