• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தழலை அணைக்கும் அமுதகமே - 06

STN - 77

New member
அத்தியாயம் 06

பூச்சாடி உடையும் சத்தத்தில் இருவரும் அதிர்ந்து வாசல் பக்கம் திரும்பி பார்த்தனர், அங்கே கோவமாக இவர்களை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான் விஷ்வசாஹரன்…

அவன் வரும் வேகத்தை பார்த்து ஒரு நிமிடம் அவன் தாயே பதறிவிட்டார், அப்படி இருக்க ஆத்யா ஷாலினியின் நிலையை கேட்கவா வேண்டும், அவனைப் பார்த்த நொடியே அவன் அறைந்தது தான் அவள் நினைவிற்கு வந்தது…

பெண்ணவள் உடல் ஒரு கணம் உள்ளுக்குள் நடுக்கம் காண, சட்டென மகாலட்சுமிக்கு பின்னால் தன்னை ஒளிந்து கொண்டாள்…

“டேய் எதுக்குடா இப்படி வர?” என அவனை தடுத்து அவர் தாய் கேள்வி கேட்டாலும் அவன் பார்வை பதிந்து இருந்தது என்னவோ ஆத்யா ஷாலினியின் மேல் தான்…

“நீ எதுக்கு இங்க வந்த? இவ எப்படி இங்கு வந்தா?” என கர்ஜனையாக அவன் குரல் வீடு எங்கும் ஒழிக்க, அவன் குரலில் ஒரு கணம் பெண்ணவளின் உடல் தூக்கி வாரி போட்டது, சின்ன வயதில் இருந்தே அவனைப் பார்த்தால் மட்டும் எங்கிருந்து தான் பயம் வரும் என்று அவளுக்கே தெரியவில்லை…

“சாஹரா நிறுத்து அவ உன்ன பார்த்து பயப்படுற, எப்போவும் இப்படித்தான் பண்ணுவியா? கொஞ்சம் நான் சொல்றதை கேளு…” என அவனை தடுத்து நிறுத்த மகாலட்சுமி போராட, அச்சமயம் “சாஹரா…” என்ற அழுத்தமான குரல் அவனை நிறுத்தி இருந்தது…

அவனோ அவளை இழுத்து வெளியே தள்ளும் நோக்கத்துடன் அவர்களை நெருங்கி இருக்க, அவனை அடக்கும் அந்த ஒரு குரல் கேட்ட உடனே, சட்டென மாடியை நோக்கி திரும்பி பார்த்திருந்தான் விஷ்வசாஹரன்…

அங்கு கம்பீரமாக மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார் விஷ்வநாதனின் தந்தையும் மகாலட்சுமியின் மாமனாரும், சரத் சரண் மற்றும் சாஹரனின் தாத்தாவும் ஆகிய விஷ்வேஸ்வரன்…

“தாத்தா அது வந்து…” என அவன் எதோ கூற முனைய, அவரோ “நிறுத்து…” என கைகாட்டி அவனை பேச விடாது செய்தவர் “எனக்கு தெரியாம இந்த வீட்டுக்குள்ள யாரும் வர முடியாது, அப்படி இந்த வீட்டுக்குள்ள யாராச்சும் வந்தாங்கனா அவங்க எனக்கு வேண்டியவங்களா மட்டும் தான் இருப்பாங்க…” என எத்தனை வயது ஆகி இருந்தாலும் கம்பீரமான குரலில் அவனைப் பார்த்து கூறினார் விஷ்வேஸ்வரன்…

சாஹரனோ ஏதுவும் சொல்லாது தன் தாத்தாவையே அழுத்தமாக பார்த்திருக்க, அவரோ “உன் ரூமுக்குள்ள போ…” என அவனை அங்கிருந்து அனுப்ப முனைய, அவனும் அதற்கு மேல் ஏதும் பேச விரும்பாது விறுவிறுவென அவன் அறைக்குள் சென்று கதவை அறைந்து சாத்தியிருந்தான்…

