• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

Akalya

New member
#நிலவின் அக ஒலி
#கதை விமர்சனம்

ஆரன் விஸ்வேஸ்வரன்🫡

Crime dept ACP 😍.

லஷ்மி நிலாயினி Bank manager😇.

இவங்களுக்கு இடையே சுவாரசியமான காதலும் நம்ம ஆரனின் காவலும் கடமையும் சேர்ந்தது தான் இந்த கதை...

➡ஒரு பெண்ணோட தற்கொலையை விசாரிக்க வரார் நம்ம ஆரன் அந்த ஒரு வழக்கு எப்படி ஒரு பெரிய உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருது அதான் கதை... உலகத்தில நம்மள சுத்தி இதெல்லாம் நடந்துக்கிட்டு தான் இருக்கு அதுல சந்தேகம் இல்லை💔..

இன்னமும் பெண்கள் சில விசயத்தை எப்படி கையாள்வது தெரியாம உயிரை விட்டுட்டா எல்லாமே முடிஞ்சது நினைக்கிறாங்க குறைந்த பட்சம் அவங்கள போல இன்னொருத்தர்க்கு இப்படி நடக்க விடக்கூடாதுன்னு நினைச்சாவது இது போல விசயங்களை தைரியமா வெளியே சொல்ல முயற்சி பண்ணணும்...

✨தகப்பன் சரியில்லாத குடும்பத்தோட மூத்த பிள்ளையா நிலாயினியின் பொறுப்பு குணம் எல்லாம் 👏👏👏 அவ்வளவு அருமை..

✨வினோதினி கதாபாத்திரம் கூட சராசரி அம்மாக்கள் எதார்த்த குணமா தான் தெரிஞ்சது ஆனா அப்படி அவங்க இருந்தது எனக்கு கொஞ்சமே கொஞ்சம் நிலாயினி போல கோவம் தான் வந்தது ..சுயமரியாதை ரொம்ப முக்கியம் வினோம்மா...

✨ மதுரன் 😂😂😂😂நினைச்சாலே சிரிப்பு தான் தம்பி வருது.

ஆனாலும் cute ra nee அருமையான காதலன் காவலன் நண்பன் நல்ல ஆண் மகனும் கூட...

✨தங்கமாடத்தி அம்மா உங்க வாய் தான் உங்க பையனுக்கு கொஞ்சம் அதிகமாகவே வந்துருக்கு நினைக்கிறேன் 😂.

✨சந்திரா தீஷி அருமையான சகோதரிகள்🥰..

இப்போ வருவோம் என் ஆரன் கிட்ட 🙈

ரைட்டரே என்ன ஒரு opening song namma Hero ku adada angaye nan flatuuuuuuuuu😁..

ஆரன் 😍 உனக்கு அழகே அந்த வாய் பேச்சு தான்டா குறும்புக்காரன்😆..

ஆரன் வர இடமெல்லாம் நம்ம BP பறந்து போயிரும் அந்த அளவுக்கு வாய் விட்டு சிரிச்சேன் அவன் சேட்டையை பார்த்து ☺...

ஆரன் பாடுற பாட்டேல்லாம் தனி அழகு ரைட்டர் 🙈👏... ரசிச்சேன் ரொம்ப அந்த இடமெல்லாம்...

ஆரன் investigation super செமையா கொண்டு போனிங்க உங்க கூடவே சேர்ந்து நானும் கண்டுபிடிச்சுட்டேன் குற்றவாளிய😏...

கலகலப்பான சுந்தர்.சி படம் பார்த்த போல ultimate feel good story 🥰.... எனக்கு ரொம்பவே பிடிச்சது...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐

Nan guess panuna writer elanu solringa neenga 🫣 waituvommmmm result varum varai யாரேன்று தெரிய ஆவலுடன் அகல்யா☺.....
 

