அத்தியாயம் 2
வரவேற்பில் இருந்த பெண் கை காட்டிய அறைக்கு முன்பாக வந்து நின்றாள் சக்தி.
கதவின் மீது பதிக்கப்பட்டிருந்த சர்வேஸ்வரன், டிசைனர் டைரக்டர் என்ற எழுத்துக்களின் மீது கவனத்தை செலுத்தியவள் மனதுக்குள் “ கம்பெனி ஃபவுண்டரோட போர்த் ஜெனரேஷன்…” என்ற எண்ணம் தோன்றிட, “யாராயிருந்தா உனக்கு என்ன? உன்னோட வேலையை ஒழுங்கா பாரு.” என்று அறிவுரை வழங்கியது மூளை.
“மே ஐ கம்மின் சார்…” என்று கேட்க, “எஸ்…” என்ற ஆண் குரலில் கதவினை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
மேஜை மீதே இருந்த மடிக்கணினியில் தன் கண்களை பதித்திருந்த சர்வேஸ்வரன் நிமிர்ந்து அவளைப் பார்த்து புன்னகை செய்ய தானாக விரிந்தது அவளது இதழ்களும்.
“குட்மார்னிங் சார்…” என்று அவள் வாழ்த்துச் சொல்ல,
“குட் டே சக்தி…” என்று பதிலுக்கு அவளை வாழ்த்தியவன்,
“கால் மீ சர்வா…” என்று அதே சிரிப்போடு சொல்ல சிறு வியப்பு அவள் கண்களில்.
அந்த வியப்புக்கு காரணம் இல்லாமல் இல்லை. சர்வேஸ்வரன்… ஈஸ்வர் பில்டர்ஸ் குடும்பத்தின் இளைய மகன். நான்கு தலைமுறைகளாக தொழிலில் கொடி கட்டி பறக்கும் ஒரு குடும்பத்தின் வாரிசு இத்தனை இயல்பாகவும் நட்பாகவும் இருக்க முடியுமா என்ற எண்ணமே அவளுக்குள் வியப்பினை கொடுத்திருக்க, சற்றே விரிந்தது அவளது கண்கள்.
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், “உங்க கண்கள் ரொம்ப அழகா இருக்கு.” என்றும் சொல்லி வைக்க, சற்றே சுருங்கி விரிந்தன அவளது புருவங்கள்.
“அதைவிட உங்களோட இந்த டிசைன் ரொம்ப அழகா இருக்கு.” என்று அவன் புறமாக இருந்த மடிக்கணினியை அவள் புறமாக திருப்ப, நொடியில் அதன் மீது பதிந்து விலகிய அவளது பார்வை, மீண்டும் அவன் முகத்தில் நிலைத்தது.
“என்ன சக்தி கண்ணு நல்லா இருக்குன்னு சொன்னாலும், இந்த டிசைன் நல்லா இருக்குன்னு சொன்னாலும் ஒரே ரியாக்ஷன் கொடுக்குறீங்க?” விரிந்த புன்னகையோடு சர்வேஸ் கேட்க,
“என்ன சொல்லணும் எதிர்பார்க்கிறீங்க?” அசையாத விழிகளோடு அவள் கேட்டாள்.
“ஜஸ்ட் தேங்க்ஸ் சொல்லலாமே… அதுல தப்பும் கிடையாதே சக்தி…” சர்வேஷ் சொல்ல,
தேங்க்ஸ் சொல்லனுமா? இப்போ நான் தேங்க்ஸ் சொன்னா அந்த தேங்க்ஸ எதுக்கு நீங்க எடுத்துப்பீங்க சர்வேஸ்?” சக்தி பதில் கேள்வி கேட்க அவன் கண்கள் இன்னும் அதிகமாய் சிரித்தது.
“நீங்க ரெண்டு விஷயம் சொல்லி இருக்கீங்க. அந்த ரெண்டு விஷயத்துக்கும் நான் பொறுப்பு இல்லன்னும் போது எதுக்கு நான் தேங்க்ஸ் சொல்ல?” என்னவோ அவனோடு வார்த்தையாட இயல்பாய் வந்தது சக்திக்கு.