அச்சமயம் தான் சரத், சரண் மற்றும் விஷ்வநாதன் என அனைவரும் அங்கு வந்தடைந்தனர். சாஹரன் வீட்டுக்கு கிளம்பி விட்டான் என்று தெரிந்ததுமே அவர்களும் அவசரமாக வீட்டிற்கு கிளம்பி இருந்தனர், ஏனென்றால் மூவருக்குமே தெரியும் இன்று ஆத்யா ஷாலினி அங்கு வருவாள் என்று…

அங்க வந்தவர்களின் கண்களுக்கு முதலில் தென்பட்டது என்னவோ சாஹரன் கோபமாக சென்று அறை கதவை அறைந்து சாத்தியதும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த விஷ்வேஸ்வரனையும் தான்…

“அப்பா எப்பப்பா வந்தீங்க? என விஷ்வநாதன் யோசனையாக கேட்டுக் கொண்டே உள்ளே வர, “மாமா காலைல தாங்க வந்தார்…” என அவர் கேள்விக்கு மகாலஷ்மி தான் பதில் கூறியிருந்தார்…

“என்ன தாத்தா திடீர்னு வந்து இருக்கீங்க?” என சரத் யோசனையாக கேட்க, அவரோ பதில் கூறாது ஆத்யா ஷாலினியைத் தான் அழுத்தமாக திரும்பி பார்த்தார்…

“தாத்தா…” என அவரைப் பார்த்த அதிர்ச்சியில் பெண்ணவள் தயக்கமாக இழுக்க, அவரோ “தப்பு ஆத்யா நீ பண்ணது ரொம்ப பெரிய தப்பு, எல்லார்கிட்டயும் பொய் சொல்லிட்டு வந்திருக்க…” என கூறியப்படி நேரடியாக விஷயத்திற்கே வந்தார்…

அவளோ தலை குனிந்தப்படி எதுவும் கூறாது நின்றிருக்க, அங்க நின்ற மற்றவர்களும் கூட அவளை அதே பார்வையுடன் தான் பார்த்திருந்தனர்…

“ குட்டிமா…” என்றழைப்பு அவளை மீண்டும் அதிர செய்ய சத்தம் வந்த திசை நோக்கி திரும்பி பார்த்திருந்தாள். அங்கு அவளின் சித்தி சித்ராவும் அவளின் சித்தப்பா ராஜேந்திரனும் நின்றிருந்தனர்…

“சித்தி, சித்தப்பா நீங்க எப்படி இங்க?” என பெண்ணவள் அதிர்ச்சியாக கேட்க, “நான் தான் வர சொன்னேன்…” என்றார் விஷ்வேஸ்வரன்…

“எதுக்கு இப்படி பண்ண ஆதி…” என ஆத்யாவின் கையை பிடித்து திருப்பி சித்ரா கோவமாக கேட்டார், அவளோ “நான் என்ன பண்ணினேன் சித்தி…” என புரியாமல் மறுக் கேள்வி கேட்டாள்…

“எதுக்கு குட்டிமா எங்ககிட்ட பொய் சொன்ன? உனக்கு ஹாஸ்டல் ரூமும் சாப்பாடும் அவங்களே தருவாங்க னு எதுக்கு எங்ககிட்ட பொய் சொன்ன?” என ஆதங்கமான குரலில் கேட்டார் ராஜேந்திரன்…

“இல்ல சித்தப்பா அது.. அது வந்து…” என என்ன கூறுவது என்று தெரியாமல் தடுமாறி போனாள் பெண்ணவள், அவள் என்னவென்று கூறுவாள், சித்திக்கு இதில் விருப்பம் இருக்காது தான் இருவருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை, அதனால் தான் பொய் சொல்லி இங்கே வந்தேன் என்று எப்படி அவரிடம் கூறுவாள்? அது அவர்களின் மனதை கஷ்டப்படுத்தும் என்பதை அவள் அறிவாளே…

“எனக்கு தெரியும் நீ எதுக்கு இப்டி பொய் சொல்லிட்டு வந்தனு, உன்னை இத்தனை வருஷம் வளர்த்திருக்கேன், உன் மனசு எப்படி யோசிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்…” என அவளை அழுத்தமாக பார்த்தபடி கூறினார் சித்ரா…

