கள்வன் 5
“ஏம்மா.. ஏமிதி? லீவு கி இண்டிக்கி ஒச்சானு அன்னா கூட பனி சேயிஞ்சுக்குன்னாவு ஏமா ஏந்து? (லீவுக்கு வீட்டுக்கு வந்து இருக்கிறவனை கூட சும்மா வேலை சொல்லிக்கிட்டே இருக்கியே.. ஏம்மா?)” என்று சலித்துக் கொண்டான் நரேந்திரா. காலையில் பல்லவி அவனை சில பொருட்கள் வாங்கி வரச் சொல்லும்பொழுது..!
“ஏன்ட்டி செப்பவு லேது? ஏந்து செப்பவு லேது? இக்கட ஒக்கடானி ஒந்தரிகா அல்லாடுதுன்னானு லே!)
(ஏன்டா சொல்ல மாட்ட ஏன் சொல்ல மாட்ட இங்கே தனியா ஒருத்தி அல்லாடுறேன்ல)” என்று மகனிடம் கடிந்தவர் பின் கணவனை பார்த்து,
“ஏன்ட்டி பாவா.. மீரு ஏமி அடக்ரா லேதா? (ஏங்க நீங்க எதுவும் இவனை கேட்க மாட்டீங்களா?)” என்று முறையிட,
“அம்மா செப்பினதி சேய்ரா நாணா.. அம்மா பாபம் னா? ஒக்கடானே பனி சேஸ்துன்னதி (அம்மா சொல்றது செய்டா தம்பி.. அம்மா பாவம் இல்லையா ஒத்தையா எல்லா வேலையும் செய்றா)” என்று தந்தையின் பேச்சை தட்ட முடியாமல் அம்மா முன் நின்றான்.
“காலைல தயிரும் காபி தூளும் மறந்துட்டேன் அது மட்டும் வாங்கிட்டு வரியா?” என்றதும் இன்னும் பல்லை கடித்தான் நரேந்திரா.
“உனக்கு இதே பொழப்பா போச்சு மா சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நான் ஏதாவது வேலை செஞ்சுட்டு இருக்கும்போது தான் கூப்பிட்டு எப்ப பார்த்தாலும் தயிரு வாங்கினு வா.. தக்காளி வாங்கினு வான்னு உசுர வாங்குற... எப்பம்மா நீ மாறுவ இதெல்லாம் உன் புருஷனோட டூட்டிமா அவர்கிட்ட சொல்லுமா நீ?” என்று நொந்தபடியே அன்னை கொடுத்த லிஸ்ட்டையும் பையையும் வாங்கிக் கொண்டான்.
“தம்புடு நரேந்திரா.. இப்ப உனக்கு 17 வயசாகுதா? ஆச்சு வயசு ஏழு கழுத வயசு.. என்ன ஒன்னு ரெண்டு வருஷத்துல உனக்கு கல்யாணம் பண்ணனும்.. அதுக்குள்ள இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்.. அப்பதான நாளப்பின்ன அந்த பிள்ளைக்கு ஹெல்ப் பண்ண முடியும். இல்லன்னா வீட்டுக்கு வரவ என்னை தான் சொல்லுவா.. என்ன புள்ளைய வளர்த்து வச்சிருக்கீங்கன்னு, கேள்வி மேல கேள்வி கேட்பா?” என்றதும் அம்மாவை ஒரு மார்க்கமாக மேலும் கீழும் பார்த்தவன்,
‘இந்த அம்மா கல்யாணத்துக்கு அடிபோடுது. இது ஆவறதுக்கு இல்லை’ என்றபடி பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
மகன் அந்த பக்கம் போனதும் இந்த பக்கம் அவன் சென்று விட்டானா என்று பார்த்த கணவன் மனைவி அவன் சென்று விட்டான் என்று தெரிந்ததும், ஹைஃபை அடித்துக் கொண்டனர்.
“எப்படியோ ஒருவழியாக கல்யாணம் பேச்சை மெல்ல மெல்ல ஆரம்பிச்சுட்ட பல்லவி. இப்படியே கொஞ்சம் கொஞ்சமா சொல்லி சொல்லி இந்த தேரையும் தெருவுக்கு கொண்டு வந்துட்டா.. இரண்டத்தையும் இழுத்து ஒரு வழியா கல்யாணத்தை முடிச்சிடலாம்” என்றார் ரவிச்சந்திரா பெருமையாக தன் மனைவியை பார்த்து..!
