• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 28

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 28

ஓ இமை ரெண்டும் மூடாது உறக்கங்கள் வாராது
அதை காதல் என்றால் அவள் தானே தந்தாள்
நடந்தாலும் முன்னே கடந்தாலும் பின்னே
மனம் எங்கும் அவள் ஞாபகம்

இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க, அங்கு வீட்டில் வசீகரன் திருமணத்திற்கு தனது சம்மதத்தை தெரிவித்தான். அதை கேட்ட மீனாட்சியம்மாவிற்கு தலைகால் புரியவில்லை. மகன் திருமணத்திற்கு சம்மதித்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் அவனுக்காக பார்த்த பெண்ணைகே சரி என்று சொல்லிவிட்டான். உடனே வீட்டில் திருமண வேலைகள் தொடங்கப்பட்டன.

அன்று வீட்டுக்கு வந்த மதுமதிக்கு, அவளது அன்னை தெரிவித்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.
“என்னம்மா சொல்றீங்க?” என்றாள்.
“ஆமாம் டா, உன்னை வர வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வராங்க,” என்றார்.
“என்னம்மா இது? திடீர்னு… என்கிட்ட சொல்லவே இல்லையே!” என்று அவள் நெஞ்சில் எழுந்த கலக்கத்தை மறைக்க முடியாமல் கேட்டாள்.


“இல்ல டா, அவங்க சும்மா பார்த்துட்டுப் போகத்தான் வராங்க. உனக்கும் அந்த பையனுக்கும் பிடிச்சா மட்டும்தான் அடுத்தது எதுவும் நடக்கும்,” முதல் முதலா உனக்கு வரன் ஒன்று வந்திருக்கு , அவங்க கேக்கும் போது எப்படி வேண்டான்னு சொல்லறது அதான் .என்று தாயின் வார்த்தைகள் நிம்மதி தர முயன்றாலும், மதுமதியின் உள்ளம் இன்னும் பதற்றத்திலேயே இருந்தது.

மீனாட்சியம்மாள் இதை ஒரு சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்தார்.மதுமதிக்கு தெரியக்கூடாது என்று சொல்லி இருக்க ஒருவரும் வசீகரன் தான் மாப்பிள்ளை என்று அவளிடம் தெரிவிக்கவில்லை. உண்மையில், வசீகரன் மதுமதியையே திருமணம் செய்ய சம்மதித்திருந்தான்.

மீனாட்சி, சொக்கலிங்கத்திடம் தனது விருப்பத்தை தெரிவிக்க, “முதலில் மகனிடம் கேள். அவன் சரின்னு சொன்னா எனக்கும் டபுள் ஓகே,” என்றார். அதற்கு, “அவன் கண்டிப்பா சரின்னுதான் சொல்வான்,” என்று கூறி, மகன் தன்னிடம் பகிர்ந்த விஷயங்களையும் அவரிடம் சொன்னார்.

அன்று இரவு வசீகரன் வீட்டிற்கு வந்தபோது, இந்த செய்தியை கேட்டவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. “அம்மா!” என்றவன் அதீத உணர்வுகளின் பிடியில் தத்தளிக்க,அவனை கனிவுடன் பார்த்தவர்,.
“உன் விருப்பம் தெரிஞ்சும் அதை நிறைவேற்றாம இருந்தா, அப்புறம் நான் என்ன அம்மா?” , நீ கேட்ட தானே சரின்னு சொல்ல மாட்டா. இது பெரியவங்க பார்த்து நிச்சயம் செய்யறது இப்ப எப்படி அவ என்கிட்ட சம்மதிகாம போறான்னு நானும் பார்க்குறேன் . என்றார்.
அவன் கண்களில் பனிக்க, அவரை தோளோடு அணைத்துபிடித்தான்.

இங்கே மோகனுடன் மூர்த்தி பேசிக் கொண்டிருந்தார்.
“என்னடா மூர்த்தி, என்ன பயம் உனக்கு?” என்று மோகன் கேட்டார்.

