அத்தியாயம் 29
அந்த அகன்ற தேக்கு மரக் கதவிற்கு முன்பாக நின்ற சக்திக்கு, இத்தனை நேரம் மனதை ஆக்கிரமித்திருந்த யோசனைகள் அனைத்தும் ஒரு நொடியில் பறந்தோடி போனது.
நேற்றைய மாலை அவளது மனதை புரட்டிப் போட்டிருந்தாலும், இரவு கிடைத்த தெளிவு இன்று அவள் முகத்தில் புதிதாய் ஒரு ஒளியை பூசியிருந்தது.
காலையில் எழுந்ததும் வந்த ஜெகதீஸ்வரனின் குறுஞ்செய்தி மட்டும் தான் அவளை சற்றே குழப்பி இருந்தது.
"ஆபீஸ் போக வேண்டாம். வீட்டுக்கு வா."
அவ்வளவுதான்.
எதற்கு?
ஏன்?
என்று எத்தனை முறை யோசித்தாலும் பதில் கிடைக்கவில்லை.
அந்த கேள்விகளோடு தான் அவள் இங்கு வந்திருந்தாள்.
ஆனால்...
அந்த வீட்டின் வாசலில் நின்ற நொடி, எல்லா கேள்விகளும் மறந்து போனது.
அவள் பார்வை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது அந்த பிரம்மாண்டமான தேக்கு மரக் கதவு.
அதன் மேல் செதுக்கப்பட்டிருந்த நுணுக்கமான வேலைப்பாடுகளை பார்த்தவளுக்கு, சில நொடிகள் கண்களை விலக்கவே முடியவில்லை.
வாயில் காப்பாளரின் அறை அருகே அவள் செல்ல, யார் என்று விசாரித்துவிட்டு அவளுக்கான கதவினை திறந்து விட்டார் மனிதர்.
ரசிக மனம் கொண்ட பெண்ணை வேறு எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் மொத்தமாய் தனக்குள் ஈர்த்துக் கொண்டது அந்த ஈஸ்வர் இல்லம், தற்போதைய அந்த வீட்டின் இளவரசனை போல.
காலங்கள் கடந்து நிற்கும் அந்த இல்லத்தின் ஒவ்வொரு பகுதியும் அவளை ஆகர்ஷித்தது.
அழகிய வேலைப்பாடுகள் அமைந்த மரத்தூண்களும் அவை தாங்கி நின்ற கூரைகளும் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது தெரிந்த பரந்த அந்த முற்றமும் அதன் நடுவே இருந்த துளசி மாடமும் கண்ணை நிறைத்தது.
பசுமை சூழ்ந்த அழகிய வனத்திற்கு நடுவில் கட்டப்பட்ட அரண்மனை போல கம்பீரமாக வீற்றிருந்தது அந்த இல்லம்.
பலவகையான பூக்கள் மற்றும் பழ மரங்களின் வாசம் அவள் நாசியை நிறைக்க அதில் கரைந்து போன சக்தி வந்த வேலையை மறந்துவிட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.
தன் அறையில் இருந்து அவள் வருகையை பார்த்த சர்வேஸ்வரன் வேகமாக இறங்கி கீழே வந்தான். அவனுக்கு முன்பாக நின்று இருந்தாள் மகாலட்சுமி.
“போட்டோல பார்த்ததை விட செமையா இருக்காங்க…” மகாலட்சுமி சர்வேஸ்வரனிடம் சொல்ல,
“மனசு இதைவிட ரொம்ப அழகு… செம்ம பிரைனி… டிசைன்ஸ் எல்லாம் பார்த்தேன்னு வச்சுக்கயேன் அப்படி இருக்கும்…
பிரசன்டேஷன் பண்ண ஆரம்பிச்சா கிளையன்ட் ஒரு க்வெஸ்டின் கேட்க மாட்டாங்க. அந்த அளவுக்கு பிரீஃபா இருக்கும்…” என்று புகழ் பாடினான் சர்வேஸ்வரன்.
“அப்போ லேடி ஜெகதீஸ்வரன்னு சொல்ற?” மகாலட்சுமி ஒரே வார்த்தையில் முடித்து விட,
“அப்படியே தான்…” என்று அவர்கள் தங்களுக்குள் வழக்காடிக் கொண்டிருக்க, புவனேஸ்வரியும் வந்துவிட்டார்.
சக்தியும் அதே நேரத்தில் அவர்களை நெருங்கி இருக்க, “உள்ள வாங்க..” என்று அழைத்திருந்தாள் மகாலட்சுமி.
சக்தி புவனேஸ்வரியைப் பார்க்க, “உள்ள வாம்மா…” என்று அழைத்தவர் முன்னே நடக்க,
“வெல்கம் ஹோம் சக்தி…” என்று ஆர்ப்பாட்டமாய் வரவேற்றான் சர்வேஸ்வரன். அப்பொழுதும் மகாலக்ஷ்மி அவனை முறைத்து பார்க்க, அசடு வழிய சிரித்து வைத்தான்.
“என்ன ஆச்சு?” மெல்லிய குரலில் சக்தி கேட்க,
“ஒன்னும் இல்லையே… ஒன்னுமே இல்லையே…” என்று கையை விரித்தவன் அவர்களோடு கூட நடந்தபடி,
“எதுக்கு இங்க வந்திருக்கன்னு தெரியுமா?” மெல்லிய குரலில் கேட்டான் சர்வேஸ்வரன்.
ஏனோ அவனுக்கு தெரிந்து இருந்தது சக்திக்கு தான் இங்கே அழைக்கப்பட்டதற்கான காரணம் நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்பது. அதனாலயே அவன் கேட்டு வைத்தான்.
“நெஜமா தெரியாது ஷர்வா… காலைல ஆபீஸ் கிளம்பிட்டு இருந்தேன். உங்க அண்ணா தான் மெசேஜ் பண்ணாரு, ஆபீஸ் போக வேணாம் வீட்டுக்கு வான்னு…
உனக்கு எதுவும் தெரியுமா? ஒருவேளை வீட்ல எதும் ஆல்ட்ரேஷன் பண்ணனுமா?” என்று கேட்டவளை விழி விரித்து பார்த்து வைத்தனர் ஜெகதீஸ்வரனோடு உடன் பிறந்தவர்கள்.
“சூப்பர்…” மகாலட்சுமி சொல்ல,
“சிறப்பு…” என்றான் சர்வேஸ்வரன்.
மூவரும் பேசியபடியே வரவேற்பறை வந்து சேர, சக்தியால் கண்களைத் தட்டி விழிக்க முடியவில்லை அதன் அழகை பார்த்து.
“இப்போ தெரியுது… ஈஸ்வர் பில்டர்ஸ் எப்படி இவ்வளவு பெரிய ஆர்கனைசேஷன்னா இருக்குன்னு… எப்படியும் இந்த வீடு கட்டி நூறு வருஷத்துக்கு மேல இருக்கும் இல்ல… என்ன மாதிரி கன்ஸ்ட்ரக்ஸன்?! எவ்வளவு வேலைப்பாடு?! அம்மாடி!” அவள் கண்கள் ரசனையாய் வருடியது அந்த இல்லத்தை.
அவள் இந்த இல்லத்தின் வாசல் முன்பு வந்த நொடியிலிருந்து வீட்டின் உள்ளே நுழைந்து நின்று கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை அவளையே கவனித்துக் கொண்டிருந்தது வரலட்சுமியின் விழிகள்.
வரவேற்பறையில் அவள் கண்களுக்கு தென்படாத வகையில் அமர்ந்தபடி அவளையே அவர் பார்த்துக் கொண்டிருக்க அவள் விழிகளோ ரசனையாய் சுற்றி சுழன்றது.
அவள் நின்ற நிலைக்கு பின்புறமாக படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த ஜெகதீஸ்வரனின் அழுத்தமான காலடி சத்தத்தில் சட்டென்று திரும்பி பார்த்த அவளின் விழிகளில் தான் எத்தனை நேசம்?!
அதையும் குறித்துக்கொள்ள மறக்கவில்லை வரலட்சுமியின் விழிகள்.
“என்ன?” என்பதாக பார்வையால் சக்தி கேட்க,
“வா…” என்று அமர்த்தலாக தலையசைத்து நடந்து வந்த ஜெகதீஸ்வரனின் விழிகளிலும் தான் இத்தனை நாள் அவர் கண்டிராத மென்மை தெரிந்தது.
