வழியிலே இதயத்தின் நிழலாய் - 09

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷாரிகா

Well-known member
Staff member
Apr 26, 2026
61
267
53
Srilanka
VIN - 09
"என்னடி அவர்ட்ட பேசிப்பாத்தியா?" அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த ஷோபனாவிடம் ஆர்வமாக கேட்டாள் யாழினி.
யாழினியிடமிருந்து ஆராவைத் தூக்கிக்கொண்டவள்,
" ம்ஹும். நம்பர பிளாக் பண்ணிட்டேன்" என்றாள் சாதாரணமாய்.
"என்ன..!"
அவன் நேற்று திருமண மண்டபத்தில் வைத்து பேசியவற்றை சொன்னவள், "எப்படியும் இது சரியா வராதக்கா.." அலுத்துக்கொண்டாள் ஷோபா.
"சரி. நாம இதெல்லாம் பிறகு பேசுவம். இப்ப நான் அம்மாவீட்ட போப்பறன். இன்டைக்கு க்ளாஸ் எடுக்க வேணாம். நீயும் வா.." என்று அவளையும் தன்னோடு அழைத்துச் சென்றாள் யாழினி.
யாழினியும் ஷோபனாவும் வீட்டினுள் நுழையும் போது, ஹால் ஷோபாவில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார், யாழினியின் அம்மா வைதேகி. இவர்களை தலையசைத்து வரவேற்றவர், எழப்போகவும் இருவருமே தடுத்துவிட்டு, சாப்பிட்டு முடித்தே வருமாறு கூறினர்.
ஆராவிற்கும், யாழினிக்கும் ஊட்டியவர், ஷோபா மறுக்க மறுக்க அவளுக்கும் ஒருவாய் ஊட்டிவிட்டார். பிட்டும், கிழங்குச்சொதியும், நெத்தலிக்கருவாட்டுப் பிரட்டலும் அருமையாக இருந்தது. அதை சொல்லவும் செய்த ஷோபனாவுக்கு போனஸாக இன்னொரு வாயும் கிடைத்தது.
சாப்பிட்டு முடித்து வந்த வைதேகி ஷோபனாவிடம்,
" வீட்ல எல்லாரும் சுகமாம்மா?"
"எல்லாரும் நல்லா இருக்கிறம் ஆன்டி. நீங்க தனியவா இருக்கிறீங்க..? வருண் வீட்ட இல்லையா?"
கேட்டவளை சற்று ஆச்சர்யம் மேலிடப் பார்த்தவர்,
"யாழினிட அப்பா அவர்ட கடைக்குப் போயிட்டார். வருண் நேத்து ஒரு கல்யாணத்துக்கு வந்தவன். விடியவுமே போய்ட்டான்."
"ஓ..நேத்து நானும் தான் போனேன், அங்க இருந்து அவர்தான் வீட்ட இறக்கிவிட்டவர்." என்றாள் ஷோபனா வெகு இயல்பாய்.
" என்ன..! பொம்பிளப் பிள்ளைகளோட நோ(ர்)மலா பேசிப்பழகுறவன் தான். ஆனா ஏத்தி இறக்குறதெல்லாம் அதிசயத்திலும் அதிசயம். அடி யாழினி, ஷோபாட அம்மாவின்ட நம்பர கெதியவாங்கு. பேசுவம்." வைதேகி விளையாட்டாய் சொன்னாரா, இல்லை சீரியஸாக சொன்னாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
" அம்மா.. நீங்க டூ லேட். ஷோபாவுக்கு பேசியெல்லாம் வெச்சாச்சு." என்றாள் யாழினி.
"அதனாலதான் உன்ட தொம்பி ஏத்திட்டு போயிருப்பான்." யாழினியிடம் நொடித்துக்கொண்டவர்,
"என்னமா ஷோபா, எங்கள கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணுவீங்கதானே?" எனப் புன்னகையுடன் கேட்டகவும், அவரைப்பார்த்து லேசாய் சிரித்து வைத்தாள் ஷோபனா.
சிறிது நேரம் கழித்து இருவருக்கும் ஜூஸ் கொண்டுவந்து கொடுத்தார் வைதேகி. பிறகென்ன... நிறையப் பேசினார்கள். பெண்கள் சேர்ந்தால் பேச்சிற்கா பஞ்சம்? இருமணிநேரம் இறக்கை கட்டிவிட்டாற்போல பறந்திருந்தது.
யாழினிக்கு சிவாவிடமிருந்து அழைப்பு வரவும், இருவரும் வைதேகியிடம் விடைபெற்றுக்கொண்டு யாழினியின்
வீடுவந்து சேர்ந்தனர்.
*****
ஷோபா வீட்டுக்கு செல்வதற்காய் ஸ்கூட்டியில் ஏறியவள், ஏதோ தோன்றியவளாய் வெளியிலிருந்தே யாழினியை அழைத்தாள்.
" என்ன ஷோபா..?" அருகில் வந்து நின்று கேட்டாள் யாழினி.
தொண்டையை செறுமிக்கொண்ட ஷோபா,
" ம்ம்.. எங்கட அம்மாட நம்பர உங்களுக்கு அனுப்பிவிடுறன். உங்கட அம்மாட்ட குடுக்கிறீங்களா..?"
முதலில் யாழினிக்கு இவள் என்ன கேட்கிறாள் என்பதே புரியவில்லை. பின்னர் ஷோபாவை கண்களைச்சுருக்கி லேசாய் முறைத்தவள்,
" ப்ச், சமைக்க வெளிக்கிட்ட என்ன இப்படி கூப்பிட்டு வெச்சி விளையாடனுமா ஷோபா..?" சலிப்பாய்க் கேட்டாள்.
"இல்லக்கா... விளையாட்டில்ல. சீரியஸாத்தான் கேக்குறேன்." என ஷோபனா மெல்லிய குரலில் சொன்னதும் யாழினி வாயில் கைவைத்துக்கொண்டாள்.
"ஐயோ! இப்படி அவசரப்பட்டு முடிவெடுக்குற விஷயமாடி இது? முதல்ல, உங்கட வீட்ட என்ன சொல்லுவாங்களோ தெரியல்ல."
"அதெல்லாம் உங்கட அம்மா அப்படி கேட்டதுல இருந்தே.. நல்லா யோசிச்சுத்தான் முடிவெடுத்திருக்கன். நான் அண்ணாட்ட கதச்சன்என்டா சரி, அவர் எங்கட வீட்ட சமாளிப்பேர்."
"எடுத்தன் கவுத்தன் என்டு எல்லாம் செய்ய ஏலாது ஷோபா... வருணப் பிடிச்சிருக்கா உனக்கு, நீ அத சொல்லு முதல்." அவனின் அக்காவாக கேட்டாள் யாழினி.
" தெரியல்ல அக்கா. நீங்க தானே சொன்னீங்க கம்பானியன்ஷிப் தான் முக்கியமென்டு. அந்த விஷயத்துல பாத்தா உங்கட தம்பிக்கு ஹண்ட்ரெட் அவுட் ஆஃப் ஹண்ட்ரெட் குடுக்கலாம். எல்லாத்துக்கும் மேல, என்ட பாஸ்ட்டும் தெரிஞ்சவர். செல்ஃபிஷ் தனமான முடிவென்டாலும், I'll also be the best companion to your brother's life, That's all I can promise." சொல்லி முடித்த ஷோபனா, யாழினியின் வியந்த பார்வையில் குனிந்து கொண்டாள்.
" இதெல்லாம் கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா இந்த வருண்தான் என்ன சொல்றானோ தெரியலையே."
"எப்டியும் கேட்டவுடனே ஏலாதென்டுதான் சொல்லுவேர்." என்ற ஷோபனாவை 'உனக்கே தெரியுது தானே' எனும் பார்வை பார்த்தாள் யாழினி.
"என்னக்கா.. உங்களுக்கே முதல்ல என்னப் பிடிக்கல்ல போல இருக்கே"
" ஐயோ, அப்டி இல்லம்மா. இந்த விஷயம் சரி வந்தா, என்னவிட வேற யாரு சந்தோஷப்படப் போறாங்க. நான் கதைக்கிறன் அவன்ட்ட. ஆனா அவர் வேணாமென்டா கவலைப்பட்டு அழ எல்லாம் கூடாது சரியா.."
" அய்ய.. அந்த சீன்லாம் இங்க இல்ல. ஆனா பொசிடிவாவே யோசிப்பம் என்ன." என்ற ஷோபனாவுக்கு
" நீ தெளிவா இருந்தா சரிதான்" என விடைகொடுத்தாள் யாழினி.
*****
வீட்டுக்கு வந்த ஷோபனா முதல் வேலையாக வசீகரனுக்கு 'உங்கட பெரியம்மா ஒழுங்கா விசாரிக்கல்ல போலயே. சொரி டு சேய் திஸ், எனக்கும் ஒரு பாஸ்ட் இருக்கு ' என அனுப்பிவிட்டாள்.
அடுத்தநாள் காலை, மாப்பிள்ளை வீட்டினர் கல்யாணம் வேண்டாமென்றதற்கு அழுதஅம்மாவையும், அவரை சமாதானப்படுத்திய அப்பாவையும் பார்க்க சற்று வருத்தமாக இருந்தாலும், வசீகரனின் முடிவில் அவளுக்கு மிகுந்த சந்தோஷமே.
வருண் விஷயத்தில் திடீரென்று முடிவெடுத்து விட்டோமோ என்று அவளுக்கும் முதலில் குழப்பமாகவே இருந்தது. பின்னர் அவனைப்பற்றி யோசித்துப் பார்த்தவளுக்கு வருண்தான் சிறந்த தேர்வென்றே தோன்றியது. அவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்றிருந்த மனநிலை, 'சரி' என்றானென்றால் நன்றாக இருக்குமே என்றெண்ண ஆரம்பித்திருந்தது.
*****
வருண் ட்ரெய்னி ஆகவிருக்கும் கம்பனியில் போயா நாட்களில் விடுமுறை கிடைக்கும். என்னதான் கண்டியின் சீதோஷ்ணநிலை குளிர்வித்தாலும், சொந்த ஊரின் சூடுதரும் சுகம் போல வருமா..?விடுமுறை ஒருநாளே என்றாலும் ஓடிவந்து விடுவான்.
அன்று ஏப்ரல் மாதத்திற்கான பௌர்ணமி போயா விடுமுறை. நேற்றிரவே வீட்டிற்கு வந்திருந்தவன், விடியவே வெளிக்கிட்டு அக்காவிடம் வந்திருந்தான்.
யாழினியும் அவனை எதிர்பார்த்துத்தான் இருந்தாள். ஷோபா கேட்டதைப் பற்றி சிவாவிடம் பகிர்ந்திருந்தாள். அவனுக்கு இந்த விடயத்தில் மிகுந்த மகிழ்ச்சி. அம்மாவிடம் இன்னும் சொல்லவில்லை. முதலில் வருணிடம் கேட்டுவிட்டே சொல்லலாம் என்றிருந்தாள்.
வருணுடன் பேசிக்கொண்டிருந்த சிவாவிடம் கேட்குமாறு கண்ணைக் காட்டினாள் யாழினி. சரி என கண்களாலேயே சொன்ன சிவா,
"வருண், ஷோபனாவப்பத்தி என்ன நினைக்கிற..?" சுற்றி வளைக்காமல் நேரே கேட்டான்.
"நானென்ன நினைக்க இருக்கு. என்னக்கா திடீரென்டு அத்தானுக்கு என்னவாம்? ஷோபனாக்கு அங்க வெடிங்க்டேட் கூட ஃபிக்ஸ் பண்ணியாச்சு. எனக்கு பேசுற ஐடியாக்கள் ஏதுமிருந்தா தூக்கிப்போடுங்கோ" என்ற வருணிடம் வந்த யாழினி,
"அந்த கல்யாணம் இப்ப இல்லாம போயிட்டுடா. ஷோபனாவ உனக்கு பேசுவமா..?" மெல்லக் கேட்டாள்.
"என்ன விசர்க்கத இது..?" எரிச்சல் மேலிடக் கேட்டான் வருண்.
"நல்ல பிள்ள தானேடா அது. ஏன் வேணாமென்றாய்?" என்ற சிவாவிடம்,
"உங்க ரெண்டுபேருக்கும் ஒன்டும் தெரியாது. தயவுசெஞ்சு சும்மா இருங்க. தேவையில்லாம புதுசா ஏதாச்சும் ஆரம்பிக்காம"
"ஏன்? என்ன தெரியாது எங்களுக்கு? உன்ட ஃப்ரெண்டோட எக்ஸ், அந்த கத தானே. சிவா.. அது பெருசா ஒன்டுமில்ல. வெறும் ஸ்கூல் லவ் தான். எக்ஸ் என்டும் சொல்ல ஏலாது. ஸ்மோல் எக்ஸ் என்டாத்தான் சரியா வரும்." என்ற யாழினியைப் பார்த்து முறைத்த வருண்,
"அப்டியா? நீங்க இப்டி கதைக்கிற விஷயம், ஷோபனாக்கு தெரியுமோ?" எனக் கேட்டான் அவளிடம்.
'யார்ரா இவன்' என வருணை ஓர் பார்வை பார்த்தவள்,
"ஷோபா அந்த கல்யாணம் வேணாமென்டதே உனக்காக தான்." என்றாள் யாழினி.
வருண் ஒன்றும் பேசாது சிவாவைப் பார்த்தான். " உண்மதான் வருண். அந்த பிள்ளைக்கு உன்னில ஏதும் விருப்பம் இருந்திருக்கும் போல" என்றான் சிவா.
" ப்ச், இதெல்லாம் நடக்காத கத. நீங்க ரெண்டுபேரும் இத, இதோட விட்டுருங்க. மிச்சம் நான் கதைக்கிறன் அவட்ட." என்றவன், சிவாவும் யாழினியும் கூப்பிடக் கூப்பிட நிற்காமல் விறுவிறு என்று சென்றுவிட்டான்.
 

Author: ஷாரிகா
Article Title: வழியிலே இதயத்தின் நிழலாய் - 09
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.