கள்வன் 4
“இந்தாடி நிதா.. நான் சொல்றதை ஒழுங்கா காதுல வாங்கி மண்டையில ஏத்திக்கோ..! நாளைக்கே கிளம்பி ஊருக்கு வந்திடு ஆமா சொல்லிட்டேன். நாளன்னைக்கு உன் மருமகளுக்கு நம்ம குலதெய்வக் கோவில வைச்சு காது குத்துறோம். உன் கம்பெனில எந்தெந்த ஆபீஸர் கிட்ட லெட்டர் போடணுமோ போட்டுடு.. மெயில் அனுப்பணுமா அனுப்பிடு..! சீக்கிரமே ஊர் வந்து சேரு டி. லேட் பண்ணுன அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று நளினி அத்தனை தரம் போனில் அவளை அழைத்து சொன்னது போக, வாய்ஸ் மெசேஜிலும் அத்தனை முறை பதிவேற்றி அனுப்பி இருந்தார் நிதன்யாவிற்கு.
மதியம் கேண்டினில் உணவு சாப்பிட்டிருக்கும் பொழுது டொங்கு டொங்கு என்று வந்து விழுந்த அம்மாவின் வாய்ஸ் மெசேஜில் பதறி, “ஏதோ முக்கியமான விஷயமா இருக்குமோ? அம்மா இத்தனை தடவை வாய்ஸ் மெசேஜ் போடுறாங்க?” என்று அவள் வாய் விட்டு யோசிக்க.
“கேளு.. கேளு.. சீக்கிரம் கேளு. ஒரு வேளை உனக்கு வீட்டுல மாப்பிள்ளை ஏதும் பார்த்து நிச்சயம் எதுவும் பண்ணிருக்க போறாங்க” என்று மகிமா அவளை வம்பிழுக்க..
“வாயக் கழுவுடி வாய கழுவு.. நானே நிறைய பிட்டு போட்டு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு எங்க அம்மா அப்பாவை கஷ்டப்பட்டு நிறுத்தி வைச்சிருக்கேன். உன் கருநாக்ககை வச்சிட்டு ஏதாவது பேசி தொலையாதடி..! எனக்கு பதறுது..!” என்று அவளை கடிந்துக் கொண்ட நிதன்யா அம்மாவின் வாய்ஸ் மெசேஜை கேட்டாள்.
“காலையில் மறுக்கா மறுக்கா பேசுனதை தான் இந்த அம்மா திரும்ப மறுக்கா மறுக்கா எனக்கு அனுப்பி வைச்சிருக்கு” என்று பல்லை கடித்தாள்.
ஆம்.. அவளது அம்மாவோ காலையில் பேசியதை தான் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து திரும்பத் திரும்ப அவளுக்கு ஃபார்வேர்ட் செய்திருந்தார். அதனை கண்டு காண்டானாள் நிதன்யா.
“வரேன் ஆத்தா வந்து தொலைக்கிறேன்.. இப்படி எனக்கு நொட்டு நொட்டுனு நிமிடத்திற்கு ஒரு மெசேஜ் தட்டி விடாதே” என்று பல்லை கடித்துக் கொண்டே இவள் பதில் வாய்ஸ் மெசேஜ் போட
அதை பார்த்த பின்பு தான் நளினிக்கு நிம்மதி.
‘அப்பாடி ஒரு தேரை இழுத்து தெருவுக்கு கொண்டு வந்தாச்சு..!’ என்று பெருமூச்சு விட்டவர்,
தன் கணவனிடம் “ஏங்க அவளை நாளைக்கு கிளம்பி வர சொல்லிட்டேன். அவ வந்த உடனேயே அப்படியே கல்யாணம் பேச்சு எடுத்துடுவோமா?” என்று சற்று பயம் கலந்த ஆர்வத்துடனே கேட்டார் நளினி.
“ஏன் அவ அப்படியே திரும்பி அடுத்த பஸ்ல ஊருக்கு ஓடவா?” என்று நிர்மல்குமார் தன் அறையில் இருந்து வந்தபடி கேட்க..
