சின்னா - 6
“லே.. நிறுத்து நிறுத்து"
பெரியாத்தாவின் திடீர் கத்தலில் முருகேசு சடன் பிரேக் அடிக்க, அப்போதுதான் கண்கள் சொருக தூக்கத்திற்கு போயிருந்த மணிகண்டன் அரண்டு விழித்தான்.
“செம்மனூர் பள்ளிக்கோடம் வந்தா நிறுத்தச் சொன்னேன்ல. ஒம்பாட்ல நிறுத்தாம போற..”
" மறந்துட்டேனாத்தோ”
பெரியாத்தாவின் அரட்டலில் முருகேஸூ குரல் கொடுக்க,
"என்னாச்சி பாட்டி. பாத்ரூம் எதாச்சும் போகணுமா? என்றான் அரவிந்தன்.
ஒருமாதிரியாய் முழித்தார் பாட்டி.
பாட்டி முழித்த முழியில், ‘ஏதோ தவறா இருக்கே’ என்று அரவிந்தன் யோசிக்கவும்,
“சார் ஏதோ ப்ளான் பண்ணிருச்சிங்க" என்றான் மணிகண்டன்.
அரவிந்தனது குழப்பமும் அதுதானே!
சுற்று முற்றும் பள்ளிக்கூடத்து வாசலை எட்டிப்பார்த்த பெரியாத்தா, “லேசா நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்குய்யா. லே மணி போய் சோடா வாங்கியா” என்று கண் முழியை மேலே சொருகிவிட்டு சாய, பயந்துபோனான் அரவிந்தன்.
“பாட்..டி.. பாட்டி என்ன பண்ணுது”
பதறியடித்து தண்ணீரை முகத்தில் தெளித்து கன்னத்தில் அரவிந்தன் தட்டிக்கொண்டிருக்க, பக்கத்து பெட்டிக்கடைக்கு ஓடினான் மணிகண்டன்.
சில நிமிடங்களில், “ஏய் இந்தா அகரன் வந்துட்டாம் டி" என்ற பார்வதி பாட்டியின் சந்தோசக் கூச்சலில்,
"வந்துட்டானா” என்று படக்கென எழுந்து அமர்ந்தார் பெரியாத்தா.
அரவிந்தனுக்கு நிமிடத்தில் கண்ணைக் கட்டியது.
மலங்க மலங்க நின்றிருந்த மணிகண்டனின் கையிலிருந்த சோடா அவனைப் பார்த்து கேலியாய் சிரிக்க,
‘எல்லாம் நடிப்பா கோபால்’ மூச்சு வாங்க முறைத்து நின்றான் அவன்.
கோவத்தில் கையிலிருந்த சோடாவை மடக்மடக்கென தன் தொண்டையில் ஊற்றி, அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, “அட பிக்காலிப் பயலே" என்றார் பெரியாத்தா.
அதற்குள் கையில் பெரிய கோப்பை ஒன்றை பிடித்தபடி அகரன் நெருங்கி இருந்தான்.
"வர எம்பூட்டு நேரம்லே. எப்பா போலீஸ்காரன் அடி நச்சுன்னுதான் இருக்கு” என்று கன்னத்தை அப்படியும் இப்படியும் பெரியாத்தா சுழித்துக் காட்டினார்.
“ஆத்தோ, இதெல்லாம் அடியா. எங்க அண்ணன் அடிச்சா பல்லு தெறிச்சிரும் பார்த்துக்க. உனக்கு இருக்க அலும்புக்கு நிக்கற லாரிய உன் மேல ஏத்தப்போறேன் பாரு" என்று மணிகண்டன் கடுப்பாக, “ அடப் போடா! என் வயசுக்கு எம்பூட்டு பார்த்திருப்பேன்" அசால்ட்டாக திரும்பிக்கொண்டார் அவர்.
இவர்களது சண்டையில் தலையை அப்படியும் இப்படியும் மெதுவாய் ஆட்டிய அரவிந்தனுக்கு மெல்லிய புன்னகையும் உதிக்க மறைத்துத் திரும்பி நின்றுகொண்டான்.
எத்தனையோ ரவுடிகளின் அட்டகாசங்களைப் பார்த்திருந்தவன் இப்படியொரு மூதாட்டிகளின் அலப்பறையை இதுவரைக் கண்டதில்லை. அதில் எழுந்த புன்னகைதான் அது.