“பார்வையாலே பேசி முடிச்சிட்டீங்கன்னா கொஞ்சம் எங்களையும் திரும்பி பார்க்கலாம்…” எங்கோ பார்த்தபடி சர்வேஸ்வரன் சொல்ல, நெற்றியில் கைவைத்து மென்மையாக சிரித்தவள்,
“ஆபீஸ் வா… முக்கியமான விஷயம் இருக்கு. உன் கிட்ட சொல்லணும்…” என்றும் சொல்ல, மகாலட்சுமி அவளை பார்த்த பார்வையில் என்ன உணர்வு இருந்தது என்பதை சக்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சக்திக்கு அருகே வந்த ஜெகதீஸ்வரன் அவள் கைப்பற்றி அழைத்துக்கொண்டு வரலட்சுமி முன்பாக சென்று நின்றான்.
“பாட்டி…” ஒற்றை வார்த்தையில் அறிமுகம் செய்ய,
“குட் மார்னிங் மேம்…” என்றாள் மலர்ந்த முகத்தோடு.
பேரனின் முகத்தை பார்த்த வரலட்சுமிக்கு விளங்கியது, பேரன் எதைப் பற்றியும் அந்த பெண்ணிடம் சொல்லி அவளை எதற்கும் தயார்படுத்தி இருக்கவில்லை என்பது. மெச்சுதலாய் சிறு அசைவு அவர் விழிகளில்.
அதை இயல்பாக தாங்கிக் கொண்டது ஜெகதீஸ்வரன் விழிகள்.
‘நான் உங்க பேரன் பாட்டி…’ சொல்லாமல் சொல்லியதோ அவன் விழிகள்?!
“உட்காருமா…” என்று அவர் கை காட்ட சக்தி அமர்ந்தாள்.
அவளுக்கு அருகே ஜெகதீஸ்வரன் அமர, திரும்பி அவள் பார்த்த பார்வையில் தோள்களை குலுக்கினான் ஜெகதீஸ்வரன்.
சர்வேஸ்வரனும் மகாலட்சுமியும் எதிரில் இருந்த சோபாவில் அமர, புவனேஸ்வரியை பின் தொடர்ந்து வந்தார் லோகேஸ்வரன்.
அவர்கள் இருவரையும் கண்ட சக்தி மீண்டும் எழுந்து காலை வணக்கம் சொல்ல தலையசைத்து ஏற்றுக் கொண்டவர்கள் “உட்காருமா…” என்று சொல்லி அவர்களும் அமர்ந்தனர்.
“புவனா காபி?” வரலட்சுமி கேள்வியாய் நிறுத்த,
“விஷாலா எடுத்துட்டு வர்றா அத்தை…” என்று பதில் சொன்னார் புவனேஸ்வரி.
“சக்தி காபி குடிக்க மாட்டா…” ஜெகதீஸ்வரன் சொல்ல அனைவரின் பார்வையும் அவன் மீது பாய்ந்தது.
ஏதோ விளங்கியது போல இருந்தது சக்திக்கு. ஆனாலும் தெளிவாக தெரியவில்லை. அமைதியாக சுற்றி இருந்தவர் முகங்களை பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்.
“பேர் என்னமா?” வரலட்சுமி தன் கேள்விகளை தொடுக்க ஆரம்பிக்க, ஏன் என்று விளங்கியும் விளங்காமலும் பதில் சொல்ல ஆரம்பித்தாள் சக்தி.
“சக்தி மேம்…”
“என்ன படிச்சிருக்க?”
“பேச்சுலர் ஆஃப் ஆர்க்கிடெக்சர்…” அவள் சொல்ல,
“யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட்…” என்றான் சர்வேஸ்வரன். சின்ன குரல் என்றாலும் அங்கிருந்த அனைவருக்கும் கேட்டிருந்தது.
வரலட்சுமி திரும்பி அவனை பார்த்த பார்வையில் கப்சிப் என்று அவன் அமர, சிறு புன்னகை சக்தி மற்றும் ஜெகதீஸ்வரன் இதழ்களில்.
“இப்போ எதுக்கு இங்க வந்திருக்கன்னு உனக்கு தெரியுமா?” வரலட்சுமி கூர்மையாக பார்த்தபடி கேட்க,
“ஜெகன் வர சொன்னாங்க. வந்தேன்.” என்றாள் எந்தவித தயக்கமும் இன்றி.
“ஜெகன்?” மகாலட்சுமியும் சர்வேஸ்வரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மெல்லிய குரலில் சிரித்தபடி சொல்ல,
“அதுதான் மா எதுக்கு வர சொன்னாங்க ஜெகன்?” ஜெகன் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து வரலட்சுமி கேட்க,
“தெரியாது மேம்…” என்ற அவளின் குரலிலும் அதே அழுத்தம் இருந்தது.