நளினி மகனை முறைத்து பார்த்தார். கணவன் பேசியது கண்டு களுக்கென்று சிரித்த மருமகள் சைதன்யாவையும் முறைத்து பார்த்தவர்,
“மருமகளே கல்யாணம் என் பொண்ணுக்கு மட்டும் கிடையாது உங்க அண்ணனுக்கும் தான். அதனால நக்கல் அடிக்காம நாத்தனாரை வழிக்கு கொண்டு வர அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசி” என்று மருமகளையும் அவர் கண்டித்தார்.
“அத்தை.. அத்தை..” என்று அவரின் இரு தோள்களை பிடித்துக் கொண்ட சைதன்யா “இந்த பேச்சு ஆரம்பிக்கும் போது பயந்தது முதலில் நீங்கதான்.. இப்ப என்னடானா எங்களுக்கு முன்ன நீங்க தான் நிதா கிட்ட பேசணும்னு ஒத்த கால்ல நிக்கிறீங்க..! கொஞ்சம் பொறுமையா இருங்க அத்தை.. நம்ம பாட்டுக்கு வந்த உடனே சொன்னா அவளும் டென்ஷன் ஆகி ஃபங்ஷன் ஒழுங்கா நடக்காம இல்ல ஃபங்ஷன் டயத்துல மூஞ்ச தூக்கி வைச்சிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்? நம்ம பொறுமையா சொல்லுவோம் அவசரம் வேண்டாம். ஒரு ரெண்டு நாள் அவளை லீவு போட்டுவிட சொல்லலாம்” என்றாள்.
“ஆமா லீவ் போட சொன்னா அப்படியே அவ போட்டுட்டு தான் வேற வேலை பார்ப்பா.. போமா” என்று சலித்தார் கிருஷ்ணகுமார்.
“நீங்க ஏன் பா கவலைப்படுறீங்க அவ லீவு போடலைன்னா வொர்க் ஃப்ரம் ஹோம் போட சொல்லிடலாம். ஐடில இதெல்லாம் ரொம்ப ஈஸி தான். நீங்க கவலைப்படாதீங்க.. என்னை மாதிரியோ உங்க மருமக மாதிரியோ ஆபீஸுக்கு போய் தான் வேலை பார்க்கணும்னு அவசியம் இல்ல தானே” என்ற நிர்மல் ரிதிக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தான்.
அன்னை தந்தை இருவருமே வேலைக்கு சென்று விடுவதால் பெரும்பாலான நேரங்கள் தாத்தா பாட்டியுடன் தான் கழியும் அவளுக்கு.
பேத்தி செல்லம் வெல்லம் தான் பார்த்துக் கொள்வதெல்லாம் பெரிய பிரச்சனை கிடையாது அவர்களுக்கு. ஆனால் பெற்றோர்களுக்கு தான் சிறு மன குறை..! எங்கே நாம் மகளிடம் அதிக நேரம் செலவிட முடிவதில்லையோ என்று. அதனால்தான் காலையில் ரிதிக்கு உணவை நிர்மல் ஊட்டி விடுவான். அந்த நேரம் மகளுடனான அவனது நேரம்.
அதற்குப்பின் அவன் வருவதற்கு இரவு ஆகிவிடும். பெரும்பாலும் உணவு உண்டு தூங்க தயாராகி விடுவாள் அவனது மகள்.. சிறிது நேரம் மகளுடன் விளையாண்டு அவளை தூங்க வைத்த பின்னே இவன் இரவு உணவுக்கு வருவான்.
சைதன்யா அவங்க அம்மா பல்லவி போல ஆசிரியர் என்பதால் மாலை போலவே வீடு வந்து விடுபவள், இரவு உணவுக்கு தயார் செய்வது அவளது வேலை. அப்படியே மகளுக்கும் இரவு உணவு ஊட்டி விட்டு விடுவாள். அதனால் கணவனை விட அதிக நேரம் அவளுக்கு மகளுடன் செலவிட முடிந்தது. கூடவே அதிக விடுமுறை நாட்கள் சனி ஞாயிறு என்ற நேரங்களிலும் மகளுடன் செலவிட நேரம் இருக்கும்.
இப்படியாக இருவருமே தாங்கள் வேலை பார்த்தாலும் தங்கள் நேரத்தை மகளுடன் கழிப்பதில் எந்த பிரச்சனையும் இன்றி பார்த்துக் கொண்டனர் சைதன்யாவும் நிர்மல்குமாரும்.
இப்பொழுது அழகாக தந்தையிடம் ஆ வாங்கிக் கொண்டே மற்றவர்கள் பேசுவது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவள், இவளும் தன் மழலை பேச்சில் பதிலுக்கு ஏதோ சொல்லிக்கொண்டு வீட்டையே கலகலப்பாக்கிக் கொண்டிருந்தாள் ரிதி.
பாதி நேரம் அவள் என்ன சொல்கிறாள் என்றே புரியாது. ஆனால் வாய் ஓயாமல் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பவளை நளினி தான் பெருமையாய் அலுத்துக் கொள்வார்.
“அப்படியே உன் அத்தை போலவே வந்து வாயச்சிருக்க டி பட்டு.. என்ன பேசுறேனே தெரியாது ஆனா சலசலன்னு பேசிக்கிட்டே இருக்க” என்று மதியம் உணவு ஊட்டி விட்டு அவளை தூங்க வைக்கும் நேரத்தில் தான் பாட்டியுடன் அத்தனை பேசுவாள், அவருக்கும் பேத்தி பேசுவதை கேட்பதில் ஆசை இருந்தாலும் இப்படி சொல்வது அவருக்கு ஒரு பெருமை.
“நிர்மல் பாப்பாவை இப்படி என்கிட்ட கொடு. உன் சட்டையை எக்கி பிடிச்சானா சட்டை எல்லாம் கறையாகிடும் அப்புறம் நீ உன் பொண்டாட்டி கிட்ட வாங்கி கட்டுவ” என்ற கிருஷ்ணகுமார் பேத்தியை தன் மடிமீது அமர்த்திக்கொண்டார்.
“சைதன்யா இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துரு.. நம்ம ரெண்டு பேரும் கொஞ்சம் கடைக்கு போய் தேவையான திங்ஸ் எல்லாம் வாங்க வேண்டியது இருக்கு” என்று மருமகளிடம் நளினி கூற, இருவருக்கும் மதிய உணவை பேக் செய்துக் கொண்டு இருந்த சைதன்யாவும் "சரிங்க அத்தை" என்றாள்.
“ஏம்மா பழம் பூவு எல்லாம் முதல் நாள் தானே வாங்கணும்.. அப்பவே எல்லா ஜாமானையும் சேர்த்து வாங்கிட்டா என்னம்மா?” என்று நிர்மல் கேட்க..
“உங்க அம்மா ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டு வைச்சிருக்கா டா மகனே.. அதெல்லாம் ஒரு நாள்ல பர்சேஸ் பண்ணி ஆகுற வேலை இல்லை” என்று மகனிடம் மெதுவான குரலில் கிசுகிசுத்தார் கிருஷ்ணகுமார்.
ஆனால் அதைக் கன கச்சிதமாக கேட்ட நளினியும் “சொல்லுவீங்க சொல்லுவீங்க.. ஒரு விசேஷம் எடுத்துக்கட்டி செய்யும் போது தான் தெரியும். சும்மா கொடுத்த வேலையை செஞ்சுட்டு ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருப்பவங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கணவனை கடிந்துக் கொண்டவர்,
“தன்யா.. உங்க வீட்ல இருந்து ரிதிக்கு டிரஸ் எடுத்தாலும் நாமும் எடுக்கணும். அதே மாதிரி உங்க வீட்ல உள்ளவங்களுக்கும் நாம வரிசையில வைச்சு கொடுக்கணும். மத்த சாமானோட இந்த ஜவுளி நம்ம எடுத்துட்டோம்னா.. பூ பழம் எல்லாம் அப்புறம் வாங்கினால் சரியா இருக்கும்” என்று சைதன்யாவிடம் தனியாக விவாதித்துக் கொண்டிருந்தார் நளினி.
இப்படி மாமியார் மருமகளும் விவாதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆண்கள் இருவரும் தலையிடுவதே இல்லை. எதுவோ அவர்களுக்குள்ளே முடிவு செய்துக் கொண்டு நம்மிடம் வரட்டும், அதற்குப்பின் நாம் எப்பொழுதும் போல ஆமாம் சாமி போட்டுக்கொள்ளலாம் என்பது அவர்களது எண்ணம்…
அந்நேரம் பார்த்து பல்லவி நளினிக்கு போன் செய்தார்.
“நளினி இன்னைக்கு சாயந்தரம் பாப்பாவுக்கு டிரஸ் எடுக்க போலாம்னு இருக்கேன்.. நீங்களும் வந்தீங்கனா.. நம்ம ரெண்டு பேரும் அப்படியே போயிட்டு வந்துரலாம். இவருக்கு எதோ வேலை இருக்குன்னு சொல்றாரு.. நம்ம வழக்கமா போற நம்ம பழனி ஆட்டோவை எடுத்துட்டு போயிட்டு வந்துரலாம். என்ன சொல்றீங்க?” என்று கேட்டார்.
“நல்லதா போச்சு போங்க பல்லவி.. இப்பதான் நானுமே சைதன்யா கிட்ட இதை பத்தி பேசிட்டு இருந்தேன். நீங்க வந்தா எனக்கு இன்னும் வசதி தான். ஒன்னு பண்ணுங்க நீங்களே பழனி ஆட்டோவை அழைச்சிட்டு நேரா நம்ம வீட்டுக்கு வந்துருங்க.. இங்கிருந்தே நம்ம மூணு பேரும் போயிடலாம்” என்றார்.
“அப்ப சரி” என்று பல்லவி போனை வைத்துவிட, இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆண்களோ “அப்ப நாங்க?” என்று கேட்க..
“நீயும் சீக்கிரம் கிளம்பி வாடா” என்றார் மகனைப் பார்த்து..
“மா என்னால கன்ஃபார்மா சொல்ல முடியாது. மறுநாள் வேற நான் அரை நாள் லீவு போடுறேன்னு சொல்லி இருக்கேன்.. அப்புறம் காது குத்துற அன்னைக்கும் நான் லீவு போடணும். அதனால என்னை எதிர்பார்க்காதீங்க” என்று அவன் ஜகா வாங்க இவர் கணவனை பார்க்க..
“எங்க வேணாலும் நீங்க மூணு பொம்பளைங்களும் போயிட்டு வாங்க.. நான் பேத்திய பத்திரமா பார்த்துக்குறேன். போதுமா?” என்றதும் “அது போதும்.!” என்றார் நளினி.
அதுபோலவே மாலை வந்தார் பல்லவி. பெண்கள் மூவரும் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருக்கும் போது “என்ன பல்லவி நீங்க தம்பி கிட்ட எதுவும் பேசினீங்களா கல்யாண விஷயம் பத்தி?” என்று கேட்க..
அவரோ “இப்போதைக்கு நாங்க வாயே திறக்கல நளினி. எதா இருந்தாலும் இங்கே வந்ததும் தான் பேசணும். நம்ம பாட்டுல போன்ல ஒன்னு பேச.. இவன் பாட்டுக்கு வந்த உடனே கால்ல வெண்ணீர் ஊத்துன கணக்கா கிளம்பிட்டான்னா என்ன பண்றது? எல்லாத்துக்கும் ஒரு ராஜதந்திரம் வேண்டும்” என்று அவர் கூற சைதன்யா இப்பொழுது அத்தையை அர்த்த புன்னகையோடு பார்த்தாள்.
“பெங்களூரிலிருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி வருவதற்கு மிஞ்சி மிஞ்சி போனால் இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் ஆகும் வேலைய முடிச்சு கிளம்பினா கூட ஒன்பது மணிக்குள்ள போய் சேர்ந்திடலாம். எப்படியும் எங்க அண்ணன் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் எனக்கு ஒன்னும் பயமில்லை” என்று தன் துணிகளை பேக் செய்துக் கொண்டு நண்பிகளிடம் கூறிக் கொண்டிருந்தாள் நிதா.
“ரூட்டெல்லாம் தெளிவா தான் சொல்ற.. அதுல எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா நீ தூங்காம போகணும் அந்த ரெண்டு மணி நேரம் அது தான் பிரச்சனை” என்று அவளை சரியாக கணித்துக் கூறிய ரத்னாவை பார்த்து முறைத்தவள்,
“அதெல்லாம் நாங்கள் தூங்காமல் காதுல ஏஆர் ரகுமானை தவழ விட்டு போய் ஊருக்கு சேர்ந்திடுவோம்” என்றாள்.
“ஏன் டி நிதா.. ராத்திரி நேரத்திற்கு இளையராஜா தான் டி பெஸ்ட்டா இருப்பாரு” என்று மகிமா கேட்க.
“இல்லைன்னு யார் சொன்னா? ராத்திரி நேரம் சிலுசிலுன்று காத்து கூடவே.. காதுல இளையராஜா வந்து தவழ்ந்தா அப்படியே தூங்கிடுவேன் டி.. அப்புறம் கிருஷ்ணகிரிக்கு போறதுக்கு பதிலா நேரா சென்னைக்கு தான் போய் சேரணும். இதுவே ஏஆர் ரகுமான் அப்படியே பிஜிஎம்மில் பின்னி எடுத்து இருப்பாரு குதூகலமா ஊர் போய் சேரலாம்” என்று சிரித்துக் கொண்டு அனைவரிடம் விடை பெற்று வந்தாள்.
தங்கையை அழைத்து செல்வதற்காக நிர்மல் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தான். சற்று தள்ளி பார்த்தால் ரவீந்திராவும் நின்று இருந்தார்.
“என்ன மாமா நீங்க வந்து இருக்கீங்க?” என்று கேட்க..
“நரேந்திரா வரேன்னு சொல்லிருந்தான்பா.. அதான் அவனுக்காக வெயிட் பண்றேன். ட்ரைன்ல புக் பண்ணா டிக்கெட் கிடைக்கலையாம் அதான் பஸ்ல வரான்” என்றார்.
“அவனும் பஸ்ல தானா.. நிதாவும் பஸ்ல தான் வரா. அதான் வந்து வெயிட் பண்றேன்.. ரெண்டுத்தையும் இப்பவே பார்க்க வைக்காமல் அப்படியே பொத்துனாப்புல நம்ம அழைச்சிட்டு போயிடணும்..” என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அடுத்தடுத்து இருவர் பேருந்தும் வந்து நிற்க.. இருவருமே தங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கும் அப்பா அண்ணாவிற்கு முறையே அழைக்க..
“மாமா வந்துட்டாங்க.. இனி இரண்டு அணுகுண்டு நம்ம வயித்துல கட்டி வைச்சிருக்க மாதிரியே பார்த்துக்கணும். இவங்கள ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கிற வரைக்கும்” என்றான் நிர்மல்.
சிரித்துக் கொண்டே ஆமாம் என்று தலையை அசைத்தவர் மகனை பார்க்க சென்றார்.
இரவு வீடு வந்த நிதன்யா தன் அறையில் அந்த குட்டி கட்டிலில் சுகமாக தூங்கியிருந்தாள். அவளுக்கு இப்போதுதான் வீடு வந்த உணர்வு..!
எத்தனை பெரிய வீடாக இருந்தாலும்.. எத்தனை பெரிய ஹோட்டலாக இருந்தாலும்.. பஞ்சு மெத்தையாக இருந்தாலும்.. ஏன் நுரை பொங்கும் அதிக விலை போன்ற மெத்தைகளாக இருந்தாலும்.. தன் வீட்டில் தன் படுக்கையில் படுத்தால் தான் நித்திரை நிம்மதியாக வரும் அல்லவா?
அதுபோல்தான் நிதன்யாவும்..!
மறுநாள் காலையில் மருமகளை பார்க்க வந்திருந்த நரேந்திராவினால் அவள் நிம்மதி பறிபோனது..!!