செந்தமிழ்
பதிவு எண்: STN89.
கண்ணம்மா.
அத்தியாயம் 29.
ஆம் சுடரொளி மேல்நிலைப் பள்ளியில்தான் மலரினி கல்வி பயின்றுவந்தாள். . கறிகாலன் என்னும் கொடிய நாகம்தான்
அன்று அந்த மழலையை
மூர்க்கத்தனமாகச் சிதைத்துக் கொன்றது. கழிப்பறைக்குச் சென்ற மலரினி திடீரென வலிய கரங்களுக்குள் சிறைப்பட்டிருந்தாள்.
என்ன ஏன் என்று உணரும் முன்னரே உயிர்போகும் வலியைத் தாளமாட்டாமல் நிரந்தரமாக இவ்வுலகத்தை விட்டுக் காணமுடியாத தூரத்திற்குச் சென்றிருந்தாள். கயமையின் கைங்கரியத்தில் குழந்தையின் மரணம் இயற்கையானது என
சட்டத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு
மலரினியின் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.
நடந்தவற்றையெல்லாம்
எண்ணிப் பார்த்த நிலவனின் மனது
எந்தச் சட்டத்தின்முன் தான் தோற்கடிக்கப்பட்டானோ;
எந்தச் சட்டத்தின்முன் நிராயுதபானியாக நின்றானோ
அந்தச் சட்டத்தின்முன்பே
இந்த மூடர்களின் அழுக்குப் பக்கங்களை அம்பலப்படுத்தி,
அவர்களது வெறி ஆட்டத்திற்கு
எப்பாடுபட்டேனும் முற்றுப்புள்ளி
வைக்கச் சபதம் கொண்டது.
அவனது உறுதிக்கு உறுதி சேர்க்கும் வகையில்
வேதநாயகத்தின் வீட்டிலும்,
அலுவலகத்திலும்
உள்ள கண்காணிப்புப் படப்பிடிப்பான்களின்
கட்டுப்பாட்டுப் பொறுப்புகளை நிலவனிடம் ஒப்படைத்தார் வேதநாயகம்.
எப்போது படப்பிடிப்பான்கள் இயங்கவேண்டும்;
எச்சமயம் படப்பிடிப்பான்களின் இணைப்புத் துண்டிக்கப்படவேண்டும் என்பது குறித்தப் பட்டியலொன்றும் அவனது கைக்கு வந்திருந்தது.
அந்தப் பட்டியலிலேயே பார்வைப் பதித்திருந்த நிலவனின் கண்கள் பலிச்சிட்டன. மார்த்தாண்டம்,
கரிகாலன், சடகோபன், சம்பந்தம்,
சுந்தரலிங்கம், வாஞ்சிநாதன்
ஆகியோர் இங்கு வருகைத் தரும்போது படப்பிடிப்பான்களின் இணைப்புத் துண்டிக்கப்படவேண்டும் எனக்
குறிக்கப்பட்டிருந்ததை
அவன் செயல்படுத்தவே போவதில்லையென்று
அவனது கோனல் சிரிப்பு
கட்டியம் சொல்லிற்று.
அன்றிலிருந்து தன் ஒவ்வொரு
நகர்வினையும் வலுசாதுரியமாக மேற்கொண்டான் நிலவன்.
வேதநாயகத்தின் வீட்டிலிருக்கும் மற்ற வேலையாட்கள்
அவனளவிற்குப் படித்தவர்களில்லை என்பதில் தொய்வின்றித் தனது திட்டங்களைச் செயல்படுத்தத் துவங்கினான். அதன்படி
படப்பிடிப்பான்களின் இணைப்பினைத் துண்டிக்கக் கோரி
வழங்கப்பட்டப் பட்டியல்
படப்பிடிப்பான்களின்
ஆளுமைக்கு உட்படுத்தப்பட்டது.
அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களின் வருகையையும் அவர்களது உரையாடலையும்
தனியே ஒரு விரலியில் நகலெடுத்துச் சேகரிக்கத் துவங்கினான்.
அதேசமயம் காட்சிகள் நகலெடுக்கப்பட்டப் பின்பு
அவற்றைத் தவறாமல் அழித்தும் விடுவான்.
இந்தக் கூட்டுச் சதிகாரர்களின்
தொழில்களான குழந்தை கடத்தல், குழந்தை வணிகம்,
உடலுறுப்புத் திருட்டு,
போதைப்பொருள் பரிவர்த்தனை
உட்பட அபரஞ்சியின் தற்கொலை ,
மலரினியின் கொடூர மரணம்,
கரிகாலனால் மதுராவுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகள்
என அவர்களால் அரங்கேற்றப்பட்ட அத்தனை அவலங்களும்
ஒளிப் பிடிப்பான் மிகத் தெளிவாகத்
தனது காட்சிகளில் வெளிப்படுத்தியிருந்தது.
