செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vijayagowri Viji

New member
May 15, 2026
1
2
3
Sivakasi
செந்தூரம் தமிழ் நாவல் போட்டி 2026

*#நிலவின் அக ஒலி*
*கதை விமர்சனம்*

உயிர் எழுத்துக்கள் 12 போல பன்னிரெண்டு அத்தியாயங்கள் கொண்டு கதை படைத்துள்ளார் ஆசிரியர்.!👍

*அ*
அகிலம் காக்கும் சர்வேஷ்வரனின் பெயர் கொண்ட காவலனான ஆரன் தன் நேர்மையான அதிரடியான போக்கால் பணிமாற்றத்தில் பல இடங்களுக்கு சூறாவளியாக சுற்றி சென்னையை மையம் கொண்ட போது...!

வழக்கை முடித்து கொடுக்க திருநெல்வேலி சீமைக்கு அழைக்கப் படுகின்றான் நம் நாயகன் ஆரன் சர்வேஷ்வரன் ..!👮🏻‍♂️

*ஆ*
ஆரனாக வந்து அவன் காட்டும் அதிரடியான விசாரணைகள் ஆகட்டும்...!
அன்னையிடம் அவனின் ஆரவாரமான பேச்சுக்கள் ஆகட்டும்..!
ஆசை கொண்டவளிடம் காட்டும் காதலாகட்டும்..!
ஆர்பாட்டம் இல்லாமல் எதிரியை கையாளும் ஆளுமையாகட்டும்..!
ஆரன் அள்ளுகிறான் நம் மனதை..!❤

*இ*
இந்து போல குளிர்ச்சியாகவும் ..!
இலக்குமியின் வசிகரமும் கொண்ட நாயகி லக்ஷ்மி நிலாயினி..!
இனிமையான இயல்பான அமரிக்கையான மாதுவாக மயக்குகின்றாள்..!❤

*ஈ*
ஈன்ற தந்தை ஈரமில்லா மனத்துடன் தன் அன்னைக்கு செய்த தூரோகத்தை எதிர் கொண்டு...!
தனித்துவந்து தளர்வடையாமல் தனக்கென்று கூட்டை அமைத்து..! அன்னை மற்றும் சகோதரிகளை தைரியலட்சுமியாய் தாங்கும் காரிகை அவள் ...!❤

*உ*
உதவி ஆணையாளர் ஆரனுக்கு
உற்ற நண்பன் போல வரும் துணை ஆய்வாளர் மதுரன் கலக்குகின்றான் ..!👌
விசாரணைகளில் வில்லுக்கேற்ற அம்பாய் ஆரனிடம் சாலப் பொருந்துகின்றான்...!
மதுரனின் சந்திராவுடனான காதல் அழகு என்றால்...!
அவனின் ஆரோனுடனான புலம்பல்களும் நகைப்பை தாண்டி
மிகவும் அழகு ...😊❤

*ஊ*
"ஊர்ல இல்லாத பிள்ளைய பெத்துட்டு நான் படுற பாடு இருக்கே" என்கின்ற மனநிலையிலான தங்கமாடத்தியின் கதாப்பாத்திரம் ரொம்ப ரொம்ப அருமை...!

ஆரனும் அவன் அன்னை தங்கமாடத்தியுடனான உரையாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றது...!

ஐஓபி பேங்க்ல வேலை பார்க்கிற பெண் தான் வேண்டும் என்று அன்னையை குழப்பி தன் காதலை சாதித்து கொள்ளும் காவலனின் கலாட்டாக்கள் உள்ளத்தை கவர்கின்றது...!
தங்கமாடத்தியை நம் மனத்தின் ஓர் இடத்தில் தங்க வைத்துவிட்டார் ஆசிரியர் ❤

*எ*
எந்த வித ஆர்பாட்டம் இல்லாமல் தன் தொழில் வளர்த்து மகனின் வேலையை அனுசரித்து...! மனையாளையும் சமாளித்து..!
மகனின் எல்லா முடிவுகளிலும் துணையாக நிற்கும் தந்தையாக மிளர்கின்றார் இளங்கோவன்...! சிறப்பு 👌