“அவங்க ரொம்ப பணக்காரங்கடா… இது எப்படி ஒத்துவரும்னு யோசனையாத்தான் இருக்கு,” என்றார் மூர்த்தி.

அதற்கு மோகன், “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது. பையனுக்கும் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு. என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையாடா?” என்று கூறி மூர்த்தியை சமாதானப்படுத்தினார்.

“நம்ம மது உனக்கு மட்டும் பொண்ணு இல்ல, எனக்கும் தான்—புரியுதா? அவ பொறந்ததும் நான் தான்டா முதல்ல கையில வாங்கினேன். அவ எனக்கு எப்பவும் ஸ்பெஷல் டா. அவளுக்கு யோசிக்காம நான் ஏதாவது சொல்லுவேனா? “உனக்கே தெரியும் நான் ஏன் சொல்லுறேன்னு… மதுவை விட நம்ம வள்ளி.. அவளுக்காகடா.. அவளுக்குத்தான் நம்மால எதுவும் பண்ண முடியல… அட்லீஸ்ட் அவ பொண்ணு…” என்று மோகன் சொல்லி முடிக்கும் முதல்,

“மோகன்!” என்று அதட்டினார் கணேசமூர்த்தி. “அப்படி சொல்லாத. யாருக்காவது கேட்டிடப் போகுது. மதுக்கு தெரிஞ்சா நான் தாங்க மாட்டேன் டா. அவ எப்பவும் என் பொண்ணுதான்.”

மோகன் அப்படி சொல்லியதில் அவருக்கு மனம் தாங்கவில்லை. அவரது கலக்கத்தை பார்த்த மோகனுக்கு தனது தவறு புரிந்தது. அவரும் வேண்டுமென்றே சொல்லவில்லை; யாதேர்ச்சையாக வாயில் வந்துவிட்டது., “சாரி டா…” என்று கணேசமூர்த்தியின் தோளில் தட்டி கொடுத்தார்.

“சரி, நான் அதை பற்றி பேசல. நீ சொல்லு, இந்த சம்பந்தத்துல உனக்கு சம்மதமா? இங்க பாருடா… நாமளா அவங்க வேணும்ன்னு போகல …”; அவங்களே வந்து கேக்குறாங்க. அதுல உனக்கு என்ன தயக்கம்? கடவுளோட விருப்பமும் இதுதான் போல. அவ சரியான இடத்துக்குத்தான் போறான்னு நீ முதல்ல நம்பு. அவ நல்லா இருப்பா டா,” என்றார்.

“அதில்லை… அந்த லலிதாவை நினைச்சால்தான் எனக்கு பயமா இருக்கு,” என்று மூர்த்தி சொன்னார்.

“அவ எல்லாம் ஒரு ஆளு; அவளுக்குப் போய் பயப்படுறியா?” என்றார் மோகன்.

“பயப்படாம எப்படி டா? அவ என்னவெல்லாம் பண்ணினான்னு உனக்குத்தான் தெரியுமே. ஒரு பொண்ணோட பாவத்தை வாங்கியிருக்கோம்னு அவளுக்கு கொஞ்சமாவது அச்சம் இருந்ததா? அவங்க அவ சம்பந்தப்பட்டவங்க… அதான் யோசனையா இருக்கு, மோகா,” என்றார் மூர்த்தி.

“அதையெல்லாம் பாலா அண்ணா பார்த்துக்குவார். நீ அவரை நம்புடா,” என்றார் மோகன்.

அவருக்கு மது பத்தி தெரியுமா? என்றார் கணேசமூர்த்தி

“முதல்ல தெரியாது. ஒரு நாலு வருஷம் முன்னாடிதான் தெரிஞ்சிருக்கு. தெரிஞ்சதும் மனுஷன் ரொம்பவும் உடைந்து போயிட்டார். அதுக்குப் பிறகு தூரத்திலிருந்தே பார்த்துக்கிட்டார் போல… அவரையும் இங்க தப்பு சொல்ல முடியாது. ஏன்னா எல்லாமே வள்ளியோட முடிவா இருக்கும் போது, யாரு என்ன பண்ண முடியும் சொல்லு…” என்று விடுத்தான்.

