கள்வன் 6
“எல்லாம் இந்த அங்கிளும் ஆன்ட்டியும் கொடுக்குற செல்லம்? பாரு.. பாரு.. எப்படி தூங்குறானு..வேலைக்கு போற பொண்ணு மாதிரியா இருக்கா? எப்படி உளறிட்டு தூங்குறதை பாரு.. இவெல்லாம் எப்படி தனியா பெங்களூர்ல இருக்கானு தெரியல? முதல இந்த நிர்மல் வந்தவுடனே இவளை பேக் பண்ணி கிருஷ்ணகிரிக்கு அனுப்பி விட சொல்லணும்” என்று புலம்பினான் கோபமாக நரேந்திரா..! அவளை எழுப்பும் வழி தெரியாமல்..!
அவனுக்கு ஒரு யோசனை தோன்ற, வாசலுக்கு சென்று காலிங் பெல்லை வேகமாக விட்டுவிட்டு அழுத்தி அடிக்க.. அதில் தான் அவள் சற்று தெளிந்து எழுந்தாள் நம் நாயகி.
தன் அருகில் நரேந்திரா கோபமாக இல்லையில்லை ரௌத்திரமாக நிற்பதைக் கண்டவள், சோபா ஹாண்டில் பார்ல இருந்த தன் காலை மடக்கி எழ பார்த்தாள்.
அப்போது அவள் கெண்டைக்காலுக்கு கீழே இருந்த லாங்க் ஸ்கர்ட் இன்னும் மேலே ஏறி அவள் முட்டிக்கு சற்றே கீழே வர.. ஸ்கர்ட் விலகி இருந்த பகுதியில் அவன் பார்வை பதிவதைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.
அவனோட அந்த ஒரு பார்வை.. ஏனோ தன் உடல் முழுவதும் ஒரு அதிர்வை பரவ செய்வதை உணர்ந்து, அவள் கால்களைப் பின்னிக் கொண்டாள்.
அவளால் சற்றென்று எழ முடியவில்லை, அவள் மேலே ரிதி படுத்திருந்தாள். ஆனாலும் அருகில் நிற்பவனை கண்டு அருவருப்பாக இவள் எழ முயற்சிக்க..
“ஒரு வழியா மகாராணி எழுந்துட்டீங்களா?” என்று நக்கலாக கேட்டான்.
“ஆமா.. மாடு மாதிரி வளர்ந்து இருக்க இல்ல எல்லா கதவையும் பூட்டாம திறந்து போட்டுட்டு தூங்குற? அறிவு இல்ல உனக்கு?” என்று அவன் கடிய, அவளுக்கோ அத்தனை ஆத்திரம் வந்தது. ‘இவன் யார் என்னை வந்து கேள்வி கேட்க? இது என்ன அவன் வீடா?’ என்று.
அவளோ ஆத்திரமாக எழும்பொழுது ரிதி லேசாக சிணுங்க..
“ஏய்.. உஷ்..! வெயிட் வெய்ட்..எந்திரிக்காத.! ரிதி முழிச்சா அழுவா, அப்படியே இரு நான் அவளை தூக்கிக்கிறேன்” என்று நரேந்திரா அவளை நெருங்க, அவளோ எதுவோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டு இருந்தவள் போல அப்படியே படுத்திருந்தாள்.
ஏனென்றால் இப்பொழுது தான் அவளை ஒரு வழியாக தூங்க வைத்திருக்கிறாள் நிதன்யா. மீண்டும் முழித்தால் அவளை தூங்க வைப்பது கடினம், கூடவே அரை தூக்கத்தில் முழித்து அவளது அன்னையையோ அல்லது இவளது அன்னையையோ கேட்பாள் என்று புரிந்து..
அவனின் முகம் அவளை நெருங்க, அவள் மீது குப்புற படுத்திருந்த ரிதி, அவளின் கழுத்து பகுதி டீ சர்ட்டை இறுக்கி பிடித்திருக்க.. அவன் ரிதியின் விரல்களை டீ சர்டில் இருந்து மெல்ல விடுவிக்க முனைந்தான்.
அதில் நரேந்திராவின் கை அவள் கழுத்தில் லேசாக தீண்டி விலகியது. அவளின் நெஞ்சோ அந்த ஒற்றை தீண்டலுக்கே படப்படத்தது. ஹார்ட் பீட் வேகம் ஏகத்துக்கும் எகிறியது. பயத்தில் எச்சில் முழுங்கினாள் நிதன்யா.
ஆண்களின் ஸ்பரிசம் படாதவள் எல்லாம் இல்லை. வேலை செய்யும் இடத்தில் பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது இப்படி ஏகப்பட்ட இடத்தில்..
ஆனால் ஏனோ இவனின் ஸ்பரிசம் ஒருவித அச்சத்தை திகிலை ஏற்படுத்தியது அவளுக்குள்.
அவனோ அவளின் கண்களை ஆழ்ந்துப் பார்க்க, 'டேய் ஏன் டா.. என்னைப் இப்படி பார்வையாலையே கொள்ளுற.. ப்ளீஸ் வெளிய போடான்னு...' அவனின் பார்வையை வெறுத்து கட்ட வேண்டும் போல தோன்றியது அவளுக்கு. ஆனால், உள்ளுக்குள் மட்டுமே அவள் தவித்தாள்.
அவன் முகத்தை அவள் பார்க்க முடியாமல் தவியாய் தவிக்க, கழுத்துப் பகுதி முழுவதும் வியர்க்க ஆரம்பித்தது.
ரிதி விரல் சப்பிக் கொண்டே வாயில் ஊற்றியதில், அவளுடைய டிசர்ட் ஈரமாகி அவள் உடலோடு ஒட்டி இருப்பதை அப்போது தான் உணர்ந்தவள்,
'அய்யோ.. இவளை தூக்கினா ஈரத்துல என் உடல் அவனுக்கு தெரியுமே!' என்று பயந்தவள்,
“ப்ளீஸ் நரேந்திரா.. நோ நோ, அவளை தூக்காதீங்க..” அவள் சொல்லி முடிப்பதற்குள், நரேந்திரா ரிதியை தூக்கி விட, அவனுடைய வலது கை அவளின் ஈரமான இடத்தில் பட்டுவிட்டது.
அவன் விரல்கள் அவள் நெஞ்சில் பட்டவுடன் அவளின் உடல் பயத்தில் வெடவெடக்க.. அதனால் எழுந்த படப்படப்பில் வேகமாக எழுந்தாள் தன் முன்னே நரேந்திரா குனிந்து இருக்கிறான் என்பதை மறந்தாள்.
அப்போது அவனது உதடு அவளின் கன்னத்தில் அழுத்த, அவனுடைய நெற்றி அவளுடைய நெற்றியோடு மோத.. ரெண்டு பேருக்கும் இடையே இருந்த ரிதி “வீல்” என்று கத்த ஆரம்பித்தாள் தூக்கத்தில்.
அவளை மீண்டும் தன் நெஞ்சிலேயே போட்டு தட்டிக் கொடுத்த நிதன்யா அவனை முறைக்க தவறவில்லை.
அவன் பார்வை தன் மேல் மேய்வதாய் நினைத்தவளுக்கு அத்தனை கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
அவனுக்குமே அது புரிந்தது. ஆள் இல்லாத வீட்டில் தனியாக ஒரு வயது பெண் இருக்கிறாள். இப்படி அவளுடனான இந்த தீண்டல் தனிமையான நேரத்தில் அவளுக்கு தவறான புரிதலை உண்டாக்கி இருக்கும்.
‘ஏற்கனவே என் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது இவளுக்கு. இப்போது சுத்தம்.!’ என்று நினைத்தவன் அவளிடம் மன்னிப்பு கேட்க எத்தனித்தான்.
“ஏய்.. சாரி நிதன்யா.. என் லிப்ஸ் தெரியாம….” என்று நரேந்திரா சொல்லி முடிப்பதற்குள், அவள் அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டுருந்தாள் நிதன்யா.
இதனை சத்தியமாக நரேந்திரா எதிர்பார்க்கவே இல்லை.
அடுத்து அவளை திருப்பி அடிக்க கையை ஓங்கியவன் அதை மடக்கி விலக்கிக் கொண்டு ச்சே என்று காற்றில் வேகமாக குத்தினான்.
“ஏன்டி நான் வேணுமுன்னா உனக்கு முத்தம் கொடுத்தேன். நீ என்ன உலக மகா அழகியா? ஏதோ என் மருமகளை தூக்க வர டைத்துல என் லிப்ஸ் தெரியாம பட்டுடுச்சு.. அதுக்கும் சாரி கேட்க வந்தேன் தானே.. என்னமோ நான் ஒரு பொம்பள பொறுக்கி ரேஞ்சுக்கு என்னை அடிக்கிற நீனு?” என்று அவள் கிட்டே வந்து சீறினான்.
அவனது சீற்றத்திலும் கோபத்திலும் அவளது உடல் அவளை அறியாமலே நடுக்கம் கொண்டது. எதோ அவன் விரல் படாத இடத்தில் பட்டுவிட, அதில் முகிழ்த்த கோபத்தில் அடித்து விட்டாள் தான். ஆனால் அவன் தவறானவன் இல்லை என்றும் புரிந்தது அவளுக்கு.
‘உனக்கு எப்பவுமே அவசரம் தான் நிதா’ என்று தனக்கு தானே பேசிக் கொண்டவள் 'சரி அடிச்சதுக்கு ஒரு சாரியாவது கேட்போம். இல்லனா இவன் பாட்டுக்கு வீட்ல எல்லாத்தையும் சொன்னா பிரச்சனை.. நாளைக்கு வேற ரிதியோட விஷேசம் இருக்கு’ என்று பலதும் யோசித்து பெரிய மனது கொண்டு அவனிடம் மன்னிப்பு கேட்க அவள் வாய் திறக்க..
“என்னமோ நீ பெரிய யோக்கியம் மாதிரி என்னை அடிக்கிற? ஸ்கூல் படிக்கும்போதே லவ் லெட்டர் எல்லாம் எக்ஸ்சேஞ்ச் பண்ணவ தானே நீ? இதுல நான் உனக்கு பொறுக்கி மாதிரி தெரியுறேனா?” என்று அவன் சற்று அதிகமாக அமிலமாக பேசிவிட, மன்னிப்பு கேட்க வந்தவள் அவனின் பேச்சில் அதிர்ந்தவள் விழிகள் சற்றே வலியை காட்டின அவனிடம்.
ஆனால் அவன் வார்த்தைகள் சுடு சொல்லாய் அவளை சுட.. இன்னும் கோபம் முகிழ்த்தது அவளுக்கு. இப்பொழுது கடும் கோபத்துடன் அவனை நோக்கி தன் கையை வீசிக்கொண்டு சென்றாள் நிதன்யா.
ஆனால் அதனை அறிந்தவன் போல அவளது கையை வேகமாக பற்றி தடுத்திருந்தான்.
“ஏதோ ஒரு தடவை என் மேலயும் தப்பு இருந்துச்சுன்னு நீ அடிச்சதை நான் அக்செப்ட் பண்ணுனேன். அதுக்குனு நீ ஒவ்வொரு தடவை கை வீசிட்டு வரும்போதும் கன்னத்தை காட்டுவதற்கு நான் ஒன்னும் புத்தன் கிடையாது. திரும்ப பத்தா கொடுத்துடுவேன் ஜாக்கிரதை..! பொம்பள புள்ளனு பார்க்கிறேன் என் ஒரு அடிக்கு தாங்குவியா டி நீ? பைத்தியக்காரி” என்றவன்,
மீண்டும் தன்னை அடிக்க வந்து விட்டாளே ஒரு வேகத்தில் அவளை தள்ளிவிட அருகில் இருந்த சோபா கட்டையில் நன்றாக அவளது தலை சென்று முட்டியது.
இதை நரேந்திராவும் எதிர்பார்க்கவில்லை. இப்படி அவள் முட்டிக் கொள்வாள் என்று..! அதிலும் அவள் கையில் இருந்த மருமகளை கவனித்தவன் “ஐயோ ரிதி..” என்று பதறி ஓடினான் அவர்களை நோக்கி.. எங்கே பிள்ளை அடிப்பட்டு விடப் போகிறாளோ என்று பதறி.
அவளை தடுக்க தான் அப்படி செய்தானே ஒழிய அவளை திருப்பித் தாக்கிவிடும் எண்ணம் இல்லை. ஏதோ ஒரு வேகத்தில் கோபத்தில் தள்ளிவிட.. அவனின் இந்த திடீர் செய்கையை எதிர்பாராமல் தடுமாறி விழுந்தாள் நிதன்யா.
அவளோ தான் அடிப்பட்டாலும் மருமகள் அடிப்பட கூடாதென தன்னை தற்காத்துக் கொள்வதை விட்டுவிட்டு.. ரிதியை தன் நெஞ்சுக்குள் பத்திரமாக புதைத்து இரு கைகளால் அவளை மூடிக்கொள்ள.. நன்றாக சோபாவின் மரத்திண்டு இப்பொழுது அவள் நெற்றியில் இடித்து புடைத்து இருந்தது.