“புரியல…” சர்வேஷ் கேட்க,
“கண்ணு ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னீங்க லென்ஸ் எதுவும் நான் யூஸ் பண்ணல பொறந்ததிலிருந்து இப்படியே தான் இருக்கு பை பரத் வந்த ஒரு விஷயத்துக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?” என்று அவள் கேட்க,
“சரி…” என்று சிறு சிரிப்போடு தலையை அசைத்தவன், “இந்த டிசைன் நீங்க பண்ணது தானே…” என்று கேட்க,
“இந்த கர்வ் நான் போடல… இந்த பேஸ் லைன் நான் போடல… யாரோ கரெக்சன் பண்ணி இருக்காங்க… அப்போ இந்த டிசைன் நல்லா இருக்கு நீங்க சொன்னா இது எப்படி எனக்கான பாராட்டுதலா இருக்கும்?” என்று இரு இடங்களை காட்டி அவள் சொல்ல,
“குட்… பிராக்சன் ஆஃப் செகண்ட்லே பார்த்து கரெக்ஷன் சொல்லிட்டீங்க…” சிறு வியப்போடு அவன் கேட்க,
“எத்தனை நாள் இதுக்காக நான் ஒர்க் பண்ணன்றது எனக்கு தெரியும். இட்ஸ் மை டிசைன்… அப்போ அதுல சேஞ்சஸ் வந்தா தெரியாம போகுமா?” என்று அவளும் பதில் கேள்வி கேட்க, சிறுமுறுவல் அவன் முகத்தில்.
“இன்ட்ரஸ்டிங்…” இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டவன்,
மடிக்கணினியில் அவள் செய்து அனுப்பி இருந்த வரைபடத்தினை திரையில் காட்டி என்ன அவள் புறமாக திரும்பியவன், “எலிவேஷன்ல இப்படி ஒரு கர்வ் யாரும் அட்டென்ட் பண்ண மாட்டாங்க… டூ ரிஸ்கி. வெரி போல்ட் அட்டெம்ப்ட்…” என்று அவள் வரைந்திருந்த ஒரு வளைவினை காட்டி அவன் சொல்ல,
“ஆர்க்கிடெக்ல ரொம்ப சேஃப்டி மோடுல பண்ணா போரிங்கா இருக்கும்… ட்ரை சம்திங் நியூ…” என்றாள் அவளும் திடமாக.
“குட் பாயிண்ட்…” என்று சொன்னவன், சில நிமிடங்கள் யோசித்தான்.
சுழல் நாற்காலியில் இருந்து எழுந்தவன் அந்த அறையின் ஒரு பக்கத்தில் பாதி வரையிலும் போடப்பட்டு இருந்த கண்ணாடி ஜன்னல் அருகே சென்று நின்றான்.
முதல் மாடியில் இருந்த அவன் அறையில் இருந்து பார்ப்பதற்கு அந்த அலுவலகத்தின் வெளிப்புறம் அந்தக் கண்ணாடி ஜன்னலில் வழியாக மிக அழகாக தெரிந்தது.
நீண்டு நெடிய வளர்ந்திருந்த மரங்களும் தரை தெரியாத அளவு மலர்ந்திருந்த மலர்களும் மனதிற்குள் ஒரு அமைதியை தர,
அவளை திரும்பி பார்த்தவன், “இந்த அப்பார்ட்மெண்ட் ப்ராஜெக்ட் நமக்கு ரொம்ப முக்கியம் சக்தி.” என்றால் அமைதியான குரலில்.
அப்ப மத்த ப்ராஜெக்ட் எல்லாம் முக்கியம் இல்லையா என்று கேட்ட மனதின் குரலை தட்டி அடக்கியவள் அமைதியாக அவனைப் பார்த்தாள்.
“பிரம் டுடே இந்த ப்ராஜெக்ட்ல சக்தியும் இருக்காங்க…” என்று சொல்ல சிறு ஆச்சரியம் அவள் விழிகளில்.
“அண்டர் யூ?” தன்னையும் மீறி வார்த்தைகள் அவள் இதழ்களில் இருந்து வந்துவிட,
“ஒய் நாட்?” என்றான் சிறு சிரிப்போடு முழுவதுமாக திரும்பி அவளைப் பார்த்து.
“சீனியர் ஆர்கிடெக்ட்டா இன்னைக்கு தான் ஜாயின் பண்றேன். இன்னும் சீஃப் ஆர்கிடெக்ட் மிஸ்டர் பலராமன் மீட் பண்ணல…” அவள் குரலில் சிறு தயக்கம் இருந்ததோ என்னவோ…
அவன் பதில் சொல்வதற்கு முன்பாக அந்த அறையின் கதவு திறந்தது.
அனுமதி கேட்காமல் கதவைத் திறப்பது யார் என்பது போல சக்தி பார்க்க, தன் அறைக்கதவை அனுமதியில்லாமல் திறப்பது யார் என்பதை உணர்ந்தவனாக முகம் மலர்ந்து பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் சர்வேஸ்வரன்.
