Vijayagowri Viji
New member
செந்தூரம் தமிழ் நாவல் போட்டி 2026
*#நிலவின் அக ஒலி*
*கதை விமர்சனம்*
உயிர் எழுத்துக்கள் 12 போல பன்னிரெண்டு அத்தியாயங்கள் கொண்டு கதை படைத்துள்ளார் ஆசிரியர்.!
*அ*
அகிலம் காக்கும் சர்வேஷ்வரனின் பெயர் கொண்ட காவலனான ஆரன் தன் நேர்மையான அதிரடியான போக்கால் பணிமாற்றத்தில் பல இடங்களுக்கு சூறாவளியாக சுற்றி சென்னையை மையம் கொண்ட போது...!
வழக்கை முடித்து கொடுக்க திருநெல்வேலி சீமைக்கு அழைக்கப் படுகின்றான் நம் நாயகன் ஆரன் சர்வேஷ்வரன் ..!
*ஆ*
ஆரனாக வந்து அவன் காட்டும் அதிரடியான விசாரணைகள் ஆகட்டும்...!
அன்னையிடம் அவனின் ஆரவாரமான பேச்சுக்கள் ஆகட்டும்..!
ஆசை கொண்டவளிடம் காட்டும் காதலாகட்டும்..!
ஆர்பாட்டம் இல்லாமல் எதிரியை கையாளும் ஆளுமையாகட்டும்..!
ஆரன் அள்ளுகிறான் நம் மனதை..!
*இ*
இந்து போல குளிர்ச்சியாகவும் ..!
இலக்குமியின் வசிகரமும் கொண்ட நாயகி லக்ஷ்மி நிலாயினி..!
இனிமையான இயல்பான அமரிக்கையான மாதுவாக மயக்குகின்றாள்..!
*ஈ*
ஈன்ற தந்தை ஈரமில்லா மனத்துடன் தன் அன்னைக்கு செய்த தூரோகத்தை எதிர் கொண்டு...!
தனித்துவந்து தளர்வடையாமல் தனக்கென்று கூட்டை அமைத்து..! அன்னை மற்றும் சகோதரிகளை தைரியலட்சுமியாய் தாங்கும் காரிகை அவள் ...!
*உ*
உதவி ஆணையாளர் ஆரனுக்கு
உற்ற நண்பன் போல வரும் துணை ஆய்வாளர் மதுரன் கலக்குகின்றான் ..!
விசாரணைகளில் வில்லுக்கேற்ற அம்பாய் ஆரனிடம் சாலப் பொருந்துகின்றான்...!
மதுரனின் சந்திராவுடனான காதல் அழகு என்றால்...!
அவனின் ஆரோனுடனான புலம்பல்களும் நகைப்பை தாண்டி
மிகவும் அழகு ...

*ஊ*
"ஊர்ல இல்லாத பிள்ளைய பெத்துட்டு நான் படுற பாடு இருக்கே" என்கின்ற மனநிலையிலான தங்கமாடத்தியின் கதாப்பாத்திரம் ரொம்ப ரொம்ப அருமை...!
ஆரனும் அவன் அன்னை தங்கமாடத்தியுடனான உரையாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றது...!
ஐஓபி பேங்க்ல வேலை பார்க்கிற பெண் தான் வேண்டும் என்று அன்னையை குழப்பி தன் காதலை சாதித்து கொள்ளும் காவலனின் கலாட்டாக்கள் உள்ளத்தை கவர்கின்றது...!
தங்கமாடத்தியை நம் மனத்தின் ஓர் இடத்தில் தங்க வைத்துவிட்டார் ஆசிரியர்
*எ*
எந்த வித ஆர்பாட்டம் இல்லாமல் தன் தொழில் வளர்த்து மகனின் வேலையை அனுசரித்து...! மனையாளையும் சமாளித்து..!
மகனின் எல்லா முடிவுகளிலும் துணையாக நிற்கும் தந்தையாக மிளர்கின்றார் இளங்கோவன்...! சிறப்பு
*ஏ*
ஏனென்றே தெரியாத தற்கொலைகள்...!
ஆரன் மதுரனின் தொடர் தேடுதல் வேட்டையில் சிக்கும்
வில்லன் குருதேவ் .
சைக்கோ கில்லர்..!
அவனைப் பிடிக்க எடுக்கும் ஆரன் மதுரன் முயற்சிகள், அவனுக்கான தண்டனை என்று விறுவிறுப்பாக செமையாக நகர்கின்றது...!
*ஐ*
ஐம்பதிலும் ஆசை வரும் என்பது போல மூன்று மகவுகளைப் பெற்ற பின்னும் இல்லறம் மீறி தனக்கு துரோகம் செய்த கணவனை விட்டு பிரிந்து பிள்ளைகளுக்காக வாழும் வினோதினி...!
ஏற்படும் சூழ்நிலை காரணமாக கணவன் செல்வக்குமாரை தள்ளவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் பிள்ளைகளின் கோபத்திற்கும் ஆளாகி தவிக்கிறார்...!
*ஒ*
ஒன்றுபட்ட இதயமாய் நிலாயினியென்னும் நிலாவின் அகத்தின் ஒலியாய் ஆரோகணிக்கின்றான் இந்த ஆரன்...!
அவனின் காதல் மொழியில் பல நேரம் சொல்லிழந்து நிற்கின்றாள் பாவை அவள்..!
*ஓ*
ஓசனச்சிட்டுக்களாய் சந்திராவும் தீக்ஷியும் கல கலக்கிறார்கள்...!
*ஓள*
ஔதாரியமாக நிலாயினி தந்தையின் தவற்றை தள்ளி வைத்து அவளை இயல்பாக குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளும் புனிதா அழகு..
*ஃ*
அஃகுதலாக எண்ணிக்கையில் அத்தியாயங்கள் இருந்தாலும்...
ஆசிரியர் கதையின் சுவைகளில் எந்தவித குறைவுமில்லாத ஓர் சிறப்பான விருந்தே வாசகர்களுக்கு கொடுத்துள்ளார்..
*"Good Things Come In Small Packages"*
அழகான கதை கொடுத்த ஆசிரியருக்கு நன்றி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேம்