செந்தமிழ்
பதிவு எண்: STN89.
கண்ணம்மா.
அத்தியாயம் 28.
தனது இளங்கலைப் பட்டப் படிப்பினை ஊட்டியில் வெற்றிகரமாக நிறைவு செய்த செந்தமிழ், தனது முதுகலைப் பட்டப் படிப்பைக் காஞ்சிபுரத்தில் வசந்தன் பணியாற்றும் கல்லூரியிலேயே பயின்றாள்.
கடந்த மூன்றுவருடங்களும்
வெளி உலகத்துடன் சேர்ந்து வாழ்ந்த செந்தமிழ்,
தன்னை மிகவும் நுட்பமாகச் செதுக்கியிருந்தாள்.
நிலவன் என்ற ஒருவன்
செந்தமிழின் வாழ்வை வண்ணமயமாக மாற்றியிருந்தான். அதிகம் வாயடிக்கும் ரகம் இல்லை இருவரும். எனினும் இருவருக்குமே மற்றவரின் உள்ளக்கிடங்கு அத்துபடி.
நிலவனுக்குமே செந்தமிழுடனான உறவு வார்த்தைகளில் விவரிக்கவியலா மாற்றங்களைத் தந்தது. அவன் அவளைப் பார்த்த
இந்தநொடியிலேயே இனம் புரியாத பந்தம் ஒன்று
இருவரையும் இரண்டறப் பிணைத்திருப்பதை உணர்ந்துகொண்டான். ஏனோ செந்தமிழைக் காலம் முழுமைக்கும்
தனது கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள அவா கொண்டான்.
அவள் இல்லாத ஒரு வாழ்க்கை அவனுக்கு எப்போதும் வேண்டவேவேண்டாம்.
எதற்கென்றில்லாமல்
அவனின் சகலத்திற்கும்
சகலமுமாக அவள் வேண்டும்.
அவளது மென்மையைத் தாங்கிய
உணர்வும், பிடிமானத்தைத் தாங்கிய வைராக்கியமும்
மன்னவனின் மனதை மலரெனக் கொய்தது. நாட்களின் நகர்வில் நிலவனின் செந்தமிழுக்கான
தேடலும் தாகமும் அதிகரிக்க
நேசக்கடலுக்குள் தானும் தலைக்குப்புற விழுந்துவிட்டதைத்
தெரிந்துகொண்டான் நிலவன்.
இருப்பினும் அவன் செந்தமிழிடம் இதுகுறித்துப் பகிர விரும்பவில்லை.
அவளை அவளது குறிக்கோளை நோக்கி ஓடவிட்டான்.
பெயரிடவியலாத மெல்லியக் கயிற்றால் விதியும் செந்தமிழை
இவனுடன் கட்டியே வைத்திருந்தது.
செந்தமிழின் மனநிலையை நன்கு அறிந்தவனாக
தனக்கான நேரம் வரும்வரையில் பொறுமையாகக் காத்திருந்தான் நிலவன்.
அவனது அந்தப் பொறுமைக்கும் மெல்லப் பலன் கிட்டத் துவங்கியது.
செந்தமிழ் தனது முதுகலைப் படிப்பினை நன்முறையில்
நிறைவு செய்ததற்காக,
இறுதிநாள் கல்லூரி முடிந்து
தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த செந்தமிழின் பாதையை மரித்த நிலவன்,
அவளிடம் பூங்கொத்து ஒன்றை நீட்டியிருந்தான்.
ரோஜா மலர்களால் நிரம்பிவழிந்தப் பூங்கொத்து
பெண்ணவளைப் பார்த்துத் தலையசைத்துச் சிரித்தது.
"எதுக்காக இந்தப் பூங்கொத்து நிலவன்?"
எனக் கேட்டுக்கொண்டே
ஆசையுடன் அதைத் தன்
நெஞ்சோடு சேர்த்துப் பிடித்தவாறு
நடக்கத் துவங்கினாள்.
"நீ வெற்றிகரமா உன்னோட மாஸ்டர்ஸ் டிகிரிய முடிச்சதுக்காக." என்றான் நிலவன் புன்னகையுடன்.
செந்தமிழை அவன் இங்க போட்டு அழைப்பதெல்லாம்
எப்போதோ காற்றில் கரைந்திருந்தது. புன்னகையுடன்
வீட்டை நோக்கி நடந்தவர்களை
மழைத் தூரல் நனைத்துச் செல்ல,
மழைப் பொழியும் மேகத்தையும்
பக்கவாட்டில் வீதியுலா வரும் தன் மேகத்தையும் ரசித்துப் பார்த்தான் நிலவன்.
ஒருவாராக இருவரும் செந்தமிழின் வீட்டை அடைந்திருக்க, நிலவனுக்குப் பிடித்தப் பதத்தில் தேநீரைத் தயாரித்து அவனிடம் நீட்டினாள் செந்தமிழ். ரம்யமான சூழலைக் கண்மூடி ரசித்தவாறு
தேநீரைச் சுவைத்த நிலவன்
செந்தமிழின் கைகளில்
ஒரு பையைத் திணித்தான்..
"இப்போ என்னப்பா?" என்று பொய்யாக அலுத்துக் கொண்டே செந்தமிழ் பையைப் பிரித்துப் பார்த்தாள்
சிறிய அட்டைப் பெட்டிக்குள்
பொலிவுடன் வீற்றிருந்தது
இந்த அடர் சிவப்புநிற மென் பட்டுச் சேலை.
புடவையின் முந்தானைப் பகுதியில் என்னவோ எழுதியிருப்பதைக் கண்டுகொண்டு செந்தமிழ் 'இதுல என்னப் போட்டிருக்கு நிலவன்?"
என முந்தானையைத் தூக்கிக் காட்டியவாறு கேட்டவளிடம்
"செந்து!" என்றான் ஒற்றைச் சொல்லாக. அவன் சொன்ன வார்த்தை தனது பெயரின் முன்பாதிச் சுறுக்கமென்பது பிடிபட,
மலர்ந்து சிரித்த செந்தமிழ்
"செந்து! பேரு நல்லா இருக்கே;"
என்றாள் துள்ளலுடன்.
இதற்காகத்தானே;
இந்தப் பூமுகத்தில் மத்தாப்புக்களின் அணிவகுப்பைக் கண்டுவிடத்தானே அவன் இத்தனை மணி கேட்டது?
வைத்தக் கண் வாங்காமல் அவளையே பார்த்திருந்தான்
நிலவன். "கடமையும் ரொம்ப அழகா இருக்கு நிலவன்."
எனக் கூறியவழி பூரித்தமுகம்
இறுதிவரை இதே மலர்ச்சியைத் தன்னவளின் முகத்தினில்
நிலைக்கச் செய்யவேண்டும்
என்று பேராவல் கொள்ளவைத்தது.. "உனக்காக நானே வடிவமைத்தப் புடவை இது."
என்றவன் "நீ இதேமாதிரி எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்டா செந்து.
அதுதான் உன் நிலவனுக்கும் பிடிக்கும்." எனக் கூறி அவளது கண்ணம் தட்டிச் சென்று நிலவனுடன் பெண்ணவளின் உறக்கமும் அவளை விட்டுச் சென்றிருந்தது.
அவன் அழுத்தத்தைக் கூட்டிச் சொன்ன அந்த உன் நிலவனிலேயே பெண்ணவளின் மனம் சிக்குப்பட்டு நின்றது.
அடுத்த இரண்டுமாதங்களிலேயே நிலவனின் மனயாளாக அவனுடன.
இணைந்து பயணிக்கத் தொடங்கினாள் பெண்.
நேசத்தின் தித்திப்பைத் தெவிடத்து விட்ட இருவருமாக இணைந்து ருசித்த நாட்களவை. வார்த்தைகளைவிட அவற்றைத் தாண்டிய மௌனமே ஒருவரின்மீதான மற்றவரின்
பிரியத்தைக் கடத்தியது.
எல்லாமே சீராகச் சென்றுகொண்டிருந்தத் தருணத்தில்தான்
மலரினியின் கொடூர மரணம் நிகழ்ந்தேறியது.
சட்டத்தைச் சார்ந்தப் புலித்தோல் போர்த்திய நரிகளின் வஞ்சகத்தால் பிஞ்சு மலரொன்று பீய்த்தெறியப்பட்டது.
தனது பச்சோந்தித்தனத்தால்
நிலவனை நம்பவைத்து முதுகில்
குத்திய பெருமை காவல்துறை உயரதிகாரி மார்த்தாண்டத்தையேச் சாரும்.
மார்த்தாண்டத்தின் உண்மையான முகத்தைக் கண்ட பின்னர் நிலவனுக்குச் சட்டத்தின்மீது இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் விட்டுப்போயிற்று.
சட்டத்தின் அதிகாரமானது
தன்னை விலைக்கு வாங்குபவர்களுக்கே தலைவணங்கும் என்ற உண்மையைப்
பெரும் வலியுடன் உணர்ந்த நிலவன், தானே களத்துல இறங்கிப் பின்னப்பட்டிருக்கும் மர்மமுடிச்சுகளை அறுத்துப் போட முடிவு செய்தான்.
அவனது ஆசை மருமகளின்
பிஞ்சு முற்றிலுமாக நிலவனின் உறக்கத்தைப் பறித்துக்கொண்டது. அச்சமயம்
செந்தமிழின் சீர்குளைந்தக் கோலம்வேறு ஓயாமல் நிலவனின் மனதை ஆக்கிரமிக்கத் துவங்கியது. பிறைசூடன் எத்தனை முயன்றும் அவனால்
செந்தமிழுக்கு அநீதியிழைத்த
அந்தக் குற்றவாளியைமட்டும்
பிடிக்கவே முடியவில்லை..
அதுகுறித்து நிலவன் செந்தமிழிடம் சொல்லி வருந்தியபோது, "அதெல்லாம் முடிஞ்சு போன கதை நிலவன்.
உங்களோட இந்த வாழ்க்கைய
என்னோட பழைய விளம்பியங்கள் ஏதுமில்லாமல் நிம்மதியோட வாழ ஆசைப்படுறேன். அதனால நாம இத விட்ரலாம். இனி இதப் பத்தி
விசாரிக்கவும் வேணா நாம பேசவும் வேணாம்."
என்று ஒருவிதப் பிடிவாதத்துடன்
கூறியவளின் உள்ளக்கிடங்கினை அறிந்திருந்தவனோ, பழைய விடயங்களை மனதைவிட்டு
அகற்றியவன்
தனது இல்லாளுடன் இணைந்து இல்லறத்தின் பக்கங்களைப்
படிக்கத் துவங்கினான்.
முதல்முறையாக செந்தமிழின் பேச்சைத் தான் கேட்டிருக்கவேண்டாமோ என்ற எண்ணம் பிறந்தது நிலவனுக்கு.
ஏனோ கொண்டவளை அணுவணுவாகத் துடிக்கவைத்த
அந்த ஈனப்பிறவியைத்
தண்டிக்காமல் விட்டது நிலவனுக்குப் பெரும் தவறாகத் தோன்றியது .
தனது செவிகளில் ரீங்காரமிட
செந்தமிழின் அழுகுரல் அவனைக் கேள்விகளால் துளைத்தெடுத்தது
ஆகவே உண்மையைக் கண்டறியும் முடிவுடன்
செந்தமிழைப் பிரிந்துவந்தான் நிலவன். அவனது செந்துவின்
அறுகாமையில்லாத இரவுகள்.
