• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செம்புலப் பெயல் நீர் - 32

Vishakini

Moderator
Staff member

செம்புலம் 32



அப்புறம் சம்பந்தி இன்று நாங்கள் ஊருக்கு கிளம்புறோம். மருமகளையும் பேத்தியையும் என்று ராஜவேலு சொல்ல வர, குழந்தைக்கு மூன்று மாதம் ஆன பிறகு முறைப்படி அனுப்பி வைப்பதாக வள்ளி சொல்லிவிட, குழந்தையை பெற்ற பெண்.அவளும் உடல் நலம் தேறி வர வேண்டும் என்பது மற்றவர்களுக்கும் புரிந்தது.



ஆனால் முகிலனும்-கபிலனும் மாம் கூட தான் இருப்போம் என்று அழுது அடம் பிடிக்க, சமத்து குட்டிங்க இருவரும் தினமும் அப்பா கூட ஸ்கூல் போனா தான் அம்மா வருவேன். இல்லை என்றால் நானும் பாப்பாவும் அம்மாச்சி வீட்டில் தான் இருப்போம் என்று கயல் ஒரு போடு போட, அதைக் கேட்டு சிறுவர்கள் இருவரும் ஓகே மாம் என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு தனது அப்பாவை போய் கட்டிக் கொண்டானுங்கள்.



மற்றவர்கள் எல்லாம் வெளியே போய்விட கயலையும் தனது மகளையும் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே மகன்களை அழைத்துக்கொண்டு பாரியும் மேதினூருக்கு புறப்பட்டான்.



பாரி கிளம்பிப் போய் முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக அவளோடு இருந்தவனின் அருகாமையை தேடி தற்போது கயலின் மனம் ஏங்கத்தொடங்கியது. ஊருக்கு போய்க்கொண்டிருந்த பாரிக்கும் அதே நிலைதான்.



குழந்தை சிணுங்கும் போதெல்லாம், "நான் இருக்கேன் கயல், நீ தூங்கு" என்று சொல்லும் அந்த அதிகாரத் குரல் இன்று கேட்கவில்லை.



கயலின் கைகள் தானாகவே அவன் அமர்ந்திருந்த நாற்காலியைத் தடவிப் பார்த்தன. அவன் அருகாமையில் இருந்தபோது வராத ஒரு நடுக்கம், அவன் இல்லாத இந்த ஒரு இரவில் அவளுக்குள் ஊடுருவியது.



"ஏன் என் மனம் இவ்வளவு தவிக்கிறது? அவன் வெறும் என் குழந்தைக்குத் தகப்பன் மட்டுமல்ல... என் ஒவ்வொரு மூச்சிலும் கலந்திருக்கும் என் காதலன்" என்று முதல் முறையாகத் தன் காதலைத் தானே ஒப்புக்கொண்டாள்.



தன்னை அறியாமலேயே கட்டிலின் இடதுபுறம் கை நீட்டினாள். அங்கே பாரி அமர்ந்து குழந்தையோடு விளையாடிக்கொண்டிருப்பான். வெறும் வெற்றிடத்தைத் தொட்டபோது அவள் விரல்கள் நடுங்கின.



அவனோடு இருந்தபோது, அந்த அறை ஒரு சிறு கூடாக அவளுக்குப் பாதுகாப்பைத் தந்தது. ஆனால் இன்று, அது ஒரு காலி மைதானமாகத் தெரிந்தது.



"இத்தனை நாள் அவன் என் பின்னால் சுற்றியபோது, அது ஒரு கடமை என்று நினைத்து ஏனோ தலைக்கனம் காட்டினேன். ஆனால், ஒரு நிமிடம் அவன் கண்ணில் படவில்லை என்றதும் என் உயிரே என்னைத் தவிக்கவிட்டுப் போய்விட்டதே! இது காதலா? இல்லை, அதையும் தாண்டிய ஒரு பித்தா?" என்று அவள் கண்கள் கசிந்தன.



பாரிக்கு, அங்கே எந்த வேலையிலும் மனம் ஓடவில்லை.எப்போதும் கயலின் சிரிப்புச் சத்தமும், குழந்தையின் மழலை மணமும் நிறைந்திருந்த அவனது உலகம், இப்போது ஒரு இயந்திரத்தனமான இடமாகத் தெரிந்தது.



இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், ஒருவரை ஒருவர் நினைத்து உருகிய அந்தத் தருணம், அவர்களுக்குள் இருந்த இடைவெளியை அறவே நீக்கியது.



பிரிவு என்பது வெறும் தூரம் அல்ல; அது காதலின் ஆழத்தை அளந்து பார்க்கும் ஒரு தராசு. அன்று இரவு, கயல் பாரியின் சட்டையை அணைத்தபடி உறங்கினாள்; பாரி கயலின் நினைவுகளோடு விழித்திருந்தான். இருவருக்குமே புரிந்தது ஒன்றுதான்: "இனி ஒருவரை ஒருவர் பிரியாமல் இருப்பதே வாழ்க்கை."



தூரம் என்பது வெறும் மைல்களால் அளக்கப்படுவது அல்ல, அது ஒருவரின் மூச்சுக்காற்று இன்னொருவர் மேல் படாத அந்த இடைவெளியால் உணரப்படுவது என்பதை அவர்கள் அன்றுதான் கண்டுகொண்டனர்.



ஜன்னல் வழியே நிலவைப் பார்த்தபடி வெகுநேரம் நின்றிருந்தான். "கயல் சாப்பிட்டிருப்பாளா? பாப்பா அழுது அவளைத் தொந்தரவு செய்யுமா?" - இந்த எண்ணங்கள் அவனை ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்க விடவில்லை.



"அவள் என் ரத்தத்தைச் சுமந்தவள் என்பதால் மட்டும் நான் அவளை நேசிக்கவில்லை... அவளது மௌனமும், அவளது தவிப்பும், அவளது அந்த மென்மையான ஸ்பரிசமும் என் ஆன்மாவைத் தொட்டுவிட்டது. கயல் இல்லாமல் இந்த பாரி வெறும் பிணம்," என்று அவன் தன் காதலின் ஆழத்தைத் தொட்டுப் பார்த்தான்.



காதல் என்பது அருகில் இருக்கும்போது உணரப்படுவதை விட, ஒரு நிமிடம் பிரியும் போதுதான் அதன் விஸ்வரூபத்தைக் காட்டுகிறது. அதே நிலை தான் இங்கு...



அவனாக அழைப்பான் என்று அவளும் அவளாக தன்னை தேடி வருவாளேன்று பாரியும் காத்திருக்க, நாட்கள் தான் ஆமை வேகத்தில் ஓடியது..



இதோ கயல் தேனூருக்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்து விட்டது. பாரியைத் தவிர மற்ற நால்வரும் பேரன்களோடு, இரண்டு முறை தேனூருக்கு வந்து கயலையும் குழந்தையும் பார்த்துச்சென்றனர்.



சில நாட்களாகவே மகளை கவனித்த வள்ளிக்கும் மனதுக்குள் சந்தோஷமாக இருந்தது. இதோ குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் முடிய இன்னும் இரண்டு நாட்கள் இருக்கையில், கயலு நாளைக்கு நம்ப குழந்தையோடு ஊருக்கு புறப்படணும்.



மாப்பிள்ளைக்கு வேலை இருப்பதாக உங்களை அழைக்க வர முடியவில்லை என்று கயலிடம் சொல்லவும், அந்த மனுஷனுக்கு எங்கே என் நினைவு இருக்கப்போகிறது?.



நான் தான் அவருக்காக ஏங்கித் தவிக்கிறேன் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவளோ, குழந்தையின் பொருட்களையும் அவளுடையதையும் சந்தோஷமாக எடுத்து வைத்து தயாரானதும், அவளையும் குழந்தையும் அழைத்துக்கொண்டு எல்லாரும் மேதினூருக்கு புறப்பட்டனர்.


மேதினூர்:

அதிகாலையில் மேதினூருக்கு வந்து சேர, அந்த தெருவே ஒருவித பரபரப்பாக இருந்தது. அவள் இருந்த வீட்டிற்குள் போனவர்கள் ஆளுக்கொரு பக்கம் தரையில் படுக்க, அடியே பொண்டுகளா எதுக்கு வத்துருக்கோம் இப்படி படுத்துட்டீங்களே என்று மரகதம் பாட்டி சத்தம் போட, ஏ கிழவி எட்டு மணிக்கு தானே முகூர்த்தம். இப்போது தான் மணி ஐந்து ஆகுது செத்த படுக்க விடுயென்று மீனாட்சி பொறுமையாக சொல்ல, அதுசரி என்றவரும் பேச்சியாத்தா என்றபடி தரையில் சாய்ந்து படுத்தார்.



டவுனுக்கு போய் எல்லாருக்கும் டீ வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த கதிர், ஏய் மீனு எல்லாருக்கும் ஊற்றிக் கொடுடி என்கவும், ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு தனது மாமன் தன்னிடம் பேசியதைக் கேட்டு பதறி அடித்து எழுந்தவளின் கண்கள் சந்தோஷத்தில் கலங்கியிருந்தது.



அவளின் நிலையை உணர்ந்து கொண்ட கதிர், கண்சைவில் தோட்டத்து பக்கம் வர சொல்லி பொறுமையாக அங்கிருந்து வெளியே போனான்.



வள்ளி,கலா இருவரும் தூங்கவில்லை. அடுத்தது ஆக வேண்டிய வேலையை பார்த்துக் கொண்டிருக்க அண்ணி என்று வள்ளி கூப்பிடவும், கண்களை மூடித்திறந்தவர் கயல் இருக்கும் ரூம் கதவை திறந்து உள்ளேப்போனவர், கண்ணு என்க, பெட்டில் கண்மூடி படுத்திருந்தவள் சொல்லுங்கத்தை என்றாள்.



புருஷன் உயிரோடு இருக்கும் போது அவள் கழுத்தில் தாலி இருக்கணும் இதுதானே நம் பண்பாடு?. நடந்ததை எல்லாம் திரும்ப பேசி ஒன்னும் புண்ணியம் இல்லை. உனக்கென்று அழகான குடும்பம் இருக்கு.அதில் நீ வாழ்வதைப் பார்த்துதான் எங்களுக்கும் நிம்மதியாக இருக்கும்.



இன்னைக்கு உனக்கும் பாரிக்கும் ஊரறிய கல்யாணம் நடக்கப்போகிறது. இங்க இருக்கிறவர்களெல்லாம் என்ன நினைப்பாங்களோ என்று நீ எதுவும் யோசிக்காதே. ஒரு வருஷத்துக்கு முன்னாடியே உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்றும் நேரம் சரியில்லை என்பதால் இரண்டு பேரும் பிரிஞ்சி இருந்ததாக உங்க அப்பாவும் மாமாவும், இங்க இருக்கிற மக்கள் கிட்ட உங்க கல்யாணத்தைப் பற்றிச் சொல்லிட்டாங்க.



உனக்காக தம்பி பார்த்து பார்த்து எடுத்து புடவை இதில் இருக்கு. குளிச்சிட்டு ரெடியாகி வா என்கவும் இதை எதிர்பார்க்காதவளின் கண்ணிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.



மருமகளின் கண்ணீரை துடைத்து விட்டவர் எல்லாம் நல்லதே நடக்கும் போ. உன் மகனுங்களை பற்றி கொஞ்சம் யோசி தாயி என்று அனுப்பி வைத்தார்.



தனது அத்தை சொன்னது போல் குளித்து வந்தவள் தாம்பூலத்தில் இருக்கும் பெட்டியை திறந்து பார்க்க அதில் அவளுக்கு பிடித்த மயில் வண்ண கலரில் பட்டுப்புடவையும் அதற்கு ஏற்ற போல நகைகளும் இருக்க, அதன் கீழே ஒரு கடிதம் இருந்தது.



அதை எடுத்து பிரித்துப்பார்கக, என் மனம் கவர்ந்தவளுக்கு...உனது மணாளனின் கையால் நெய்த புடவையை அனுப்பி வைத்திருக்கிறேன். இதில் இருக்கும் ஒவ்வொரு இழைகளும் நீயும் நானும் வாழப் போகும் வாழ்க்கையை சொல்லும்..உனக்காக மணமடையில் காத்திருக்கிறேன் விரைவில் என்னுடன் வந்து சேர்ந்து விடு எனது உயிரே இப்படிக்கு உன்னவன் பாரி அலவன் என்று இருந்தது.



கடிதத்தையும் படித்தவளுக்கு சந்தோஷமும் அழுகையும் வர, ஒரு பக்கம் தன்னவன் மேலிருந்து கோபமும் பறந்து ஓடிவிட்டது.



யாருக்கும் தெரியாமல் தோட்டத்திற்கு வந்த மீனாட்சியும் தயங்கியபடி நிற்க, இங்கு வாடி என்று பாத்ரூம் வாசலில் இருந்து கதிர் கண்ணசைத்தான்.



முடியாது என்று மீனாட்சி சொல்லவும் வாடி என்று தனது மீசையை முறுக்கிக்கொண்டு கதிர் வெளியே வர முயல, வேண்டாம் என்று வேகமாக வந்தவளை இழுத்து தன்னோடு இறுக்கி அணைத்தவனோ பாத்ரூம் கதவை தாழிட்டு விட்டு தன்னவளின முகம் முழுவதும் முத்தமிட, கண்களை மூடி இதை அனுபவித்துக் கொண்டிருந்த மீனாட்சிக்கு அழுகை வர, போதும்டி என்றவாறு தன்னவளின் இதழ்களை சிறை பிடித்தவனோ பற்கள் தடம் பதிய முத்தமிட்டவன் நமக்குள்ள இனி சாரி அது இது எதுவும் வேண்டாம்.



சமாதானம் சமாதானம் என்றவன் வீட்டினர் பார்ப்பதற்குள் அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தான்...



செம்புலம் தொடரும்...

 
Top Bottom