• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செம்புலப் பெயல் நீர் - 30

Vishakini

Moderator
Staff member

செம்புலம் 30

தேனூர்:

எவ்வளவு நேரம் சுவற்றில் சாய்ந்தபடியே நின்றாள் என்று தெரியவில்லை.பாரி பேசிய வார்த்தைகள் தான் அவள் மண்டைக்குள் ஓடியது.

அவன் சொல்வது நியாயம் தானே, அன்று அவன் நடந்து கொண்ட முறையை யோசித்துப் பார்த்தவளுக்கு அவன் நிதானத்தில் இருந்தது போல தெரியவில்லையே என்பது ஞாபகம் வரவும், எதுவும் சொல்லாமல் சுவற்றிலே சாய்ந்து உட்கார்ந்து கால்களை மடக்கி அதில் முகத்தை புதைத்தவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்து ஓடியது.

நேரமும் கடந்து செல்ல கண்களை மூடி படுத்திருந்தவனோ எழுந்து பார்க்க கயல் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து இருப்பது தெரிந்தது.

பொறுமையாக போய் அவளின் தோளில் கையை வைக்க அவள் அப்படியே இடது பக்கமாக சாயவும், கீழே விழாமல் தூக்கியவனோ அங்கிருந்த பெட்டில் பொறுமையாக கடத்திவிட்டு அவள் முகத்தைப் பார்த்தவன் மன்னிச்சிடுடி.

இனி என்னால் உன் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராது ஒருமுறை எனக்கு வாய்ப்பு கொடு. என்னுடைய தவறுகளை எல்லாம் நான் சரி பண்ணிடுறேன். ஒரு பொண்ணா நீ எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சிருப்பனு என்னால புரிஞ்சுக்க முடியுது.

ஒருமுறையாவது நீ சொன்னதை நான் யோசித்து பார்த்துக்கலாம் ஆனால் ஏதோ என்னை தடுத்து விட்டது. அது எல்லாத்துக்கும் சேர்த்து என்னை மன்னிச்சிடு கயல் என்றவாறு அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவனுக்கு உடல் சிலிர்க்க இந்த மானங்கெட்ட உணர்ச்சியை என்ன பண்றதுன்னு தெரியல என்று முணவிக்கொண்டு படுத்தவனுக்கு ஏனோ இதுவரை இல்லாத தூக்கம் வரவும் நிம்மதியாக உறங்கினான்.

குழந்தை விஷயத்தைக் கேள்விப்பட்டு தெரிந்தவர்கள் எல்லாரும் வந்து பார்த்துவிட்டு குழந்தைக்கு வாங்கிட்டு வந்த துணிகளை கொடுத்துப் போக சற்று ஓரத்தில் நின்று தவிப்போடு மீனாட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.ஆனால் கயல் அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

படிப்புல மட்டும் முதல் மார்க் வாங்கணும்னு குதிச்சிட்டு கிடந்தியே வாழ்க்கையில் இப்படி முட்டை மார்க் வாங்கி இருக்கிறியே?, உன்னால என் வாழ்க்கையும் இப்போ அந்தரத்தில் நிற்குதுடி.

நானா இருந்திருந்தால் அந்த நிமிஷமே நாண்டுக்கிட்டு செத்துருப்பேன். இப்படி அப்பன் பேர் தெரியாம புள்ள வாங்கிட்டு இருந்திருக்க மாட்டேன் டி என்று மீனாட்சி பேசிய வார்த்தை இப்பொழுதும் கயலின் காதுக்குள் ஒலிப்பது போலவே இருந்தது.

அடுத்தடுத்து வந்த நாட்களில் குழந்தைக்கு தேவையான அத்தனையும் பாரியே பார்க்க வீட்டினரோ ஆச்சரியப்பட்டனர். ஆனால் கயலோ எதையும் கண்டு கொள்ளாமல் எப்பொழுதும் போல் அமைதியாக இருந்தவள், பாரியிடம் அதன் பின்னர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

விடிந்தால் குழந்தைக்கு பதினாறு படைத்து பெயர் வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்க பாரியின் குடும்பத்தாரும் முதல் நாள் மாலையில் வந்து சேர்ந்தனர்.

வந்தவர்களை வாங்க வாங்க என்று வரவேர்த்தனர். ஒருவித குற்ற உணர்ச்சியோடு சேயோனும் காஞ்சனாவும் உள்ளே வந்தவர்கள், தங்களது மகனின் சிறு வயது தோற்றத்தை அப்படியே உரித்து வைத்துக்கொண்டு பிறந்திருக்கும் பேத்தியைப் பார்த்து திகைத்துப் போனார்கள்.