“பர்ஃபெக்ட் டைமிங்…” இதழ்கள் அசைய விரிந்த புன்னகை சர்வேஸ்வரனின் கண்களிலும் இதழ்களிலும்.
திரும்பிப் பார்த்த சக்தி தன்னையும் அறியாமல் எழுந்து நின்றிருந்தாள் இருக்கையில் இருந்து.
அந்த அறையின் வாசலை அடைத்து நின்று கொண்டிருந்தான் ஜெகதீஸ்வரன். ஈஸ்வர் பில்டர்ஸ் குழுமத்தின் அசுர வளர்ச்சிக்கு அஸ்திவாரம் இட்டவன்.
நான்காவது தலைமுறையின் முதல் வாரிசு. இளம் தொழில் அதிபர் பரிசுகளை சமீப காலமாக தொடர்ந்து பெற்றுக் கொண்டிருப்பவன்.
அழுத்தமும் ஆளுமையும் தன் முழு உயரத்திற்கும் கொண்டவனாக அவன் நிலையே எவரையும் எழுந்து நின்று மரியாதை கொடுக்க சொல்லும் வண்ணம் இருந்தது.
சக்தியிடமும் அவனது ஆரா வேலை செய்திருக்க எழுந்து நின்று விட்டாள் பெண்.
எழுந்து நின்றவளையும் அவளுக்கு பின்பாக முகம் முழுவதும் மலர்ந்து சிரித்தபடி நின்றிருந்த சர்வேஸ்வரனையும் அழுத்தமாக பார்த்தபடி உள்ளே வந்த ஜெகதீஸ்வரனிடம்,
“அண்ணா சக்தி…” என்று அவள் புறமாக கையை நீட்டி அறிமுகம் செய்து வைத்தவன்,
இந்த ப்ராஜெக்ட் ல புதுசா ஜாயின் பண்ணி இருக்கேன் சீனியர் ஆர்கிடெக்ட். என்றும் சொல்லி அவன் புறமாக மடிக்கணினியை திருப்பி வைக்க,
சில கணங்கள் அதில் பார்வையை நிலைக்க விட்ட ஜகதீஷ்வரன், “இன்ட்ரஸ்டிங்…” என்றான் இதழ் பிரியாமல்.
“பட் சேஞ்சஸ்?” கேள்வியாக நிறுத்தி சர்வேஸ்வரனை அவன் பார்க்க, சக்தியின் புறமாக கண்களை காட்டினான் சர்வேஸ்வரன்.
மடிக்கணினி திரையில் அவள் வரைந்திருந்த வளைவுகளைக் காட்டி, “இந்த கர்வ்ஸ்…” என்று கேட்க,
“There are 360 degrees, so why stick to one?” – Zaha Hadid (பல வழிகள் இருக்கும்போது ஒரே வழியில் மட்டும் சிந்திக்க வேண்டாம்.)” என்று அவள் சொல்ல, சட்டென்று திரும்பி அவன் பார்வை அழுத்தமாக நிலைத்தது அவள் மீது.
“இன்ட்ரஸ்டிங்!” சற்று சத்தமாகவே அவளுக்கும் கேட்கும் வண்ணம் சொன்னவன் அவளை ஆழ்ந்து பார்க்க, நேருக்கு நேராக அவன் விழிகளை எதிர்கொண்டது அவள் விழிகள்.
“ஆர்க்கிடெக்சர் ரொம்ப சேஃப் மோட்ல இருந்தா போரிங்கா இருக்கும் சார்.” என்றும் சொன்னாள் தெளிவாக.
அவள் சொல்லியதில் சற்று சத்தமாகவே சிரித்தான் சர்வேஸ்வரன். அவன் சிரிப்புச் சட்டத்தில் சத்தத்தில் அவன் புறமாக திரும்பிய இருவரின் பார்வையையும் எதிர்கொண்டவன்,
“சேம் டயலாக் அண்ணா… இப்பதான் என்கிட்ட சொன்னாங்க…” என்று சொல்ல அவன் சிரிப்பு ஜெகதீஸ்வரனின் இதழ்களிலும் பரவியது.
“குட்…” என்றவன் மீண்டும் மடிக்கணினியை பார்வையை பதித்து விட்டு அவள் புறமாக திரும்பியவன்,
“லெட் ஸீ ஹொவ் வெல் யூ ப்ரூவ் இட்…” என்று சொல்லிவிட்டு சர்வேஸ்வரன் புறமாக திரும்பி தலையசைத்து கிளம்பியவன் அரை கதவு வரை சென்று திரும்பி அவள் விழிகளோடு தன் பார்வையைப் பதித்து,
“வெல்கம் டூ ஈஸ்வர்ஸ் வேர்ல்ட்” என்று சொல்லிவிட்டு செல்ல, ஆனானப்பட்ட சர்வேஸ்வரன் வாயே மூடிக்கொண்டது சில நிமிடங்கள்.
அவனது சில நிமிட மௌனம் பல நிமிடங்களாய் நீடித்தது அந்த அறைக்குள்.
அவன் சொல்லியது வித்தியாசமாக தெரிந்தாலும் ஆழ்ந்து யோசிக்க விளையவில்லை மங்கையின் மனது. அடுத்து என்பதாக அவள் மனம் சென்று விட அதைச் சொல்ல வேண்டியவனோ ஆழ்ந்த மௌனத்தில்.
அவள் வேண்டாத அந்த மௌனத்தை சர்வேஸ்வரனை கலைத்தான் சிறு சிரிப்பினால்.
மீண்டும் தனது இருக்கையில் வந்து அமர்ந்த சர்வேஸ்வரன் இருமுறை தனது சுழல் நாற்காலியில் இருபுறமும் அசைந்தாடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,
“கங்கிராட்ஸ் சக்தி.” என்றான் அவளிடம்.
“எதுக்கு?” என்பதாக அவள் கேட்க,
“த கிரேட் ஜெகதீஸ்வரன் ஒரு டிசைனை பார்த்து பாராட்றது எல்லாம் பெரிய விஷயம். ஆனா ஒரு டெசிஷன் எடுத்தா ஆண்டவனே இறங்கி வந்து சொன்னாலும் சேன்ஜ் மாட்டான். அப்படிப்பட்டவன் ரெண்டு நாள் யோசிச்சு கரெக்ஷன் பண்ணுன ப்ராஜெக்ட்ட ரெண்டே நிமிஷத்துல ரிஜெக்ட் பண்ணிட்டு ஒரிஜினல் ப்ராஜெக்ட் அக்சப்ட் பண்றது எல்லாம் ஆயிரம் தடவை கிள்ளி பார்த்தாலும் கனவு இல்லன்னு நம்ப முடியல… இதை எப்படி நான் உங்ககிட்ட சொல்ல முடியும் சக்தி… அதைவிட வெல்கம் டு ஈஸ்வர்ஸ் வேர்ல்ட்டாம்… இவன் சீனியர் ஆர்க்கிடெக்ட் கிட்ட பேசுறதே பெரிய விஷயம். இதுல வெல்கம் வேற பண்ணி இருக்கான்… இத்தனை விஷயம் நடந்தா கங்கிராஜுலேசன் சொல்லாம வேற என்ன சொல்ல முடியும்? ஆனா இதையெல்லாம் எப்படி நான் உங்ககிட்ட சொல்ல முடியும்? நானே ஷாக் ஆயிட்டேன்… இதுல நீங்க வேற கேள்வி கேக்குறீங்க… என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்று மனதுக்குள் குமுறியவன்,
“அண்ணா ஒரு டிசைன் பார்த்து இன்ட்ரஸ்டிங் அப்படின்னு சொல்றது எல்லாம் பெரிய விஷயம் அதனால தான் சொன்னேன். கங்க்ராஜுலேஷன்ஸ்…” என்று சொல்ல அவன் முகத்தில் தோன்றிய புன்னகை அசாதாரணமாக இருந்தது.
அவன் அமைதியாக நின்றதையும் மனதோடு பேசிய நேரத்தில் அசைந்தாடிய கண்களையும், பின்னர் சொல்ல வேண்டுமே என்பதற்காக சொல்லிய வார்த்தைகளையும் கவனித்துக் கொண்டிருந்த சக்திக்கு ஒன்றும் புரியவில்லை.
மனதோடு தோள்களைக் குலுக்கிக் கொண்டவள், “தேங்க்யூ…” என்று சொல்ல,
“சொல்லிட்டீங்க…” என்றான் சட்டென்று தோன்றிய மலர்ந்த புன்னகையோடு.
“ம்ம்ஹூம்… இந்த தேங்க்ஸ் நீங்க இப்ப சொன்ன கங்கிராஜுலேசன்காக மட்டும் தான் சர்வேஸ்…” என்று சொல்லி இருபுறமும் தலையசைத்து சிரித்தவளைக் கண்டவன்,
“வெல்கம் டு தி ப்ராஜெக்ட் சக்தி…” என்றான் வரவேற்பாக.
உடன்பிறப்புகளின் வரவேற்பில் உள்ளம் குளிர்ந்தவளின் வரும் காலம் இது நாள் வரை அவள் காணாத வசந்தத்தை கொடுக்குமா? வருத்தத்தை பரிசளிக்குமா?