“ஜெகதீஸ்வரனுக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துட்டு இருக்கோம்…” வரலட்சுமி அவளிடம் வார்த்தைகளை போட்டு வாங்க நினைக்க,
“அவர் ஆல்ரெடி பாத்துட்டாரே பாட்டி…” சுற்றி வளைக்காமல் முடித்திருந்தாள் சக்தி.
இத்தனை நேரம் மேடம் என்று அழைத்துக் கொண்டிருந்தவள், பாட்டி என்று அழைப்பை மாற்றியதிலேயே அவள் சொல்ல வருவதை உணர்ந்து கொண்ட வரலட்சுமியின் மனதிற்குள் சிறு பாராட்டு.
“யாரு மா நாங்க பாக்கலையே?”
“பாத்துகிட்ட தானே இருக்கீங்க பாட்டி… அதுக்காகத்தானே என்னை வர சொல்லி இருக்கீங்க…” அசராமல் கேட்டு வைத்தாள் சக்தி.
“சரி… புரிஞ்சது போல… சந்தோஷம். நான் சில கேள்விகள் கேட்டேன்… அவன் சொன்னான்… எனக்கு எல்லாமே தெரியும்னு… அப்படி அவனுக்கு என்ன தெரியும்?” தீர்க்கமான குரலில் வரலட்சுமி கேட்க,
“அவருக்கு தெரியாதது என் வாழ்க்கையில எதுவுமே இல்ல பாட்டி… அது எந்த அளவுக்குனா எனக்கு அப்பா அம்மா யாரும் இல்ல. சரியா சொல்லணும்னா யாருன்னு தெரியாதுன்ற வரைக்கும் தெரியும் பாட்டி…” அவருக்கும் மேலான தீர்க்கமான குரலில் பதில் சொன்னாள் சக்தி.
சில நிமிடங்கள் ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவிற்கு நிசப்தம் நிரப்பியது அந்த அறையை.
இருக்கையின் பின்னால் சாய்ந்து ஜெகதீஸ்வரன் கைகளை கட்டிக்கொண்டு கால் மேல் கால் போட்டு அமர, அந்த அதிர்வு அவர்களை அசைத்தது.
“அது உனக்கு கஷ்டமா இல்லையா?”
“சின்ன வயசுல இருந்துச்சு. வளரும்போது குறைஞ்சுச்சு. இப்போ இல்ல. யாரையும் நியாயம் தீர்க்க இந்த வாழ்க்கை இல்லன்னு புரிஞ்ச நிமிஷம் எல்லாம் மாறி போச்சு பாட்டி…
என்னோட பிறப்புக்கு நான் காரணம் இல்லை. ஆனா என்னோட வாழ்க்கைக்கு முழு காரணம் நான் மட்டும்தான்.
கடந்து போன காலத்துல இருந்து கத்துக்கணும். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கணும். அதுக்கு நிகழ்காலம் நிம்மதியா இருக்கணும்…
கடந்த காலத்தை பத்தியே யோசிச்சிட்டு இருந்தா எதிர்காலம் மாறப் போறதில்லை. நிகழ் காலம் சந்தோஷமா இருக்க போறதும் இல்லை எனக்கு…” மென்மையான குரல் என்றாலும் அதில் தெரிந்த தெளிவும் கம்பீரமும் அசாத்தியமானது.
என்னை எப்படி இந்த கேள்வி நீ கேட்கலாம் என்ற கோபமில்லை. இப்படி ஆகிவிட்டதே என் வாழ்க்கை என்று கழிவிரக்கமும் இல்லை.
இதுதான் நான். என் வாழ்க்கையை இப்படியே ஏற்றுக் கொள்கிறேன் என்ற மனப்பக்குவத்தோடு பேசிய அந்த சிறு பெண்ணை பார்த்த வரலட்சுமிக்குள் வியப்பு தோன்றியது உண்மைதான்.