*ஏ*
ஏனென்றே தெரியாத தற்கொலைகள்...!
ஆரன் மதுரனின் தொடர் தேடுதல் வேட்டையில் சிக்கும்
வில்லன் குருதேவ் .
சைக்கோ கில்லர்..!
அவனைப் பிடிக்க எடுக்கும் ஆரன் மதுரன் முயற்சிகள், அவனுக்கான தண்டனை என்று விறுவிறுப்பாக செமையாக நகர்கின்றது...!👌

*ஐ*
ஐம்பதிலும் ஆசை வரும் என்பது போல மூன்று மகவுகளைப் பெற்ற பின்னும் இல்லறம் மீறி தனக்கு துரோகம் செய்த கணவனை விட்டு பிரிந்து பிள்ளைகளுக்காக வாழும் வினோதினி...!
ஏற்படும் சூழ்நிலை காரணமாக கணவன் செல்வக்குமாரை தள்ளவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் பிள்ளைகளின் கோபத்திற்கும் ஆளாகி தவிக்கிறார்...!

*ஒ*
ஒன்றுபட்ட இதயமாய் நிலாயினியென்னும் நிலாவின் அகத்தின் ஒலியாய் ஆரோகணிக்கின்றான் இந்த ஆரன்...!
அவனின் காதல் மொழியில் பல நேரம் சொல்லிழந்து நிற்கின்றாள் பாவை அவள்..!

*ஓ*
ஓசனச்சிட்டுக்களாய் சந்திராவும் தீக்ஷியும் கல கலக்கிறார்கள்...!❤

*ஓள*
ஔதாரியமாக நிலாயினி தந்தையின் தவற்றை தள்ளி வைத்து அவளை இயல்பாக குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளும் புனிதா அழகு..❤

*ஃ*
அஃகுதலாக எண்ணிக்கையில் அத்தியாயங்கள் இருந்தாலும்...
ஆசிரியர் கதையின் சுவைகளில் எந்தவித குறைவுமில்லாத ஓர் சிறப்பான விருந்தே வாசகர்களுக்கு கொடுத்துள்ளார்..❤

*"Good Things Come In Small Packages"*

அழகான கதை கொடுத்த ஆசிரியருக்கு நன்றி 🙏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேம்🤝💐
 

ShaSri

Member
Mar 4, 2026
35
23
8
Tamilnadu
#மேகத்தில்_தொலைந்த_நிலவு_விமர்சனம்


விமானப் பணிப்பெண் மேகலாவுக்கும் விமானப்படை வீரர் தரிந்து சேனாநாயக்கவுக்குமான காதல் ♥


ஒரே இனத்தை சேர்ந்தவங்களா இருந்தாலே பிரச்சினைகளுக்கு குறைவு இருக்காது . தமிழ் பெண்ணுக்கும் சிங்களப் பையனுக்குமான காதல் அதுவும் மேகலா குடும்பம் சிங்கள இராணுவத்தினால் பாதிப்படைந்து இருக்கும் போது காதலர்களை சேர விடுவார்களா ???


இலங்கை தமிழ் கூடவே கொஞ்சமே கொஞ்சம் சிங்களம் கலந்த கதையில் அழகான மேகம்,மழை, புயல்,போர் என்ற பொருத்தமான உவமைகளுடன் படிச்சு தெரிஞ்சுக்கலாம் ❣️❣️


மேகலா மேகப்பெண் பெயருக்கு ஏற்றது போல மென்மையானவள் ♥
தரிந்து போர் வீரனா இவன் ஆச்சரியம் படும் அளவுக்கு காதலியிடம் இவன் காட்டும் மென்மை இருந்தது ♥
அரவிந்தன் பாசமுள்ள அப்பா .முரளி அன்பான அக்கறையான அண்ணன் . சுபா நல்ல தோழி ♥ சுபா மற்றும் சிவாவின் கலகல பேச்சு நல்லா இருக்கு 😅


காதலில் பிரிவின் வலியை நல்லா சொல்லீருக்கீங்க ❣️பாசம் ஒரு பக்கம் காதல் ஒரு பக்கம் என்று நடுவில் மாட்டிக்கொண்ட வெண் மேகம் கருமேகமாக மாறி கண்ணீர் மழை பொழிந்தது உருக்கமான தருணங்கள் ♥