காலையில் அம்மா கேட்ட பொருள்களை வாங்கி கொடுத்துவிட்டு உணவை முடித்தவன், “நான் ரிதி குட்டியை பார்த்துட்டு வரேன் மா” என்று வேகமாக பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.
அதே நேரம் அப்பொழுதுதான் எழுந்து உணவு முடித்து வந்தவள் அண்ணன் மகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள் நிதன்யா.
நளினியும் கிருஷ்ணகுமாரும் அருகில் இருக்கும் தங்கள் உறவினர் வீட்டிற்கு காதுகுத்துக்கு அழைக்கச் சென்று இருந்தனர். பெரும்பான்மையானவர்கள் வெளி மாவட்டங்களிலும் வெளியூர்களிலும் இருக்க, அவர்களுக்கு எல்லாம் ஃபோன் மூலமாகவே அழைப்பு சென்று இருந்தது.
அருகில் இருப்பவர்களுக்கும் தவிர்க்க முடியாத சில குடும்ப நண்பர்கள் வேலை செய்யும் இடம் அவர்களுக்கு மட்டும் நேரில் சென்று அழைத்து வரலாம் என்று சென்றனர்.
வீட்டில் மகள் இருக்க, பேத்தியை அவள் பார்த்துக் கொள்வாள் என்றுதான்..!
“இங்க பாருடி நிதா.. நான் மத்தியானம் சமையல் சேர்த்து செஞ்சு வைச்சுட்டேன். பாப்பாவுக்கு தனியா பருப்பு சாதமும் முட்டையும் இருக்கு. மறக்காம ஊட்டி விட்டுடு.. சாதம் பிசையும்போது ஃபர்ஸ்ட் நெய் விட்டு நல்லா பிசைந்து அப்புறம் பருப்பு போடு, அவளுக்கு ஊட்டுறேன்ங்கிற பேர்ல அந்த பருப்பு சாதத்தை நீ தின்னுடாத..!” என்ற அம்மாவை முறைத்தவள்
“மானத்தை வாங்காம நீ கட்டின மகராசனோட முதல்ல கிளம்புமா” என்று பல்லை கடித்தாள்.
“அத்த.. அத்த..” என்று காலையிலேயே தூங்கிக் கொண்டிருந்தவளை தட்டி எழுப்பி முத்தங்கள் கொடுத்து தன் பின்னே சுற்றி சுற்றி வரும் அண்ணன் மகள் மீது அத்தனை பிரியம் அவளுக்கு. அதிலும் வரும் பொழுது ஒரு பெரிய டெடி பியர் அவள் வாங்கிட்டு வந்து மருமகளிடம் கொடுத்திருக்க,
அதை தூக்க முடியாமல் தூக்கி இழுக்க முடியாமல் இழுத்துக் கொண்டு முகம் முழுவதும் சந்தோஷத்தோடு வீடு முழுக்க சுற்றித்திரிந்தாள் ரிதி.
கொஞ்ச நேரம் தான் அந்த டெடியோடு அவள் விளையாடினாள். அதற்குப்பின் அத்தையையே டெடியாக அவள் மாற்றி விட்டாள்.
“அத்த.. பாட்டி காணும்?” என்று சிறிது நேரம் விளையாடிவிட்டு வருபவள் குட்டிக் கண்களை விரித்து கேட்பாள்.
“உங்க பாட்டி நாளைக்கு உனக்கு காது குத்துவதற்கு, ஊர்ல உள்ள சொந்த பந்தத்தை எல்லாம் அழைக்க போய் இருக்காங்க.. இப்ப வந்துருவாங்க” என்று கொஞ்சலாக மருமகளிடம் சொல்லியவள்,
அடுத்து அவளிடம் விளையாட ஆரம்பிக்க.. சிறிது நேரம் விளையாடும் ரிதி திரும்பவும் “அத்த.. ரூம்ல தாத்தா காணும்” என்று அடுத்த முறை வந்து முறையிட்டாள்.