அவ்வளவு தான். அதற்கு மேல் சக்தி யார் என்று தெரிந்து கொண்டே அவளது தாய் தகப்பன் பற்றி கேட்கவில்லை வரலட்சுமி. அவர் அறிந்து கொள்ள விரும்பியது அவள் மனநிலை என்ன என்பதை மட்டும் தான். தாய் தந்தை யார் என்று தெரியாது பெண் என்று சொல்லி அவளை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணம் அவருக்கு இல்லை. இத்தனை காலங்கள் வாழ்ந்த அவரது வாழ்க்கை முறை அப்படி அவரை யோசிக்கக்கூட விடவில்லை என்பதுதான் உண்மை.
சில நிமிட அமைதிக்குப் பிறகு, “உன்னோட எதிர்காலம்… லட்சியம் என்ன?” அவரையும் அறியாமல் கேள்வி வந்தது வரலட்சுமி இடமிருந்து.
ஏதோ அவர் உள் மனது சொல்லியது இவள் சாதாரண பெண் இல்லை என்று. இவளது லட்சியங்களும் ஆசைகளும் நிச்சயம் கற்பனைக்கும் எட்டாததாக இருக்கும் என்று மனிதர்களை படித்த அந்த வயதான பெண்மணிக்கு விளங்கியதோ என்னவோ கேள்வியாய் வந்தது…
“என்னோட சிவனுக்கு கோவில் கட்டணும். ராஜராஜ சோழன் கட்டின பெரிய கோவில் போல ராஜேந்திர சோழன் கட்டின கங்கைகொண்ட சோழபுரம் போல பாண்டிய மன்னன் கட்டின மீனாட்சி அம்மன் கோவில் போல கற்கோவில் கட்டணும்…” நொடியும் தாமதிக்காமல் வந்த அவளது பதிலில் கூடியிருந்த அனைவருமே பிரமிப்பின் உச்சத்திற்கு சென்றுவிட்டனர் என்று சொன்னால் மிகையாகாது.
அவள் சொன்ன விதத்திலேயே தெரிந்தது, இன்று நேற்று அல்ல நெடுங்காலமாய் அவள் மனதில் விதைக்கப்பட்டு விருட்சமாக வளர்ந்து இருக்கிற விஷயம் அது என்று.
பேச்சே எழவில்லை எவருக்கும்.
“உன்னால முடியுமா?” முதல்முறையாக வாய்திறந்து கேட்டார் லோகேஸ்வரன்.
“இன்னைக்கு நான் சாதாரண சக்தியா இருக்கலாம். ஆனா உங்க வயசு வரும் பொழுது நிச்சயமா ஈஸ்வர் பில்டர்ஸ் மாதிரி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க முடியும்கிற நம்பிக்கை இருக்கு. அப்படி நான் உருவாக்கின அடுத்த நாள் என்னோட லட்சியத்துக்கான வழியை கண்டிப்பா உருவாக்கிடுவேன்.” என்று அவள் சொன்ன வார்த்தைகளில் அவளது அசைக்க முடியாத நம்பிக்கை தெரிந்தது.
“ஜெகதீஸ்வரன வச்சு சொல்றியா மா?” வரலட்சுமி குறுக்கே வர,
“இல்ல பாட்டி. இது என்னோட 18 வயசுல வந்த கனவு பாட்டி. பிளஸ் டூல நான் எடுத்த மார்க்குக்கு டாக்டர் சீட் ரொம்ப ஈஸியா கிடைச்சது… அதையெல்லாம் வேணாம்னு சொல்லி ஆர்கிடெக்சர் படிச்சது இதுக்காகத்தான்.
என்னோட ஆம்பிஷன் வச்சு தான் என்னோட படிப்பே பாட்டி.
ஜெகன் என்னோட வாழ்க்கைக்குள்ள வந்து சரியா 11 மாசம் 15 நாள் தான் ஆகியிருக்கு.” என்று அவள் துல்லியமாக சொல்ல ஜெகதீஸ்வரனுக்கே ஆச்சரியம் தான்.
சில பல மணி நேரங்களுக்கு முன்பு தன் மார்பில் சாய்ந்து கதறி அழுத பெண்ணா இவள் என்று யோசிக்க வைத்து விட்டாள் சக்தி.
எத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டாலும் பெண்ணின் மனதை உணர்ந்த ஆண் மகன் இனிதான் உலகத்தில் பிறக்க வேண்டும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை…
ஊருக்கே ராணியாக ஆட்சி செய்தாலும் கொண்டவனிடம் மட்டும் தான் குழந்தையாகவும் குமரியாகவும் பெண்ணானவள் மாறிப் போவாள் என்பதை அவன் அறிந்திருக்க நியாயமும் இல்லை தான்.
