செந்தமிழ்
பதிவு எண்: STN89.
கண்ணம்மா.
final episode
அத்தியாயம் 31
குண்டூசி விழுந்தால் கூட
சத்தம் கேட்கும் அளவிற்கு
அந்த சபையே நிசப்தத்தில் ஆழ்ந்தது.
அனைவரின் கவனமும்
குற்றமாணிக்கூண்டில்
புயலாய் மாறி நிற்கும்
செந்தமிழிலேயே வளம் வந்தது.
தனது வாழ்வில் துயரங்களை மட்டுமே சந்தித்த பெண்ணொருத்தியின் பார்வையில் நிகழ்ந்த அனைத்தும் மிகச் சரியே.
செந்தமிழின் இடத்தில் தங்களைப் பொருத்திப் பார்த்தவர்களுக்கு அவள் பக்கம் நியாயங்கள் ஐயம் திரிபுர விளங்கின. ஏதோ ஒரு வகையில் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி இருந்தால் செந்தமிழ். ஒற்றைப் பெண்ணாக நின்று ஒரு மிருக கூட்டத்தையே கருவறுத்திருக்கிறாள்
இன்று புள்ளியிலேயே
பெண்களின் மனதில் தனி ஒரு இடத்தைப் பிடித்தாள் செந்தமிழ்.
யாருமே அவள் ஆற்றியது மாபெரும் குற்றம் என்று
சொல்ல வரவில்லை.
அவளை குற்றவாளி என முத்திரை குத்தவும் விரும்பவில்லை. சட்டம் என்பது
மானுடனானவன் கசடுகள் அற்ற ஒரு நேர்த்தியான வாழ்வினை வாழ
தானே தனக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு திட்ட வரைவு.
இன்று அதுவே கயமையின்
கைப்பாவையாக திகழ்கையில்
நீதியை நிலை நாட்ட
அநீதியை தகர்த்தெறிய
மாறுபட்ட சிந்தனையுடன்
அதற்கு எதிராக செயல்படுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று தான் அவர்களுக்குத் தோன்றியது.
எல்லாவற்றிற்கும் மேலாக
ஒட்டுமொத்த சென்னை மாநகரத்தையும் தலைமை
காவலனாக நின்று
சீரிய வழியில்
நெறிப்படுத்த வேண்டியவனே
குற்றங்களின் களஞ்சியமாக திகழ்வதை தான் அனைவரையும் கோபம் கொள்ள வைத்தது.
என்ன நேர்ந்தாலும் நம்மை பாதுகாக்க காவல்துறை இருக்கிறது
இன்று நம்பிக் கொண்டிருந்தவர்களின்
நம்பிக்கையை எல்லாம் ஒட்டுமொத்தமாக குழி தோண்டி
புதைக்கப்பட்டது எண்ணி மனம் வருந்தினர்.
பதவியை கையில் வைத்துக்கொண்டு
அந்தப் பதவியை வைத்தே
கொடிய தவறுகளின் மூலம்
கிடைக்கும் லாபத்தை வைத்து
வயிற்றை வளர்க்கும் இவர்கள்
மக்களை முட்டாளாக்கிய
அந்த ஓநாய்களை எதிர்த்து
சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பத் துவங்கினர். கரிகாலனையும் மார்த்தாண்டத்தையும்
கொடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டுமென்று
வலியுறுத்த துவங்கினர்.
கறை படிந்த சமூகத்தில்
நிகழும் அநியாயங்களை அழித்துப் போட ஓட்டைகள் நிறைந்த சட்டத்தை அணுகுவதை விட செந்தமிழின் ரௌத்திர
பாதையே சரியானது என்று வாதிட துவங்கினர்.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களின் கருமை படிந்த பக்கங்கள் பெண்ணினத்தை யோசிக்க வைத்தது. தனது வாழ்விற்கான முழு பொறுப்பு தான் தான் என்றும்
தனது உரிமை தனது கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும்
நன்மையோ தீமையோ எதுவென்றாலும் தனக்காக தான் நின்று போராட வேண்டும் என்றும் செந்தமிழ் என்ற வீரப் பெண்ணின் மூலம்
தெளிவாக விளங்கிக் கொண்டனர்.
"ஓகே மிஸஸ் செந்தமிழ்!
உங்களோட வாதத்துக்கு நாங்களும் உடன்படுறோம்.
நீதிபதிங்கறத தாண்டி ஒரு சராசரி பொண்ணா கயமைக்கு நீங்க புரிஞ்ச எதிர்வினையை
கண்டு எனக்கு பிரம்மிப்பா இருக்கு. இருந்தும் உங்களோட செய்கைகள் இளம் தலைமுறை யின் மனநிலையை குறைக்கும் ஆன பயம் வருகிறது.
எதற்கெடுத்தாலும் வன்முறைய
ஆயுதமா கையில ஏந்திட்டா
அமைதி சிதறும். அதுவே தீவிரவாதத்துக்கு வித்தா அமைஞ்சா இந்த சமூகம் என்ன ஆகும்? அதையும் யோசிக்க வேண்டி இருக்கு இல்ல?
என்னைக்கும் சட்டத்தை சார்ந்தவர்கள் வேணும்னா தப்பா இருக்கலாம் ஆனால் ஒரு போதும் சட்டம் தப்பானது கிடையாது.
சட்டத்தின் உதவியோட
வாழ்க்கையில உயர்ந்த எத்தனையோ பேர் இந்த சமுதாயத்தில் தான் இருக்காங்க.
எனவே உங்களோட வாதத்தை ஆதரிக்கிற அதேசமயம்
சமூகத்தின் நலன் கருதி
சட்ட வரைவு நியமத்தின் படி உங்களுக்கு தகுந்த தண்டனை வழங்க இந்த நீதிமன்றம்
முடிவெடுத்து இருக்கு."
என்று அழுத்தமாக கூறினார் பெண் நீதிபதி.
செந்தமிழ் அவருக்கு பதில் கூறவில்லை விரத்தி புன்னகையில் நெளிந்த அவளது உதடுகள்
அழுத்தமாக மூடியே இருந்தன.
" இதுவரை செந்தமிழ் சொன்ன கதைகளுக்கெல்லாம் மின்னணு ஆதாரங்கள் மட்டும்தான் சமர்ப்பிக்கப்பட்டிருக்கு.
கிட்டதட்ட பத்துக்கும் மேற்பட்ட கொலைகளை சத்தமே இல்லாம பண்ண தெரிஞ்சவங்களுக்கு
ஆதாரத்தை தனக்கு சாதகமா
மாத்திக்க தெரியாமலே இருந்திருக்குமா? இத்தனை செஞ்சவங்க ஏன்
காகித அத்தாட்சிகளை கண்டுபிடிக்கல?
எனக்கு என்னவோ இதெல்லாம் சுத்த கட்டு கதை என்று தோணுது.." கீழே விழுந்து
நன்றாக சகதியில் புரண்ட பிறகும் மீசையில் மண்ணொட்டவில்லை
என்பதாக எதை எதையோ பேசி வழக்கினை திசை திருப்ப முயற்சித்தார் அரசு வழக்கறிஞர்."
"மதிப்பிற்குரிய வழக்கறிஞர் அவர்களின் அற்புதமான
அகழாக நீங்களே பார்த்தீங்க இல்ல? நீங்க சொல்ற அந்த சட்டத்தை இவரும் மதிக்கணும் இல்ல? ! என்று கேட்டவரின் குரலில் எள்ளல் தொக்கி நின்றது.
"டாக்குமெண்ட்ஸ் ஓட ஹாட் காபிஸ் எல்லாம் நீதிமன்றத்தோட கைக்கு கிடைச்சாச்சு லாயர் சார்.
