• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தமிழ் - 4

Vishakini

Moderator
Staff member
செந்தமிழ்

பதிவு எண்: STN89.
கண்ணம்மா.

அத்தியாயம் 4.

மலர் இல்லத்துத் தோட்டத்தின் நடுவில் வீற்றிருந்த அந்த நினைவுத்தூபியின் முன்பு கூடியிருந்தனர் அனைவரும். என்ன முயன்றும் முடியாமல் எல்லோரினது விழிகளும் ஒருங்கே உவர் நீரைச் சொறிந்தன.கசங்கிய முகத்துடன் கைகள் நடுங்கத், தனது ஆசைப் பேத்தியின் சமாதியில், மலர் வளையம் வைத்து விளக்கேற்றினார் அய்யாதுரை.
அங்கிருந்த ஒவ்வொருவரின் மனமும் நடந்தவற்றில் இருந்து மீள இயலாமல் துடுப்பற்றப் படகாய்த் தத்தளித்துக் கொண்டிருந்தது.

வசந்தன் மீராவின் ஈடு இணையற்ற நேசத்தைப் பறைசாற்றும் அழகுப் பெட்டகமாய் அய்யாதுரை குடும்பத்திற்கு ஆனந்தத்தை அளவில்லாமல் அள்ளித் தர வந்த மூத்தப் பேரக் குழந்தைதான் மலரீனி குட்டி.

தங்களது இரண்டாம் தலைமுறை யின் முதல் வாரிசு பெண் குழந்தை என்றறிந்ததும்
மகிழ்ச்சி புரிப்படவில்லை ஐயாதுறை அமுதவல்லி தம்பதியினருக்கு. பர்வதம் பாட்டியும் தெய்வானை ஆச்சியும் கூட நெகிழ்ந்து போயினர். பின்னே தங்களது பேரன் பேத்தியின் பிள்ளையையும் கண்ணாரக் கண்டு விட்டார்களே!

குடும்பத்தினரின் விருப்பத்தின் பலனாகவும், இடைவிடாத வேண்டுதல்களின் பலனாகவும் அந்தக் காஞ்சிக் காமாட்சியே தங்களின் குலக் கொழுந்தாக உதித்துவிட்டதை எண்ணி எண்ணிப் பூரித்துப் போயினர். அதனாலோ என்னவோ மலரினி என்றாலே அனைவருக்கும் உயிர்.அவளே அய்யாதுரைக் குடும்பத்தின் ஆரோகணம் ஆகியும் போனாள்.

தான் பொறுப்பேற்றதற்குப் பிறகு, புதியதோர்ப் பரிமாணத்தில் தங்களது தொழில் இன்னுமே விரிவடைந்திருப்பதை உணர்ந்தக் கணம்அந்த முன்னேற்றம் தரும் விளைச்சலை, முறையாக அறுவடை செய்ய ஆசை கொண்டான் நிலவன். அதன்
நீட்சியாகக் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் தங்களது வீட்டைச் சுற்றியிருந்த அகன்ற நிலப்பரப்ப்்இல் மதில் சுவர்கள் எழுப்பித், தனது கற்பனைக்கு வடிவம் கொடுத்து,
பெண்கள் மறுவாழ்வு மையம் ஒன்றை வீட்டுடன் இணைத்துக் கட்டினான். தடம் பிரழ்ந்த வாழ்வியலால் நிலை தடுமாறி நிற்கும் பெண்களுக்குத் தங்களுக்கான இலக்கினைச் செம்மயுர வகுத்துக் கொள்ளும் வழித்தடமாக இந்த மறுவாழ்வுமையம் திகழவேண்டும் என்பதில் முழு கவனத்துடன் செயல்பட்டான் நிலவன். அவனது அந்த ஆக்கப் பூர்வமான
முயற்சிக்கும், அயராத உழைப்பிற்கும் பலனாக மலரில்லம் என்ற அழகிய சோலைப் பொலிவுடன் நிமிர்ந்து நின்றது. மருமகள் என்றாலே கொள்ளைப் பிரியம் நிலவனுக்கு.
நிலவனுக்கும் மலரினிக்கும் இடையே இருக்கும் பிணைப்பினை விவரிக்கவோ, வரையறுக்கவோ அவர்களது அகராதியில் போதிய வார்த்தைகள் இருக்கவில்லை.

தனது குட்டிக் குறும்புகளாலும், கிள்ளை மொழிப் பேச்சாளும், பச்சரிசிப் பல் புன்னகையாலும் மனம் கமழும் மென்மலராய் அவர்களதுக் கூட்டின்
அந்தமாகிப் போன அந்தச் சின்னஞ்சிறு ரோஜா மொட்டின் பெயரே நிலவனின் கனவு இல்லத்தின் அடிநாதமானது.

தாய்மாமனான அவ அவனுக்கே குழந்தையின் மீது இத்தனைப் பிடித்தம் என்றால்,
அவளைப் பத்துமாதம் ஊனிலும், உயிரிலும், உணர்விலும் சுமந்து பக்குவமாய் ஈன்றெடுத்தப் பெற்றவர்களுக்கு அவள்தானே ஆதாரம்; அவர்களின் ஒட்டுமொத்த உலகமும் அவள் மட்டுந்தானே; அப்படியிருக்கையில் தங்களது அருமைச் செல்வத்தை இந்த இறைவன் எனப்படுகிறவன் அடியோடு அழித்துவிட்டானே; இது எங்கனம் நியாயமாகும்??? அது சரி முதலில் இறைவனா நேரில் வந்து குழந்தையின் உயிரைப் பறித்தான்? இல்லையே; மனிதன் என்ற வார்த்தைக்குச் சற்றும் தகுதியற்றஅந்தக் கொடிய அரக்கர்களல்லவோ இந்தச் சித்திரத்தைச்சீர்குலைத்துச் சிதைத்துப் போட்டார்கள்???
எனினும் இதையெல்லாம் நடக்கட்டும் என்று அனுமதித்து,நிகழ்ந்த அவலங்களை மௌனமாய் வேடிக்கைப் பார்த்தப்படைத்தவனிடந்தானே எல்லாவற்றிற்கும் நியாயம் கேட்க முடியும்???

"ஏன் இப்படிச் செய்தாய் இறைவா? ஏன் எங்களது பிள்ளையை இவ்வளவு சீக்கிரம் அதுவும் இத்தனைக் கொடுமையான முறையில் எங்களிடமிருந்து பிரித்துக் கொண்டாய்???
மீண்டுவிடவே முடியாத துயரத்தில் இரக்கமின்றி எங்களைத் தள்ளியது ஏன்???அந்த அளவிற்கு நாங்கள் ஆற்றியக் குற்றந்தான் என்ன???புன்னகைப் பூவாய்ச் சுற்றித் திரிந்தவளுக்கு ஏன் இத்தகையத் தண்டனை???நல்லோரின் பக்கமே இறைவன் துணை நிற்பான் என்பதெல்லாம்நாவினிக்கச் சொல்லும் பொய்யோ???"உள்ளம் இடும் ஓலத்தை அடக்கமுடியாமல் அனைவரும் திணறிப் போயினர்...

மௌனம் என்ற போர்வைக்குள் தன்னை ஒலித்துக் கொண்டு, எதற்கும் எதிர்வினையாற்றாமல் அமைதி காக்கும் அந்த ஆண்டவனை நொந்து கொள்வதா? அல்லது அவனையே சகலமுமாய் நம்பி, அவன் ஒருவனையே பற்றுகோளாகப் பிடித்துக் கொண்டு, வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்திக் கொண்டிருக்கும் தங்களையே நொந்து கொள்வதா என்ற ஐயமே அங்கு இருந்தவர்களிடம் மிதமிஞ்சி தொக்கி நின்றது.
தனது கை வளைவில் கோழிக்குஞ்சாய் நடுங்கிக் கொண்டிருந்த மீராவை இழுத்துத் தன் நெஞ்சோடுப் பொத்திக் கொண்டான் வசந்தன்.

"இந்த இதயக்கூடு தனது இயக்கத்தை நிறுத்தும் நொடி மட்டும் உனக்காக, உன்னவனாக நான் இருக்கிறேன்..என்றென்றைக்கும் இருப்பேனடிச் செல்லம்மா.. கலங்காதிரு..."
தனது இறுகிய அனைப்பின்மூலம் அவனது என்ன ஓட்டங்களையெல்லாம் தன்னவளிடம் கடத்தி, அவளைத் தேற்றமுயன்றான். ஆறாத காயங்களால் ரணமாகிப் போயிருந்தப் பெண்ணவளின் உள்ளமும் கணவனின் அரவணைப்பில் சற்றே இதம் கண்டது.

பிறவியிலேயே தனது பார்க்கும் திறனை இழந்திருந்தான் வசந்தன்.
இதுவே அவனைத் தனது குடும்பத்தினரிடமிருந்து வெகுவாகத் தள்ளி நிறுத்தியிருந்தது. எதற்கு என்றில்லாமல் எரிச்சலைக் காண்பிக்கும் அப்பா; அவரது அர்த்தமற்ற விவாதங்களுக்குச் சத்தமே இல்லாமல் ஆதரவு தரும் அம்மா; கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலுஉரைத்துவிட்டுக் கடந்துவிடும் தம்பி தங்கை...இவ்வளவுதான் வசந்தனின் குடும்பம்.

அங்கவீனத்துடன் பிறக்கும் குழந்தை குடும்பத்தினருக்கு இறக்கிவைக்கவே முடியாத பெரும் சுமை என்று நம்பும் குடும்பங்களில் இதுவும் ஒன்று.எள்ளல் பேச்சுக்களும், பரிதாபப் பார்வைகளும், வசம்பயொத்த வார்த்தைகளும் வசந்தனின் குடும்பத்தை
இப்படி மாற்றியிருந்தது.

அங்கவீனம் என்பது ஒரு இயலாமையே அன்றி இயங்காமை இல்லை என்பதை
யார்தான் இவர்களுக்கு விளக்கிச் சொல்வது? உடலில் குறைபாடு உடையவர்களை ஊனமுற்றவர்கள் என்று முத்திரைக் குத்தும் இச்சமூகம்,
எண்ணற்றத் திறமைகளைத் தமக்குள் கொணர்ந்து, சுயமாகத் தம்மைத்தாமே
திறம்படச் செதுக்கி, எழில்மிகுந்தச் சிற்பங்களாய் மிளிரும்இவர்கள் எண்ணற்ற மாற்றங்களை உருவாக்கப் பிறந்த மாற்றுத்திறனாளிகள் என்பதை ஒத்துக்கொள்ள மறுப்பதுதான் வேடிக்கை. இந்தச் சமூகம் எத்துணை வளர்ந்திருந்தாலும்எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒரு மாற்றுத்திறனாளி முடக்கப்படுகிறான்.அவனது உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதும், அவனது குரல் நசுக்கப்படுகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

எண்ணற்றப் போராட்டங்களின் பலனாகவும், விடையளிக்க மறுக்கப்பட்டக் கேள்விகளுக்குப் பதிலாகவும் என்னதான் இச்சமூகம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட முன்வந்தாலும் அவர்களை அவர்களாகவே இயல்புடன் ஏற்றுச், சக மனிதர்களாக நடத்தத் தயங்குவது கசந்த முறுவளையே தோற்றுவிக்கிறது...

வசந்தனின் வீட்டில் நடப்பவற்றையெல்லாம் கண்டும் காணாமல் அவதானித்துக் கொண்டிருந்தத் தெய்வானை ஆச்சி, வசந்தனுக்கு ஆரோக்கியமான வாழ்வியலை உருவாக்கித் தர எண்ணினார். எப்பாடுபட்டாவது அவனை நல்ல உயரத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்று உறுதி கொண்டார். அவரது உறுதி விரைவிலேயே செயல்வடிவமும் பெற்றது. தன் மகளையும், பேரக்குழந்தைகளையும் பார்த்துவர மகளின் வீட்டிற்குச் சென்றவர், ஒரே பிடியாக நின்றுதான் திரும்புகையில் வசந்தனையும் கையோடு அழைத்துவந்த பிறகே ஓய்ந்தார்.

வசந்தனின் மீதான கணவனின் வெறுப்பு மனதைக் கனமாக்கினாலும், இவன் ஒருவனுக்காகப் பார்த்து மற்ற இரு பிள்ளைகளின் வாழ்வினைப் பாழாக்க வசந்தனின் தாய் விரும்பவில்லை. அதேசமயம் இந்தக் கூடு வசந்தனின் சிறகுகளை நிச்சயம்
முறித்தெறிந்துவிடும் என்பதை நன்கு அறிந்திருந்ததால், மனம் சற்றே சுணக்கம் கண்டபோதும், தெய்வானை ஆச்சியைத்தடுக்கவில்லை அவர்.

அதற்குப் பின்னான நாட்களில் வசந்தனின் வாழ்வியல் தெய்வானை ஆச்சியால்
வெகுவாகப் பண்படுத்தப்பட்டிருந்தது. வசந்தனும் வாழ்வியலின் சூட்சமங்களை ஐயம் திரிபுர கற்றுத் தேர்ந்திருந்தான்.கணவனை இழந்து தனித்து வாழ்ந்த ஆச்சிக்குச் சகலமுமாக வசந்தன் மாறிப்போனான். வசந்தனுக்கும் அப்படித்தான்; எதற்கென்றாலும் அவனுக்கு அவனது ஆச்சி வேண்டும். ஆச்சியைத் தாண்டித்தான் மற்றதெல்லாம்.
ஒருவித லயத்தில் சென்றுகொண்டிருந்த வசந்தனின் வாழ்க்கையைச், சின்னஞ்சிறு சூறாவளி ஒன்று சுழற்றிப் போட்டது; அவனையும் தனக்குள் வாரிச் சுருட்டிக்கொண்டது.

தனது பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில், ஐயா கைத்தறி ஆடை அகத்தின் கிளைக் கடையினை நிறுவிய அய்யாதுரை, மனைவி மக்களுடன் அவ்வூரிலேயே தான் புதிதாகக் கட்டியிருந்த வீட்டிற்குக் குடிபெயர்ந்தார்..சரியாக வசந்தனின் வீட்டிற்கு நேரெதிரில் அமைந்திருந்தது அய்யாதுரையின் வீடு. அய்யாதுரை தாயார் பர்வதம் பாட்டியும், தெய்வானை ஆச்சியும் சிறுவயதிலிருந்தே நெருங்கியத் தோழிகள் என்பதில் இரு குடும்பங்களுக்கும் இடையிலான பிணைப்பு வலுத்திருந்தது.

வசந்தனுக்காக உறவுகளிடமிருந்துப் விலகியிருந்த ஆச்சிக்கு அய்யாதுரை குடும்பத்தினரின் வரவு பேருவகையை நல்கிற்று. இதுவே நிலவன் வசந்தனின் தோழமைக்கும் வித்தாக அமைந்தது. நிலவன் காஞ்சிபுரத்திற்கு வந்த நாள் தொட்டு அவனை வசந்தனின் குணநலன்கள் பெரிதும் ஈர்த்திருந்தது. வசந்தனின் சொல், செயல், சிந்தனை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருந்தது. குறிப்பாகச் சிக்கல்கள் ஒவ்வொன்றையும் வசந்தன் கையாளும் விதம் நிலவனை வியக்கவைத்தது. இருவரது எண்ணங்களும் ஒரே அலைவரிசையில் இணைந்ததாலோ என்னவோ
இயல்பாகவே அவர்களுக்கிடையில் நட்பென்னும் விதை, வேரூன்றி,
பெரும் விருட்சமாக வளரத் துவங்கியது. தனது வாழ்க்கையில் தெய்வானை ஆச்சிக்குப் பிறகு எந்த ஒரு தயக்கமுமின்றி வசந்தனை வசந்தனாகவே ஏற்று நட்பு பாராட்டிய நிலவன் நாளடைவில் வசந்தனின் உற்றத் தோழனானான்.

மீராவுடனும் வசந்தனுக்கு ஆரோக்கியமான உறவு இருந்தது மெய். எனினும் திடீரென்று ஒருநாள் வசந்தனின் முன் வந்த மீரா, அவனின்மீதான அவளது காதலை வெளிப்படுத்தியச் சமயம், செய்வதறியாது திகைத்து நின்றான் வசந்தன்.
ஒருத்திக்குத் தான் ஒருவனே அனைத்துமாக இருக்கிறோம் என்றறிந்த நொடி, வசந்தனின் நெஞ்சத்தில் சாமரம் வீசியது. இருப்பினும் இதை எண்ணி அவனால் முற்றும் முழுதாக மகிழமுடியவில்லை. மாறாக எண்ணற்றக் குழப்பங்களும், கேள்விகளும், ஐயங்களும் அவனைச் சுற்றி வளைத்தன.

இந்த விடயத்தை அப்படியே கடந்துவிடவும் முடியாமல், அதை உவகையுடன் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் மீரா என்ற ஒற்றைப் புள்ளியிலேயே சிக்குண்டு நின்றான் அவன். அப்படி எதுவும் மீராவுக்கு இல்லை போலும். அடுத்த இரண்டு நாட்களிலேயே ஒரு கடிதத்துடன் மீண்டும் வசந்தனின் முன்பு சென்று நின்றிருந்தால். வசந்தன் இது சரிவராது என்று எத்தனை முறை மீராவுக்கு எடுத்துச் சொல்லியும், தான் பிடித்த பிடியிலேயே நின்று,
வசந்தனின்மீதான தனது விருப்பத்தை வீட்டினருக்குத் தெரியப்படுத்தி, அவர்களது ஒப்புதலுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள். இதற்கிடையில் நிலவனை எதிர்கொள்ளும் வகையறியாது தடுமாறினான் வசந்தன். ஆருயிர் நண்பனே என்றாலும் தங்கையின் நலனைப் பேணும் சகோதரனின் பார்வையில் வசந்தன் குற்றவாளியாகியிருப்பானே;

மீராவின் காதலுக்காகத் தனது நட்பைப் பனையம் வைக்க வசந்தன் ஒருபோதும் தயார் இல்லை. அதற்காக மீராவையும் அவனால் அப்படியே விட்டுவிட முடியவில்லை. வெளியில் காட்டிக் கொள்ளவில்லையே தவிர, போகிறபோக்கில் மீரா அவனது அனுமதி இன்றியே அவனது மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து, அவனை ஆட்சி செய்யத் துவங்கியிருந்தால். வசந்தனின் கலக்கங்களை எல்லாம் ஒற்றை வார்த்தையில் களைந்திருந்தான் நிலவன்.

"எனக்கு உன்னைத் தெரிய்யுண்டா. உன் மேல எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கு.அதைவிட உன்னத் தவிர வேற யாரோடையும் என்னோடத் தங்கச்சிஆல
ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திட முடியாது. இனி அவ இந்த வசந்தனோட மீரா." என்றவன் "என்னடா அவ திருமதி மீரா வசந்தன்தானே? இல்ல நான்தான் எதுவும் மாத்திச் சொல்லுறேனா? " எனச் சிரிப்புடன் நண்பனைச் சீண்டிய நிலவனைத் தாவி அணைத்துக் கொண்டான் வசந்தன்..

உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் வெளிவராமல் தொண்டைக் குழியிலேயே சிக்கி நின்றது . அவனது விழிகள் கூட மெலிதாக பணித்திருந்தன. நிலவனும் வசந்தனை ஆரத்தழுவிக் கொண்டான்.அவனைத் தட்டிக் கொடுத்தான். வசந்தனுக்கு அப்போதுதான்
நெஞ்சைக் கவ்விப்பிடித்தப் பாரம் ஒன்று அடியோடு அகன்று சென்றதை உணர முடிந்தது.
"அவ இனி இந்த வசந்தனின் மீரா." தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டான் வசந்தன்.

அந்த வினாடியில் அவனது அர்த்தமற்ற அச்சங்கலெல்லாம் அவனிடமிருந்து விடைபெற்றுக் கடந்திருந்தன. வசந்தனின் மீதான மீராவின் நேசம் அய்யாதுரை குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், அவர்களால் தங்களது இளவரசியின் விருப்பத்தை மறுக்கமுடியவில்லை. அதையும் தாண்டி வசந்தனைவிட ஒரு பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தங்களால் என்ன செய்தும் கண்டுபிடிக்க இயலாது
என்ற நிதர்சனத்தை நிர்மலமான மனதுடன் எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். எத்தனை இடர்பாடுகள் நேரிடினும் தங்களது வாழ்க்கைப் பயணத்தை வசந்தனும் மீராவும்
சீர்படுத்திச் சிறப்பாகவே வாழ்ந்துவிடுவார்கள் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையில்,
இருவரையும் தத்தமது இணையின் கறங்களில் திருமணம் என்னும் பந்தத்தின்மூலம் சேர்ப்பித்தனர்…
 
Top Bottom