முப்பத்தி இரண்டாம் அத்தியாயம்
காதல் எங்கள் சொந்தம்...32
சில தருணங்கள் வாழ்க்கையில் உயிர் போன்றவை.
காவ்யா கதவு திறந்த அந்த தருணம் .... நிரஞ்சனின் மனமும் திறந்தது. என் வீட்டில் குடியிருப்பவரை பார்க்க வந்தேன்.. நெஞ்சில் குடியிருப்பவள் எதிரில் நிற்கிறாள்.
அவன் பார்த்து ரசித்த கண்கள்.
அவன் பார்த்து ரசித்த நிலா முகம்.
அவன் பார்த்து ரசித்த முத்துச்சுடர் போன்ற மனசு..
எல்லாம் அவன் முன் நிற்க.. கடைசி பார்வை. அவனுக்கு கிடைத்த வரம்.. அவள் தன் கண்களை ஒரு முறை கொட்டித் திறந்தபோது அவன் இதயம் நின்று துடித்தது. அவள் தோற்றத்தில் இருந்த ஏதோ ஒரு இதம் அவனை மகிழ்வித்தது. காவ்யா அவன் மேல் கோபமாக இல்லை.... “நல்லா இருக்கியா காவ்யா.?”
இருவர் கண்களும் நீரில் மிதந்து பார்வையை மறைத்தது. அவள் முந்தியால் முகம் துடைத்துக் கொண்டாள். கன்னம் சிவந்து.. விழி சிவந்து.... சின்ன கோபமும் வலியும் தெரிந்தது.
“மனசிலே பூ பூக்க வச்சிட்டு எங்க போனீங்க.?” வற்றிய குரலில் கேட்டாள். அவளை ஒரு உற்சாக ஊற்றாகத் தான் பார்த்திருக்கிறான். இப்ப எழில் இழந்த புனையா ஓவியம் போல் இருக்கிறாள். அவன் மனசு துடிதுடித்தது. அவன் தானே இதுக்கு காரணம்.!
ரோஜாப் பூ மாலை போல் நின்ற அவளை அள்ளிக் கொள்ள அவன் கைகளுக்கு உரிமை இல்லை... சோகமாக புன்னகைத்தான்.
“உள்ள வாங்க....”
“வீட்டுக்குள் வந்திட்டேன். உன் மனசுக்குள்ளிருந்து வெளியே போயிட்டேனே. வாடகை பேச வந்தவன் நான். வீட்டு வாடகை. இது என் அம்மா வீடு காவ்யா....”
காவ்யா என்று அவன் தன் பெயரை உச்சரித்த போது அவளுக்கு சிலிர்த்தது. “இன்னொரு முறை கூப்பிடுங்க.. வாய் நிறைய..”
“காவ்யா.... காவ்யா.... காவ்யா...”
பூஜை மணி அடித்தது போல அந்த குரலே ஒரு ராகம் போல் இருக்க.... அவள் கீரைத் தண்டு போல் துவண்டு.. கீழே விழாமல் இருக்க சோபா நுனியை பிடித்துக் கொண்டாள்.
அவன் பால்கனிக்கு சென்றான். அங்கு அவன் போட்டிருந்த ஊஞ்சல் அப்படியே இருந்தது. அம்மா போட்ட மொட்டைமாடி காய்கறி தோட்டம். வளர்த்த பூச்செடிகள்.... பச்சை நிறம் மாறாமல் இருந்தது.
“இந்த ஊஞ்சலில் தான் அம்மா உட்கார்ந்து லேசா ஆடிக்கிட்டே இருப்பாங்க. அம்மா போனாங்க.. அந்த இடத்தை நீ பிடிச்சே... நா தான் நழுவ விட்டிட்டேன்....” கலா பற்றி....ஜேனட் பற்றி.... அருண் பற்றி.... அவர்களுக்குள் இருந்த பிரச்சனை பற்றி எல்லாம் சுருக்கமாக சொன்னான்....