வீண் பேச்சு பேசாம உட்காருங்க."
என்று அவரைக் கடிந்து கொண்டார் நீதிபதி. நீதிபதியின் வார்த்தைகளில் அதிர்ச்சி அடைந்தான் கரிகாலன்.
"ஆதாரங்கள் எல்லாம் என்கிட்ட தானே பத்திரமா இருந்துச்சு?
அப்புறம் எப்படி?" என தனக்குள் அலறிக் கொண்டிருந்தவனின் தோளில் இடித்தால் மதுரா.
"பிளான் சக்சஸ் பேபி..."
என்று அவனது காதுக்கு அருகில்
குனிந்து புன்னகையுடன் கூறியவளின் விழிகள்
மகிழ்ச்சியில் பளபளத்தன.
அந்த மகிழ்ச்சியை தாண்டிய
அவளில் விழிகளில் தேங்கி நின்ற ஏதோ ஒன்று பலான பட்ட கரிகாலனையே நடுங்க வைத்தது....
"உள்ள வாங்க பிறைசூடன்.'
என நீதிபதி பிறைசூடனை அழைக்க கம்பீரமாக உள்ளே நுழைந்தான் பிறை சூடன் ஏசிபி.
"ஆதாரங்களோட ஹாட் கோப்பியை நீதிமன்றத்துக்கிட்ட குறிச்ச நேரத்துக்குள்ள கொண்டு வந்து சேர்த்தது நீங்கதான்.
மட்டுமில்லாம நீங்களும் செந்தமிழுக்கு கீழ் அந்தக் குழுவினனா இயங்கி இருக்கீங்க. உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டி இருக்கா? "
என்று வினவிய நீதிபதியை பார்த்து புன்னகைத்தவன்
"சட்டத்தின் மூலமாக
மக்களுக்கு சேவை செய்யலாம்னு தான் இந்த துறையை நான் தீர்வு செஞ்சேன்.
ஆனா சில அயோக்கியர்களால
என்னோட கனவுகள் இல்லாமல் தரைமட்டமாச்சு. அதைவிட
எனக்கு உற்ற தோழனாக இருந்த நிலவனோட மரணத்துக்கு பின்னால இருந்த
சிகிச்சைகள்தான் என்ன
செந்தமிழோட கொள்கைகளை பின்பற்ற வெச்சது.
எங்களோட குழுவால முதன் முதலா கொலை செய்யப்பட்ட
சுடரொளி மேல்நிலைப் பள்ளியுடன் வாட்ச்மேன்
சம்பந்தம் தொடங்கி
எங்களோட கடைசி கொலையான வேதநாயகம் வர
எல்லாருமே பணத்துக்காக வாய பிளக்கும் பிணங்க.
இப்ப பெண் குழந்தைகளுக்கு எதிரா செயல்பட்ட ஒரு நெட்வொர்க்கை ஒன்றும் இல்லாமல் பண்ணி இருக்கோம்.
இனியாவது இந்த சமூகம்
ஒழுக்கத்தின் பாதையில
வழி நடந்தால் சரி."
என்று கூறி அமர்ந்தான்.
"இப்ப சொல்லுங்க
இந்த சட்டத்தால நான் இழந்த எதை திருப்பித் தர முடியும்?
என்னோட கற்ப?
அநியாயமா கொல்லப்பட்ட பிஞ்சு குழந்தைகளோட உயிரை?
எங்களை விட்டு பிரிஞ்சு போன என்னோட இனி குட்டிய?
எல்லாத்தையும் விட
என்னோட ஒப்பற்ற
சிறகா திகழுற என்னோட நிலவன உங்களோட சட்டத்தால
திரும்ப என்கிட்ட சேர்க்க முடியுமா? சொல்லுங்க.
சொல்லுங்க
சொல்லுங்க. "
என ஆத்திரத்துடன் கத்தினால் செந்தமிழ். சீற்றத்தில் அவளது கை கால்கள் எல்லாம் நடுக்கம் கண்டன. "காம் டவுன் மிசஸ் செந்தமிழ். நாங்க"
என எதையோ சொல்ல வந்த நீதிபதியின் பேச்சு வெளியே கேட்ட கூச்சல் சத்தத்தில்
தடைப்பட்டது.
"ஜஸ்டிஸ் பார் செந்தமிழ்."
"சட்டமே சீர்படு. சாமானியனை வாழ விடு"
"ரத்து செய் ரத்து செய்
செந்தமிழுக்கான தண்டனையை ரத்து செய்." போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. வழக்கினை பின் தொடர்ந்து கொண்டிருந்த
பொதுமக்கள் நொடியில் பெரும் திரளாக நீதிமன்றத்தின் வாயிலில் கூடினர்.
ஊடகமும் பத்திரிக்கை துறையும்
செந்தமிழின் வழக்கை குறித்த பொது மக்களின் பார்வையை
பதிவு செய்ய துவங்கியது.
மக்கள் திரளை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை எவ்வளவு முயன்றும்
பலன் கிட்ட வில்லை.
நீதிமன்ற வளாகமே நிமிடங்களில் கலவர பூமி ஆனது. சூழலை சீர்படுத்த
நீதிபதிகள் வாயிலுக்கு விரைந்தனர். "இங்க பாருங்க
செந்தமிழ் உடைய வழக்கு முழுக்க முழுக்க இந்த சமூகத்தைச் சார்ந்தது அப்படிங்கறதால தான்
விசாரணையை நேரலையில் ஒளிபரப்பினோம்.
இப்போ நாங்க பயந்தது போல செந்தமிழோட செய்கைகள் வன்முறைக்கு தூபம் போட்டு இருக்குன்னு
நீங்க நிரூபிக்கிறீங்க."
என்று கோபத்துடன் மொழிந்தார் ஆண் நீதிபதி.
"நிச்சயமா இது வன்முறை இல்ல.
சட்டம் மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா இந்த முடிவுக்கு செந்தமிழ் ஏன் வந்திருக்க போறாங்க?
இப்போ இவங்களால கொல்லப்பட்ட அத்தனை பேரும்
நயவஞ்சக கூட்டத்தைச் சேர்ந்தவங்க தான்.
சட்டத்தை சீரமைக்கிறது விட்டுட்டு தனக்காக சுயமா நின்னு போராடின ஒரு பொண்ணு தண்டிக்கிறதுல முனைப்பா இருக்கீங்க?
செந்தமிழுக்கு மட்டும் இல்ல அந்த குழுவை சார்ந்த வருத்தங்களுக்கும்
எந்த தண்டனையும் வழங்கப்படக் கூடாது.
செந்தமிழனாக பார்க்க விரும்புறோம். அவங்களை இங்க கூட்டிட்டு வாங்க. அப்புறம் இந்த சமூகமே அவங்களுக்கான தீர்ப்பை எழுதும்."
என்று திட்டவட்டமாக கூறினர்.
நிமிடங்களில் நீதிபதிகளின் கண்ணசைவில் காவல்துறையினரால் வாயிலுக்கு அழைத்து வரப்பட்டாள் செந்தமிழ்.
"பாருங்க மிஸஸ் செந்தமிழ்
இதைத்தான் இந்த சமூகத்துக்கு நீங்க கற்றுக் கொடுக்க நினைத்தீர்களா?"
என்று காட்டமுடனின் வினவினார் பெண் நீதிபதி?
"நிச்சயமா இல்ல."
என்று அவரிடம் மொழிந்து செந்தமிழ் கூட்டத்தினரை நோக்கி பேசத் தொடங்கினாள்.
"உங்க எல்லோருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
இந்த சமூகம் இன்னும் அதோட உயிர்ப்ப தொலைக்கல என
எனக்கு காண்பித்துக் கொடுத்ததுக்கு. என்னோட வழக்க பத்தி உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.