zeenath Sabeeha

New member
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் தமிழ் நாவல் போட்டி கதைகள்.
#STN40
"நிலவின் அக ஒலி.."
ஆரணி விஸ்வேஸ்வரன்..
ஏ சி பி கிரைம் பிரெஞ்ச் ஆபிஸர்.. இவனின் திறமைக்காகவே முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கும் வழக்குகளின் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காகவே இவனை அணுகுகிறார்கள். கண்டுபிடிக்கும் இவனிடம் கெஞ்சியும் கேட்டுக் கொள்கிறார்கள். பிடிக்கும் குற்றவாளிகளை உயிரோடு தங்களிடம் கொடுத்து விட வேண்டும் என.. ஆனால் அதை இவன் செயல்படுத்தினான் என்பது தான் கேள்வி. சேட்டைக்கார காவலாளி சேட்டை செய்யும் குற்றவாளிகளை தன் பாணியில் களை எடுக்கிறான் 👏👏👏
இவனின் அன்னை இவனுக்கு பெண் பார்க்க எதுவுமே அமையவில்லை. பிறகு தன் அம்மாவிடம் ஐஓபி இல் வேலை செய்யும் பெண்ணை திருமணம் முடித்து தர கேட்கிறான். அப்படிப் பெண் கிடைக்கவில்லை என்றால் தானே விலாசமும் தருவதாக கூறுகிறான். தன் மனதில் இருப்பவளை பற்றி அன்னையிடம் கூறுவது எல்லாம் சிரிப்பு 🥰😀 எதிர் வீட்டில் மூன்று பெண் பிள்ளைகளோடு வாழ்கிறார் வினோதினி. அதில் மூத்த பெண் லக்ஷ்மி நிலாயினி மேல் கண் நம் காவலனுக்கு 🥰 அவளை சீண்டி எப்போதும் கோபத்தோடு முறைக்க வைத்துக் கொண்டே இருக்கிறான் இவன் ஆனாலும் ஏனோ அவன் மீது வெறுப்பு வர மறுக்கிறது பெண்ணவளுக்கு. அவளுடன் வம்பு வளர்த்து காதல் புரிந்து திருமணமும் செய்து கொள்கிறான் இவனின் அடாவடியில் அவள் தான் அயர்ந்து நிற்கிறாள். குழந்தை இல்லா விரக்தியில் தொடராக பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அது ஏன் என்பதையும் கொலையாளி யார் என்பதையும் கண்டுபிடிக்கிறான் காவலாளி தன் இணை காவலாளி மதுரனுடன்.
ஆரன் மதுரன் பாண்டிங் வெகு அழகு 🥰
தன் காதலியை பார்ப்பதற்காக அவள் வீட்டில் எதிர் வீட்டையே தன் உயரதிகாரிக்கு பிடித்துக் கொடுத்து தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளும் மதுரனின் தைரியமும் அழகு அதை கண்டுபிடிக்கும் ஆரணின் புத்திசாலித்தனமும் அழகு 🥰
நிலா சந்திரா தீக்ஷிதா பாண்டிங் வெகு அழகு 🥰

வெரி சுவாரஸ்யமாகும் விறு விருப்பாகும் நகர்ந்தது கதை 🥰👏
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤
Good luck ❤🌹
 

STN - 117

New member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
காதல் காவியம் நீ
நாயகன்: ரொஷான்
நாயகி: மீரா
இலங்கையில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் அதனால் வரும் பிரச்சனைகளும் கதைக்களம் 🥰 🥰
தமிழ் இனப்பிரச்சினை என்றும் தீர்க்கப்படாத உன் என்பது இக்கதையின் மூலம் தெரிகிறது 😥 😥 😥
சிறுவயதில் தாயை பறிகொடுத்த நம் நாயகிக்கு மாற்றாந்தாய் ஆக வரும் விசாலாட்சி தனக்கு பிறந்த பெண் பிள்ளையின் உரிமையை நிலை நாட்ட மீராவிற்க்கு செய்யும் துரோகம் தன் பெண்ணின் நிம்மதியை இரண்டாம் கல்யாணம் தடுத்து விட்ட குற்ற உணர்வில் தவிக்கும் தகப்பன் கந்தன் தன் பேத்திக்கு தாயாக அரவணைக்கும் பாட்டி கமலம் என்னும் குடும்ப அரசியலில் வளரும் நாயகி 😞😞😞
படித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்ள வேலை தேடி செல்லும் இடத்தில் இராணுவ பிரச்சினைகளால் படிப்பு சான்றிதழ்களை இழந்து விபத்தில் சிக்க நம்ம நாயகன் அவளை காப்பாற்றி அடைக்கலம் தருகிறார் சிங்கள குடியிருப்பில் தமிழ் பெண் இருக்க இயலாத காரணத்தால் எதிர்பாராத திருமண பந்தத்தில் இணைகின்றனர்🥰🥰🥰
நாயகன் சிங்கள மேஜர் கர்னல் ரோபோ போன்ற அவன் இறுக்கமான வாழ்வில் தென்றலென மீராவின் வரவில் மகிழ்ச்சி கொள்ள முடியாமல் அவளின் ஒதுக்கம் தடுக்கிறது 😔😔😔
மீராவும் ரொஷனை காதல் கொண்டு வாழ்க்கை ஆரம்பித்து வாழ ஆரம்பிக்கும் நேரம் எதிர்பாராத ரொஷனின் பணியின் காரணமாக எங்கே சென்றான் என்று தெரியா நிலையில் கர்ப்பிணியாக மீராவின் தவிப்பு வேதனை என்று கண்கலங்க வைக்கும் நிமிடங்கள் 🥺🥺🥺
பேபி பேபி என்று ரொஷான் சீனாவிடம் உருகும் போது ரோபோவுக்கு காதலா🤣🤣🤣
இந்த ரொஷான் பய காதல் உண்மையில் காவியக் காதல் தான் 🥰🥰🥰
ரொஷான் என்ற கண்ணனை தேடி மீராவின் காதல் பயணம்
நல்ல வித்தியாசமான அழுத்தமான கதைக்களம் அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 🥰 🥰 🥰
Thank you so much for your valuable comments....😍😍
 
Top Bottom