ஆத்யாவோ அவரைப் பார்த்து என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமைதியாகவே நின்றிருந்தாள். யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்கிற எண்ணம் தான் அவளுடையது. இப்போது சுத்தி நின்று அனைவரும் கேள்வி கேட்கும் பொழுது, என்ன கூறுவது என்று அவளுக்கு தெரியவில்லை, பெண்ணவளிடம் அதற்கான பதிலும் இருக்கவில்லை…

“எங்க ஹாஸ்டல் ரூமுக்கும் சாப்பாட்டுகும் சித்தப்பா பணம் தந்தா அது எனக்கு பிடிக்காம போயிடுமோ, தங்கச்சிங்களுக்கு படிப்புக்கு கஷ்டமாயிருமோனு யோசிச்சு தானே இதெல்லாம் பண்ணுன?” என சரியாக அவள் என்ன யோசித்து இவற்றை செய்தாளோ அதை கணித்து கூறியிருந்தார் சித்ரா…

ஆத்யா ஷாலினியோ என்ன கூறுவது என்றே தெரியாது தன் சித்தியை அதிர்ந்து பார்க்க, அவரோ “இங்க பாரு உன்னை நான் இத்தனை வருஷம் வளர்த்திருக்கேன், ஆமா நான் என் பிள்ளைங்கள பத்தியும் யோசிப்பேன் தான். அதுக்காக நீ என் புள்ள இல்லன்னோ, உன்ன பத்தி நான் யோசிக்க மாட்டேனோ அருத்தம் இல்ல. உனக்கு ஹாஸ்டல் ரூம் தரலைன்னா நான் சித்தப்பா கிட்ட சொல்லி உனக்கு அத ஏற்பாடு பண்ணி தர தான் சொல்லி இருப்பேன், நீ இவ்ளோதான் உன் சித்திய பத்தி புரிஞ்சிக்கிட்டதா ஆதி?” என ஆதங்கமாக பெண்ணவளை பார்த்து கேட்டிருந்தார்.

அதை கேட்ட ஆத்யா ஷாலினியிற்கோ கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. ஓடி சென்று தன் சித்தியை இறுக்க அணைத்துக் கொண்டாள்…

“நீ எல்லார்கிட்டயும் இதே பொய் சொல்லிட்டு தானே இங்க வந்திருக்க? நல்லவேளை சரியா விஷ்வநாதனோட காலேஜ்கே நீ வந்த இல்லன்னா உன்ன பத்தி தெரிஞ்சே இருக்காது, நீ சொன்னத நாங்களும் நம்பிட்டு இருந்து இருப்போம்…” என அவளைப் பார்த்து கோபமாக திட்டினார் விஷ்வேஸ்வரன்…

அவளுக்கோ இப்போதுதான் இவர்கள் அனைவருக்கும் எப்படி இந்த விடயம் தெரிய வந்தது என்று புரிந்தது, அதே சமயம் தன்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டார் எனும் யோசனையுடனே திரும்பி விஸ்வநாதனை கேள்வியாக நோக்கினாள்…

“நான் உன் போட்டோ பார்த்ததுமே உன்னை அடையாளம் கண்டுபிடிச்சிட்டேன், நீ எங்கள சின்ன வயசுல பார்த்ததுனால உனக்கு எங்கள சட்டுனு அடையாளம் கண்டுபிடிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும், ஆனா உன் முகத்துல பெரிய மாற்றம் இல்ல அதேபோலத்தான் இருக்க, என்ட் உன் டீடைல்ஸ்வும் என்கிட்ட இருந்துச்சே அதனால தான் என்னால உன்ன அடையாளம் காண முடிச்சுது. நல்லவேளை நீ எனக்கு போன் பண்ணி பேசின இல்லன்னா பத்தோட பதினொன்னா நீ இருக்குறதும் எங்களுக்கு தெரியாமலே போய் இருக்கும்…” என அவளை எப்படி கண்டுபிடித்தார் என்பதை பற்றி கூறினார் விஸ்வநாதன்…

“சாரி எனக்கு அப்போ உங்கள பார்த்த நேரம் அடையாளம் தெரியல, நான் அவரைப் பார்த்ததுக்கு அப்புறம் தான் அது நீங்கதானே அடையாளம் கண்டுபிடிச்சேன்…” தயக்கமாக கூறினாள் பெண்ணவள்…

“அவர்னா யாரு எங்க அண்ணனையா சொல்ற?” என நக்கலாக கேட்டான் சரத், அதை கேட்டு ஆத்யாவோ திரும்பி அவனை முறைத்து பார்த்திருந்தாள்…

“டேய் சும்மா இருடா கண்டவங்களோட பேசிகிட்டு நமக்கு எதுக்கு அடுத்தவங்க பேச்சு வா உள்ள போலாம்…” என சரத்தின் கையை இழுத்துக் கொண்டே ஆத்யாவை ஒரு முறைப்புடனே கடந்து சென்று தன் அறைக்குள் நுழைந்து கொண்டான் சரண்…

அவன் பேசியதை கேட்ட அடுத்த நொடி ஆத்யாவின் முகம் வாடிவிட்டது, அதை கவனித்த மகாலட்சுமியோ “அவன விடுமா அவன் கொஞ்சம் கோவத்துல இருக்கான், இவனுக்கும் இவன் அண்ணனோட சுபாவம் ஒட்டிகிச்சு போல…” என அவளின் தலையை வஞ்சியாக வருடிப்படி கூறி இருந்தார்…

ஆத்யாவும் அதைக் கேட்டு மென்மையாக சிரித்தவள் “என் மேல சரணுக்கு கோவம் இல்லனா தான் அதிசயம் லஷ்மி மா…” என அவரைப் பார்த்து கூறியிருந்தாள்…

“நீ இப்படி கூப்பிடறதை கேட்டு எத்தனை வருஷம் ஆச்சு, எப்படி இருக்க ஆதிமா? ஏன் எல்லாருகிட்டையும் பொய் சொல்லிட்டு வந்த? நல்ல வேலை இங்க வந்த, இல்லன்னா ஏதோ ஒரு இடத்துல போய் எவ்வளோ கஷ்டப்பட்டு இருப்ப, உனக்கு நாங்க எல்லாம் இல்லையா? எதுக்கு இப்படி பண்ண?” என ஆதங்கமாக கேட்டார்…

அவரின் கேள்விக்கு அவளிடம் பதில் தான் இல்லை, தன்னைச் சுற்றி எத்தனை உறவுகள் இருந்தாலும் தாய் தந்தை என்கிற இரு உறவு இல்லை எனில் அவர்கள் அனாதை தானே, அதே நிலை தான் ஆத்யா ஷாலினிக்கும்…

யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நோக்கத்துடன் இருந்த உறவுகளை கூட புறக்கணித்து அவள் பொய் கூறிவிட்டு இங்க வந்து இருக்க, ஆனால் அந்த இறைவனோ வேறொன்றை அவளைக்கு கொடுக்க நினைத்து அவள் சிறுவயதில் தொலைத்த அவளின் மொத்த உறவுகளையும் மீண்டும் அவளிடமே கொண்டு வந்து சேர்த்திருந்தான்…

அடுத்த பாகத்தில் ஆத்யா ஷாலினி மற்றும் விஷ்வசாஹரனின் சிறு வயது கதையை பார்க்கலாம்…

அவர்கள் வாழ்வில் அப்படி என்னதான் நடந்தது?

ஏன் விஷ்வசாஹரன் இந்த அளவு கடுமையாக அனைவரிடமும் நடந்து கொள்கின்றான்?

இவர்கள் அனைவருக்கும் எப்படி ஆத்யா ஷாலினியை தெரியும்?

சரத்திடம் இல்லாத கோபம் ஏன் சரணுக்கு ஆத்யாவின் மேல் உள்ளது?

என பல கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக அடுத்த அத்தியாயம் அமையும்…


தொடரும்…
 
Last edited:
Top Bottom