சிற்ப பாவை - 10
"என்ன வெண்பா, பொண்ணு சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிடுற போல? காலத்துல கல்யாணம் பண்ணி வைக்காம இப்படி வேலைக்கு அனுப்புறீயே, இது என்ன பழக்கம்?"
வெண்பா நிமிர்ந்து பார்த்து, "பொண்ணும் பையனும் படிச்சா வேலைக்குத்தான் போவாங்க பாட்டி. அது அவளோட இஷ்டம். இதுல நான் சொல்ல ஒண்ணுமில்லை," என்று சுருக்கமாகப் பேசி விட்டு நகர்ந்தார்.
ஊர் உலகம் அப்படித்தான்... பொம்பளைப் பிள்ளை வேலைக்குப் போனால் வாய்க்கு வந்தபடி பேசினார்கள். வெண்பா அத்தனையையும் பல்லைக் கடித்துக்கொண்டு சகித்தார்.
இப்போது காத்தவராயனுக்கு முழுநேரப் பணிவிடை தேவையில்லை என்பதால், வெண்பா வேலை தேடிப் பரந்தாமனிடம் சென்றார்.
"தம்பி, அந்த மெக்கானிக் ஷெட்டுல ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்கப்பா," என்றார்.
"உங்களுக்கு எதுக்குமா இந்த வேலை?" என்று அவன் கேட்க,
"வீட்டுல இருந்தா மூணு பொம்பள பிள்ளைகளை எப்படிப்பா கரை சேர்க்கிறது? நான் வேலைக்குப் போனா என் பொண்ணுக்குப் பாரம் குறையும்ல," என்றார் ஏக்கத்துடன்.
“சரி மா நான் பக்கத்தில் வேலை கேட்கிறேன். இங்க எனக்கே வேலை இல்லாமல் தான் ஆட்டோ ஓட்டுறேன்.”
சுடரும் தன் பங்கிற்குப் பக்கத்தில் இருந்த மெடிக்கல் ஷாப்பில் இரவு நேர வேலையில் சேர்ந்தாள். கவி தந்தையைப் பார்த்துக் கொள்ள, வெண்பாவிற்கு ஒரு மளிகைக் கடையில் மாதம் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.
தன் வீட்டுப் பெண்கள் தன் கஷ்டத்தை தாங்கிக் கொள்ளத் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வதைக் கண்டு, காத்தவராயன் உள்ளுக்குள் குமைந்து போயிருந்தார்.
நான் இவர்களுக்குப் பாரமாக இருக்கிறேனோ? என் மருத்துவச் செலவு மட்டும் இல்லாமல் இருந்தால், இவர்களுக்குப் போதுமான வருமானம் மிஞ்சுமல்லவா?" என்று ஒவ்வொரு நாளும் அந்தத் தந்தை உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தார்.
ஒரு முதிர்ந்த மரம் வேர் காய்ந்து விழுவதைப் போலத் தன் நிலை இருப்பதை எண்ணி அவரது உள்ளம் குமைந்தது.
அவர் நீண்ட நாள் உயிர் வாழ மாட்டார் என்று மருத்துவர்கள் கைவிரித்த பின்னும், "எங்கள் தந்தை இருக்கும் வரை எங்களோடு இருக்கட்டும், உயிரைத் தக்க வைக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்" என்று அவரது பிள்ளைகள் பாசத்தால் அவரைத் தாங்கிக் கொண்டிருந்தனர்.
அதே சமயம், பிரனேஷ் தன் மனைவியை அழைத்துக்கொண்டு பைக்கில் ஏறினான். அப்போது வீட்டின் மேலிருந்து கீழே இறங்கி வந்த கவி, அவனைக் கண்டதும் கண்களாலேயே எரிப்பது போலப் பார்த்தாள்.
அந்தக் பார்வையின் கூர்மை தாங்காமல், பிரனேஷால் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூட முடியவில்லை.
"வழியைப் பார்த்து வண்டியை ஓட்டு; கண்ட இடத்துல கண்ண மேய விடாதே போ!" என்று சிறிதும் மரியாதை இல்லாமல் பேசிய வாசவியின் சொற்கள் அவனது செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.
அதை எதிர்த்துப் பேச துணிவில்லாமல் மௌனியாக வண்டியைச் செலுத்தினான்.
"அந்த மெடிக்கல் ஷாப்ல நிறுத்து, எனக்குத் தலை எல்லாம் பயங்கரமா வலிக்குது... நான் போய் மாத்திரை வாங்கிட்டு வரேன்" என்று அதிகாரமாகக் கட்டளையிட்டாள் வாசவி.
பிரனேஷ் அவள் பின்னாலேயே நிழலைப் போலச் சென்றான்; இல்லையென்றால் அவள் வீசும் கடுஞ்சொற்கள் ஊர் அறிய அம்பலமாகி விடுமோ என்ற பயம் அவனுக்கு.
அங்கே சுடர் வேலை செய்து கொண்டிருந்தாள்.
"சுடர், தலை வலிக்குது... தலைவலி மாத்திரை கொடு" என்று கேட்டாள் வாசவி.
சுடர் எவ்வித சலனமுமின்றி அமைதியாகத் தலைவலி மாத்திரையை எடுத்துக் கொடுத்தாள். அதற்கான பணத்தை வாங்கிக் கொள்ளும் போது, பிரனேஷ் சுடரைப் பாவமாகப் பார்த்தான். அவளோ அவனை ஒரு புழுவைப் போல அருவருப்பாகப் பார்த்துவிட்டுத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அந்தப் பார்வை கொடுத்த அவமானம், அவனை உயிரோடு கொல்வது போல இருந்தது.
"வாசவி, அம்மா வீட்டுக்கு வரச் சொன்னாங்க... ஒரு எட்டுப் போயிட்டு வரலாமா?" என்று தயக்கத்துடன் கேட்டான் பிரனேஷ்.
"உன் அம்மாவுக்கு அறிவே இருக்காது! வீட்டுக்குப் போனாலே அதை வாங்கிட்டு வரலையா, இதை வாங்கிட்டு வரலையான்னு கேப்பாங்க. தினமும் அண்ணன் வீட்டு பொருளை அள்ளி கொண்டு அலைஞ்ச ஆளுதானே உன் அம்மா? இன்னும் அந்தப் புத்தி மாறுதா என்ன?" என்று தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள் வாசவி.
பிரனேஷ் ஒரு கணம் சுடரை ஓரக்கண்ணால் பார்த்தான். அவளோ இவர்களின் சச்சரவுகளைச் சற்றும் பொருட்படுத்தாமல், மற்றவர்களுக்கு மாத்திரை எடுத்துக் கொடுப்பதில் கண்ணும் கருத்துமாகத் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.
"வா வீட்டுக்குப் போகலாம். உங்க அம்மா வீட்டுக்கு வேண்டாம், நீ வேணும்னா தனியாப் போய் பார்த்துக்கோ!" என்று அவனைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.
நூறு பவுன் நகைக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டவன், இன்று ஒரு வார்த்தை கூடத் தன் விருப்பப்படி பேச முடியாத அடிமை வாழ்வில் சிக்கிக் கிடக்கிறான் என்பதை உலகம் அறியவில்லை.
வீட்டில் வாசவி போட்ட கூச்சலைக் கேட்டுப் பிரனேஷ் பதறியடித்து ஓடி வந்தான். "என்ன வாசவி, என்னாச்சு?"
"எனக்கு பயங்கரமா தலை வலிக்குது, ஒரு காபி போட்டுக் கொடு" என்றாள் கட்டளையாக.
அவனும் அவளுக்காகக் காபி போட்டுக் கொண்டிருக்க, அந்தத் தவறான நேரத்தில் சரியாக உள்ளே நுழைந்தாள் ஆனந்தி. "என்னடா இது? நீ என்ன வேலை செஞ்சுட்டு இருக்க? வாசவி, என்ன என் பையனை வேலை செய்யச் சொல்ற? நீதானே இதையெல்லாம் செய்யணும்?" என்று ஆதங்கப்பட்டாள்.
பிரனேஷ் தன் தலையில் கை வைத்துக் கொள்ள, வாசவி விழிகளை உருட்டி ஆனந்தியை முறைத்துப் பார்த்தாள்.
"பிரனேஷ் நீ வெளிய வா... வாசவி போய் எனக்கு முதல்ல டீ போடு. நைட்டுக்குக் கோழி எடுத்து குழம்பு வை. பக்கத்துலதான் இருக்கீங்க, ஒரு எட்டு வந்து எங்களைப் பார்க்க மாட்டேங்கறீங்க... எதுவும் வாங்கித் தர மாட்டேங்கறீங்க... போன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்கறீங்க... என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க?" என்று இது தன் அண்ணன் வீடு என்ற நினைப்பில், வாசவியின் குணத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அடுக்கடுக்காகக் குறைகளைக் கூறினாள் ஆனந்தி.
அடுத்த நொடி, அமர்ந்திருந்த வாசவி தன் முன்னால் இருந்த டீ பாயை ஓங்கி எட்டி உதைத்தாள். ஆனந்தி அதிர்ந்து பின்வாங்கி நிற்க, அது கண்ணாடி டீ பாய் என்பதால் சுக்குநூறாக உடைந்து சில்லுச் சில்லாகச் சிதறியது.
"உனக்கும் உன் குடும்பத்துக்கும் சமைச்சுக் கொட்டவா நான் நூறு பவுன் நகை கொடுத்து, 20 லட்சம் வரதட்சணை கொடுத்து, கார், வண்டி, பைக், ஸ்கூட்டின்னு இவ்வளவு கொண்டு வந்து கொடுத்தேன்? ஒத்த பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாத பொண்ணு இல்ல நான்! நீயும் உன் பையனும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கும்போது, தூக்க முடியாமத் தூக்கிட்டு வந்து ஒரு பவுன் நகை போட்டீங்களா? நான் இவ்வளவு சொத்து கொண்டு வந்திருக்கேன். அதாவது இத்தனை லட்சம் கொடுத்து உன் மகனை நான் விலைக்கு வாங்கி இருக்கேன்! அவன் எனக்கு அடிமை! இந்த வீட்டுல இருந்தா நான் சொல்ற வேலைதான் செய்யணும். அவன் வேலை செய்யறது உனக்குப் பிடிக்கலைன்னா, நீ வந்து வேலை செய். நான் ஒன்னும் உன் அண்ணன் பொண்டாட்டி கிடையாது, அதிகாரம் பண்ணி அதட்டிட்டு இருக்கறதுக்கு... தொலைச்சிடுவேன்!" என்று விரல் நீட்டி எச்சரிக்க, ஆனந்தி அப்படியே உறைந்து போனாள்.
பணம் இருந்தால் எதையும் வாங்கி விடலாம் என்ற மமதை சிலரை எப்படி மாற்றுகிறது என்பதற்கு ஆனந்தியே சாட்சி. சில இடங்களில் பணத்தை விட அதிகமாக எதையாவது எதிர்பார்க்கும் போது, அங்கே அவமானமே எஞ்சி நிற்கிறது.
தனக்காகத் தன் மகன் பேசுவான் என்று ஆனந்தி அவனை ஏக்கத்தோடு பார்க்க, அவனோ ஒரு துடைப்பத்தையும் முறத்தையும் எடுத்துக் கொண்டு வந்து, அவள் உடைத்த கண்ணாடித் துகள்களை அமைதியாகக் கூட்டிப் பெருக்கி கொண்டிருந்தான்.
தன் மகனின் இந்த இழிநிலையை கண்டு ஆனந்தியின் உள்ளம் ரத்தக் கண்ணீர் வடித்தது.
"அம்மா... நீ கிளம்பு, வீட்டுக்குப் போ. நான் அப்புறமா வந்து பார்க்கிறேன்" என்றான் பிரனேஷ்.
வாசவி தான் செய்த செயலுக்காக சிறிதும் வருந்தவில்லை.