காஞ்சனா சரியான வில்லி இவள் 😡😡


முரளியை ஆட்கொண்ட புயல் அருமை 😍😍 பாகுபலி தேவசேனா இணை எனக்கு பிடித்தது ❤ முக்கியமாக அந்த காதல் கடிதம் 🤣🤣 அருமை 👏


உங்கள் தயவில் கொஞ்சம் இலங்கையை சுத்திப்பார்த்தேன். 😍😍கதைக்கு தக்க படங்களை மற்றும் வீடியோகளை பதி விட்டது நல்லா இருந்தது ♥ முக்கியமா திருமண உடை புகைப்படம் 👌


இந்த கதை உங்கள் முதல் முயற்சி என்பதை நம்ப முடியவில்லை 🤨


'சுது வலாகுழு' அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 

STN -18

New member
May 5, 2026
3
0
1
Bangalore
என்னை களவாட வந்தவளே கதை அருமை. குடும்ப உறவுகள் கொண்ட கதை அண்ணா தங்கை குடும்ப பாசம் பிரச்சினை அதை சமாளித்து காதல் ஜோடிகள் கரையேறும் கதை. பெண் குழந்தை வன்முறை காதலித்த தன்னவளை உயர்த்தி அவளுடைய ஆசையை நிறைவேற்றுவது சூப்பர். மொத்தத்தில் கதை அருமை.
நன்றி தோழி 🥰🥰🥰
 

zeenath Sabeeha

New member
Aug 23, 2025
14
5
3
Chennai
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டிக்கதைகள்.
#STN14
"செம்புலப் பெயல் நீர்"
மூன்று தலைமுறைகளைப் பற்றிய கதை.
மேதினூர்,தேனூர் இரு ஊர்களுக்கு இடையில் நடக்கிறது கதை
கயல்விழி மகளை பிரசவிக்க.. குழந்தையை கையில் வாங்கிய பாரி அலவன் பெரிதான அதிர்ச்சிக்கு உள்ளாகிறான்.
ராஜவேலு,பானுமதி பேரனின் நிலை தான் பெரியவர்களுக்கும். பாரியின் கையில் குழந்தையை பார்த்ததும் பெரும் கோபத்திற்கும் ஆங்காரத்திற்கும் உள்ளாகிறாள் கயல்விழி.
இதற்கிடையில் கயல்விழியின் அண்ணன் கதிருக்கும் கயலின் உற்ற தோழியும் மாமன் மகளும் ஆன மீனாட்சிக்கும் திருமணம் பேசி வைக்க அது தடை படுகிறது. திருமணம் தடைப்பட்டதில் கோபம் கொள்ளும் மீனாட்சி கதிரிடம் பேசக்கூடாத வார்த்தைகளை பேசி விடுகிறார் அதனால் கோபம் கொள்பவன் பெண் அவளை தவிர்த்து வருகிறான். அவர்களின் திருமணமும் தடைப்பட்டு நிற்கிறது.
நின்ற திருமணம் நடந்ததா கோபம் கொண்ட காதலர்கள் கணவன் மனைவி ஆனார்களா? கயல்விழிக்கு பாறையின் மேல் என்ன கோபம் என்பதெல்லாம் கதையில்..
கதை விறுவிறுப்பாகவே நடந்தது ஆனால் மூன்று தலைமுறைகளை பற்றியும் அவர்களின் தொழில்களையும் குழந்தைகளையும் பற்றி படிக்கும் போது சற்று குழப்பம் ஏற்படுகிறது. கதாபாத்திரங்களும் சற்று அதிகம்.
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck 🥰
 