“பொதுவா நான் கேள்விப்பட்டது வரைக்கும் ஆஸ்ரமத்துல வளர்ந்த குழந்தைங்க ஒரு நல்ல இடத்துக்கு வந்துட்டா ஆசிரமம் கட்டிக் கொடுக்கணும்.. அங்க நிறைய செய்யணும்… அப்படித்தானே சொல்லுவாங்க நீ சொல்றது புதுசா இருக்கே?” புவனா கேட்க,
“நானும் கட்டுவேன். ஆசிரமம் கட்டிக் கொடுக்கிறது என்னோட கடமை. ஆன பாட்டி கேட்டது உன்னோட ஆம்பிஷன் என்னன்னு தானே… அதுக்கு தான் பதில் சொன்னேன்…
கோவில் கட்றது என்னோட ஆத்ம திருப்திக்காக.
ஆசிரமம் கட்டுறது என்னோட கடமை. கடமையை என்னைக்கும் நான் தட்டி கழிச்சது இல்லை பாட்டி.
நான் பேசுறது எல்லாம் உங்களுக்கு வித்தியாசமா தெரியலாம். ஆனா இதுதான் நான்.
கண்டிப்பா ஆஸ்ரமம் கட்டுவேன். ஆனா அது அனாதைகளுக்கானதா இருக்காது…
அங்க வர போற குழந்தைகளுக்கு எல்லாம் அம்மாவா நான் இருக்கும்போது அவங்க எப்படி அனாதைகளாவாங்க?
உனக்கு அம்மா அப்பா யாருன்னு கேட்டா என்னை போல அவங்க தெரியாதுன்னு சொல்ல மாட்டாங்க. யாரும் இல்லன்னு சொல்லவும் கூடாது…
அது எவ்வளவு வலிக்கும்னு எனக்கு தெரியும்… தெரிஞ்சும் என் குழந்தைகளுக்கு அந்த வலியை நான் தரமாட்டேன்.
அவங்களுக்கு அம்மாவா நான் இருப்பேன். அப்பாவா என்னை கட்டிக்க போறவங்க இருப்பாங்க…” என்று அவள் சொல்ல அவள் கையை இறுகப் பற்றி கொண்டான் ஜெகதீஸ்வரன்.
அடுத்த கேள்விகள் கேட்க அங்கிருந்த யாருக்கும் வரவில்லை. ஒரு மாதிரி பிரமிப்பான நிலையில் இருந்தனர் என்று சொல்ல வேண்டும்.
வரலட்சுமி அமைதியாகி போக, “இன்னும் ஏதாவது கேட்கணுமா பாட்டி?” இத்தனை நேரங்களில் முதன் முறையாக வாயை திறந்தான் ஜெகதீஸ்வரன்.
“ஒருவேளை உங்களோட கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கல்லைன்னா?”
“ஒரு வேளைன்னு நீங்களே சொல்லிட்டீங்க பாட்டி…” என்றவள் மென்மையாக புன்னகைத்து,
“அப்படியே ஒரு வேளை சம்மதிக்காம போனாலும் காத்திருக்கிறோம்.” என்றாள் அதே மென்மையான குரலில்.
“அவனுக்கும் சேர்த்து பதில் சொல்ற…”
“அது அவர் எனக்கு கொடுத்த நம்பிக்கை பாட்டி… ஜெகன் உங்க பேரன் பாட்டி… வாக்கு தவற மாட்டாரு.” ஜெகதீஸ்வரனை பார்க்காமல் நம்பிக்கையான குரலில் அவள் சொல்ல, அழகிய புன்னகை அனைவரின் முகத்திலும்.
“அப்போ அவன விட மாட்ட?”
“விக்ரமாதித்தன் கழுத்து வேதாளம் பாட்டி. அவ்வளவு சீக்கிரம் விட முடியாது…”
“நல்லா பேசுற மா…”
“என்னோட செயல்களும் நல்லாவே இருக்கும் பாட்டி. நம்பலாம்…”
“உண்மைய சொன்னா நல்லா பேசுற மா...
ஆனா பேசுறதுக்கும் வாழுறதுக்கும் வித்தியாசம் இருக்கு.
நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்ன.
இப்போ நான் உன்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ண ஆரம்பிச்சிருக்கேன்.
அதுக்கு மேல காலம் தான் சொல்லணும்.”
என்று அவர் சொல்ல சக்தியின் முகத்திலும் அது பிரதிபலித்தது.
“உங்களுக்கு நம்பிக்கை வர்ற வரைக்கும் காத்திருக்கோம் பாட்டி… பார்த்த ஒரே நாள்ல நம்பிக்கை வரது கஷ்டம் தான். உங்க நிலைமையும் எனக்கு புரியுது. ஆனா கண்டிப்பா நம்பிக்கை வந்துவிடும். அதுல எனக்கு நம்பிக்கை இருக்கு. அதுவரைக்கும் வெயிட் பண்றோம்…” குறும்பு புன்னகையோடு அவள் சொல்ல, நெட்டி முறிக்க தோன்றியது புவனேஸ்வரிக்கு.
அது அவர் முகத்திலேயே தெரிய, “பாட்டியை தவிர ஆல் விக்கெட் அவுட்… இப்படியே இன்னும் அஞ்சு நிமிஷம் சக்தி பேசிட்டு இருந்தா அம்மா தர தரன்னு கைய புடிச்சு இழுத்துட்டு போயி பூஜை ரூம்ல வச்சு கல்யாணமே பண்ணி வச்சிடுவாங்க போல இருக்கு…” மகாலட்சுமி சொல்ல,
“அப்பா இப்படி சைலன்ட் ஆகி நான் பார்த்ததே கிடையாது… எப்படி பார்த்துகிட்டு இருக்காரு பாரேன் சக்திய…” என்றான் சர்வேஸ்வரன்.
“பிரசன்டேஷன் பத்தி நீ சொன்னது இப்போ தெளிவா புரியுது… ஒரு கேள்வி கேட்க முடிய மாட்டேங்குதே… பதில் அத்தனையும் நெத்தியடியா விழுகுது, ஆனா அதயும் அழகா சிரிச்சுக்கிட்டே கொடுக்கிறாங்க. அடிச்ச அடியோட வலி கூட அந்த சிரிப்புல காணாம போயிடுது…
நெஜமா சொல்லணும்னா வேற லெவல் அண்ணி… ஜெகதீஸ்வரன் அண்ணனோட மேல் வெர்ஷன்…
நாலு வார்த்தை பேசினாலும் நச்சுனு பேசுறாங்க… மேட் ஃபார் ஈச் அதர்…” என்றாள் மகாலட்சுமி.
எழுந்த வரலட்சுமி, “சாப்பிடு மா…” என்று சொல்ல,
“சாப்பிட்டு தான் பாட்டி வந்தேன்… ஆபீஸ் கிளம்பிட்டு இருந்தேன். அதனால இப்ப வேணாம் பாட்டி…” என்றாள் எந்தவித பாசாங்கும் இன்றி.
“இப்ப எங்க?” வரலட்சுமி கேள்வியாக ஜெகதீஸ்வரனை பார்க்க,
“ஆபீஸ் தான் போறோம் பாட்டி.” என்று வரலட்சுமி இடம் சொன்னவன்,
ஷர்வா…” என்று அழைக்க மூவரும் எழுந்தனர்.
“பார்த்து போய்ட்டு வாங்க…” புவனேஸ்வரி இன்முகமாக சொல்ல, புறப்பட்டனர் மூவரும்.
வாசல் வரை சென்றவள், தலையில் லேசாக தட்டிக் கொண்டு வேகமாக நடந்து வந்தாள் வரவேற்பறைக்கு.
என்ன என்பதாக அங்கிருந்து மூவரும் ஒன்றாக சேர்ந்து நின்று அவளை பார்க்க, “தாரணி பெரியவங்கள பாத்தா ஆசிர்வாதம் வாங்கணும்னு சொல்லி இருக்கா பாட்டி. மறந்துட்டேன்… என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.” சிறு தயக்க புன்னகையோடு சொல்லியவள் அவர்கள் கால்களில் பணிந்து எழ மொத்தமாய் நிறைந்து போனது ஜெகதீஸ்வரனை பெற்றவர்களுக்கு.
‘தெரியாத விஷயங்களை சொல்லிக் கொடுத்தால் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ள பெண்’ என்று லோகேஸ்வரன் எண்ண,
தன் பிள்ளையோடு அவள் சேர்ந்து இருக்கும் போதான ஜோடி பொருத்தமே கண்ணையும் மனதையும் நிறைத்தது புவனேஸ்வரிக்கு
‘இப்படி எத்தனை விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறது?’ என்ற யோசனை வந்து நின்றாலும், அந்த கள்ளம் கபடம் இல்லாத பிள்ளை முகத்தை சந்தேகிக்க தோன்றவில்லை அந்த முதியவருக்கு.