“உங்க தாத்தா தானே டி உங்க பாட்டிய கூட்டுட்டு இப்போ உன் கண்ணு முன்னால போனாங்க.. பாட்டி தனியா போனா பாட்டிய பூச்சாண்டி பிடிச்சுக்கும். அதனால நீயும் எப்பவும் தனியா வெளியில போகாதே” என்று அவளிடம் சிறு எச்சரிக்கை செய்துவிட்டு, மீண்டும் அவளது மனதை மாற்ற விளையாட்டில் ஈடுபடுத்தினாள் நிதா.
திரும்பவும் நிதன்யாவிடம் வந்து “அவ்வா காணும்.. அத்த” என்று கேட்டாள் முகத்தை பாவமாக வைத்து, அதாவது சைதன்யாவின் அம்மாவை ரிதி கேட்க,
“லட்டு பாப்பா.. அவ்வா.. அவங்க வீட்ல இருப்பாங்கடி. வாடி தங்கம் நம்ம விளையாடலாம்” என்று திரும்பவும் அவளுடன் விளையாடி சோர்ந்து போய் நிதன்யா அமர,
திரும்பவும் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்து வந்தவள், தாத்தாவ காணும்.. அம்மா காணும்.. அப்பா காணும்.. மாமா காணும் என்று வரிசையாக அவள் ஒவ்வொருத்தராக கேட்க..
அவளுக்கு ஒவ்வொருத்தரும் எங்கே சென்றிருக்கிறார்கள் என்று அவள் புரியும்படி விளக்கம் சொல்ல நொந்து நூடுல்ஸானாள் நிதன்யா.
அதற்கு மேல் உணவு ஊட்ட அவள் பட்ட பாடு அவளுக்கு மட்டுமே தெரியும். இல்லையில்லை அந்த ஆண்டவருக்கு தெரியும். ஏனென்றால் அத்தனை தரம் புலம்பி இருந்தாளே..!
ரிதியோ செம வாலு. ஒருதரம் வாயில் வாங்கினால் 9 தரம் அவள் பின்னே ஓட வைத்தாள்.
இவ்வளவு நாட்களாக இவள் வீட்டுக்கு வரும் வேளையில் எல்லாம் வீட்டில் மற்றவர்களும் இருப்பதால் ரிதி அனைவரிடமும் மாறி மாறி இருப்பாள்.
பெரிதாக நிதன்யாவிடமே அதிக நேரம் செலவழித்ததில்லை. அதனால் மருமகள் செய்யும் வாலுத்தனங்களை எல்லாம் நிதன்யா அறிந்ததில்லை.
இன்று இவள் மட்டுமே இருக்க, மற்றவர்கள் வீட்டில் காணும் எனும்போது, எப்பொழுதும் இருக்கும் தாத்தா பாட்டி எங்கே சென்றார்கள்? ஏன் யாருமே இல்லை? என்று அச்சிறு சிட்டுக்குத் தோன்ற உணவினை வாங்கிக் கொண்டே ஒவ்வொருத்தராக கேட்டுக் கொண்டிருந்தாள்.
அலுத்து சலித்து ஒரு வழியாக அவளுக்கு உணவை ஊட்டி முடித்து வாயை துடைத்து அவளை சோபாவில் தன் மீது போட்டுக்கொண்ட நிதன்யா, “ஆத்தா மகமாயி.. அப்படியே அத்தை மேல் படுத்து தூங்கு ஆத்தா..!” என்று தட்டிக் கொடுக்க ஆரம்பித்தாள்.
அவளோ நளினி தூங்கும்போது எப்பொழுதும் கதை சொல்லும் வழக்கத்தில் “அத்த.. கதை சொல்லு அத்த..” என்று அவள் முகத்தை தட்டி தாடையை பற்றி என்று அவள் கேட்ட தினுசில் அத்தனை ஆசையாக தான் இருந்தது நிதன்யாவிற்கு.
ஆனால்.. சோர்வில் அவளால் இயலவில்லை..!