thanga then mozhi

Active member
May 6, 2026
160
131
43
Cheyyar
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
காதல் எங்கள் சொந்தம்
நாயகன்: சந்திரன்
நாயகி: காவ்யா
நம் நாயகி ஹோட்டல் பிஸ்னஸ் பண்றவங்க அதாவது ரூம்கள் வாடகைக்கு விடுவது தகப்பன் இறந்த பிறகு இந்த தொழிலை விற்க முற்படும் போது எதிர்பாராத திருப்பம் விலைக்கு வாங்க வந்த மனிதனின் யோசனையில் தானே தொழகலை எடுத்து நடத்த நிரஞ்சன் காவ்யா இருவரும் காதலில் வீழ்ந்து சுதந்திர பறவையாக சுற்றி வருகின்றனர் திடீர் என்று சொல்லாமல் காணாமல் போகின்றான் நிரஞ்சன் 🥺🥺🥺
காவ்யா தவித்து தேட முடியாமல் உருக தாயாரின் உடல்நிலையும் மோசம் அடைகிறது ஆண் துணை இல்லாமல் இன்னல்கள் அனுபவித்து காற்றைப்போல் வந்து காதலை கொட்டி கொடுத்தவன் புயலை மறந்ததன் நோக்கம் என்ன காவ்யாவின் காதல் என்னவானது என்பதே மீதிக் கதை ❤️ 🧡 🧡
சந்திரன் நல்ல மனிதன் தங்கைக்கு நல்ல அண்ணணாக குடும்பத்தில் ஆண் பிள்ளையாக பொறுப்பான மகன் காவ்யாவின் மீது காதல் கொள்வது அவளை சந்திக்க சந்தர்ப்பத்தை உருவாக்குவது இக்கட்டான நேரங்களில் தோழனாக தோல் கொடுப்பது என்று மனசில் நின்றான் 🥰🥰🥰
கலாவுக்காக காதலியை விட்டு பிரிந்தது கூட சரி இந்த இண்டர்நெட் காலத்தில் ஒரே ஊரில் இருந்து தொடர்பு கொள்ள முயற்ச்சிகள் காமல் அலட்சியமாக இருந்த நிமிடத்திலேயே நிரஞ்சன் காதல் செய்துட்டு கலா வாழ்க்கையை சீரமித்துவிட்டு உனக்கான அன்பை உதாசீனப் படுத்தி விட்டார்😡😡😡
ஹேமா நிர்மல் 🧡🧡 காதல் எந்த சூழ்நிலையிலும் கைவிடாது🥰🥰
வள்ளி குழந்தை பாக்கியம் கிடைக்கும் வரை சசி குழந்தையாக தெரிந்தால் இப்படி ஒரு சுயநல பிசாசு 😈 யாரும் இல்லை
சசி குழந்தையாக இருந்தாலும் முதிர்ச்சியுடன் நடந்துக்கிட்டா❤️❤️
காவ்யாவின் காதல் சந்திரனுக்கு மட்டுமே சொந்தம் அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 🥰 🥰 🥰
 

ShaSri

Member
Mar 4, 2026
35
23
8
Tamilnadu
#தகிக்காதே_குளிர்நிலவே_விமர்சனம்


அனைத்திலும் நேர்த்தி, திமிர், ஆளுமை என்று இருக்கும் நாயகி நந்தினிக்கும்
ஜாலியாக , நட்பாக பழகும் நாயகன் அருண்மொழிக்குமான காதல் தான் இந்த கதை💖


நந்தினி அருணை உதாசினப்படுத்துவது , அவன் பின்னாடி அலையவிடுவது எல்லாம் கொஞ்சம் கோவத்தை வரவழைத்தது 😡


அருண் அமுதன் மற்றும் பாரதியிடம் காட்டும் நட்பு நல்லா இருக்கு ❤ நந்தினி மேல் காட்டும் காதல் அருமை 😍 ஆனால் அதற்காக பாரதியை காயப்படுத்துனது சுத்தமா பிடிக்கல 😡


அருணின் பின்புலன் கொஞ்சம் கணிக்ககூடியதா இருந்தது ஆனால் தனி தீவு எல்லாம் நல்ல கற்பனை 😍😍


இளமாறன் மற்றும் மாறவர்மன் சஸ்பென்ஸ் நல்லா இருந்தது ❤


மாறவர்மனுக்கு எப்படி பாரதியின் காதல் பத்தி தெரிந்ததுனு தெரியல? ஒரு சில காட்சிகள் இன்னும் கொஞ்சம் தெளிவாகவும் ஆழமாகவும் சொல்லீருந்தா இன்னுமே கதை ரொம்ப நல்லா இருந்திருக்கும் ❤ நல்ல கதை ❤


இந்த குளிர்நிலவு வாசகர்கள் மனதை குளிர்வித்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
  • Like
Reactions: STN46

STN46

Member
May 5, 2026
53
80
18
Chennai
#தகிக்காதே_குளிர்நிலவே_விமர்சனம்


அனைத்திலும் நேர்த்தி, திமிர், ஆளுமை என்று இருக்கும் நாயகி நந்தினிக்கும்
ஜாலியாக , நட்பாக பழகும் நாயகன் அருண்மொழிக்குமான காதல் தான் இந்த கதை💖


நந்தினி அருணை உதாசினப்படுத்துவது , அவன் பின்னாடி அலையவிடுவது எல்லாம் கொஞ்சம் கோவத்தை வரவழைத்தது 😡


அருண் அமுதன் மற்றும் பாரதியிடம் காட்டும் நட்பு நல்லா இருக்கு ❤ நந்தினி மேல் காட்டும் காதல் அருமை 😍 ஆனால் அதற்காக பாரதியை காயப்படுத்துனது சுத்தமா பிடிக்கல 😡


அருணின் பின்புலன் கொஞ்சம் கணிக்ககூடியதா இருந்தது ஆனால் தனி தீவு எல்லாம் நல்ல கற்பனை 😍😍


இளமாறன் மற்றும் மாறவர்மன் சஸ்பென்ஸ் நல்லா இருந்தது ❤


மாறவர்மனுக்கு எப்படி பாரதியின் காதல் பத்தி தெரிந்ததுனு தெரியல? ஒரு சில காட்சிகள் இன்னும் கொஞ்சம் தெளிவாகவும் ஆழமாகவும் சொல்லீருந்தா இன்னுமே கதை ரொம்ப நல்லா இருந்திருக்கும் ❤ நல்ல கதை ❤


இந்த குளிர்நிலவு வாசகர்கள் மனதை குளிர்வித்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 

STN46

Member
May 5, 2026
53
80
18
Chennai


உங்களுடைய விமர்சனத்திற்கு மிக்க நன்றி மா 🙏
 

Kalai Karthi

Active member
Sep 21, 2025
409
141
43
Madurai
தகிக்காதே குளிர் நிலாவே . கதை அருமை. அருண் நந்தினி கம்பெனியில் வேலை பார்க்கிறான். நந்தினி விரும்பியதை சொல்லவும் செய்கிறான் அவள் பதில் சொல்லாமல் அவனின் காதலையை அனுபவித்து சுற்றலில் விடுகிறாள் நட்புகளும் சூப்பர். பாரதி அவள் ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள் அருண் நல்ல பார்த்து கொள்ளவும் காதலில் விழுகிறாள் அவன் மறுக்கிறான். நந்தினி அருண் பிரச்சினை பாரதியும் காரணமாக பிரிவு ஏற்பட அருண் சொந்த ஊருக்கு போய் விடுகிறான். அப்போது தான் அவனைப் பற்றி தெரிகிறது. அவன் உறவினர்கள் பற்றியும் தெரியவந்து துரோகம் கொலை கண்டு பிடித்து பிரச்சினை தீர்வு கண்டு தண்டனை மூன்று ஜோடிகளும் பிரச்சினை களைந்து குழந்தைகளுடன் வாழ்க்கை அழகாக முடிவடைகிறது. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
 
  • Like
Reactions: STN46

STN46

Member
May 5, 2026
53
80
18
Chennai
தகிக்காதே குளிர் நிலாவே . கதை அருமை. அருண் நந்தினி கம்பெனியில் வேலை பார்க்கிறான். நந்தினி விரும்பியதை சொல்லவும் செய்கிறான் அவள் பதில் சொல்லாமல் அவனின் காதலையை அனுபவித்து சுற்றலில் விடுகிறாள் நட்புகளும் சூப்பர். பாரதி அவள் ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள் அருண் நல்ல பார்த்து கொள்ளவும் காதலில் விழுகிறாள் அவன் மறுக்கிறான். நந்தினி அருண் பிரச்சினை பாரதியும் காரணமாக பிரிவு ஏற்பட அருண் சொந்த ஊருக்கு போய் விடுகிறான். அப்போது தான் அவனைப் பற்றி தெரிகிறது. அவன் உறவினர்கள் பற்றியும் தெரியவந்து துரோகம் கொலை கண்டு பிடித்து பிரச்சினை தீர்வு கண்டு தண்டனை மூன்று ஜோடிகளும் பிரச்சினை களைந்து குழந்தைகளுடன் வாழ்க்கை அழகாக முடிவடைகிறது. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

உங்களுடைய விமர்சனத்திற்கு மிக்க நன்றி மா 🙏 ❤️ ❤️