இப்ப வர ஒரு சதி கூட்டத்தை
குழுவா சேர்ந்து தோற்கடித்ததுல
நாங்க பெருமைப்படுறோம்.
இருந்தாலும் சட்டம்
தகுதியான மனிதர்களுடன் கைக்கு போய் சேரணும்கிறத
வலியுறுத்த நினைச்சு தான்
தைரியமா கழுத்துல இறங்கணும். இப்ப உங்களுக்கும்
சட்டத்தோட உண்மை நிலை என்னன்னு தெரிய வந்துருச்சு.
இனி சட்டத்தை எப்படி
திறம்பட சீரமைச்சு
தகுதியானவங்களோட கையில கொண்டு போய் சேருங்க.
நீங்களே சமூக நலன முன்னிறுத்தி புதிய சட்ட திட்டங்களை உருவாக்குங்க.
சாமானிய மக்களுக்கு மதிப்பு குடுங்க.
பெண்களோட உணர்வுகளுக்கு
மதிப்பு குடுங்க. என்னைக்கும் நம்ம தான் நமக்கான ஆயுதம்னு ஒவ்வொரு பெண்களும்
புரிஞ்சு செயல்படுங்க.
ஒருவேளை இது எல்லாத்துக்கும் மட்டும் உங்களால
செயல்வடிவம் பெற்றதுன்னா
அதுதான் நீங்க எனக்கு
கொடுக்கிற மிகப்பெரிய ஆதரவு.
இந்தப் போராட்ட முழக்கங்களை எல்லாம் விட்டு வெளிச்சத்துக்கு
புதிய சமுதாயத்தை உருவாக்குற பாதையில இறங்குங்க.
அவசியம் இல்லாம
வன்முறைய யாரும் கைல எடுக்கக் கூடாது என்பதற்காக
எனக்கு கிடைக்க போற தண்டனை
உங்களுக்கு அறிவுறுத்துக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்படுறேன்.
ஏன்னா இன்னொரு செந்தமிழ் இந்த சமூகத்துக்கு வேண்டாம்.."
என்று கூறிய செந்தமிழின்
மனதில் மறுமலர்ச்சிக்கான நம்பிக்கை மலர் விட துவங்கியது.
செந்தமிழின் வார்த்தைகளைக் கேட்ட கூட்டம் மந்திரத்திற்கு கட்டுப்பட்டதை போல் மெல்ல மெல்ல கலைய துவங்கியது.
"சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு குற்றங்களை நிகழ்த்திய
செந்தமிழுக்கு பத்து வருட கடுங்காவல் தண்டனையும்,
அவருக்கு கீழ் குழுவாக இயங்கிய குறிப்பிடத் தகுந்த முக்கிய நபர்களான acp பிறைசூடன், திருமதி மதுரா,
மற்றும் செல்வி இளவஞ்சி
ஆகியோருக்கு 5 வருட கடுங்காவல் தண்டனையும்
பதவி மமதையால் பாவ செயல்களை அரங்கேற்றிய மார்த்தாண்டம் மற்றும் கரிகாலனுக்கு வாழ்நாள் கடுங்காவல் தண்டனையையும்
வழங்கி தீர்ப்பிடப்படுகிறது."
என்று தீர்ப்பு எழுதிய நீதிபதி
அனைவரையும் கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
நொடி நேரத்தில்
துப்பாக்கி தோட்டா ஒன்று கரிகாலனின் நெஞ்சத்தை பதம் பார்த்தது. அதிர்ச்சியில் விழிகள் விரிய கீழே சரிந்தான் கரிகாலன்.
"ஹவ் ஏ ப்ளசென்ட் டே பேபி என்ஜாய் தி ட்ரீட்."
இன்று கண்களை சிமிட்டி சொன்ன மதுரா
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாள்.