அன்று எவ்வளவு தவறாக பேசினோம் என்பது புரிய அம்மாடி என்னை மன்னிச்சிடு என்று கயலை பார்த்து சேயோன் கையை கூப்பினார். அவளோ எதுவும் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.

அப்பொழுது எங்கே தங்கச்சி தங்கச்சி என்று இரட்டையர்கள் இருவரும் ஓடி வரவும் அந்த சத்தத்தில் வேகமாக கயல் திரும்ப, ஒருத்தன் பாரியைப் போன்ற ஜாடையிலும் இன்னொருத்தன் கயலைப்(மலர்) போன்ற ஜாடையில் இருக்கும் மூன்று வயது சிறுவனுங்கள் கட்டிலில் படுத்திருக்கும் குழந்தைக்கு பக்கத்தில் கைகளை தட்டி சிரித்து கொண்டிருப்பது தெரிந்தது.

சிறுவர்கள் இருவரும் அவரவர் பாக்கெட்டிலிருந்து இரண்டு சாக்லேட் எடுத்து குழந்தையின் கையில் திணித்தவர்கள் ஹாய் தங்கச்சி இது அண்ணனோடு கிப்ட் குட் மார்னிங் என்று மழைலை மொழியில் சொல்லிவிட்டு எங்கே மாம் காணும் என்று திரும்ப சற்று தள்ளி கயல் நிற்பதை பார்த்து இருவரும் ஓடி வந்து அவளது கால்களை கட்டி கொண்டார்கள்.

இதை எதிர்பார்க்காதவளோ அப்படியே திகைத்து நிற்க, இன்னும் உங்களுக்கு எங்க மேல கோபம் போலயா மாம்?. இனி நாங்க அடம் பண்ணாம நல்லபடியாக தாத்தா பாட்டிகிட்ட இருக்கோம். தங்கச்சி மட்டும் தான் உனக்கு பிடிக்குமா? நாங்க வேண்டாமா?.

இனிமே எந்த அடமும் பண்ண மாட்டோம் பிராமிஸ் மாம். நாங்களும் உன் கூட இருக்கிறோம் சாரி மாம் என்று இருவரும் அழ, எல்லாரையும் விலக்கி வைக்க முடிந்தவளால் அவர்களைத் தள்ளிவிட முடியவில்லை.

தாய்மைக்கே உள்ள உணர்வு அவளுக்கும் பொங்கிப் பெருக அய்யோ என்றவாறு கீழே குனிந்து இருவரையும் அணைத்துக் கொண்டவளே குலுங்கி குலுங்கி அழுதாள்.

அவள் அழுவதை பார்த்த இருவரும் சாரி மாம்.எங்களால நீங்க அழாதீங்க.. சொல்ற பேச்சை நீங்க கேட்கிறதில்லை. அதனால் தான் உங்க மாம் உங்களை விட்டு வெளி ஊர்ல இருக்காங்கன்னு.தாத்தாவும் பாட்டியும் தான் சொன்னாங்க. இனிமே நாங்க கேட்கிறோம்.

நாங்களும் பாப்பா போல உங்க கூட இருக்கோமென்று அழுதுகொண்டே சொல்ல, இருவரையும் நிமிர்த்தி மாறி மாறி முத்தமிட்டவள் இனிமே நீங்க அம்மா கூட தான் இருப்பீங்க. அம்மா உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்றவாறு மகன்களை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

இதையெல்லாம் சற்று தள்ளி நின்று கேட்டுக் கொண்டிருந்த எல்லாருக்கும் கண்களும் கலங்கியது.

நடு முற்றத்தில் நின்று கொண்டு குழந்தைகளும் தனது மகள் சொன்னதையும் கேட்ட வள்ளி முந்தானையால் வாயை மூடிக்கொண்டு அழுதவர், பின்னர் வேகமாக போய் பேரன்களை தூக்கியவர் எதுக்கு கண்ணுங்களா அழுவுறீங்க?.

உங்க அம்மா எங்கேயும் போக மாட்டாள். குட்டி பாப்பா வந்து இருக்காங்கல்ல. அதனால்தான் தாத்தா வீட்ல இவ்ளோ நாள் இருந்தாள். நீங்க சமத்து குட்டிங்களாச்சே...