ஏற்கனவே புள்ளியாய் அவன் மனதில் உதித்த சந்தேகத்தை உறுதிப் படுத்தி இருந்தாரல்லவா பெரியாத்தா!
ஒரு நிமிடம் உண்மையில் பயந்து விட்டான்தான். கூட்டிப்போவது அத்தனைபேரும் வயதானவர்கள் எதாவது ஒன்றானால் அவனல்லவா பதில் சொல்ல வேண்டும்.
அதுவும் அடம்பிடித்து அட்டையாய் ஒட்டிக்கொண்டவர்களை வெட்டி விட முடியாமல் மல்லுக் கட்டிக் கொண்டிருப்பவனை மேலும் மேலும் சோதனைக்குள்ளாக்கினர் மூத்த தேனீக்கள்.
அகரனைப் பார்க்க, பார்வையால் கெஞ்சினான் அவன்.
“ப்ளீஸ்.. ப்ளீஸ் சார். இந்தக் கப்ப மட்டும் சின்னாட்ட காமிச்சிட்டு வந்துடறேனே”
அவனின் நெஞ்சு உயரத்திற்குப் பிடித்திருந்த கோப்பையைத் தூக்கிக் காட்டி கெஞ்சினான்.
“நீ படிக்கிறதானே. உனக்கு புரியாதா அகரா? நாங்க என்ன டூரா போறோம்?
பாட்டிகளுக்கு புரியவைக்க முடியாததை அகரனிடம் புரிய வைக்க முயன்றதில் குரலில் சற்றுக் கடுமையைக் காட்ட,
“அப்போ இது டூர் இல்லையா சார்"
மணிகண்டன் சீரியசான தோணியில் சிரிக்காமல் கேட்டு வைக்க,
அரவிந்தனின் முறைப்பில், அவன் குடித்த சோடா அவனுக்கே ஆப்பாகி ஏப்பமாக வெளிவந்தது.
“சார்..இது கேஸ்டிக்! நான் ஒன்னும் பண்ண முடியாது." எனவும் கொல்லென்று சிரித்தது பாட்டிமார் கூட்டம்.
“எல்லாம் உங்களாலதான். ரவுடீ பேபீஸ்" என்றவன் கப்சிப் ஆக,
"நான் சொன்னேன் சார்! பெரியாத்தாதான் வழிதெரியாத ஊர்ல நீங்க எங்கயும் கடத்திட்டு போய்டுவீங்கன்னு கூட வர சொல்லிச்சி” என்றான் அகரன்.
அகரன் இப்படிச் சொன்னதும் அரவிந்தன் இடுப்பில் கை வைத்து பெரியாத்தாவை முறைக்க, விழுந்து விழுந்து சிரித்தான் மணிகண்டன்.
“இவுகதான் உலக அழகி ரம்பை, ஊர்வசி மேனகை. அப்படியே கடத்திட்டுப் போய் கற்…” என்ற மணிகண்டனை,
"மணி!" என்று அரவிந்தன் ஒரு அரட்டல் போடவும்,
"கற்சிலை பண்ணி பீச்ல வைக்கப்போறோம்னு சொல்ல வந்தேன் சார்" என்றவன் மாற்றி விட,
"சின்னப்பையன் முன்னாடி பார்த்து பேசு” என்றான் கண்டிப்பானக் குரலில்.
“பின்ன என்ன சார். சொல்றதுனாலும் ஒரு நியாயம் வேணாமா” புலம்பியவனிடம் முகத்தைக் கோணி அலகுக் காட்டினார் பெரியாத்தா.
“இரு கிழவி போற வழியில உன்னை இறக்கிவிட்டு எங்கயாச்சும் தொலைக்கல.. என் பெயர் மணிகண்டன் இல்ல"
பெரியாத்தாவின் காதுக்குள் வீராவசனம் பேசினான் அவன்.
“பாட்டி என்னோட சொந்த ரிஸ்க்லதான் உங்களை எல்லாம் கூட்டிட்டுப் போறேன். இப்படியே பண்ணிட்டு இருந்தீங்க ஜீப்ப விரட்டறதுக்கு எனக்கு இரண்டு நிமிஷம் ஆகாது"
சின்ன கண்டிப்புடன் அரவிந்தன் சொல்லவும்,
“ஒரு கடை கன்னிக்கு போகணும்னா உன்னையாய்யா போகச் சொல்ல முடியும். இல்ல இந்த மணி பயலதான் போகச் சொல்ல முடியுமா” என்றார் பார்வதி பாட்டி.
“லே! பராக்கு பார்த்துட்டு நிக்க. அதான் சோடாவ எடுத்துக் குடிச்சிட்டியே, விரசா வண்டில ஏறுவியா”
ஒன்றும் நடவாததுபோல் மணிகண்டனை விரட்டிய பெரியாத்தா,
“நிசம்னு நம்பி மூச்சு வாங்க ஓடியாந்துருக்கான் பாவம்!” என்று கிலுக்கிச் சிரிக்க கூடவே கலகலத்துது தோழியர் கூட்டம்.
‘எல்லாம் என் நேரம்’ என்று தலையிலடித்துக் கொண்ட மணிகண்டன், “உனக்கு எதுலதான் விளையாடுறதுன்னு இல்லைல்ல. இன்னொருதரம் நடி. ஓடுற லாரிக்கடியில நிச்சயமா உன்னை உருட்டுறேனா இல்லையா பாரு" என்று பெரியாத்தாவை இடித்துக் கொண்டு ஏறி அமர்ந்தான்.
“டேய்! நீயும் இதுங்களோட சேர்ந்துட்டியா? உருப்பட்டா மாதிரிதான். அதென்ன உங்க ஊர்ல ஒருத்தரையும் வீட்ல தேடமாட்டாங்களா?" என்ற மணிகண்டன் அகரனையும் விரட்ட,
"இந்த வண்டியே அவங்க அப்பாவோடதுதான். அவர்தான் புள்ளைக்கு லீவு விட்டாச்சி கூட்டிட்டு போய்ட்டு வான்னு அனுப்பி விட்டார்” என்றான் முருகேசு முன்னாலிருந்து.
“சார், எல்லாம் ப்ரீ ப்ளான்ட் சார். எனக்கு என்னவோ சின்னாவக்கூட இவங்களே கடத்தி வச்சிருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு" என்றான் மணிகண்டன்.
“எங்க சின்னாவ நாங்க ஏன் கடத்தப்போறோம்" பார்வதி பாட்டி சண்டைக்கு வர,
“இந்தா போலீஸ் பந்தோ பஸ்த்தோட ஊர் சுத்திப் பார்க்க போறீங்கல்ல. அதுக்குதான்" என்றதும் அரவிந்தனே சிரித்து விட,
“முருகேசு வண்டிய எடுடேய்! தம்பி சிரிச்சிட்டு"
ஏதோ இரயிலுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்ததைப் போல் சந்தோசக் கூச்சலிட்டார் பெரியாத்தா.
சிறிது தூரம் சென்றிருக்க, “சார் அன்னைக்கு அந்த சுந்தரி வீட்டுக்கு போனீங்கல்ல எதாச்சும் தெரிஞ்சுதா" என்றான் மணிகண்டன்.
“சுந்தரி வீட்டுக்கா?" கேள்வியுடன் தேனீக்கள் மூவரும் அரவிந்தனை ஏற இறங்கப் பார்க்க,
"ஹேய்…ஹேய்..ரவுடீ பேபீஸ். நீங்க நினைக்கிறா போல இல்ல. எங்கண்ணன் உத்தமரு. அந்தப் பொண்ணுக்கு என்னாச்சி நிஜமாவே காணோமா?
அவங்கப்பன் சொன்னாமாதிரி எதாச்சும் நடந்திருந்தா!
படிக்கிற புள்ள இல்ல. அதான் சார் அன்னைக்கே வீட்டுக்கு போனார். ஸ்டாப் யுவர் டர்ட்டி கற்பனைஸ்” என்றான்.
வெறுமனே மறுத்துத் தலையாட்டினான் அரவிந்தன்.
என்ன கேட்டும் சுந்தரி கூற மறுத்து விட்டிருந்தாள்.