அந்த நேரத்தை பயன்படுத்தி
தனது இடையில் சொருகியிருந்த கத்தியை
எடுத்து சாய்வு நாற்காலியில்
கிடத்தப்பட்டிருந்த கரிகாலனின்
தொண்டையில் இறக்கினாள் செந்தமிழ்.
"சின்ன குழந்தைகளை சீரழிச்ச நீ எல்லாம் உயிரோட இருந்து என்ன பண்ண போற?
பத்திரமா மேலோகத்துக்கு போ." என்று மொழிந்த செந்தமிழ், "மலரினியோட அத்தடா நா."
என்று பற்களை நரம்பியவாறு கூறினாள்.
கரிகாலன் என்னும் மிருகத்தை காவு வாங்கி இருந்தாள் செந்தமிழ்.
"இல்ல இட்ஸ் நாட் ஃபேர்.
தாமதிக்காம செந்தமிழுக்கு தூக்கு தண்டனையை வழங்கணும். விளையாட்டா
நிச்சயம் இவங்களால இந்த சமூகம் தீவிரவாதத்தை கையில் எடுக்கும்."
எனக்கு கத்தினார் அந்த பெண் நீதிபதி. "ஒரு பெண்ணுக்கு எதிரி என்னோட பெண் தான்."
இன்று அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.
தூக்குல ஏறுறதுக்கு முன்னாடி தீர்க்கப்படாத இன்னொரு கணக்கையும் நான் தீர்த்து முடிக்கணும். " என்று கூறியவளை துப்பாக்கியுடன் சுற்றி வளைத்தனர் காவல்துறையினர்.
"தள்ளி போங்க"
என்று கர்ஜித்தாள் செந்தமிழ்
புயல் என துணிந்து போய் சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த
மார்த்தாண்டத்திடம் வேறு எட்டுகளை வைத்தாள்.
"என்னை நினைவிருக்கும் மிஸ்டர் மார்த்தாண்டம்?"
இன்று நிலவிய செந்தமிழின் விழிகள் பழி வெளியில் மினுங்கின.
"உள்ளத்தை ஆக்கிரமித்த பயத்தோடு இல்லை என்பதாக தலையசைத்தார் அவர்.
"அது சரி கணக்கே இல்லாம பொண்ணுங்கள சீரழித்த உங்களுக்கு
என்ன பத்தி நினைவு வைத்துக்கொள்வது எல்லாம் கஷ்டம் தான்.
ஆனா நிலவன் உனக்கு நினைவிருக்குமே?
அவனோட பொண்டாட்டி நான்.
நீ என்ன சீரழிச்சத கூட
நான் விட்ருவேன்.
ஆனா திட்டம் போட்டு என்னோட நிலவன என்கிட்ட இருந்து
நிரந்தரமா பறிச்சிட்டு போன நீ உயிரோட இருக்கவே தகுதி இல்லாதவன்."
என்று கூறிக் கொண்டே
தனது இடையில் செருகியிருந்த மற்றொரு கத்தியால் அவனது வயிற்றில் சரமாரியாக குத்தினான்.
நீல நிறத்தில் தெரித்த அவனது ரத்த துளிகள்
மார்த்தாண்டத்திற்கு வேறு கதையை கூறியது உடல் நடுங்க
செந்தமிழை பார்த்தவர்
பேசவே முடியவில்லை
அவர் உட்கொண்டிருந்த நஞ்சு தனது வேலையை காட்டத் துவங்கியிருந்தது.
"எல்லாம் நீ சப்புக்கொட்டி குடிக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸ் ஓட உபயம் தான். உன்னோட வொய்ப் உனக்காகவே பிரத்தியேகமா செஞ்சது."
என்றவன் "இன்னுமா புரியல
உன்னோட மனைவியும் இந்த குழுவோட ஒரு அங்கம்.
உணவுகளை ருசியா சமைக்க உதவுற அஞ்சறைப்பெட்டி,
ஒரு உயிரைக் குடிக்கிற
வல்லமையும் இருக்கு."