"பிரனேஷ், நான் சூடா டீ தான் கேட்டேன்? அது கூடவா உன்னால கொண்டு வந்து கொடுக்க முடியல?" என்று சிடுசிடுப்புடன் கத்தி விட்டுத் தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.
"என்னடா உன் நிலைமை இப்படி ஆகிடுச்சு?" என்று ஆனந்தி கேவிக் கேட்க,
"இதுக்குத்தானே நீயும் ஆசைப்பட்ட? இப்போ நானும் அனுபவிக்கிறேன்" என்றான் விரக்தியாக.
"உனக்கு நல்லது நடக்கும்னுதான்டா நான் நினைச்சேன்..."
"ஆமா, நீ நல்லதுதான் நினைச்சே... நாம ரெண்டு பேரும் பணத்தை மட்டும்தானே பெருசா நினைச்சோம்? அதான் இன்னைக்கு இப்படி நடுத்தெருவுல நிக்கிறோம்."
ஆனந்தி கலவரமாக பார்க்க, அவன் தொடர்ந்தான்: "அவளை விட நான் கம்மியாச் சம்பாதிக்கிறேன். ஒவ்வொரு நாளும் என்னை அசிங்கப்படுத்திட்டே இருக்கா. அவங்க அம்மா வீட்டுல இருந்து கொண்டு வந்த நகை, பணம் எதையுமே நான் தொடக்கூடாதாம்... அதெல்லாம் அவளுக்கு மட்டும்தான் சொந்தமாம்" என்று கரகரப்பான குரலில் கூறினான்.
"அது எப்படி அவளுக்கு மட்டும் சொந்தமாகும்? நமக்குன்னு சொல்லி தானே போட்டு விட்டாங்க? இரு, நான் அவங்க அம்மா வீட்டுல போய் பேசுறேன்" என்றாள் ஆனந்தி.
"போ... போய் அவமானப்படு, நான் தடுக்கல. அவங்க அம்மா, அப்பா எல்லாரும் கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு மாதிரி பேசுனாங்க. இப்பல்லாம் அவங்க நம்மளை நாயை விடக் கேவலமா மதிக்கிறாங்க. நான் நிறைய அசிங்கப்பட்டுட்டேன், அதனாலதான் இப்போ எங்கயும் போறது இல்லை. வீட்டுக்குப் போ... இங்க திரும்பத் திரும்ப வந்து அசிங்கப்படாதே" என்று விரட்டினான்.
"வீட்ல சமைக்க எதுவுமில்லைடா, கடையில ஏதாவது வாங்கித் தாயேன்" என்று பசியோடு கேட்டாள் ஆனந்தி.
"வாயில நல்லா வரும்மா... கடையில வாங்கித் தரவா? அண்ணன் வீட்டுல சோறு போட்ட வரைக்கும் உனக்கு வீட்ல சமைக்கத் தோணல... இப்போ சமைக்க வழி இல்லையா? போ... சமைத்து சாப்பிடு, இல்லன்னா பட்டினி கிட. நான் இருக்கிற கடுப்புல என்னை இன்னும் பேசி வெறுப்பேத்தாதே. போ தாயே!" என்று சொல்லி அவளை வெளியே தள்ளி கதவை மூடினான்.
ஆனந்திக்கு அழுகை முட்டியது. பசியோடு வந்தவள், பெரும் பாரத்தோடும் பசியோடும் திரும்பினாள். மருமகள் பேசிய வேதனையுடன் தெருவில் நடந்து வரும்போது, வெண்பா அவளுக்கு எதிரே வந்தாள். அவளைக் கண்டதும் ஏதேனும் ஆறுதலாகப் பேசுவாள் என்று ஆனந்தி எதிர்பார்க்க, வெண்பாவோ அவளை ஒரு அந்நியரைப் போலப் பார்த்தும் பார்க்காததுமாகத் தலையைத் திருப்பிக் கொண்டு சென்றாள். அந்தத் புறக்கணிப்பு ஆனந்தியை மரண அடிகளாகத் தாக்கியது.