கணேசமூர்த்தியோ, “வள்ளி நிலைமை என் பொண்ணுக்கு வரக் கூடாது டா…” என்று கண்கள் கலங்க கூற, மோகனுக்கும் மனது ஒரு மாதிரியானது.

“மூர்த்தி, வள்ளிக்கிட்ட முதல்ல சொல்லு. அவ சம்மதமும் முக்கியம்,” என்றார் மோகன்.

“ஆமாம்,” என்று தலையசைத்தவர் உடனே இந்தச் செய்தியை மரகதவள்ளியிடம் தெரிவித்தார். வீட்டில் எந்த நல்லது, கெட்டது நடந்தாலும், அவருடன் ஆலோசித்து தான் செய்வார்.

தன் அக்கா சித்ராவிடம் கேட்டபோது, அவர் மகிழ்ச்சியுடன், “அட நம்ம மீனு பையனா?” என்று கேட்டார்.

“ஆமா அக்கா, மீனாட்சி பையன்தான். அன்னைக்கு கோவில்கூட பார்த்தோம். மச்சானை எனக்கு அவ்வளவு தெரியல, அதனால சரியா பேச முடியலை. நம்ம மோகன் வேலைக்குனு சொன்னபோது கூட கொஞ்சம் பயம் தான்.. ஆனா நம்ம மது கூட நல்லா பழகுறாங்கன்னு சொன்னா பிறகு தான் எனக்கு நிம்மதியா இருந்தது. ,” என்றார்.

“என்ன இவ்வளவு யோசிக்குற? மச்சான் ரொம்ப நல்ல மனுஷன். மீனு பத்தி உனக்கே தெரியும். அப்புறம் என்ன? என்றவர்… நல்ல சம்பந்தம். மதுவுக்கு பிராப்தம் இருந்தா அமையட்டும்,” என்றார்.

மரகதவள்ளியிடம் கேட்டபோது, முதலில் லலிதாவை நினைத்து சற்று தயங்கினார்.

“என்ன வள்ளி, உனக்கு பிடிக்கலையா?” என்று கேட்டார்.

“மூர்த்தி, எனக்கு மீனு, லிங்கம் அண்ணா பத்தி எந்த தயக்கமும் இல்ல. தங்கமானவங்க. ஆனா லலிதாதான்… அதான் கொஞ்சம் யோசிக்கிறேன்,” என்றார்.

“வள்ளி, அவளை நம்ம பாலா அண்ணா பார்த்துக்கறார்னு சொல்லியிருக்கார்,” என்று சொன்னதும், ‘பாலா’ என்ற பெயரை கேட்டவுடன் ஒரு நொடி திகைத்தவர், உடனே உணர்வுகளை அடக்கி, “சரி மூர்த்தி, மதுவுக்கு இதில் முழு சம்மதம் இருந்தா எனக்கும் சம்மதம்,” என்றார்.

மரகதவள்ளிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சித்ராவுக்கு எப்போதும் கோபத்தை உண்டாக்கும்.

“எப்ப பார்த்தாலும் உனக்கு அவங்க அக்காதான் முக்கியமா?” என்று கேட்பார்.

“அக்கா வள்ளிக்கு யாரு இருக்கா? நாங்கதான் இருக்கோம். மதுமதி மேல அவர்களுக்கு ரொம்ப பாசம். அவளை அவளோட பொண்ணா பார்க்கிறா. அவளுக்காக ஏதாவது செய்யும்போது அவளிடம் சொல்லாம எப்படி செய்வது?” என்றார்.

“என்னவோ பண்ணு, நல்லது நடந்தா சரிதான்,” என்று சொல்லி சென்றாள் சித்ரா.

அப்போது வந்த பரிமளம், “என்னங்க, எப்பவும் போல அக்கா கோபிச்சிட்டாங்களா?” என்று கேட்டார்.

“ஆமாம்,” என்று புன்னகைத்தவர், “விடு… எல்லா வீடுகளிலும் இதெல்லாம் இருக்கும். சும்மா என்கிட்ட வம்புக்காக பேசுவா, ஆனா புரிஞ்சுக்குவா,” என்றார்.

இதற்கிடையில், வருணின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. தனது தோழி—இனி தன் அண்ணியாக வரப்போகிறாள் என்ற எண்ணமே அவனை உற்சாகப்படுத்தியது.

ஆனால், அந்த ரகசியத்தை அவன் மதுமதியிடம் சொல்ல விடாமல், மீனாட்சி அவனைத் தடுத்துவிட்டார்.

விஷயம் தெரிந்ததும் வசீகரனின் அத்தை, சொக்கலிங்கத்தின் தங்கை லலிதாவுக்கு மிகுந்த கோபம் வந்தது. தனது மகள் நித்யாவை பார்க்காமல், வெளியே சம்பந்தம் பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும், அவர் அண்ணனிடம் சண்டையிட வந்துவிட்டார். மீனாட்சி எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தார் எதுவானாலும் உன் அண்ணனிடம் பேசிக்கொள் என்று இருந்துவிட்டார். அவரால் என்ன செய்ய முடியும்?

நித்யாவைப் பற்றி கேட்டபோது, வசீகரன் முன்பே மறுத்திருந்தான். இப்போது அவனின் உண்மை நிலையும் தெரிந்ததால், லலிதாவை சமாளித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

“சும்மா சலம்பல் பண்ணாதே, லலிதா. வசீகரனுக்கு பிடிச்சிருக்கிறது. ஜாதகமும் பார்த்தோம், நல்லா பொருந்துது. அவனுக்கு பிடித்த பெண்ணைதான் கட்டி வைக்க முடியும். வாழப் போறவன் அவன். நித்யாவை தங்கச்சி மாதிரி நினைக்கிறான். அப்படியிருக்க, எப்படி கட்டிக்க சொல்லுவது?” என்றார்.

“சும்மா காரணம் சொல்லாதீங்க அண்ணி. உங்களுக்கு ஏற்கனவே என்னைப் பிடிக்காது. அதனால தான் என் பொண்ணை வேண்டாம்னு சொல்றீங்க. உங்களைப் பற்றி எனக்கு தெரியாது என்று நினைக்காதீங்க. நான் இவரை கல்யாணம் பண்ணியதே உங்களுக்கு பிடிக்கல,” என்று பாலமுருகனை காட்டி என்னென்னவோ பேச ,

மனோபாலமுருகன் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார். ‘இவளை எப்போதும் திருத்த முடியாது’ என்ற எண்ணமே அவரை ஆட்கொண்டது.

“கண்டதையும் பேசாதே, லலிதா. ஏன் தேவையில்லாம பேசற? என்றார் மீனாட்சி. இதுல வசீகரனுக்கும் விருப்பம் இருக்கணும். இது என் முடிவு இல்ல. இதை முதல்ல புரிஞ்சுக்க,” என்றார் அவர் கடுமையாக.

“மீனு, அவ சொல்லுறத எதையும் பெருசா எடுத்துக்காத. நம்ம செல்ல கண்ணாவுக்குப் பிடிச்சது என்னவோ அதையே பண்ணுங்க,” என்றார். லலிதாவின் கணவர் மனோபாலமுருகன் . .அவருக்கு இதில் ஏதோ ஒரு இறுக்கத்திலிருந்து விடுபடும் உணர்வு. அவ்வளவு நிம்மதி. என்னுடைய மகள் மதுமதி பிரதிக்ஷா அவள் நன்றாக வாழவேண்டும் என்று அவ்வளவு ஆசை மனோ பாலமுருகனுக்கு. இருவரது பெயரின் முதலெழுத்தும், அவரது அன்னையின் பெயர் பிரகாதம்பாள் அதையும் சேர்த்து மரகதவள்ளி அவர்களது இளவரசிக்கு மதுமதி பிரதிக்ஷா என்று வைத்திருக்க அவரது உள்ளம் நிறைந்தது.

“உங்களுக்கும் தெரியும் தானே அண்ணா… அவனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க நானும் அவரும் எவ்வளவு சிரமப்பட்டோம். இப்பதான் சரின்னு சொல்லியிருக்கான். எங்க சூழ்நிலையை புரிஞ்சுக்காம அண்ணி இப்படிப் பேசுறாங்க. அவர் கேட்டா எவ்வளவு வருத்தப்படுவார்,” என்றார் மீனாட்சி.

“லலிதா, என்ன பண்ணிட்டு இருக்க?” என்று பாலமுருகன் கண்டனத்துடன் பார்த்தார்.

“நான் என்ன பண்ணினேன்? என் உரிமையை விட்டுட்டு இருக்க சொல்லுறீங்களா? என் பொண்ணுக்கு என்ன குறைன்னு வேற பக்கம் பார்க்கிறாங்க!” என்று மீண்டும் ஆரம்பித்தார்.

“இது நாம முடிவு பண்ணறது இல்ல. பசங்களுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கணும். பிடிச்சவங்களை விட்டுட்டு, பிடிக்காதவங்களோட வாழ்ற வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை என்னைவிட யாருக்கும் நன்றாக தெரியாது,” என்றார் பாலமுருகன்.

அந்த வார்த்தைகளில் லலிதாவின் முகம் கருத்தது.

“என்னை கல்யாணம் பண்ணி இப்ப என்ன குறைஞ்சு போனீங்க?” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

“என்ன பேச வைக்காதே, லலிதா,” என்றார் அவர் சற்று கோபமாக.

அவரது கோபத்தில் லலிதா அமைதியாகிவிட்டாலும், உள்ளுக்குள் இன்னும் கொந்தளித்துக் கொண்டிருந்தார்.

இதற்குப் பிறகு பேசுவதால் பயனில்லை என்று எண்ணிய மீனாட்சி,
“எனக்கு தெரியாது அண்ணி… நீங்க போய் உன் மருமகனிடம் பேசிக்கோங்க ,” என்று கூறி சென்றார். லலிதாவால் வசீகரனிடம் பேச முடியாது என்பதையும் அவர் நன்றாக அறிவார்.

அதன்பின், தன் அண்ணனை ஒரு கண்டன பார்வையில் பார்த்தார்—பெற்ற மகள்களின் முன்னால் இப்படி பேசிக்கொண்டிருக்கிறாய் என்று.

அவரது பார்வையை உணர்ந்தவரும் தலைகுனிந்தார்.

லலிதா மீனாட்சியின் நாத்தனார் மட்டுமல்ல; சொந்த அண்ணனின் மனைவியும் கூட. அவரின் குணம் மீனாட்சிக்கு எப்போதும் பிடிக்காது. பிடித்த முயலுக்கு காலே இல்லை என்பது போலவே நடந்து கொள்வார். தனது திருமணத்தையே பிடிவாதமாக செய்து கொண்டவர். அதனால் தான் தனது அண்ணனின் நிம்மதியை கெடுத்தவள் என்ற கோபமும் மீனாட்சிக்கு இருந்தது.

கிட்டத்தட்ட நித்யாவும் லலிதாவைப் போலவே இருந்ததால், நித்யாவை வசீகரனுக்கு கேக்க மீனாட்சிக்கு விருப்பம் இல்லை. ஆனால், அவரது இரண்டாவது மகள் வித்யா—அவள் தன் அண்ணனைப் போலவே இருப்பதால்—மீனாட்சிக்கு மிகவும் பிடித்தமானவள்.

ஆனால், வசீகரனுக்கும் வித்யாவுக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்ததால், அவளை தனது இளைய மகனுக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று மனதில் முடிவு செய்திருந்தார்.

அதனால் தான், வசீகரனுக்கு வெளியில் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்.
 
Top Bottom