என்றாள் புன்முறுவலுடன்.
"அடக்கு முறையின் பிடியிலேயே சிக்குண்டு சிதைந்து போன வேலுநாச்சி தனது தானே தனக்கான விடுதலையை பெற்றுக் கொண்ட நிம்மதியுடன்
செந்தமிழ் ஏற்பாட்டில்
வெளிநாட்டை நோக்கி
மன நிறைவுடன் விமானத்தில் பறந்து கொண்டிருந்தார்.
நடந்தவற்றை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த மலர் இல்லத்தின்
உறுப்பினர்களிடம் விரைந்து செந்தமிழ், "குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோங்க.
நான் போறேன்.
என்றவள், அங்கு கண்ணீருடன் நின்று கொண்டிருந்த மீராவின் கையைப் பிடித்து
"நற்றமிழையும் நவீனையும் உன்ன தவிர வேறு யாராலும் நல்லா பாத்துக்க முடியாது.
அதுல நானும் கூட அடக்கம்.
இனி நீ நீயும் வசந்தன் அண்ணாவும் தான்
அவங்களோட அம்மா அப்பா.
அவங்க உங்களோட பிள்ளைகளா மட்டுமே எப்பவும் இருப்பாங்கங்கிற நிறைவோடு போறேன்." என்றவள்
காவலர்களுடன் இணைந்து நடந்தாள்.
அலுவலகத்தை விட்டு செந்தமிழ் வெளியே வந்த போது
அந்தப் பாதையை கடந்து சென்ற வாகனம் ஒன்று
"சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்.
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்.
கோடி சுகம் வாராதோ நீ என்னை தீண்டினால்.
காயங்களும் ஆறாதோ, நீ எதிர் தோன்றினால்.
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக்கூடும்.
என்ற பாடல் வரிகளை செந்தமிழின் காதுகளுக்கு பாய்ச்சி விட்டு சென்றது.
"நிலவன்" என்று கணவனின் பெயரை உச்சரித்த மங்கையின் விழிகளில் மெல்லிய நீர் படலம்.
இத்தனை நாள் பிடிவாதத்துடன் தான் கட்டி வைத்திருந்த அத்தனை துக்கத்தையும் அந்த ஒற்றை கண்ணீர் துளியில் கரைத்து விட முயன்றால் செந்தமிழ்.
இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் கொஞ்ச நேரத்தில்
அவளது நிலவனை அவள் சந்திக்கப் போகிறாள்.
அவனது சிறகுகளுக்குள் புகுந்து கொள்ள போகிறாய் என்ற எண்ணமே அவளது முகத்தை ஒளிரச் செய்தது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக பெண்ணவள் தன் இதயத்திற்குள் வளர்த்த யாகம்
இன்றோடு முற்றுப்பெற்றது.
"இதுக்கு மேலயும் என்னால உங்களை விட்டு விலகி இருக்க முடியாது நிலவன்.
நான் எதையெல்லாம் செய்ய நினைச்சேனோ அதை வெற்றிகரமா செஞ்சு முடிச்சிட்டேன்.
இனி நீங்க இல்லாத இந்த உலகத்துல என்னால இருக்க முடியாது. உங்களோட செந்து வா உங்க கிட்ட நான் வந்துட்டேன்."
என வானத்தைப் பார்த்து
வாய்விட்டுக் கூறியவளின் கன்னங்களை மழைத்துளிகள் நனைத்துச் சென்றன
தனக்கான இலக்கினை அடைந்துவிட்ட நிறைவுடன்
கண்களை துருத்திக் கொண்டிருந்த கண்ணீர் துளியை சுண்டி எறிந்து விட்டு
இதழ்களின் நிறைத்த
கம்பீர புன்னகையோடு
தூக்கு மேடையை நோக்கி நடந்தாள் செந்தமிழ்....

Last edited by a moderator: