சிற்ப பாவை - 16
அத்தனை காலமும் தன் முதுகில் சுமந்த பாரம், குடும்பத்திற்காகச் சிந்திய கண்ணீர் என எல்லா கஷ்டங்களையும், தன் பிறந்த வீட்டின் வாசலை மிதித்த அந்த நொடியில் நகை மறந்து போனாள். ஊருக்குள் வரும் வரை ஒருவித தவிப்பும் பயமும் அவளை வாட்டியது உண்மைதான். ஆனால், வீட்டின் உள்ளே வந்த பிறகு, அங்கிருந்தவர்களின் முகத்தைப் பார்த்ததும் ஒரு புதிய நம்பிக்கையும் புத்துணர்வும் அந்த குடும்பத்திற்கே பிறந்தது.
வெண்பா தன் செல்ல மகளை அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். அந்த அணைப்பில் தாயின் தவிப்பும், பிரிவின் வலியும் கலந்திருந்தது. மகளின் நெற்றியில் இதழ் பதித்து முத்தமிட்டார்.
"உன்னுடைய இந்த புது மாற்றம்... ரொம்ப அழகா இருக்குடா. நிஜமா நான் நினைத்துக்கூடப் பாக்கல, நீ இந்த அளவுக்கு அப்படியே டோட்டலா மாறி வருவ அப்படின்னு..." என்று சொல்லும்போதே அவர் குரல் தழுதழுத்தது.
உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த அந்த உருக்கமான வார்த்தைகள் காற்றோடு கலந்தன.
நகை மெலிதாகப் புன்னகைத்தாள். "நானும் இதையெல்லாம் நெனச்சுப் பாக்கலமா... ஆனா காலம் எல்லாத்துக்கும் ஒரு கேள்வியையும் பதிலும் கைவசம் வச்சிருக்கு. அதன்படி நாம ஓடி தானே ஆகணும்? எதையும் நம்மால் முன்னாடியே தீர்மானிக்க முடியாது," என்று அவள் சொல்ல,
மகளின் அந்த முதிர்ச்சியான பேச்சைக் கேட்டு வெண்பா அப்படியே மெய்மறந்து நின்றார்.
தன் மூத்த பெண் இவ்வளவு பெரிய மனுஷியாகி விட்டாளே என்ற பிரமிப்பு அவர் கண்களில் தெரிந்தது.
அதே சமயம், பிரனேஷ் தெருவோரத்தில் ஒரு சுயநினைவற்ற மனிதனைப் போல அலைந்து கொண்டிருந்தான். அவனது கால்கள் எங்கே செல்கின்றன என்பது அவனுக்கே தெரியவில்லை.
"என் சுயநலத்தால... இன்னைக்கு நான் அனுபவிக்கிற இந்த வலிக்கும் வேதனையும் தான் எனக்கு மிச்சம். இதுக்கெல்லாம் நானேதான் காரணம். நகையை என் கண்ணு முன்னாடியே பார்த்தும் என்னால அவளை நெருங்க முடியலையே! அவ கிட்ட பேசுற அந்த உரிமையையும் தகுதியையும் நான் என்றைக்கோ இழந்துட்டேன். அவ என்னைத் திரும்பிப் பார்க்கக் கூட இல்லையே..." என்று தனக்குள்ளேயே அரற்றினான்.
"இன்னைக்கு என் முன்னாடி வந்து நிக்கிறவ பழைய நகை இல்லை; இவ வேற யாரோ! நான் விரும்பி, நான் ஆசைப்பட்ட அந்தப் பழைய நகை இவள் இல்லை. அவளோட அடையாளம்தான் மாறி இருக்குன்னு நினைக்கிறேன்... இல்ல, அவ உள்ளுக்குள்ள மாறி இருக்க மாட்டா..." என ஏதேதோ பிதற்றிய படி வெறிச்சோடிய சாலையில் பைத்தியக்காரனைப் போல நடந்து கொண்டே இருந்தான்.
அவன் உள்ளுணர்வே அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருந்தது.
"அன்னைக்குக் கொஞ்சம் யோசிச்சு, நிதானமா ஒரு முடிவு எடுத்திருந்தா... இன்னைக்கு உன் வாழ்வு எவ்வளவு அழகா இருந்திருக்கும் தெரியுமா?" என்று அவன் மனசாட்சியே அவனிடம் கேள்வி எழுப்பியது. குற்ற உணர்ச்சி அவன் நெஞ்சை அழுத்த, மௌனத்தைத் தவிர அவனிடம் பதில் இல்லை.
வாசவிக்குத் தெரிந்தால் அவ்வளவுதான், ஊரையே மாரடித்து ரகளை செய்துவிடுவாள் என்ற பயமும் ஒரு பக்கம். ஆனால், இவர்கள் எல்லோரும் நினைக்கிற அந்தப் பழைய நகையாக இப்போதிருப்பவள் இல்லை. இவர்களது நினைப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு உயரத்தில் நகை முன்னேறி நின்றாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் மூத்த மகளை பார்த்த சந்தோஷத்தில் காத்தவராயன் திளைத்திருந்தார். மகள் பேசப் பேச, அதை ஒரு தவத்தைப் போலக் கேட்டுக்கொண்டே இருந்தார்.
அந்தத் தந்தை முகத்தில் இழந்த புத்துயிர் மீண்டும் பிறந்தது போன்ற ஒரு மலர்ச்சி.
அவர் சிரிப்பதைப் பார்த்ததும், மற்ற மூன்று பெண்களும் (வெண்பாவும் தங்கைகளும்) தங்களையும் அறியாமல் கண் கலங்கி நின்றனர்.
அனைவரையும் விட நகை மீது அவர் வைத்திருந்த அந்த அளவுகடந்த பாசம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், இன்று யாருக்கும் பொறாமை வரவில்லை, கோபமும் வரவில்லை.
"இந்தத் தந்தை மகள் பாசம் இப்படியே நீடிக்கட்டும்" என்ற வேண்டுதலோடு மூவரும் கட்டில் ஓரத்தில் அமர்ந்து, தன் அக்காவையும் அப்பாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தனர்.
மணி நள்ளிரவு 12-ஐக் கடந்தது.
"அப்பா, ரொம்ப நேரமாச்சு... நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க. நான் இங்கதான் இருப்பேன். எனக்கு 30 நாள் லீவு இருக்குப்பா... இந்த 30 நாள்ல நாம நிறைய பேசலாம். இப்போ எதையும் யோசிக்காம நிம்மதியா தூங்குங்க," என்று சொல்லி, அன்போடு தந்தைக்கு போர்த்திவிட்டு தலையணையை சரி செய்து வைத்தாள்.
அவர் உறங்கியதும், தன் தங்கைகளை அழைத்துச் சென்று படுக்க வைத்தவள், இரு தங்கைகளுக்கும் நடுவில் தானும் படுத்துக் கொண்டு, தாயைப் போல அவர்களைத் தட்டிக் கொடுத்தாள்.
வாசலில் நின்றபடி வெண்பா இதைப் பார்த்துக் கொண்டிருந்தார். "இத்தனை பக்குவமும் பொறுப்பும் என் நகை கிட்ட எப்படி வந்தது?" என்று அவர் நினைக்கும்போதே, அவர் மனதின் பாரமெல்லாம் குறைந்து போனது.
"இனி என் பொண்ணு எல்லாத்தையும் பார்த்துப்பா... எங்களை அவ கரையேத்திடுவா," என்று அவர் மனம் முழுமையாக அவளை நம்பியது.
அடுத்த நாள் காலை. வெண்பா எழுவதற்கு முன்பே நகை எழுந்திருந்தாள். அது அவளின் ராணுவப் பயிற்சி கொடுத்த பழக்கம்.
அதிகாலை 4 மணிக்கெல்லாம் விழிப்புத் தட்டிவிட்டது. சத்தமில்லாமல் சமையலறைக்குள் புகுந்து, எல்லாருக்கும் சூடாக டீ போட்டு வைத்துவிட்டு, விறுவிறுவென கீழே இறங்கி வந்தாள்.
பல மாதங்களாகத் தூசு படிந்து மூடிக்கிடந்த தன் தந்தையின் பழைய பைக்கை எடுத்து வந்து பிரித்துப்போட்டாள்.
அதன் இயந்திரங்களோடு மல்லுக்கட்ட தொடங்கினாள். கீழே வந்த வெண்பா, தன் மகள் கணவரின் பைக்கைப் பிரித்து வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து உறைந்து போனார்.
"நகை... என்னடா பண்ணிட்டு இருக்க நீ?"
"அம்மா, அப்பா பைக்கை ரெடி பண்றேன்மா."
"ஏம்மா இப்போ இது?"
"வீட்டுல இப்போ நமக்கு வண்டி எதுவும் இல்லையே... அதான் இதைச் சரி பண்ணிட்டு இருக்கேன்."
"இதை இப்போ யாரு ஓட்டுவா?"
"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்மா, நீ விடு."
"இல்ல... இந்த மெக்கானிக் வேலை எல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?"
"கத்துக்கிட்டேன்மா... எல்லாம் கத்துக்கிட்டேன்," என்று அவள் சொல்ல, வெண்பா அவளை ஒரு விசித்திரப் பிறவியைப் பார்ப்பது போல பார்த்தார்.
மகளுக்காகச் சமைக்க மேலே சென்றார்.
பைக் முழுவதுமாகத் தயாரானது. அதைத் துடைத்து மின்னுமளவுக்குச் சுத்தப்படுத்தினாள். ஆனால் பெட்ரோல் இல்லை. உடனே மேலே சென்று ஷூ மாட்டிக் கொண்டு, "அம்மா, ஒரு பத்து நிமிஷத்துல வந்தர்றேன்," என்று கிளம்பினாள்.
வெண்பா எதுவுமே கேட்கவில்லை. தன் மகள் எதைச் செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது.
ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு, குடியிருப்புக்கு வெளியே இருந்த பெட்ரோல் பங்கிற்கு நடந்து சென்றாள்.
இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கினாள். அங்கிருந்த ஊழியர்கள் அவளையே உற்றுப் பார்த்தனர்.
"நீங்க... காத்தவராயன் சார் பொண்ணு தானே?"
"ஆமா," என்றாள் சுருக்கமாக.
அவர்கள் தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்தனர். அது அவளுக்குப் பொருட்டாக தெரியவில்லை. அவள் கிளம்ப முற்படுகையில்,
"மேடம், நீங்க அவரது மூத்த பொண்ணு தானே?" என்று மீண்டும் கேட்டார் ஒரு ஊழியர்.
"ஆமா... உங்களுக்கு என்ன வேணும்? ஏன் இதையெல்லாம் கேக்குறீங்க?" என்று அவள் 'கணீர்' என ராணுவக் குரலில் கேட்க, அந்த ஊழியர் கொஞ்சம் மிரண்டு போனார்.
"இல்ல... உங்களை இதுக்கு முன்னாடி வேற மாதிரி பார்த்திருக்கோம். இப்போ அப்படியே ஆளே மாறிட்டீங்களே... என்ன வேலை செய்றீங்க?" எனத் தயங்கி கேட்டார்.
"ஆர்மில ஒர்க் பண்றேன்," எனத் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கர்வத்தோடு அவள் சொன்னபோது, அந்த ஊழியர்களின் கண்களில் ஒரு மரியாதை தெரிந்தது.
"தேங்க்யூ மேடம்!" என்றனர்.
திரும்பி வரும் வழியில், தெருவோர இளைஞர்கள் சிலர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
அதில் ஒருவன் நகையை பார்த்து, "ஆள்தான் மாறி இருக்கா... குணம் அப்படியேதான் இருக்கும்," என நக்கலாகக் கிண்டல் செய்தான்.
நகை சட்டென்று நின்றாள். அவனைத் திரும்பிப் பார்த்தாள். சுற்றி இருந்தவர்கள் அவளை ஒரு மாதிரியாகப் பார்க்க,
"ஹலோ!" என்று கத்தியபடியே, தரையில் கிடந்த ஒரு கல்லை எடுத்து அவனை நோக்கிக் குறி வைத்து எறிந்தாள்.
'ஜஸ்ட் மிஸ்!' அவன் மீது படுவதற்குள் அவன் அலறிக்கொண்டு கீழே குதித்தான். அவள் ஆள் மட்டுமல்ல, குணமும் 'புலி'யாக மாறிவிட்டது என்பதை அந்த ஒரு கல் அவர்களுக்குப் புரியவைத்தது.
"உனக்கு எதுக்குடா தேவையில்லாத வம்பு? ஒழுங்கா மிதிபட்டு சாகப்போற," என்று அவனது நண்பனே அவனைத் திட்டும் போது, பக்கத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் எகிறினார்.
"ஏண்டா வெட்டி நாய்களா! நீங்கதான் தின்னுட்டு ஊர் சுத்துறீங்க. அதுக்காக எல்லாருமே உங்களைப் போல இருப்பாங்களா? ஒரு பொம்பள புள்ள ஆர்மில சேர்ந்து குடும்பத்தை தனி ஆளா தாங்குது. நீங்க எதுக்குடா உயிரோட இருக்கீங்க? ஏதாவது விஷத்தை குடிச்சிட்டு செத்துப் போக வேண்டியதுதானே? அப்பன் காசுல தின்னுட்டுத் திமிர் எடுக்குதோ?" என்று அவர் வெளுத்து வாங்கினார்.
அவர்களுக்குப் பயங்கர அவமானமாகி போனது. "எல்லாம் இந்த ஊத்தை வாயால வந்ததுதான்... சும்மா போன பெண்ணை வம்புக்கு இழுத்து இன்னைக்குத் தெருவுல போறவன் வர்றவன் எல்லாம் நம்மளைக் கேள்வி கேக்குறான். கிளம்புங்கடா இங்கிருந்து!" என்று அந்த இளைஞர் கூட்டம் கலைந்தது.
நகை வீட்டிற்குள் நுழையும்போதே வெண்பாவின் கைமணத்தில் மீன் குழம்பு வாசனை மூக்கைத் துளைத்தது.
"அம்மா... இன்னைக்கு மீன் குழம்பா?" என்று கேட்டபடி உள்ளே வந்தவள், தன் தாயும் தங்கைகளும் அவளுக்காகப் பதற்றத்தோடு வேலை செய்வதை பார்த்ததும் ஒரு நிமிடம் அப்படியே உருகிப் போனாள்.
"ஆமாடா, உனக்காகத்தான் சமைச்சேன். நீ போய் பிரஷ் பண்ணிட்டு வா."
"அம்மா... நான் காலையிலேயே குளிச்சிட்டேன்மா," என்று சிரித்தபடி கவி கன்னத்தில் தட்டிவிட்டு அப்பாவைப் பார்க்கச் சென்றாள்.
அவர் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
"அப்பா இன்னும் தூங்குறாங்க..."
"ஆமா நகை, அப்பா எழ லேட் ஆகும். நாம முதல்ல சாப்பிடலாம்."
தந்தை இல்லாமல் தனியாக சாப்பிடுவது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு எல்லாரோடும் அமர்ந்தாள். அந்த மீன் குழம்பின் ருசி... அது அவளது மண்ணின் ருசி.
"இந்த ருசியும் மணமும் உலகத்துல எங்க போனாலும் கிடைக்காது..." என்று அவள் சாப்பிடும்போதே உணர்ந்தாள்.