அதே நேரம் வாசலில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உறவினர்களை அழைக்க சென்று இருந்த நளினியும் கிருஷ்ணகுமாரும் வீடு திரும்பியிருந்தனர்.
அவளின் அம்மாவும் அப்பாவும் கேட்டை திறந்து உள்ளே வருவதைக் கவனித்தவள், ரிதியுடன் தன் அறைக்குள் ஓடிச் சென்று தூங்குவதைப் போல் பெட்டில் படுத்துக் கொண்டாள்.
நரேந்திராவுமே இந்த நேரத்தில் அவர்களை எதிர்பார்க்கவில்லை. அவன் மீதும் தவறு இருக்க.. என்ன செய்வது என்று தெரியாமல் ‘எதுவாக இருந்தாலும் அவளே சொல்லட்டும்.! சமாளிப்போம்’ என்று சோபாவில் அமர்ந்து மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.
என்னதான் பயம் இல்லை என்றாலும் மனதுக்குள் ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்தது அவனுக்கு. இவன் எதார்த்தமாக செய்ததை அவர்கள் தப்பர்த்தத்தில் புரிந்துக் கொண்டால்? இரு வீட்டுக்குமே பிரச்சனை தான்..!
அதிலும் அவன் தங்கை இங்கே வாழ வந்திருக்க.. அவர்கள் வீட்டுப் பெண்ணை தான் அடித்ததாய் தெரிந்தால்? என்னாகுமோ? என்று சிறு கலக்கத்தோடு தான் அமர்ந்திருந்தான்.
நரேந்திராவின் உடல் முழுதும் வேர்த்து இருக்க..
“தம்பி… வாங்க.. வாங்க.. எப்ப வந்தீங்க? எதுக்கு ஃபேனை போடாம உக்காந்து இருக்கீங்க?" என்ற நளினியின் வரவேற்பிலும் கவனிப்பிலும் நிதன்யாவின் கண்களில் அத்தனை கோபக்கனல் பறந்தது.
“வெயில வந்தது ஆன்ட்டி. இப்ப தான் நானும் உள்ள வர்றேன்” என்று அவன் சமாளிப்பதை கேட்டு அவளுக்கு நெஞ்சம் கொதித்தது..!
'பொறுக்கி.. பொறுக்கி.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் என்னை அப்படி பார்த்தான் அப்புறம் என்னை தள்ளி விட்டான், என்னைப் படாத பாடு படுத்துனான்.. இன்னும் அந்த வலியே குறையல.. இங்க ஒன்னும் நடக்காத மாதிரி நடிக்கிறான் பாரு' என்று மனதுக்குள் அவனை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள் நிதன்யா.
“ஏய் நிதா.. எப்ப பார்த்தாலும் தூக்கமா?” என்று அவள் அறையில் உள்ளே வந்த நளினி நிதன்யாவை எழுப்பி விட்டார். அவரின் சத்தத்தில் பாட்டி என்று ரிதியும் விழித்தாள்.
அவளோ நல்ல தூக்கத்துல இருந்து விழிக்கிறது போலக் கண்களை கசக்கிக் கொண்டே திறந்தவள்
“என்னமா.. எப்ப வந்த?” என்று கேட்க..
“கதவை இப்படி தான் பப்பரப்பானு திறந்து போட்டுட்டு தூங்குவியா? யாராவது திருடன் வந்தா என்ன பண்ணுறது? இன்னும் சின்ன புள்ளையாவே இரு. பொறுப்பே இல்லாம?” என்று கடித்தார் அவளை.
“ம்ம்மா.. கத்ததாத மா.. தல வலிக்குது” என்றாள் நெற்றியை பிடித்துக் கொண்டு.
“என்னாச்சு காட்டு?” என்ற நளினி அப்பொழுதுதான் அவள் நெற்றியில் புடைத்திருப்பதை கண்டு
“அய்யய்யோ.. நிதா என்ன ஆச்சு? ஏன் இப்படி புடைச்சிருக்கு நெத்தியில?” என்று அவர் பதற...
அவருக்கு மேல் பதட்டத்தில் இருந்தான் நரேந்திரா. அவள் என்ன சொல்வாள்? என்ன சொல்லி தன்னை மாட்டி விடுவாளோ? என்று..!
அவனின் முகத்தைப் பார்த்து அதை அறிந்தவள் போல அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே நிதானமாக ஹாலுக்குள் வந்தாள் நிதன்யா.
தொடரும்..