நிலவனை வேட்கையுடன் செயல்படவைத்தது
தன்னவளின் வயிற்றுக்குள் வீற்றிருக்கும் தனது அறுமைச் செல்வங்களின் ஸ்பரிசம் இல்லாமல் நிலவனின் நாட்கள் சூனியமாயின
பிறைசூடனின் மறைமுக உதவியுடன் தனது யூகங்களைவைத்துக் குற்றவாளி சார்ந்தத் தடயங்களைத் துப்புத் துலக்கத் துவங்கினான். நிலவன் எத்தனை முயற்சி செய்தும்
அவனால் எந்தத் தீர்வையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கனக்கச்சிதமாகத் தடயங்களின் சுவடியின்றிக் குற்றச் செயல்களை
நிகழ்த்தியிருந்தனர்
தனது ஒட்டுமொத்த நம்பிக்கையும் நீர்த்துவிட்ட நிலையில் தோய்ந்துபோய் அமர்ந்தான் நிலவன். இந்த இறைவனும் இயற்கையும் கூட ஏன் பாவிகளுக்குத் துணை நிற்கிறார்கள்?
அவர்களது பேராசைக்காக அவர்களது சுயநலத்திற்காகத்
தவறு செய்யாமல் கொடியச் சித்தரவதைகளை அனுபவித்து
மடிந்துபோகும் உயிர்களுக்கு
நியாயம் கிடைப்பதெல்லாம் எட்டாக்கனி போலதானா?
மேற்கொண்டு இனி தான் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி
நிலவனை யோசிக்கவைத்தது.
அந்த யோசனையின் பலனாக
அடுத்த இரண்டுநாட்களிலேயே சட்டமன்ற உறுப்பினர் வேதநாயகத்தின் வாகன ஓட்டியாகச் செயல்படத் துவங்கினான் நிலவன்.
"டேய் நிலா என்ன செய்றன்னு யோசிச்சுத்தான் செய்றியாடா?
கொஞ்சம் நிதானமா வேற ஏதாவது ஒரு வழியக் கண்டுபிடிச்சிருக்கலாம்லடா?
இப்படியா என்கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லாம போவ?
நீ வந்ததற்கான நோக்கம் மட்டும் தப்பித் தவறி அவனுக்குத் தெரிஞ்சுருச்சுன்னா அப்புறம் உயிரோட விட்டுவைக்க மாட்டான்டா." என்று ஆதங்கப்பட்டான் பிறைசூடன்.
"தயவுசெஞ்சு என்னக் கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு பிறைசூடா. அங்க செந்து தனியா இருக்காடா.
இப்போ ஒங்களுக்கு எட்டுமாசமாக போகுது.
என்னதான் சுத்தி மத்தவங்க எல்லாரும் இருந்தாலும்
அவளோட எல்லாமே நான்தாண்டா.
நியாயப்படி இப்ப நான் அவ கூடவே இருந்துருக்கனுண்டா. ஆனா இத்தன மன அழுத்தங்களையும் வச்சிட்டு
என்னால சமாளிக்க முடியலடா.
கண்ண மூடுனாலே மலரினிதான்டா நிக்கிறா.
எங்களோட இறந்தகாலமா நான் நெனச்சிட்டுருந்த விஷயங்களெல்லாம் இந்தக் கொஞ்சநாளாத் திரும்பத் திரும்ப கண்ணுமுன்னாடி வந்துட்டேயிருக்கு அதுதான் எப்படியாவது
உண்மையையெல்லாம்
கண்டுபிடிக்கிறத் தீவிரத்தோடு வந்தன்.
ஆனா நான் நினைக்கிறேன் இதெல்லாம் இலகுவான விடயங்கள் இல்லன்னு
இந்தச் சிலநாட்களில் நல்லாவே புரிஞ்சுகிட்டேன்.
அதுக்காக என்னால இத அப்படியே விட்டுட்டுப் போகமுடியாதுடா.
மலரினியோடது இயற்கையான மரணம் இல்ல அது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொலைன்னு தெரிஞ்சும் அத என்னால நிரூபிக்க முடியலடா?
பெருசா என்னவோ ஒன்னு நடக்குது.
அதுமட்டும் என்னன்னு கண்டுபிடிச்சிட்டா
உண்மையையும் வெளியே கொண்டுவர முடியும்னு நம்புறேன். அதுக்காகத்தான்
வேதநாயகத்தோட பிஏ கொடுத்திருந்த விளம்பரத்தப் பாத்தவுடனே நான் அங்கப் போய்ச் சேர்ந்துட்டேன். இந்த வேதநாயகம், சடகோபன்,
மார்த்தாண்டம் எல்லாருமே
மிகநெருங்கிய நண்பர்கள்.
நமக்குச் சாதகமான ஏதோ ஒரு சின்னத் தடயமாவது கிடைக்கும்னு நம்புறேன். ஏன்னா இவங்கப் பெருசாக் குடும்பச் சூழல்ல இல்லாத ஆண்களத்தான் வேலைக்கு எடுக்கிறானுங்க.
சம்பளமும் அளவுக்கு அதிகமாவே வழங்கப்படுது.
நாங்க என்ன சொன்னாலும் ஏன் எதுக்குன்னு கேட்காம செய்யணும்னு கட்டளவேற.
நல்லது நடக்கும்னு நம்புவோம் பிறைசூடா."
என்று கூறியவன் அழைப்பைத் துண்டித்தான்.
நிலவன் தன் அடையாளத்தை மறைத்து மாறுவேடத்தில்தான் அங்கு உலாவிக் கொண்டிருந்தான்.
அவன் வேலைக்குச் சேர்ந்த இந்த ஒருமாதத்தில் பல திடுக்கிடும் உண்மைகளைத் தெரிந்துகொண்டான் நிலவன்.
அது அவனது வேட்கையை இன்னுமே உசுப்பிவிட்டது.
அன்றும் அப்படித்தான்
மருத்துவர் சுந்தரலிங்கமும் வேதநாயகமும் பேசியவற்றை நிலவன் கேட்கநேர்ந்தது.
அவர்களது உரையாடலைக் கேட்டவன் அப்படியே சமைந்துநின்றான்.
"நேத்துதான் சடகோபன் கிட்ட இருந்து எண்பதுலட்சம் பணம் கிடைத்தது எனக்கு."
எனக் கூறினார் சுந்தரலிங்கம்.
"ஓஹோ அந்தக் குட்டிப் பொண்ணு
விஷயத்துக்குத்தானே?
அந்தப் பாப்பா பேரு கூட என்னவோ மலரினி இல்ல?
சடகோபன் என்ன வாங்கிக்கச் சொல்லிக் கேட்டிருந்தான்
ஆனா எனக்குத்தான் அதுல பெருசா விருப்பமில்ல.
அஞ்சு வயசு குழந்தலாம் எனக்கு செட்டாகாது சுந்தரலிங்கம். கூட எனக்கு அப்ப வெளியூர் போற வேல இருந்துச்சு அதான் விட்டுட்டேன்.
பார்த்தா
அந்த கறிகாலன் ஸ்கூல்லையே வேலைய முடிச்சிருக்கான்."
எனத் தங்களுக்குள் அளவளாவியபடி
வேதநாயகத்தின் அலுவலக அறைக்குச் சென்று மறைந்தனர்.
விழிகளில் நீர் துளிர்க்க
நிற்கக்கூடத் தெம்பின்றி அப்படியே தரையில் அமர்ந்த
நிலவனின் அகக்கண்ணில்
வந்து சிரித்தாள் மலரினி.
முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டு எழுந்தவன்
நடந்தவற்றை பிறைசூடனிடம்
பகிர்ந்தான்.
அவனது நெஞ்சமும்
பழிவெறியில் கொழுந்துவிட்டு எறியத் துவங்கியது...