வாங்க வாங்க அம்மாச்சி உங்களுக்கு பூஸ்ட் பண்ணி கொடுக்கிறேன் என்கவும் நிஜமாவா என்று சிறுவனுங்கள் கேட்க, ஆமா கன்னு குட்டிங்களா. அம்மா, இனி உங்களை விட்டு போகமாட்டாள்.

அங்க வந்து பாருங்கள் மாமா உங்களுக்கு என்னென்ன வாங்கி வச்சிருக்கானென்றவாறு தூக்கிட்டு போக அவர்கள் பின்னாடியே காஞ்சனாவும் சேயோனும் சென்றுவிட, இப்போது அங்கே பாரியும் கயல் மட்டுமே இருந்தனர்.

கயல் என்றவாறு வந்து அவளை பார்த்து கையைக் கூப்பியவனோ குழந்தையைப் போல அழுதவன் கபிலன் முகிலனுக்கும் உன்னால் அம்மாவாக இருக்க முடியுமா?.

எனக்கு நீ மனைவியா இருக்கணும்னு அவசியம் இல்லை மா. ஆனா அவங்களுக்கு ஒரு அம்மா வேணும் என்கவும், அந்த வார்த்தைகளை கேட்டவளோ நிமிர்ந்து பார்த்தாள்.

தாய் இல்லாத பிள்ளைகளின் நிலையை பார்த்திராதவள் இல்லையே. சிறு பிள்ளைகளுக்கு இருக்கும் ஏக்கத்தை ஒரு தாயாக புரிந்துகொண்டவள், எதிரில் நிற்ப்பவனின் கையை இறக்கி விட்டவள், மூன்று பிள்ளைகளுக்கு மட்டும் அம்மா போதும் தானே..புருஷனுக்கு பொண்டாட்டி வேண்டாமா?.

அந்தக் குரலில் அதிர்ந்து போய் அவளைப் பார்க்க, முதல் முறையாக கயல் அவனைப் பார்த்து வெட்கத்தில் முகத்தை திருப்புவது தெரியவும், ஒரு கையால் அவளை இழுத்து தன்னோடு அணைத்தவனோ பின்பக்கமாக போய் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவளோடு அந்த சுவற்றில் சாய்ந்தவனோ அவளது உதடுகளை சிறை பிடித்தான்.

நீண்ட முத்தப்போரில் இருந்தவன் தன்னவள் மூச்சுக்காக ஏங்கித் தவிப்பதை உணர்ந்து தனது மூச்சை அவளுக்குள் கொடுக்கும் போது மெத்தையில் படுத்திருந்த அவனது மகள் அழுக ஆரம்பிக்கவும் மனமே இல்லாமல் விலகியவன் தாபத்தோடு தன்னவளைப் பார்க்க, கொஞ்சம் வெளியில இருங்கள். குழந்தைக்கு பசியாத்தனும் என்றாள்.

அதுக்கு நான் ஏண்டி வெளியில் இருக்கணும் இங்கே இருக்கிறேன் என்க, என்ன என்று முறைக்க முயன்று வெட்கத்தில் கீழே குனிந்து கொள்ளவும், எல்லாம் எனக்கு சொந்தமானது தானே டி. ஏன் நான் பார்க்க கூடாதா என்று குறும்புடன் கேட்க ஹலோ சார்...

முறைப்படி என் கழுத்துல மூன்று முடிச்சு போடுங்க மற்றது கேட்காம எடுத்துக் கொள்ளலாம் என்றவாறு வெட்கத்தில் வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டாள்.

தன்னவளின் வாயால் இப்படி ஒரு வார்த்தையை கேட்டவனோ இது போதும்டி. அடுத்தது நமக்கு கல்யாணம் மேடை தான் என்று பின்பக்கமாய் அவளை இழுத்து தன்னுடன் இறுக்கி அணைத்தவன், சரி சரி என் செல்ல குட்டி அழுவுறாள் அவளை பாரு என்று வெளியே போனவனுக்கு உள்ளமும் உடலும் அவ்வளவு புத்துணர்ச்சியாக இருப்பது போல் இருக்கவும், அவன் முகத்தில் இருக்கும் சந்தோஷமே இருவரும் சமாதானமாகிவிட்டார்கள் என்று வீட்டினருக்கு புரியவும், இனிமேலாவது இருவரும் நல்லா இருக்கணும் என்று வேண்டிக் கொண்டனர்.

செம்புலம் தொடரும்...

 
Top Bottom