இவற்றையெல்லாம் கண்டபின்பு நிலவனின் பார்வையில் புழுவைவிட மிகக் கேவலமான
உயிரினங்களாகத்தான்
இந்த வஞ்சகக் கூட்டம் தென்பட்டது. இப்படியும் மனிதர்கள் இருக்கக் கூடுமா?
எந்நேரமும் பணத்தின் பின்னாலேயே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு எப்படித் திரியமுடிகிறது அவர்களால்?
பணத்தைச் செலவழிக்க ஒரு கை இருந்தால்தானே அந்த பணத்திற்கு மதிப்பு?
இவர்களே இவ்வுலகில் இல்லையெனில் மற்றவர்களின் உயிர்களைக் குடித்துவந்த
நோட்டுகளெல்லாம் வெறும் அச்சிடப்பட்ட வண்ணக் காகிதம்தானே? இப்படியான வினாக்கள் கூட அந்த அற்பப் பிறவிகளுக்குத்
தேவையற்றப் பிதற்றல்கள்ளாகத்தான் தோன்றும் என் கையில்
காலம்தான் இவர்களுக்குப் பாடம் புகட்டவேண்டும்.
அதற்கு ஒரு முக்கியக் கருவியாகத் தான் திகழப்போவதில் நிலவனுக்குப் பெருமையே.
இந்த நயவஞ்சகர்களால்
சமூகம் இழந்த எதையும் யாரையும் மீட்கமுடியாது என்றாலும்
இந்த நேசர்கள் ஆற்றியக் குற்றச் செயல்களைச் சமூகத்தின்
பார்வைக்கு கொண்டுவந்து,
மக்களின் முழு ஒத்துழைப்போடு
கொடிய தண்டனைகளை இவர்களுக்குப் பெற்றுத் தந்தேனும் இழப்பின் வலியினைச்
சற்றுத் தனித்திட எண்ணினாள்.
இப்படி அனைத்துமே நன்றாகச் சென்று கொண்டிருந்தத் தருணத்தில்
வேதநாயகம் நிலவனின் கையில் ஒரு பெட்டியை ஒப்படைத்துக், குறிப்பிட்ட முகவரிக்கு அந்தப் பெட்டியைக் கவனமாக கொண்டு சேர்க்குமாறு பணித்தார்.
பெட்டியை எடுத்துக்கொண்டு
வீட்டிலிருந்து வெளியே வந்த நிலவனின் முகத்தில்
களவையான உணர்வுகள் வெளிப்பட்டன.
இந்தக் கூட்டத்தைச் சார்ந்த அத்தனை ஆதாரங்களையும்
தனக்குள் வைத்திருந்தது அந்தப் பெட்டி. பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பது முதல்
பெட்டியின் கடவுச்சொல் வரை
கண்காணிப்புக் கருவியின் உபயத்தால் தெரிந்துவைத்திருந்த நிலவன்
முதல் வேலையாகக்
கோப்புகள் அனைத்தையும்
மின்னணுவடிவில் பிறைசூடனுக்குப் பகிர்ந்தான்.
கூடவே தன் வீட்டிலிருக்கும் தனது கைபேசிக்கும்
அதனை அனுப்பிவைத்தான்..
தனது வேலைகளை முடித்த நிலவன் மகிழுந்தை இயக்கச் சென்று மீண்டும் பின்வாங்கினான். அந்தநேரத்தில் அவனுக்கு என்ன தோன்றியதோ
தன்னிடமிருந்த விரலியை
செந்தமிழின் பெயருக்கு
விரைவஞ்சலில் அனுப்பிய பின்பே புறப்பட்டான்.
இதற்கிடையில்
வேதநாயகம் உற்பட கூட்டாளிகள் அனைவரும்
பதற்றத்துடன் கண்காணிப்புப் படப்பிடிப்பாளர்களின் இணைப்பறையில் குழுமியிருந்தனர்.
கணினியின்முன்பு அமர்ந்திருந்த கறிகாலனின் விழிகள் கூர்மையுடன்
காணொளிக் காட்சிப் பதிவுகளை
ஆராயத் துவங்கின.
நிமிடங்கள் கரைந்த பின்னர்.
"ஷிட். என்ற அலறலுடன்
தன் கையை மேஜையில் ஓங்கிக் குத்தினான் கரிகாலன்."
"என்ன ஆச்சு கறிகாலா?
அதுல அப்படி என்ன இருக்கு"
என்று கேட்ட வேதநாயகத்தை உறுத்தளித்த கரிகாலன்,
"இத்தனைநாள் ஒரு பாம்புக்குப் பால் வார்த்துக் கூடவே வச்சிருந்திருக்கீங்க வேதநாயகம்."
என்றான் உறுமலாக.
"என்ன சொல்ற பா எனக்கு ஒண்ணுமே புரியல.
நான் போய் எந்தப் பாம்புக்குப் பால் வார்த்தன்,,?" என்று குழப்பத்துடன் வினவினார் வேதநாயகம்.
"இப்ப எல்லாத்தையும் விளக்கிட்டிருக்கலாம் நேரமில்ல மிஸ்டர் வேதநாயகம். நலம கையமீறிப் போறதுக்குள்ள வி ஹாவ் டு டூ சம்திங். நீங்க வேலைக்கு வச்சிருந்தீங்களே ஒரு கார் டிரைவர்; அவன்தான் மலரினியோட தாய்மாமா.
என்றவனின் வீட்டிலேயே
முழு விவரத்தையும் விளங்கிக் கொண்டனர் அனைவரும்.
"இப்ப ஆதாரங்கள் எல்லாமே அவனோட கையிலதானே இருக்கு? நிச்சயம் அவன் இங்கே திரும்ப வரப்போவதுல்லங்குறபோது அத அவங்கிட்ட இருந்து எப்படிக் கைப்பற்றுவது?"
என வினவினார் சடகோபன்?
"இங்கிருந்து போனவன்
நேரா மேல் லோகத்துக்குத்தான் போகணும். ஆளுங்கக் கிட்டச் சொல்லி அவனோட கதைய முடிச்சிடலாம். பெட்டியப் பத்திரமாக் கொண்டுவர்ற வேலைய அவங்களே பார்த்துப்பாங்க."
என்று மார்த்தாண்டத்தின்
விழிகளில் அனல் பறந்தது.
துஞ்சர்களின் கட்டளையின்பெயரில் அதிவேகத்தில் வந்தச் சறக்குண்டி ஒன்று
நிலவன் சென்றுகொண்டிருந்த மகிழுந்தைத் தூக்கி வீசியது.
நிகழ்ந்த அசம்பாவிதத்தைக் கண்டு சுற்றிக் கூட்டங்கூடத் துவங்கியது.
வாகனத்திற்குள் சிக்கியிருந்த நிலவனைப் பெரும் போராட்டத்திற்குப் பிறகு
வெளியே எடுத்தனர்.
உயிருக்குப் போராடிய நிலையில்,
மருத்துவமனையொன்றில்
தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான் நிலவன்.
நிலவன் வீட்டைவிட்டுச் சென்ற நாளிலிருந்து
அவனது நினைவுகளே
செந்தமிழை இயங்கவைத்தது.
எந்நேரமும் பின் கட்டு பூந்தோட்டத்தையே தஞ்சம் கொண்டாள் பெண்.
என்னதான் நிலவன் செந்தமிழுடன் நேரில் இல்லையென்றாலும் அவனது கதகதப்பை நித்தமும் உணர்ந்தாள் செந்தமிழ்.
இன்னும் மூன்றுநாட்களில்
கணவனும் மனைவியும்
பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த ஒரு நாள் வரவிருக்கிறது.
செந்தமிழ் தங்களது செல்வங்களை ஈன்றெடுக்கப் போகும் நாள் அது.
"எப்படியாவது என்கிட்ட வந்துருங்க நிலவு.
நம்மளோட பாப்பாங்கள நான் பெத்தெடுக்கும்போது நீங்க என்கூட இருக்கணும்."
என வாய்விட்டுச் சொல்லிய செந்தமிழ், தனக்குள் உழன்றபடி
வெள்ள தோட்டத்தைச் சுற்றிவந்தாள். இடைப்பட்ட நாட்களில் மதுராவுடனான நட்பை மீண்டும் புதுப்பித்திருந்தாள் செந்தமிழ்.
மதுராவின்மூலம் என்ன பஞ்சு இடமும் செந்தமிழ் பேச நேர்ந்தது.
செந்தமிழ் ஊட்டியில் தனது இளங்கலைப் படிப்பினை மேற்கொண்டபோது
பெண்கள் விடுதியொன்றில்
தங்கிக் கல்லூரிக்குச் சென்றுவந்தாள்.
இளவஞ்சியும் மதுராவும் செந்தமிழின் தோழிகள்.
பெரிய அளவில் ஒட்டி உரசிக் கொள்ளாவிட்டாலும் மூவருக்கிடையேயும் ஆரோக்கியமான
உறவு இருந்தது.
இதில் மதுராவும் இளவஞ்சியும்
உற்றச் சகோதரிகளாகவே
பழகிவந்தனர். அப்போது
அபரஞ்சியின் தற்கொலையைப் பற்றி
மதுராவும் இளவஞ்சியும்
செந்தமிழிடம் நிறையவே பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ந்தவற்றையெல்லாம் கேட்டப் பிறகு கசந்த முறுவல் ஒன்றை உதிர்த்த செந்தமிழ், அவர்களிடம் தன்னைக் குறித்தும் பகிர்ந்திருந்தாள். அவளுக்குத்
தனது கடந்தகாலத்தைப் பற்றி
பிறருக்குச் சொல்வதிலெல்லாம்
வருத்தங்களோ தயக்கங்களோ இல்லை.
அவளைப் பொறுத்த அளவில்
அது ஒரு விபத்து அவ்வளவே.
எனினும் அபரஞ்சியின் மரணம்
அதையொட்டிய பாதகர்களின் சிகிச்சைகள் அனைத்தும்
செந்தமிழின் அடிநெஞ்சில்
நீர் பூத்த நெருப்பாய்த் தேங்கிக் கிடந்தது. சமூக ஊடகங்களின் வாயிலாக மரணத்தைப் பற்றி அறிந்துகொண்ட மதுரா
செந்தமிழின் மனநிலையைக் கருதிச் சற்றுத் தாமதமாகவே அவளைத் தொடர்புகொண்டாள்.
அச்சமயம் செந்தமிழ்
மழை நினைக்கு நிகழ்ந்த அனைத்தையும் மதுராவிடம் கூறினாள்.
செந்தமிழ் சொன்னவற்றைப் கேட்டுப் பெருமூச்செறிந்த மதுரா
"வரவர இந்த நாடு எத நோக்கி போயிட்திருக்குன்னு புரியல தமிழ். எங்கபாத்தாலும் இதேமாதிரியான செய்திகள்தான் நெறஞ்சிக் கிடக்குது.
இந்த ஆம்பளைங்களப் பாத்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு." என்றவள்
கறிகாலனால் தனக்கு நிகழ்ந்தவற்றையெல்லாம் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டாள்.
ஆறுதல் வார்த்தைகளுடன் அவர்களது அழைப்புத் துண்டிக்கப்பட்டப் பிறகும்
செந்தமிழின் அகமானது மதுராவயே சுற்றிவந்தது.
மனதின் அடியாழத்தில் தேங்கிக் கிடந்தத் தீப்பிழம்பு மெல்லமெல்ல செந்தமிழின் உள்ளத்தை
ஆக்கிரமிக்கத் துவங்கியது.
"நிலவன்." எப்போதும்போல
தன்னவனின் பெயரை ஆயாசத்துடன் உச்சரித்தாள் செந்தமிழ்.
கனத்துக் கிடந்த அவளது மனது தன்னவனின் உடனிருப்பிற்காய் ஏக்கம் கொண்டது.
ஏனோ எந்த மொழி மனம்
விடாமல் கணவனைப் பற்றியே நினைக்கத் துவங்கியது.
பெயர் தெரியாத உணர்வொன்று
அவளது மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
என்னவோ போலிருக்க
வீட்டிற்குள் சென்று படுத்துக் கொண்ட செந்தமிழ்,
கணவனின் பெயரையே மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருந்தாள்.
கதவு தட்டப்பட்டச் சத்தத்தில்
பதறி எழுந்த செந்தமிழ்
வேகமாகச் சென்று கதவைத் திறந்தாள். வெளியே
கண்ணீருடன் நின்றிருந்தார் அய்யாதுரை. "என்னாச்சு மாமா?
என்ன நடந்தது?" என விரதங்களில் குரல் பிசிறு தட்டியது. "நிலவனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு மா.
ரொம்ப சீரியஸா இருக்கானாம்.
கே ஆர் ஹாஸ்பிடல்ல இருந்து போன் வந்துது." எனக் கூறியவர்
அவளுடன் சேர்த்துக் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.
தான் என்னமாதிரி உணர்கிறோம் என்று செந்தமிழுக்கு விளங்கவில்லை. அவளது உள்ளம் மட்டும் நிலவனின் பெயரை ஓயாமல் உச்சரித்தது.
குடும்பத்தினரின் கதறலுக்கு மத்தியில் மகிழுந்து மருத்துவமனையை அடைந்திருந்தது. கால்கள் பின்ன
நிலவன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றாள் செந்தமிழ். தன்னவளுக்காகவே அத்தனைநேரமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த நிலவன், தன்னை நோக்கி வந்தவளையே விழியகற்றாமல் பார்த்தான்.
தனது தேவதைப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும்
முகம் மலர்ந்தான் நிலவன்.
அவனது உயிர் வேதனையையும் தாண்டிக்கொண்டு
இந்த வெல்டிங் பிரசன்னம்
மின் தூவதாய் நிலவனைத் தழுவியது. நிலவனின் உடல்நிலையைப் பற்றி
ஏற்கனவே மருத்துவர் விளக்கியிருந்ததால், மீண்டும் மனதுடன் பெரியதொரு போராட்டத்தைப் போராடத் துவங்கி,
அதில் வெற்றியும் கண்டாள்.
படுக்கையின் அறுகிலிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டவள், மெல்லியப் புன்னகையுடன் நிலவனை ஏறிட்டாள். நிலவனும் அவளைத்தான் நோக்கினான்.
மெல்ல அவனது கையின்மீது தனது கையை வைத்து அழுத்தம் கொடுத்தாள் செந்தமிழ்.
தொண்டைவழிச் செய்கையில்
வெளிவரத் துடித்தக் கண்ணீரைக், கண்களைச் சிமிட்டி அடக்கினான் நிலவன்.
அவனது பார்வை செந்தமிழின் மேடிட்ட வயிற்றை வருடியது. நிலவனுக்கு வாகாக நின்று அவனது கையைத் தன் வயிற்றில் வைத்தாள் செந்தமிழ்.
"நற்றமிழ்" என்று கூறிய நிலவனின் முகத்தில் புன்னகைப் பூக்கள். "நவிலன்." எனக் கூறிய செந்தமிழின் இதழ்களிலும் மென் சிரிப்புத் தவழ்ந்தது.
தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கப் போகின்றனர் என்று தெரிந்ததும்
இருவரும் தத்தமது எதிர்பார்ப்பின்படி தங்களது குழந்தைகளுக்கு பெயர்களை முடிவு செய்திருந்தனர்.
மகிழ்ச்சித் ததும்ப உங்கள் முடிவு செய்திருந்த பெயர்களை
19 இன இடம் சொல்ல காத்திருந்த காத்திருப்பதெல்லாம்
கானல் நீராகிப்போனது.
எனினும் எதற்காகவும்
தங்களுக்கான பொழுதுகளை
வருத்தத்திற்குரியதாக மாற்ற இருவருமே விரும்பவில்லை.
எனவே தங்களுக்கே தங்களுக்கான அந்தநேரத்தில் இருவரும்
தத்தமது இணையுடன் நிறைவாகவே சஞ்சரித்தனர்.
நேரமுட்கள் நகரநகர
சீறாக சுவாசிக்க சிரமப்பட்டான் நிலவன். மௌனத்தின் பேரிறச்சலில் நேசம் கொண்ட நெஞ்சங்கலிரண்டும்
பேசிக்கொண்டே இருந்தன.
சட்டென அவளது கைகளை எடுத்துத் தன் கண்களில் ஒத்திக் கொண்டவனின் செய்கை
அவளிடம் என்ன சொல்ல விளைந்தது?
வாழ்வின் கடைசிமட்டும் கண்ணின் இமைபோல நான் உன்னைக் காப்பேன் என்று வாக்குறுதியளித்து,
செந்தமிழின் கைகளைத் தனக்குள் பொத்திக் கொண்ட நிலவனின் கைகள்
இன்றோடு அவளை நட்டாற்றில் விட்டுவிட்டுச் செல்லப் போவதற்காக எண்ணி
மன்னிப்பை யாசிக்க விளைந்தானா;
அல்லது நான் இந்த உலகத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனது இந்தக் கைகள் என்றென்றைக்கும் உன்னை அறநாய் நின்று காக்கும்
என்று சொல்ல விளைந்தானா;
அது தன் உள்ளக்கிடங்கினைக்
கொண்டவளிடம் வெளிப்படுத்தியவனுக்கும்,
அவனைப் புரிந்துகொண்டவளாக
முருகலுடன் அவனது கையுடன்
தனது கையைக் கோர்த்துக் கொண்டவளுக்குமே வெளிச்சம்.
என்னவளின் புன்னகை முகத்தை ஆசை இதயப் பேழைக்குள் நிரப்பிக் கொண்டவன்
"செந்து" எனத் திக்கித் திணறித்
தனது மனைவியின் பெயரை உச்சரித்த நிலவன்
மீளாத் துயிலில் ஆழ்ந்துபோனான்..