“என் பொண்ணு பாதுகாப்பாதான் இருக்கா சார். ப்ளீஸ், நீங்க சின்னாவ மட்டும் பாருங்க" அதோடு நிறுத்திக் கொண்டாள்.
"இல்ல அப்படி விடமுடியாது. சின்னப் பொண்ணு அவ பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம். ஒருவேளை அவங்கப்பா சொன்னா…”
அரவிந்தன் முடிப்பதற்குள்,
“சார்" என்று அலறினாள்.
"நான் சாக்கடைல வாழ்றவதான். ஒருநாளும் என் பொண்ண இந்தச் சாக்கடைல தள்ளிட மாட்டேன்” கண்ணீர் வழிந்தது.
“என் பொண்ணு ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறா சார். என்னை நம்புங்க. இதுக்கும் மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ்” கையெடுத்துக் கும்பிட, அரவிந்தனால் அதற்குமேல் கேட்க இயலவில்லை.
குற்றங்களையும் குற்றவாளிகளையும் அறிந்தவனுக்கு அந்தத் தாயின் கண்ணீரில் பொய் இருப்பதுபோல் தோன்றவில்லை.
அந்தப் பெண்ணின் வீட்டில் அவ்வளவு மெடல்கள் தொங்க விடப்பட்டிருந்ததையும் அதிலிருந்த பள்ளியின் விலாசத்தையும் மனதில் குறிப்பெடுத்தவன் ஒன்றும் பேசாமல் வந்து விட்டிருந்தான்.
மெடல் என்றதும்தான் அகரனின் கையிலிருந்த கோப்பை நினைவுக்கு வர,
“உன் சைஸ விட பெருசா இருக்கே. குடு பார்க்கலாம்" என்று வாங்கிப் பார்த்தான் அரவிந்தன்.
முதல் பரிசு ‘சின்னா தி ரோமியோ’ கபடிக்குழு என்று பொறிக்கப் பட்டிருந்தது.
படிக்கும் வயதில் என்ன ரோமியோ?
“என்னடா இது” அதிலிருந்த பெயர் கோபத்தைத் தர குரலைச் சற்றே உயர்த்தினான்.
“அது எங்க கபடிக்குழு பெயர் சார். சின்னா வச்சதுதான். நான்தான் கேப்டன் தெரியுமா? எங்க குழுவுக்கு ப்ராக்டீஸ் குடுத்தது எல்லாம் எங்க சின்னாதான்" என்று பெருமை பேசியவனின் குரலில் ஏகத்திற்கும் மகிழ்ச்சியின் சாயல்.
“எங்க சின்னா களத்தில இறங்கி நின்னா எப்படி இருக்கும் தெரியுமா?” என்று சரஸ்வதிப் பாட்டி கேட்டதும்,
"சும்மா அதிரும்ல” என்றார் பெரியாத்தா ரஜினி ஸ்டைலில்.
‘பித்து முத்திப்போச்சி’ தலையிலடித்துக் கொண்டான் மணிகண்டன்.
கூடவே, மனுஷன் வாழ்ந்திருக்கார் சார்" என்றான்.
சின்னா சின்னா.. சின்னா மூச்சுக்கு முந்நூறு தடவை அவர்கள் வாயில் சின்னா அரைபட்டார்.
அரவிந்தனுக்குமே அந்த மனிதனை பார்க்க வேண்டும் போல் தோன்றிற்று.
ஏதோ யோசித்தவனாக அலைபேசியில் சரவணப் பெருமாளை தொடர்பு கொண்டான்.
இவர்கள் கிளம்பியவுடனே ஸ்டேஷனைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்பியிருந்தவர் எரிச்சலுடனே எடுக்க, எங்கோ கிளம்பிக்கொண்டிருந்த மனைவியை பார்வையால் தடுத்தி நிறுத்தினார் சரவணப் பெருமாள்.
“பெருமாள் சார், சுந்தரி பொண்ணோட ஸ்கூல்ல போய் விசாரிக்கச் சொன்னனே விசாரிச்சீங்களா?”
"விசாரிச்சிட்டேன் சார். அந்தப் பொண்ணு ஸ்கூல்லருந்து டிஸி வாங்கிருச்சாம்”
உண்மையில் அவர் பள்ளிக்கூடம் சென்று விசாரிக்க வில்லை. அங்கு பணிபுரியும் தனக்குத் தெரிந்த ஆசிரியரிடம் அலைபேசியில் விசாரித்திருந்தார்.