“பாத்து கவனமா போய்ட்டு வாங்க…” விடை கொடுத்தார் அவளுக்கு.
“சரிங்க பாட்டி…” என்று அவருக்கு பதில் சொல்லி தலையசைத்தவள் ஜெகதீஸ்வரன் சர்வேஸ்வரன் நின்ற இடத்தை நோக்கி சென்றாள்.
“பாட்டி கிட்ட தெளிவா பாட்டின்னு கூப்பிட்டு பேசுற… எங்க அப்பா அம்மாவ மட்டும் எதுவும் சொல்லலையே…” சர்வேஸ்வரன் சந்தேகமாக கேட்பதும்,
“வயசுல பெரியவங்கள பாட்டின்னு யார் வேணாலும் சொல்லலாம். ஆனா அத்தை மாமான்னு உரிமை இருக்கிறவங்க மட்டும் தான் கூப்பிட முடியும். அந்த உரிமையை பாட்டி இன்னும் எனக்கு கொடுக்கலையே… பாட்டிய மீறி உங்களோட அப்பா அம்மாவாலையும் பேச முடியாதே… பேசவும் கூடாது.
அப்படி இருக்கும்போது நான் அத்தை மாமான்னு கூப்பிடுறது அவங்களுக்கு சங்கடமாயிடக் கூடாதுல்ல. அதுக்காக தான்…
பாட்டி மட்டும் உம்ன்னு சொல்லட்டும்… அப்புறம் பாரு எப்படி கூப்பிடுறேன்னு…” என்று கண்களைச் சிமிட்டியபடி மெல்லிய குரலில் அவள் பதில் சொல்வதும் தெளிவாக கேட்டது அங்கிருந்த மூவருக்கும்.
“கடைசில நீ எனக்கு அண்ணியா?” சர்வேஸ்வரன் கேட்க,
“அப்போ முதல்ல உனக்கு எத்தனை அண்ணி இருந்தாங்க ஷர்வா?” என்று அவனிடம் கேட்டவள்,
“ஜெகன் சொல்லவே இல்ல…” என்று ஜெகதீஸ்வரனையும் விட்டு வைக்கவில்லை.
“அதான பார்த்தேன் இவ்வளவு நேரம் ரொம்ப தெளிவா பேசிட்டு இருந்தாளே… இன்னும் ஆரம்பிக்கலையேன்னு… இந்த ஆரம்பிச்சிட்டா…” என்று சர்வேஸ்வரன் சொல்ல,
“ஈஸிஆர் ப்ராஜெக்ட் என்ன ஆச்சு?” இடையிட்டது ஜெகதீஸ்வரனின் குரல்.
“சக்தி தான் டிசைன்.” அட்டென்ஷன் மோடில் வந்து சர்வேஸ்வரன் பதில் சொல்ல இதழ்களுக்குள் வந்த சிரிப்பை அடக்கி கொண்ட சக்தி,
“95% முடிஞ்சது. ஃப்ரண்ட்ல அவங்க கேட்டிருந்த ஃப்வுண்டைன் அன்ட் கார்டன் டிசைன்ல மட்டும் சின்ன கரெக்ஷன் இருக்கு… நீங்க பாத்துட்டா பைனல் பண்ணிடலாம்.” என்றாள் தெளிவாக.
வாசலைக் கடக்கும் அந்த சொற்ப நிமிடங்களுக்கு உள்ளாகவே அவர்கள் மூவருக்குள்ளும் நடந்த சம்பாஷனையைக் கேட்டு வந்த சிரிப்பினை அடக்க முடியாமல் அறை நோக்கி ஓடினாள் மகாலட்சுமி.
பாசாங்கு இல்லாத பெண்ணின் பேச்சு பிடித்திருந்தாலும் வரலட்சுமி சொல்லியது போலவே பிடித்தம் மட்டுமே வாழ்க்கைக்கு போதுமானது இல்லை அல்லவா?
பழமையில் ஊறிப் போயிருந்த அவருக்கு சிலவற்றை ஏற்றுக்கொள்ள காலம் தேவைப்பட்டது.