“நிரஞ்சன்.... ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருக்கலாமே. இப்படி பண்ணிட்டீங்களே.... மூடி மறைச்சா.. உங்க மேலே தானே தப்பு சொல்வாங்க. என்னை ஒரு இருட்டு அறைக்குள் தள்ளி விட்டிட்டீங்க.... போங்க நிரஞ்சன்.. செத்துப் போயிடலாம் போல இருக்கு....” அவள் வாய் விட்டே அழுதாள். அதை பார்க்கும் சக்தி அவனுக்கு இருக்கவில்லை.
“நா வரேன் காவ்யா. உன்னை பார்த்துவிட்ட நிறைவு எனக்குப் போதும். உங்கம்மாவுக்கு போன மாசம் ஃபோன் செய்து சொன்னேன். அவங்க நான் உன்னைப் பார்ப்பதை விரும்பலை.... வராதேன்னு சொல்லிட்டாங்க. எனக்கு இதயமே நின்று போனது.”
“அம்மாவா அப்படி சொன்னாங்க.? எனக்கு ஃபோன் பண்ணியிருக்க வேண்டியது தானே நிரஞ்சன்.? என் ஃபோன் நம்பர் கூடவா மறந்து போச்சு.? இப்படி ஒரு பிரிவை நினச்சுக் கூட பார்கலை.” அறுந்த வீணையின் தந்தி போல் அவள் உள்ளம் அறுந்து நிற்கிறாள்.
“வாழ்க்கை ரொம்ப விசித்திரமானது. மனித உறவுமுறைகள்.. அதில் நிறைந்திருக்கும் முரண்கள்.... எந்த சந்தர்ப்பத்தில் எந்த வார்த்தை வந்து உறவை பிரிக்கும்.. எந்த சொல் செயல் படுகுழியில் தள்ளும்... எல்லாமே புதிர் தான்... கலா வாழ்வில் நேர்ந்த ரோலர் கோஸ்டர் நிகழ்ச்சிகள் கதி கலங்க வச்சிடுச்சு.... ஆண் பெண் உறவும்.. விசித்திரமான குணாதிசயங்களும்.. மிகையான காதலும் கொண்டது தான் கலா.. அருண்.. ஜேனெட் வாழ்க்கை. பீட்டர் என்ற ஒற்றை நட்சத்திரம் மட்டும் இல்லை என்றால்.... கலா வாழ்வு அமாவாசை தான்.. நல்ல வேளை அவள் வாழ்வு பிழைத்தது..”
“என் வாழ்வு பறிபோனது.... ஒரு கடிதம், ஒரு ஈமெயில்.. ஒரு ஃபோன்.. இதெல்லாம் மனிதர்களின் பயன்பாட்டில் இருக்குன்னு கூட மறந்து போனது என்ன நியாயம் நிரஞ்சன்.? உங்க கேர்லெஸ்னஸ் எங்க கொண்டு போய் விட்டிருக்கு பார்த்தீங்களா.? எனக்கு தண்டனை.. உங்க காதல் அவ்வளவு தானா.? ஒருத்தி இங்க உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பது மறந்தா போச்சு.?”
பேச்சுக் குரல் கேட்கவே சந்திரன் மாடிக்கு வந்தான். அவன் கையில் காவ்யாவுக்கு அவன் எடுத்த முகூர்த்தப் பட்டும்.. தாலி சரடும் இருந்தது. அதை காவ்யாவுக்கு காட்ட ஓடி வந்தான். அவன் காண வந்த காட்சி என்ன.? அவன் கண்டுவிட்ட கோலம் என்ன.?
எல்லாவற்றையும் கேட்டான். அரைமணியில் சட்டென்று மாறியது மன நிலை. “நிரஞ்சன்..” அவன் கூப்பிட்டதும் இருவரும் திடுக்கிட்டு திரும்பினர். புயல் கிளம்பப் போகிறது என்று நிரஞ்சன் நினைத்தான். புயல் கரைகடந்து விட்டது என்று அவன் புரிந்துகொள்வான்.
“வாங்க.. உங்க கூட பேசணும்..” என்றான் சந்திரன் நிரஞ்சனிடம்.
“சந்திரன்.... இந்த சந்திப்பு நம் கல்யாணத்தை நிறுத்தாது.” என்றாள் காவ்யா. சந்திரன் புன்னகைத்தான். அவளுக்கு நெஞ்சு படபடத்தது. சந்தேகம் கொள்கிறானா.? எப்படி புரிய வைப்பது.? கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. மண்டபம் நிரம்பி வழிகிறது. உறவினர்கள் கூட்டம்..... சந்திரன் இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று நிறுத்திவிட்டால்.? அம்மாவினால் அதை தாங்க முடியுமா.?
“காவ்யா.... ப்ளீஸ் வித் யுவர் பெர்மிஷன்.. நான் நிரஞ்சனை கூட்டிப் போறேன். ஜஸ்ட் டூ அவர்ஸ். வந்திடுவேன்....” என்றான்.
திருட்டுத்தனமாக காவ்யாவை கூட்டிக் கொண்டு ஓடிப் போக வந்ததாக சந்திரன் நினைத்து விட்டானோ.? நிரஞ்சன் பயந்தான். காவ்யா வாழ்வில் சிக்கல் மேல் சிக்கல் ஏற்படுத்தி விட்டேனே.. “சந்திரன்.... நா நா.. வந்தது.... எனக்கு..” தடுமாறினான்.
“வாங்க....” ஒற்றை வார்த்தை.. திரும்பிப் பார்க்காமல் அவன் செல்ல.. நிரஞ்சன் பின்னோடு சென்றான். காரில் அவர்கள் போவதை படபட மனசுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் காவ்யா.
சிறிது நேரத்தில் ஹேமா வந்தாள்.
“அண்ணாவை காணோம். உன்னை அழைத்து வருவதா சொல்லிவிட்டுப் போனான்..”
காவ்யா ஹேமா தோளில் சாய்ந்து அழுதாள்.
“என்னாச்சு காவ்யா.?” விவரம் சொன்னாள் காவ்யா.
“என்னாகப் போவுதோ தெரியலையே ஹேமா.”
“கவலைப்படாதே காவ்யா. அண்ணா நல்ல முடிவு தான் எடுப்பான். வராதவர் வந்துவிட்டார். வராத பவுர்ணமி வந்துவிட்டது. ஒளி தான் வரும்...... அமாவாசை நெருங்க வாய்ப்பில்லை....”
நிரஞ்சன் சந்திரனை அன்புடன் பார்த்தான். பொட்டானிகல் கார்டன். சுற்றி பூத்திருந்த ரோஜாக்களின் மணம் உள்நுழைந்து நாசியை வருடியது. உலகமே ஸ்தமித்து விட்டது போல ஒரு உணர்வு....
“இவ்வளவு பூக்கள் இருக்கு.... உங்களுக்கு பிடிச்ச பூ எது நிரஞ்சன்.?” அவனுக்கும் காவ்யாவுக்கும் மதுரை மல்லி தான் முதல் சாய்ஸ். எதுக்கு கேக்கறான்.? இப்ப அதுவா பிரச்சனை.?
“எல்லா பூக்களும் பிடிக்கும். மல்லி தான் எங்க சாய்ஸ்.”
“எங்க அப்படின்னா.? உங்களுக்கும் காவ்யாவுக்குமா.?” நேரடிக் கேள்வி.... எங்க என்று சொல்லியிருக்கக் கூடாது....
“உங்களால் பதில் சொல்ல முடியலை..... ஏன்னா உங்களுக்கு உரிமை போனதா நினைக்கிறீங்க. அப்படித்தானே.?”
அதற்கும் நிரஞ்சன் பதில் சொல்லவில்லை.
“ஒரு விஷயத்தை கூட உங்களால் மறக்க முடியவில்லை. காதலில் எத்தனையோ உணர்வுபூர்வமான தருணங்கள் இருக்கும். எல்லாவற்றையும் குழி தோண்டி புதைக்க இப்ப அவசியமில்ல. நீங்க காவ்யாவை ஏத்துக்க தயாரா.?”
“இல்ல சந்திரன்.... நா முடிவு எடுக்கும் தருணம் கடந்து போயாச்சு. காவ்யா மனம் மாறும். நா நாளை ஆஸ்திரேலியா போகணும். பிளைட் காலை எட்டு மணிக்கு.... நீங்க வீணா சிரமப்பட வேணாம்.”
காவ்யா மேல் அவனுள் எழுந்த காதலுணர்வை வற்ற வைக்கப் பார்த்தான் நிரஞ்சன். காலம் கடந்த பின் அந்த இனிமையான உணர்வுகள் வருவது சரியில்லை தானே.!
“உங்க மனசை மறைக்க பாடுபடாதீங்க நிரஞ்சன்.”
“நா யதார்த்தவாதி சந்திரன். தவறுகள் காலை இடறிவிடத் தயாராக இருக்கும் பாறைகள் மாதிரி. நிதானம் என்னும் கம்பிகள் பிடித்துக் கொண்டால் சீராகும் வாழ்க்கைப் பயணம். நா செய்த மாபெரும் தவறு.... தொடர்பின் எல்லைக்கு அப்பால் இருந்தது தான். ஒரு வேளை என் காதலில் ஆழம் இல்லையோன்னு நானே சிந்திக்கிறேன். காவ்யா உங்க தூய அன்பின் பிடியில் என்னை மறந்திடுவா.... காதலை மறக்க வைக்க இன்னொரு காதலால் முடியும்..... புரிஞ்சுக்குங்க சந்திரன். வேதவல்லி அம்மாள் என்னை அப்ரூவ் பண்ணமாட்டாங்க.. காவ்யா இஸ் யுவர்ஸ்....”
“நிரஞ்சன்...... காவ்யா மனசில் நீங்க தான் இருக்கீங்க...”
“நீங்க ரொம்ப நல்லவர் சந்திரன். இப்படி எங்களுக்கு ஒரு ஸ்பேஸ் கொடுக்க யாருக்கு மனசு வரும்.? அதுக்கு நா தலை வணங்குகிறேன். எப்பேர்பட்ட மனசு.! ஆனா வாழ்க்கையில் மூவ் ஆன் பண்ணுவதே நல்லது. மண்டபத்தில் எல்லோரும் காத்துக்கிட்டு இருப்பாங்க.. போங்க. உங்க கையால் தாலி வாங்கிய பின் காவ்யா மனசில் மாற்றம் ஏற்படும். நான் ஒரு வழிப்போக்கன். பை சொல்லிடுங்க இருவரும்....”
“இல்ல நிரஞ்சன். பின்னால் நீங்க வருத்தப்படலாம்....”
“கிரிக்கெட் மாட்ச் நடக்க எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டு ஜனங்கள் காசு கொடுத்து கூடியிருக்கும் போது.... வானம் பொழிந்து ஆட்டத்தை கெடுத்துவிட்டால் எப்படியோ.. அது போல் தான் இப்ப என் வருகை. மழையை சபிப்பார்கள்.... அந்த சாபம் வேண்டாமே. ஓடும் மேகம் ஓடினால், தேடும் நெஞ்சம் தேடலாம், தேடும் நெஞ்சம் தேடினால் செல்லும் மேகம் திரும்புமோ.?.... என் பாதை வேறு.... ஆல் த பெஸ்ட்... நீடூழி வாழ்க. மனசார வாழ்த்துகிறேன்.”
“அப்ப உங்க வாழ்க்கை.? ப்ளீஸ் நீங்க கல்யாணம் பண்ணிக்கணும். அப்ப தான் எங்க வாழ்க்கை நல்லாயிருக்கும்.”
அவன் கண்களில் கெஞ்சல் இருந்தது. இவன் கண்களில் கருணை இருந்தது. “இன்னொரு காவ்யா எனக்கு வரலாம்....” சிரித்துக் கொண்டே சொன்னான் நிரஞ்சன்.
சந்திரனின் கண்களில் ஒரு சந்தோஷம் மின்னியதை பார்த்தான் நிரஞ்சன். அது மௌனமாக சொன்னது ரொம்ப தாங்க்ஸ்....
காவ்யா.. என்னை மன்னித்துவிடு.... உன் ஆசையை தூண்டிவிட்டேன். உன் வாழ்வில் நான் சிறிது நேர மரநிழல். உன்னை அடைய சந்திரனுக்குத் தான் தகுதி இருக்கு.
இந்திரன் பொழிந்த கடும் கல் மழையிலிருந்து ஆய்பாடி மக்களையும், ஆநிரைகளையும் காக்க கிருஷ்னர் தன் சுண்டு விரலால் கோவர்த்தன மலையை குடை போல் விரலால் தூக்கினார். அந்த குடை போல.... சந்திரன் காவ்யாவையும் அவளின் மலர்விழி விடுதியையும் காப்பாற்றுவான் என்ற நிம்மதியில் நிரஞ்சன் விமானம் ஏறுகிறான்.
நிரஞ்சனை வழி அனுப்பிவிட்டு சந்திரன் வீடு வர.... காவ்யா அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.... அழுதாள். இதயமே வெளிவந்துவிடும் போல் அழுதாள். அவளை அழ விட்டான். பின் மிருதுவாக சொன்னான்.
“நீ அழவா நான் உன்னை கல்யாணம் செய்ய சம்மதிச்சேன்?. நோ மோர் டியர்ஸ்.” என்றான்.
“ஒரு முறை நிரஞ்சனை பார்த்துவிட்டேன். அது போதும் சந்திரன். நா களங்கப்பட்டவள்ன்னு....”
அவள் வாயை பொத்தினான். “ஒரு நாளும் தங்க மலரில் களங்கம் இருக்க முடியாது.... நீ என்னவள்.. உன் காதலுக்காக காத்திருப்பேன்.”
காதல் எங்கள் சொந்தம் என்று அறிந்து தான் நிரஞ்சன் மென்மையாக விலகி.. எங்கள் கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிச் சென்றாரோ!.... என்று எண்ணுகிறான் சந்திரன்.
போகும் முன் நிரஞ்சன் காவ்யாவுக்கு ஃபோன் போட்டான்.
“காவ்யா.... சந்திரன் ரொம்ப ரொம்ப நல்லவர். அவரிடம் உன்னை ஒப்படைக்கிறேன். நான் உன் வெல்விஷர்.... பை காவ்யா. ஹாப்பி மாரிட் லைவ். சந்திரனை காயப்படுத்தி விடாதே..” அந்த வார்த்தைகள் தான் காவ்யாவின் மனதை ஒருநிலைப்படுத்தியது.
கல்யாண வீட்டில் அனைவரும் கூடி நின்றனர். அன்புடன் வாழ்த்தினர். ஹேமா.. நிர்மல் ஜோடி. கற்பகம்.. கைலாஷ் ஜோடி. வள்ளி.. அமுதன் ஜோடி.
வள்ளி மீண்டும் தாய்மை அடைந்த நிலையில் பூரித்து நின்றாள். சசியிடம் அவள் சொன்னாள்.
“சசி.... உன்னை நான் ரொம்ப காயப்படுத்திட்டேன். என்னை மன்னிச்சிடு மா.”
“ஆன்ட்டி.. உங்களுக்கு உங்க அமலாவே வந்து பிறப்பா...” என்றாள் சசி அன்புடன். அந்தக் குழந்தையின் உயர்ந்த குணம் முன் தலைகுனிந்தாள் வள்ளி.
பிரபுசங்கர் கற்பகத்தை தன் சகோதரியாக ஏற்றுக்கொண்டதற்கு அவள் கணவன் கைலாஷ் பிரபுவிடம் தன் மகிழ்ச்சியை தெரிவிக்கிறான்.
நிர்மல் அண்ணனிடம் தாங்க்ஸ் அண்ணா என்கிறான். இன்பா அதன் பின் பிரபுவை பார்த்து பாய்வதில்லை. செல்ல நாயாக அதுவும் கல்யாணத்தில் பங்கு கொண்டது.
வாழ்க்கை சுவாரசியமானது. காதலும் சுவாரசியமானது.
“திருமணம் செய்யும் ஒவ்வொரு தம்பதியும் காதல் எங்கள் சொந்தம் என்று ஒற்றுமையாக வாழ்ந்தால்.... நீதிமன்ற படி ஏற வேண்டியதில்லை.” என்கிறார் கிரிதரன்.. சந்திரனின் சித்தப்பா.
புரிதல்.. விட்டுக்கொடுத்தல்.... உண்மையாக இருத்தல் என்று இருந்தால் எந்த தம்பதிகளுக்கும் காதல் சொந்தமாகிவிடும். வாழ்க்கை வசப்படும்... என்று காவ்யா--சந்திரன், ஹேமா—நிர்மல் புரிந்து கொண்டார்கள்.
நிறைவடைந்தது.