அரவிந்தன் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்த பிறகுதான் அவர் ஒழுங்காக ஸ்டேஷன் வருவதே. இல்லையெனில் பெயருக்கு வந்துவிட்டு முழுநேரமும் வீட்டில்தான். மூக்கு முட்ட விதம் விதமாக மனைவியின் கையால் சாப்பிட்டுவிட்டு அதில் ஆயிரம் நொட்டை சொல்வார்.
தன் சுதந்திரம் பறிபோனதில் உண்மையில் அரவிந்தன்மீது இலேசான கடுப்புதான். முன்னிருந்த இன்ஸ்பெக்டர் போல் இவனில்லையே.
இவனது கடமை உணர்ச்சியில் கடுப்பாவார்.
கிட்ட தட்ட அரவிந்தன் எதிர்பார்த்த பதில்தான்.
“ப்லோமினா லேண்ட் ரிஜிஸ்ட்ரேஷன் உண்மையான்னு விசாரிக்கச் சொன்னனே விசாரிச்சிட்டீங்களா"
"நாளைக்கு போறேன் சார். வண்டி பஞ்சர் ஆகிடுச்சி” பொய் சொல்லிவிட்டு வைத்துவிட்டவரை கடுப்பாகப் பார்த்தாள், அவரது மனைவி ஷர்மிளா.
“எங்கடி ஊர் மேயப் போற?”
அமிலத்தில் தோய்த்து வந்தன சரவணப் பெருமாளின் வார்த்தைகள்.
“நான் திடீர்னு திரும்பி வரவும் மூஞ்செல்லாம் கோணுது"
"சொன்னேன்ல எங்கண்ணன் பொண்ணு வயசுக்கு வந்திருக்கான்னு” ஷர்மிளாவின் வார்த்தைகள் தொண்டைக்குள் சடுகுடு ஆடியது.
ஏற்கனவே இது விசயமாய் ஒரு பிரளயம் வெடித்திருந்தது வீட்டில்.
"போகக் கூடாதுன்னு சொன்னதால்ல ஞாபகம்" குரலில் ஏளனம்.
"எல்லாரும் கேட்கமாட்டாங்களா? நீங்க வரலைன்னாலும் அத்தைகாரி நான் போகணுமில்லங்க"
"இவ அண்ணனை நம்ம குழந்தை வேலு பாத்திரக் கடைல பார்த்தேன் டா பெருமாளு.
பாத்திரத்த மலையா வாங்கிக் குவிக்கிறான். கொழுந்தியாக்கு கல்யாணமாமில்ல. கல்யாணத்துக்கு சீர் செய்யவா இருக்குமோ?”
உள்ளிருந்து மாமியாரின் குரல்.
இப்போது சம்மந்தமே இல்லாத இந்தப் பேச்சு எதற்கென்று புரியாதவளா ஷர்மிளா. எரிச்சலாக மாமியாரைப் பார்த்தாள்.
"உன் நொண்ணன் அப்படியே பொங்கல் தீபாவளின்னு சீர் செஞ்சி நொட்டிக் கிழிச்சிட்டான். இதுல அத்தையாம் அத்தை. போகக்கூடாதுன்னா போகக்கூடாதுதான்”
கண்ணீர் வந்துவிட்டது ஷர்மிக்கு. இன்னும் எத்தனை வருஷத்துக்கு பொங்கல் சீர் செய்வாங்களாம்.
மகனின் இந்தப் பேச்சுக்காகத்தானே அவளது மாமியார் சம்மந்தமில்லாத சீர் பேச்சை இழுத்ததே. எப்போது எதைப் பேசினால் மகன் ருத்ர தாண்டவமாடுவான் என்று விரல் நுனியில் வைத்திருப்பார்.
கொழுத்திப் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் முகத்தைத் திருப்பிக் கொண்டார் அவளது மாமியார்.
எப்போதும் இப்படித்தான் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் மகனிடம் விஷத்தை ஏற்றிவிடும் அவளது மாமியார். இனி அழுது பிரயோஜனமில்லை.
“போக வேண்டியதுக்கு போய்தான் ஆகணும். நான் போறேன்" வாசல் படியை அவள் தாண்ட,
“நீ அங்க போய் என்ன பண்ணப் போற" அவள் மாமியாரேதான்.
“அவன்தான் அப்படி நிக்கிறான்ல. நீதான் அடங்கிப் போயேன்"
நல்லது சொல்வதைப்போல் விசத்தை கக்கினார். இதுவும் மகனைத் தூண்டும் மறைமுக முயற்சி. நீ அடங்கவில்லை. அவன் கேட்பான்தான் என்ற குறிப்பு அது.
"இப்படித்தான் எங்கப்பா அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல கிடந்தப்பவும் நீ போய் என்ன பண்ணப் போறன்னு கேட்டீங்க" என்று மாமியாரிடம் கேட்டவள், கணவனிடம் திரும்பி,
“ஏன் உங்கம்மா உங்க சித்தியோட... மருமகளோட.. தங்கச்சிக்கி கல்யாணம்னு சுத்தல் உறவு முறைக்கு போனாங்கல்ல. அதுவும் இங்க கூட இல்ல. ஊருக்கு போனாங்க. அப்ப கேட்க வேண்டியதுதானே நீ அங்க போய் என்ன பண்ணப் போறன்னு" அழுகையுடனே வாய் துடுக்காய் கேட்டுவிட அடுத்த நொடி அவளது கன்னம் பழுத்தது.
"என்னடா பெருமாளு” என்று போலியாய் பதறி எட்ட நின்றே வேடிக்கைப் பார்த்த அவளது மாமியார்,
"நீ தான் அவன்கிட்ட வாய கொறைச்சி பேசேன்.
என்னவோ உங்கப்பன பார்க்க போகாத மாதிரி பேசற. எங்களுக்கு எதும் தெரியாதுன்னு நினைப்போ” என்றார்.
அடிப்பதை தடுக்க வந்து தன்னை நல்லவள் போல் மகனிடம் காட்டிக் கொண்டவர் அடுத்த பிரச்சனையை மகனின் தலையில் வாகாய் ஏற்றி வைத்திருந்தார்.
அடுத்த நொடி, “அந்தப் பிச்சைக்காரன பார்க்க போனாளா" என்று உருமியது அந்த மிருகம்.
பிச்சைக்காரன்தான் ஐம்பது சவரன் நகை போட்டானா? வீடு வாங்க உதவி செய்தானா? ஏதோ கெட்ட நேரம் அவர்கள் பொருளாதார நிலையில் இப்போது தாழ்ந்து விட்டிருந்தனர். அதுவும் இவளது கல்யாணத்திற்கு வாங்கியக் கடனே முக்கியக் காரணம். குமைந்தது ஷர்மியின் உள்ளம்.
“போனாளோ போகலையோ அவங்கப்பனுக்கு அடிபட்ட அன்னைக்கு இவள ஆட்டோல பார்த்ததா ஒரு ஆள் சொல்லிச்சி” என்று அடுத்த வெடியைக் மின்னாமல் முழங்காமல் கொழுத்திப்போட, “என்னைக்கும்மா” என்றார் சரவணப் பெருமாள்.
"அதை விடுறா!” என்றவர், “அன்னைக்கு கூட நீ யாரோ கிழவன் மேல வண்டிய ஏத்திட்டேன்னு பிரச்சனையாகிடுச்சின்னு லேட்டா வந்தியே. அன்னைக்குதான்”
விடுறா என்றுவிட்டு எவ்வளவு அழகாக விவரிக்கிறது இந்தக் கிழம். ஷர்மிளாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
‘இவளுக்கெல்லாம் ஒரு கேடு வரமாட்டுதே’ என்று புலம்பியவளுக்கு கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.
“செஞ்சிருப்பா இவ. என்னை மீறி இன்னைக்கு நீ எப்படி போறன்னு பார்க்கிறேன்” உருமி விட்டுச் சென்றார் சரவணப் பெருமாள்.
‘விலங்குகள் உடைக்கப்படாதவரை தடைகள் அகற்றப்படுவதில்லை ஷர்மி’ சின்னாவின் குரல் அவள் காதுக்குள் எதிரொலிக்க, நிமிர்ந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
சின்னா வருவான்...