“ஆத்தாடி ரிதி.. அது வேறயா? எல்லாம் என் ஆத்தா நளினிய சொல்லணும். உனக்கு கதை சொல்லி கெடுத்து வெச்சி இருக்கு” என்று அலுத்துக்கொண்டாலும், அழகாக அவளுக்கு புரிகிற மாதிரியான கதைகளை நிதன்யா சொல்ல.. அதில் அத்தனை கேள்விகள் அத்தனை சந்தேகங்கள் இருந்தது ரிதிக்கு. அதை அத்தையிடம் கேட்டாள் ரிதி.
“எங்க அம்மா அப்பப்ப சொல்லும்.. உன்னை மாதிரியே இருக்கா உன் மருமக.. உன்னை மாதிரியே இருக்கானு, நான் கூட ரொம்ப பெருமையா சொல்லுதுனு நினைச்சேன் டி லட்டு. இல்லடி நீ செய்ற சேட்டையை வச்சு தான் உன்னை மாதிரியே இருக்கானு வஞ்சப்புகழ்ச்சி அணி செஞ்சிருக்கு எங்க ஆத்தா..!” என்றவள்,
“ஏன் டி லட்டு பாப்பா, காலையிலிருந்து விளையாடிட்டு இருக்கோம்ல உனக்கு டயர்டா இருக்கும்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமில்ல? அத்தைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலாம் இல்ல?” என்று அவளுடன் இவளும் வாயடிக்க.. பதிலுக்கு அவளும் வாயடிக்க.. இரண்டு பேருமே பேசி பேசியே அப்படியே உறங்கி விட்டனர்.
இவர்களது வீடு இருப்பது பெரும்பாலும் ரெசிடென்சியல் ஏரியா உள்ள பகுதிதான். அதுவும் அந்த பகுதியில் பொது மனிதர் புழங்கும் பொதுவான பகுதி இல்லாததால் அந்தந்த வீட்டு மனுஷர்கள் தவிர வேற யாரும் வர வாய்ப்பில்லை. இருந்தாலுமே.. கதவை திறந்து போட்டுவிட்டு உறங்கும் இருவரையும் கோபத்தோடு பார்த்து நின்றிருந்தான் நரேந்திரா.
“நீக்கு புத்தி உண்டா? இலானே அன்னி தர்வாஜாலு தேர்சி பெட்டி பதுகுத்தாவா? (அறிவு இருக்கா உனக்கு இப்படித்தான் எல்லாத்தையும் திறந்து போட்டுட்டு தூங்குவியா?)” என்று அவன் போட்ட சத்தத்தை சிறிது கூட லட்சியம் செய்யாமல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் நிதன்யா.
அத்தனை கோபமாக வந்தது அவனுக்கு. நிதன்யா ஒரு வயசு பொண்ணு, அதுவும் இப்படி காலம் கெட்டு போயிருக்கிற நிலைமையில் வீட்டு காம்பவுண்ட் கேட்டை கூட சாற்றாமல் இப்படி தூங்குகிறாளே என்று அத்தனை கோபம்..!
கூடவே குழந்தைய வேற இவளை நம்பி விட்டுட்டு போயிருக்காங்க? இப்படி பக்கத்தில் என்ன சத்தம் போட்டாலும், தெரியாமல் தூங்குறாளே.. எவனாவது வந்து குழந்தையை தூக்கிட்டு போனா என்ன பண்ணுவா? இடியட்..! பொறுப்பில்லாதவ..!என்று இன்னும் கோபம் பெருக..
“நிதன்யா.. நிதன்யா..” என்று நரேந்திரா சத்தமாக அழைத்தான். ஏனோ அவளைத் தொட்டு எழுப்ப அவனுக்கு மனம் வரவில்லை. அவளோ தோழிகள் தான் வேலைக்கு செல்ல நேரமாகிவிட்டதென எழுப்புகிறார்கள் என்று தூக்கத்தில் நினைத்தவள் பழக்க தோஷத்தில்
“இன்னும் 2 மினிட்ஸ் டி.. அப்புறம் கண்டிப்பா ஏஞ்சிடுவேன்” என்று விரலை தூக்கி காட்டி உளறிக்கொண்டு தூங்கினாள்.
“அட.. தூக்க பிசாசே..!” என்று அயர்ந்தான் நரேந்திரா..!
தொடரும்..